Category: பெரியார் முழக்கம்

5 நாள்கள் நடந்த  குழந்தைகள் ‘பழகுமகிழ்வு’ முகாம்

5 நாள்கள் நடந்த குழந்தைகள் ‘பழகுமகிழ்வு’ முகாம்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் நடத்தப் பட்ட குழந்தைகளுக்கான ‘பழகு மகிழ்வு’ முகாம் 5 நாள்கள் நடந்தன. முகாமில் பங்கேற்ற குழந்தைகள் 5 நாளுக்குப் பிறகு முகாமிலிருந்தே பிரிந்து செல்ல மனமின்றி கண்ணீருடன் பிரிந்தனர். முகாமில் மகிழ்ச்சியாக இருந்ததோடு பல அறிவியல் கருத்துகளை அறியவும், பகிரவும் வாய்ப்பு பெற்றதாகவும் தெரிவித்தனர். முதல் நாள் பெற்றோரைப் பிரிந்து வந்ததற்காக அழுத குழந்தைகள், 5ஆம் நாள் பிரியும்போது முகாமை விட்டுப் பிரிவதற்காக அழும் நிலைக்கு உணர்வுகளை முகாம் இவர்கள் உள்ளத்தில் விதைத்திருக்கிறது. (முகாம் நான்கு நாள் நடந்ததாக கடந்த இதழில் வெளி வந்த செய்தி தவறு. 5 நாள்கள் நடந்தன.) பெரியார் முழக்கம் 09062016 இதழ்

ஜூன் 11  வாகனப் பேரணி கழகத் தோழர்கள் பங்கேற்பீர்!

ஜூன் 11 வாகனப் பேரணி கழகத் தோழர்கள் பங்கேற்பீர்!

பேரறிவாளன் கைது செய்யப்பட்டு ஜூன் 11ஆம் தேதியோடு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவர்  கைது செய்யப்பட்ட நாள் 1991 ஜூன் 11. இதை நினைவு கூர்ந்திடவும் தமிழக அரசு ஏற்கெனவே எடுத்துள்ள 7 தமிழர் விடுதலைக்கு ஆதரவான முடிவை மீண்டும் நினைவூட்டியும் ஜூன் 11 அன்று வேலூர் சிறை வாயில் முன்பிருந்து காலை 8 மணிக்கு வாகனப் பேரணி புறப்படுகிறது. வேலூரிலிருந்து சென்னை கோட்டை நோக்கி வரும் இந்தப் பேரணியில் இரு சக்கரவாகனங்களும், நான்கு சக்கரவாகனங்களும் இடம் பெறுகின்றன. 7 தமிழர் விடுதலலைக்கான கூட்டமைப்பு ஏற்பாடு செய் துள்ள இந்தப் பேரணியில் கழகத் தோழர்கள் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். – கொளத்தூர் மணி தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 09062016 இதழ்

‘எஸ்.வி.ஆர்.’ ஆவணப்  படம் திரையிடல்

‘எஸ்.வி.ஆர்.’ ஆவணப் படம் திரையிடல்

சென்னை சந்திரசேகர் திருமண மண்டபத்தில் 4.6.2016 மாலை 4.30 மணியளவில் நடைபெற இருந்த “மனித நேயப் போராளி தோழர் எஸ்.வி.ஆர். ஆவணப் படத் திரையிடல் நிகழ்ச்சிக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. உடனே கழகத் தலைவர் ஆலோசனைப்படி கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் இல்லத்தில் மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சிக்கான இடம் மாற்றப்பட்டது. இரவு 7.15 மணிக்கு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மூத்த தோழர் நல்லகண்ணு வெளியிட ஆவணப் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெற்றுக் கொண்டார் நிகழ்வில் த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், தியாகு, வ.கீதா, ஓவியர் டிராட்ஸ்கி மருது, பேராசிரியர் வீ.அரசு மற்றும் பல தோழர்கள் இயக்க நண்பர்கள் பங்கேற்றனர். கீழே காவலர்கள் நின்றிருக்க வீட்டின் மாடியில் ஆவணப் படம் திரையிடப்பட்டது. பெரியார் முழக்கம் 09062016 இதழ்

இந்துத்துவ அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை

இந்துத்துவ அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை

“மதத்தின் மேலாண்மையும் படிநிலைச் சமூகத்தின் நிலைத்த தன்மையும் பெருந்தாக்கு  தலுக்குள்ளாகும் காலத்தில்தான் தேசம் என்ற ஓர்  அமைப்பு, அக்காலத்தின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவு  செய்யும் வகையில் உருவாகத் தொடங்குகிறது” என்று வரலாற்று அறிஞர் ஆண்டர்சன் கூறியுள்ளார்.  அய்ரோப்பாவில் 15ஆம் நூற்றாண்டில் தொடங்கிய அறிவொளிக் காலம், எதையும் கேள்விக்குட்படுத்தி ஆராய்வது என்ற அறிவுத் தேடலை ஊக்குவித்தது. அச்சுக் கலையின் கண்டுபிடிப்பு பரந்துபட்ட அளவில் மக்கள் நூல்களைப் படிக்கும் வாய்ப்பை உருவாக்கியது. இதன் விளைவாக வளர்ந்த அறிவியல் மனப்பான்மை மத நம்பிக்கைக்கு அச்சுறுத்தலாக எழுந்தது; பிறப்பு, இறப்பு, சாவுக்குப் பிந்தைய வாழ்வு முதலியவை பற்றி மதம் முன் வைத்த வாதங்களைக் கேள்விக்குட்படுத்தியது. அதேகாலக் கட்டத்தில், அறிவியல் கண்டுபிடிப்புகளின்  உந்துவிசையால் வளர்ந்த முதலாளியம், பழைய நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பும், கிறித்துவ மத ஆதிக்கமும் தன் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதால் அவற்றை வீழ்த்த முனைந்தது. இதன் விளைவாக அய்ரோப்பாவில் தேசியம், தேச-அரசு, சனநாயகம், சுதந்திரம், தனி...

கொள்கைக்கு முகமது அலி கொடுத்த விலை

கொள்கைக்கு முகமது அலி கொடுத்த விலை

உலக குத்துச் சண்டை வீரர், மூன்று  முறை சாம்பியன் பட்டத்தை வென்ற முகம்மது அலி, அமெரிக்காவில் மரண  மடைந்துவிட்டார். அமெரிக்காவில் கருப்பர் இனத்தில் பிறந்தவர். ஹெவி வெயிட் சாம்பியனாக குத்துச் சண்டை போட்டியில் வெற்றிகளைக் குவித்தாலும், குத்துச் சண்டையிலேயே அவர் மூழ்கிக் கிடக்கவில்லை. கோடி கோடியாய் பணம் குவிப்பதையே நோக்கமாகக் கொள்ளவில்லை. வியட்நாம் மீது போர் தொடுத்த  அமெரிக்கா, முகம்மது அலியை இராணுவத்தில் சேர உத்தரவிட்டது. அலி அதை ஏற்க மறுத்தார். அது தனது இஸ்லாமிய  கொள்கைக்கு எதிரானது என்றார். அதோடு நிற்கவில்லை; “வியட்நாமியர்களை நான் ஏன் எதிர்க்க வேண்டும்? அவர்கள் என்னை ‘நீக்ரோ; கறுப்பன்’ என்று இழிவு படுத்தவில்லையே?” என்று திருப்பிக் கேட்டார். இராணுவத்தில் சேர மறுத்ததால் அமெரிக்க அரசு அலிக்குக் கிடைத்த விருதுகள் பதக்கங்களை முடக்கியது. அவர்  போட்டிகளில் பங்கேற்கத் தடை விதித்தது. அவரது கடவுச் சீட்டு முடக்கப்பட்டது. நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 10000 டாலர்...

பெண் விடுதலை பேசும் ‘இறைவி’

பெண் விடுதலை பேசும் ‘இறைவி’

எவரும் தொடுவதற்கு அஞ்சும் பிரச்சினையை  திரைப்படமாக்க முன் வந்த துணிவுக்காகவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜைப் பாராட்ட வேண்டும். அவரது எழுத்து-இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ‘இறைவி’ படம் பெண்ணுரிமை என்பதையும் தாண்டி பெண்  விடுதலையைப் பேசுகிறது. ஆண்கள் தங்களிடம் கட்டி எழுப்பியிருக்கும் ‘ஆணாதிக்கம்’ என்ற ஆணவத்துடன்  எடுக்கும் முடிவுகள், பெண்களிடம் உருவாக்கும் கடும் பாதிப்புகளையும் வலிகளையும் அழுத்தமாக உணர்த்தி யிருக்கிறார் இயக்குனர். சிலப்பதிகாரம் – தமிழ் தேசிய இலக்கியமாக – தமிழ் தேசியவாதிகளால் முன் வைக்கப்படுகிறது. அதில் அடங்கியுள்ள பெண்ணடிமை சிந்தனையை பெரியார் கேள்விக்குள்ளாக்கினார். மாதவி எனும் தாசி  வீட்டுக்குச் சென்ற கணவன் கோவலன், எப்போது  திரும்பி வருவான் என்று உடலையும் உள்ளத்தையும் வருத்தி காத்திருக்கிறாள் கண்ணகி. இதேபோல் கண்ணகி, தனது  காதலன் வீட்டுக்குச் சென்றால், கோவலன் காத்திருப்பானா என்று பெரியார் கேட்ட கேள்வியை இத்திரைப்படமும் கேட்கிறது. கைவிட்டு ஓடிய காதலனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பாத்திரம் இந்த படத்தில் காதலையும் திருமணத்தையும் ...

தமிழ்நாடு மாணவர் கழகம் முடிவு பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே சமூக நீதி பரப்புரை

தமிழ்நாடு மாணவர் கழகம் முடிவு பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே சமூக நீதி பரப்புரை

29.5.2016 அன்று காலை 10 மணிக்கு திருப்பூரில் வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பகத்தில் தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கழகச் செயலாளர்  முகில்ராசு வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில், இடஒதுக்கீடு, தனியார் துறையில் இடஒதுக்கீடு, பொது நுழைவுத் தேர்வு, அரசாணை 92, தனியார் பள்ளிகளில் 25ரூ மாணவர் சேர்க்கை, தனியார் கல்விக்கொள்ளை, தாய்மொழிக் கல்வி, கட்டாய கல்வி உரிமைச் சட்டம் ஆகியவை குறித்தும் இன்னும் பிற கல்வி உதவித் தொகை வழங்கும் அரசாணை குறித்தும் தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி.சிவக்குமார் தொடக்க உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கேள்வி களுக்கு கழகப் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் விளக்கம் அளித்தார். காலை நிகழ்வு மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது. மதிய உணவு  மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. மீண்டும் மதியம் 2 மணிக்கு தொடங்கிய கூட்டம் 6.30 வரை தொடர்ந்தது. மதிய அமர்வில்...

ஒரே நேரத்தில் நடந்த இரு பயிலரங்குகள்

ஒரே நேரத்தில் நடந்த இரு பயிலரங்குகள்

குடியாத்தம் அருகே உள்ள இராமாலை கிராமத்தில் மாவட்ட கழக அமைப்பாளர் சிவாவின் முயற்சியால் அவருக்கு சொந்தமான தோப்பில் கழக சார்பில் பெரியார்-அம்பேத்கர் பயிலரங்கம், மே 26, 27 தேதிகளில் நடைபெற்றது. ஒரே நேரத்தில் சிறுவர் சிறுமியர்களுக்கு தனியாகவும், தோழர்களுக்கு தனியாகவும் பயிற்சிகள் நடந்தன.  கழகத் தோழர் ஆசிரியர் ஈரோடு சிவக்குமார், சிறுவர் சிறுமி யருக்கு  பெரியார் குறித்தும், ஜாதி, கடவுள், மதம் குறித்தும் மிக எளிமையாக குழந்தைகளுக்கு புரிந்திடும் வகையில் இரண்டு மணி  நேரத்துக்கும் மேலாக பேசி  கலந்துரையாடினார். இரண்டு நாள்களிலும் காவை இளவரசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை குழந்தைகளுக்கு நடத்தி பகுத்தறிவு அறிவியல் கருத்துகளை விளக்கினார். குழந்தைகள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர். தோழர்களுக்காக நடந்த பயிலரங்கத்தில் – முதல் நாள் விடுதலை இராசேந்திரன், ‘அம்பேத்கர்-பெரியார் தேவையும்- அவசியமும்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் அழகிய பெரியவன், ‘அடிப்படை வாதமும் ஜனநாயகம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியும்’ என்ற தலைப்பிலும், கொளத்தூர் மணி, ‘அம்பேத்கரும் இந்துமதமும்’...

10 ஆண்டு கோரிக்கை 24 மணி நேரத்தில் தீர்ந்தது இராமாலை பயிற்சி முகாமின் தாக்கம்

10 ஆண்டு கோரிக்கை 24 மணி நேரத்தில் தீர்ந்தது இராமாலை பயிற்சி முகாமின் தாக்கம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இராமாலை கிராமத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் மே 26, 27 தேதிகளில் நடத்திய பயிலரங்கம் மிகப் பெரும் தாக்கங்களை உருவாக்கியது. திராவிடர் விடுதலைக் கழகம் பயிற்சி முகாம்  நடத்திய இராமாலை கிராமத்துக்கு அருகே உள்ளது  கிருஷ்ணாபுரம். இந்த கிராமத்தில் ஆதி திராவிடர் சமூகத்தினர் பெரும் எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். அவர்களையொட்டி அருந்ததிய சமூகத்தினரின்  சுமார் 20 குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன.  அருந்ததியர் குடியிருப்புகளையொட்டி மிகப் பெரும் புளியமரம் ஒன்று எந்த நேரத்திலும் உடைந்து விழக்கூடிய நிலையில் இருந்தது. இதனால் தங்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பதால் இந்த மரத்தை அகற்றக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக  அருந்ததிய சமூகத்தினர் மாவட்ட பஞ்சாயத்துத்  தலைவரிடமும் வருவாய் அலுவலகத்திலும் புகார் அளித்து வந்தனர். எவரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் கழகப் பயிற்சி முகாம் நடப்பதற்கு அய்ந்து நாள் முன்பு மரத்தின் ஒரு பகுதி உடைந்து குடியிருப்புகளின் மீது விழுந்துவிட்டது....

மதவாதிகளை மிஞ்சினர் நாத்திகர்கள்

மதவாதிகளை மிஞ்சினர் நாத்திகர்கள்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மாநிலங்களில் கிறிஸ்துவ மத நம்பிக்கையாளர்களைவிட மதங்கள் வேண்டாம் என்று கூறுவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது தங்களை கிறிஸ்துவர், கத்தோலிக்கர் என்று வெவ்வேறு மத அடையாளங்களைப் பதிவு செய்தவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் 25 சதவீதம் பேர். 2014ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மத நம்பிக்கையாளர்களில் இரண்டு மடங்கு அளவில் மத நம்பிக்கைகளை கைவிட்டு விட்டனர். எங்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை என்று பதிவு செய்தவர்கள், மக்கள் தொகை எண்ணிக்கையில் 48.5 சதவீதம். இங்கிலாந்து சமூகத்தில் கிறிஸ்தவர்களைவிட மத நம்பிக்கையற்றவர்களே அதிகரித்து விட்டனர். இத்தகவலை இது குறித்து ஆய்வு நடத்தி வரும் பேராசிரியர் ஸ்டீபன் புலுவென்ட் (Stephen Bulluvant) கடந்த மே 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இவர் இலண்டனில் உள்ள செயின் மேரீஸ் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் இறையியல் துறையின் பேராசிரியர். கடந்த 30 ஆண்டுகளாக மத நம்பிக்கைகள் குறித்து...

சமஸ்கிருதத்தில் கணித அறிவியலா? பொய் பிரச்சாரத்தின் முகமூடி கிழிகிறது

சமஸ்கிருதத்தில் கணித அறிவியலா? பொய் பிரச்சாரத்தின் முகமூடி கிழிகிறது

‘நாசா’ கூறியிருக்கிறது; ‘அமெரிக்க பேராசிரியர் கண்டுபிடித்திருக்கிறார்’ – இப்படி எல்லாம் சங்பரிவார் கூட்டம், தங்களது போலி அறிவியலுக்கு சான்று களைக் காட்டுவார்கள். ஆராயப் புகுந்தால் கடைசியில் இவை எல்லாம் போலிச் சான்றுகள் என்ற உண்மை வெளிச்சத் துக்கு வரும். கடந்த சில மாதங்களாக மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ஒரு கதையை கூறி வருகிறார். “சமஸ்கிருதத்தில், ‘சல்பாசூத்திரம்’ (Sulbasutras) என்று ஒன்று இருக்கிறது; கணிதத்தில் கிரேக்கர்கள், ‘பித்தகோரஸ்’ சூத்திரத்தை கண்டறிவதற்கு முன்பே, சல்பா சூத்திரத்தில் இந்தக் கணிதம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன” என்று கூறும் ஸ்மிருதி இராணி, அய்.அய்.டி. மாணவர்களின் அறிவியலுக்கு சமஸ்கிருதம் பயன்படும் என்றும் கூறி வருகிறார். இதன் காரணமாகவே அய்.அய்.டி. மாணவர் களுக்கு சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக கற்பிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் நியாயப் படுத்துகிறார். ஸ்மிருதி இராணியின் கதை இத்துடன் முடியவில்லை. அமெரிக்காவின் கோர்வெல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், 1990இல் காஞ்சி சங்கர மடத்துக்கு வந்து...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (22) தலைநகர் மீட்புப் போரில் திராவிடர் கழகம் வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (22) தலைநகர் மீட்புப் போரில் திராவிடர் கழகம் வாலாசா வல்லவன்

தமிழரசு கழகத்தைத் தொடங்கிய ம.பொ.சி., மீண்டும் காங்கிரசுக்குள் தன்னை இணைத்துக் கொள்ளவே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். இது குறித்து ம.பொ.சி.யே இப்படி எழுதுகிறார். (சென்ற இதழ் தொடர்ச்சி) காங்கிரசிலிருந்து வெளியேறி விடுவதென்று தமிழரசுக் கழகம் எடுத்த தீர்மானத்தின் ஆங்கில நகலை எனது கையெழுத்துடன் நேருஜிக்கு அனுப்பி வைத்தேன். அவர், “தமிழரசுக் கழகம் எடுத்த துரதிருஷ்டமான முடிவு எனக்குக் கிடைத்தது” என்று மட்டுமே குறிப்பிட்டு பதில்  எழுதினார். “தமிழரசுக் கழகத்தார் அனுப்பிய ராஜினாமாக்களை ஏற்று பதில் எழுதவேண்டாம்; மேற்கொண்டு அவர்கள் எப்படி நடக்கிறார்கள் என்பதைக் கண் காணித்து வாருங்கள்” என்று நேருஜி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு எழுதியதாகக் கேள்விப்பட்டேன். பிரதமர் நேருஜி என்பால் காட்டிய பேரன்பு காரணமாக ஒன்றரையாண்டு காலம் நான் காங்சிரசில் நீடித்திருக்க அவகாசம் கிடைத்தது. (ம.பொ.சி. ‘நேருஜி என் ஆசான்’ பக். 93 முதல் 100 வானதி பதிப்பகம், சென்னை-17) சென்னை நகர் பிரச்சினை 1953 சனவரி முதல் 1953...

கொளத்தூர் மணி பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (3) சுயமரியாதை திருமணத்துக்கு தமிழ் திருமண முறை மாற்றாக முடியுமா?

கொளத்தூர் மணி பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (3) சுயமரியாதை திருமணத்துக்கு தமிழ் திருமண முறை மாற்றாக முடியுமா?

‘இளந்தமிழகம் இயக்கம்’ பெரியார் பிறந்த நாளையொட்டி ‘பெரியாரும் தமிழ் தேசியமும்’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)   சுயமரியாதைத் திருமணம் என்பதை பெரியார் அறிமுகப்படுத்தினார். பார்ப்பன புரோகித விலக்கு,           பெண்ணடிமை விலக்கு என்பதெல்லாம் சேர்த்து தான் சுயமரியாதை திருமணம். பெரியாருடன் இந்தி      எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு பெற்ற சைவர்கள் போராட்டம் முடிந்தவுடன் 1939ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் தமிழர் திருமண மாநாடு கூட்டினார்கள். அங்கு தமிழ்த் திருமண முறை என்று ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்கள். பொதுவாக தமிழர்கள் என்பதில் நாம் வைத்திருக்கும் பொருள் என்னவென்றால் வெள்ளாள மனப் பான்மை உடையவர்கள். அந்த உடை, அந்த உணவு உண்பவர்கள் என்பதுதான். யார் தமிழர்? உங்களுடைய அடையாளமெல்லாம் யாரைக் குறிக்கிறது? வேட்டிதான் தமிழர் உடையென்றால் இன்றைக்கு கிராமத்தில் யாரும் வெள்ளை வேட்டி அணிவதில்லை, லுங்கிதான் அணிகிறார்கள். லுங்கி இப்போது வந்திருக்கலாம். அதுதான் அவர்களுக்கு வசதியாக உள்ளது. இப்போது...

சங்கரமடம் நடத்தும் மருத்துவமனைகளின் யோக்கியதை இப்படி!

சங்கரமடம் நடத்தும் மருத்துவமனைகளின் யோக்கியதை இப்படி!

மருத்துவமனையின் கழிவுகள் உயிருக்கும் சூழலுக்கும் ஆபத்துகளை உருவாக்கக் கூடியவை. இவற்றை பொது இடங்களில் கொட்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருக்கிறது. இந்தக் கழிவுகளை அப்புறப்படுத்து வதற்காக விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கழிவுகளை ஒரு பொது மய்யத்துக்கு கொண்டு வந்து அவற்றை ‘சுத்திகரிப்பு செய்து’ அந்த மய்யத்தின் வழியாகவே வெளியேற்ற வேண்டும். தனியார் மருத்துவமனைகள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த சுத்திகரிப்பு மய்யம்- தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. ஆனால், சென்னையில் பல இடங்களில் குழந்தைகளுக்கான மருத்துவமனைகளை நடத்தி வரும் ஒரு நிறுவனம், இந்த விதி   முறைகளை அப்பட்டமாக மீறி  மக்கள் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனம் காஞ்சி காமகோடி சங்கரமடம்தான், காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை. சென்னையில் நடத்திவரும் குழந்தைகள் மருத்துவமனைகளின் கழிவுகள், தனியார் வணிக நிறுவனம் ஒன்றுக்கு கிலோ ரூ.49 என்ற விலையில் நீண்டகாலமாக விற்றுக் கொண்டிருக்கும் அதிர்ச்சியான தகவல் இப்போது வெளி வந்துள்ளது. திருவான்மியூரைச் சார்ந்த...

சு.சாமி, ரகுராம் ராஜனை எதிர்ப்பது ஏன்?

சு.சாமி, ரகுராம் ராஜனை எதிர்ப்பது ஏன்?

சுப்பிரமணியசாமியின் ஒவ்வொரு அசைவுக்கும் அழுத்தமான உள்நோக்கம் இருக்கவே செய்யும். மக்களோடு எந்தத் தொடர்பும் இல்லாத மதுரை சோழவந்தான், பார்ப்பனரான இவர், இப்போது ரிசர்வ் வங்கி ஆளுனராக இருக்கும் ரகுராம்ராஜன் மீது குறி வைத்து தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறார். ரகுராம் ராஜனும், குடந்தையைச் சார்ந்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்தான். “ரகுராம் ராஜன், அமெரிக்க குடிமகனாகவும் இருக்கிறார். அவர் மனதளவில் இந்தியராக செயல்படவில்லை. இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார். அவரை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்” என்று சுப்ரமணியசாமி மோடிக்கு கடிதம் எழுதுகிறார். இதே சுப்பிரமணியசாமியும், அமெரிக்க விசுவாசிதான். 2012ஆம் ஆண்டு ‘கேரவான்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “நான் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படவில்லை; அமெரிக்காவுக்காகவே செயல்படுகிறேன்; நான் ஒரு அமெரிக்கன்” என்று பேட்டியளித்தவர்தான். பார்ப்பனர்களின் தேசபக்தி எப்போதுமே பார்ப்பன மேலாண்மைக்கான நோக்கத்தோடு கட்டமைக்கப்பட்டதுதான். இந்தியாவின் தேச பக்தர்கள் என்பதற்கான அடையாளத்துக்கு இந்து மதத்தையே அளவுகோலாக நிர்ணயிக்கும் கூட்டம் இது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் இவர்கள் அமெரிக்க டாலர்களையே அளவுகோலாகக்...

மோடியின் ‘இராம இராஜ்யத்தில்’ நீதியும் அநீதியும்

மோடியின் ‘இராம இராஜ்யத்தில்’ நீதியும் அநீதியும்

மோடி ஆட்சியின் இரண்டாண்டு சாதனைகள் மதவெறி குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதும் அப்பாவிகள் மீது தேச விரோத முத்திரைகள் குத்துவதுமாகவே இருக்கிறது. பொருளாதாரத் துறையிலும் சாதனைகள் ஏதுமில்லை. ‘பார்வையற்றவர்கள் உலகில் ஒற்றைக்கண் கொண்டவரே அரசர்’ என்ற நிலையிலேயே இந்தியாவின் பொருளாதாரம் இருக்கிறது. இப்படி கூறியவர் வேறு யாருமல்ல; ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன். மோடி அறிவித்த பல திட்டங்கள் அறிவிப்புகளோடு முடங்கிப் போய் நிற்கின்றன. இந்து மதத்தின பெயரால் வன்முறைகளை கலவரங்களை நடத்துவோரை பாதுகாப்பதற்கு அரசு எந்திரங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வந்த 7 அப்பாவி முஸ்லிம்கள் பலியானார்கள். 80 பேர் காயமடைந்தனர். வழக்கம்போல் இஸ்லாமிய ‘தீவிரவாதிகள்’ என்றே குற்றம்சாட்டப்பட்டனர். பிறகு ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரி தலைமையில் செயல்பட்ட தீவிரவாத தடுப்புப் படை, குண்டு வைத்தவர்கள் இந்துத்துவ தீவிரவாதிகளே என்பதை கண்டறிந்தது. பெண் சாமியார் பிரக்யாசிங் தாகூர், இராணுவ அதிகாரி பிரசாந்த், $காந்த்...

குழந்தைகளுக்காக 5 நாள் அறிவியல் முகாம் கலை நிகழ்வுகளோடு அறிவுத் திறன் பெற்ற குழந்தைகள் கண்ணீருடன் பிரியா விடை

குழந்தைகளுக்காக 5 நாள் அறிவியல் முகாம் கலை நிகழ்வுகளோடு அறிவுத் திறன் பெற்ற குழந்தைகள் கண்ணீருடன் பிரியா விடை

குழந்தைகளுக்காக 5 நாள் அறிவியல் முகாம் கலை நிகழ்வுகளோடு அறிவுத் திறன் பெற்ற குழந்தைகள் கண்ணீருடன் பிரியா விடை தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் நான்காம் ஆண்டு குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் 20.05.2016 முதல் 24.05.2016 முடிய திண்டுக்கல் காட்டுமடத்தில் உள்ள ஐ.சி.எம். ஹவுசில் நடை பெற்றது. திருப்பூர், கோவை,மேட்டூர், தஞ்சாவூர், நாகை,மதுரை, போன்ற மாவட்டங்களிலிருந்து 42 குழந்தைகள்கலந்து கொண்டனர்.19.05.2016 மாலையே பெரும்பாலான குழந்தைகள் முகாம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர். 20.5.2016 : முதல்நாள் காலை குழந்தைகளின் பெயர் முகவரி பதிவு செய்யப்பட்டது. மதுரை யாழினி  நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். பயிலரங்க அறிமுகம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல்  மன்றத்தின் நோக்கம், செயல்பாடுகள், தனித் தன்மைகளை விளக்கி ஆசிரியர் சிவகாமி பயிலரங்கை அறிமுகம் செய்தார். பின்னர் குழந்தைகள் ஒருவர் மற்றொருவரைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளும் விதமாக சுய அறிமுகம் வகுப்பு விளையாட்டு முறையில் நடத்தப்பட்டது. இவ்வகுப்பினை சந்திரமோகன் மற்றும் நீலாவதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பிற்பகல்...

‘ஆனா ரூனா’ முடிவெய்தினார்

‘ஆனா ரூனா’ முடிவெய்தினார்

‘ஆனா ரூனா’ என்று அனைவரும் அன்புடன் அழைக்கும் அடையாறு மாணவர் நகலக உரிமையாளர் அடையாறு அருணாசலம் (77) மே 23, பிற்பகல் 4 மணி யளவில் முடிவெய்தினார். ‘தந்தை பெரியார் தமிழிசை மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, தலைநகர் சென்னையில் தமிழிசை விழாக்களை தனது சொந்த பொருள் செலவில் நடத்திய பெருமைக்குரியவர். தமிழிசை பாடகர்கள் பலரையும் அடையாளம் கண்டு மேடையேற்றினார். ‘மியுசிக் அகாடமி’களும், ‘சபா’க்களும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே கதவு திறந்த காலத்தில் பெரியார் பெயரிலேயே தமிழிசை விழாக்களை நடத்திக் காட்டியவர் ‘ஆனா ரூனா’. தான் முன்னின்று தொடங்கிய ‘தமிழ்ச் சான்றோர் பேரவை’ வழியாக தமிழ் வழிக் கல்விக்காக பரப்புரைகள் தெருமுனைக் கூட்டங்கள், பேரணிகளை தனது சொந்த செலவில் நடத்தி தமிழகத்தின் மய்ய நீரோட்டத்துக்கு தமிழ் வழிக் கல்வி பிரச்சினையை கொண்டு வந்தது அவரது தீவிர முயற்சிகளாகும். அதன் காரணமாகத்தான் தமிழ் வழிக் கல்வி குறித்து ஆராய அன்றைய தி.மு.க. ஆட்சி நீதிபதி...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (21) காங்கிரசில் மீண்டும் சேர துடித்த ம.பொ.சி. வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (21) காங்கிரசில் மீண்டும் சேர துடித்த ம.பொ.சி. வாலாசா வல்லவன்

தமிழரசு கழகத்தைத் தொடங்கிய ம.பொ.சி., மீண்டும் காங்கிரசுக்குள் தன்னை இணைத்துக் கொள்ளவே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். இது குறித்து ம.பொ.சி.யே இப்படி எழுது கிறார். (சென்ற  இதழ் தொடர்ச்சி) காங்கிரஸ் கட்சித் தேர்தலில் போட்டியிட எனக்குத் தகுதியில்லை என்ற தேர்தல் அதிகாரியின் இந்த நடவடிக்கை யானது என் மனத்திற்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. நேருஜி அப்போது அனைத்திந்திய காங்கிரசின் தலைவராக இருந்தார். என்னைப்பற்றி அவர் நன்கு அறிந்து வைத்திருந்த நேரம் அது. அதனால், தேர்தல் அதிகாரியின் முடிவை நேருஜிக்கு அறிவித்து, எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று அவருக்கு ‘மேல் மனு’ப் போட்டேன். 21 மணி நேரத்திற்குள் அவரிடமிருந்து கீழ்க்கண்ட தந்தி கிடைத்தது. புதுடெல்லி, 16.11.1952 தாங்கள் காங்கிரஸ்ஸ்தலைவருக்குச் செய்து கொண்ட அப்பீல் மனு கிடைத்தது. காங்கிரஸ்ஸ்மேலிடம் தமிழரசுக் கழக அங்கத்தினர்கள் பற்றி விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் வரையிலும் அந்தக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் காங்கிரஸ்ஸ்தேர்தலில் ஈடுபட அனுமதிக்கப் படுவார்கள்....

பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம்  (2) கொளத்தூர் மணி

பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (2) கொளத்தூர் மணி

‘இளந்தமிழகம் இயக்கம்’ பெரியார் பிறந்த நாளையொட்டி ‘பெரியாரும் தமிழ் தேசியமும்’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) மொழித் தூய்மைவாதம் என்பது தன் மொழி மீது செலுத்தப்படும் ஆதிக்கத்தை எதிர்ப்பது. சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் என்று நம் மீது செலுத்தப்படும் எல்லா ஆதிக்கத்தையும் எதிர்க்கும் நாம், நம் மொழி மீது வேற்று மொழி ஆதிக்கம் செலுத்துவதை எதிர்ப்பது நியாயம் தான். பெரியாரும் பேசியிருக்கிறார் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் மொழி பெயர்க்கும்போது னுளைiகேநஉவயவே என்ற சொல்லுக்கு பூத நாசினி என்று சொல்லுகிறார்கள். நச்சு நீக்கி என்று சொன்னால் என்ன? நுடநஉவசடிடலளளை என்ற சொல்லை ஏன் விக்தியோஜனம் என்று மொழிபெயர்க்கிறீர்கள்? மின் பருக்கை என்று ஏன் கூற மறுக்கிறீர்கள்? பெரியார் கேட்கிறார். நம் மொழி மீது இன்னொரு மொழியின் ஆதிக்கம் வேண்டாம் என்பது சரி; ஆனால் இனத் தூய்மை வாதம் பேசுகிறபோதுதான் சிக்கலே வருகிறது. இனத் தூய்மைவாதம் பேசுகிறவர்களிடம்...

பள்ளத்தூர் நாவலரசன் தாயார் படத்திறப்பு

பள்ளத்தூர் நாவலரசன் தாயார் படத்திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகப் பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் தாயார் சின்னப் பிள்ளை அவர்களின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி, திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் அரு. நல்லதம்பி தலைமையில் பள்ளத்தூரில் நடைபெற்றது. சின்னபிள்ளை யின் படத்தினை பெரியார் பெருந் தொண்டர் அழகிய நாயகிபுரம் ப.அ. வைத்தியலிங்கம் திறந்து வைத்தார்.  சின்னப்பிள்ளையின் தொண்டினை நினைவு கூர்ந்து, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மனோகரன், ஆசிரியர் வீரமணி, த.மா.கா. நிர்வாகி வை.ராகவன், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி முருகேசன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் பொறுப்பாளர் பசுபதி, கூத்தலிங்கம், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆத்மநாதன், தி.மு.க. வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் செல்வராஜ், திராவிடர் விடுதலைக் கழக தஞ்சை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கு.பாரி, ‘மெய்சுடர் இதழ்’ ஆசிரியர் வெங்கடேசன், இ.சி.ஐ. திருச்சபை ஆயர் ஜேம்ஸ், தமிழக மக்கள் புரட்சி கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி பொன்முருகு,...

‘பேய்’ எனும் ‘மூடநம்பிக்கை’

‘பேய்’ எனும் ‘மூடநம்பிக்கை’

ஒரிசா பழங்குடி மக்கள் அதிகம் வாழும் மாநிலம். மயூர்மஞ்ச் மாவட்டத் தில் பழங்குடி மக்களிடையே பேய், பிசாசு, சூன்ய நம்பிக்கைகள் தலை விரித்தாடுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் ‘பேய் பிடித்தவள்’, ‘சூன்யக்காரி’ என்று அறிவித்து 47 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் பழங்குடி மக்களிடையே இந்த மூட நம்பிக்கை களுக்கு எதிராக பகுத்தறிவாளர்களைக் கொண்டு பகுத்தறிவு பிரச்சாரம் செய்து வருகிறது. ‘சூன்யக்காரி’ தங்கள் பகுதியில் வாழ்வதால் பல தீங்குகள் வருவதாக மக்கள் நம்புகிறார்கள். தமிழ்நாட்டிலும் பல கிராமங்களில் இதே போன்ற மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக வாழ் நாள் முழுதும் பேராடியவர் மறைந்த டாக்டர் கோவூர். இலங்கையைச் சார்ந்த மனநல மருத்துவர். பேய், பில்லி, சூன்யம், ஆவி மோசடிகளை அம்பலப்படுத்தியவர். சென்னையில் பல முறை மூடநம்பிக்கைக்கு எதிரான பரப்புரைகளை செய்தவர். ‘மந்திர வாதி’களால் ஏமாற்றப்பட்டு, பிறகு தன்னிடம் மனநல சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் கதைகளை அவர் பதிவு செய்திருக்...

‘கடவுள்’ பெயரால்…

‘கடவுள்’ பெயரால்…

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பதவியேற்ற 28 அமைச்சர்களும் ‘ஆண்டவன்’ பெயரில் உறுதி ஏற்றனர். தலா 14 பேர் கொண்ட இரண்டு அணிகளாக உறுதி ஏற்றனர். கடவுளை மறுத்து ‘உளமார’ என்று உறுதி ஏற்கும் வாய்ப்பு அமைச்சர்களுக்கு இந்த முறை யினால் மறுக்கப்பட்டது. (அப்படி உளமார உறுதி ஏற்கும் துணிவு எந்த அமைச்சருக்காவது இருக்குமா என்பது வேறு கேள்வி; கடந்த முறை சட்டமன்ற உறுப் பினர்களாக பதவியேற்றபோது ஜோலார்பேட்டை வீரமணி மட்டும் கடவுள் பெயரால் உறுதியேற்கவில்லை என்ற ஒரு செய்தியும் உண்டு) 1967ஆம் ஆண்டு தி.மு.க. அமைச்சரவை அமைந்தவுடன் முதன்முதலாக கடவுள் பெயரால் உறுதியேற்கும் முறையை முதல்வர் அண்ணா மாற்றி ‘உளமார’ என்று கூறி உறுதி ஏற்கச் செய்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். தலைமையில் அ.இ. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த  போதும் ‘கடவுள்’ பெயரால் உறுதி ஏற்கவில்லை. அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஹண்டே போன்ற பார்ப்பனர்கள் மட்டும் கடவுள் பெயரால் உறுதி ஏற்றனர். கடவுள்,...

பாலமலை ‘பெரியாரியல் பயிலரங்க’ மாட்சி

பாலமலை ‘பெரியாரியல் பயிலரங்க’ மாட்சி

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பாலமலையில் மே 17, 18 தேதிகளில் நடந்த பயிலரங்கம் மிகச் சிறப்பாகவும் கருத்துச் செறிவாகவும் நடந்தது. மேட்டூரில் மலை அடிவாரத்தில் இருக்கும் காவலாண்டியூர் கழகத் தோழர்கள் மிகச் சிறப்பாக இந்த பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். காவலாண்டியூரிலிருந்து பாலமலை என்ற பழங்குடி மக்கள் வாழும் மலை கிராமத்துக்குச் செல்ல மலைப் பாதைகள் வழியே பயணிக்க வேண்டும். இயற்கை வளம் சூழ்ந்த அந்த அமைதியான கிராமத்தில் கிறிஸ்துவ நிறுவனம் பயிற்சிக்கான இடத்தை அளித்தது. கிராம எல்லையில் ஊர் மக்கள் கழகத் தலைவர் பொதுச் செயலாளருக்கு ஆடைகள் போர்த்தி வரவேற்றனர். பயிற்சியரங்கம் வந்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் பழங்குடி மக்களின் தலைவர்கள் கழகத் தலைவர் பொதுச் செயலாளருக்கு ஆடைகள் போர்த்தி சிறப்பித்தனர். பயிலரங்கத்தின் முதல் நிகழ்வாக மருத்துவர் எழிலன் காணொலி காட்சிகளைப் பயன்படுத்தி “அறிவியல் சமுதாய உருவாக்கத்தை நோக்கி” என்ற தலைப்பில் 3 மணி நேரம் வகுப்பு...

‘காவல்’ தரும் காவலாண்டியூர்

‘காவல்’ தரும் காவலாண்டியூர்

மேட்டூரில் மலை அடிவாரத்தில் அமைந் துள்ள காவலாண்டியூர் கிராமம், கழகக் கட்டமைப் புடன் செயல்படக்கூடிய பகுதி. பெயரிலேயே ‘காவல்’ அடையாளத் தைக் கொண்டிருக்கும் இந்த ஊருக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. குடும்பத் தையும் ஜாதியையும் எதிர்த்து, ஜாதி மறுப்பு திருமணம் புரிந்த ஏராள மான இணையர்களுக்கு புகலிடம் தந்து, ‘காவல்’ காத்த ஊர் காவலாண்டி யூர். மாதக் கணக்கில் அடைக்கலம் பெற்ற இணையர்களும் உண்டு. அண்மையில் வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ஊரை விட்டு ஓடி வந்த ஓர் ஜாதி மறுப்பு இணையர், ‘காவலாண்டி யூர்’ என்ற ஊரின் பெயர்ப் பலகையைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டு, ‘இனி நமக்குப் பயமில்லை’ என்று அவர்கள் கூறுவதாக அந்தக் காட்சி இருக்கும். காவலாண்டியூரில் கடும் எதிர்ப்புக்கிடையே கழகம் கால்பதித்து வளர்ந்த நிகழ்வுகளை காவலாண்டியூர் கழகத் தோழர் ஈசுவரன் முகாமில் நினைவு கூர்ந்தார். தோழர்கள் சித்துசாமி, ஈசுரவன், சுப்ரமணியம் ஆகியோர் முன்னின்று...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (20) பெரியார் பற்றி ம.பொ.சி.யின் பச்சைப் பொய்! வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (20) பெரியார் பற்றி ம.பொ.சி.யின் பச்சைப் பொய்! வாலாசா வல்லவன்

சென்னை-தலைநகர் மீட்பு போராட்டத்தில் பெரியார்-காமராசர் கருத்துகளை பொய்யாகப் பதிவு செய்தவர் ம.பொ.சி. (சென்ற  இதழ் தொடர்ச்சி) ம.பொ.சி. வரலாற்றையே புரட்டி எழுதி விட்டார். “சென்னைப் பற்றிய பிரச்சினை யில் தமிழினத்தார் நிலை ஆரம்பத்தில் பரிதாபகரமானதாக இருந்தது. தி.க. தலைவர் பெரியார் ஈ.வெ. ரா., “சென்னை ஆந்திரத்தில் இருந்தால் என்ன தமிழகத் தில் இருந்தாலென்ன! எங்கிருந்தாலும் திராவிடத்தில் தானே இருக்கப் போகிறது என்று அறிவித்து விட்டார்” என்ற பச்சையான பொய்யை (எனது போராட் டத்தில் பக். 619இல்) ம.பொ.சி. எழுதி யுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. காமராஜரைப் பற்றிக்கூடப் பொய்யான தகவலையே ம.பொ.சி. எழுதி யுள்ளார். “ஆம் சென்னை நகர் பற்றிக் கூட எதுவும் கூறாமல் அவர் மௌனம் சாதித்தார்.” (எனது போராட்டம் பக். 619) ம.பொ.சியின் கூற்று உண்மையல்ல. காமராசரின் தலைமையில் தான் அக்கட்சி யினர் நீதிபதி வாஞ்சுவைச் சந்தித்து ஆந்திராவின் தலைநகர் சென்னையில் இருக்கக் கூடாது என்று...

பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம்  (1) கொளத்தூர் மணி

பெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (1) கொளத்தூர் மணி

‘இளந்தமிழகம் இயக்கம்’ பெரியார் பிறந்த நாளையொட்டி ‘பெரியாரும் தமிழ் தேசியமும்’ எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் நிகழ்த்திய உரை. “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” என்ற பெயரில் இந்த கருத்தரங்கத்தை ஒருங்கிணைத்திருக்கும் இளந்தமிழகம் இயக்கத் தோழர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்திருக்கும் அனைத்து தோழர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” என்ற தலைப்பில் சில செய்திகளை உங்களுடன் சுருக்கமாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பெரியார், தமிழ்த் தேசியம் அல்லது தேசியம் என்ற கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்டு அதனடிப்படையில் அல்லது அதற்கு பொருத்தமாக ஒரு தேசியத்தை முன் வைத்தாரா என்றால் இல்லை. அவர் எடுத்துக் கொண்ட ஜாதி ஒழிப்புக் கொள்கையின் நீட்சியாகத்தான் தனித் தமிழ்நாட்டு கருத்தை முன்வைத்தார். என்றாலும்கூட தேசியம் என்ற சொல்லாடலில் உள்ள அனைத்து கூறுகளும் அதில் உள்ளடங்கி இருந்தன. பெரியார் தனது கொள்கைகளை, கோட்பாடு களாக வரையறுக்கவில்லை. அவர் அறிஞர்களை நோக்கி எழுதியவர் அல்ல; அறியாத பாமரர்களிடம்...

தாலி, மெட்டியை அகற்றிய மணமக்கள் !

தாலி, மெட்டியை அகற்றிய மணமக்கள் !

கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பெண்ணடிமைச் சின்னங்களை அகற்றிய ஜாதி மறுப்பு வாழ்விணையர்கள் கல்கி – தேஜஸ்ஸ்ரீ இருவரும் பி.டெ.க். பட்டதாரிகள். படிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தேஜஸ்ஸ்ரீ ஆந்திராவைச் சார்ந்தவர். அவர் தந்தை தெலுங்கு ஆசிரியராக தமிழ் நாட்டில் பணி செய்கிறார். அவர் இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பு காரணமாக வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறி தேஜஸ்ஸ்ரீ – கல்கி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கல்கியின் பெற்றோர் வினோத்- ஸ்டெல்லா ஆகியோர் இந்த திருமணத்திற்கு ஆதரவளித்தனர். வினோத் – ஸ்டெல்லா இணையர் பகுத்தறிவாளர்களாக பெரியாரியலை ஏற்றுக் கொண்டு வாழ்ந்துவரும் தோழர்கள் ஆவர். இந்நிலையில் கடந்த 20.04.2016 அன்று கொளத்தூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தோழர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர். இவர்களின் திருமணம் குறித்து தேஜஸ்ஸ்ரீயின் பெற்றோருக்கு முறைப்படி தகவல்...

இலண்டனும் புதுடில்லியும்

இலண்டனும் புதுடில்லியும்

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனின் மேயராக தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சாதிக்கான் என்ற இஸ்லாமியர், கடந்த மே 5ஆம் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டி யிட்டவர் இங்கிலாந்து நாட்டின் ஆளும் கட்சியான ‘கன்சர்வேட்டிவ்’ கட்சியைச் சார்ந்த ஜாக். கோல்ட் ஸ்மித் என்ற பெரும் பணக்காரர். ‘நான்தான் சாதிக் கான்; இலண்டன் மாநகரத்தின் மேயர்’ என்று மக்களிடம் எளிமையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவரின் மூதாதையர் பாகிஸ்தானியர்கள். இவரது தந்தை, இலண்டன் மாநகர வீதிகளில் பேருந்து ஓட்டுனர். சாதிக் கான் 1970இல் இலண்ட னில் பிறந்தவர்; சட்டம் படித்தவர். எதிர்த்துப் போட் டியிட்ட கோல்ட்ஸ்மித், சாதிக் கானை இஸ்லாமிய பயங்கரவாதி என்று பிரச்சாரம் செய்தார். இஸ்லாமிய பயங்கரவாதம் இலண்டனுக்குள் ஊடுருவிவிடும் என்று மக்களிடம் மத வெறுப்புகளைத் தூண்டி விட்டார். இலண்டன் நகர மக்கள், இந்த ‘மதவெறி’ப் பிரச்சாரங்களை புறந்தள்ளி விட்டார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் பல்வேறு அடையாளங்கள் உண்டு. ஒற்றை...

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?

இந்தியாவின் தலைநகரில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அரசு அதிகாரத் திமிருடன் மதவாதம் படை எடுக்கிறது. மாணவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கடந்த பிப்.9 ஆம் தேதி இந்தியாவின் ஆளும் பார்ப்பன ஆதிக்க சக்திகளால் முறைகேடாக தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு நாளில் தூக்குத் தண்டனைக்கு எதிராகவும்  இராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வரும் காஷ்மீர் மக்களுக்காகவும் மாணவர்கள் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அவ்வளவுதான். மாணவர் தலைவர் கன்யாகுமார் உள்ளிட்ட 5 மாணவர்கள் மீது ‘தேச விரோத சட்டம்’ பாய்ந்தது.  கன்யாகுமார் என்ற புரட்சிகர சிந்தனையை ஏற்றுக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து படிக்க வந்த இளைஞர். கன்யாகுமார் பிணையில் வெளிவந்த பிறகும் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த மாணவர்களை விட்டு வைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைமை, பல்கலைக்கழகங்களில் ‘இந்துத்துவா’ வுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் அனுமதிக்கக் கூடாது என்று மோடி ஆட்சிக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்  வெளிப் படையாகவே எச்சரித்தார். மாணவர்களைப்...

மகாராஷ்டிராவின் மாட்டிறைச்சி அரசியல்

மகாராஷ்டிராவின் மாட்டிறைச்சி அரசியல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பார்ப்பன முதல்வர் தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி பதவிக்கு வந்தவுடன் மாட்டிறைச்சிக்கு முழுமையான தடை விதித்தது. மாட்டிறைச்சியை சாப்பிட்டதாக ஒரு புகார் வந்தால் அதற்காக அவரை கைது செய்து சிறையில் தள்ள முடியும் என்ற அளவுக்கு உணவு உரிமைக்கே சவால் விட்டது அந்த சட்டம். மாடுகளை வெட்டக் கூடாது; வீட்டில் மாட்டிறைச் சியையும் வைத்திருக்கக் கூடாது என்று சட்டம் கூறியது. ஏதோ, இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கையாக பா.ஜ.க. கருதியது. உண்மை என்னவென்றால் தலித் மக்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் உணவு மாட்டிறைச்சி. மிகக் குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய புரதச் சத்துணவு. சட்டமன்றத் தேர்தல்களில் தலித் மக்களின் ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்க அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடும் பா.ஜ.க., தலித் மக்களின் உணவு உரிமைக்கு தடை போட்டு பார்ப்பனிய உணவு கலாச்சாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிக்கிறது. பார்ப்பனர்களே மாட்டுக்கறியை சாப்பிட்டவர்கள்தான். புத்தர் இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகுதான் பார்ப்பனர்களே மாட்டிறைச்சி...

ஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் மோடி ஆட்சி

ஆர்.எஸ்.எஸ். பிடிக்குள் மோடி ஆட்சி

மோடியின் ஆட்சி ஆர்.எஸ்.எஸ். கட்டுப் பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதற்கு சான்றாக செய்திகள் வந்து கொண் டிருக்கின்றன. இஸ்லாமிய எதிர்ப்பை முன்வைத்து இந்தியாவில் இந்துக்களை அணி திரட்டி, ‘இந்துத்துவா’ நாடாக மாற்றுவதற்கான திட்டத்தின் கீழ் ‘சங்பரிவார்’ காய் நகர்த்துகிறது. இதற்காகவே அரசின் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. புதுடில்லியில் அமைச்சகங்களில் ‘சவுத் பிளாக்’ என்று அழைக்கப்படும் வெளியுறவுத் துறை அதிகார வலிமையுடன் திகழ்வதாகும். பார்ப்பனர்கள் அதிகாரப் பிடிக்குள் இந்தத் துறை சிக்கியிருக்கிறது. ஈழத் தமிழர்கள் நடத்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு சூழ்ச்சிகரமான செயல் திட்டங்களை உருவாக்கியது இந்த ‘சவுத் பிளாக்’தான்! இப்போது ‘சவுத் பிளாக்’கையே ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ். நேரடியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. பிரதமர் மோடியின் பாதுகாப்புத் துறை ஆலோசகராக இருக்கும் அஜீத் டோவல் என்பவரிடம் வெளிநாட்டுத் துறை தொடர்பான கொள்கைகளை முடிவெடுக்கவும் செயல்படுவதற்குமான அதிகாரங்கள் வந்துவிட்டன. மோடியே இந்த அதிகாரத்தை வழங்கிவிட்டார்....

ஜனநாயகம் என்றால்… பெரியார்

ஜனநாயகம் என்றால்… பெரியார்

ஜனநாயகம் என்றால் மெஜாரிட்டிகள் மைனாரிட்டிகளை ஆளுவது என்றுதான் அர்த்தம். அதாவது ஒரு விஷயத்தை 51 பேர் ஆதரித்து 49 பேர் எதிர்த்தாலும் அதற்குச் ஜனநாயக வெற்றி என்றுதான் அர்த்தம்… வடநாட்டுத் தென்னாட்டு ஆட்சியை எடுத்துப் பார்த்தால் நமக்கு எப்போது வரப்போகுது மெஜாரிட்டி? நம் வாழ்வெல்லாம் இன்றைக்கு இருக்கிற அமைப்புகள் மாறாமல் இருக்கிற வரையில் மைனாரிட்டியாகத்தானே இருக்க முடியும்?               (‘விடுதலை’ 20.1.1959) கட்சியின் பெயரால் அரசாங்கம் நடை பெறுகிறதென்றால் அது எப்படி ஜனநாயகம் ஆக முடியும்? அவரவர்கள் தங்கள் தங்கள் கட்சிக்கு வேண்டிய நோக்கங்களின்படி எதையும் செய்து கொள்ளுகிறார்கள் என்றால் அவர்கள் மக்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்சி புரிந்ததாகக் கொள்ள முடியுமா? தனிப்பட்ட கட்சியின் பேரால் வருபவரானாலும் அவர் பாரபட்சமின்றி யாவரையும் ஒன்றெனப் பாவித்து ஆட்சி புரிவதே முறையாகும். தன் கட்சிக்காக என்று நீதியையும் நேர்மையையும் கைவிடுவதென்பது முற்றிலும் ஒழுக்கமற்ற செயலாகும்.                       (‘விடுதலை’ 12.1.1956) ஜனநாயகம் என்றால் மக்களாட்சி என்பதுதான் உண்மையான...

தேவை, பெண்களுக்கான நிலையம் ச. தமிழ்ச் செல்வன்

தேவை, பெண்களுக்கான நிலையம் ச. தமிழ்ச் செல்வன்

“பெரியார் எப்போதும் வாழ்வனுபவத்திலிருந்து அறிவுத் தளத்துக்கு நம்மை அழைத்துச் செல்பவர்.” பெரியாரின் பெண் விடுதலைப் பார்வையை மிக நுட்பமாக முன் வைக்கிறது இக்கட்டுரை. கட்டுரை யாளர் தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர், கலைஞர் சங்கத்தின் தலைவர். சமீபகாலமாக என் தலையி ல் ஏறிவிட்ட ஒரு கருத்து, ‘போராட் டங்கள் எல்லாமே கல்வி முறையி லிருந்துதான் துவக்கப்பட வேண்டும்’ என்பது. ‘பெண் விடுதலை, சாதிய ஒடுக்குமுறை, சனநாயகத்துக்கான போராட்டம் எல்லாமே பள்ளிக் கல்வியிலிருந்து ஆரம்பம் ஆக வேண்டும்’ என்று எல்லாக் கூட்டங் களிலும் பேசிக் கொண்டு திரிகிறேன். சமீபத்தில், அக்கருத்தின்மீது ஒரு சின்ன ஆப்பைப் பெரியார் வைத்து விட்டார். இம்மாதம் மகளிர் தினக் கூட்டங் களுக்கான வாசிப்பில் தந்தை பெரியாரின் கட்டுரைகளைக் கையில் எடுத்திருந்தேன். ஒரு கட்டுரையில் அவர் எழுதியிருந்தது: “மேல்நாட்டு ஆண் மக்களுக்கு இருக்கும் அறிவு, கல்வி, வீரம் முதலிய குணங்களுக்கும் நம் நாட்டு ஆண் மக்களுக்கு இருக்கும் அறிவு, கல்வி,...

‘அட்சய திருதியை’ சிறப்பு வினா-விடை!

‘அட்சய திருதியை’ சிறப்பு வினா-விடை!

‘அட்சய திருதியை’ நாளில் தங்கம் வாங்கினால், அது மேலும் மேலும் பெருகும்.  – நகைக்கடை விளம்பரங்கள்                 அப்படின்னா, கடைக்காரங்க தங்கத்தை வாங்கத் தானே வேண்டும்! ஏன், கூவிக் கூவி விக்குறாங்க? ‘அட்சயம்’ என்றால், ‘வளரும்’ என்பது அர்த்தம். தங்கம்தான் வாங்க வேண்டுமென்பது அல்ல, எதை வாங்கினாலும் வளரும்.              – செய்தி                 அப்ப இந்தியா, உலக வங்கியிடம் கடன் வாங்குவதற்கும் அதுதான் உகந்த நாள்ன்னு சொல்லுங்க! ‘அட்சய திருதியை’ நாளில் ஒவ்வொரு நொடியும் புனிதமானது. தனியாக முகூர்த்த நேரம் பார்க்க வேண்டியதில்லை.          – செய்தி                 ஆமாம்! வர்த்தக நலன் கருதி அன்றைக்கு ‘ராகு காலம்’, ‘எமகண்டம்’ எல்லாம் ‘தள்ளுபடி’! வைகாசி மாதத்தில் வளர்பிறை மூன்றாம் திதியில் வருகிற திருதியைதான் உண்மை அட்சய திருதியை திருநாள். இந்த நாளில் சுவாதி நட்சத்திரம் இணைந்து விட்டால், நன்மை பயக்காது என்பதற்காக, அது சித்திரை மாத வளர்பிறை நாள் திருதியைக்கு மாற்றப்பட்டு, அட்சய திருதியை...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (19) தமிழகத் தலைநகராக சென்னை தொடர பெரியாரின் பங்களிப்பு வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (19) தமிழகத் தலைநகராக சென்னை தொடர பெரியாரின் பங்களிப்பு வாலாசா வல்லவன்

சென்னையை ஆந்திராவுக்கு தலைநகராக்க வேண்டும் என்ற திட்டத்தை வகுத்துத் தந்ததே பிரதமர் நேரு தான் என்ற கருத்தை வலியுறுத்தி, 13.2.1953 அன்று சென்னை கடற்கரையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பெரியார் பேசினார். பெரியார் உரையின் தொடர்ச்சி இது. சென்னை நகரம் பறி  போவதை எதிர்த்து பெரியார் ஏதும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பாக பல வரலாற்றுத் தகவல்களை முன்வைக்கிறது கட்டுரை. (சென்ற  இதழ் தொடர்ச்சி) கடற்கரைக் கூட்டத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ்  கட்சி முன் நின்று நடத்தியிருக்கிறது. ம.பொ.சி எனது போராட்டத்தில் கூறியிருப்பதுபோல இராஜாஜி சொல்லி ம.பொ.சி ஏற்பாடு செய்ததல்ல. மேலும் பெரியாரின் கடற்கரைச் சொற்பொழிவிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் மேயரின் அலுவலகத்தில் நான்கு நாட்களுக்கு முன் நடைபெற்ற அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கடற்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட் டுள்ளது தெரிய வருகிறது. பெரியாரின் கிளர்ச்சியைக் காட்டித்தான் முதலமைச்சர் இராஜாஜி காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் “சென்னை யில்...

“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”

“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வே. மீனாட்சி சுந்தரம், ‘மார்க்சிஸ்ட்’ ஏப்ரல் மாத இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். “பகுத்தறிவு சித்தாந்தமும் – தி.மு.க., அ.தி.மு.க. சீரழிவும்” என்பது அக்கட்டுரை தலைப்பு. இக்கட்டுரை பெரியார் நடத்திய சமுதாயப் போராட்டத்தின் தாக்கம் குறித்து விவாதிக்கிறது. மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ‘தோழர் ஏ.பி.’ என்று அழைக்கப்பட்ட ஏ.பாலசுப்பிரமணியம், பெரியார் இயக்கம் குறித்து கொண்டிருந்த மதிப்பீடுகளை இக்கட்டுரை பதிவு செய்கிறது. மார்க்சியம் – பெரியாரியத்தை காலத்தின் தேவைக்கேற்ப உள்வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்துகிறது.  முக்கியத்துவம் கருதி, கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்.  வாசிப்பை எளிமையாக்க, ஆங்காங்கே கருத்துச் சிதையாமல் சொற்றொடர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  (ஆர்) பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 1857-58 சிப்பாய் எழுச்சிக்குப் பிறகு தங்களது நிர்வாக முறையில் மாற்றம் கொண்டுவர இந்திய அரசாங்க சட்டம் என்ற தலைப்பில் ஒரு சட்டமியற்றினர் அன்றைய விக்டோரியா மகாராணியின் மீது இந்திய...

தூக்குத் தண்டனைக்கு உள்ளாவது யார்?

தூக்குத் தண்டனைக்கு உள்ளாவது யார்?

இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற இயக்கம் தீவிரமடைந்து வருகிறது. இராஜீவ் கொலை வழக்கில் 23 ஆண்டு காலத்துக்கும் மேலாக சிறையில் வாழும் 7 தமிழர்கள் தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள். ஆனாலும், ஏனைய சிறைவாசி களுக்கு வழங்கப்படும் உரிமைகள் இவர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் தூக்குத் தண்டனைக்கு உள்ளாகிறவர்கள், சமூகப் பொருளாதார நிலைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்ற ஆய்வை  கடந்த வெள்ளிக் கிழமை (மே 6, 2016) டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இதுவரை தூக்கிலிடப்பட்டவர் களில் பெரும்பான்மையினர், எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகள். மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மற்றும் ஏழைகளாகவே இருப்பதை ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது. தற்போது தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும் 385 பேரில் 241 பேர் முதன்முறையாக குற்றம் செய்தவர்கள். இதில் பல இளஞ்சிறார்களும் உண்டு. இளம் சிறார்களையும் முதியவர்களையும் தூக்கிலிடக் கூடாது...

கமலஹாசனின் “சபாஷ் நாயுடு”

கமலஹாசனின் “சபாஷ் நாயுடு”

நடிகர் கமலஹாசன் தன்னை பெரியாரிஸ்ட், கடவுள் மறுப்பாளராக அடையாளப்படுத்தி வருகிறார். மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் திரைப்பட உலகில் புகழ் பெற்ற நடிகர்கள் இப்படி பெரியார் கொள்கையோடு தங்களை இணைத்துக் கொள்ள முன் வருவது வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியதுதான். ஆனால், சமூக நீதிக் கொள்கையில் அவர்கள் வேறுபடுகிறார்கள். குறிப்பாக இடஒதுக்கீட்டுக்கு எதிராக கமலஹாசன் கருத்துகளைத் தெரிவிக்கிறார். பெரியாரின் கடவுள் மறுப்பு கோட்பாடு, சமூக நீதியையும், பார்ப்பனிய சமூக ஒடுக்குமுறை எதிர்ப்புகளையும் உள்ளடக்கமாகக் கொண்டதாகும். மக்கள் விடுதலைக்கான சமூகநீதியைக் கொண்டதே பெரியார் பேசிய நாத்திகம். இது கமலஹாசன் பேசும் நாத்திகத்திலிருந்து மாறுபட்டது. இப்போது கமலஹாசன் தான் தயாரிக்கப் போகும் படத்துக்கு ‘சபாஷ் நாயுடு’ என்ற பெயரை சூட்டியிருப்பது விவாதங்களை கிளம்பியிருக்கிறது. படத்தின் பெயரோடு ஏன் ஜாதியை இணைக்க வேண்டும்? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகின்றன. ‘படத்தின் கருத்தைப் பாருங்கள். தலைப்பை பார்க்காதீர்கள்’ என்று பதில் கூறுகிறார் கமலஹாசன். இப்படிப்பட்ட விவாதங்களை உருவாக்குவதேகூட...

“அன்னையர்களை” நெருப்பில் கொளுத்திய பார்ப்பனியம்

“அன்னையர்களை” நெருப்பில் கொளுத்திய பார்ப்பனியம்

மே 8 – உலக அன்னையர் நாள். 1908ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வெர்ஜினியாவில் உள்ள கிராம்டன் நகரில்தான் இது முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது. இப்போது இந்தியா உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 2ஆவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. சமூக வரலாற்றில் பெண்களே சமூகத்துக்குத் தலைமை தாங்கினார்கள். தனிமனித சொத்துடைமை உருவான பிறகு தாய்வழிச் சமூகம், தந்தை வழிச் சமூகமாகியது. தனது வாரிசுகளுக்கே சொத்துகள் போய்ச் சேர வேண்டும் என்ற சமூக வேட்கை, பெண்களை ஆண்களுக்கு  அடிமைப்படுத்தியது. இந்து பார்ப்பனிய மதம், அன்னையர்களை கொடுமைப் படுத்தியே வந்திருக்கிறது. வர்ணக் கலப்பைத் தடுப்பதற்கு கணவன் இறந்தவுடன் அவனை எரியூட்டும் நெருப்பில் அவனது மனைவியையும் உயிருடன் எரிக்கும் சமூகக் கொடுமைகளை பார்ப்பனர்கள் திணித்தார்கள். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகள், இந்தக் கொடுமைக்கு எதிராகப் போராடியதால், பிரிட்டிஷ் ஆட்சி உடன்கட்டை ஏறும் கொடுமைக்கு சட்டப்படி முற்றுப்புள்ளி வைத்தது. தடைச் சட்டத்தையும்...

ரூ.86 கோடி கனிம வள கொள்ளைக்காரர்; காவல் நிலையத்தில் ‘ரவுடி’ பட்டியலில் அறிவிக்கப்பட்டவர்!  ‘தளி’ இராமச்சந்திரனை தோற்கடியுங்கள்! கெலமங்கலம் கூட்டத்தில் கொளத்தூர் மணி முழக்கம்

ரூ.86 கோடி கனிம வள கொள்ளைக்காரர்; காவல் நிலையத்தில் ‘ரவுடி’ பட்டியலில் அறிவிக்கப்பட்டவர்! ‘தளி’ இராமச்சந்திரனை தோற்கடியுங்கள்! கெலமங்கலம் கூட்டத்தில் கொளத்தூர் மணி முழக்கம்

4-5-2016 புதன் அன்று மாலை 5-00 மணிக்கு, கிருட்டிணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேருந்து நிலையத் திடலில், கிருட்டிணகிரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், கழக தேர்தல் நிலைப்பாட்டு விளக்கப் பொதுக்கூட்டம், மாவட்டத் தலைவர் தி.க.குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் தலைவர் குமார், மாவட்டப் பொருளாளர் மைனர் (எ) வெங்கடகிரியப்பா, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் பழனி நன்றி கூறினார். தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வாழ்கிற அப் பகுதியில் மைனர் வெங்கடகிரியப்பா தெலுங்கு மொழியிலேயே உணர்வுபூர்வமாக, அத்தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத் தப்பட்டிருக்கிற தளி இராமச்சந்திரனின் அடாவடி சமூக விரோத நடவடிக்கைகளை விளக்கிப் பேசியதோடு, பொதுவுடமைக் கட்சிக்கு  இது ஒரு களங்கமே என்பதை விரிவாக விளக்கிப் பேசினார். பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன்,...

‘தளி’ தொகுதியில் தி.முக. வேட்பாளரை ஆதரித்து கழகம் கிராமம் கிராமமாக பரப்புரை

‘தளி’ தொகுதியில் தி.முக. வேட்பாளரை ஆதரித்து கழகம் கிராமம் கிராமமாக பரப்புரை

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் பழனி, 2012ஆம் ஆண்டில் துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். தளி பகுதியில் கடும் குற்றப் பின்னணிகளோடு சட்ட விரோதமாக நில ஆக்கிரமிப்பு, குவாரி கொள்ளைகளை நடத்தி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இராமச்சந்திரன் என்பவரை எதிர்த்து, மக்கள் உரிமைக்காகப் போராடியதற்காக பழனி படுகொலைக்கு உள்ளானார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தளி இராமச்சந்திரன். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு விடுதலையாகி விட்டார். கொலை வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தளி’ தொகுதி வேட்பாளராக இராமச்சந்திரனை அக்கட்சி நிறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை இந்தத் தேர்தலில் ஆதரிக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் ‘தளி’ தொகுதியில் மட்டும் அக்கட்சி தனது வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது. இந்திய...

களமிறங்கினர் கழகத் தோழர்கள்:7 மணி நேரப் போராட்டம் வெற்றி! பொதுச் சுடுகாட்டில் தீண்டாமை முறியடிப்பு

களமிறங்கினர் கழகத் தோழர்கள்:7 மணி நேரப் போராட்டம் வெற்றி! பொதுச் சுடுகாட்டில் தீண்டாமை முறியடிப்பு

ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூர் அருகில் உள்ளது சி.எம் நகர். 27.4.16 அன்று அவ்வூரைச் சார்ந்த மாரியம் மாள் (எ) சாந்தி என்பவர் மரண மடைந்தார். ஆர்.என் புதூர், சி.எம் நகர் பகுதி வாழ் மக்கள் அங்குள்ள காவிரிக் கரையோரம் உள்ள மங்கலத்துறை என்ற பகுதியை தங்கள் சுடுகாடாக அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் சுடுகாட்டில் அரசு சார்பில் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு, தகனமேடை அமைக்கப்பட்ட பிறகு, ஆதிக்க சமூகத்தினர் அதற்கு பூட்டு போட்டு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முனைந்துள்ளனர். இந்நிலையில் இறந்து போன மாரியம்மாள் என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்காக சி.எம். நகர் பகுதி மக்கள் உடலை எடுத்துச் சென்றனர். ஆனால், ஒரு ‘சக்கிலிச்சி’ யின் பிணத்தை புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி, சுடுகாட்டின் பூட்டைப் பூட்டி சாவியை எடுத்து வைத்துக் கொண்டு தர மறுத்த ஆர்.என் புதூரைச் சார்ந்த ஆதிக்க சமூகத்தினர்...

விளிம்பு நிலை சமூகங்களை புறக்கணிக்கும் ஆதிக்க சாதி தேர்தல் அரசியல்!

விளிம்பு நிலை சமூகங்களை புறக்கணிக்கும் ஆதிக்க சாதி தேர்தல் அரசியல்!

தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஜாதியம் குறித்து ‘தமிழ் இந்து’ (ஏப்.29) நாளேடு வெளியிட்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: தமிழ்நாட்டு அரசியல் இன்றைக்கு யார் கையில் இருக்கிறது என்று கேட்டால், கருணாநிதி, ஜெய லலிதா பெயர்களைச் சொல்வது சுலபமான பதில். அது உண்மையும்கூட. அதேசமயம், அது மட்டுமே உண்மை அல்ல. தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளின் நிர்வாகிகளின் சாதிப் பின்னணி இது தொடர்பான உண்மைகளை நாம் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள வழிவகுக்கும். தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகள் 7. பொதுத் தொகுதிகள் 32. மொத்தமுள்ள 39 தொகுதி களில் 32 இடங்கள் அ.தி.மு.க. வசம் இருக்கின்றன. பொதுத் தொகுதிகளில் அதன் பிரதிநிதிகளின் சமூகம் சார் பின்னணி இது: வன்னியர் 23.33ரூ, கவுண்டர் 23.33ரூ, முக்குலத்தோர் 20ரூ, நாடார் 6.7ரூ, நாயுடு 3.33ரூ. தமிழகத்தின் சட்டசபைத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (18) வாஞ்சு அறிக்கைக்கு எதிராக பெரியார் போர்க் கொடி! வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (18) வாஞ்சு அறிக்கைக்கு எதிராக பெரியார் போர்க் கொடி! வாலாசா வல்லவன்

சென்னையை ஆந்திராவுக்கு தலைநகராக்க வேண்டும் என்ற திட்டத்தை வகுத்துத் தந்ததே பிரதமர் நேரு தான் என்ற கருத்தை வலியுறுத்தி, 13.2.1953 அன்று சென்னை கடற்கரையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பெரியார் பேசினார். பெரியார் உரையின் தொடர்ச்சி இது. சென்னை நகரம் பறி  போவதை எதிர்த்து பெரியார் ஏதும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மறுப்பாக பல வரலாற்றுத் தகவல்களை முன்வைக்கிறது கட்டுரை. (14.4.2016 ‘புரட்சிப் பெரியார் முழக்க’ இதழின் தொடர்ச்சி) இந்தக் கூட்டம் வாஞ்சு அறிக்கையினால் ஏற்படும் கெடுதியை எடுத்துச் சொல்ல மாத்திரம் ஏற்படுத்தப்பட்டக் கூட்டம் அல்ல. அந்த அறிக்கையை மாற்ற நாம் என்ன செய்யவேண்டும் என்கிற பரிகாரத்திற்கு ஆகவும் கூட்டப்பட்ட கூட்டமாகும். வாஞ்சு அறிக்கையினால் ஏற்படும் கேடு இந்த நாட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்ததுதான்; இங்குக் கூடி உள்ள உங்கள் எல்லோருக் கும் தெரிந்ததுதான். இதற்குப் பரிகாரம் என்ன? இதில் யார் யார் எவ்வளவு தூரம் ஒன்றுபட்டு வேலை செய்ய...

‘தளி’ இராமச்சந்திரனை நியாயப்படுத்துகிறார் தோழர் முத்தரசன்

‘தளி’ இராமச்சந்திரனை நியாயப்படுத்துகிறார் தோழர் முத்தரசன்

தளி தொகுதியில் போட்டி யிடும் குற்றப் பின்னணி கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர் இராமச்சந்திரன் குறித்து அக் கட்சியின் மாநில செயலாளர் ‘தினமலர்’ நாளிதழுக்கு (ஏப்.28) அளித்துள்ள பேட்டி இது: கேள்வி: ‘ஊழலற்ற ஆட்சி; நேர்மையான நிர்வாகம்’ என பிரச்சாரம் செய்யும் நீங்கள், கிரானைட் முறைகேடு மற்றும் கொலை வழக்கில் சிக்கி உள்ள எம்.எல்.ஏ., தளி இராமச்சந்திரனை மீண்டும் வேட்பாள ராக்கியது ஏன்? பதில்: தளி இராமச் சந்திரன் மீதான புகார்கள் குறித்து, கட்சி யின் மாநிலக் குழு தீவிர விசாரணை நடத்தியது. அவர் மீதான புகார்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி யில் செய்யப்பட்டவை என தெரிகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகள், நீதிமன்ற விசாரணை யில் உள்ள நிலையில், ஒரு தலைபட்சமாக முடிவெடுத்து, அவரை ஒதுக்கி வைக்க முடியாது. அவர் எம்.எல்.ஏ. ஆன பின், கிரானைட் தொழிலை செய்ய வில்லை. கிரானைட் தொழிலை, இராமச் சந்திரன் குடும்பத்தினர், நீண்டகாலமாக செய்து...

தலையங்கம் அய்.அய்.டி.களுக்குள் நுழைகிறது சமஸ்கிருதம்

தலையங்கம் அய்.அய்.டி.களுக்குள் நுழைகிறது சமஸ்கிருதம்

இந்திய தொழில்நுட்பக் கழகமான அய்.அய்.டி.களில் சமஸ்கிருதம் கற்றுத் தருவதற்கு மத்திய மனித வளத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி எழுத்து மூலம் அளித்த பதிலில், “வேதங்களில் கூறப்பட்ட அறிவியலை மாணவர்கள் படித்து அறிவதற்காக, சமஸ்கிருதத்தை கற்பிக்க தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும்” என்று அய்.அய்.டி.களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். புராணம் மற்றும் வேதங்களில் கூறியுள்ள ‘அறிவியல்’ கருத்துகளைப் பரப்பிடவும், சமஸ்கிருதத்தைப் பாதுகாத்திடவும் மோடி ஆட்சி ஒரு குழுவை நியமித்திருக்கிறது. முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியான தமிழ்நாட்டைச் சார்ந்த கோபால்சாமி அய்யங்கார், இந்தக் குழுவின் தலைவர். இந்தக் குழு நவீனகால படிப்புகளான கணிதம், இயற்பியல், வேதியல், உயிரியல், பொறியியல், தொழில் நுட்பம் தொடர்பாக வேதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாம். அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் மோடி ஆட்சி இந்த முடிவை  எடுத்துள்ளதாம். இதற்கு ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த...

தமிழக அரசே! உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடைபாதைக் கோயில்களை அகற்று! கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள் – முற்றுகை

தமிழக அரசே! உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து நடைபாதைக் கோயில்களை அகற்று! கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள் – முற்றுகை

உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து தமிழக அரசு நடைபாதைக்  கோயில்களை அகற்ற வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டங்கள் – முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது. திருப்பூரில் : திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பில் 28.04.2016 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடைபாதை கோயில்களை உடனே அகற்று என தமிழக அரசை வலியுறுத்தி கழக மாநகர தலைவர் நீதிராசன் தலைமையில் திருப்பூர் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, “சட்ட விரோதமான நடைபாதைக் கோயில்களை அகற்று! உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பத்து ஆண்டுகள் ஆகியும் அத்தகைய கோயில்களை அகற்றாமல் இனியும் கால தாமதப்படுத்தாதே!” என தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட செயலாளர் முகில்ராசு, பல்லடம் நகர தலைவர் கோவிந்தராசு, ஒன்றிய தலைவர் சண்முகம், சூலூர் பன்னீர்செல்வம்,  அறிவியல் மன்றம் ஆசிரியர் சிவகாமி, அகிலன், மாதவன், முத்து....

சாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம் நிதியுதவி !

சாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம் நிதியுதவி !

டாக்டர் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண நிதித் திட்டம் (னுச.ஹஅநெனமயச ளுஉhநஅந கடிச ளுடிஉயைட ஐவேநபசயவiடிn வாசடிரபா ஐவேநச-ஊயளவந ஆயசசயைபநள) என்று ஒரு திட்டம் மத்திய அரசால் முடங்கிப் போய் கிடக்கிறது. சாதி மறுப்புத் திருமணம் செய்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நல்வாழ்வுக்காகவும், சமூக அங்கீகாரத்துக் காகவும் பொருளாதார பாதுகாப்புக்காகவும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரப் பகிர்வு அமைச்சகம் 2013இல் இந்த நிதித்திட்டத்தை உருவாக்கியது. இதை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அம்பேத்கர் ஃபவுண்டேஷனிடம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஒரு ஆண்டுக்கு இந்தியா முழுவதும் 500 தம்பதிகளைத் தேர்வு செய்து ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதை அம்பேத்கர் ஃபவுண்டேஷன் இறுதி செய்து நிதியுதவியை அளிக்கும். கொடுமை என்னவென்றால், திட்டம் தொடங்கப்பட்டது முதல் இன்றுவரை இந்த நிதியுதவியைப்ய பெற்றவர்கள், வெறும்...

கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு: ஒரு விளக்கம் !

கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு: ஒரு விளக்கம் !

கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் இங்கு பதிவிடப்படுகின்றன. முதலில் – திடீர் தமிழ் கம்பெனிகளின் எதிர்ப்பை நாம் கண்டு கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் இவர்கள் எப்போதும் நம்மை எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் நாம் எது செய்தாலும் எதிர்ப்பவர்கள், அதனால் அவர்களின் எதிர்ப்பு குறித்து நமக்கு ஒரு போதும் கவலை இல்லை. இரண்டாவதாக – நம் தோழமை சக்திகளின் விமர்சனங்கள்.அவற்றிற்கு நாம் கட்டாயம் பதில் சொல்லவேண்டிய கடமை இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் ஆதாயம் கருதியோ, பலாபலன் கருதியோ நாம் இந்த பெரியாரிய பணியில் இல்லை என்பது போலவே இயங்கும் தோழமை அமைப்பு தோழர்களிடம் நாம் நம் நிலையை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. நாளை தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களில் நாம் இணைத்து பணியாற்றத்தான் போகிறோம் என்பதை இவ்விடம் சொல்லத் தேவையில்லை. பெரியார் இயக்கங்கள் தேர்தல் ஆதரவு நிலைப்பாடு என்பது “யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் வந்துவிடக் கூடாது” என்பதை...