‘தளி’ இராமச்சந்திரனை நியாயப்படுத்துகிறார் தோழர் முத்தரசன்
தளி தொகுதியில் போட்டி யிடும் குற்றப் பின்னணி கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர் இராமச்சந்திரன் குறித்து அக் கட்சியின் மாநில செயலாளர் ‘தினமலர்’ நாளிதழுக்கு (ஏப்.28) அளித்துள்ள பேட்டி இது:
கேள்வி: ‘ஊழலற்ற ஆட்சி; நேர்மையான நிர்வாகம்’ என பிரச்சாரம் செய்யும் நீங்கள், கிரானைட் முறைகேடு மற்றும் கொலை வழக்கில் சிக்கி உள்ள எம்.எல்.ஏ., தளி இராமச்சந்திரனை மீண்டும் வேட்பாள ராக்கியது ஏன்?
பதில்: தளி இராமச் சந்திரன் மீதான புகார்கள் குறித்து, கட்சி யின் மாநிலக் குழு தீவிர விசாரணை நடத்தியது. அவர் மீதான புகார்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி யில் செய்யப்பட்டவை என தெரிகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகள், நீதிமன்ற விசாரணை யில் உள்ள நிலையில், ஒரு தலைபட்சமாக முடிவெடுத்து, அவரை ஒதுக்கி வைக்க முடியாது.
அவர் எம்.எல்.ஏ. ஆன பின், கிரானைட் தொழிலை செய்ய வில்லை. கிரானைட் தொழிலை, இராமச் சந்திரன் குடும்பத்தினர், நீண்டகாலமாக செய்து வருகின்றனர்.
– இதே நியாயங்களைத்தான் சொத்து குவிப்பு வழக்கில் ஜெய லலிதாவும், 2ஜி வழக்கில் தி.மு.க. வினரும் கூறுகிறார்கள். அந்த நியாயங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கிறதா?
பெரியார் முழக்கம் 05052016 இதழ்