பள்ளத்தூர் நாவலரசன் தாயார் படத்திறப்பு
திராவிடர் விடுதலைக் கழகப் பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் தாயார் சின்னப் பிள்ளை அவர்களின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி, திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் அரு. நல்லதம்பி தலைமையில் பள்ளத்தூரில் நடைபெற்றது. சின்னபிள்ளை யின் படத்தினை பெரியார் பெருந் தொண்டர் அழகிய நாயகிபுரம் ப.அ. வைத்தியலிங்கம் திறந்து வைத்தார். சின்னப்பிள்ளையின் தொண்டினை நினைவு கூர்ந்து, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மனோகரன், ஆசிரியர் வீரமணி, த.மா.கா. நிர்வாகி வை.ராகவன், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி முருகேசன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் பொறுப்பாளர் பசுபதி, கூத்தலிங்கம், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆத்மநாதன், தி.மு.க. வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் செல்வராஜ், திராவிடர் விடுதலைக் கழக தஞ்சை மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கு.பாரி, ‘மெய்சுடர் இதழ்’ ஆசிரியர் வெங்கடேசன், இ.சி.ஐ. திருச்சபை ஆயர் ஜேம்ஸ், தமிழக மக்கள் புரட்சி கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன், விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி பொன்முருகு, தமிழ்வேந்தன், திராவிடர் விடுதலைக் கழக மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு ரெத்தினசாமி, மாநில பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர் அரங்க. குணசேகரன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், “பெரியாரின் கொள்கை களை எளிமையான முறையில் சொந்தமாக பாட்டெழுதி, தானே மெட்டமைத்து, தானே இசையமைத்து, தமிழகம் முழுவதும், கிராமப்புற மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் மக்கள் பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் ஆவார். அவரை ஈன்றெடுத்த தாயார் சின்னப்பிள்ளை இன்றைக்கு நம்மிடம் இல்லை, அவரை இழந்து தவிக்கின்ற நாவலரசன் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
செய்தி: மன்னை காளிதாசு
பெரியார் முழக்கம் 26052016 இதழ்