‘தளி’ தொகுதியில் தி.முக. வேட்பாளரை ஆதரித்து கழகம் கிராமம் கிராமமாக பரப்புரை

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் பழனி, 2012ஆம் ஆண்டில் துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். தளி பகுதியில் கடும் குற்றப் பின்னணிகளோடு

சட்ட விரோதமாக நில ஆக்கிரமிப்பு, குவாரி கொள்ளைகளை நடத்தி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இராமச்சந்திரன் என்பவரை எதிர்த்து, மக்கள் உரிமைக்காகப் போராடியதற்காக பழனி படுகொலைக்கு உள்ளானார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தளி இராமச்சந்திரன். குண்டர்

சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு விடுதலையாகி விட்டார். கொலை வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தளி’ தொகுதி வேட்பாளராக இராமச்சந்திரனை அக்கட்சி நிறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை இந்தத் தேர்தலில் ஆதரிக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் ‘தளி’ தொகுதியில் மட்டும் அக்கட்சி தனது வேட்பாளரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதை ஏற்கவில்லை. எனவே கழகத்தின் தலைமைக் குழு எடுத்த முடிவின்படி ‘தளி’ இராமச்சந்திரனை எதிர்த்தும், தி.மு.க. வேட்பாளரை ஆதரித்தும் பரப்புரை மேற்கொண்டது. சென்னை, கிருஷ்ணகிரி மாவட்ட கழகத் தோழர்கள், மே 8ஆம் தேதி தளி தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று பரப்புரை செய்தார்கள். காலை 9 மணியிலிருந்து பிற்பகல்

4 மணி வரை பரப்புரை நடை

பெற்றது. கீழ்க்கண்ட கிராமங்களில் பரப்புரை நடந்தது.

அணுசோலை, வனகுறிஞ்சி, தேவநத்தம், பாலகுறி, சமதாத்துனூர், சவுத்தாளம், பிசிரேத்தி, அணுசெட்டி, திரிசெட்டிப்பள்ளி, களேத்தள்ளி, தேத்தேறி, தேன்கனிக்கோட்டை.

தலைமைக் குழு உறுப்பினர் அன்பு. தனசேகர், கிருட்டிணகிரி மாவட்ட கழகச் செயலாளர் குமார், தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி, விழுப்புரம் அய்யனார், நாத்திகன் ஆகியோர் தளி. இராமச்சந்திரனின் குற்றப்  பின்னணியை எடுத்துக் கூறியும், தி.மு.க. வேட்பாளர் ஒய். பிரகாஷை யும் ஆதரித்தும் பரப்புரை செய்தனர். பரப்புரைப் பயணத்தில் கிருஷ்ணகிரி மாவட்டக் கழகத் தோழர்கள் வாஞ்சிநாதன், கிருஷ்ணன், சங்கர் உள்ளிட்ட தோழர்களும், சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் வழக்கறிஞர் துரை. அருண், தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசு குமார், பா.ஜான், தெட்சிணாமூர்த்தி, இராவணன், செந்தில் உள்ளிட்ட

40 தோழர்கள் பங்கேற்றனர். மக்களிடையே பரப்புரைக்கு

நல்ல வரவேற்பு இருந்தது. தி.மு.க. தோழர்களும் ஒத்துழைப்பு வழங்கினர்.

பெரியார் முழக்கம் 12052016 இதழ்

You may also like...