கடவுள் தந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர் ஆத்திகரா? நாத்திகரா?
‘உணர்வு’ என்ற இஸ்லாமிய வார ஏடு தொடர்ந்து கடவுள் – மத எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இந்த வாரம் (ஜூன் 16-22) வெளி வந்துள்ள ஒரு கட்டுரை இப்படி கூறுகிறது: “வரலாறு தோன்றிய காலத்திலிருந்து மனித வாழ்க்கையின் முன்னேற்றத் திற்கும், அவர்களின் இன்னல்களைப் போக்குவதற்கும் அற்புதமான கண்டு பிடிப்புக்களை வழங்கிய சிந்தனையாளர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். சான்றாக எழுத்துக் கலைக்குக் காகிதத்தை உருவாக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்த ‘சாயிலூன்’, அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ‘குட்டன்பர்க்’, தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த ‘சிங்கர்’, எந்திரங்கள் பலவற்றிற்கும் அடிப்படை விதியாக இருக்கும் நெம்புகோல் தத்துவத்தைக் கண்டுபிடித்த ‘ஆர்க்கிமெடிஸ்’, டீசல் எந்திரத்தைக் கண்டுபிடித்த ‘டீசல்’, ரேடியோவைக் கண்டுபிடித்த ‘மார்க்கோனி’, தொலைபேசியைக் கண்டுபிடித்த ‘அலெக்சாண்டர் கிரகாம்பெல்’, இரத்தச் சுழற்சியை கண்டுபிடித்த ‘வில்லியம் ஹார்வி’, பென்சிலினைக் கண்டுபிடித்த ‘அலெக்சாண்டர் பிளமிங்’, இளம்பிள்ளைவாதம் அம்மை நோய்களுக்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்த ‘ஆல்பிரட் சாபின்’ மற்றும் ‘எட்வார்டு ஜென்னர்’, காலரா மற்றும் மலேரியா...
