தாமினி காதல் வழக்கு: நீதிமன்றம் திரண்டு வந்த கழகத் தோழர்கள்

இயக்குனர் சேரன் மகள் தாமினி-சந்துரு காதல் இணையர்களை மிரட்டிப் பிரிக்க இயக்குனர் சேரனுக்குப் பின்னால் திரையுலகமே திரண்டு வந்தது. நீதிமன்ற வளாகத்துக்குள் குவிந்த திரைப்பட ஸ்டன்ட் நடிகர்கள் , மனித சங்கிலி போல் அணி வகுத்து நின்றனர். நீதிமன்ற வளாகத்துக்குள் பின்பற்றப்பட வேண்டிய சட்ட விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டன. இந்த சூழ்நிலையில் சேரன் அணியினரால் அவமானத் துக்கும் மிரட்டலுக்கும் உள்ளாக்கப்பட்ட சந்துரு குடும்பத்துக்கும், காதலர்களைப் பிரிக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிராக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் 50 பேர் ஆகஸ்டு 21 ஆம் தேதி நீதிமன்றம் திரண்டு வந்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

பெரியார் முழக்கம் 29082013 இதழ்

You may also like...