பள்ளிபாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை
தமிழர் வேலை வாய்ப்புகளைப் பறித்த தமிழக அரசின் ஆபத்தான சட்டத்திருத்தம் பள்ளிபாளையத்தில் 20.9.2019 அன்று நடந்த திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது தமிழ்நாட்டின் அரசு வேலை வாய்ப்புகளை பிற மாநிலத்தவர் – பிற நாட்டினர் அபகரிக்கும் ஆபத்தான திருத்தச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டி காட்டினார். இந்தியாவில் தற்போது உயர்கல்விக்குச் செல்கிறவர்கள் ( 18 வயது முதல் 23 வயதுவரை) எண்ணிக்கை சராசரி 25.2% என்று உள்ளது. இதை 2035ற்குள் 50% ஆக உயர்த்தப் போவதாக கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 25% ஆக இருக்கும் போதே 50,000 உயர்கல்வி நிலையங்கள் உள்ளன. 2035இல் 50% ஆக உயரும் போது 12,300 கல்லூரிகளாக இருக்குமாம். எவ்வளவு அறிவுப்பூர்வமான...