அரை சதவீதம்கூட வேலை தராத மோடி அரசு
நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில், இந்திய இளைஞர்களில் 1 சத விகிதம் பேருக்குக் கூட வேலை வழ ங்கப்படவில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்புக்காக 22 கோடியே 05 லட்சம் விண்ணப்பங்கள் வந்த நிலையில், அதில், 7 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு மட்டுமே நியமனத்திற்கான பரிந்துரைகள் வழங்கப் பட்டுள்ளன என்று ஒன்றிய பாஜக அமைச்சரே நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் ஒப்புக் கொண்டுள்ளார். ஒன்றிய அரசுத்துறைகளில் கடந்த 8 ஆண்டுகளில் வழங்கப்பட்ட பணி நியமனங்கள் குறித்து, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. அனுமுலா ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியிருந்தார்.
வெறும் 0.33 சதவீதம்
இதற்கு நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்த ஒன்றியப் பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சரும், பிரதமர் அலுவலக இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங், ‘‘கடந்த எட்டு ஆண்டுகளாக அரசு வேலை களுக்கான ஆர்வம் தடையின்றி தொடர்ந்தது. ஆனால், பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1 சதவீதத்திற்கும் குறைவான விண்ணப்பங்களே வேலைக்கு தேர்ந்தெடு க்கப்பட்டன. 2014-15 முதல்
2021-22 வரை பெறப்பட்ட 22.05 கோடி விண்ணப்பங்களில், 7.22 லட்சம் அல்லது 0.33 சதவிகிதம் மட்டுமே, ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பணி நியமனம் செய்ய பரிந்து ரைக்கப்பட்டுள்ளன’’ என்று கூறியுள் ளார்.
தேர்தல் நடந்த ஆண்டில் மட்டும்…
அமைச்சரின் எழுத்துப்பூர்வ பதில் மூலம் மேலும் பல விவரங்கள் தெரியவந்துள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் பணிக்காக தேர்ந் தெடுக்கப்பட்ட 7 லட்சத்து 22 ஆயிரம் என்ற மொத்த எண்ணிக்கையில் 20 சதவிகிதத் திற்கும் அதிக மானவர்கள் 2019-20 நிதி யாண்டில் மட்டுமே நியமனம் பெற்றுள்ளனர். ஏனெனில் அந்த ஆண்டில் தான் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுநோய் முழுவதுமாக பரவுவதற்கு முந்தைய – அந்த 2019-20 நிதியாண்டில் அதிக பட்சமாக 1.47 லட்சம் பேர் நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 2019-20 ஆம் ஆண்டைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், 2014-15 ஆண்டுக்குப் பிறகு அரசுப் பணி களுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே நியமனங்கள் நடைபெற்றுள்ளன. மன்மோகன்சிங் ஆட்சியிலிருந்து வெளி யேறிய – மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 2014-15 நிதியாண்டில் 1 லட்சத்து 30 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் நியமனத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஆனால், முழுமையாக மோடி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபின் அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை தொடர்ந்து குறையத் துவங்கியுள்ளது.
2015-16 நிதியாண்டில் 1 லட்சத்து 11 ஆயிரம் பேர்; 2016-17-இல் 1 லட்சத்து ஆயிரம் பேர்; 2017-18-இல் 76 ஆயிரத்து 147 பேர்; 2018-19-இல் 38 ஆயிரத்து 100 பேர், 2020-21-இல் 78 ஆயிரத்து 555 பேர், 2021-22-இல் 38 ஆயிரத்து 850 பேர் என்ற எண்ணி க்கையிலேயே பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கடந்த எட்டு ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக 7 லட்சத்து 22 ஆயிரம் பேர் மட்டுமே பணி நியமனத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
8 ஆண்டுகளில் சராசரியாக ஒவ் வொரு ஆண்டும் 2 கோடியே 75 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதிலிருந்துசராசரியாக 90 ஆயிரத்து 288 விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர். 8 ஆண்டுகளில் பெறப் பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்ப தாரர்களின் விகிதம் 0.07 சதவிகிதம் முதல் 0.08 சதவிகிதம் என்ற அளவிற்கே இருந்துள்ளது. 2018-19ஆம் ஆண்டில், அதிகபட்ச மாக 5 கோடியே 09 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அந்த ஆண்டில் வெறும் 38 ஆயிரத்து 100 பேருக்கு மட்டுமே பணி நியமன பரிந்துரைகள் வழங்கப்பட் டுள்ளன. 2020-21 நிதியாண்டில் 1 கோடியே 80 லட்சம் என குறைந்த அளவிற்கே விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த ஆண்டிலும் மிகக் குறைவாக 38 ஆயிரத்து 850 பேருக்கு மட்டுமே பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சர் பட்டியலிட்ட வேலை வாய்ப்புத் திட்டங்கள்
இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டி ருக்கும் அமைச்சர் ஜிதேந்திர சிங், “வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் வேலை வாய்ப்பை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும். அதன்படி, நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது” என்று அரசின் பல்வேறு திட்டங் களையும் தனது அறிக்கையில் பட்டிய லிட்டுக் கொண்டுள்ளார். பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (ஞஆஆலு), ‘‘ஆத்ம நிர்பர் பாரத் ரோஜ்கர் யோஜனா’’ (ஹக்ஷசுலு) மற்றும் ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்ட்-அப் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’, ‘ஸ்மார்ட் சிட்டி மிஷன்’, ‘புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன்’, ‘பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்’, ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்’ (ஆழுசூசுநுழுளு), ‘பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா’, ‘தீன் தயாள் அந்தோதயா யோஜனா’, ‘தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்’ போன்றவை வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண் டுள்ளன என்றும் ஜிதேந்திர சிங், வழக்கமான பாஜக அரசின் பல்லவியைப் பாடியுள்ளார்.
18 மாதங்களில் 10 லட்சம் நியமனங்கள்?
அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேரை ‘மிஷன்’ திட்டங்களின் கீழ் பணியமர்த்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக ஜூன் 14-ஆம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பையும் ஜிதேந்திர சிங் சுட்டிக் காட்டியுள்ளார். ‘அனைத்துத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித வளங்களின் நிலையை ஆய்வு செய்த பின்னரே’ பிரதமர் 10 லட்சம் பேருக்கு வேலை என்ற அறிவிப்பை வெளியிட்டார் என்று ஒன்றிய அரசு அப்போது கூறியது. ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வழங்குவேன் என்று தேர்தலின்போது வாக்குறுதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, 8 ஆண்டுகளில் இதுவரை வழங்கிய அதிகாரப்பூர்வ வேலைகளின் எண்ணிக்கையே வெறும் 7 லட்சத்து 22 ஆயிரம்தான். இந்நிலை யில், 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை என்ற மோடியின் புதிய அறிவிப்பு என்னவாகுமோ என்ற கேள்வி, இந்திய இளைஞர்களைத் துரத்துகிறது.
பெரியார் முழக்கம் 04082022 இதழ்