பாராட்டத்தக்க முடிவு: அரசுப் பள்ளிகளில் பெரியார் வினா-விடை

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பெரியார் 1000 வினா விடை நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது, உண்மையி லேயே பாராட்டி வரவேற்கத்தக்க வேண்டிய நிகழ்வாகும். ஆகஸ்டு 19, 20, 21 தேதிகளில் இந்தப் போட்டியை நடத்த வேண்டுமென அந்த ஆணையம் கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டில், தமிழ்நாட்டு மாணவர்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் படித்துக் கொண் டிருந்தாலும் அதனுடைய வரலாறு அவர்களுக்குப் புரியவில்லை. எந்த இட ஒதுக்கீட்டின் கீழ் அவர்கள் படிக்கிறார்களோ, அந்த இட ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தைப் பற்றிய வரலாற்றுப் புரிதல்களும் அவர்களுக்கு இல்லை.

எனவே தமிழ்நாட்டினுடைய சமூக நீதி வரலாறு, சமூக நீதிக்காக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டக் களங்கள், தமிழ்நாட்டின் சமூகச் சூழ்நிலை, தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிற வளர்ச்சி குறித்த சிந்தனைகளை  பள்ளி மாணவர்களிடத்திலே விதைக்கப்பட வேண்டியது, மிக மிக முக்கியமான ஒன்றாகும்.

இந்துத்துவ சக்திகள், உண்மைக்கு மாறான, வரலாற்றுக்குப் புறம்பான, மத வெறியைத் தூண்டக்கூடிய மதவெறிகளைப் பரப்பக்கூடிய ஏராளமான பாடங்களை திணிக்கக் கூடிய நிலையில், உண்மையான சமூக நீதி வரலாற்றையும், தமிழகத்தினுடைய தனித்துவத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டியது திராவிட மாடல் அரசின் தலையாய கடமை.

அந்தக் கடமையை செய்வதற்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வந்திருப்பதை உண்மையிலேயே பாராட்டி வரவேற்கிறோம்.

பெரியார் முழக்கம் 28072022 இதழ்

You may also like...