திருவாங்கூர் திவான்

 

சர். ஷண்முகம் ஒப்புக்கொள்ள மாட்டார்

திருவாங்கூர் திவான் பதவி சமீப காலத்தில் காலி ஆகலாம் என்றும், அதற்கு சர். ஷண்முகம் அவர்கள் நியமிக்கப்படலாம் என்றும் பிரஸ்தாபம் இருந்து வந்தது.

இப்போது அந்த ஸ்தானத்தை சர். ஷண்முகம் அவர்கள் விரும்பவில்லை என்றும், திருவாங்கூர் சமஸ்தானத்தில் தோழர் சர்.சி.பி. ராமசாமி அய்யரின் ஆதிக்கம் இருந்து வரக்கூடும் என்றும், அதனால் அங்குதான் N 4000 ரூ. சம்பளத்தை வாங்கிக் கொண்டு வெறும் கையெழுத்தைப் போட்டுக் கொண்டு இருப்பதைத் தவிர வேறு உருப்படியான காரியம் எதுவும் செய்வது கஷ்டமாக இருக்கும் என்றும் கருதி அதை மறுத்துவிட்டதாகத் தகுந்த நம்பக் கூடிய இடத்தில் இருந்து செய்தி கிடைத்திருக்கின்றது.

இதை ஆதரிக்கத் தகுந்த மாதிரியாக மற்றொரு செய்தியும் வெளியாகி இருக்கிறது. அதாவது திருவாங்கூருக்கு சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் சம்மந்தம் ஒழிந்துவிட்டது என்று நன்றாய் தெரியும் வரை ஒரு செல்வாக்குள்ள வெள்ளைக்கார ஐ.சி.எஸ். கலக்டரை திவானாகப் போடுவது என்று கருதி இருப்பதாகத் தெரிய வருகிறது.

ஆகவே தோழர் சர்.ஷண்முகம் கொச்சி திவானாக இப்பொழுது N 3000 ரூ. சம்பளம் மாத்திரமும், சில சௌகரியங்கள் மாத்திரமும் அடையும்படியாக இருந்த போதிலும்கூட அது திருவாங்கூர் திவான் பதவி ஏற்று  N 4000 ரூ. சம்பளமும் பல சௌகரியமும் கிடைப்பதைவிட (கொச்சியே) மேலென்று கருதும் முக்கிய காரணம் கொச்சி ராஜாவின் மேலான குணமும் சம்பளத்தை லக்ஷியம் செய்யாமல் பிரயோஜனகரமான காரியங்கள் செய்ய வேண்டும் என்கின்ற (சர். ஷண்முகம் அவர்களது) ஆசையுமேயாகும்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  17.11.1935

You may also like...