Author: admin

0

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

ஆகஸ்டு 31ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 6 மணியளவில் இராயப்பேட்டை ‘முருகேசன்’ மண்டபத்தில் நடந்தது. குகானந்தன், கடவுள்-ஆத்மா மறுப்புகளைக் கூறினார். உமாபதி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்துத்துவவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கருநாடக பல்கலைக் கழக முன்னாள்துணைவேந்தரும், மூடநம்பிக்கை எதிர்ப்பாளருமான கல்புர்கி படத்தை கழகத்தலைவர் கொளத்தூர்  மணி திறந்து வைத்தார். இரண்டு நிமிடம் மவுனம் காத்து, தோழர்கள் வீர வணக்கம் செலுத்தினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அறிமுக உரையைத்தொடர்ந்து, கழக வழக்கறிஞர் துரை. அருண், தலைமைக் கழக செயலாளர் தபசி.குமரன், வேழவேந்தன், சுகுமார், ஏசு, மாணவர் கழகத் தோழர் அருண், அன்பு.தனசேகரன் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். நிறைவாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார். நிகழ்வில் முடிவெய்திய கழக செயல்வீரர் ஆட்டோ சரவணன் குடும்பத்துக்கு அவரது தாயாரிடம் கழக சார்பில் தோழர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி ரூ.62 ஆயிரத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கினார்....

0

காஞ்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

காஞ்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் வண்டலூர் ‘தலைநகர் தமிழ்ச் சங்க அரங்கத்தில்’ 30.8.2015 ஞாயிறு பிற்பகல் 5 மணியளவில் நடந்தது. சு.செங்குட்டுவன், கடவுள்-ஆத்மா மறுப்பு கூறினார். செ.க. தெள்ளமிழ்து வரவேற்புரையாற்ற, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாற்றினார். மேடவாக்கம் இரவிக் குமார், கூடுவாஞ்சேரி பன்னீர்செல்வம்,குகன், செங்கல்பட்டு சரவணன், சு. செங்குட்டுவன், தினேசுகுமார் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். “பகவத் கீதையில் ‘பெண்களை’ இழிவுபடுத்தும் சுலோகங்களையும்,‘வர்ணா°ரமத்தை’ நியாயப்படுத்தும் சுலோகங்களையும் தீயிட்டு எரிக்கும்போராட்டத்தை நடத்த வேண்டும்” என்றும், “ராமலீலாவுக்கு எதிர்ப்பாக ‘ராமன்’உருவத்தை எரிக்கும் ‘இராவணலீலா’ நடத்த வேண்டும்” என்றும் தோழர்கள்கருத்து தெரிவித்தனர். 3 நாள்கள் காஞ்சி மாவட்டத்தில் பரப்புரைப் பயணம் நடத்துவதாக தினேசுகுமார் தெரிவித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையில், “தோழர்கள் கூறிய போராட்டங்களை திடீர் என நடத்துவதில் பயனில்லை. இது குறித்து மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தில் நடத்தியதுபோல் மக்களிடையே தொடர்ந்து பரப்புரை இயக்கங்களை நடத்தி, இறுதிக்கட்டமாக போராட்டம் நடத்த வேண்டும்” என்று...

0

வேலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

வேலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் குடியாத்தம் எ.வி.ஆர். தங்கும் விடுதியில் 30-8-2015 அன்று நடந்தது. நெமிலி ப. திலீபன், கடவுள் ஆத்மா மறுப்பு கூறி தொடக்க உரையாற்றினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தொடக்க உரையாற்றினார். நெமிலி திலீபன், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தாக்களை 100ஆக உயர்த்துவதாகவும், பரப்புரைப் பயணத்தை 3 நாள்கள் தங்கள் பகுதியில் நடததுவதாகவும் தெரிவித்தார். குடியாத்தம் இரா. சிவா பேசுகையில், புத்தர், புலே, பெரியார், அம்பேத்கர் பார்ப்பனக் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களை அணி திரட்டியதை நினைவுகூர்ந்தார். நெமிலி நரேஷ்குமார் கவுரவக்கொலைகள் தமிழகத்தில் நடப்பது, தமிழகத்துக்குத் தலைகுனிவு என்றார். கவுரவக் கொலைகளைக் கண்டித்து கூட்டம் நடத்துவதற்குக்கூட காவல்துறை அனுமதி மறுப்பதை சுட்டிக் காட்டினார். குடியாத்தம் பாண்டியன், நெமிலி முனியாண்டி, கார்த்தி, ஜெயக்குமார், கஜேந்திரன், திருமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்சேர்ந்த துரை. ஜெடீநுசங்கர், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் பேசியதைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றி, கழகப் பொறுப்பாளர்களை அறிவித்தார். நெமிலி நரேஷ்...

0

கிருட்டிணகிரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

29-8-2015 அன்று மாலை 4 மணியளவில் கிருட்டிணகிரி மாவட்ட கலந்துரையாடல், இலண்டன் பேட்டை வெற்றிவேல் மகாலில் நடந்தது., க.குமார், கடவுள் ஆத்மா மறுப்பு கூறினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி அறிமுக உரையைத் தொடர்ந்து,தோழர்கள் குமார், நீலகிரி குமார், வாஞ்சிநாதன், காவேரி பட்டினம் பழனி பிரபு, காரிமங்கலம் வெங்கடேசன், சுந்தர் பிரேம் குமார், இராஜேஷ், மூங்கம்பட்டி ஆசிரியர்  சக்திவேல் கருத்துகளைத் தெரிவித்தனர். பயிற்சி வகுப்புகள், தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். மாணவர்களிடையே பெரியார் கருத்துகளைப் பரப்புவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்துகளைத் தோழர்கள் முன் வைத்தனர். பெரியார் முழக்கம் 03092015 இதழ்

0

தருமபுரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

29-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு, பி.அக்ராகரம், சமுதாயக் கூடத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தருமபுரி மாவட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கலந்துரையாடல்களின் இறுதிச் சுற்றுப்பயணம், தர்மபுரி மாவட்டத்திலிருந்து தொடங்கியது. பி. அக்ரகாரம் சமுதாயக்கூடத்தில் பகல் 11 மணியளவில் நடந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ‘கடவுள் ஆத்மா மறுப்பு’ கூறி அறிமுக உரையாற்றினார். கழகத் தோழர்கள் வெ.வேணுகோபால், எம். அசோக்குமார், ம. பரமசிவம்,பேராசிரியர் சீனிவாசன், கு. நாகராஜன், ஆசிரியர் வையாபுரி,சந்தோஷ்குமார், செந்தில்குமார், எம். இராமதாஸ், சுதந்திரகுமார், நதியா தேவி,மு.ஜோதி, நடராஜன், நதிவர்மா ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்; கல்லூரி, பள்ளிகள் முன்மாணவர்களிடையே கொள்கை விளக்க துண்டறிக்கைகளை வழங்க வேண்டும்என்ற கருத்துகளை முன் வைத்த தோழர்கள், பா.ம.க. வளர்த்து விடும் ஜாதி வெறி ஆபத்துகளையும் சுட்டிக் காட்டினர். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமிஉரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார். பெரியார்...

0

காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள் 28-8-2015

காஞ்சி மக்கள் மன்றத்தில் 28-8-2015 அன்று மூவர் உயிர் காக்க தன்னை அழித்துக் கொண்ட தோழர் செங்கொடியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. காலை 8-00 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கொடியேற்றினார். அடுத்து செங்கொடியின் நினைவிடத்தில் முத ல் மலர்வளையத்தை திருநங்கையர் சார்பாக அவ்வமைப்பின் மூத்த உறுப்பினர் வைத்தார். பல்வேறு அமைப்பினர் தங்கள் அமைப்புகளின் சார்பாக வீரவணக்கம் செய்தனர். மாலை 4-00 மணியளவில் மக்கள் மன்றத் தோழர்களின் பறையிசையோடு வீரவணக்க நிகழ்வு தொடங்கியது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்,திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உட்பட பல்வேறு அமைப்புகளின் முன்னணித் தோழர்களும் வீரவணக்கவுரை யாற்றினர்.  

0

தமிழீழ விடுதலைக்கான மாணவர் இளைஞர் கூட்டமைப்பு கருத்தரங்கம் ஈரோடு 25-8-2015

25-8-2015 அன்று மாலை ஈரோடு பெரியார் மன்றத்தில், ’இனப்படுகொலைக்கு ஈழம் ஒன்றே தீர்வு’ என்ற தலைப்பில் ’ தமிழீழ விடுதலைக்கான மாணவர் இளைஞர் கூட்டமைப்பு ’ சார்பில் கருத்தரங்கம், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் மூர்த்தி வரவேற்புரையாற்ற கழகத் தோழர் வெங்கிட்டு தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் முன்னாள் நாடுளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், கண.குறிஞ்சி, மாணவர் இயக்கங்களின் தலைவர்கள் ஆகியோர் உரையாற்றினர்  

0

செங்கொடி நினைவு நாள் 27-8-2015 பாலவாக்கம்

27-8-2015 அன்று சென்னை, பாலவாக்கத்தில் ‘மூன்று தமிழர் உயிர் காக்க’ தன்னையே எரித்துக் கொண்ட  தோழர் செங்கொடியின் நான்காம் ஆண்டு நினைவு நாள், 27-8-2015 அன்று, சென்னை, பாலவாக்கத்தில், மரண தண்டனைக்கெதிரான மக்கள் இயக்கத்தின் சார்பாக கே.ஆர்.இரவீந்திரன் தலைமையில்  நடைபெற்றது. நிகழ்வில், நடிகர் சத்தியராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, அற்புதம் அம்மாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர் தொடக்கத்திலும் , இடையிடையேயும் காஞ்சி மக்கள் மன்றத் தோழர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நமது பார்ப்பனர்                                                                 “இரட்டை ஆட்சி” யைக்                                     கொல்ல முயல்வதின் இரகசியம் 0

நமது பார்ப்பனர் “இரட்டை ஆட்சி” யைக் கொல்ல முயல்வதின் இரகசியம்

“இரட்டை ஆட்சி”யென்றால் என்ன என்பது நமது ஜனங்களில் அனேகருக்குத் தெரியாதென்றே சொல்லவேண்டும். இரட்டை ஆட்சியைத் தகர்க்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் சொல்லும்போது பார்ப்பனரல்லாத பாமர மக்களும் அரசியல் நடை முறையினை அறியாத பல காங்கிரஸ்காரர், பிரசாரகர் என்று சொல்லிக் கொள்பவரும், இரட்டை ஆட்சி என்பதை ஒரு இராணுவ ஆட்சியென்றும் வெள்ளைக்காரரே நேரிலிருந்து செய்யப்படும் காரியமென்றும் இதை ஒழித்துவிட்டால் அரசாங் கம் நம் கைக்கே வந்துவிட்டதென்றும் நினைத்துக் கொண்டு, கூடவே ஒத்துப் பாடுகிறார்கள். இரட்டை ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்று சொல்லுகிற பார்ப்பனர்கள் இரட்டை ஆட்சியை ஒழித்த பிறகு என்ன செய்வதென்று இது வரையில் ஒரு வார்த்தையும் சொல்லவேயில்லை. பார்ப்பனர்களுக்கு விபூஷ ணாழ்வார் போல் விளங்கின தேசபந்து தாஸரவர்கள் இரட்டை ஆட்சியை ஒழித்த பிறகு என்ன செய்வதென்று சொல்லவேண்டிய அவசியமேற்பட்ட காலத்தில் விண்ணவர்க்கு விருந்தினராகி விட்டார். ஆதலால் இரட்டை ஆட்சி என்ன வென்பதும், அதை அழித்த பிறகு என்ன செய்ய வேண்டு...

கோபியில் மா பெருங்கூட்டம் 0

கோபியில் மா பெருங்கூட்டம்

சகோதரர்களே! சில தினங்களுக்கு முன் இந்த இடத்தில் நடந்த மகாநாட்டில் பலர் என்னை வாயில் வந்தபடி திட்டியதாகக் கேள்விப்பட்டேன். அதைச் சகிக்காத சில பிராமணரல்லாதார் என்னை இங்கு வந்து உண்மை விஷயங்களைப் பற்றி பேசவேண்டுமென்று கேட்டுக் கொண்டதால் இன்று நாங்கள் வந்திருக் கிறோம். முன்னால் வந்தவர்கள் நடந்து கொண்டது போல் நாங்கள் இங்கு யாரையும் திட்டுவதற்கு வரவில்லை; அந்த எண்ணமுமில்லை. ஸ்ரீமான் தண்டபாணிப் பிள்ளையவர்கள் தமது பிரசங்கத்தில் நமது நாட்டிற்கு பிராமணர்களால் ஏற்பட்டிருக்கும் கொடுமையைக் குறிப்பிட்டார். அவர் எடுத்துக்காட்டிய வித்தியாசங்களைத் திருத்த வேண்டுமென்கிற ஆசையினா லேயே பிராமணர்களால் நமது சமூகத்திற்கு நேர்ந்த ஆபத்துகளைச் சொன் னார். மற்றவர்களெல்லாம் தன்னை நல்லவன் என்று சொல்ல வேண்டுமென் கிற சுயநலத்தோடு அவர் பேசவில்லை. எடுத்துக்காட்டிய குற்றங்கள் நீங்க வும், வகுப்புப் பிணக்குகள் ஒழியவுமே அவர் குறிப்பிட்டுப் பேசினார். வகுப்புப் பிணக்கு தற்காலத்தில் வகுப்புப் பிணக்குகள் இல்லையென்று மறைத்து வைத்துப் பேசுவதில் பலனில்லை. நம் திரேகத்தில்...

கோபியில் திரு. சீனிவாசய்யங்கார் நாடகக் கம்பெனி 0

கோபியில் திரு. சீனிவாசய்யங்கார் நாடகக் கம்பெனி

கோபிசெட்டிபாளையம் என்பது பல பிரபல குடியான மிராசுதாரர் களை யுடையது. அங்குள்ள பூமிகள் ஆதியில் அந்த தாலூகா பார்ப்பன ரல்லாத வேளாளர்களுக்கே யிருந்து வந்தது. இப்பொழுதோ அவை ஏறக்குறைய முழுவதும் அடமானம், போக்கியம், கிரயம் மூலியமாய் கோபி பார்ப்பனர்களைச் சேர்ந்திருப்பதுடன் மிகுதியும் சேலம், கோயமுத்தூர், சென்னை முதலிய ஜில்லாக்களில் இருக்கும் பார்ப்பன வக்கீல்களுக்கும், உத்தியோகஸ்தர்களுக்குமே சொந்தமாயிருக்கிறது. குடித்தனக்காரர்கள் இந்தப் பார்ப்பனர்களை ‘சுவாமிகளே’ என்று கூப்பிட்டுக்கொண்டு அவர் கள் பின்னால் சுற்றுகிறவர்களாகவேயிருக்கிறார்கள். அல்லாமலும் பெரும் பாலும் இந்தக் குடியானவர்களை தப்பு வழிக்குக் கூட்டிபோவதும் வக்கீல் வீட்டுக்குக் கூட்டிப் போவதும் சூதாடக் கூட்டிப்போவதும், அவர்கள் கலி யாண காலங்களில் அவர்களுக்கு வெளி ஊர்களில் இருந்து தாசி, வேசிகளையும் பார்ப்பன வித்வான்களையும் அழைத்துவரச் செய்து அவர் களுக்கு ஆயிரம் பத்தாயிரமாகச் செலவு செய்யச் செய்வதும் சிலர் அவர் களிடம் தரகு வாங்குவதுமாகிய இவைகளினால் குடியானவர்களைக் கடன் கரராக்கி சிலரைப் பாப்பராக்கி அவர்கள் பூமிகளை எழுதிவாங்குவதும் இந்த...

இது என்ன மானக்கேடு 0

இது என்ன மானக்கேடு

சென்னைக் கார்ப்பரேஷனில் சுயராஜ்யக் கட்சித்தலைவர் ஸ்ரீமான் சாமி வெங்கடாஜலம் செட்டியார் புளுகுவதில் கோவை ஸ்ரீமான் சி.வி.வெங் கட்டரமணய்யங்காரை ஜெயித்துவிட்டார். ஸ்ரீ ஐயங்கார் முதலில் தனது தென்னை மரத்தில் கள்ளுக்கு முட்டியே கட்டவில்லை என்றார். பிறகு தெளுவுக்கு மாத்திரம் முட்டி கட்டினதாய்ச் சொன்னார். “சென்ற வருஷம் கோபி மகாநாட்டில் தென்னை மரங்களை ஐந்து வருஷக் குத்தகைக்குக் கொடுத்துவிட்டேன். குத்தகைக்காரன் கட்டினால் நான் என்ன செய்யட்டும் என்று சொன்னீரே இப்பொழுது அடியோடு இல்லை என்கிறீரே இது என்ன பொய்” என்று கேட்க தலை குனிந்து கொண்டார். கடைசியாக வேறு வழி யில்லாத போது “நாயக்கர் என்னை மோட்டார் கார் கேட்டார், நான் கொடுக் காததற்காக என்னைக் கெடுக்கப் பார்க்கிறார்” என்று அழுதார். நமது சென்னைக் கார்ப்பரேஷன் தலைவர் சாமிவெங்கிடாசலம் செட்டியாரோ கார்ப்பரேஷன் பணத்தில் தன் வீட்டுக்கு டெலிபோன் வைத்துக் கொண் டதைப் பற்றி கேட்டால் சர்.பி.தியாகராய செட்டியார் வைத்துக் கொண்டார், அதனால் நானும் அப்படியே...

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் வெற்றி 0

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் வெற்றி

தாழ்ந்த வகுப்பாருக்கும் தொழிலாளர்களுக்கும் தனிப் பிரதிநிதித்து வம் ஏற்படுத்த வேண்டும் என்பதை நமது பார்ப்பனர்கள் எவ்வளவோ தங்கள் சூழ்ச்சியின் மூலம் எதிர்த்தும், ஸ்ரீமான் ஜயவேலு போன்றவர்களை விலைக்கு வாங்கி தங்களுடன் சேர்த்துக்கொண்டு தங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாம் என்று சத்தம் போடச்செய்தும், சர்க்கார் அவ் வகுப்புக்கென்று பிரதிநிதித்துவம் கொடுக்க பார்லிமெண்டில் சம்மதித்து விட்டார்கள். தொழிலாளர்களுக்கும் அதுபோலவே பார்ப்பனர்களின் எவ்வ ளவோ சூழ்ச்சிகளை மீறி தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்கத் தீர்மானித்து விட்டார்கள். இதைப்பார்த்த பார்ப்பனப் பத்திரிகைகள் தங்கள் சூழ்ச்சிகளும் முட்டுக்கட்டைகளும் பலிக்காமல் போய்விட்டதை மூடிவைத்துவிட்டு தொழிலாளர்களுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பார்களுக்கும் நல்ல பிள்ளைகள் போல் “இனி சும்மாயிருக்கக் கூடாது; அந்தந்த வகுப்பார் வற்புறுத்த வேண் டும்” என்று “கோழி திருடியும் கூடக் குலாவுவது” போல் ‘சுதேசமித்திரன்’ முதலிய பத்திரிகைகள் எழுதுகின்றன. எப்படி இருந்த போதிலும், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கிடைப் பதற்கு யார் எந்த வகுப்பார் உதவியாயிருந்தா லும், எந்த வகுப்பார் விரோதமாயிருந்தாலும், இனி...

* பட்டங் கூடாது 0

* பட்டங் கூடாது

தமிழ் நாட்டுக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. எஸ். ஸ்ரீநிவாச ஐயங்காருக்கு திரு. கல்யாணசுந்திர முதலியார் காங்கிரஸ் கமிட்டிக் குதான் கொண்டுவர இருக்கும் தீர்மானத்தைப்பற்றி எழுதுவதாவது.- அன்பார்ந்த தலைவரே, வணக்கம். வரப்போகுஞ் சென்னைச் சட்ட சபைத் தேர்தலுக்கு காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சித் தொடர்பு கொண்டு அபேட்சகராக நிற்கும் சகோதரருள் சிலர் பட்டஞ் சுமப்பது பற்றியும், அரசாங்கத்தார் தயவால் நியமனம் பெற்றிருப்பது பற்றியும், கதருடையில் பற்றிழந்திருப்பது பற்றியும், தமிழ்நாட்டு அன்பர் சிலர் கடிதம் விடுத்திருக் கிறார். அதைப்பற்றிப் பொது ஜனங்கட்கு ( 11 – 6 – 26 ) “நவசக்தி” வாயி லாகப் பதிலிறுத்தேன். அப் பதிலை நோக்குமாறு தங்களை வேண்டுகிறேன். தங்களைப்போல மற்ற அபேட்சகர்களுமிருந்தால் ஐயப்பாட்டிற்கு இடம் ஏற்படல் அரிது. சில அபேட்சகர்கள் பட்டதாரிகளாகவும், அரசாங்கத் தார் தயவால் நியமனம் பெற்றவர்களாகவும், கதரில் பற்றில்லாதார்களாகவும் இருத்தல் உண்மை. இவர்கள் நாளை பதவி ஏற்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி? இவர்கள் பட்ட...

இனி தாமதம் வேண்டாம் 0

இனி தாமதம் வேண்டாம்

தற்கால காங்கிரஸையும் சுயராஜ்யக் கட்சியையும் பார்ப்பன ஆதிக்கத் திற்காக தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களால் சிருஷ்டிக்கப்பட்ட சூழ்ச்சி ஸ்தாபன மென்று பல தடவைகளில் எழுதி வந்திருக்கிறோம். ஆனால் அது சமயம் சிலர் நம்மீது காய்ந்து வந்தார்கள். எனினும் சீக்கிரத்தில் நாட்டிற்கு உண்மை நிலை வெளியாகுமென்றே அவற்றில் கவனம் செலுத்தாமல் நமது கருத்தை ஒளியாது வெளியிட்டு வந்தோம். இப்போது நமது கருத்தைத் தழுவி மற்றும் இரண்டொரு ஆதரிப்புகள் நேர்ந்திருப்பது பற்றி நாம் கழிபேருவகை அடைகின்றோம். அவ்விரு பெரும் ஆதரிப்புகளும் திருவாளர்களான திரு. வி. கலியாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் ஆகியவர் களின் உண்மை உணர்ச்சிகளினின்றி எழுந்தவைகளேயாகும். திரு. முதலியாரவர்கள் பார்ப்பனத் தலைவரான திரு. சீனிவாசப் பார்ப்பனருக்கு விடுத்துள்ள இறுதிக் கடிதத்திலும், பார்ப்பனக் கமிட்டியான காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பியுள்ள தீர்மானத்திலும் * (தீர்மான நகலை மற்றோர் பக்கத்தில் காண்க) தொக்கியிருப்பது என்ன? தெளிந்த சிந்தையுடன் சுருக்கமாயும் Žநுட்பமாயும் நோக்குங்கால் அதன் உண்மை புலனாகும். அஃதாவது “தங்களது...

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்                                     II 0

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் II

சென்ற வாரத்திற்கு முன் 5-ம் இதழ் தலையங்கத்தில் ‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஐ’ என்ற தலைப்பின் கீழ் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி லால்குடியில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி கூறின ஆnக்ஷபனைகளை 37 பாகங்களாக வகுத்து, அவற்றுள் முதல் 12 பாகங்களுக்கு மட்டிலும் தக்கவாறு பதில் எழுதியிருந்தோம். மிஞ்சிய 25 பகுதிகளுக்கும் இவ்வாரம் சில எழுத முற்பட்டுள்ளோம். அவையாவன:- 13 – வது, ஸ்ரீமான் சத்தியமூர்த்தி, தற்சமயம் நடக்கும் வகுப்பு மகாநாடு களைப் பார்த்தால் அரசாங்க விஷயமாக யார் என்ன நினைக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்கிறார். இதை தைரியமாய் ஒப்புக்கொண்டதற்கு நன்றி செலுத்துகிறோம். இவற்றிலிருந்து நாடெங்கும் வகுப்புணர்ச்சி மலிந்திருப்பதும் அக்காரணத் தால் அரசாங்கத்தைப் பற்றி ஜனங்களுக்கு அவ்வளவு கவலை இல்லை என்பதும் புலனாகிறது. ஆதலால் ‘இரண்டொருவர் தங்களது சுயநலத்திற்காக வகுப்பு துவேஷத்தைக் கிளப்பி விடுகிறார்களேயல்லாமல் பொது மக்களிடம் அவ்வுணர்ச்சி இல்லை’ என்று பிராமணப் பத்திரிகைகள் சொல்லுவது யோக்கியப் பொறுப்பற்றத்தனமென்பதும், நாடு பூராவும் அதே கவனத்தில் இருக்கிறதென்பதும்...

தமிழர் கடமை ஸ்ரீமான் எஸ்.சீனிவாச ஐயங்கார்  ராஜீனாமா செய்வாரா?  இல்லாதவரை அவரை ராஜீனாமா                 செய்யும்படி வற்புறுத்த வேண்டும்  	-சித்திரபுத்திரன் 0

தமிழர் கடமை ஸ்ரீமான் எஸ்.சீனிவாச ஐயங்கார் ராஜீனாமா செய்வாரா? இல்லாதவரை அவரை ராஜீனாமா செய்யும்படி வற்புறுத்த வேண்டும் -சித்திரபுத்திரன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஸ்ரீமான் சீனிவாச ஐயங்கார் தமிழ் மக்களின் மதிப்பை இழந்து விட்டார். பார்ப்பனரல்லாதாரை எப்படியாவது ஒடுக்கி, பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்கிற கெட்ட எண்ணம் கொண்டு மகாத்மா காந்தியின் கருத்துக்கு விரோதமாகவும், காங்கிரஸின் அடிப்படையான கொள் கைகளுக்கு விரோதமாகவும், வேண்டுமென்றே சர்க்கார் பட்டதாரிகளையும். சர்க்கார் நியமன கௌரவ உத்தியோகம் பெற்றவர்களையும் காங்கிரசுக்குள் புகுத்திக் கொண்டு, அவர்களை சட்டசபைக்கு அபேக்ஷகர்களாக நிறுத்தியும், அவர்களுக்கு ஓட்டு வாங்கிக்கொடுக்க காங்கிரஸையும், காங்கிரஸ் பணத் தையும் உபயோகித்துக் கொண்டு வருவதின் நிமித்தம் காங்கிரஸின் மதிப்பும் யோக்கியதையும் குறைந்து வருவதோடு காங்கிரஸை திருத்த முடியாத நிலைமையில் கொண்டு போய் விட்டுக் கொண்டிருப்பதாலும், காங்கிரஸ் என்பதே பொது நலத்திற்கல்லாமல் ஒரு வகுப்பாரை அழித்து, மற்றொரு வகுப்பாரை ஆதிக்கம் பெறச்செய்ய நிரந்தரமான ஆயுதமாக ஆக்கப்படுகிற படியாலும், தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாத பெரும்பான்மையோர்க்கு ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் நம்பிக்கைக் குறைவு அதிகரித்துவிட்டது. ஆதலால் ஸ்ரீமான் அய்யங்கார் அவர்களைக் கண்ணியமாய்...

ஒரு சேதி  திருவாரூர் திருத் தியாகராஜரின்                            திருத்தேர் திருத் தீக்கிரையாயிற்று 0

ஒரு சேதி திருவாரூர் திருத் தியாகராஜரின் திருத்தேர் திருத் தீக்கிரையாயிற்று

தியாகராஜ பெருமானின் தேரானது 9.6.26 – ² தீக்கிரையாயிற்று என்ற செய்தியைக் கேட்க இந்துக்களில் பலர் மிகுதியும் துக்கப்படுவார்கள். ஆனால் நாம் அதை ஒரு நல்ல சேதியாகவே நினைக்கிறோம். தமிழ்நாட்டிலுள்ள எல்லா தேர்களையும் விட மிகப் பெரியது திருவா ரூர் தேரேயாகும். இதை இழுத்துச் செல்ல குறைந்தது மூன்று நான்கு மாதங் களும் 5000 த்துக்குக் குறையாமல் பதினாயிரம் ஆட்கள் வேண்டும். இவர் கள் படிச் செலவும் சுமார் 20,000 ரூபாய்க்குக் குறையாதென்றே சொல்லலாம். தற்காலமுள்ள நிலைமையில் இவ்வளவு ஆர்ப்பாட்டம் எதற்கு? இதை நினைக்கும்போது ஒரு சிறுகதை நமது ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது:- ஒரு குருவுக்கு நான்கு சிஷ்யர்கள் இருந்தார்கள். ஒரு நாள் குரு வானவர் கடையில் ஊசி வாங்கிக்கொண்டு வரும்படி தன் நான்கு சிஷ்யர் களிடம் கட்டளையிட்டார். அவர்கள் ஊசி வாங்கிய பிறகு, நால்வரையும் வாங்கிவர கட்டளையிட்டிருக்க ஒருவர் மாத்திரம் இதை எடுத்துப் போனால் கோபித்துக் கொள்ளுவார் என்று ஒரு...

ஞானோதயம் (உண்மை உணர்ச்சி) 0

ஞானோதயம் (உண்மை உணர்ச்சி)

சென்ற வாரம் தலையங்கத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி லால்குடியில் செய்த பிரசங்கத்தை 37 பிரிவுகளாய்ப் பிரித்து அவற்றில் 12 பிரிவுகள் வரைக்கும் பதில் எழுதிவிட்டு மீதி 25 பிரிவுகளுக்கும் ‘நவசக்தி’க்கும் இவ்வாரம் பதிலெழுதுவதாயிருந் தோம். அல்லாமலும் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் கம்பெனியார் கோபிச் செட்டிபாளையத்தில் நடத்திய ஓட்டு வேட்டை நாடகத்தைப் பற்றியும் இவ்வாரம் எழுத நினைத்திருந்தோம். நாம் கொஞ்சமும் எதிர்பாராத விதமாய் ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள் தனது ‘நவசக்தி’ தலையங்கத்தில் “பட்டம் கூடாது” என்கிற தலைப்பில் தனது கையொப்பத் துடன் எழுதியுள்ள விஷயமும், அதை அநுசரித்து ஸ்ரீமான் டாக்டர் வரத ராஜுலு நாயுடு அவர்கள் பத்திரிகையாகிய ‘தமிழ்நாடு’ பத்திரிகையின் தலையங்கத்தில் ‘பட்ட வேட்டை’ என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ள விஷயமும் இவ் வாரத்திய முக்கிய சம்பவமாகக் கருதி ‘நவசக்தி’க்கு பதில் எழுத வேண்டிய அவசியமில்லை என்று நினைத்து முன் குறிப்பிட்ட விஷயங்களை ஒத்தி வைத்துவிட்டு இவற்றைப்பற்றி எழுதவேண்டிய அவசரமும்...

பிராமணரல்லாதார் இயக்கத் தத்துவம்  தற்கால காங்கிரசால்                 பிராமணரல்லாதாருக்கு வந்த கெடுதி 0

பிராமணரல்லாதார் இயக்கத் தத்துவம் தற்கால காங்கிரசால் பிராமணரல்லாதாருக்கு வந்த கெடுதி

சகோதிரர்களே! இன்று கூட்டப்பட்ட கூட்டமானது பிராமணரல்லாதார் என்கிற ஒரு வகுப்பு சம்பந்தமான கூட்டம். இக்கூட்டத்தில் நான் இன்று பிராமணரல்லாதார் வகுப்பு முன்னேற்றம் என்கிற விஷயத்தைப் பற்றி பேசப் போகிறேன். மாறுதல் வேண்டாதார் வகுப்பைப் பற்றி பேசலாமா? மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை காங்கிரஸ்காரன், அதிலும் வைதீக ஒத்துழையாதாரரன், மாறுதல் வேண்டாதவன் என்று சொல்லப்பட்ட ஒருவன் வகுப்பைப் பற்றி பேசுவது பொருந்துமா என்று சிலருக்குத் தோன்ற லாம். வைதீக ஒத்துழையாமைக்காரன் என்றால், ஒருவன் கழுத்தை ஒருவன் அறுக்கும்போது பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பவனல்ல, ஒருவன் சொத்தை ஒருவன் கொள்ளை அடித்துக்கொண்டு போனால் வழியைத் திறந்துவிட்டு வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென்பவனல்ல என்பதை முதலில் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அல்லாமலும் மகாத் மாவின் காங்கிரஸும் அவரது ஒத்துழையாமையும் நிர்மாணத் திட்டமும் காங்கிரசிலிருந்து வெளிப்பட்டு மறைந்து கொண்டும் வருகிறது. நிர்மாணத் திட்டங்கொண்ட ஒத்துழையாமைக் காங்கிரஸின் போது வகுப்பு விஷயத் தைப் பற்றி எவரும் யோசிக்கவேயில்லை. அதில் உயர்வு-தாழ்வு என்கிற...

முஸ்லிம்களும் சுயராஜ்யக் கட்சி பத்திரிகைகளும் 0

முஸ்லிம்களும் சுயராஜ்யக் கட்சி பத்திரிகைகளும்

“படிக்கிறது பகவத்கீதை குடிக்கிறது குடக் கள்” என்னும் கதையாய் சுயராஜ்ஜியக் கட்சியாரும் அவர்களது பத்திரிகைகளும் நடந்து வருகின்றன. ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமைப்பட வேண்டும், அதற்காகவே நாங்கள் பாடுபடுகிறோம் என வாய் வேதாந்தம் பேசி வரும் சுயராஜ்யக் கட்சியார், முஸ்மிம்களுக்கு முரணாய் நடந்து வருவதையும்; எல்லைப்புற மாகாண சீர்திருத்தத் தீர்மானத்தில் முஸ்லீம்களுக்கு விரோதமாய் நடந்து கொண்டதையும், கல்கத்தா நகர டிப்டிமேயராக இருக்கும் ஜனாப் எச்.எஸ். ஷுஹரவர்தி என்னும் முஸ்லீம், சுயராஜ்யக் கட்சி அங்கத்தினராயிருந்தும் அவரை டிப்டி மேயர் பதவியினின்று விலக்க வேண்டு மென்ற கருத்துடன் மற்ற சுயராஜ்யக் கட்சி ஹிந்துக்கள் ஐரோப்பியர்களை துணைக்கு அழைத் துக்கொண்டு செய் துள்ள தீர்மானத்தையும், சுயராஜ்யக் கட்சி பத்திரிகைகள் முஸ்லீம்களை மாற் றாந்தாய்க் குழந்தைகளைப் போல் பாவித்து எழுதி வரு வதையும் நாம் அறிவதைவிட முஸ்லீம்கள் நன்றாய் அறிவார்கள். நாட் டிலே வீறு கொண்டு முழங்கிய ஒத்துழையாமையை ஒடுக்குவதற்குத் தன்னால் ஏற்படுத்தப்பட்ட சுயராஜ்யக் கட்சியில் முகமதி யர்களையும் சேர்த்து...

எலெக்ஷன் தந்திரம் திருப்பூர் கால்நடைக் காட்சி – சித்திரபுத்திரன் 0

எலெக்ஷன் தந்திரம் திருப்பூர் கால்நடைக் காட்சி – சித்திரபுத்திரன்

திருப்பூர் கால்நடைக் காட்சியானது 2,3 வருஷங்களுக்கு முன்னால் சென்ற சட்டசபைத் தேர்தலின்போது நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு இப்போது இவ்வருஷ சட்டசபை எலெக்ஷன் போதுதான் கூட்டப்பட்டிருக் கிறது. அப்படிக் கூட்டப்பட்ட போதிலும் அதில் நடத்தப்பட்ட சடங்குகள் ஒவ் வொன்றும் சட்டசபை மெம்பர்களின் ஓட்டுப் பிரசாரத்தில் குறி கொண்டே நடத்தப்பட்ட மாதிரியாகவே யிருந்தது. அந்தக் குறியின் வேகத்தில் வழக்க மான ஒழுங்கு முறைகள்கூட சிதறப்பட்டு போனதோடு மக்களுக்கு இயற்கை யாய் இருக்கவேண்டிய அபிமானமும் பறந்தோடி விட்டது. விவசாயம் என்பது மாற்றப்பட்ட இலாக்காக்களில் ஒன்றான அபி விருத்தி இலாகாவைச் சேர்ந்தது. அதை நிர்வகித்து வருகிறவர் பிராமண ரல்லாதார் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீமான் சர்.டி.என். சிவஞானம் பிள்ளை அவர்கள். இப்படி இருக்க கவர்னர் அவர்களைக் கொண்டு கால்நடைக் காட்சி யைத் திறக்கச் செய்வதும் ஸ்ரீமான் சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர் களைக் கொண்டு பரிசு வழங்கச் செய்வதுமான காரியங்கள் நடத்தப்பட்டி ருக்கிறது. முன் ஒரு சமயம் இதே...

பிராமணப் பத்திரிகைகளின் அயோக்கியத்தனம் 0

பிராமணப் பத்திரிகைகளின் அயோக்கியத்தனம்

நம் நாட்டு பிராமணப் பத்திரிகைகளும் அதன் பிராமண நிரூபர் களும் செய்து வரும் அயோக்கியத்தனங்களைப் பற்றி நமது பத்திரிகையில் கடுக ளவு சுத்த ரத்தம் உள்ளவர்களுக்கும் இனி இம்மாதிரி நடக்காமலிருக் கும்படியும், மானம், வெட்கம் வந்து தீரும்படியும் பல தடவைகளில் எழுதி வந்திருக்கிறோம். அநேகக் கூட்டங்களிலும் நன்றாய்ப் படும்படி பேசியும் வந்திருக்கிறோம். வேறொரு கூட்டத்தாராய் இருந்தால், ஒன்று யோக்கியர் களாகி இருப்பார்கள் அல்லது தற்கொலையாவது புரிந்து கொண்டிருப் பார்கள். ஆனால், என்ன சொன்னாலும் தங்கள் காரியமானால் போதும் என்கிற எண்ணத்தின் பேரில் மற்றவர்களை எப்படியாவது ஒழித்து வயிறு வளர்ப்பதற்கு மனுஷ சுபாவத்தையே உதறிவிட்டு மேலும் மேலும் அயோக் கியத்தனமான காரியங்களையே செய்து வருகிறார்கள். இந்த மானமற்ற, கூட்டத்தை நமது நாட்டில் இப்படியே வைத்துக் கொண்டு நாம் எப்படி விடுதலையடைய முடியும்? ஸ்ரீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் நாகை தொழிலாளர் கூட்டத்தில் பேசியவற்றைப் பற்றி ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைகள் அதன் நிரூபர்கள் எழுதுகிறார்கள் என்று...

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்                              I 0

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் I

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி ஸ்ரீமான் சத்தியமூர்த்தி திருச்சி – லால்குடியில் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் தலைமையின்கீழ் ஒரு பிரசங்கம் செய்ததாக ஜூன் முதல் தேதி ‘மித்திரனில்’, ‘வகுப்பு வேற்றுமை யின் கேடுகள்’ என்ற தலைப்பியின் கீழ் பத்தி பத்தியாக எழுதப்பட்டி ருக்கிறது. அவற்றில் அவர் சொல்லும் ஆnக்ஷபனைகளாவன :- 1. இந்தியாவில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமானது லார்ட் மிண்டோ, காலஞ்சென்ற கோகலே இவர்களுடைய ஆலோசனையால் ஏற்பட்டது. 2. முகமதியரைப் பிரீதி செய்ய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் இறங்கிவிட்டார்கள். 3. கோகலே ஒப்புக்கொள்ளாதிருந்தால் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் ஏற்பட்டிருக்காது. 4. வகுப்புவாரியை லார்ட் மிண்டோ ஒப்புக் கொண்டதற்கு லார்ட் மார்லி கோபித்துக் கொண்டிருக்கிறார். 5. இதனால் ஒவ்வொருவரும் தன் தன் வகுப்பு நலனை நாடுகிறார்களே அல்லாமல் சமஸ்தானத்தின் சார்பாக பற்றைக் காட்டுவதில்லை. 6. சில்லரை வகுப்பினர் கிராம žயூனியன் முதற்கொண்டு, ராஜாங்க சபை வரை ஒவ்வொன்றுக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கோருகிறார்கள். 7. கவர்ன்மெண்ட் நிர்வாக சபையில் கூட...

தென் இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் சாப்பாட்டு விடுதிகள் 0

தென் இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் சாப்பாட்டு விடுதிகள்

இதைப்பற்றி ‘குடி அரசு’ பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம். தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டி யாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன் னார்கள். பிராமணாதிக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்? தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதி யை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது. அங்கு மாடியின் மேல் கட்டப்பட் டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கியிடத்தில் நாலில் மூன்று பாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில் ஒரு பாகத்தை ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ , ‘மகமதியர்’, ‘கிறிஸ்தவர்’, ‘ஆங்கிலோ இந்தியர்’ என்கின்ற பிராமணரல்லாதவருக் கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவு வதற்கும், வாய் கொப்பளிப்பதற்கும், விளக்குமாறு, சாணிச்சட்டி, கூடை முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு,...

திருவாங்கூரில் பத்திரிக்கைச் சட்டம் 0

திருவாங்கூரில் பத்திரிக்கைச் சட்டம்

திருவாங்கூர் சமஸ்தானத்தில் கொஞ்ச காலமாக சில புதுமைகள் நடந்து வருகின்றன. அவற்றுள் அரசாங்கம் சமீபத்தில் பத்திரிகைகள் மீது தொடுத்துள்ள பாண முறையும் ஒன்றாகும். திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு தாய் அரசாங்கமாய் விளங்கும் இந்திய அரசாங்கத்தில் கூட இத்தகைய சட்டம் இது சமயம் இல்லையென்றே சொல்லலாம். இப்பொழுது செய்துள்ள சட்டப்படி திருவாங்கூர் சமஸ்தானத்தில் பத்திரிகை நடத்துவோர் ஜாமீனாக முதலில் ரூபாய் 500 கட்ட வேண்டும். பத்திரிகையில் ஏதாவது குற்றங் காணப்பட்டால் ஜாமீன் தொகையான ஐநூறு ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுவிடும். அதன் பிறகு அப்பத்திரிகை நடை பெற வேண்டுமானால், அரசாங்கம் சம்மதித்தால் ரூ. 2,500 ஜாமீன் கட்ட வேண்டும். மறுபடியும் குற்றங் காணப்பட்டால் அத்தொகை பறிமுதலாவ தோடு பத்திரிகையும் அழிந்தொழிய வேண்டியதுதான். இதுவே இப்பொழுது திவானாகயிருந்து லீவின் பேரில் சென்றிருக்கும் திவான் வாட்ஸ் துரை மகனா ரின் பெரு முயற்சியால் பிரயோகிக்கப்பட்ட அருமையான சட்டம். சுதந்திரத்தையும் உரிமையையும் நோக்காகக் கொண்டே பத்திரிகை நடத்தப்படுவதாகும். பத்திரிகை நடத்த...

சுயராஜ்யக் கட்சி – சித்திரபுத்திரன் 0

சுயராஜ்யக் கட்சி – சித்திரபுத்திரன்

தென்னாட்டு அய்யங்கார் பிராமணர்களால் சுயராஜ்யக் கட்சி ஆக்கப் பட்டிருந்தாலும் அதற்குப் பிறப்பிடமாகவும் முதல் பலியாகவும் கொடுக்கப் பட்டது வங்காளமும் பிராமணர் வலையில் சிக்கி ஏமாந்த தேசபந்து தாசருமே யாகும். எப்படியோ, தேசபந்து தாஸ் தனது குற்றத்தை உணர்ந்து வருத்தப் படுவதற்கு முன்னும் உலகத்தார் திட்டும் வார்த்தைகள் தன் காதுக்கு எட்டு வதற்கு முன்னும் பரமபதமடைந்துவிட்டார். தென்னாட்டு பிராமணர்களும் அவருக்கு தென்னாட்டில் கோவில் கட்டி, உருவம் வைத்து, பிரதிஷ்டை செய்துவைத்து விட்டார்கள். விபூஷணஆழ்வார் உருவத்திற்கு வைணவக் கோவில்களில் கிடைத்திருக்கும் இடத்திற்கு மேலாகவே நமது தாஸர் உருவத் திற்கு “சுதேசமித்திரன்” ஆபீசில் இடம் கிடைத்து விட்டது. அதுமாத்தி ரமல்லாமல் நம்நாட்டு பிராமணச் சூழ்ச்சிக்கும் நமது தாஸர் வாழ்க்கையே அடிக்கடி “வேதக் கட்டளையாக” எடுத்துச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் பிறந்த வங்காளத்தில் தாஸர் வாக்கு சிரிப்பாய் சிரிக்கிறது. அவர் சிஷ்யர்களும் அவருடைய உபதேசங்களைக் காற்றில் பறக்கவிட்டு விட்டார் கள். கல்கத்தா இந்து முஸ்லீம் ஒப்பந்தமும் இந்து...

திண்ணைப் பிரசாரம் 0

திண்ணைப் பிரசாரம்

ஸ்ரீமான் ஊ.ஏ. வெங்கிட்டரமணய்யங்காரின் தேர்தல் சூழ்ச்சிகளைப் பற்றியும் அது சம்பந்தமான அவரது தரும விளம்பரத்தைப்பற்றியும் பல விஷயங்கள் “குடி அரசில்” தோன்றியது வாசகர்களுக்கு நினைவிருக்கும். ஸ்ரீமான் அய்யங்காருக்கு பொது ஜனங்கள் திருப்தி அடையதக்கவண்ணம் இவைகளுக்கு பதில் சொல்ல கொஞ்சமும் சக்தியில்லாமல் போய்விட்ட தால் பிராமண தந்திரத்தை உபயோகித்து பொது ஜனங்களை ஏமாற்றப் பார்க்கிறார். அய்யங்கார் தென்னை மரத்தில் கள்ளு இறக்கப்படுகிறது என்று எழுதியதற்கு நாளதுவரை அய்யங்கார் திருவாக்கால் யாதொரு தகவலும் இல்லவே இல்லை. கூலிக்கு ஆள்களைப்பிடித்து, தென்னை மரத்தில் இப்போது கள்ளு முட்டிகள் இல்லை என்றும், இந்த ஒரு வருஷத்திற்குள் ஒரு குறிப்பிட்ட தோப்பில் கள்ளு கலயம் கட்டியதை ரூபிப்போருக்கு 100 ரூபாய் இனாம் கொடுக்கப்படும் என்றும் அய்யங்காரின் நடத்தைக்கு பொறுப்பில்லாத யாரையோ பிடித்து எழுதச்சொல்லுகிறாரே தவிற, ‘எனது தோப்புகளில் நான் கள்ளுக்கு மரம் விடவில்லை’ ‘அவற்றில் ஒன்றிலும் முட்டி கட்டினதில்லை’ என்று இதுவரை சொல்லவே இல்லை. அவரது தர்ம விளம்பரத்தைப்...

தொழிலாளர் சங்கம் தூய்மையுற வேண்டும் அரசியல் கட்சிக்குள் அடைக்கலம் புகலாகாது,             தன் கையே தனக்குதவி 0

தொழிலாளர் சங்கம் தூய்மையுற வேண்டும் அரசியல் கட்சிக்குள் அடைக்கலம் புகலாகாது, தன் கையே தனக்குதவி

சகோதரர்களே! நான் இதுவரை எந்த தொழிலாளர் சங்கத்திலும் பேசியதேயில்லை. டாக்டர் வரதராஜுலு நாயுடுவுடன் இரண்டொரு சங்கங்களுக்குப் போயிருக் கிறேன். ஈரோட்டில் கூடிய தொழிலாளர் மகாநாட்டில் உபசரணைத் தலைவ ராக இருந்து இரண்டொரு வார்த்தைகள் பேசியிருக்கிறேன். தொழிலாளர் சங்கம் பொதுவாய் தொழிலாளர் சங்கம் என்றாலே எனக்கு அதனிடத்தில் விருப்பமிருப்பதில்லை. அதில் ஒரு சத்து இருப்பதாகவே எனக்குத் தோன்று வதில்லை. சில வெறும் வெளி ஆசாமிகள் அதை தங்கள் நன்மைக்கும் கீர்த் திக்கும் ஏற்படுத்திக் கொண்ட சாதனமென்பதே என்னுடைய வெகு நாளைய அபிப்பிராயம். அல்லாமலும் நமது நாட்டில் உண்மையான தொழிலாளிகளே கிடையாது. தொழிலாளர் யார்? நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோ ரெல்லாம் தொழிலாளிகளல்ல. அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தான் . தொழிலாளி என்பவன் நாட்டின் நன்மைக்கான ஒரு தொழிலைக் கற்று அத் தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து, அதன் பலன் முழுவ தையும் தானும் தன் நாட்டு மக்களும் அடையும்படியான முறையில் தொழில்...

மதமும் மததர்ம பரிபாலனமும் சென்னை ஹிந்துமத தர்ம பரிபாலனச்  சட்டமும் அதன் விரோதிகளும் 0

மதமும் மததர்ம பரிபாலனமும் சென்னை ஹிந்துமத தர்ம பரிபாலனச் சட்டமும் அதன் விரோதிகளும்

உங்களுடைய சங்கத்தின் ஐந்தாவது நோக்கம் மததர்ம பரிபாலனங் களை ஒழுங்காக நடைபெறச் செய்தல் என்பது. இது தற்காலம் நாடார் சமூகத் திற்கு மாத்திரமல்ல, இந்து மதத்திற்கே – இந்தியாவிற்கே – ஏன் உலகத்திற்கே மிகவும் அவசியமானது. கடவுள் என்றால் என்ன? குறிப்பாகவும் சிறப்பாகவும் கடவுள் என்பது என்ன என்பதைப் பற்றியும், மதம் என்பது என்ன என்பதைப் பற்றியும், தர்மம் என்பது என்ன என்பதைப் பற்றியும், பரிபாலனம் என்பது என்ன என்பதைப் பற்றியும் இந்துக் கள் என்போர்களில் ஆயிரத்திற் கொருவருக்குக் கூட குறைந்த அளவு ஞானமுமில்லாமலே இருக்கிறது. இதைப்போல ஒரு பெரிய ஜன சமூகத்திற்கு கேடான காரியம் வேறெதுவும் இல்லை. நம்மில் அநேகர் கடவுள் என்றால் என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் நம்மைப் போல் மனித உருவத்தோடு இருப்பதாயும்; அதற்கு பெண்டாட்டி, பிள்ளை, தாய் , தகப்பன், வீடு வாசல், சொத்து சுகம் உண்டென்றும், அதற்கும் கல்யாணம், ருது, சாந்தி, படுக்கை,...

ஏழாயிரம் பண்ணை பாலிய நாடார் சங்கத்தின் இரண்டாவதாண்டு கொண்டாட்டம் 0

ஏழாயிரம் பண்ணை பாலிய நாடார் சங்கத்தின் இரண்டாவதாண்டு கொண்டாட்டம்

அன்புள்ள வாலிப நாடார் சகோதரர்களே! தங்கள் சங்கத்தின் நோக்கங்களைக் காண எனக்கு மிகவும் சந்தோஷ மாயிருக்கிறது. முதலாவது நோக்கமாக “நாடார் சமூகம் அபிவிருத்தி அடை யும்படி செய்தல்” என்று வைத்திருக்கிறீர்கள். இதுதான் உண்மையான நாடாராய் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய காரியம். “நல்லாண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த இல்லாண்மை யாக்கிக் கொளல்” என்று நாயனார் சொல்லியிருப்பதின் தத்துவம் இதுதான். ஒவ்வொரு சமூகமும் தன் சமூக முன்னேற்றத்தை சீர்திருத்திக்கொண்டு பிறகு எல்லாச் சமூகத்தின் நன்மை யையும் பொது நன்மையையும் கவனித்தால்தான் அது முறையாகவும் பயனளிக்கக் கூடியதாகவும் இருக்கும். அஃதில்லாமல் தங்கள் சமூகம் சுயமரியாதை அற்றதாகவும், தீண்டாத சமூகமாகவும் இருப்பதை லக்ஷியம் செய்யாமலும், அதைப் பற்றி உணர்ச்சியில்லாமலும், நான் தேசபக்தன், பொது ஜனசேவை செய்பவன் என்று சொல்லிக்கொண்டு பொது உரிமை, பொதுச் சுதந்திரம் என்று பேசுவதெல்லாம் பொருளற்றதும் அறியாமையும் தனது சுய நலத்திற்கும் சுயகீர்த்திக்கும் பாடுபடுவதுமே ஒழிய வேறல்ல. ஏனெனில் நமது நாடு எக்காரணம்...

பப்ளிக் சர்வீஸ் கமிஷன்  சர்க்கார் ஊழிய சம்மந்தமான விசாரணைச் சபை 0

பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சர்க்கார் ஊழிய சம்மந்தமான விசாரணைச் சபை

இந்தியாவில் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் சம்பந்தமான விஷயத் தைப் பற்றி விசாரித்து அறிந்து தக்கபடி செய்வது என்ற பெயரை வைத்துக் கொண்டு அதற்காக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று ஒரு கமிட்டியை அரசாங் கத்தார் நியமித்து இருக்கிறார்கள். அக்கமிட்டிக்கு இந்தியர்களின் சார்பாய் – இந்துக்களின் சார்பாய் நியமிக்கப்பட்டிருக்கும் அங்கத்தினர் ஒரு தமிழ் நாட்டுப் பிராமணர். இந்தியாவிலிருக்கும் 33 கோடி ஜனங்களில் முக்கால் கோடி ஜனங்கள் கொண்ட வகுப்பார்களான ஒரு சிறு சமூகமான பிராமண கோஷ்டியில் இருந்து ஒருவரைப் பொறுக்கி எடுத்திருக்கிறார்கள். இவர் இந்தியாவிலுள்ள மனிதவர்க்கத்திற்கே உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் ஜாதியைச் சேர்ந்தவர். அதிலும் ஐயங்கார் ஜாதியைச் சேர்ந்தவர். இந்தியர்களின் சர்க்கார் உத்தியோக சம்பந்தமான விஷயங்கள் இப்போது இவர் கையில்தான் அடங்கியிருக்கிறது. இனி இந்தியர்களின் தலை யெழுத்தையும் ஜாதகத்தையும் கணிப்பவர் இந்த பிராமணர்தான். சர்க்கா ராரும் எந்த ஆசாமியைப் பிடித்தால் தங்கள் சொல்படி ஆடுவாரோ, தாங்கள் எழுதி வைத்ததில் கையெழுத்துப் போடுவாரோ,...

மௌலானா முகமதலியின் மத பக்தி 0

மௌலானா முகமதலியின் மத பக்தி

மௌலானா முகம்மதலி ஒரு கூட்டத்தில் பேசும் போது இஸ்லாத்தை அழிக்க விரும்புவோரின் கையிலிருந்து அதைக் காப்பாற்ற வேண்டுமென் றும் இதுசமயம் இஸ்லாத்துக்கு ஆபத்து வந்திருக்கிறதென்றும் சொல்லி வருகையில் “நாம் இந்துக்களுடன் நேசபாவமாயிருக்கத் தயார். ஆனால் நம்மோடு சண்டைபோட இந்துக்கள் விரும்பும் பக்ஷத்தில் இந்தியாவிலுள்ள 7 கோடி முஸ்லீம்களும் 21 கோடி இந்துக்களைப் பணிய வைக்கமுடியும். நமது நபிகள் நாயகம் காலத்தில் 15 பேர் சேர்ந்து ஒரு சைனியத்தை ஜெயித்து விட்டார்கள். ஆகையால் 7 கோடி மகம்மதியர்கள் 21 கோடி இந்துக்களை ஜெயிப்பது கஷ்டமல்ல” என்று சொன்னாராம். இதை ‘சுதேசமித்திரன்’ இந்துக்களுக்கு மகம்மதியர்கள் பேரில் துவேஷம் உண்டாகும்படி ‘மௌலானா முகமதலியின் முழக்கம்’ என்கிற தலைப்பின் கீழ் இதை எழுதியிருக்கிறது. மௌலானா பேசியவைகளில் நமக்கொன்றும் ஆச்சரியமில்லை. மௌலானா கணக்கில் தவறிவிட்டார் என்று எண்ணுகிறோம். 21 கோடி இந்துக்களை அடக்க 7 கோடி முஸ்லீம்கள் தேவையில்லை. இதே 21 கோடி இந்துக்கள் என்போர்களை முக்கால் கோடிக்...

நிரூப நேயர்களுக்கு விண்ணப்பம் 0

நிரூப நேயர்களுக்கு விண்ணப்பம்

“குடி அரசு” பத்திரிகை மிகவும் குறைந்த அளவுள்ளது. அதில் 10 பக்கங்கள் விஷயங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் பல வர்த்தமானங் களும் நிரூபங்களும் வந்து குவிந்து பத்திரிகை ஏற்படுத்தியதின் கருத்தை நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்படுத்துகிறது. நிரூபர்களும் வர்த்தமானம் தெரிவிப்பவர்களும் நமது பத்திரிகையை தினசரி என்று கருதிக்கொண்டிருக் கிறார்கள் என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. ஆதலால் நாம் உடனுக்கு டன் பிரசுரிக்கவில்லை என்று நிரூப நேயர்கள் நம்மீது வருத்தப்படாமல் இருக்கும்படி வேண்டுகிறோம். பல தேச வர்த்தமானங்களை நாம் பிரசுரிப்ப தில்லையென்றுகூட நம்மீது பல சந்தாதாரர்களுக்கு சலிப்பிருப்பதாய்த் தெரி கிறது. அவர்களும் நமது கருத்தையும் நிலையையும் அறிந்து மன்னிப் பார்கள் என்றே நம்புகிறோம். நமது பத்திரிகை வர்த்தமானப் பத்திரிகை அல்லவென்றும், பிரசாரப் பத்திரிகை என்றும் மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஆதலால் நிரூபங்களாலும் வர்த்தமானங்களாலும் நமது பத்திரிகையின் உத்தேசத்தைக் கெடுக்காமலும் வர்த்தமானம் இல்லையே! என்று கருதி அலக்ஷியம் செய்யாமலும் இருக்கும்படி பிரார்த்திக்கிறோம். பத்திராதிபர் குடி அரசு – அறிக்கை –...

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் 0

சுசீந்திரம் சத்தியாக்கிரகம்

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஏதோ ஒரு ரகசிய ராஜியின்மேல் நிறுத்தப் பட்டதாகவும் சீக்கிரத்தில் எல்லாப் பிரஜைகளுக்கும் அனுகூலமான முடிவை திருவாங்கூர் அரசாங்கத்தாரால் நடத்தி வைக்கப்படும் என்றும் பிரஸ்தாபம் வந்தது. ஆனால் ஏறக்குறைய சத்தியாக்கிரகம் நிறுத்தப்பட்டு இரண்டு மாதத் திற்கு மேலாகியும் இன்னமும் அதைப்பற்றி ஒரு விபரமும் தெரிவதற் கில்லாமல் கிணற்றில் கல்லு போட்டதுபோல் மூடுமந்திரமாயிருக்கிறது. கமிஷனர் பிட்டு துரை மிகவும் நல்லவர். எல்லாருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் அக்கரை உள்ளவர். ஆனால் திவானோ கிறிஸ்துவராயிருந்தாலும் மலையாள பிராமணர்கள் தயவைப் பெற்று புகாரில் லாமல் காலந்தாட்டிவிட்டுப் போகலாம் என்கிற ஆசையுள்ளவராம். இவர்க ளின் நிலைமையை நாம் கவனித்துக் கொண்டிருப்பது சத்தியாக்கிரகத்துக்கு நீதி செய்ததாகுமா? ஆதலால் சத்தியாக்கிரகத்தை மறுபடியும் துவக்கும்படி வேண்டுகிறோம். குடி அரசு – வேண்டுகோள் – 23.05.1926

ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் 0

ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார்

ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள் செங்கற்பட்டு ஜில்லாவில் பிராமணர்களுக்காக பிரசாரம் செய்து வருகையில் பல்லாவரத் தில் ஒரு பிராமணர் அக்கிராசனத்தின் கீழ் பிராமணர்களின் நற்சாக்ஷிப் பத்திரமான வரவேற்புப் பத்திரம் பெற்றுக்கொண்டு தனது திருவாக்கால் “மேல் நாட்டாருக்கு வயது 42, கீழ் நாட்டாருக்கு வயது 22; நமது நாட்டில் பஞ்சம் அதிகம்; ஆதலால் ஸ்ரீமான் எ. இராமசாமி முதலியாருக்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள். அவர் அடாத செயல்கள் செய்வதால்தான் அவருக்கு ஓட்டுக் கொடுக்கக் கூடாது என்று சொல்லுகிறேன். ஸ்ரீமான்கள் எம்.கே. ஆச்சாரியார் வகையறாக்களுக்கு ஓட்டுக் கொடுங்கள்” என்று பேசினாராம். இவருக்கு ஆத்மா இருக்கிறதா என்பதே நமது சந்தேகம். ஐயோ! நமது முதலியாரின் புத்தி இப்படியும் சபலமாய்ப் போகுமென்று நாம் எந்தக் காலத்திலும் எதிர்பார்த்ததேயில்லை. ஸ்ரீமான்கள் எம்.கே.ஆச்சாரியார், சத்தியமூர்த்தி, எ.ரெங்கசாமி ஐயங்கார் வகையறாக்களைவிட – இவர்களது நாணயத்தைவிட – ஸ்ரீமான் எ. இராமசாமி முதலியார் எந்த விதத்தில் தாழ்ந்த வர்? நமது முதலியாருக்கு என்ன...

ஒத்துழையா நாற்றம் வீசும்               சுயராஜ்யக் கட்சி மெம்பர்களும் கோயமுத்தூர் ஜில்லா போர்டும் 0

ஒத்துழையா நாற்றம் வீசும் சுயராஜ்யக் கட்சி மெம்பர்களும் கோயமுத்தூர் ஜில்லா போர்டும்

கோயமுத்தூர் ஜில்லா போர்டின் கூட்டமொன்று பிரசிடெண்டு ராவ் சாஹிப் சி. எஸ்.இரத்தினசபாபதி முதலியார் அக்கிராசனத்தின் கீழ் கூடிற்று. இக் கூட்டத்திற்கு 40 அங்கத்தினர்கள் வந்திருந்தார்கள். ஏனெனில், ஸ்ரீமான் முதலியாரது நியமனம் பெற்ற பிரசிடெண்டு உத்தியோக காலத்தில் இந்தக் கூட்டம் கடைசி கூட்டமாகும். ஆதலால் ஸ்ரீமான் முதலியாருக்கு ஜில்லா போர்டு மெம்பர்களின் நன்றியறிதலைக் காட்டவும் வந்தனங் கூறவும் “சுயராஜ்யக் கட்சி அங்கத்தினர்கள்” உள்பட ஏறக்குறைய எல்லா மெம்பர் களுமே வந் திருந்தார்கள். அப்பொழுது இம்மாதம் 30- ²கோயமுத்தூருக்கு விஜயம் செய்யப்போகும் கவர்னர் துரை அவர்களுக்கு ஜில்லா போர்டின் சார்பாய் ஒரு உபசாரப் பத்திரம் படித்துக்கொடுக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் வந்துவிட்டது. அக்கூட்டத்தில் ஒத்துழையா நாற்றம் வீசும் சுயராஜ் யக் கட்சி மெம்பர்களான ஸ்ரீமான் ராவ் பஹதூர் டி.எ. இராமலிங்கஞ் செட்டியா ரும் ஜில்லா போர்டுக்கு சர்க்காரால் நியமனம் பெற்ற மெம்பரான ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்காரும் மெம்பர்களாய் ஆஜராகியிருந்தார்கள். உபசாரப் பத்திரத்தோடு போகாமல் உபசாரப் பத்திரத்திற்கு...

பட்டாபிஷேகம் மச்சான் இறந்தால் நல்லதாச்சு                          அவருடைய கம்பளி நமக்காச்சு – சித்திரபுத்திரன் 0

பட்டாபிஷேகம் மச்சான் இறந்தால் நல்லதாச்சு அவருடைய கம்பளி நமக்காச்சு – சித்திரபுத்திரன்

ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்காருக்கு எல்லா இந்தியத் தலைமைப் பட்டாபிஷேகம் ஆகிவிட்டது. ஆனால் அது இரண்டு மாதத்திற்கு என்று சொல்லப்பட்டாலும் காயமானதென்பதுதான் நமது அபிப்பிராயம். பண்டித நேரு இரண்டு மாதத்திற்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுகிறதாய்ச் சொல்லி, தனது விசேஷ அதிகாரத்தால் ஸ்ரீமான் ஐயங்காருக்குப் பட்டாபிஷேகம் செய்து தலைமைப் பதவியை அவர் தலையில் சூட்டிவிட்டுப் போய்விட்டார். இது மகாத்மா ஓய்வெடுத்துக் கொண்டது போலவேதான் முடியும். “வெற்றிமேல் வெற்றி ஏற்பட்டு, இரட்டை ஆட்சி மடிந்தவுடன்” அதற்குமேல் என்ன செய்வ தென்று தெரியாமல் ஸ்ரீமான் சி.ஆர்.தாஸ் நிரந்தர ஓய்வெடுத்துக் கொண்டார். சுயராஜ்யக் கட்சி வெற்றி அடைந்து காங்கிரசையே தனக்குள் ஐக்கியப் படுத்திக் கொண்டவுடன் இனி நமக்கு இங்கென்ன வேலை என்று மகாத்மா ஓய்வெடுத்துக் கொண்டார். அதோடு நிர்மாணத் திட்டங்களும் ஓய்வெடுத்துக் கொண்டன. இப்போது பண்டித நேரு ராஜி ஒப்பந்தம் முடிந்தவுடன் இனி எப்படி ஜனங்கள் முகத்தில் விழிப்பது என்று ஓய்வெடுத்துக் கொண்டார். இது எதற்காகவோ தெரியவில்லை. சட்டசபையை விட்டு...

ஆதி திராவிடரும் சுயராஜ்யக் கக்ஷியும் 0

ஆதி திராவிடரும் சுயராஜ்யக் கக்ஷியும்

“சுதேசமித்திரன்” என்னும் பிராமணப் பத்திரிகை ஆதி திராவிடர்க ளுக்கு ஜஸ்டீஸ் கட்சியார் ஒன்றும் செய்யவில்லை என்றும், தங்கள் கூட்டத் தார் ஆதி திராவிடர்களுக்கு சுவர்க்க வாசலைத் திறந்து விடப் போவதாகவும், இனியாவது தங்களை வந்து சரணமடையும்படி உபதேசிக்கிறது. ஜஸ்டீஸ் கட்சியார் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்தார்களோ, இல்லையோ? அதைப் பற்றி அதிக கவலை வேண்டாம். அது ஆதி திராவிடர்களுக்கே தெரியும். ஆனால் காங்கிரசின் ஆதிக்கத்தை அடைந்த சுயராஜ்யக் கட்சியார் ஆதி திராவிடர்களுக்கு என்ன நன்மை செய்தார்கள்? என்ன பதவி கொடுத் தார்கள்? என்ன உத்தியோகம் தந்தார்கள்? இந்தியா சட்டசபைக்கு ஒரு ஆதி திராவிடரை நிறுத்தினார்களா? நிறுத்த ஆளில்லாமல் திண்டாடும் சென்னை சட்டசபைக்கு ஒரு ஆதி திராவிடரையாவது நிறுத்தினார்களா? சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலுக்கு ஆதி திராவிட வகுப்பில் பிறந்த ஒருவரை யாவது நிறுத்தினார்களா? வேறு வகையில் இவர்கள் மட்டிலும் என்ன சாதித்து விட்டார்கள்? ஒரு சமயம் ஆதி திராவிடர்களில் எவராவது ஒருவருக்கு அதுவும்...

ஆசை வெட்கமறியாது சுயராஜ்ஜியக் கட்சியாரின் வெளியேற்றம் 0

ஆசை வெட்கமறியாது சுயராஜ்ஜியக் கட்சியாரின் வெளியேற்றம்

“சுவற்றுக் கீரையை வழித்துப் போடடி சுரணைக் கெட்ட வெள் ளாட்டி” என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது ஒரு ஸ்திரீ கீரை கடைந்து தன் கணவனுக்குச் சாதம் போட்டு கீரை பரிமாரினாள். கணவன் மனதில் எதையோ வைத்துக்கொண்டு கோபம் வந்து விட்டதுபோல பாசாங்கு செய்து கீரை பக்குவம் நன்றாக இல்லையில்லை என்று கீரையை வாரி சுவற்றின் மீது இறைத்துவிட்டு எழுந்து போய் படுத்துக் கொண்டான். ஸ்திரீயும் அந்த இலையை இழுத்து வைத்து விட்டு மீதி இருந்ததைப் போட்டு சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டாள். சிறிது நேரத்திற்குப் பிறகு கணவனுக்குப் பசி ஏற்பட்டது. மறுபடியும் வந்து உட்கார்ந்து கொண்டு சாப்பாடு போடச் சொன் னான். அந்த மனைவி முன் இழுத்து வைத்திருந்த இலையையே பக்கத்தில் இழுத்து விட்டுவிட்டு நின்று கொண்டாள். இலையில் வெறும் சாதம் மாத்திரம் தான் இருந்தது. கணவன், மனைவியைப் பார்த்து “இந்த சாதத்திற்கு ஏதாவது கரி வைத்துத் தொலை, தொட்டு...

தேர்தல் அபேக்ஷகர்கள் 0

தேர்தல் அபேக்ஷகர்கள்

சுயராஜ்யக் கட்சியின் சார்பாய் சென்னை சட்டசபைக்கும் இந்தியா சட்டசபைக்கும் வரப்போகும் தேர்தல்களுக்கு ஐயங்கார் கோஷ்டியாரால் அபேக்ஷகர்களை நியமனம் செய்திருப்பதாகப் பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது. இதனை எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியாரும் ஒப்புக் கொண்டு உறுதிபடுத்தியாய் விட்டதாம். ஆனாலும் இன்னும் பல ஜில்லாக் களுக்கு அபேக்ஷகர்களைப் பூர்த்தி செய்யாமல் காலியாக விட்டுவைத்திருக் கிறார்கள். அது எதற்காக வென்றால் தாங்கள் இதுவரை நியமித்த பட்டிய லானது பிராமணரல்லாதவர்களையே அதிகமாய் நியமித்ததாகப் பொது ஜனங்களை நம்பும்படி செய்வதற்காகவும், பிராமணர்களை நியமிக்கப் போகும் ஸ்தானங்களையெல்லாம் காலியாக வைத்து பின்னால் சமயம் பார்த்து ஜில்லாவுக்கு ஒவ்வொருவராகச் சேர்த்துக்கொள்ளும் தந்திரத்திற் காகவுமே தான் என்று சொல்லுவோம். உதாரணமாக, தஞ்சை ஜில்லாவுக்கு ஒரு ஸ்தானம் காலி. இதற்கு ஒரு ஐயரோ, ஐயங்காரோ திரைமறைவில் இருக்கிறார் . அவர் பெயரை இப்போது சொன்னால் கலகம் ஏற்பட்டுவிடும். ஆதலால் மூடு மந்திரமாகவே வைத்தி ருந்து, சமயம் பார்த்து அந்தப் பெயரை வெளிப்படுத்தி விடுவார்கள். ஜனங்...

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி                            எல்லா இந்தியப் பிரசாரகராய் விட்டாராம் 0

ஸ்ரீமான் சத்தியமூர்த்தி எல்லா இந்தியப் பிரசாரகராய் விட்டாராம்

ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக விளம்பர உபகமிட்டி மெம்பராய்ச் சேர்க்கப் பட்டிருப்பதாகக் காங்கி ரஸ் காரியதரிசி ஸ்ரீமான் ஏ. ரெங்கசாமி ஐயங்கார் அறிவிக்கிறார், என்று “சுதேசமித்திரனில்” குறிப்பிட்டிருக்கிறது. பொதுத் தேர்தலையொட்டி அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்வாராம். சரி, இவரை யார் நியமித் தார்கள்? ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி ஐயங்கார் நியமித்தார்; ஸ்ரீமான் சத்தியமூர்த்தி இந்தியா வெங்கும் சுற்றுப்பிரயாணம் செய்கிறார். யாருடைய பணம்? ஊரார் பொதுப் பணம். என்ன பிரசாரம்? பிராமணத் தேர்தல் பிரசாரம். அதாவது பொது ஜனங்கள் பணத்தில் மாகாணம் மாகாணமாய்ச் சுற்றி “தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் என்கிற அப்பிராமணக் கூட்டம் ஒன்று இருக்கிறது; அவர்கள் எல்லோரும் தேசத் துரோகிகள்; அவர்களுக்கு மூளை கிடையாது; பிராமணர்கள்தான் பெரிய தேசபக்தர்கள்; மகா புத்திசாலிகள்; அதிலும் நானும் ஸ்ரீமான்கள் ஏ. ரெங்கசாமி ஐயங்காரும், எஸ்.சீனிவாசய்யங்காரும், சி.வி.வெங்கிட்டரமணய்யங்காரும், எம்.கே. ஆச்சாரியாருந்தான் மகாமகா புத்திசாலிகள், தேசபக்தர்கள்; ஒத்துழையாமையின் போது நாங்கள்தான் முன்னணியிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு...

இந்து மகாசபையின்                                  பலனும் கிலாபத்தும் 0

இந்து மகாசபையின் பலனும் கிலாபத்தும்

டில்லியில் கூடிய கிலாபத் மகாநாட்டில் மௌலானா மலிக் ஒரு தீர்மானத்தின் பேரில் பேசுகையில் “எங்காவது இந்து முஸ்லீம் கலவரம் ஏற்பட்டால் தற்காப்பிற்கான வழியை மாத்திரம் இத்தீர்மானம் கூறுவதாயிருக் கிறது. ஆனால் இந்து சகோதரருடன் ஒற்றுமை ஏற்படுத்த முடியும் என்று இன்னமும் தாம் நம்புவதால்…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சபையோர்கள் கூச்சலிட்டு ‘இந்துக்களை சகோதரர் என்று சொன்னது தப்பு’ என்றும் அதை வாப்பீசு வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் கோபாவேசத் துடன் கூறினார்களாம். கடைசியாக மௌலானா ஷவுகத்தலி பலதடவை கெஞ்சிக்கேட்டுக் கொண்டதன் பேரில் கூச்சல் அடங்கிற்றாம். இதைப்பற்றி கூச்சல் போட்டவர்கள் பேரில் நமக்கு ஒன்றும் அதிருப்தியும் ஆச்சரியமும் இல்லை; ஆனால் இதிலிருந்து மகமதிய சகோதரர்களின் மனோபாவம் எது வரை பாய்ந்திருக்கிறது என்று இப்போதாவது இந்துக்கள் தெரிந்து கொள் ளலாம். இவ்வித மனோபாவம் ஏற்படக் காரணமென்ன? நம் தேசத்து வைதீகப் பிராமணர்களின் இந்து மகாசபை செய்த பழிக்கு இந்து சமூகத்தார் அனைவருமே மகமதியரின் இவ்விதத் துவேஷத்திற்கு...

கல்பாத்தியும் தெருவில் நடக்காமையும் 0

கல்பாத்தியும் தெருவில் நடக்காமையும்

மலையாளம் ஜில்லாவைச் சேர்ந்த பாலக்காடு முனிசிபல் எல்லைக் குள் கல்பாத்தி என்கிற பாகம் பிராமணர்கள் முக்கியமாய் வசிக்கும் பாகம். அது பல தெருக்களை உடையது. அத்தெருக்கள் எல்லாம் முனிசிபாலிட்டி யாரைச் சேர்ந்தது. அதைப் பழுது பார்த்தல், பராமரித்தல் எல்லாம் முனிசிபல் செலவிலேயே நடந்து வருகிறது. அப்படி இருந்தும் அங்கிருக்கும் பிராமணர்கள் அத்தெருவின் வழியாய் “பஞ்சமர்கள்” என்று சொல்லுவோர் களையும் “தீயர்” என்று சொல்லுவோர்களையும் நடப்பதற்கு விடுவதில்லை. அத்தெருக்களின் முகப்புகளில் உள்ள பல வியாபாரக் கடைகளிலும் பிராமணர்கள் வந்து சாமான்கள் வாங்கினால் அதைத் தங்கள் வீட்டுக்குத் தூக்கிச் செல்ல மகமதியக் கூலிகளையாவது, கிறிஸ்தவக் கூலிகளையாவது அமர்த்தி எடுத்துக் கொண்டு போவதே தவிர ³ இந்து கூலிகளை எடுக்க விடுவதில்லை. இதற்காகவே அக்கடைகளுக்குப் பக்கத்தில் மகமதிய கிறிஸ் துவக் கூலிகள் அதிகமாய் நின்று கொண்டிருப்பார்கள். அல்லாமலும் அந்த வீதிகளில் உத்தியோகஸ்தர்களும் குடி இருக்கி றார்கள். அவர்கள் வீட்டுக்கும் ஆபீஸ் சம்மந்தமான காகிதம் போக்குவரத்து முதலியவைகளுக்கும்...

சென்னை ஓட்டர்களுக்கு                          இனியாவது புத்தி வருமா? 0

சென்னை ஓட்டர்களுக்கு இனியாவது புத்தி வருமா?

சென்னைக் கார்ப்பரேஷனில் சுயராஜ்யக் கட்சியாரின் தலைக் கொழுப்பு ஒரு நிலையில் நிற்காமல் தலை கிருகிருவென்று சுற்றுவதாகவே தெரிகிறது.  ஏமாந்துபோன சென்னை ஓட்டர்களுக்கு இனியாவது புத்தி வருமோ வராதோ நமக்குத் தெரியவில்லை. அதன் பிரசிடெண்டு ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் கார்ப்பரேஷனை தனது முன்னோர்கள்  வீட்டுச் சொத்து  போல் நினைத்து தனக்கே உரிமையாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.  இவர்கள் கையில் ராஜீய பாரத்தையும் மந்திரி பதவிகளையும் ஒப்புவித்து விட்டால் நாடு துலங்கிப் போகும் போலவே இருக்கிறது.  அதா வது 3-5-26-ல் ஒரு மீட்டிங்கு போட்டார். அய்யங்கார் சிஷ்யர் ஒருவர் அன்று வரமுடியாததால் உடனே மாற்றி விட்டார் .  அடிக்கடி இம்மாதிரி மீட்டிங் போடுவதும், தங்கள் கட்சி ஆள்களில் ஒரு  பூனைக் குட்டிக்கு வர அசவு கரியம் ஏற்பட்டாலும் அதற்காக மீட்டிங் கை தனது இஷ்டப்படி ஒத்தி வைத்து விடுவதுமே வேலையாயிருக்கிறார். இதுபோல் இதற்குமுன் பலதடவைகளில் நடந்திருக்கிறது.  தங்கள் கட்சியில் ஒரு ஆள் வரமுடியாவிட்டால் தங்கள்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

எந்த அரசாலும் எல்லாப் பிரச் சினைகளையும் தீர்த்து வைத்திட முடியாது. அதை இந்தப் புதிய அரசும் விரைவில் உணரத் தான் போகிறது. – ப. சிதம்பரம் அரசு ரகசியங்களையெல்லாம் இப்படி அம்பலப்படுத்தினா அது தேசத் துரோகமாயிடாதா சார்? அடக்கி வாசிங்க! காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அந்த அரசுடனேயே சேர்ந்து வெளியேறிட வேண்டும். – அமைச்சர் வெங்கய்யா நாயுடு நியாயமான பேச்சு. விருந்தினர் மாளிகை களை அடுத்து வரும் பயணிகளுக்கும் வழிவிட வேண்டும். ஏதோ விலைக்கு வாங்கின மாதிரி, குத்தகை எடுத்துக்க முடியாது! முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல், அரசு வீட்டைக் காலி செய்து, வாடகை வீட்டில் குடி யேறினார். மாத வாடகை ரூ.16 இலட்சம். – செய்தி அடேங்கப்பா… இப்படி சொந்தமாக ஒரு வீடுகூட இல்லாத ஏழைப் பங்காளர்கள் காங்கிரசில் அமைச் சர்களாக இருந்திருக் கிறார்கள் என்ற செய்தி புல்லரிக்குது, போங்க! கங்கையில் முழுக்குப் போட்டால், புற்று நோய் வரும் ஆபத்து....

காஞ்சி மூத்த சங்கராச்சாரி கூறுகிறார்: ‘ராமன்’ நடத்தியது மநுதர்ம ஆட்சி 0

காஞ்சி மூத்த சங்கராச்சாரி கூறுகிறார்: ‘ராமன்’ நடத்தியது மநுதர்ம ஆட்சி

அயோத்தியில் ‘ராமன்’ கோயில் கட்ட வேண்டும் என்று பார்ப்பன சக்திகளும், சங்பரிவாரங்களும் பா.ஜ.க. ஆட்சியும், ஏன் துடிக்கின்றன? ‘ராமன்’ மநுதர்மப்படி ஆட்சி நடத்தியதுதான் இதற்குக் காரணம். இதை இறந்துபோன காஞ்சி மூத்த பார்ப்பன சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியே கூறியுள்ளதை ‘தமிழ் இந்து’ நாளேடு அதன் ஆன்மிகப் பகுதியில் ஜூன் 26, 2014இல் வெளியிட்டிருக்கிறது. அந்தப் பகுதி இதோ: “ராமராஜ்யம் ஏற்பட வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தவரின் வாரிசுகள் இப்போது ஜனநாயகம் சிருஷ்டி செய்து கொண்டிருக்கிறார்கள். ராமர் புதுசாக ராஜநீதி எதுவும் செய்து ராஜ்யபாரம் நடத்தவில்லை. தன் அபிப்பிராயம், தன் கார்யம் என்று சொந்தமாக எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க சாஸ்திரத்தைப் பார்த்து, பூர்வீகர்களின் வழியைப் பார்த்து அந்தப்படியே பண்ணினவா ஒருவருண்டு என்றால் அது ராமசந்திர மூர்த்திதான். மநு நாடாண்ட காலம் முதலாக தசரத சக்ரவர்த்தி வரை எந்த தர்மசா°த்ர ஆட்சி முறை நடந்ததோ அதையேதான் ராமரும் பின்பற்றி நடத்திக் காட்டினார்” – என்கிறார்,...

தலையங்கம் – இளவரசனை பலி கொண்ட ஜாதி வெறி 0

தலையங்கம் – இளவரசனை பலி கொண்ட ஜாதி வெறி

ஜூலை 4, வரலாற்றில் ஜாதியத்தின் கோர முகம் தலைவெறித்தாடிய நாள்! வன்னிய சமூகத்தைச் சார்ந்த திவ்யாவும், தலித் சமூகத்தைச் சார்ந்த இளவரசனும் ஜாதி கடந்து காதலித்தக் “குற்றத்துக்காக” ஜாதி வெறியர்களால் தண்டிக்கப்பட்டு, இளைஞன் இளவரசன் தனது வாழ்க்கையை ரயிலில் விழுந்து முடித்துக் கொண்ட நாள்! இளவரசன் மரணத்துக்குத் தூண்டியது – ஜாதி வெறியைக் கட்டமைத்து அரசியலில் குளிர்காய முனையும் ஒரு கூட்டம்! நீதிமன்றம் வரை பிரச்சினையை கொண்டுச் சென்று இளம் காதலர்களைப் பிரித்து அந்த சோகத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கூத்தாடியது இந்த ஜாதி வெறிக் கும்பல். இந்தக் கொடுமை தொடர்கிறது. தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு, படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் தலித் பெண்கள். முதல் தலைமுறையாக இவர்கள் படிக்கத் தொடங்குவதும், சுயமரியாதையோடு வாழ விரும்புவதும் ஜாதி ஆதிக்கக் கும்பலுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. தேர்தலுக்குப் பிறகு, பா.ம.க.வுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக கடலூர் மாவட்டம் வடக்கு மாங்குடி கிராமத்தில் வாழ்ந்த தலித் மக்கள் தாக்கப்பட்டு, இருவர்...

ஜூலை 10: மத்திய தேர்வாணையம் முன் முற்றுகைப் போராட்டம் ஏன்? 0

ஜூலை 10: மத்திய தேர்வாணையம் முன் முற்றுகைப் போராட்டம் ஏன்?

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைக் குழுமம் எனப்படும் ளுவயகக ளுநடநஉவiடிn ஊடிஅஅளைளiடிn மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்படும் பணியிடங்களை நிரப்பும் இந்திய அரசின் சட்டப்பூர்வ மத்திய அரசு நிறுவனமாகும். இக்குழுமம் 145 க்கும் மேற்பட்ட மத்திய அரசு நிறுவனங்களுக்கு பல கட்ட தேர்வுகளை நடத்தி ஊழியர்களை பணியமர்த்துகிறது. 2006 வரை மண்டல அளவிலேயே இப் பணியமர்த்தும் நடவடிக்கைகளை இக் குழுமம் மேற்கொண்டு வந்தது. (இந்திய அளவில் 7 மண்டலங்களாக இக்குழுமம் செயல்பட்டு வருகிறது ). இதனால் அனைத்து மாநில மக்களுக்கும் அந்தந்த மாநிலத்திலேயே வேலை வாய்ப்புகள் மத்திய அரசின் துறைகளில் கிடைத்து வந்தது. 2006ஆம் ஆண்டிற்குப் பிறகு மண்டல அளவில் நடத்தப்பட்டு வந்த இத் தேர்வுகள் அகில இந்திய அளவில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம் அகில இந்திய அளவில் இத்தேர்வுகள் நடத்தப் பட வேண்டும் என கூறியிருந்தாலும்கூட 50 சதவீதப் பணியிடங்களையாவது மண்டல அளவில் நியமிக்க மத்திய...

இதுதான் கெயில் நிறுவனம்! 0

இதுதான் கெயில் நிறுவனம்!

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் நிறுவனம், தனியார் மின் உற்பத்தி நிறுவனத் துக்குக் குழாய் வழியாக கொண்டு சென்ற எரிவாயு வெடித்து, 19 பேர் உயிரிழந்துவிட்டனர். எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுவை குழாய் மூலம் கொண்டு செல்வதில் மிகுந்த கவனமும் பராமரிப்பும் தேவை. ஆனால், வழமையான அதிகாரிகள் அலட்சியம்தான் மனித உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது. இத்தகைய ஆபத்தான திட்டங்களை மக்கள் எதிர்த்துப் போராடினால் வளர்ச்சியை விரும்பாதவர்கள், வெளிநாட்டுப் பணம் பெறும் தொண்டு நிறுவனங்களால் தூண்டி விடப்படுகிறவர்கள் என்று குற்றம் சாட்டும் ஆட்சிகள், இந்த சாவுக்கு என்ன பதிலை கூறப் போகின்றன? தமிழ்நாட்டில் மக்கள் எதிர்ப்பால் இந்த ஆபத்தான திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது சரியான முடிவு என்பதை இந்த விபத்து உறுதிப்படுத்தியிருக்கிறது. ‘கூடங்குளம்’ திட்டத்தை நியாயப்படுத்தும் ஆட்சியும், அதிகார வர்க்கமும் இந்த ஆபத்துகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா? மவுலிவாக்கம் அவலம்! சென்னை மவுலிவாக்கத்தில் ஏரிக்கரை மீது எழுப்பப்பட்ட 11 அடுக்கு மாடிக்...