Category: சேலம் மேற்கு

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட தடை செய்ய வலியுறுத்தி கண்டன் ஆர்ப்பாட்டம் மேட்டூர் 27092017

27.09.2017 அன்று சேலம் மாவட்டம் மேட்டூரில் மத்திய மாநில அரசுகளின் நவோதயா பள்ளி திட்டம் அரசு பள்ளிகளில் யோகா வகுப்பு அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை இவைகளை  தடைசெய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தோழர். சூரியகுமார்  தலைமை உரைக்குப் பின் தோழர் சி. கோவிந்தராஜ் தலைமை செயற்குழு உறுப்பின் தோழர் அ.சக்திவேல், தோழர் இரண்யா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர் , இந்நிகழ்வில் மேட்டூர் ,ஆர் எஸ் , கேவேரி கிராஸ் , நங்கவள்ளி, கொளத்தூர், தார்க்காடு, காவலாண்டியூர் தோழர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரனி அமைப்பாளர் தோழர் சு.குமரப்பா நன்றி உரை நிகழ்த்தினார்.

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் 02092017

சேலத்தில் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்கிட கோரியும், NEET தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் 02092017 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் கருப்பூர் சக்திவேல் தலைமை தாங்கினார், சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் தோழர் ஏற்காடு பெருமாள் முன்னிலை வகித்தார். தோழர் இரணியாவின் முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் சூரி, மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராசு, தோழர் முல்லை வேந்தன், சேலம் மாநகர அமைப்பாளர் தோழர் பாலு, தலைமை செயர்குழு உறுப்பினர் தோழர் R.S.சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சேலம் மாநகர செயலாளர் தோழர் பிரபு நன்றியுரை ஆற்றினார். இவ்ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகரம், இளம்பிள்ளை, நங்கவள்ளி, ஏற்காடு, மேட்டூர், கொளத்தூர், ஆர்.எஸ் பகுதி பொறுப்பாளர்கள், தோழர்கள்...

சேலம் முருங்கப் பட்டியில் கழகப் பொதுக்கூட்டம் ! 11082017

சேலம் முருங்கப் பட்டியில் கழகப் பொதுக்கூட்டம் ! 11082017. கழகத் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இழந்து வரும் உரிமைகளை மீட்போம் !தமிழகத்தின் தனித்தன்மையை காப்போம் ! எனும் முழக்கத்தை முன்வைத்து நடைபெற்ற பரப்புரை பயணத்தின் ஒரு பகுதியாக 11.08.2017 அன்று மாலை 6 மணிக்கு சேலம் முருங்கப் பட்டி சந்தை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தலைமைக் கழக பேச்சாளர் தோழர் கோபி.வேலுச்சாமி மற்றும் கழக மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வனவாசி, சேலம் 24072017

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். நாள் : 24.07. 2017 திங்கள் நேரம் : மாலை 6.00 மணி இடம் : பேருந்து நிலையம்,வனவாசி, சேலம் மாவட்டம். சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி அவர்கள். தலைவர்,திராவிடர் விடுதலைக்கழகம். தோழர் வே.மதிமாறன், எழுத்தாளர். தோழர் காவை இளவரசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியும், மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

பெரியாரியல் பயிலரங்கம் ! கொளத்தூர் 24052017 மற்றும் 25052017

பெரியாரியல் பயிலரங்கம் ! தலைப்புகள் – பயிற்சியாளர்கள் விவரம். நாள் : 24.05.2017.புதன் கிழமை மற்றும் 25.05.2017 வியாழக்கிழமை. நேரம் : காலை 9.00. மணிமுதல் மாலை 5 மணி வரை. இடம் : உக்கம்பருத்திக்காடு, பெரியார் படிப்பகம்,கொளத்தூர். ஒருங்கிணைப்பு : திராவிடர் விடுதலைக் கழகம், கொளத்தூர் ஒன்றியம்,சேலம் மாவட்டம். தொடர்புக்கு : 7373072737 – 9486127967 – 9994477623

உணவு உரிமை – கருத்துரிமையை பறிக்காதே! தடையை மீறி மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்: சேலத்தில் கழகத்தினர் கைது

மாட்டுக் கறியை உண்ணத் தடைபோடும் பார்ப்பன மதவாத சக்திகளுக்கு ஆதரவாகவே தமிழக காவல்துறையும் செயல்பட்டு வருகிறது. மாட்டுக்கறி உணவு – உழைக்கின்ற மக்களின் உணவு; புரதச் சத்து மிக்க உணவு; ஆடு மற்றும் கோழிக் கறியைச் சாப்பிடும் உரிமை இருக்கும்போது, உலகம் முழுதும் மக்களால் உண்ணப்படும் மாட்டுக்கறி உண்பதை மதத்தைக் காரணம் காட்டி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தடை போட்டுள்ளதோடு, கண்காணிப்புக் குழுக்கள் என்ற பெயரில் காலித்தனத்திலும்  இறங்கி வருகிறார்கள். இந்த நிலையில் மே 12ஆம் தேதி சேலம் நகரில் மாட்டுக்கறி அரசியல் கருத்தரங்கம் ஒன்றுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் தலைமையில் மாநகரத் தலைவர் த.பரமேசு முன்னிலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் பொ.இரத்தினம் ஆகியோர் உரையாற்ற இருந்தனர். மதியம் ரூ.50 கட்டணத்தில் மாட்டுக்கறி உணவு வழங்க ஏற்பாடாகியிருந்தது. ‘லால் மஜித் மண்டபம்’ என்ற தனியார் அரங்கில் நடந்த...

மாட்டுக்கறி அரசியல் – மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் ! சேலம் 12052017

கருத்துரிமை உணவு உரிமைக்கு தடை போடும் தமிழ்நாடு காவல்துறையை கண்டித்து இன்று 12052017 காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காவல் துறையின் தடையை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் தடையை மீறி மாட்டுக்கறியை சாப்பிட்டார்கள். போராட்டத்தின் போது தோழர் கொளத்தூர் மணி பேச்சு போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. இப்போராட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், அமைப்பாளர் டைகர் பாலன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல், மாவட்ட செயலாளர் சரவணன்,...

களப்பணிகளில் கழகத் தோழர்கள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த கழகத்தின் களப்பணிகள் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் தொகுப்பு. ஈரோட்டில் ‘கனி ராவுத்தர்’ குளம் மீட்பு இயக்கத்தின் தொடர் போராட்டம் ஈரோடு நகருக்கு அருகே உள்ளது கனிராவுத்தர் குளம். 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் அரசு அதிகாரிகளின் துணையோடு பணமுதலை களால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது வெறும்14 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுப் பதற்காக ‘கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம்’ என்ற பெயரால் தமிழத் தேசிய நடுவம் தோழர் நிலவன் ஒருங்கிணைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி போன்றோர் இணைந்து மக்கள் திரள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு என்ற வழிமுறைகளில் போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்தேறிவருகின்றன. 23-4-2017 அன்று ஈரோட்டுக்கு ஒரு நூல் வெளியீட்டுக்காக சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர்...

மாட்டுக்கறி அரசியல் – சேலம் 12052017

அன்பார்ந்த தோழர்களே! 23-4-2017 அன்று கொளத்தூரில் மாட்டுக்கறி அரசியல், மாட்டுக்கறி விருந்து என்றறிவித்தோம்; அனுமதி மறுப்பு என்றது காவல்துறை. 2-5-2017 அன்று ஈரோட்டிலதே நிகழ்வு. நாம் அனுமதி கேட்கவில்லை; பாதுகாப்பு மட்டும் கேட்டோம். ஆனாலும் அனுமதி இல்லை என்றது காவல்துறை; உயர்நீதி மன்றமோ அடுத்த மாதம்தான் விசாரிப்பேன் என்கிறது. 12-5-2017 அன்று சேலத்திலும் அதே நிகழ்வு. பாதுகாப்பு மட்டுமே கேட்டிருந்தோம். அனுமதி இல்லை என்று கூறிவிட்டது காவல்துறை. அரசியல் சட்டத்தின் 48ஆவது பிரிவு நேரடி சட்டம்கூட இல்லை; வெறும் வழிகாட்டும் நெறிமுறை மட்டும்தான். அப்பிரிவு “பால் கொடுக்கும் பசுக்களையும், பாரம் இழுக்கும் எருதுகளையும், இளங்கன்றுகளையும் வெட்டுவதை வேண்டுமானால் – தடை செய்ய விரும்பினால் – மாநில அரசுகள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்றுதான் கூறுகிறது. நாமோ பால் கொடுக்காத, விவசாய வேலைக்குப் பயன்படாத மாட்டின் கறியைத்தான் உண்ணப்போகிறோம் என்பதை தெளிவாக – அடிமடையன் கூட புரிந்துகொள்ளும் வகையில் நமது பாதுகாப்பு கோரும்...

சேலம் மாநகர விசிக கடிகாரம் அன்பளிப்பு 26042017

சேலம் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 56ஆவது கோட்ட செயலாளர் தோழர் எம்.எஸ்.ஏ. ஆர்ட்ஸ் முத்துராசு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் வைப்பதற்காக, கிரானைட் கல்லில் பெரியார்-அம்பேத்கர் ஆகியோரின் உருவப் படங்களுடனும், கடிகாரம் பொறுத்திய முகவரிக்கல்லை 26042017 அன்று காலை கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். கழகத் தோழர் எல்.ஐ.சி. தனசேகரன் உடனிருந்தார்.  

வில் வித்தை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கழக தலைவர் பாராட்டு

சேலம் மாவட்டம் கொளத்தூர் கழக குடும்பத்தை சார்ந்த கொளத்தூர் குமார் – தமிழரசி ஆகியோரது மகன் இனியன், காவலாண்டியூர் விஜயகுமார் – கலைச்செல்வி ஆகியோரது மகன் வளவன், காவை இளவரசன் – மாதவி ஆகியோரது மகன் எழிலரசு ஆகியோர்  23.4.17 ஞாயிறு அன்று நடைபெற்ற Dr.B.R. AMBEDKAR SPORTS FOUNDATION திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடத்திய மாநில அளவிலான வில் வித்தை போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்போண்ட்  பிரிவில் இனியன் தங்க பதக்கம் பெற்றார். 10 வயதிற்கு உட்பட்டோருக்கான கம்போண்ட்  பிரிவில் வளவன் தங்க பதக்கம் பெற்றார். 10 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்தியன்  பிரிவில் எழிலரசு வெள்ளி பதக்கம் பெற்றார். இதற்கான சான்றிதழையும், பதக்கத்தையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி திரு.புண்ணியமூர்த்தி அவர்கள் வழங்கினார். வெற்றிபெற்ற வீரர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டுகளை தெரிவித்து குழந்தைகளுக்கு உற்சாகமூட்டினார்.

இந்து மத வேதங்களே மாட்டிறைச்சியை அனுமதிக்கின்றன

“பசு, கன்று, குதிரை மற்றும் எருமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்” என்றும் (6:17:1) “பெண்ணின் மணவிழாவில் காளை யும், பசுவும் வெட்டப்படுகின்றன” என்றும் குறிப்பிடுகிறது ரிக் வேதம். “மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே பிரம்மனால் படைக்கப் பட்டிருக்கின்றன” என்றும், “மதச் சடங்குகளை முறை யாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ண வில்லை யெனில், இறப்பிற்குப் பின்னர், தனது இருபத்தி ஒன்றா வது மறு பிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்” என்றும் மநுதர்மம் கூறுகிறது. பார்ப்பனர் திருமணங்களில் மாட்டிறைச்சி திருமணத்துக்கு முதல் நாள் “மதுவர்க்கம்” என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின் போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படி கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டு கிறார்கள்? “விவாஹே கௌஹு… க்ருஹே கௌஹு… திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத் தான் வெட்டுகிறார்கள் – தாத்தாச்சாரி (நூல்: இந்துமதம் எங்கே செல்கிறது?) மாட்டுக்கறி சாப்பிடச் சொல்லும்...

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மேட்டூர் 14042017

மேட்டூர் மற்றும் நங்கவள்ளி பகுதிகளில் கழகத்தலைவர் கொளத்தூர்மணி தலைமையில் நடைபெற்ற புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள்… சிறப்பு விருந்தினராக ஜோக்கர் திரைப்பட இயக்குநர் இராஜு முருகன் அவர்கள். மிதிவண்டி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கலைகட்டியது.

தற்காப்புக் கலையில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா காளிப்பட்டி 06042017

சேலம் மாவட்டம் பஞ்சு காளிப்பட்டி, சவுத் இந்தியன் மெட்ரிகுலேசன் பள்ளீயில் தற்காப்புக் கலையில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா பள்ளி தாளாளர் திரு. சவுந்திர ராசன் தலைமையில் 06042016 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு கிக்பாக்சிங் கழகப் பொதுச்செயலாளரும் பயிற்றுநருமான சிவபெருமாள் வரவேர்புரையாற்றினார். அடுத்து தந்தை பெரியார் அவர்களின் படத்தினைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்துவைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர் அப்பள்ளியின் விழா அரங்குக்கு தந்தை பெரியார் விழா அரங்கம் எனப் பெயரிடப்படுவதை உற்சாகக் கைதட்டல்களுக்கு இடையே அறிவித்தார். நிகழ்வில் பள்ளியின் முதல்வர் பிருதிவிராசன், புதுவை சிந்தனையாளர் கழகத் தலைவர் தீனா, சிந்தாமணியூர் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

பெரியாரியல் விளக்கப் பொதுக்கூட்டம் மேச்சேரி 05042017

05042017 அன்று மாலை 6-00 மணியளவில், சேலம் மாவட்டம் மேச்சேரி பேருந்து நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுக்கூட்டம் கிளைக்கழக செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில் தோழர் காவை இளவரசனின் மந்திரமல்லதந்திரமே என்ற செயல்முறை விளக்கா நிகழ்வு நடந்தது. அதனை தொடர்ந்து நங்கவள்ளீ அன்பு, தலைமைக் கழகப் பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் ஆகியோர் உரைகளுக்குப் பின்னர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நங்கவள்ளி கிருட்டிணன்  நன்றி கூறலுடன் நிறைவுபெற்றது.

தோழர் ஃபாரூக் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நங்கவள்ளி 29032017

தோழர் ஃபாரூக் படுகொலையை கண்டித்து சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் கண்டன ஆர்ப்பாட்டம் 29032017 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 50 மேற்பட்ட தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மதவெறிக்கு எதிராய் முழக்கங்களை எழுப்பினர் செய்தி வைரவேல்

தோழர் ஃபாரூக் படுகொலை கணடித்து ஆர்ப்பாட்டம் மேட்டூர் 27032017

திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் கழகத்  தோழர் கோவை பாரூக் படுகொலையைக் கண்டித்தும், வழக்கை சி.பி.சி.ஐ.டி -க்கு மாற்ற வலியுறுத்தியும் கண்டன  ஆர்ப்பாட்டம் மேட்டூர் பேருந்து நிலையம் எதிரில் 27.3.2017 மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் சி.கோவிந்தராசு தலைமை தாங்கினார். தி.வி.க. தோழர்கள் டைகர் பாலன், நங்கவள்ளி அன்பு, K.A. சந்திரசேகரன் திராவிடர் கழகம் மேட்டூர் நகரம், மா.சிவக்குமார் மேட்டூர் சட்ட மன்றத் தொகுதி செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, வீரசிவா மாநில இளைஞரணித் துணை செயலாளர் ஆதிதமிழர் பேரவை, கி.முல்லைவேந்தன் திராவிடர் பண்பாட்டு நடுவம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். படுகொலையை கண்டித்து வழக்கை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்ற வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. கழக தோழர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

தோழர் ஃபாரூக் படுகொலை கண்டன ஆர்ப்பாட்டம் தக்கலை 26032017

26-03-2017 ஞாயிறு மாலை 4.00மணிக்கு 16-03-17 அன்று இசுலாமிய மத வெறியர்களால் கொல்லப்பட்ட தோழர்,பாரூக் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிர்புறம் தோழர் சூசையப்பா தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் தமிழ் மதி,ஜாண் மதி,நீதி அரசர்,மஞ்சு குமார்,இராஜேஸ் குமார்,இரமேஸ் பாபு,சுனில்,இராஜன் ,சாந்தா,சமூக ஆர்வலர் போஸ்,அருள்ராஜ்,பேரின்ப தாஸ்,இளங்கோ,ஆன்றன் தமிழ்செல்வன்,ஆர்மல் வீரவணக்க முழக்கங்கள் எழுப்பியும் இசுலாமிய மத வெறியர்களைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பை பதிவுச் செய்தனர். பின்பு பெரியார் தொழிலாளர் கழக அலுவலகத்தில் வைத்து இரங்கல் உரை தோழர் தமிழ் மதி நிகழ்த்தினார் செய்தி தமிழ்மதி  

தோழர் முனியாண்டி படத்திறப்பு விழாவில் அவரின் இணையர் உருக்கமான பேச்சு

“இனி யார்கிட்ட சண்ட போடப்பேறன்னு தெரியலையே…” “எங்களுக்கு சுயமரியாதை திருமணம்தான் நடந்திச்சி. இதுநாள் வரைக்கும் எங்களுக்குள்ள சண்ட வந்ததே இல்ல. இங்க பேசின எல்லோரும் சொன்னா மதிரி எங்க வீட்டுக்காரருக்கு கோவம் வரவே வராது. நான் வேணும்னே சண்டக்கி போவேன். அப்ப கூட அவரு சிரிச்சிகிட்டே போயிடுவாரு. இனி நான் சண்ட போடறதுக்கூட ஆள் இல்லையே. இங்க எல்லா தோழர்களும் சேர்ந்து கொடுத்த பணத்தை வாங்கியத நினச்சா எனக்கு ஒடம்பே கூசுது. யாரும் தப்பா நினைச்சிக்க வேணாம். எனக்கு சுயமரியாதையையும், தன்னம்பிக்கையும் பெரியார் கத்துக்கொடுத்ததாலதான் அந்த பணம் வாங்குவதற்கு எனக்கு ஒரு மாதிரியா இருக்குது. உடனே என் பையன்கிட்ட அத கொடுத்தா அவனும் பெரியாரையும், அம்பேத்கரையும் படிச்சதால வேணாம்னு சொல்லிட்டான். திலீபன் தோழர் கிட்ட சொல்லி இந்த பணத்தை இயக்க செலவுக்கு வெச்சிக்கோங்கனு சொன்னேன். அவரும் வாங்காததால எனக்கு இதுவரைக்கும் ஒரு மாதிரியா இருக்குது. என்னுடைய கணவர் இறந்த பிறகு ஊர் ஆளுங்ககிட்ட...

ஜேஎன்யூ மாணவர் முத்துகிருட்டிணன் இறுதி நிகழ்வு சேலம் 16032017

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்ட செய்லாளர் டேவிட் உள்ளிட்ட தோழர்கள், நேற்று மாலை 6-30 மணிக்குடெல்லி ஜவகர்லால் நேரு பலகலைக் கழகத்தில் தற்கொலை செய்ததாகக் கூறப்பட்ட ஆய்வு மாணவர் முத்துகிருட்டிணனின் இல்லம் சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினர். மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி திபேன் அவர்களும் அவரது குழுவினருடன் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஆய்வு மாணவர்  சேலம் முத்துகிருட்டிணனன் உடல் இன்று ( 16-3-2017 )  காலை 6-00 மணியளவில் சேலம், அரிசிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாவட செய்லாளர் டேவிட், மாநகரத் தலைவர் பாலு, செயலாளர் பரமேசு, மூணாங்கரடு சரவணன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் திருச்செங்கோடு வைரவேல், ஆத்தூர் மகேந்திரன் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் காலை 8-00 மணிக்கே மாணவர் முத்துகிருட்டிணன் இல்லம் வந்துவிட்டனர்....

அரியலூர் சிறுமி நந்தினியின் படுகொலையை கண்டித்து நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நங்கவள்ளி 19022017

அரியலூர் மாவட்டத்தை சார்ந்த தலித் சிறுமி நந்தினியின் படுகொலையை கண்டித்து நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…   ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள்: சிறுமி நந்தினியின் கொலையை CBIக்கு மாற்று… இந்து முன்னணி அரியலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜாதி வெறியன் ராஜசேகரை கைது செய்… ராஜசேகர் மற்றும் அவனின் கூட்டாளிகளின் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்து… தலித் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்து…

கோவிந்தராசு-கீதா இணையர் மேட்டூரில் கட்டியுள்ள புதிய இல்லம் திறப்பு விழா மேட்டூர் 12022017

12-2-2017 அன்று சேலம் மேற்கு மாவட்டச் செய்லாளர் தோழர் ஸி.கோவிந்தராசு-கீதா இணையர் மேட்டூரில் கட்டியுள்ள புதிய இல்லத்தை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்துவைத்தார். நிகழ்வின் தொடக்கத்தில் இல்லத்தின் உரிமையாளர் கோவிந்தராசு, அவரது மகள் அருள்மொழி உள்ளிட்டோரின் பறையிசையோடு நிகழ்வு தொடங்கியது. அடுத்து கொள்கைப் பாடல்கள் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவினரால் பாடப்பட்டன. இந்நிகழ்விலும் தோழர் கோவிந்தராசுவும் அவரது மகள் அருள்மொழியும் கழகப் பாடல்கள் பாடப்பட்டன. அந்நிகழ்வில் இல்ல உரிமையாளர் கீதாவி அக்கா கணவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசு, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டு செயலாளர் கோபி இளங்கோவன், அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்களும் கலந்துகொண்டனர்

ஜாதி மறுப்பு இணையர்களுக்கான பாராட்டு விழா மேட்டூர் 12022017

ஜாதி ஒழிய சமத்துவம் படைக்க புதிய உலகை உருவாக்க ஆதலால் காதல் செய்வீர்…. ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்போம் சமத்துவ சமூகம் படைப்போம்….. காலை 10 – 12 கருத்தரங்கம் நண்பகல் 12 – 1 இணையர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பிற்பகல் 2 – 3 கலை நிகழ்ச்சிகள் மாலை 3 – 4 இணையர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்துதல் மாலை 4 முதல் பாராட்டு விழா வாய்ப்புள்ள தோழர்கள் முன்பதிவு செய்து தவறாமல் கலந்து கொள்ளவும் 9965025847 8056460580 செய்தி இரண்யா

கொளத்தூரில் பெரியார் படிப்பகம் திறப்பு

கொளத்தூரில் பெரியார் படிப்பகம் திறப்பு

மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பெரியார் படிப்பகத் திறப்பு நிகழ்வு ஜன.28 மாலை 5 மணி யளவில் சிறப்புடன் நடைபெற்றது. பறை முழக்கத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின படிப்பகத்தை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு  பெற்ற மறைந்த டாக்டர் மே.பொ. ஆறுமுகம், படிப்பகத்துக்காக 5 சென்ட் நிலத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் பெயருக்கு பெரும் கொடை உள்ளத்தோடு வழங்கினார். ஏற்கெனவே சிறிய அளவில் இயங்கி வந்த இந்த படிப்பகம், இப்போது புதிய பொலிவுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நிலம் வழங்கிய மருத்துவர் மே.பொ. ஆறுமுகம் அவர்களின் மகனும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வருமான மருத்துவர் ஆ. துரைசாமி பங்கேற்றார். படிப்பகத்தைத் திறந்து வைத்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “பெரும் கொடை உள்ளத்தோடு மறைந்த மருத்துவர்...

நங்கவள்ளியில் தமிழ்ப்புத்தாண்டு பொதுக்கூட்டம் ! 29012017

நங்கவள்ளியில் தமிழ்ப்புத்தாண்டு பொதுக்கூட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்……. நாள் : 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை.மாலை 6.00 மணி. இடம் : பேருந்து நிலையம் அருகில்,நங்கவள்ளி. சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் சிவகாமி, அமைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். விரட்டு கலை பண்பாட்டு மையம் வழங்கும் பறையாட்ட்ம்,கரகாட்டம்,ஒயிலாட்டம்,நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கொளத்தூரில் முப்பெரும் விழா !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் 138 வது பிறந்த நாள் விழா ! பெரியார் படிப்பகம் திறப்பு ! தமிழர் திருநாள் ! நாள் : 28.01.2017 சனிக்கிழமை. இடம் : பேருந்து நிலையம்,கொளத்தூர். படிப்பகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுபவர் : தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். விரட்டு கலை பண்பாட்டு மையம் வழங்கும் பறையாட்ட்ம்,கரகாட்டம்,ஒயிலாட்டம்,நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சேலம் மாநாட்டு களத்திலிருந்து…

திராவிடர் விடுதலைக் கழகம் இதுவரை நடத்திய மாநாடுகளி லிருந்து தனித்துவம் பெற்ற மாநாடாக வேதமரபு மறுப்பு மாநாடு இருந்தது. மாநாட்டு அரங்குகளில் வேத மரபை மறுத்த கபிலர், திருமூலர், வள்ளார் கருத்துகளும், நூற்றாண்டு காணும் எழுத்தாளர் விந்தன் எழுதிய ‘பெரியார் அறிவுச்சுவடி’யில் இடம் பெற்ற வாசகங்களும் பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன. இவர் களுடன் பெரியார், அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் கருத்துகளும் வைக்கப்பட்டிருந்தன. காலை அமர்வு நடந்த அரங்கிற்கு கபிலர், திருமூலர் அரங்கு என்றும், மாலை நடந்த திறந்தவெளி மாநாட்டு அரங்கிற்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அரங்கு என்றும் பெயர் சூட்டப்பட் டிருந்தது. இறை நம்பிக்கைக் கொண்ட வேத மரபுகளை எதிர்த்த பார்ப்பன எதிர்ப்பாளர்களின் பெயர்களும் படங்களும் கடவுள் மறுப்பு தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெரியார் இயக்கத்தின் மாநாட்டு மேடைகளுக்கு சூட்டப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் கடவுள் மறுப்பு தத்துவத்தின் நோக்கம், ஒடுக்கப் பட்ட மக்கள் மீதான இழிவு ஒழிப்பு மற்றும் சமூக உரிமை...

இறை நம்பிக்கையாளர்களையும் இன உணர்வாளர்களையும் இணைத்தது – சேலம் மாநாடு

வேத மரபுக்கு எதிராகப் போர்க்குரல்! இந்து மதத்துக்கு தாங்களே உரிமைக் குரியவர்கள் போல் வெகுமக்களை ஏமாற்றி வந்த பார்ப்பனிய மிரட்டலுக்கு பதிலடி தந்துள்ளது சேலம் மாநாடு. வேத மரபினை மறுப்போம், வெகு மக்கள் உரிமைகளை மீட்போம் என்கிற பார்ப்பன இந்துத்துவ எதிர்ப்பு இலட்சிய முழக்கத்தை முன் வைத்து சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் வேத மரபு மறுப்பு மாநாடு டிசம்பர் 24, 2016 அன்று சேலம் போஸ் மைதானம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் இசை நிகழ்ச்சி, கருத்தரங்கம், வீதிநாடகம், கழகத் தலைவருக்கு பிரச்சார ஊர்தி வழங்குதல், புரட்சி பெரியார் முழக்க சந்தா வழங்குதல் கழக கட்டமைப்பு நிதி மற்றும் பொது மாநாடு எழுச்சியுடன் நடைப்பெற்றது. முன்னதாக தந்தை பெரியாரின் 40ஆவது நினைவு நாளை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர்...

”வேத மரபு மறுப்பு மாநாடு” சேலம் 24122016

திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில்… ”வேத மரபு மறுப்பு மாநாடு” கருத்தரங்கம் – பேரணி – பொதுமாநாடு. நாள் : 24.12.2016 சனிக்கிழமை, இடம் : நேரு கலையரங்கம்,போஸ் மைதானம்,சேலம். ✪ கழகத்தலைவருக்கு ஊர்தி வழங்குதல், ✪ கட்டமைப்பு நிதி வழங்குதல், ✪ புரட்சிப்பெரியார் முழக்கம் சந்தா ஒப்படைத்தல். ✪ ”நிமிர்” – கழக மாத இதழ் வெளியீடு

மேட்டூரில் ஜாதி ஒழிப்பு தெருமுனைக் கூட்டம்

மேட்டூரில் ஜாதி ஒழிப்பு தெருமுனைக் கூட்டம்

நவம்பர் 26 ஜாதி ஒழிப்பு வீரர்களின் நாளில் மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில் தெருமுனைக் கூட்டம் மேட்டூர் ஒர்க்சாப் கார்னர், பேருந்து நிலையம், நான்கு ரோடு, சின்னபார்க் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவின் ஜாதி ஒழிப்பு பாடல்கள் பாடப்பட்டன. தோழர்கள் சி. கோவிந்தராசு-சேலம் மேற்கு மாவட்ட செயலாளர், சுந்தர், குமரேசன் ஆகியோர் உரையாற்றினர். தோழர்கள் குமரப்பா, முத்துக்குமார், கிட்டு, அம்ஜத்கான், சீனிவாசன், முத்துராஜ், சுசீந்திரகுமார், ஆனந்த், அண்ணாதுரை, பழனி ஆகியோர் கலந்துகொண்டனர். பொது மக்களுக்கு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. பெரியார் முழக்கம் 08122016 இதழ்

காவல்துறை தடைகளைத் தகர்த்து புலியூரில் ‘மாவீரர் நாள்’

தமிழீழ விடுதலைக்காக ஆயுதப் போராட்டங் களில் வீரச்சாவை தழுவிய வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் நவம்பர் 27 அன்று புலம்பெயர்ந்த நாடுகளில் உணர்வுபூர்வமாக 1989ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்து வருகிறது. 1990ஆம் ஆண்டிலிருந்து மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் புலியூர் பிரிவிலும் ‘மாவீரர் நாள்’ நிகழ்வு நடந்து வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக புலிகள் 1984லிருந்து 1986 முடிய ஆயுதப் பயிற்சி எடுத்த பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு சொந்தமான இடத்தில் மூன்று ஆண்டுகள் நடந்த இந்த பயிற்சியில்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பயிற்சி பெற்றார்கள். மேதகு பிரபாகரன், இந்த பயிற்சித் தளத்துக்கு அவ்வப்போது வந்து அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார். விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதி பொன்னம்மான், போராளிகளுக்கு பயிற்சிகளை அளித்தார். களத்தில் வீரமரணமடைந்த அவரது நினைவாக அப்பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நினைவு நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. புலிகள் பயிற்சி எடுத்த பகுதிக்கு ‘புலியூர்’...

டிச.24-சேலத்தில் ‘வேத மரபு மறுப்பு மாநாடு’ தோழர்களே தயாராவீர்!

டிசம்பர் 24இல் பெரியார் நினைவு நாளில், சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒரு நாள் மாநாடு. “சித்தர்கள்-வள்ளலார்-பெரியார்-அடிச்சுவட்டில்… ‘வேத மரபு’ மறுப்பு மாநாடு காலை முதல் இரவு வரை கருத்தரங்குகள் – பேரணி – பொதுக் கூட்டம் – கலை நிகழ்ச்சிகள். கழகத்தின் வளர்ச்சிக்கான கட்டமைப்பு நிதி – முதல் தவணை யாக கழகத் தலைவரிடம்  வழங்கப்படுகிறது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு முதல் தவணையாக 5000 சந்தாக்கள் வழங்கப்படு கிறது. கழகத்தின் புதிய ‘மாத இதழ்’ வெளி வருகிறது. தமிழகத்தின் சிந்தனையாளர் கள் – பேச்சாளர்கள் – தலைவர் கள் பங்கேற்கிறார்கள். வேத மதமான பார்ப்பன மதத்தை பார்ப்பனர்கள் – பார்ப் பனரல்லாத மக்கள் மீது திணித்தார்கள். ‘இந்துக்கள்’ என்று பெயர் சூட்ட வைத் தார்கள். வேத மதத்துக்குள் வெகு மக்களை இழுத்துக் கொண் டவர்கள் அந்த மக்களின் சுய மரியாதையை மறுத்தார்கள். ஜாதிகளைத் திணித்து ஒடுக்கு முறை கட்டமைப்பை...

மேட்டூரில் ஒரு நாள் பயிலரங்கம்

20-10-2016 அன்று காலை 11-00 மணியளவில்  மேட்டூர் பாப்பாயம்மாள் திருமண மண்டபத்தில், சேலம் மேற்கு மாவட்ட கழக சார்பில் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. முற்பகல் அமர்வில் புலவர் செந்தலை கவுதமன்  ”திராவிடர் இயக்க வரலாறு” என்ற தலைப்பில் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் கருத்துரையாற்றினார். அதன் பின்னர் தோழர்கள் எழுப்பிய அய்யங்களுக்கு விளக்கம் அளித்தார். மதியம் 2-00 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மதிய உணவுக்குப் பின்னர் பிற்பகல் 3-00 மாணிக்கு தலைவர் கொளத்தூர் மணி “புதியக் கல்விக் கொள்கையும் பழைய குலக் கல்வித் திட்டமும் “ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். அய்யங் களைதலுக்குப் பின்னர் மாலை 5-30 மணியளவில் பயிலரங்கம் நிறைவுற்றது. பயிலரங்க ஏற்பாடுகளை மேட்டூர் நகரக் கழக செயலாளர் சுரேஷ்குமார், குமரேசன் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர். வகுப்பின் துவக்கத்தில், திராவிடர் இயக்கத்தின் அடிவேரான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் அமைப்பின் தொடக்க நாளான 20-11-1916இன் நூற்றாண்டு நிறைவு...

“பெரியாரியல் பயிலரங்கம்.” – மேட்டூர் 20102016

முற்பகல் அமர்வில் புலவர் செந்தலை ந.கவுதமன் வகுப்பின் துவக்கத்தில் , திராவிடர் இயக்கத்தின் அடிவேரான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் அமைப்பின் தொடக்க நாளான 20-11-1916இன் நூற்றாண்டு நிறைவு நாளான அதே 20-11-2016இல் இப்பயிலரங்கம் நடைபெறுவது தனி சிறப்புக்குரியது என்பதை பெருமகிழ்வுடன் குறிப்பிட்டு வகுப்பினைத் தொடங்கினார். ”திராவிடர் இயக்க வரலாறு” என்ற தலைப்பில் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் கருத்துரையாற்றினார். அதன் பின்னர் தோழர்கள் எழுப்பிய அய்யங்களுக்கு விளக்கம் அளித்தார். மதியம் 2-00 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டிருந்தது. மதிய உணவுக்குப் பின்னர் பிற்பகல் 3-00 மாணிக்கு தலைவர் கொளத்தூர் மணி “புதியக் கல்விக் கொள்கையும் பழைய குலக் கல்வித் திட்டமும் “ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். அய்யங்களைதலுக்குப் பின்னர் மாலை 5-30 மணியளவில் பயிலரங்கம் நிறைவுற்றது. பயிலரங்க ஏற்பாடுகளை மேட்டூர் நகரக் கழக செயலாளர் சுரேஷ்குமார், குமரேசன் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.

களை கட்டும் கழக கட்டமைப்பு நிதி திரட்டல் காவலாண்டியூர் 10112016

திராவிடர் விடுதலைக் கழக கட்டமைப்பு நிதி திரட்டல் கிளை : காவலாண்டியூர்  தி.வி.க ஆதரவாளர்கள் 1. திரு.ராமு போர்வெல் காண்ட்ரக்டர் கண்ணாமூச்சி ரூபாய் பத்தாயிரம் 10000/= 2. திரு.ராஜா தி.மு.க. (ஜல்லிமேடு) கண்ணாமூச்சி ரூபாய் பத்தாயிரம் 10000 | = 3.வளர்மதி விஸ்வநாதன் கண்ணாமூச்சி ரூபாய் ஐந்தாயிரம் 5000/= 4. திரு.சத்தியானந்தம் நெடுஞ்செழியன் நகர் செட்டியார் ரூபாய் ஐந்தாயிரம் 5000/= 5. திரு.இராஜா நஞ்சுண்டபுரம்.காவலாண்டியூர் ரூபாய் ஐந்தாயிரம் 5000/= 6. திரு. கார்த்திக் நஞ்சுண்டபுரம் காவலாண்டியூர் ரூ. ஐந்தாயிரம் 5000/= 7. திரு.சேகர் நஞ்சுண்டபுரம் காவலாண்டியூர் ரூ. ஐந்தாயிரம் 5000/= 8. திரு.கண்ணன் பழ வியாபாரி காவலான்டியூர் ரூ ஐந்தாயிரம் 5000 | = தோழர்கள்… 1. க ஈசுவரன ஒ். செயலாளர் தி.வி.க.காவலாண்டியூர் ரூ பத்தாயிரம் 10000/= 2. இரா.விசயக்குமார் கபிலன் ஸ்டுடியோ காலாண்டியூர் ரூ பத்தாயிரம் 10000/= 3. காவை . இளவரசன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர் காவலாண்டியூர் ரூ. பத்தாயிரம்...

மனித உரிமைக்கான அம்னஸ்டி இன்டர்நேசனல் விருது பெற்ற ஹென்றி டி பேன் அவர்களுக்கு பாராட்டு விழா !

மனித உரிமைக்கான அம்னஸ்டி இன்டர்நேசனல் விருது பெற்ற ஹென்றி டி பேன் அவர்களுக்கு பாராட்டு விழா ! கழக தலைவர் அவர்கள் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்குகிறார். பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பாராட்டி பேசுகிறார்கள். மனித உரிமை காப்பாளர்கள் மற்றும் இந்திய தொழிலாளர் பேரவை சார்பில் இந்த பாராட்டு விழா நடைபெறுகிறது நாள் : 02.10.2016. நேரம் : மதியம் 2.30 மணி. இடம்: திருமண மண்டபம், திருவாக்கவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானா, சேலம் – 5