‘தேச துரோகச் சட்டம்’ நீடிக்கக் கூடாது
டி பத்திரிகையாளர்கள் மீது தேச துரோகச் சட்டத்தை ஏவுகிறது பா.ஜ.க. ஆட்சி. டி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம் இப்போது அந்த நாட்டிலேயே நீக்கப்பட்டு விட்டது. டி அரசியலமைப்பு சபையில் கடும் எதிர்ப்பால் புறக்கணிக்கப்பட்ட இந்த சட்டப் பிரிவு, பிறகு தண்டனைச் சட்டத்தில் திடீரென்று நுழைந்தது. விவசாயிகள் பேரணி குறித்தும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது, வழக்கு போடப்பட் டுள்ளது. ‘இந்தியா டுடே’ வின் ராஜ்தீப் சர்தேசாய், ‘நேஷனல் ஹெரால்டு’ இதழின் மூத்த ஆசிரியர் மிருணாள் பாண்டே, ‘குவாமி ஆவாஸ்’ ஆசிரியர் ஜாஃபர் ஆகா, ‘கேரவன்’ இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் பரேஷ் நாத், அதே இதழின் ஆனந்த் நாத், வினோத் கே.ஜோஸ் ஆகியோர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. தேச துரோகம், வகுப்புவாத அமைதி யின்மையைத் தூண்டுதல், மத நம்பிக்கைகளை அவமதித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஒரே நேரத்தில் அய்ந்து...