Author: admin

கோபி நகர தோழர் நாகப்பன் படத்திறப்பு 30012017

கோபி நகர தோழர் நாகப்பன் படத்திறப்பு 30012017

கடந்த 12.01.2017 அன்று மறைந்த கோபி நகர கழகத்தலைவர் தோழர் நாகப்பன் அவர்களின் படத்திறப்பு 30.01.2017 அன்று கொளப்பலூரில் நடைபெற்றது படத்திறப்பு நிகழ்விற்கு மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் இராம இளங்கோவன் அவர்கள் தலைமை தாங்கினார் மாநில அமைப்பு செயலாளர் தோழர் இரத்தினசாமி, மாநில பொருளாளர் தோழர் துரைசாமி ஆகியோர் தோழர் நாகப்பன் அவர்களின் படத்தை திறந்து வைத்தனர் படத்திறப்பு நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் தோழர் சிவகாமி தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் குணசேகரன் திராவிடர் கழக தோழர் யோகானந்தம் மணிமொழி மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர். செய்தி ம. நிவாசு

கொளப்பலூர் கழகத்தின் சார்பாக தமிழர் திருவிழா 30012017

கொளப்பலூர் கழகத்தின் சார்பாக தமிழர் திருவிழா 30012017

ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி கொளப்பலூர் கிளை கழகத்தின் சார்பாக கடந்த 30.01.2017 அன்று தமிழர் திருவிழா நடைபெற்றது இந்நிகழ்விற்கு கொளப்பலூர் கிளை கழக தலைவர் தோழர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் அவரின் தலைமை உரையின் போது சாலைகளில் தேங்காய் பூசணிக்காய் உடைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அதனை உடைப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி உரையாற்றினார் தொடர்ந்து திருச்சி விரட்டு கலை பண்பாட்டு மையத்தின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது கலைக்கழு சார்பாக மயிலாட்டம்,ஒயிலாட்டம்,பறையாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒன்னுமில்லை எனும் பகுத்தறிவு நாடகம் நடைபெற்றது. மக்கள் இன்றைய காலகட்டத்தில் ஒன்னுமில்லா விசயங்களுக்காக எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று நாடகத்தின் மூலம் விளக்கினார்கள் கலை நிகழ்ச்சியில் மாநில வெளியீட்டு செயலாளர் தோழர் இராம இளங்கோவன் அவர்கள் உரை நிகழ்த்தினார் அவர் உரையாற்றும் போது உயிரின தோற்றம் குறித்தும் அறிவியல் வளர்ச்சி குறித்தும் விளக்கமாக உரையாற்றினார் தொடர்ந்து இரவு 10.30 மணி வரை...

நந்தினிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட அரியலூர் மாவட்டம் செந்துரை அருகில் சிறுகடம்பூர் தலித் சிறுமி நந்தினி படுகொலையை கண்டித்தும் 1.நந்தினியின் கூட்டுபாலியல் வன்கொலையின் முக்கிய குற்றவாளி இந்து முன்னனி மாவாட்ட தலைவர் ராஜசேகரனை உடனே கைது செய். 2. தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதி மத கலவரங்களை தூண்டிவரும் இந்துமுன்னனி அமைப்பை தடைசெய். 3.நந்தினி குடும்பத்திற்கு ஒருகோடி நிதியும் அரசு வேலையும் உடனே வழங்கு. 4.சாதி மத அமைப்புக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எதிராகவும் சாதிய உணர்வோடு செயல்படும் காவல்துறை ஆய்வாளர் மற்றும் Dsp மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து உடனே கைது செய். 5. வழக்கினை CBI விசாரனைக்கு உத்திரவிடு. 6. நந்தினி குடும்பத்திற்க்கு உரிய பாதுகாப்பு வழங்கிடு. 7. மாவட்டதோறும் இயங்கும் தீண்டாமை ஒழிப்பு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடு. 8. SC ST வழக்குகளை விசாரிக்க தனி நீதீமன்றம்...

ஜாதி மறுப்பு இணையர்களுக்கான பாராட்டு விழா திருப்பூர் 12022017

ஜாதி ஒழிய சமத்துவம் படைக்க புதிய உலகை உருவாக்க ஆதலால் காதல் செய்வீர்…. ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்போம் சமத்துவ சமூகம் படைப்போம்….. தோழர்கள் முன்பதிவு செய்து தவறாமல் கலந்து கொள்ளவும்

நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 23.01.2017 அன்று மாலை 3 மணியளவில் குடியாத்தம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உண்மையான கொலைக் குற்றவாளிகளை  உடனே கைது செய் ! தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய் ! குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் நடவடிக்கை எடு ! – என காவல் துறையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி  பங்கேற்று கண்டன உரையாற்றினார். அரியலூர் மாவட்டம் செந்துரை வட்டம் சிறுகாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் நந்தினி (16) கடந்த டிச.29 அன்று இந்து முன்னணியைச் சேர்ந்த கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் ஈடுபட் டுள்ள இந்து முன்னணியைச் சேர்ந்த உண்மையான கொலைக் குற்றவாளிகளை உடனே கைது செய்யவும்,குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த...

விழுப்புரம் மாவட்டத்தில் 30 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் 30 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் வனத் தாம்பாளையம் கிராமத்தில் இளையரசன் இல்லத்தில் நடைபெற்றது. ஜனவரி 8 மாலை 3 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் சிவராந்தகம், பள்ளி மேளயனூர், மருதூர் வனத்தாம் பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து முப்பது தோழர்கள், இளையரசன் தலைமையில் கழகத்தில் இணைந்தனர். பின் புதிய தோழர்களிடம் கழகச் செயல்பாடுகள் குறித்து விழுப்புரம் அய்யனார் உரை யாற்றினார். இந்நிகழ்வில் புதுச்சேரி தீனா, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் க. இராமன்,  கி. சாமிதுரை, மா. குமார், சென்னை ஜான் மண்டேலா ஆகியோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 02022017 இதழ்

திருப்பூருக்கு புதிய பொறுப்பாளர்கள்

திருப்பூருக்கு புதிய பொறுப்பாளர்கள்

முகில் ராசு – மாவட்டத் தலைவர். நீதிராசன் – மாவட்டச் செயலாளர். அகிலன், சங்கீதா- மாவட்ட அமைப் பாளர்கள் . தனபால் – மாநகரத் தலைவர் மாதவன் – மாநகரச் செயலாளர். முத்து, யமுனா – மாநகர அமைப் பாளர்கள். கருணாநிதி – வடக்குப் பகுதி அமைப் பாளர். ராமசாமி – தெற்கு பகுதி அமைப்பாளர் . 11.12.2016 அன்று கழக கட்டமைப்பு நிதி வழங்கும் நிகழ்வில் கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 02022017 இதழ்

‘பெரியார் பேரொளி’ சதாசிவம் நினைவு நாள்

‘பெரியார் பேரொளி’ சதாசிவம் நினைவு நாள்

‘பெரியார் பேரொளி’ பட்டுக் கோட்டை வளவன் (எ) சதாசிவம் முதலா மாண்டு நினைவு நாளான 19.1.2017 அன்று மேட்டூர் அணை தந்தை பெரியார் படிப்பகத்தில் அவரின் உருவப் படத்திற்கு கழகத் தலைவர்  கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி. கோவிந்தராசு, நகர செயலாளர் அ. சுரேசுகுமார், மாவட்ட அமைப்பாளர் அ. அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு. குமரப்பா, மாவட்ட பொருளாளர் சு. சம்பத் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 02022017 இதழ்

பெரியார் தொண்டர் கோபி நாகப்பன் மறைவு

பெரியார் தொண்டர் கோபி நாகப்பன் மறைவு

ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரும், நமது கழகத் தோழர் மணிமொழி தந்தையும், நம் கழகத் தோழர் நிவாஸ்  மாமனாருமான தோழர் நாகப்பன் கடந்த 12.01.2017 அன்று உடல்நலக் குறைவுக் காரணமாக இயற்கை எய்தினார்.  அவரின் இறுதி நிகழ்வு உறவினர்களின் பெரும் ஒத்துழைப்போடு எந்தவிதமான சடங்குகள் இல்லாமல் கழக மகளிர் முன்நின்று உடல் அடக்கம் நிகழ்வினை செய்தனர். வீட்டில் இருந்து உடல் அடக்கம் செய்யும் சுடுகாடு வரைக்கும் பெண்களே சுமந்து சென்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கத்திற்கு பின் கருப்பு, கருமாதி உள்ளிட்ட எந்த நிகழ்வும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது.  தோழரின் இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இரங்கல் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாநில அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி, தபெதிக ஈரோடு மாவட்ட தலைவர் குணசேகரன்,...

பீட்டா அமைப்பு என்ன செய்கிறது? அதிர்ச்சித் தகவல்கள்

பீட்டா அமைப்பு என்ன செய்கிறது? அதிர்ச்சித் தகவல்கள்

சர்வதேச அளவில் விலங்குகளின் உரிமைக்காகப் போராடும் ஒரு நிறுவனமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ‘பீட்டா’ நிறுவனம், 1980ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள வர்ஜினியாவில் தொடங்கப்பட்டது. செல்லப் பிராணி வளர்ப்போர், அவற்றின் மீது செலுத்தும் அன்பு மட்டுமே இந்த நிறுவனத்தின் மிகப் பெரிய மூலதனம். அந்த மூலதனத்தை, முதலீடாக மாற்றியதால் கடந்த 35 ஆண்டுகளில் 30 இலட்சம் பேர் பீட்டாவில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இலாப நோக்கு இல்லாத நிறுவனமாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் இந்த ‘பீட்டா’ ஆண்டொன்றுக்கு சுமார் 43 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டி வருகிறது. அதாவது கிட்டத்தட்ட இந்தியப் பணம் 300 கோடி ரூபாய். அமெரிக்காவில்தான் உலகிலேயே அதிகமாக செல்லப் பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. அங்கு அனாதையாக மீட்கப்படும்  செல்லப் பிராணிகளை, உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் மீட்டுச் செல்ல  வில்லையென்றால், அதனைக் கருணை கொலை செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்படி கருணைக் கொலை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான நாய்கள், பூனைகளை...

தமிழ்ப் புத்தாண்டா? சமஸ்கிருதப் புத்தாண்டா?

தமிழ்ப் புத்தாண்டா? சமஸ்கிருதப் புத்தாண்டா?

தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு. திருவள்ளுவர் ஆண்டுதான் தமிழருக்கான ஆண்டு கணக்கு. இதற்கு மாறாக சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று பார்ப்பனர்கள் தமிழர்கள் மீது திணித்தனர். அந்த தமிழ்ப் புத்தாண்டுகளுக்கு 60ஆம் ஆண்டு கணக்குகள் மட்டுமே உண்டு. அதில் ஒன்றுகூட தமிழ்ப்  பெயரே இல்லை. அத்தனையும் வடமொழிப் பெயர்கள். 60 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் முதலாம் ஆண்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். 60 வயதுக்கு மேல் வாழ்வோரை இந்த வடமொழிப் பெயரை வைத்து வயதைக் கணக்கிட முடியாது. ‘சஷ்டியப்தப்பூர்த்தி’ என்று 60 ஆண்டை பார்ப்பனர்கள் விழாவாகக் கொண்டாடுவதன் நோக்கம் 60க்கு மேல் ஆண்டுகளுக்கு பெயர் கிடையாது என்பதால்தான், சித்திரையில் தொடங்கும் “தமிழ்ப் புத்தாண்டு” என்று பார்ப்பனர்கள் கூறும் 60 ஆண்டுகளின் பெயர்களைப் பாருங்கள்! பிரபவ விபவ சுக்ல பிரமோதூத பிரசோற்பத்தி ஆங்கீரச ஸ்ரீமுக பவ யுவ தாது ஈஸ்வர வெகுதானிய பிரமாதி விக்கிரம விஷு சித்திரபானு...

கொளத்தூரில் பெரியார் படிப்பகம் திறப்பு

கொளத்தூரில் பெரியார் படிப்பகம் திறப்பு

மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் பெரியார் படிப்பகத் திறப்பு நிகழ்வு ஜன.28 மாலை 5 மணி யளவில் சிறப்புடன் நடைபெற்றது. பறை முழக்கத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின படிப்பகத்தை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு  பெற்ற மறைந்த டாக்டர் மே.பொ. ஆறுமுகம், படிப்பகத்துக்காக 5 சென்ட் நிலத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் பெயருக்கு பெரும் கொடை உள்ளத்தோடு வழங்கினார். ஏற்கெனவே சிறிய அளவில் இயங்கி வந்த இந்த படிப்பகம், இப்போது புதிய பொலிவுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நிலம் வழங்கிய மருத்துவர் மே.பொ. ஆறுமுகம் அவர்களின் மகனும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வருமான மருத்துவர் ஆ. துரைசாமி பங்கேற்றார். படிப்பகத்தைத் திறந்து வைத்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “பெரும் கொடை உள்ளத்தோடு மறைந்த மருத்துவர்...

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர் தமிழ்ப் புத்தாண்டு-கலை விழாக்கள்

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர் தமிழ்ப் புத்தாண்டு-கலை விழாக்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு விழாக்கள் கலை விழாவாக நடத்தப்பட்டன. சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் அனைத்துக் கட்சியினரையும் இணைத்து தமிழர் திருநாள் விழாவை கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 17ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா ஜன.12ஆம் தேதி இராயப்பேட்டை வி.எம். சாலையில் எழுச்சியுடன் கலை விழா இசை நிகழ்ச்சிகளோடு நடை பெற்றது. புதுச்சேரி ‘அதிர்வு’ கலைக் குழுவினரின் பறை, கிராமிய நடனம், பாடல் நிகழ்ச்சிகள், பகுதி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாறுவேடப் போட்டிகள் நடைபெற்றன. தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தொடர்ந்து ‘அருண் ரிதம்ஸ்’ குழுவினரின் கானா, நாட்டுப்புற, வெள்ளித் திரைப்பாடல்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்தாழ மிக்க பழைய திரைப்படப் பாடல்களையும் கானா பாடல்களையும்...

Preface

Preface

Revolt was the Self-respect Movement’s first English weekly. In 1925 only 7% of the population in Tamil Nadu was literate. Yet, Periyar dared to start the Tamil weekly Kudi Arasu that year. In 1928, the year that saw Revolt being published, very few Tamilians knew to read or write English. It is surely a historical feat that Revolt continued to be published until 1930. Periyar’s deep and abiding interest and commitment to destroying caste, women’s rights, his opposition to obscurantist faith and belief, to Brahmins, and his endorsement of proportional representation led him to risk such ventures such as these....

ககாபுதூர் சாதீய வன்முறை – உண்மையும் தீர்வும் கோவை 31012017

கா.க.புதூர் சாதீய வன்முறை மற்றும் பரவலாக நடைபெறும் ஆதிக்க சாதி இந்துத்துவ கூட்டு வன்முறையைக் கண்டித்து கோவை, பொள்ளாச்சி நகரங்களில் அனைத்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்! கடந்த சனவரி 8ஆம் தேதி கா.க.புதூரில் தோழர் கா.சு. நாகராசன் இல்லத்தில் ஆதிக்க சாதியினரும் இந்து முண்ணனி மதவெறிக் கும்பலும் சேர்ந்து நடத்திய வன்முறை தாக்குதல் பற்றிய உண்மையும்,தீர்வும் என்ற தலைப்பில் 31.01.2017 செவ்வாய் மாலை 05 மணிக்கு கோவை ஆதித்தமிழன் அரங்கில் அனைத்து இயக்கங்களின் கலைந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் “கொளத்தூர்” மணி அவர்கள், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ” ஆதித்தமிழர்” பேரவை நிறுவனர் இரா.அதியமான் முன்னிலை வகித்தார். திவிக தோழர் பொள்ளாச்சி வெ.வெள்ளிங்கிரி கா.க.புதூர் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அதிக்க சாதி இந்து முண்ணனி கூட்டணி குறித்தும் வரவேற்புரையில் தெளிவுபடுத்தினார்.தொடர்ந்து தோழர் கா.சு.நாகராசன் 8 ஆம் தேதி வன்முறை மற்றும் அதன் பின்னணி குறித்து அறிமுக உரையாற்றினார்....

நன்கொடை

நன்கொடை

சேலம் மாவட்டம் கொளத்தூர் நகரக் கழகத் தலைவர் மாது மகன் பிரபாகரன் – சங்கீதா இணையரின் மகன் ச.பி. அகிலனின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக ஏட்டிற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். பெரியார் முழக்கம் 30082012 இதழ்

மயிலாடுதுறை மகேஷ் – இளவரசி சாதி மறுப்பு மணவிழா

மயிலாடுதுறை மகேஷ் – இளவரசி சாதி மறுப்பு மணவிழா

நாகை மாவட்டக் கழகச் செயலாளர் தெ.மகேஷ் – செ. இளவரசி ஜாதி மறுப்பு மணவிழா 19.8.2012 ஞாயிறு காலை 9 மணியளவில் மயிலாடுதுறை விமலாம்பிகை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணவிழாவை நடத்தி வைத்தார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மண்டல அமைப்பாளர் இளையராசா, பத்திரிகையாளர் சுகுணா திவாகர், ரஷித்கான் வாழ்த்துரை வழங்கினர். கழக ஏட்டுக்கு மணமகன் ரூ.2000 நன்கொடையும், மாவட்டக் கழத்துக்கு ரூ.15000 மதிப்புள்ள புதிய ஒலிபெருக்கி கருவியையும் வழங்கினார். ‘திராவிட’ எதிர்ப்பாளர்களுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்கும் தோழர் கவி எழுதிய ‘தமிழ்த் தேசத் தந்தை பெரியார்’ எனும் நூல் மணவிழா பரிசாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.   கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற மணவிழாக்கள் 21.8.2012 செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் மருத்துவர் பழ. பாலகிருஷ்ணன் மகன் மருத்துவர் பா.பாவேந்தன் – சா. மேகலா இணையரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி...

என்னை “மகாத்மா”வாக்கி விடாதீர்கள்!

என்னை “மகாத்மா”வாக்கி விடாதீர்கள்!

நண்பர்களே, முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ளுகிறேன். அதாவது சாப்பாட்டு ஜாகைக்குப் போகும் வழியில் என்னைப் பற்றியும், என் மனைவியைப் பற்றியும் சுவர்களில் கண்டபடியெல்லாம் எழுதியிருந்தது. மற்றும் சிலரைப் பற்றியெல்லாம் எழுதி இருந்தது. நண்பர்களே என்னைப் பொறுத்தவரை நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதுவும் என் மனப்பூர்த்தியாய்ச் சொல்லுகிறேன். என்னவென்றால், என்னை ஒருவர் மகாத்மா என்றோ, தெய்வத் தன்மைப் பொருந்தியவர் என்றோ, சித்தர் என்றோ, புத்தர் என்றோ, ஞானி என்றோ கூப்பிடுவதைவிட, கருதுவதைவிட என்னை அயோக்கியன் என்றும் திருடன் என்றும், முட்டாள் என்றும் சுயநலக்காரன் என்றும், பணம் சம்பாதிப்பவன் என்றும் மற்றும் இழிவான வேலை செய்கின்றவன் என்றும் சொல்லுவதில் எனக்கு லாபம் இருக்கின்றது என்று கருதுகிறேன். ஏனெனில், எனது வேலையானது இராமசாமி என்று ஒரு மகாத்மாவோ, மற்றும் தெய்வத் தன்மை பொருந்திய ஒரு ஒப்பற்ற மனிதர் இருந்தார் என்று மூட ஜனங்கள் சொல்லிக் கொள்ளவோ, எனது படத்தைப் பூஜையில் வைத்துப்...

ஜாதி ஒழிப்புப் போராளி  இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்

ஜாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்

ஜாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளான 11.9.12 செவ்வாய் அன்று பிற்பகல் 2 மணியளவில் பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வீரவணக்க – ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. கழகத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் க. துரைசாமி தலைமையில் மாநில பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன் மற்றும் மாநில அமைப்புச் செயலாளர், தாமரைக் கண்ணன் மண்டல அமைப்புச் செயலாளர்கள், தென் மாவட்டங்களின் பொறுப்பாளர்களும், தோழர்களும் பங்கேற்க உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் ஒன்றுகூடி அங்கிருந்து பரமக்குடிக்குப் பயணமாக உள்ளனர். வீரவணக்க நிகழ்வில்  பங்கேற்க விரும்பும் தோழர்கள் 11.9.12 செவ்வாய் காலை சரியாக 10 மணிக்கு செம்பட்டிக்கு வருமாறு அழைக்கிறோம். மற்ற மாவட்டப் பொறுப்பாளர்கள் தத்தம் மாவட்டங்களில் ஜாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை, ஜாதி ஒழிப்பு உறுதி மொழியேற்று பொதுக் கூட்டங்களாக நடத்துமாறு கேட்டுக்...

பிரிட்டிஷ் ஆட்சியின் மனித நேயமும்  பார்ப்பன ஆட்சியின் ‘மனுதர்மமும்’

பிரிட்டிஷ் ஆட்சியின் மனித நேயமும் பார்ப்பன ஆட்சியின் ‘மனுதர்மமும்’

பிரிட்டிஷ் ஆட்சி காட்டிய கவலையைக்கூட இந்திய “சுதந்திர” ஆட்சி தூக்குத் தண்டனைக் கைதிகளிடம் காட்ட முன்வரவில்லை. கிரிமினல் குற்றங்களில் தூக்குத் தண்டனைக்குள்ளாவோர் பெரும்பாலும் பார்ப்பனரல்லாத ‘சூத்திரர்களும்’, ‘பஞ்சமர்களும்’ தான் என்பதால் மனுதர்மப் பார்வை யுடனே  இந்திய பார்ப்பன ஆட்சி செயல்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலமான 1937 ஆம் ஆண்டில் நடந்த ஒரு வழக்கைக் குறிப்பிட வேண்டும். அப்போது கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. ‘அத்தப்பா கவுண்டன்’ என்பவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்துக்கு அப்பீல் விசாரணை வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு தூக்குத் தண்டனை வழங்கலாம் என்று கீழ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்க முடியாது என்று மற்றொரு  நீதிமன்றம், விளக்கம் கூறி, தூக்குத் தண்டனையை நிறுத்தியது. ஒப்புதல் வாக்கு மூலத்தையே சாட்சியமாக ஏற்றுக் கொண்டால், அது, குற்றவாளிக்கு தண்டனையை...

திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் இல்ல மணவிழா

திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் இல்ல மணவிழா

26.8.2012 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு திருச்சி தெற்கு காட்டூர் அ.பா. சிவந்தி ஆதித்தனார் சமுதாயக் கூடத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் ஆரோக்கியசாமி மகள் ஆ. தமிழரசி – எஸ். ஆரோக்கிய அன்னதங்க ராஜா இணையினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர் துரை தாமோதரன், ‘மந்திரமல்ல தந்திரமே!’ என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கழகத் தலைவருடன் மாநில அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன் மற்றும் திருச்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 30082012 இதழ்

மின் நெருக்கடி: திருச்சியில் சமூக தணிக்கை மாநாடு

மின் நெருக்கடி: திருச்சியில் சமூக தணிக்கை மாநாடு

25.8.2012 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திருச்சி புத்தூர் நாலு ரோடு அருகில் உள்ள சண்முகா திருமண அரங்கில், “தமிழக மின் நெருக்கடி சமூக தணிக்கை மாநாடு” நடைபெற்றது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பாக நடை பெற்ற இந்த மாநாட்டை வழக்கறிஞர் ஜோ. கென்னடி ஒருங்கிணைத்தார். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங் கிணைப்பாளரும், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருமான கொளத்தூர்மணி தலைமையேற்று இந்த மாநாட்டை துவக்கி வைத்தார். வழக்கறிஞர் த. பானுமதி வரவேற் புரையாற்றினார். கண குறிஞ்சி, மீ.த. பாண்டியன், அரங்க. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொத்தம் நான்கு தலைப்புகளின் கீழ் நான்கு அமர்வுகளாக நடைபெற்றது. முதல் அமர்விற்கு வழக்கறிஞர் மார்ட்டின் தலைமையேற்க, “இந்திய மின்சார துறையின் கொள்கைகளின் பரிணாமம்” என்ற தலைப்பில் உழவர் தாளாண்மை இயக்கத் தலைவர் பொறிஞர் கோ. திருநாவுக்கரசு...

கே.ஜி. வலசு பகுதியில் சாதி ஆதிக்கவாதிகள் மிரட்டலை முறியடித்து கழகக் கூட்டம்

கே.ஜி. வலசு பகுதியில் சாதி ஆதிக்கவாதிகள் மிரட்டலை முறியடித்து கழகக் கூட்டம்

ஆதிக்க சக்திகளின் கடுமையான எதிர்ப்பு களுக்கும் வதந்திகளுக்கும் மத்தியில் ஏராளமான பொது மக்கள் திரளுடன் நடைபெற்றது பெரியாரியல் பொதுக் கூட்டம். 4.8.2012 சனிக் கிழமை மாலை 6 மணிக்கு, ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கே.ஜி. வலசு பகுதியில், ஈரோடு பகுத்தறிவாளர் பேரவை சார்பாக பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக மற்ற கட்சிகள் பொதுக் கூட்டம் நடைபெறும் இடமான கே.ஜி. வலசு நால்ரோடு பகுதியை தேர்வு செய்த நமது தோழர்கள், காவல் நிலையத்தில் தெரிவித்துவிட்டு கூட்டத்திற்கான விளம்பரங்களையும் செய்திருந்தனர். ஆனால், இந்த இயக்கத்தை இப்பகுதியில் காலூன்ற விட்டால் தமது மேலாதிக்க தன்மை போய்விடும் என்று கருதிய, அப்பகுதியிலுள்ள ஜாதி ஆதிக்கவாதிகள் சிலர், கூட்டம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, காவல் நிலையத்தில்  கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. நமது தோழர்களும் மாற்று இடத்தில் அங்கிருந்து சற்று தொலைவிலுள்ள மதுரை வீரன் கோவில்...

செயல்களம் நோக்கி ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ சென்னை – புதுச்சேரியில் தோழர்களின் எழுச்சி

செயல்களம் நோக்கி ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ சென்னை – புதுச்சேரியில் தோழர்களின் எழுச்சி

22.8.2012 புதன் கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தியாகராயர் நகரில் அன்பு தனசேகரன் இல்ல மாடியில், சென்னை, காஞ்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது. தோழர் குகன், கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்பைச் சொல்ல, சென்னை மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகரன் வரவேற் புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், வழக்கறிஞர் வீ. இளங்கோவன் ஆகியோர் உரை யாற்றினர். அமைப்பை அடுத்தக் கட்டத்திற்கு முன்னோக்கி நகர்த்தல், கழகப் பரப்புரைகளை மக்களிடம் சேர்க்கும் பணிகள் குறித்து, கழகத் தோழர்கள் தங்கள் ஆலோசனைகளை தெரி வித்தனர். கீழ்க்கண்டவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். சென்னை மாவட்டம்: தலைவர் – ஞா. டார்வின் தாசன்; செயலாளர் – இரா. உமாபதி அமைப்பாளர் – க.சுகுமார்; பொருளாளர் – வேழவேந்தன்; துணைச் செயலாளர்...

மனித உரிமைக்கு குரல் கொடுத்த நீதிபதிகள்

மனித உரிமைக்கு குரல் கொடுத்த நீதிபதிகள்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கையெழுத்திட்டு தனித்தனியாக கடிதங்கள் எழுதியுள்ள நீதிபதிகள்: பி.பி. சாவந்த் (உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி) எ.பி.ஷா (டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி) டிபிலால் நஸ்கி (ஒரிசா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி) ஆர்.கே. மிஸ்ரா (பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி; கோவா மனித உரிமை ஆணையத்தின் தலைவர்) ஹோஸ்பெட் சுரேஸ் (பம்பாய் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி) பன்சன்த் ஜெயின் (ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி) பிரபா சீனிவாசன் (சென்னை உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) கே.பி. சிவசுப்ரமணியன் (சென்னை உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) பி.சி. ஜெயின் (ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) எஸ்.என். பார்கவா (சிக்கிம் உயர்நீதிமன்ற முன்னாள்  தலைமை நீதிபதி, அசாம் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைவர்) பி.ஜி. கோல்சே பட்டீல் (பம்பாய் உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) இரன்வீர் சாய் வர்மா (ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) பி.ஏ. கான் (ஜம்மு காஷ்மீர்...

உச்சநீதிமன்றம் ஒப்புதல் 9 ஆண்டுகளாக சட்ட விரோதமாக தூக்கு

உச்சநீதிமன்றம் ஒப்புதல் 9 ஆண்டுகளாக சட்ட விரோதமாக தூக்கு

தூக்குத் தண்டனை ஒழிப்பு இயக்கத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தவறான குற்றச்சாட்டு களின் அடிப்படையில் ஒருவரை சாகடித்துவிடும் ஆபத்துகள் நிறைந்த தண்டனை என்பதை உலகம் முழுதும் மனித உரிமையாளர்கள் வற்புறுத்தி வரு கிறார்கள். இதே கருத்தை இப்போது இந்தியாவில் நீதிபதிகளாக இருந்தவர்களும் சுட்டிக்காட்ட முன் வந்துள்ளதோடு, குடியரசுத் தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கும், கடிதம் எழுதியுள்ளனர். இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 2012 ஜூலை 25 ஆம் தேதி 14 முன்னாள் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கையெழுத்திட்டு தனித்தனியாக எழுதியுள்ள முறையீட்டு கடிதங்களில் தற்போது, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 13 பேரின் தூக்குத் தண்டனையை நிறுத்துவதற்கு குடியரசுத் தலைவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை (அரசியல் சட்டத்தின் 72வது பிரிவு) பயன்படுத்த முன்வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதில் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி, உச்சநீதி மன்றமே தவறான தீர்ப்புகள் அடிப்படையில்...

தூக்குத் தண்டனை; சில தகவல்கள்

தூக்குத் தண்டனை; சில தகவல்கள்

உலகம் முழுதும் அனைத்து நாடுகளும் மரண தண்டனையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று, 2007, 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் அய்.நா.வின் பொதுச் சபை தீர்மானம் வலியுறுத்தியது. நடப்பு ஆண்டிலும் இதே போன்ற தீர்மானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு அய்.நா. முதலில் இத் தீர்மானத்தைக் கொண்டுவந்தபோது 104 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. 54 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 29 நாடுகள் விலகி நின்றன. அடுத்த ஆண்டில் மேலும் 2 நாடுகள் கூடுதலாக வாக்களித்தன. எதிர்க்கும் நாடுகள் எண்ணிக்கை 54லிருந்து 46 ஆக குறைந்தது. விலகி நின்ற நாடுகள் 34 ஆக உயர்ந்தது. மீண்டும் 2010 இல் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வந்தபோது, 109 நாடுகள் ஆதரவாகவும், 41 நாடுகள் எதிர்ப்பாகவும் ஓட்டளித்தன. 36 நாடுகள் வாக்கெடுப்பில் பங்களிக்காமல் விலகி நின்றன. 1945 இல் அய்.நா. சபை உருவானபோது 8 நாடுகள் மட்டுமே தூக்குத் தண்டனையை முழுமையாக ஒழித்திருந்தன....

‘திராவிடர் விடுதலைக் கழகம்’ நடத்திய செங்கொடி நினைவு நாள்

‘திராவிடர் விடுதலைக் கழகம்’ நடத்திய செங்கொடி நினைவு நாள்

தலைநகர் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் செங்கொடி நினைவேந்தல் பொதுக் கூட்டம் ஆக.26 அன்று மாலை சேத்துப்பட்டு வைத்தியநாதன் வீதியில் எழுச்சியுடன் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெறும் முதல் பொதுக் கூட்டமும் இதுவேயாகும். கூட்ட மேடைக்கு அருகே செங்கொடி நினைவுத் தூண் ஏற்கனவே கழக சார்பில் நிறுவப்பட்டிருந்தது. சென்னை மாவட்டக் கழகத் துணை செயலாளர்  ஆ.வ. வேலு தலைமையில் கு. வெங்கடேசன் வரவேற்புரையுடன் கூட்டம் தொடங்கியது. நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், தமிழக மக்கள் உரிமைக் கழக வழக்கறிஞர் பா. புகழேந்தி, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தியும், தூக்குத் தண்டனையை ஒழிக்குமாறு வலியுறுத்தியும் பேசினர். நிகழ்வில் தோழர் செங்கொடிக்கு கூட்டத்தினர் அகவணக்கம் செலுத்தினர்....

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின்   பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்

சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்

தலைநகர் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் 134வது தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 17.9.2012 திங்கள் மாலை 6 மணிக்கு இராயப்பேட்டை வி.எம். தெரு, இலாயிட்ஸ் சாலை சந்திப்பில் நடைபெறுகிறது. ச. சரவணன் தலைமையிலும், ப.கணேசன், கோ. தமிழரசன் முன்னிலையிலும், கி. இளைய சிம்மன் வரவேற்புரையிலும் நிகழ்ச்சி நடைபெறும். திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்,  இயக்குனர் மணிவண்ணன், வி.சி.க. கருத்தியல் பரப்புரைச் செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி ஆகியோர் உரையாற்றுகின்றனர். கி. முருகன் நன்றியுரை யாற்றுகிறார். தேனிசை செல்லப்பா இசை நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. நிறைவில் மு. கலைவாணன் குழுவினர் வழங்கும் பேரறிஞர் அண்ணாவின் எழுத்தோவியமான ‘சந்திர மோகன்’ பொம்மலாட்ட நாடகம் நிகழ்கிறது. காலை 7.30 தொடங்கி 9 மணி வரை தோழர்கள் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பர். 10 கிளைக் கழகங்களில் கழகத்தின் பெயர்ப் பலகைகள் திறக்கப்படுகின்றன. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக்...

கீழ்த்தரமான மக்கள் தன்மை

கீழ்த்தரமான மக்கள் தன்மை

எந்த அடிப்படை உண்மைகளும் இல்லாமல் தனி நபர்களை குறி வைத்து பரப்பப்படும் அவதூறுகள் பற்றி தந்தை பெரியார் எழுதிய அறிக்கை இது: “சுமார் 70 வருடங்களுக்கு முன் திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் ஈரோடு – கரூர் டிவிஷனில் அசிஸ்டென்ட் இன்ஜினியராக நிய மிக்கப்பட்டபோது, ஒரு ஓவர்ஸீ யரிடம் வேலை கற்க அமர்த்தப் பட்டார். பிறகு அவர் அஸிஸ்டென்ட் இன்ஜினியர் வேலை ஏற்றுக் கொண் டார். அப்போது அந்த ஓவர்ஸீயர் மாணிக்க நாயக்கரின் கீழ் வேலை பார்க்க வேண்டியவரானார். இவரின் நடத்தையை மாணிக்க நாயக்கர் வேலை பழகும்போது தெரிந்து இருந்ததினால், சந்தேகப்பட்ட ஒரு காரியத்தில் கண்டித்தார். இது அந்த ஓவர்ஸீயருக்குப் பிடிக்கவில்லை. ‘நம்மிடம் வேலை பழகின பையன் நம்மைக் கண்டிக்கிறானே!’ என்று கருதி மாணிக்க நாயக்கருக்குப் புத்தி சொல்லுகிற மாதிரி, ‘நீங்கள் சிறு வயது; உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னார். உடனே மாணிக்க நாயக்கர். ‘என்...

ஏற்காடு தனியார் பள்ளியில் சிங்கள மாணவர்களுக்கு பயிற்சித் தருவதை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம்

ஏற்காடு தனியார் பள்ளியில் சிங்கள மாணவர்களுக்கு பயிற்சித் தருவதை எதிர்த்து கழகம் ஆர்ப்பாட்டம்

29.8.2012 அன்று ஏற்காடு மான்போர்ட் தனியார் பள்ளியில் சிங்கள மாணவர்கள் 22பேருக்கு மட்டைப் பந்து பயிற்சிக் கொடுக்கப்பட்ட செயதியறிந்து, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் அ. பெருமாள் தலைமையில், ஏற்காடு தோழர்கள் 15 பேரும், சேலம் நகரத் தோழர்கள் இரா. டேவிட் மற்றும் 10-க்கும் மேற்பட்டோர் இணைந்து பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையறிந்து சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஏற்காடு விடுதலை சிறுத்தைக் கட்சித் தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர். பள்ளி தாளாளர் வாக்கிஷ் என்பவரிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சிங்கள மாணவர்களை உடனே வெளியேற்றக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். காவல் துறையின் சமாதானத்தை ஏற்க மறுத்து பள்ளி தாளாளர் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டு வருத்தம் தெரிவித்தார். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என தோழர்களிடம் உறுதியளித்தப் பின்பு தோழர்கள் கலைந்து சென்றனர். பெரியார் முழக்கம் 06092012 இதழ்

தமிழக முதல்வருக்கு இஸ்லாமிய அமைப்புகள் உருக்கமான கடிதம்

தமிழக முதல்வருக்கு இஸ்லாமிய அமைப்புகள் உருக்கமான கடிதம்

தமிழக சிறைகளில் தொடர்ந்து 13 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக்கு உரிய தகுதி பெற்ற சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என்று அனைத்து முஸ்லீம்கள் அமைப்பு முதல்வருக்கு (ஜமா அத்துல் உலக மாசபை) வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதம் விவரம்: தமிழகத்தில் மூன்றாம் முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று சிறப்பான முறையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்களுடன், எங்கள் சமூகத்தின் சார்பாக ஒரு முக்கிய கோரிக்கையை உங்கள் முன் வைத்திட விரும்புகின்றோம். முந்தைய தி.மு.க. அரசு சிறைக் கைதிகள் பொது மன்னிப்பு விடுதலையின்போது முஸ்லிம் சிறைக் கைதிகள் விஷயத்தில் குறிப்பாக அரியானா மாநில அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் (உய சூடி,30.2005) வழங்கிய உத்தரவு வழிகாட்டுதலை புறந்தள்ளி பாரபட்சமான முறையில் நடந்து கொண்டது. தமிழக அரசு பொது மன்னிப்பு விடுதலையில் தகுதியற்ற வழக்குகள் எவையெல்லாம் என்பதனை அரசாணை எண். 1762/87 இல் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள நிலையில் இவ்வரசாணையில்...

திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்தல் 13 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க!

திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்தல் 13 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க!

‘சேவ் தமிழ்’ அமைப்பின் சார்பில் சிறையில்நீண்ட காலம் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளின் நியாயமான விடுதலைக்கான உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக் கோரியும், செப்டம்பர் முதல் தேதி சென்னை லயோலா கல்லூரி ‘பிஎட்’ அரங்கில் நடந்த கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். “தமிழ்நாட்டில் பெரியாரின் திராவிடர் இயக்கம், திராவிடர் என்ற குடையின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளான பார்ப்பனரல்லாதார், இஸ்லாமியர்கள், தலித் மக்கள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒடுக்கும் சக்தியான பார்ப்பனர்களை தனிமைப்படுத்தி, இந்த மக்களின் விடுதலைக்கும், உரிமைக்குமான இயக்கத்தை முன்னெடுத்தார். அதன் விளைவாக ஏனைய வடமாநிலங்களில் மிக மோசமாக கட்டமைக்கப்பட்டதைப் போன்ற குறுகிய இஸ்லாமிய வெறுப்பு தமிழகத்தில், முளை விடும் வாய்ப்புகள் தடுக்கப்பட்டன. மதத்தால் வேறுபட்ட இஸ்லாமியர்களை திராவிடர்களாக, சகோதரர் களாக தமிழகம் அரவணைத்தது. ஒடுக்கப்பட்ட மக்களிடையே உருவாக்கப்பட வேண்டிய இந்த ஒற்றுமையைக் குலைக்க பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் திட்டமிட்டு மேற்கொள்ளும்...

பேரிகையில் தோழர் பழனிக்கு நினைவேந்தல் கூட்டம்

பேரிகையில் தோழர் பழனிக்கு நினைவேந்தல் கூட்டம்

27.8.2012 திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேரிகையில், படுகொலை செய்யப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட கழக அமைப்பாளர் பழனி நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்திற்கு, பேரிகை ஒன்றிய அமைப்பாளர் முருகேசு தலைமையேற்றார். கிருஷ்ணப்பா, பாஸ்கர் ஆகியோர் தளி எம்.எல்.ஏ. (சி.பி.ஐ.) இராமச்சந்திரனின் அடக்குமுறைகளை விளக்கும் விதமாக பாடல்களை (தெலுங்கில்) பாடினர். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கழகத் தலைவர் தமது உரையில் – “இந்த நாட்டில் கம்யூனிசம் பரவாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வதற்கு ஒரு கட்சி இருக்கிறது. அதுதான் கம்யூனிஸ்ட் கட்சி  என்று பெரியார் சொல்லியுள்ளார். பெரியார் சொன்னது வேடிக்கைக்காக அல்ல என்பதை நிரூபிக்கும்படி தற்போது சி.பி.ஐ. நடந்து கொள்கிறது என்று சி.பி.ஐ. கட்சியின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பேசினார். சி.பி.ஐ. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (மக்கள் விடுதலை) விந்தைவேந்தன், பெங்களூர்...

காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள்

காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள்

மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரி தீக்குளித்து உயிர் நீத்த தோழர் செங்கொடியின் முதலாம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி 28.8.2012 செவ்வாய் கிழமை அன்று காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. அன்று காலை 8 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மக்கள் மன்ற கொடியினை ஏற்றி வைத்தார். காலை 10 மணிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. வந்திருந்து நினைவுச் சுடரையேற்றி நினைவேந்தல் உரையாற்றினார். தொடர்ந்து பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் அஞ்சலி செலுத்திச் சென்றனர். மாலை 6 மணிக்கு நினைவேந்தல் பொதுக் கூட்டம் பறை ஆட்ட நிகழ்ச்சியுடன் தொடங்கியது. காஞ்சி மக்கள் மன்றப் பொறுப்பாளர் மகேஷ் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து சிறுவர்களின் நடனம், கவிதை, இடையிடையே உரை என்று நடைபெற்றது. ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உரையாற்றி முடிந்ததும் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. எனவே கூட்டம் தடைபட்டது. திராவிடர்...

தலையங்கம் மோடியை அம்பலமாக்கும் தீர்ப்பு

தலையங்கம் மோடியை அம்பலமாக்கும் தீர்ப்பு

குஜராத்தில் மோடி ஆட்சியில் 2002 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமியர் இனப் படுகொலையில் ‘நரோடா பாட்டியா’ என்ற அகமதாபாத் புறநகர் பகுதியில் 97 இஸ்லாமியர்கள் உயிருடன் நெருப்பில் போட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மை யோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். இதில் உண்மையான குற்றவாளிகளை மறைத்து கண்துடைப்புக்காக வழக்குகளைப் பதிவு செய்தது மோடி ஆட்சி. உச்சநீதிமன்றம் தலையிட்டு, முன்னாள் மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் ஆர்.கே. ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு 32 குற்றவாளிகளை அடையாளம் கண்டது. அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த அகமதாபாத் சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி, ஆகஸ்ட் 31 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். ஜோட்ஸ்னா யாக்னிக் என்ற பெண் நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பு, பல்வேறு வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தப் படுகொலையை முன்னின்று நடத்திய மோடி அமைச்சரவையில் இடம் பெற்றவரும், அவருக்கு மிக நெருக்கமானவர்...

திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் திருப்பூர்-ஈரோடு-கரூர் மாவட்டங்களில் எழுச்சி

திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் திருப்பூர்-ஈரோடு-கரூர் மாவட்டங்களில் எழுச்சி

29.8.2012 புதன் மாலை 6 மணிக்கு திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம், துரை சாமி இல்லத்தில் நடைபெற்றது. முகில்ராசு வரவேற் புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை க. இராசேந்திரன், மாநில அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் துரைசாமி, மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விசயன் ஆகியோர் உரையாற்றினர். பெரியார் முழக்கம் ஏட்டிற்கான 180 சந்தாக்களை பொதுச் செயலாளரிடம் வழங்கினர். விரைவில் ஒரு ஆயிரம் சந்தாக்கள் வசூலித்து தருவதாக அறிவித்துள்ளனர். இறுதியாக கீழ்க்கண்ட தோழர்கள் பொறுப் பாளர்களாக நியமிக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டத் தலைவர் : சு. துரைசாமி, செயலாளர் – சு. அகிலன், பொருளாளர் – இரவிச் சந்திரன், அமைப்பாளர் – கிளாக்குளம் கு. செந்தில், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் – செந்தில் குமார், தமிழ்நாடு அறிவியல் மன்றம் அமைப்பாளர் – மடத்துக்குளம் மோகன். சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழக...

பொங்கல் விழாப் பொதுக் கூட்டம் ஈரோடு 29012017

ஈரோடு மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 29,01,2017 ஞாயிறு அன்று லட்சுமி நகரின் அருகிலுள்ள அண்ணா நகரில் , அம்மக்களோடு இணைந்து பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நன்பகல் முதல் சிறுவர், இளைஞர் பொதுமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாலை சமத்துவப் பொங்கல் வைத்து ஊர்ப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6-30 மணிக்கு தோழர். மா. ஜெயபாரதி (தமிழ்நாடு மாணவர் கழகம்) வரவேற்புரையாற்ற , தோழர் ப.இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர், தி.வி.க.) தலைமையிலும், அண்ணா நகரைச் சேர்ந்த இராமசாமி, தமிழ்மணி, தி.வி.க. மாவட்ட செயலாளர் கு.சண்முகப் பிரியன், வேணுகோபால், மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி , சித்தோடு எழிலன் ஆகியோர் முன்னிலையில், சித்தோடு முருகேசன் அவர்களின் பகுத்தறிவுப் பாடலுடன் கூட்டம் துவங்கியது. தொடர்ந்து மூத்த வழக்குரைஞர் பா.ப. மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துகொண்டவர்களுக்கும்...

திருப்பூரில் பொங்கல், தைப்புத்தாண்டு விழா ! 22012017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் 22.01.2017 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை 8 ஆம் ஆண்டு திராவிடர் பெருவிழாவாக பொங்கல்,தைப்புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. 22.01.2017 அன்று காலை 8 மணிக்கு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பமானது.தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்,உரி அடித்தல்,குழு விளையாட்டுப்போட்டிகள் ஆகியன நடைபெற்றன. மாலை 6 மணிக்கு நிமிர்வு கலைக்குழுவினரின் ஜாதி ஒழிப்புப் பறையிசை நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.பின் காலை நடந்த விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பரிசுகளாக பெரியாரிய புத்தகங்கள்,வெற்றிக்கோப்பை,நாள்காட்டி ஆகியன வழங்கப்பட்டன. இவ்விழா அப்பகுதி பொதுமக்களிடம் பெரும் வரவேற்ப்பைப்பெற்றது. விழாவினை தோழர் அகிலன்,மாதவன்,நாகராசு,கணபதி, பிரவீன்குமார், நீதிராசன்,கருணாநிதி,தனபால்,ராஜசிங்கம் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பரிசளிப்பு விழாவில் கழக பொருளாளர் துரைசாமி,அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி,மாவட்டத்தலைவர் முகில்ராசு,பாண்டியநாதன்,முத்துலட்சுமி,சங்கீதா,முத்து,பிரேம் குமார்,தனகோபால்,பல்லடம் சண்முகம்,மணி ஆகியோர் கலந்துகொண்டனர். உணவு ஏற்பாட்டினை மாதவன் குடும்பத்தினர்,அகிலன் குடும்பத்தினர்,கோமதி குடும்பத்தினர் ஆகியோர் செய்திருந்தனர். தோழர்...

மதுரையில் நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் ! 31012017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 31.1.2017 அன்று காலை 11 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்ட கழகச்செயலாளர் தோழர் மா.பா.மணிகண்டன் தலைமை தாங்கினார்

தேசியக் கொடியை எரித்தால் கூட அது தேச விரோதச் செயல் அல்ல.. கொளத்தூர் மணி

தேசியக் கொடியை எரித்தால் கூட அது தேச விரோதச் செயல் அல்ல என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டத்தில் தேசியக் கொடியை அவமதித்து விட்டார்கள் தேச துரோகிகள் என்று பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம், அரசியல் சட்டம் எரிப்புப் போராட்டம் என்று பெரியாரால் அறிவிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. தேசியக் கொடி எரிப்பு போராட்டத்திற்கான அடிப்படை இங்கே இருக்கிறது. தேசியக் கொடியை எரிப்பது அவ்வளவு பெரிய குற்றமா.. மோடியை பற்றி விமர்சித்தாலே தேச விரோதமா என்பது குறித்து ஒன்இந்தியா கேட்ட கேள்விகளுக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அளித்த பதில்கள் இதோ… ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது தேசியக் கொடி அவமதித்த தேசத் துரோகிகள் என்று நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம் நடந்த மண்...

மீண்டும் தனித் தமிழ்நாடு கோருவதற்கான சூழ்நிலை இப்போதுதான் உருவாகியுள்ளது- கொளத்தூர் மணி எச்சரிக்கை

தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதால் தனித் தமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் முன்வைக்கும் சூழல் உருவாகியுள்ளது என்று திவிக தலைவர் கொளத்தூர் தா.செ. மணி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களுக்கான உரிமை மறுக்கப்படும் இப்போதுதான் தனித் தமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் முன்வைப்பதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது என்று திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1956-ம் ஆண்டு வரை சென்னை மாகாணமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிஷாவின் பகுதிகள் இணைந்து இருந்தன. ஆனால் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சென்னை மாகாணம் தனித்தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. அப்போது தமிழகத்தின் திருப்பதி, திருத்தணி, உள்ளிட்ட பல பகுதிகள் ஆந்திராவோடு சேர்க்கப்பட்டன. கன்னியாகுமரி, இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு கேரளாவுடன் இணைக்கப்பட்டது. கொள்ளேகால், காவிரி பிறக்கும் குடகு, கோலார் தங்கவயல் உள்ளிட்டவை கர்நாடகாவோடு இணைந்தன. உயிர்த்தியாகங்கள்.. திருத்தணியும் கன்னியாகுமரியும் உயிர்த் தியாகங்களுக்குப்...

அரியலூர் நந்தினிக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017

அரியலூர் நந்தினிக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017

அரியலூரில் ஆர்ப்பாட்டம். #Justice_for_nandhini அரியலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நந்தினிக்கு நீதிவழங்கு என்கிற முழக்கத்தோடு… தோழர் கோபால் ராமகிருஷ்ணன். தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். இடம்:அண்ணாசிலை பின்புறம். பேருந்து நிறுத்தம். அரியலூர். நாள் :04.02.2017.சனிக்கிழமை. நேரம்:காலை.10.00மணிக்கு.

மெரினாவில் காவல்துறை தாக்குதலுக்கு கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு 30012017

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்கள், மீனவர்கள் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்பட்ட காவல்துறையின் வன்முறைகளுக்கு நீதிகேட்டு…. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் 30012017 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டம்.   செய்தி தோழர் வைரவேல்

காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம் கோவை 31012017

காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம் கோவை 31012017

காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம். ******************* 31.01.17 செவ்வாய் மாலை 05 மணி. ஆதித் தமிழன் அரங்கம், மேட்டுப்பாளையம் சாலை, கோவை. தலைமை ———– தோழர் கொளத்தூர் மணி. தலைவர், (திராவிடர் விடுதலைக் கழகம்) முன்னிலை ————- தோழர் அதியமான் தலைவர், ( ஆதித் தமிழர் பேரவை ) சமூக நீதிக்கான களத்தில் நிற்கிற இயக்கங்களின் பொறுப்பாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம். இப்படிக்கு காசு.நாகராசன். #94439 33669

மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம் 31012017

31012017 காலை 11 மணிக்கு மதுரை ரயில் நிலையம் எதிரில் தங்கை நந்தினிக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்.. அனைவரும் வருக திராவிடர் விடுதலைக் கழகம் மதுரை.9600408641