திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் இல்ல மணவிழா

26.8.2012 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு திருச்சி தெற்கு காட்டூர் அ.பா. சிவந்தி ஆதித்தனார் சமுதாயக் கூடத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் ஆரோக்கியசாமி மகள் ஆ. தமிழரசி – எஸ். ஆரோக்கிய அன்னதங்க ராஜா இணையினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர் துரை தாமோதரன், ‘மந்திரமல்ல தந்திரமே!’ என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கழகத் தலைவருடன் மாநில அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன் மற்றும் திருச்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 30082012 இதழ்

You may also like...