Author: admin

‘போலி அறிவியல்’ கும்பலுக்கு சில கேள்விகள்

‘போலி அறிவியல்’ கும்பலுக்கு சில கேள்விகள்

மகாபாரத காலத்திலேயே சோதனைக் குழாய் குழந்தை பிறப்பு முறை வந்து விட்டது என்றால் பிறகு அது ஏன் நடைமுறையில் இல்லை? வெளி நாட்டுக்காரர்கள் இந்த அறிவியல் முறையை கண்டுபிடிக்கும் வரை, ‘இந்தப் புராண அறிவியல்’ எந்தப் புற்றுக்குள் பதுங்கிக் கிடந்தது? சோதனைக் குழாய் குழந்தைகளுக்கு-பெண்-ஆண் விந்துக்களை பரிசோதிக்கும் சோதனைச் சாலைகள் இருந்தனவா? ‘ஸ்டெம் செல்’ அறிவியல் புராண காலத்திலேயே இருந்தால் அந்த ‘ஸ்டெம்செல்’ மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதா? அதற்கான மருத்துவர்கள் இருந்தார்களா? தசரதன் மனைவிக்கு குழந்தை இல்லாததால் அசுவமேத யாகம் நடத்தி ‘குதிரை’யுடன் தசரதன் மனைவி உறவு கொண்டு இராமன் பிறந்ததாக இராமாயணம் கூறுகிறதே? அப்போது ஏன் ‘சோதனைக் குழாய்’ முறை – இராமன் பிறப்புக்குப் பயன்படுத்தவில்லை? அலுமினியம் இரப்பர் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு தான் விமானக் கண்டுபிடிப்பே வந்தது? இராவணன் போர் விமானங்களைப் பயன்படுத்தினான் என்றால் – இரப்பர், அலுமினியம் இல்லாமலே விமானம் வந்து விட்டதா? இராம – இராவண யுத்தம்...

நெமிலியில் மக்கள் மன்றம் நடத்திய அம்பேத்கர் நினைவு நாள்

நெமிலியில் மக்கள் மன்றம் நடத்திய அம்பேத்கர் நினைவு நாள்

மக்கள் மன்றம் சார்பில் காஞ்சி மாவட்டம் நெமிலியில் அம்பேத்கர் நினைவு நாள் கூட்டம் டிசம்பர் 17ஆம் தேதி மக்கள் மன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. காவிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக சமத்துவம்-சகோதரத்துவம் காண உறுதி ஏற்போம் என்கிற முழக்கத்தோடு நிகழ்வு நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அம்பேத்கரின் இந்து எதிர்ப்பு, இராமாயண எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்புகளையும் ஜாதி – ஜாதியமைப்பு – ஜாதி ஆணவப் படுகொலை குறித்தும் உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நிறைவுரையாற்றினார். மக்கள் மன்றத்தில் பத்தாண்டுகளாக இணைந்துள்ள தோழர் உமாவின் தந்தையார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது அம்பேத்கர் – பெரியார் சிலைகளுக்கு பறை முழக்கத்துடன் மாலைகள் அணிவிக்கப் பட்டன. பெரியார் முழக்கம் 10012019 இதழ்

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (3) ‘தேசியக் கொடி’ எரிப்பு அறிவிப்பும் அதன் தாக்கமும்

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (3) ‘தேசியக் கொடி’ எரிப்பு அறிவிப்பும் அதன் தாக்கமும்

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையி லிருந்து. பகுதி 2 இந்தித் திணிப்புக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். 17.7.1955 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு 1955 ஆகஸ்ட் 1ஆம் தேதி கொடி எரிப்புப் போராட்டம் நடத்தும் முடிவை எடுத்தது. இது குறித்து 20.7.1955 அன்று வெளி வந்த ‘விடுதலை’ நாளேட்டில் பெரியார் அறிக்கை வெளியிட்டார். நாடெங்கும் கடும் எதிர்ப்புகள் வந்தன. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. அப்போது பெரியார் இவ்வாறு எழுதினார்: “குமரன் காத்த கொடியை கொளுத்தலாமா என்கிறார்கள் நம் நாட்டு கம்யூனிஸ்டுகள். உலகத்தில் அறிவாளிகள் பிறக்குமிடம் கம்யூனிஸ்ட் கட்சி தான் என்கிறார்கள். நம் நாட்டு கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை அத்தனையும் பொய்யாகிவிட்டது. குமரன்...

கொளத்தூர் சரவணபரத்-பிரியதர்சினி இணை அறிமுக விழா – பெண் விடுதலைக் கருத்தரங்கம்

கொளத்தூர் சரவணபரத்-பிரியதர்சினி இணை அறிமுக விழா – பெண் விடுதலைக் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் பகுதி தோழர் சரவணபரத் மற்றும் பிரியதர்சினி ஆகியோரது இணை அறிமுக விழா 30.12.2018 அன்று சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் ஒன்றியம் அய்யம் புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. முன்னதாக காலை 10 மணியளவில் அய்யம்புதூரைச் சார்ந்த  பெரியார் பெரும் தொண்டர் சி. சுப்பிரமணி அய்யம்புதூர் பகுதியில் கழகத்தின் கொடிக் கம்பத்தை நிறுவி , கொடியேற்று விழா ஏற்பாடு செய்திருந்தார். பறை முழக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கழகக் கொடியை ஏற்றினார். பின்னர் ஊர்வலமாக தோழர்கள் அனைவரும் சென்றனர். அதற்கடுத்து காலை 11 மணியளவில் பெண் விடுதலைக் கருத்தரங்கம் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி தலைமை வகித்தார் . சேலம் மாவட்ட தலைவர்  சூரியக்குமார் முன்னிலை வகித்தார்.  இரத்தினசாமி (அமைப்புச் செயலாளா) மற்றும் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) ஆகியோர் இணையர்களை வாழ்த்தி வாழ்த்துரை...

தமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே பெரியார்

தமிழர்களுக்கான விழா பொங்கல் மட்டுமே பெரியார்

17.1.1968 அன்று கரூரில் பொங்கல் விழா சிறப்புக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி. இந்த பொங்கல் விழா என்பது அறுப்புப் பண்டிகைன்னும் சொல்லுவார்கள். அதேபோல நாமும் அறுத்துப் பண்டங்களைக் குடும்பத்துடன் உபயோகப்படுத்துகிற நாள். மற்றும் நம்மாலான வசதிகளை விவசாயத்துக்காக நமக்கு உதவியாய் இருந்து தொண்டாற்றின ஆளுகளுக்கு – அவர்களுக்கு நாம ஏதாவது திருப்தி பண்ணுகிறதுக்கு – சாப்பாடு போடுகிறதோ, அவர்களுக்கு துணிமணி எடுத்துக் கொடுக்கிறதோ அல்லது ஏதாவது காசு கொடுத்து அவர்களைச் சந்தோஷப்படுத்துகிறதோ – இதெல்லாம், நாம் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தோம். நேற்று (16.1.968இல்) இந்த நேரத்துக்கு, நான் சேலத்திலே பெரிய மிராஸ்தார் இரத்தினசாமி பிள்ளை என்கிறவர், அவர் தோட்டத்திலே இந்த பண்டிகை வைச்சார். என்னைத்தான் தலைமையாய் அவர் விரும்பினார், போயிருந்தேன். பொங்கல் தடபுடலாக ஒரு அய்ம்பது, அறுபது மாடுகளை வைச்சி நம்ம எதிரிலேயே நடத்தினாரு. இம்மாதிரி இருநூறு பேருக்குச் சீலை வேட்டி தந்தார். ஒரு புலவர் அம்மையார் காமாட்சி...

தமிழ் ஊடகங்களில் முதன்முறையாகப் பெறுகிறார்  ‘நியூஸ் 18’ குணசேகரனுக்கு ராம்நாத் கோயங்கா விருது

தமிழ் ஊடகங்களில் முதன்முறையாகப் பெறுகிறார் ‘நியூஸ் 18’ குணசேகரனுக்கு ராம்நாத் கோயங்கா விருது

  நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைக் காட்சியின் முதன்மை ஆசிரியர், குணசேகரனுக்கு, ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ வழங்கப் பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர், ராம்நாத் கோயங்கா நினைவுகளை போற்றும் வகையில், 2004 முதல், ஒவ்வொரு ஆண்டும், ஊடகத்துறை சாதனையாளர்களுக்கு, ‘ராம்நாத் கோயங்கா இதழியல் சிறப்பு விருது’ வழங்கப்படுகிறது. பத்திரிகையாளர் களின் நேர்மையான, மிகச் சிறப்பான பங்களிப்பை போற்றும் வகையில், இந்த விருது வழங்கப்படுகிறது. பிராந்திய மொழியில், ஒரு நிகழ்வு அல்லது மக்கள் பிரச்னையை, விரிவாக, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், பதிவு செய்யும், அச்சு மற்றும், ‘டிவி’ ஊடகவியலாளருக்கு, இவ்விருது வழங்கப்படும். அதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான விருதுகளில், பிராந்திய மொழிகளில் சிறந்து விளங்கிய, ஊடகவியலாளர் விருதுக்கு, ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ முதன்மை ஆசிரியர் மு. குணசேகரன் தேர்வு செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில், 2017இல், ‘ஒக்கி’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீனவர்கள் சந்தித்த துயரங்களை, தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்ததற்காக,...

அரசு நிதி உதவியுடன் பஞ்சாப் மாநிலம்  ஜலந்தரில்  அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா’

அரசு நிதி உதவியுடன் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா’

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி இந்திய அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா நிகழ்ச்சி’ ஒன்றை அரங்கேற்றி யுள்ளனர். பிரதமர் மோடி இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்திருக்கிறார். தமிழகத்தில் ஆழியாறில் செயல்படும் உலக சமுதாய சேவை மய்யத்தில் வேலை செய்யும் கண்ணன் ஜெகதாள கிருஷ்ணன் என்ற 42 வயது பேர் வழி அய்ன்ஸ்டின், நியுட்டன் கோட்பாடுகள் தவறு; புவி ஈர்ப்பு விசை என்பதும் தவறு என்று பேசியிருக்கிறார். தன்னை ஒரு இயற்பியல் விஞ்ஞானி என்று கூறிக் கொண்ட அவர் “20ஆம் நூற்hறண்டு அய்ன்ஸ்டின் நூற்றாண்டு என்று கூறுகிறார்கள்; அடுத்த சில ஆண்டுகளில் அது என்னுடைய நூற்றாண்டாகப் பெயர் மாறப் போகிறது” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டார். இவர் இயற்பியல் படித்தவரே அல்ல என்றும் மின்பொருள் துறை படித்த பொறியியல் பட்டதாரி தான் (எலக்டிரிக்கல் என்ஜினியர்) என்றும், ‘இந்து’ ஆங்கில நாளேடு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஒரு வேத...

சக்தி-கௌசல்யா திருமணத்தை ஒட்டி எழுந்த குற்றச்சாற்றுகள் – அறிக்கை

சக்தி-கௌசல்யா திருமணத்தை ஒட்டி எழுந்த குற்றச்சாற்றுகள் – அறிக்கை

முந்தைய அறிக்கை   தியாகு / கொளத்தூர் மணி                  13.01.2019 அனைவருக்கும் வணக்கம். 2018 திசம்பர் சக்தி-கௌசல்யா திருமணத்தை ஒட்டி எழுந்த குற்றச்சாற்றுகள் குறித்து நாங்கள் இருவரும் சேர்ந்து 29.12.2018இல் வெளியிட்ட அறிக்கையின் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் ஊடகங்களிலும் பிற வழிகளிலும் நடந்த விவாதங்களைக் கவனத்தில் கொண்டுள்ளோம். பலதரப்பட்டவர்களும் கிளப்பிய புரளிகளுக்கும் அவதூறுகளுக்கும் நடுவில் எங்கள் அறிக்கையைப் புரிந்து கொண்டு சமூகப்பொறுப்புடன் நிலையெடுத்த தோழர்கள், நண்பர்களுக்கு நன்றி! பாதிப்புற்றதாக முன்வந்த தரப்பாரிடமிருந்து எங்கள் அறிக்கைக்குப் பிறகு ஒரு நீண்ட மடல் வரப்பெற்றோம். அது எங்கள் அறிக்கையைப் பெரும்பாலும் மறுதலிப்பது போல் அமைந்திருந்ததால் அவர்கள் எழுப்பிய ஒவ்வொரு கூறு குறித்தும் எங்கள் விளக்கத்தை அவர்களுக்கு எழுதியனுப்பினோம். இதன் பிறகு இத்தனை நாளாகியும் அவர்களிடமிருந்து மறுமொழி இல்லாததால் எங்கள் விளக்க மடலைப் பொதுவெளியில் முன்வைக்கிறோம். இந்தச் சிக்கலில் எழுப்பப்பட்ட பல குற்றாய்வுகளுக்கும் வினாக்களுக்கும் இது விடையாக அமையும் என நம்புகிறோம். தியாகு / கொளத்தூர்...

தியாகு — கொளத்தூர் மணி அறிக்கை

தியாகு — கொளத்தூர் மணி அறிக்கை

தியாகு — கொளத்தூர் மணி அறிக்கை சக்தி தொடர்பாக… 1) சக்தி-கௌசல்யா திருமணத்துக்குப் பின் சக்தி மீது எழுந்த குற்றச்சாற்றுகளும் அவை குறித்து சமூக ஊடகங்களில் இடம் பெற்ற கருத்துகள், எதிர்க் கருத்துகளும் கவலைக்குரிய முறையில் வளர்ந்து சென்று கொண்டிருந்த நிலையில், அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசித் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் பாரதி மற்ற நண்பர்களையும் இணைத்துக் கொண்டு முன்முயற்சி செய்தார். அவர்கள் இந்தச் சிக்கலில் முதன்மைத் தொடர்புள்ள இருதரப்பினரிடமும் ஒப்புதல் பெற்று, ததேவிஇ தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் -விடுதலைக் கழகத் தலைவர், கொளத்துர் தா.செ. மணி ஆகிய எங்கள் இருவரிடமும் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தனர். நாங்கள் இருவரும் 27/12/2018 காலை 10 முதல் இரவு 9 மணி வரை திவிக அலுவலகத்தில் அமர்ந்து, சக்தி-கௌசல்யாவையும், சக்தி மீது குற்றச்சாட்டு கூறியவர்கள், சான்றளிக்க முன்வந்தவர்கள், சக்தி-கௌசல்யா திருமணத்தில் தொடர்புள்ளவர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் விசாரித்தோம்....

தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க தமிழக முதல்வரிடம் வேண்டுகோள்

தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க தமிழக முதல்வரிடம் வேண்டுகோள்

பெறுநர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள், தமிழ்நாடு.  மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். பொருள்: தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியரின் துயர்துடைக்க வேண்டுகோள்   இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசின் இன ஒடுக்குமுறை, இன அடக்குமுறை, இனக் கொலைக் கொடுமைகளால் அங்கிருந்து உயிர்தப்பித் தஞ்சம் நாடித் தமிழகம் வரும் ஈழத் தமிழ் மக்களை ஏற்று வாழ வைக்கும் உரிமையும் கடமையும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக அரசுக்கு உண்டு.  இவ்வடிப்படையில், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வாழ்ந்துவரும் இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) நலவுரிமைகளுக்காகத் தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் பின்வரும் கோரிக்கைகளைத்  தங்களிடம் வலியுறுத்துகிறோம்.   இலங்கைத் தமிழ் அகதிகள் எனப்படும் தமிழீழ ஏதிலியர் அனைவர்க்கும் இந்நாட்டில் இடைக்காலக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழீழ ஏதிலியரின் அரசியல், குடியியல் உரிமைகளும் பொருளியல் உரிமைகளும் சட்டத்திலும் நடைமுறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும். திபெத்துப் போன்ற...

பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்ய வேண்டி – முதல்வருக்கு விண்ணப்பம்

பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்ய வேண்டி – முதல்வருக்கு விண்ணப்பம்

கொளத்தூர் தா.செ.மணி தலைவர்: திராவிடர் விடுதலைக் கழகம்   பெறுநர்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு.  மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம். பொருள்: பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்ய வேண்டி திரு இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவரும் வாழ்நாள் சிறையாளர்களாக இருந்து வருவதும் அவர்கள் விடுதலைக் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் தமிழக அரசும் கவலையோடும் அக்கறையோடும் இருப்பது தாங்கள் அறிந்ததே. அவர்கள் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்துவிட்ட நிலையில் தங்கள் விடுதலை வேண்டி மத்திய மாநில அரசுகளையும், இந்திய உச்சநீதி மன்றத்தையும் முறைப்படி அணுகினார்கள். அந்தச் செயல்வழியில் இறுதியாக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு  அவர்களை விடுதலை செய்ய செப்டம்பர் 9,2018...

நாகை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறை 09012019

நாகை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறை 09012019

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறையில் 09.01.2019 அன்று காலை 11.00 மணியளவில் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில்  நடைப்பெற்றது. கூட்டத்திற்கு தலைமை கழக பொறுப்பாளர்கள் ஈரோடு ரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் நா. இளையராஜா வரவேற்றார். கழக வார பத்திரிகை புரட்சி பெரியார் முழக்கம் மற்றும் மாத இதழ் நிமிர்வோம் சந்தா தலைவரிடம் கொடுக்கப்பட்டது. கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகளை கழக தலைவர் அறிவித்தார். மாவட்டத் தலைவர்  ம.மகாலிங்கம் மாவட்ட செயலாளர் தெ.மகேசு மாவட்ட பொருளாளர் ந.விஜயராகவன் மாவட்ட அமைப்பாளர் கு.செந்தில்குமார் மாவட்ட துணை தலைவர் தெ. ரமேஷ் மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் நன்மாறன் மயிலாடுதுறை நகரம். நகரத் தலைவர் நாஞ்சில்.சங்கர் நகர செயலாளர் நி.நடராசன் நகர அமைப்பாளர் தில்லை நாதன் நகர துணை தலைவர் ராஜராஜன் நகர துணை செயலாளர் ஜாகிர் உசேன் மயிலாடுதுறை...

எழுவர் விடுதலை – கழக தலைவர் முதல்வரிடம் கோரிக்கை

எழுவர் விடுதலை – கழக தலைவர் முதல்வரிடம் கோரிக்கை

ஏழ்வர் விடுதலை – கழகத் தலைவர் முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை ! நேற்று (14-1-2019) இரவு 8-00 மணியளவில் கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இளங்கோவன், சேலம் மாவட்ட செயலாளர் மேட்டூர் கோவிந்தராசு, ஈரோடு மாவட்ட செயலாளர் பவானி வேணுகோபால், சேலம் மாநகர செயலாளர் பரமேசு ஆகியோருடன் சேலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களைச் சந்தித்து பேரறிவாளன் முதலான தமிழர் எழுவர் விடுதலைக்கு இயன்றதனைத்தையும் செய்யக் கோரும் விண்ணப்பத்தை விளக்கிக் கையளித்தோம். முதல்வரும் தாங்களும் எழுவர் விடுதலையில் அக்கறை கொண்டிருப்பதாகவும், விரைவில் விடுதலைக்கு ஆவன செய்வதாகவும் உறுதியளித்தார்.

சமூக நீதிக்கு எதிரான10% இடஒதுக்கீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு 12012019

சமூக நீதிக்கு எதிரான10% இடஒதுக்கீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு 12012019

சமூக நீதிக்கு எதிரான 10% பொருளாதார ரீதியான இட ஒதுக்கிட்டைக் கண்டித்தும்பாசிச பாஜக அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகமும் தமிழ்நாடு மாணவர் கழகம் தெற்கு மாவட்டம் சார்பாக 12.01.2019. பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தில் மாலை 4.30க்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் மாநில அமைப்பாளர் ப.இரத்தினசாமி தலைமை தாங்கினார்.. முன்னிலை: அ.கிருஷ்ணமூர்த்தி திவிக மாவட்ட அமைப்பாளர் இதை சீ.ரா.சௌந்தர் தமிழ்நாடு மாணவர் கழகம் மாவட்ட அமைப்பாளர் அவர்கள் ஒருங்கிணைத்தார்.. வெங்கட் அவர்களின் முழுக்கத்துடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியாது.. தொடக்க உரை: ப.இரத்தினசாமி திவிக ஆர்ப்பாட்ட விளக்க உரை: சீ.ரா.சௌந்தர் (தமாக) இடஒதுக்கிடு விளக்க பாடல் :ச.இந்தியப்பிரியன்..(தமாக) இதில் தோழமை அமைப்புகளின் தோழர்களின் கண்டன உரைகள்: கணகுறிஞ்சி, தலைவர்.மக்கள் சிவில் உரிமைக் கழகம்.. இரா.தமிழ்இன்பன், நிறுவனர். விடுதலை வேங்கைகள் கட்சி.. ரவி , புரட்சிகர இளைஞர் முண்ணனி.. ஆறுமுகம், தலைவர்ஜனநாயக மக்கள் கழகம். மற்றும் இந்த நிகழ்வில் பங்குபெற்ற திவிக...

உயர்சாதிக்கான 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கோவை 11012019

உயர்சாதிக்கான 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கோவை 11012019

சமூகநீதியை சீர்குலைக்கும்* மத்திய பா.ச.க அரசின் உயர்சாதிக்கான 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து *கண்டன ஆர்ப்பாட்டம்* திராவிடர் விடுதலைக் கழக மாநகர மாவட்டத்தலைவர் தோழர் நேருதாசு தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கண்டன உரை தோழர்கள் வெண்மணி திராவிடர் தமிழர் கட்சி மலரவன் புரட்சிகர இளைஞர் முன்னணி வழக்கறிஞர் சேகர் Pucl இராமசந்திரன் திவிக இளவேனில் தமிழ்புலிகள் சண்முக சுந்திரம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் MS. வேல்முருகன் CPI ML வழக்கறிஞர் சக்திவேல் Cpi சபரி தமிழ்நாடு மாணவர் கழகமஃ ரமேஷ் முற்போக்கு வழக்கறிஞர் சங்கம் இனியவன் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் தண்டபாணி சமூக நீதி கட்சி வழக்றிஞர் கார்கி வழக்கறிஞர் சத்தியபாலன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர் கூட்டத்திற்கு திவிக தலைமை செய்ற்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம் Pucl பாலமுருகன் திமுக சிங்கை பிரபாகரன் உட்பட 80 திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் நன்றியுரை நிர்மல்குமார் மாநகர மாவட்ட செயலாளர் (11.1.2019)*...

தோழர் விஜயகுமார் தாயார் படத்திறப்பு நிகழ்வு 14012019 கொளத்தூர்

தோழர் விஜயகுமார் தாயார் படத்திறப்பு நிகழ்வு 14012019 கொளத்தூர்

படத்திறப்பு நிகழ்வு தோழர்களுக்கு வணக்கம். 09.01.2019 அன்று மறைவுற்ற பெரியாரியல் சிந்தனையாளர் திரு.இராமசாமி ( ஆசிரியர் ஓய்வு ) அவர்களின் மனைவியும் எனது தாயார் திருமதி ஆர்.என்.காசிமதி அவர்களின் படத்திறப்பு வரும் 14.01.2019 திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெற உள்ளதால் அனைத்து தோழர்களும் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொள்ள அழைக்கின்றேன். எனது தாயார் விருப்பத்திற்கு ஏற்ப உடலை மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரிக்கு உடல்தானம் அளிக்கப்பட்டது. இடம் தார்காடு (தபால் நிலையம் அருகில்) கொளத்தூர், சேலம் மாவட்டம். தலைமை தோழர் கு.சூரியகுமார் தி.வி.க. சேலம் மேற்கு மாவட்ட தலைவர். படத்திறப்பாளர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி தலைவர் தி.வி.க. இவண் இரா.விஜயகுமார் ( இராணுவ ஒய்வு ) இரா.சசிகுமார் சன் டிராவல்ஸ் தார்காடு. 94430 30791

தோழர் பொழிலன் அவர்களின் “தமிழ் தேசம்” நூல் வெளியீடு 11012019 சென்னை

தோழர் பொழிலன் அவர்களின் “தமிழ் தேசம்” நூல் வெளியீடு 11012019 சென்னை

மாலை 7.30 மணியளவில் சென்னை புத்தக கண்காட்சி 300 அரங்கில் தோழர் பொழிலன் முன்னிலையில் {“அருவி புத்தக உலகம்”} கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘தமிழ் தேசம்” என்ற நூலை வெளியிட்டார். இந் நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி டைசன் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பை சார்ந்த பலர் கலந்து கொண்டனர். பிறகு அரங்கு 222 {பொதுமை பதிப்பகத்தில்} தோழர் வேல் முருகன் வெளியிட கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி பெற்று கொண்டு உரையாற்றினார்கள். செய்தி குகன்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் அடுத்த செயல்திட்டம்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் அடுத்த செயல்திட்டம்

ஏப்ரல் 7-ம் தேதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு. முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், இடஒதுக்கீட்டினை முற்றிலுமாக அழிக்க நினைக்கும் பாஜக அரசினைக் கண்டித்து, இந்த மாதம் 27ம் தேதி தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிப்பு. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் பொறுப்பாளர் பச்சைமலை, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், நீரோடை அமைப்பின்...

கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி 08012019

கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி 08012019

08.01.2019 *திராவிடர் விடுதலைக் கழகம்* சார்பாக கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி வசந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது நிகழ்வுக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி  தலைமை ஏற்றார் முதல் நிகழ்ச்சியாக கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி அவர்களால் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டது!!! அதனைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழக பெரியார் சிந்தனை பலகை தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது கடவுள் மறுப்பு தோழர் மதன்குமார் கூற, தோழர் அறிவழகன் வரவேற்புரையாற்றினார்!!! துவக்க உரையாக தோழர் ஈரோடு இரத்தினசாமி திராவிடர் விடுதலை கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பெரியாரியல் குறித்தும் பேசினார்!!! தமிழ்நாடு மாணவர் கழக மாநில செயலாளர் தோழர் பாரி சிவக்குமார் கருத்துரையாற்றினார்!!! அதனை தொடர்ந்து கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி உரையாற்றினார்!!! பின் தோழர் சூலூர் பன்னீர்செல்வம், தோழர் அய்யனார், தோழர் பழனிவேல் ஆசிரியர், தோழர் முத்துகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் கோபால் ராவணன், தோழர் நட பாபு அம்பேத்கர், தோழர்...

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நாகை 09012019

மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நாகை 09012019

நாகை மாவட்டத்தில் 09.01,2019 புதன்காலை 11 மணியளவில் மயிலாடுதுரை கூறை நாடு பகுதியில் உள்ள மினி ஹாலில் கலந்துரையாடல் கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது தோழர் இளையராசா அவர்கள் கடவுள் மறுப்பு கூறி தொடங்கியது

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 10012019

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 10012019

திராவிடர் விடுதலைக் கழகம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் பேராவூரணியில் நடைபெற்றது. கூட்டத்தில், இயக்க பணிகள் கிராமங்கள் தோறும் எடுத்து சென்று மக்களை இயக்கமாக்குவது குறித்து ஆலோசித்து அதற்கான செயல் வரைவுகள் முன்வைக்கப்பட்டது, புரட்சி பெரியார் முழக்கம் ஏடு, நிமிர்வோம் இதழ் சந்தா சேர்ப்பு அதிகப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் பதிவு செய்யபட்டன. கூட்டத்தில் தலைமைக் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய கழக தோழர்கள் தவறாது வந்திருந்து பெரியார், அம்பேத்கர் கொள்கையினை ஒவ்வரிடத்திலும் கொண்டு செல்வோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு கூட்டத்தினை நிறைவு செய்தார்கள்.

இணை அறிமுக விழா , கழக கொடியேற்று விழா, மற்றும் பெண்விடுதலைக் கருத்தரங்கம் கொளத்தூர் 30122018

இணை அறிமுக விழா , கழக கொடியேற்று விழா, மற்றும் பெண்விடுதலைக் கருத்தரங்கம் கொளத்தூர் 30122018

இணை அறிமுக விழா , கழக கொடியேற்று விழா, மற்றும் பெண்விடுதலைக் கருத்தரங்கம். திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் பகுதி தோழர் சரவணபரத் மற்றும் பிரியதர்சினி ஆகியோரது இணை அறிமுக விழா 30.12.2018 அன்று சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் , கொளத்தூர் ஒன்றியம் அய்யம்புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக காலை 10 மணியளவில் அய்யம்புதூரைச் சார்ந்த பெரியார் பெரும் தொண்டர் தோழர்.சி.சுப்பிரமணி அவர்கள் அய்யம்புதூர் பகுதியில் அமைப்பின் கொடிகம்பத்தை நிறுவி , கொடியேற்று விழா ஏற்பாடு செய்திருந்தார். பறை முழக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் .தோழர்.விடுதலை.இராசேந்திரன் அமைப்புக் கொடியை ஏற்றினார். பின்னர் ஊர்வலமாக தோழர்கள் அனைவரும் சென்றனர். அதற்கடுத்து காலை 11 மணியளவில் பெண்விடுதலைக் கருத்தரங்கம் நடைபெற்றது. திவிக பொருளாளர். தோழர்.துரைசாமி தலைமை வகித்தார் . சேலம் மாவட்ட தலைவர் தோழர்.சூரியக்குமார் முன்னிலை வகித்தார். தோழர்.ரத்தினசாமி மற்றும் தோழர்.சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) ஆகியோர்...

தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும்  விளையாட்டுப்போட்டிகள் திருப்பூர் 15012019

தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள் திருப்பூர் 15012019

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள் ! இசை நிகழ்ச்சி ! நாள் : தை1 (15.01.2019) செவ்வாய்க்கிழமை. நேரம் : காலை 8.00 மணி முதல் மாலை வரை. இடம் : பெரியார் திடல்,பெரியார் படிப்பகம்,வீரபாண்டி பிரிவு திருப்பூர். அனைவரும் வருக

19ஆம் ஆண்டு தமிழர் திருநாள். பொங்கல் விழா சென்னை 13012019

19ஆம் ஆண்டு தமிழர் திருநாள். பொங்கல் விழா சென்னை 13012019

*திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் பொங்கல் விழாக் குழு சார்பில்….* *திருவல்லிக்கேணியில் 19ஆம் ஆண்டு தமிழர் திருநாள்., பொங்கல் விழா…வரும் (13.01.2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வி.எம்.தெரு, இராயப்பேட்டை (பெரியார் சிலை அருகில்)* *புதுவை பிரகாசின் “அதிர்வு” கலைக்குழுவினரின்* பறையிசை, சிலம்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் மற்றும் *அருண் ரிதம்ஸ்* வழங்கும் சென்னை கானா, நாட்புறப் பாடல்கள் நிகழ்ச்சிகளோடு நடைபெறும் *கடந்த 06.01.2019 அன்று நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்* பரிசளிப்பு வாழ்த்துரை : *விடுதலை இராசேந்திரன்* பொதுச் செயலாளர், திவிக *திருமுருகன் காந்தி* ஒருங்கிணைப்பாளர்., மே17 இயக்கம் *ஆர்.என்.துரை* சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர், திமுக *பேராசிரியர்.சரசுவதி* *அனுஸ்ரீ* திருநர்காண உரிமை மீட்பு இயக்கம் தொடர்புக்கு : 7299230363

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து… “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து… “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது

“நிமிர்வோம்” தடைகளைத் தகர்த்து…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் “ஜனவரி 2019” மாத இதழ் வெளிவந்துவிட்டது…. 🚸 தலையங்கம் – திசை வழிகாட்டிய திருச்சி பேரணி 🗞 கருஞ்சட்டை – எதிர்நீச்சலின் வரலாறு 🗣🏴பாரதியின் பார்ப்பனியம் : பெரியார் எழுப்பிய கேள்விகள் 🚩🙅‍♀ பெண்கள் மீதான வன்முறைக்கு கருத்தியலை வழங்கும் புராணங்கள் – சாஸ்திரங்கள் 🙋‍♀ அய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம் 💯 ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்றது எப்படி? 📲 பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்? இன்னும் பல வரலாற்று பதிவுகளோடு….. தோழர்கள் இதழ்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 💰அஞ்சல் வழியாக பெற – ₹ 300/- 💰 ஆண்டு சந்தா – ₹ 240/- 💰 இதழ் விலை – ₹ 20/- திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

யாழ்ப்பாணப் பல்கலைகழகப் பேராசிரியர் அருட்தந்தை இரவிசந்திரனுடன் கலந்துரையாடல் 11012019 சென்னை

யாழ்ப்பாணப் பல்கலைகழகப் பேராசிரியர் அருட்தந்தை இரவிசந்திரனுடன் கலந்துரையாடல் 11012019 சென்னை

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைகழகப் பேராசிரியர் அருட்தந்தை இரவிசந்திரனுடன் கலந்துரையாடல் நாள்: 11-1-2019, வெள்ளி, மாலை 4 மணி இடம்: திராவிடர் விடுதலைக் கழகம், டாக்டர் நடேசன் சாலை, சிட்டி செண்டர் அருகில், மயிலாப்பூர் வருகின்ற 11-1-2019 வெள்ளி அன்று மாலை 4 மணி அளவில் திராவிடர் விடுதலைக் கழக அலுவலகத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருட்தந்தை இரவிச்சந்திரனுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்துள்ளோம். இதில் ஈழத்தில் உள்ள இப்போதைய அரசியல் நிலைமை, மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரானப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு செய்திகள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். இக்கலந்துரையடலில் தங்கள் அமைப்புச் சார்பாக தாங்களோ அல்லது வேறு நிர்வாகியோ கலந்து கொள்ளுமாறு ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். தோழமையுடன் கொளத்தூர் தா.செ. மணி, ஒருங்கிணைப்பாளர், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு தலைவர், திவிக தொடர்புக்கு: 99419 31499,...

பெங்களுருவில் விஷ்ணு சிலை அமைக்க தமிழகத்தின் பாறையை வெட்டுவதா? பி.யு.சி.எல். அமைப்பு கண்டனம்

பெங்களுருவில் விஷ்ணு சிலை அமைக்க தமிழகத்தின் பாறையை வெட்டுவதா? பி.யு.சி.எல். அமைப்பு கண்டனம்

பெங்களுருவில் விசுவரூப மகா விஷ்ணு சிலை அமைக்கத்  தமிழக அரசுக்குச் சொந்தமான பாறையைக் கொண்டு செல்லத் தடை  விதிக்கக் கோரி மக்கள் சிவில் உரிமைக் கழகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசிக்கு அருகிலுள்ள கொரக் கோட்டை கிராமத்திலிருந்து மிகப் பெரும் குன்றுப்பாறையை வெட்டி யெடுத்து, கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால், பெங்களூருவின் ஈஜிபுராவிலுள்ள கோதண்ட இராமசுவாமி கோவிலில், ஏறத்தாழ 300 டன் எடை கொண்ட விசுவரூப மகா விஷ்ணு சிலை அமைப் பதற்கு ஒரு அறக்கட்டளைக்கு  மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்தது கடும் கண்டனத்திற்கு உரியது. இவ்வளவு பிரமாண்டமான சிலையை அமைப்பதற்குத் தேவையான ஒற்றைக் கல் இந்தியாவில் எங்கும் கிடைக்கவில்லை எனவும், இச்சிலையை நிறுவத் திட்டமிட்ட பெங்களூருவிலுள்ள கோதண்ட இராமசாமி கோவில் அறக்கட்டளை,  அரசினை அணுகியது எனவும் இவர்களின் வேண்டுகோளை ஏற்று தொலைதூரச் செயற்கைக் கோளின் உதவியால், தேவையான கல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதை...

திருச்சிப் பேரணி : மலேசியத் தமிழர்களிடம் எழுச்சி

திருச்சிப் பேரணி : மலேசியத் தமிழர்களிடம் எழுச்சி

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் தமிழர் தன்மான இயக்கம் சார்பில் டிசம்பர் 24ஆம் தேதி திருச்சி கருஞ்சட்டைப் பேரணி குறித்து சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியார் அரங்கில் நடந்த இந்த நிகழ்வுக்கு தன்மான இயக்கத் தலைவர் பெரு. அ. தமிழ்மணி தலைமை தாங்கி திருச்சிப் பேரணி மிகப் பெருந் தாக்கத்தை உருவாக்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். மலேசிய தி.க. தேசியத் தலைவர் எப்.காந்தராசு, கெ.வாசு, த.பரமசிவம், நா.பாரி, இரா.பெரியசாமி, இவர்களோடு மாந்த நேய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ச. அன்பரசன், பெரியார் பாசறை துணைத் தலைவர் ம. இலட்சுமணன் ஆகியோர் திருச்சியில் கருஞ்சட்டைத் தோழர்களை வாழ்த்தி – வரவேற்றுப் பேசினார்கள். 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கருஞ்சட்டை அணிந்து வந்தனர். பகுத்தறிவு கவிஞர் தி.ப.செழியன்,  பெரியார் குறித்து சிறப்பான கவிதை வாசித்து அரங்கம் அதிர கரவொலி பெற்றார். இறுதியாக தலைமைச் செயலாளர் சி.மு.விந்தைக்குமரன் நிறைவுரையாற்றினார். இயக்கத் துணைப் பொதுச் செய லாளர் த.சி.அழகன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்....

பெரியார்  தொண்டர் உணவகத்தில் நெகிழிப் பயன்பாடு நிறுத்தம்

பெரியார் தொண்டர் உணவகத்தில் நெகிழிப் பயன்பாடு நிறுத்தம்

நெகிழி பொருட்கள் (பிளாஸ்டிக்), நெகிழி பைகள் ஜனவரி 1, 2019 முதல் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மந்தைவெளி பகுதியில் பெரியாரிய தொண்டர் சுரேஷ் நடத்தி வரும் ‘அய்யா உணவகத்தில்’ டிசம்பர் 31 முதல் வாழை இலை, துணிப்பை, பாக்குமட்டை தட்டு போன்றவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் மாரிமுத்து மற்றும் கழகத் தோழர்கள் நேரில்  சென்று வாழ்த்தி வரவேற்றனர். பெரியார் முழக்கம் 03012019 இதழ்

பெரியார் நினைவு நாள் நிகழ்வு

பெரியார் நினைவு நாள் நிகழ்வு

இராசிபுரத்தில் : தந்தைபெரியாரின் 45 வது நினைவேந்தல் நிகழ்வு இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  இராசிபுரம் ஜபாரதிதாசன் சாலையில் உள்ள தி.வி.கழக அலுவலகம்முன் நடைபெற்றது. பகுத்தறிவு பகலவனுக்கு முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்திய நிகழ்வில்  ர. சுமதிமதிவதனி  (தி.வி.க.), திலகா (இராசிபுரம்) வரவேற்புரையாற்றினார். இரா. பிடல்சேகுவேரா (நகரஅமைப்பாளர் தி.வி.க) தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டவர்கள் : வி.பாலு  நுஒ. ஆஊ, தி.மு.க.முன்னாள் மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர், தலைவர், இராசிபுரம் நகரவளர்ச்சி மன்றம். முன்னிலை: மணிமாறன் (நகர செயலாளர் சி.பி.ஐ.), ஜி.கே. வைகறை சேகர் (மாநில துணைச் செயலாளர் விவசாயஅணி, வி.சி.க.),  கண்ணன் (மாவட்டச் செயலாளர், ஆதித் தமிழர் பேரவை), தட்சிணாமூர்த்தி (மாவட்டத் தலைவர், தமிழர் தேசிய முன்னணி), நாணற்காடன் (மாநிலதுணைசெயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்), சுமன் (மா.துணை செயலாளர், ஆதி தமிழர்பேரவை), அண்ணாதுரை (ஒ.செயலாளர், ஆதிதமிழர் பேரவை), பாலகிருட்டிணன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), கீதாலட்சுமி...

மீனாட்சி அம்மன் கோவிலின் ஒரு நாள் வருவாய் 50 ரூபாயா?

மீனாட்சி அம்மன் கோவிலின் ஒரு நாள் வருவாய் 50 ரூபாயா?

“நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்?”புத்தகத்தை எழுதிய மாரிதாஸ், சமீபத்தில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட் டிருக்கிறார். வழக்கம்போல ஒரு போர்டில் கசமுசாவென ஏகப்பட்ட வார்த்தைகளை எழுதிவைத்துக்கொண்டு, மாரிதாஸ் உளறும் அந்த வீடியோ ஒரு பொய்களின் குவியல். எட்டு நிமிடங்களுக்கு ஓடும் அந்த வீடியோவில் அவர் எப்படி தகவல்களைத் திரித்துச் சொல்கிறார் என்பதைப் பார்ப்போம். இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ள கோவில்களின் எண்ணிக்கை 36, 488. பதில்: தவறு. 2018-19ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பின்படி, தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ள கோவில்களின் எண்ணிக்கை 38,646. அந்த நபர் சொல்வதுபோல 36 ஆயிரத்துச் சொச்சமல்ல. ஒரு சிறிய தகவலைக்கூட சரிபார்க்க முடியாமல், இவ்வளவு பெரிய பேச்சு. தமிழகக் கோவில்களிலிருந்து கிடைக்கும் வருவாயின் அளவு வருடத்திற்கு ஏறக்குறைய 55 கோடி ரூபாய். பதில்: பொய்....

ஆய்வரங்கமாக நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம்

ஆய்வரங்கமாக நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம்

‘நிமிர்வோம்’ மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் எட்டாவது வாசகர் வட்டம் டிச. 16, 2018 அன்று சென்னை திருவான்மியூர் பனுவல் புத்தக அரங்கில் ஆய்வரங்கம்போல் நடந்தது. தலைமைக் குழு உறுப்பினர் அன்பு. தனசேகர் தொடக்க உரையாற்றினார். (மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ வளர்ச்சிக்கு ரூ.1000 நன்கொடையும் வழங்கி வருகிறார்)  வளர்மதி எழுதிய ‘சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்’ நூல் குறித்து இமானுவேல் துரை  விரிவாக உரை நிகழ்த்தினார். குஞ்சிதம் குருசாமி, நீலாவதி இராம சுப்ரமணியம், சிவகாமி சிதம்பரனார் உரையிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டினார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய் திரள்வோம்’ நூல் குறித்து எட்வின் பிரபாகரன் நூலின் மய்யமான கருத்துகளை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினார். ‘நிமிர்வோம்’ இதழில் இடம் பெற்றிருந்த மனுஷ்யபுத்திரன் உரையை மய்யமாக வைத்து பெரியாரின் ‘கிராம சீர்திருத்தம்’ நூலோடு ஒப்பிட்டு மதன்குமார் திறனாய்வு செய்தார். யுவராஜ் – க. திருநாவுக்கரசு எழுதிய நீதிக் கட்சி...

சீனாவுக்கொரு சன் யாட் சென், தமிழ்நாட்டிற்கொரு பெரியார்

சீனாவுக்கொரு சன் யாட் சென், தமிழ்நாட்டிற்கொரு பெரியார்

திருச்சியில் நடந்த திசம்பர் 23 தமிழின உரிமை மாநாட்டில் பேசுவதாய் இருந்த உரை… பெரியார் பற்றாளர்களோடு நாமும் பகிர்ந்து கொள்ள சில செய்திகள் உண்டு. சுயராஜ்ஜியம், சுதந்திரம் என்ற ஆரவாரங்களுக்கு இடையே 1947 ஆம் ஆண்டே ஆகஸ்ட் 15 தமிழர்களுக்கு துக்க நாள் என்று சொன்ன தேசத் துரோகி – இந்திய தேசத் துரோகி, இந்து, இந்தியன் என்ற அடையாளத்தை என்றைக்கும் ஏற்காத (யடட வiஅந யவேi-iனேயைn), சாதியைப் பாதுகாக்கும் அரசமைப்பை கொளுத்துங்கள் என்று சொன்ன (ரசயெn யேஒயட), 1947இலேயே படேலின் பாசிச ஆட்சி என்று சொன்ன பெரியாருக்கு வீரவணக்கம். பெரியார் பற்றாளர்களுக்கு வணக்கம். தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவராக இருந்த போது பார்ப்பனிய மேலாதிக்கத்தையும் இந்திய தேசியத்தையும் ஏற்காத பெரியார் காங்கிரசிலில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். தனக்கென தனித்த வரலாறு கொண்ட தமிழ்நாட்டின் தனித்த வரலாற்றுப் பாதையை கடந்த நூற்றாண்டில்  உறுதிசெய்த வரலாற்று நிகழ்வு இது. இதனால்தான்,...

திருத்தம்

திருத்தம்

கடந்த வாரம் முதல் பக்கத்தில் வெளி வந்த சுப. வீரபாண்டியன் உரையில், தூத்துக்குடி மாநாட்டுப் பந்தல் எரிக்கப் பட்டது என்று தவறாக வெளி வந்து விட்டது. மதுரை மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்டது என்பதே சரி. தவறுக்கு வருந்துகிறோம்.                               (ஆர்) பெரியார் முழக்கம் 03012019 இதழ்

திருச்சிப் பேரணி : மூத்த கருஞ்சட்டைத் தோழரின் உணர்வு

திருச்சிப் பேரணி : மூத்த கருஞ்சட்டைத் தோழரின் உணர்வு

23.12.2018 அன்று திருச்சியில் நடைபெற்ற பெரியார் கருஞ்சட்டைப் பேரணி மாநாடு குறித்து பொது மக்கள் மற்றும் பெரியார் உணர்வாளர்கள், பெரியார் இயக்கத்தினரிடையே மிகுந்த பேரெழுச்சியும், மகிழ்ச்சி யும் ஒரு புதிய செயல் வேகமும் ஏற்பட்டிருக்கிறது. உணர்வாளர்களிடம் பேசிய போது பெரியார் பெருந்தொண்டர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் வணிகம் நடத்தி வரும் கம்பரசம் பேட்டையைச் சேர்ந்த பெரியவர் இருளாண்டி கூறிய கருத்து: “நான் சிறுவயதிலிருந்தே பெரியார் கொள்கைகளைப் பின்பற்று பவனாகவே இருந்தேன். எனது 18ஆவது வயதில் 1957இல் பெரியார் கூட்டிய தஞ்சை மாநாட் டிற்குப் பிறகு இப்பொழுதுதான் இவ்வளவு பெரும் கருஞ்சட்டைத் தோழர்களைப் பார்க்க முடிந்தது. உணர்ச்சி பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் வடித்தேன். எங்களுக்குப் பிறகு இந்த பெரியார் இயக்கத்தை வழி நடத்த, மக்களிடையே கொண்டு செல்ல யார் இருக்கிறார்கள் என்று நினைத்த வேளையில் பல ஆயிரக்கணக்கில் குறிப்பாக இளைஞர்களும் இளம் பெண்களும் பேரணியில் ஆட்டம் பாட்டம் முழக்கத்துடன் வந்தது...

பரப்புரை இயக்கங்கள்; போராட்டங்கள்; மாநாடுகள் 2018: கழகத்தின் தொடர் களப்பணிகள்

பரப்புரை இயக்கங்கள்; போராட்டங்கள்; மாநாடுகள் 2018: கழகத்தின் தொடர் களப்பணிகள்

2018இல் திராவிடர் விடுதலைக் கழகத்தில் செயலாற்றல் கொண்ட தோழர்கள் தொடர்ச்சியான களப்பணிகளை செய்து முடித்துள்ளனர். வழமையான பொதுக் கூட்டங்கள், பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் ஆகிய வற்றைத் தவிர்த்து மாநாடு, பரப்புரை, போராட்டம் மற்றும் பயிலரங்க நிகழ்வு களை மட்டும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் இடம் பெற்றுள்ள பதிவுகளிலிருந்து தொகுத்துள்ளோம். ஜனவரி: கல்வி – வேலை வாய்ப்பில் – தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் பறிக்கப்படுவதை விளக்கும் துண்டறிக்கைகளை பல்லாயிரக்கணக்கில் தயாரித்து கழக முன்னணி அமைப்பினர் – தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கல்லூரி, பள்ளி வாயில்களில் மாணவ மாணவிகளிடம் தோழர்கள் வழங்கினர். பா.ஜ.க. பார்ப்பனர் எச். ராஜா நடத்திய ஒரு சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் சங்கராச்சாரி விஜயேந்திரன் ‘தமிழ்த் தாய்’ வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்க மறுத்ததைக் கண்டித்து சேலம், மேட்டூர், பள்ளிப் பாளையம், ஈரோடு, மார்த்தாண்டம், மதுரை உள்ளிட்ட நகரங்களில்...