அன்னையார் வாழ்க்கைப் பாதை
1919 மார்ச் மாதம் 10-ஆம் நாள் வேலூரில் வி. எஸ். கனகசபை – பத்மாவதி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் சண்முகம், தியாகராஜன் ஆகிய இரண்டு சகோதரர்களும் கமலா என்ற ஒரு சகோதரி யும் ஆவார்கள். வேலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டு (எஸ்.எஸ்.எல்.சி.,) வரை படித்தார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரப் பட்டினம் சி.டி. நாயகம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் வகுப்பு படிக்கையில் கல்வி தடைப்பட்டுவிட்டது. 1936 வேலூருக்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பெரியாரிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். அப்போது நான்காவது பாரம் (9ஆம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்த போது பெரியாரைச் சந்தித்த காரணத்திற்காக, பள்ளி நிர்வாகம் இவரை வகுப்பிலிருந்து வெளி யேற்றியது. 1943 செப்டம்பர் மாதம் 11 -ஆம் நாள் தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளால் கவரப்பட்டு அய்யாவின் தொண்டராகப் பணியாற்ற வந்தவர். 1944 சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி ‘திராவிடர்...