‘முழக்கம்’ உமாபதி – பிரியா ஜாதி மறுப்பு மண விழா
திராவிடர் விடுதலைக் கழகத் தோழ ரும் புரட்சிப் பெரியார் முழக்கம் ஏட்டில் எட்டு ஆண்டு காலம் பொறுப்பாள ராகப் பணி புரிந்த வருமான ‘முழக்கம்’ உமாபதி – சி. பிரியா, ஜாதி மறுப்பு வாழ்க்கை இணையேற்பு விழா 19.1.2020 ஞாயிறு மாலை 7 மணியளவில் மயிலாப்பூர் சிசுவிஹார் சமுதாய நலக் கூடத்தில் சிறப்புடன் நடந்தது. மணவிழாவுக்கு பேராசிரியர் சரசுவதி தலைமை தாங்கினார். பேராசிரியர் மங்கை வரவேற்புரை நிகழ்த்தினார். கோவை இசை மதி, பெண்ணுரிமைப் பாடல்களைப் பாடினார். பெண்ணிய, பெரியாரிய வரலாற்று ஆசிரியர் வ. கீதா வாழ்த்துரை வழங்கினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உறுதிமொழி கூறி மணவிழாவை நடத்தி வைத்தார். கழகத் தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஏராளமாகத் திரண்டு வந்து வாழ்த்தினர். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000/- நன்கொடையை மணமக்கள் வழங்கினர். பெரியார் முழக்கம் 23012020 இதழ்