Author: admin

ஈரோடு குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தில்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

ஈரோடு குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

23.02.2020 அன்று மாலை 4 மணிக்கு சூஞசு சூசுஊ ஊஹஹ குடியுரிமைச் சட்டங்களை திரும்ப பெறக் கோரி ஈரோட்டில் செல்ல பாட்ஷா வீதியில் (ஈரோடு தினசரி மார்கெட் பின்புறம்) இஸ்லாமிய பெண்கள் பெரும் திரளாக நடத்தும் உரிமை மீட்பு தொடர் முழக்க 3ஆம் நாள் போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் கூறினார். தனது உரையில் இது அனைத்து மக்களுக்குமான பாதிப்பு என்று உணராமல் பல்வேறு மக்கள் இன்னும் அமைதி காப்பதாகவும் தோழர்கள், குறிப்பாக பெண்கள் முன்னெடுத்து போராடுவது மகிழ்ச்சிக்கும் நன்றிக்கும் உரியது என்றும் தன் நீண்ட உரையில் குறிப்பிட்டார். திராவிட முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இந்த சட்டங்களுக்கு எதிராக எப்போதும் போல் திமுக அரணாக நின்று காக்கும் என்று தன் உரையில் குறிப்பிட்டார். 500 பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த சட்டங்களைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி...

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

கோவையில் பிப். 9 அன்று நடந்த நீலச்சட்டை பேரணியன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி  முன்னிலையில்,  துளசி, அறிவரசு, சுரேசு, அசோக், மாதவன் ஆகிய புதிய தோழர்கள் இணைந்தனர். இவர்கள் கோவை மாவட்டத் தோழர்கள். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த  சமூக செயற்பாட்டாளர் மருத. உதயகுமார்  16.02.2020 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தன்னை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். பெரியார் முழக்கம் 05032020 இதழ்

காவலாண்டியூர் ஈசுவரன் கழக ஏட்டுக்கு நன்கொடை

காவலாண்டியூர் ஈசுவரன் கழக ஏட்டுக்கு நன்கொடை

காவலாண்டியூர் கழகத் தோழர், தலைமைக் குழு உறுப்பினர் ஈசுவரன் மகன் கனிகாசெல்வன்-இலக்கியா ஜாதி மறுப்பு மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.5000/- நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 05032020 இதழ்

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

நாச்சியார் கோயில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகக் கட்டமைப்பு நிதிக்கு ரூ.20,000/-மும், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினம், ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன், கட்டமைப்பு நிதியாக ரூ.5000/-மும் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 05032020 இதழ்

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய மக்கள் பதிவேட்டின் (என்.பி.ஆர்.) ஆபத்துகள்

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய மக்கள் பதிவேட்டின் (என்.பி.ஆர்.) ஆபத்துகள்

தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கும்; எளிய குடிமக்கள் தலையில் தங்களை நிரூபித்துக் கொள்ளும் சுமையை அழுத்துகிறது மத்திய அரசு என்றார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பிப். 17, 2020 அன்று பேராவூரணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: சென்ற இதழ் தொடர்ச்சி மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census) நாம் சொல்வதை அவர்கள் எழுதிக் கொள்வார்கள். எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை மதம் என்னவென்று சென்சசுக்காக கேட்டார்கள்; அவர் ‘திராவிட மதம்’ என்று கூறினார். எம்.ஜி.ஆர்.  இந்து மதம் என்று கூற வில்லை. ஆனால் அப்படி ஒரு மதம் உண்டா என்று கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது; மக்கள் சொல்வதை எழுதிக் கொள்ள வேண்டும். அதற்கென உள்ள கையேடு அப்படித்தான் கூறுகிறது. அதை எழுதிக் கொண் டார்கள். மக்கள் என்ன கூறுகிறார்களோ அதை எழுதிக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர்-யை திராவிட...

சேலம் ஊர்வலம் பற்றிய பொய்யுரை நடிகர் ரஜினிகாந்த் பேச்சை ‘துக்ளக்’ பத்திரிகையே வெட்டி விட்டது

சேலம் ஊர்வலம் பற்றிய பொய்யுரை நடிகர் ரஜினிகாந்த் பேச்சை ‘துக்ளக்’ பத்திரிகையே வெட்டி விட்டது

1971இல் சேலத்தில் பெரியார் நடத்திய மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் ஸ்ரீராமமூர்த்தி-சீதையின் உருவங்கள் நிர்வாணமாக, செருப்பு மாலை போடப்பட்டு எடுத்து வந்ததாக ‘துக்ளக்’ 50ஆம் ஆண்டு விழாவில் ‘ஆன்மீக’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார். அப்படிப் பேசியது உண்மைக்கு மாறான தகவல் என்று திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பெரியார் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டத்தை நடத்தி கைதானார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும் ரஜினிகாந்த் பேச்சைக் கண்டித்தன. பிறகு செய்தியாளர்களை சந்திந்த நடிகர் ரஜினி, தான் பேசியதற்கு ஆதாரமாக அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன் ‘அவுட்லுக்’ பத்திரிகையில்  எழுதிய கட்டுரையில் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது என்றும், தாம் பேசியதற்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்கப் போவது இல்லை என்றும் பொங்கினார். ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி, ரஜினி பேசியது உண்மைதான் என்று ‘சத்தியம்’ செய்தார். 1971ஆம் ஆண்டில் ‘துக்ளக்’ வெளியிட்ட சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு...

2007இல் தஞ்சை ஜாதி ஒழிப்பு மாநாட்டில் ஆசிட் தியாகராசன் நிகழ்த்திய உரை

2007இல் தஞ்சை ஜாதி ஒழிப்பு மாநாட்டில் ஆசிட் தியாகராசன் நிகழ்த்திய உரை

2007 மே 19 அன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆசிட் தியாகராசன் ஆற்றிய உரை. “நான் அதிகம் பேச முன்வரவில்லை. உண்மையைச் சொன்னால் – எனது 78 வயதில் நான் ஏறியுள்ள முதல் மேடை இது தான். புரட்சிகர இயக்கங்களுக்கு தனித் தனிப் படைகள் தேவை. நீங்கள் பிரச்சாரப் பீரங்கிகள்; பிரச்சாரப் படை. நான் தீவிரவாதத்தில் தான் இருப்பேன் (கைதட்டல்) . பெரியார் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போராட்டங்களில் நான் கலந்து கொள்வது இல்லை. நான் கருப்புச் சட்டையும் போடமாட்டேன்.என்னுடைய நடவடிக்கைகளால் கழகம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று கருதுபவன். என்னுடைய போராட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் எனக்கு நானே பொறுப் பாக்கிக் கொண்டுதான் நடத்துவேன். சுருக்கமாகச் சொல்கிறேன். பெரியாரின் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்துக்கு என்ன காரணம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் விபூதி வீர முத்து என்பவன், பெரியார் படத்தை...

பெரியாரிய போராளி ஆசிட் தியாகராஜன் முடிவெய்தினார்

பெரியாரிய போராளி ஆசிட் தியாகராஜன் முடிவெய்தினார்

பெரியாரிய போராளி ஆசிட் தியாகராஜன் 94ஆம் வயதில் பிப்.26, 2020 அன்று தஞ்சையில் அவரது இல்லத்தில் முடிவெய்தினார். இயக்கத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் வெளிச்சத்துக்கு வராமல் செயல்பட்ட தன்மானப் போராளி. பெரியாரை இழித்து பழித்துப் பேசியவர்களை ‘பகத்சிங்காக’ மாறி தண்டனை வழங்கியவர். 1957ஆம் ஆண்டு பெரியார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அரசு வழக்கறிஞரான சீனிவாச்சாரி என்ற பார்ப்பனர், பெரியாரை ‘ராமசாமி நாய்க்கர்’ என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டதைக் கேட்டு ஆத்திர மடைந்து, அவர் மீது ‘ஆசிட்’ வீசியதாக கைது செய்யப்பட்டவர். வன்முறைகளிலும் பழிவாங்குதலிலும் பெரியார் இயக்கத்துக்கு உடன்பாடு இல்லை என்றாலும், இயக்கத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ளாமல் பெரியார் உணர்வாளர்களாகப் பல போராளிகள் இயக்கத்துக்கு வெளியே செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ‘ஆசிட்’ தியாகராஜன். செய்தி அறிந்த நாகை மாவட்ட கழகத் தோழர்கள் ஆசிட் தியாகராஜனுக்கு வீரவணக்கம் செலுத்தினர். தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன், தஞ்சை மாவட்ட அமைப்பாளர்  பேராவூரணி திருவேங்கடம்,...

குடியுரிமையைப் பறிக்கும் கணக்கெடுப்புகளை புறக்கணிப்போம்!

குடியுரிமையைப் பறிக்கும் கணக்கெடுப்புகளை புறக்கணிப்போம்!

ரேஷன் கார்டு, ஓட்டுப் போட அட்டை – ஆதார், கார் ஓட்ட உரிமம் – இதுதான் நமக்குத் தெரிந்த நம்மிடம் உள்ள அடையாள அட்டைகள். ஆனால், டில்லியில் மோடி ஆட்சிக்கு இந்த அடையாள அட்டைகள் போதாதாம்; புதுப்புது அடையாளங்களைக் கேட்கிறது. அது என்ன அடையாளம் தெரியுமா? நாம் இந்த நாட்டின் குடிமக்களாக – அதாவது இந்தியாவைச் சார்ந்தவர்கள்தான் என்பதை நாமே நிரூபிக்க வேண்டுமாம்; அப்போதுதான் இந்த நாட்டில் இருக்க முடியுமாம்; இல்லாவிட்டால் நாம் நாடற்ற அனாதைகளாம்! நாம் – இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபிக்க புதிய கணக்கெடுப்பு நடத்தப் போகிறார்கள். இது எப்போதும் எடுக்கப்படும் ‘சென்சஸ்’ – அதாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அல்ல. அதில் நாம் சொல்வதைக் கேட்டு எழுதிக் கொண்டு போய் விடுவார்கள். இப்போது எடுக்கப்படும் கணக்கு என்பது வேறு; அது என்ன புது கணக்கெடுப்பு? அதற்குப் பெயர் ‘தேசிய மக்கள் தொகைப் பதிவேடு’. இதற்கு நாம்...

மயிலைப் பகுதியில் மனிதச் சங்கிலி குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள்

மயிலைப் பகுதியில் மனிதச் சங்கிலி குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள்

குடியுரிமை சட்டங்களுக்கு எதிராகவும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டங்களை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு போராட்டக் களமாக மாறி நிற்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலும் மக்கள் 24 மணி நேரமும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாநாடுகள், ஆர்ப்பாட் டங்கள், கருத்தரங்குகள், மனித சங்கிலி, கையெழுத்து இயக்கங்கள் என்று தமிழகமே கொந்தளித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு அதை எதிர்த்துப் போராடியவர்கள் மீது பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில் கட்சிகளை கொடூரமாக ஒடுக்கின. அசாமில் 6 பேரும், உ.பி.யில் 19 பேரும், கருநாடகாவில் 2 பேரும் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார்கள். டெல்லியில் சங்கிகள் வெளி மாநிலத்திலிருந்து வன்முறையாளர்களை இறக்குமதி செய்து இஸ்லாமியர்கள் மீது நடத்திய கொலை வெறியாட்டத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்து விட்டனர். காஷ்மீரில் 370ஆவது பிரிவை நீக்கி, அயோத்தியில் மசூதியை இடித்த இடத்தில் ‘ராமன்’ கோயிலைக் கட்ட நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற ஆணவத்தில் குடியுரிமை...

உலகத் தாய்மொழி நாள் – ஈரோடு பொதுக்கூட்டம்

உலகத் தாய்மொழி நாள் – ஈரோடு பொதுக்கூட்டம்

21.02.2020 அன்று உலகத் தாய் மொழி நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு, வடக்கு மற்றும் நாமக்கல் மாவட்ட கழகங்கள் ஒருங்கிணைப் பில் 23.02.2020 அன்று  ஈரோடு திருநகர் காலனி பகுதியில் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது, நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் சித்திக், தமுமுக மாவட்டத் தலைவர் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ச்சி யாக இணைய தள பொறுப்பாளர் விஜய்குமார், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்  முத்து பாண்டி குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சிற்றுரை ஆற்றினர். அடுத்ததாக ‘நாடு எங்கே போய்க் கொண்டுள்ளது‘ என்ற தலைப்பில் புதுகை பூபாளம் குழுவினர் பல்வேறு பகுத்தறிவு கருத்துக்களையும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கருத்துக்களையும் காண்பவர் கேட்பவர் மகிழ்ந்து பின் சிந்திக்கும் வண்ணம் 1.30 மணி நேரத்திற்கும் மேலாக பாடல், இசையோடு கலை நிகழ்ச்சி நடத்தினர். மக்கள் அனை வரும் ஆரவாரமிட்டு, கைத்தட்டி உற் சாகப்படுத்தி மகிழ்ந்து செவிமடுத்தனர் கழகத் தலைவர்...

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான – மக்கள் திரள் போராட்டத்துக்கு கழகம் ஆதரவு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான – மக்கள் திரள் போராட்டத்துக்கு கழகம் ஆதரவு

டெல்லியின் ஷாயின்பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டம் – குடியுரிமை தேசியப் பதிவேடு – குடியுரிமை மக்கள் தொகைப் பதிவு சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதேபோல் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் கண்ணன் ரவுண்டானா பகுதியில் 10 நாட்களாக இரவு பகலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வருகிறார்கள். பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த பொறுப் பாளர்கள் ஆதரவு தெரிவித்து பேசி வருகிறார்கள். ஆண்களைவிட இஸ்லாமிய பெண்கள் பெருமளவில் பங்கேற்பது இந்தப் போராட்டத்தின் தனிச் சிறப்பாகும். காவல்துறை அமைதியாகப் போராடிய மக்கள் மீது திடீரென தடியடி நடத்தி வன்முறையால் போராட்டத்தைக் கலைக்க முயற்சித்தது. அதற்குப் பிறகுதான் போராட்டம் குறித்த செய்தியை ஊடகங்களே வெளியிடத் தொடங்கின. தடியடிக்குப் பிறகு போராட்டம் தமிழ்நாடு முழுதும் மேலும் விரிவடைந்தது. வண்ணாரப்பேட்டை போராட்டக் களம் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியது. போராட்டத்தைத் தடை செய்ய ‘சங்கிகள்’ நீதிமன்றத்தை அணுகினர். போராடும் உரிமையை...

கழகத் தலைமை நிலையத்தில் ‘மாதவி’ குறும்படம் திரையிட்டு – விவாதம்

கழகத் தலைமை நிலையத்தில் ‘மாதவி’ குறும்படம் திரையிட்டு – விவாதம்

திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை அலுவல கத்தில் 22.02.2020 அன்று மாலை 5:30 மணியளவில் ‘மாதவி’ குறும்படம் திரையிடப்பட்டது.  தென் சென்னை மாவட்ட செய லாளர் உமாபதி வர வேற்புரை யாற்றி னார். தொடர்ந்து படக் குழுவினர் அறிமுகம் நடைபெற்றது. அதன்பின் கலந்துரையாடல் தொடங்கியது. குறும்படத்தைப் பற்றி ஆழமான விவாதங்களை ஒவ்வொருவரின் பார்வை யிலும் கலந்து கொண்ட தோழர்கள் கேள்விகள் எழுப்பியும், பாராட்டுக்களைத் தெரிவித்தும் குறும்படத்தைப் பற்றிய கருத்துக்களை பரிமாறினர். சிறப்பு விருந்தினர்களான, ஊடகவியலாளர் ஜீவசகாப்தன், மனித உரிமை செயல்பாட்டாளர் தேவநேயன், நக்கீரன் வலைதளப் பொறுப்பாளர் பிலிப்ஸ், மனிதி செல்வி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் ஆசிரியர் சிவகாமி, பேராசிரியர் சரசுவதி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தோழர்களின் கருத்து பரிமாற்றங்களுக்கு இடையில் சிறப்புரையாற்றினர். விரட்டு கலை பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். குறும்படம் திரையிடல், திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் விரட்டு கலை பண்பாட்டு...

7 தமிழர் விடுதலை: மாநில அரசு அழுத்தம் தராதது ஏன்? – நீதிபதி  து. அரிபரந்தாமன்

7 தமிழர் விடுதலை: மாநில அரசு அழுத்தம் தராதது ஏன்? – நீதிபதி து. அரிபரந்தாமன்

தங்கள் தீர்மானத்தை உதாசீனம் செய்யும் ஆளுநருக்கு எந்த அழுத்தமும் தர மாநில அரசும் முன்வரவில்லை. உள்ளபடியே அமைச்சரவையின் தீர்மானத்தின்படி ஆளுநர் செயல்படத் தவறியதைப் பற்றி தமிழக அரசு மக்களிடம் பேச வேண்டும். நீதி மன்றத்திலும் தமிழக அரசு வழக்குத் தொடுக்கலாம். 7 தமிழர் விடுதலைக்கு தமிழக அமைச்சரவை அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் நீண்ட காலம் கிடப்பில் போட்டு வைத்திருக்க முடியாது என்று கருத்து கூறிய உச்சநீதிமன்றம், இது குறித்து ஆளுநரின் கருத்து என்ன என்பதைக் கேட்டு நீதி மன்றத்துக்கு அறிக்கைத் தர உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி து. அரிபரந்தாமன், இது குறித்து எழுதி யுள்ள கட்டுரை. அரசமைப்புச் சட்டக் கூறு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின்படி, தமிழ்நாடு அரசின் அமைச்சரவை செப்டம்பர் 9, 2018 அன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 29 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் 7 தமிழர் களை விடுதலைசெய்வது எனத்...

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டம்: கொளத்தூர் மணி பங்கேற்பு

திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டம்: கொளத்தூர் மணி பங்கேற்பு

NPR-NRC-CAA -க்கு எதிரான தொடர் மக்கள் தர்ணா போராட் டத்தில் 22.02.2020 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று சிறப்புரை யாற்றினார். திருப்பூர் இளைஞர்களின் கூட்டமைப்பு, குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் திருப்பூர் காங்கேயம் ரோடு CTC டிப்போ பின்புறம் உள்ள அறிவொளி சாலையில் பாஜக மோடிஅரசால் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும், NRC NPR-ஐயும் திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து நடந்து வரும் தொடர் மக்கள் தர்ணா போராட்டத்தின் 7ஆவது நாளான 21.02.202 அன்று மாலை 6.00 மணிக்கு கழகத் தலைவர் CAA – NRC- NRP இன் அபாயம் குறித்து சிறப்புரையாற்றினார். இப்போராட்டத்தில் ஆயிரக் கணக்கான இசுலாமிய சகோதரர்களும், சகோதரிகளும், குழந்தைகளுடன் பங்கேற்று போராடி வருகிறார்கள். கழகத் தலைவருடன் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத்த லைவர் முகில்ராசு, இணைய தள பொறுப்பாளர் விஜய குமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக நிர்வாகிகள் அகிலன், தனபால்,...

லிங்காயத்து மடத்துக்கு இஸ்லாமியர் தலைவரானார்

லிங்காயத்து மடத்துக்கு இஸ்லாமியர் தலைவரானார்

முஸ்லீம்களை அன்னியர்களாக்கி வெறுப்பு அரசியலை ஒவ்வொரு நாளும் சங்கிகள் பார்ப்பனர்கள் அரங்கேற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்தச் சூழலில் கருநாடகாவில் ‘லிங்காயத்து’ மடம் ஒரு இளம் இஸ்லாமியரை தனது தலைவராக்கியுள்ளது. லிங்காயத்து என்ற பிரிவை 12ஆம் நூற்றாண்டில் உருவாக்கியவர் பசவா என்று அழைக்கப்படும் பசவண்ணா, மிகச் சிறந்த கவிஞர்; தத்துவவாதி; பார்ப்பனியத்தை சுட்டெரிக்கும் கவிதைகளால் சாடியவர். அவர் உருவாக்கிய மார்க்கத்தில் உறுப்பினர்களானவர்களுக்கு ஜாதி அடையாளம் கிடையாது. ‘இந்து’ என்ற அடையாளமும் கிடையாது. பசவண்ணாவின் ஜாதி எதிர்ப்பு முற்போக்கு தத்துவத்தை ஏற்றுக் கொண்ட எந்த மதத்தவரும் தலைவராகலாம். இப்போது பசவண்ணா தத்துவத்தை ஆழமாகப் படித்து அதை ஏற்றுக் கொண்ட ஹரியஃப்முல்லா என்ற இஸ்லாமிய இளைஞர், மடத்தின் தலைவ ராகியுள்ளார். பசவண்ணா உள்ளூர் மன்னரின் அரசவையில் நிதி மேலாண்மை செய்யும் உயர் அதிகாரப் பதவியில் இருந்தவர். அரசருக்கு பசவண்ணாவின் சீர்திருத்தக் கருத்துகளில் உடன்பாடு இல்லை. ஒரு முறை தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞனுக்கும், பார்ப்பனப் பெண்ணுக்குமிடையே பசவண்ணா ஜாதி...

27 சதவீத இடஒதுக்கீட்டை ஒழிக்கும் ஆபத்து

27 சதவீத இடஒதுக்கீட்டை ஒழிக்கும் ஆபத்து

‘உயர்ஜாதி ஏழைகள்’ என்ற பிரிவுக்கு 10 சதவித இடஒதுக்கீடு செய்த பார்ப்பன பா.ஜ.க. ஆடசி இப்போது ‘உயர்ஜாதி’ ஏழைகளுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் வயது வரம்பு சலுகைகளை வழங்க ஆலோசித்து வருகிறதாம். உரிய விண்ணப்பதாரர்கள் இல்லாத பிரிவினருக்குத்தான் வயது வரம்பு சலுகை தேவைப்படுகிறது. ஆனால் ஆதிக்கவாதிகளாக பார்ப்பன உயர் ஜாதியினருக்கு வயது வரம்பு சலுகைகளை வழங்கி ‘கட்ஆப் மதிப்பெண்’ பட்டியல் இனப் பிரிவினரை விட குறைந்து இருந்தாலும், கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க கதவு திறந்து விடப் போகிறார்கள். அதேபோல் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் மத்திய அரசுப் பதவிகளில் பாதியளவுகூட இன்னும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் பெற்றோர்  அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்கள் மாத வருமானத்தை கிரிமிலேயர் வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறார்களாம். அரசு ஊழியர், பொதுத் துறை ஊழியர் மாத வருமானம், விவசாய வருமானம் 1993ஆம் ஆண்டிலிருந்து ‘கிரிமிலேயர்’ பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இனி தாய், தந்தை...

குடியுரிமைச் சட்டங்களால் ஆபத்துகள் இல்லையா?

குடியுரிமைச் சட்டங்களால் ஆபத்துகள் இல்லையா?

குடியுரிமைச் சட்டங்களைக் கொண்டு வருவதன் நோக்கத்தை சங்கிகளே இப்போது வெளிப்படையாகப் பேசத் தொடங்கி விட்டார்கள். கிரிராஜ் சிங் என்ற மத்திய அமைச்சர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பீகாரின் வடகிழக்குப் பகுதியில் பரப்புரை செய்தபோது, “1947க்கு முன்பு ஜின்னா பாகிஸ்தான் நாடு கோரியபோதே இங்கிருந்து முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கும் அங்குள்ள இந்துக்களை இந்தியாவுக்கும் அனுப்பி வைத்திருந்தால் இப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வர வேண்டிய தேவையே இருந்திருக்காது” என்று பேசியிருக்கிறார். இதற்கு பா.ஜ.க. அமைச்சரவையிலேயே இடம் பெற்றுள்ள ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிரங் பஸ்வான் (பஸ்வானின் மகன்), பீகாரில் பா.ஜ.க. கூட்டணி கட்சியான நிதிஷ்குமார், கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள இந்துஸ்தானி சுவான் மோட்சா (மதச் சார்பின்மை) கட்சியின் தலைவர் கண்டனம் தெவித்திருப்பதோடு, கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் நோக்கமே இந்தியாவை இந்து ராஷ்டிரமாக்குவது தான் என்ற...

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய குடியுரிமை-மக்கள் பதிவேடுகள் அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தானவை

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய குடியுரிமை-மக்கள் பதிவேடுகள் அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தானவை

இந்த தேசிய மக்கள் பதிவேடும், இந்தியக் குடியுரிமைப் பதிவேடும் இஸ்லாமியருக்கு மட்டும் எதிரானதா? இல்லை, அனைத்துத் தரப்பினருக்கும் எதிரானது. தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கும்; எளிய குடிமக்கள் தலையில் தங்களை நிரூபித்துக் கொள்ளும் சுமையை அழுத்துகிறது மத்திய அரசு என்றார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பிப். 17, 2020 அன்று பேராவூரணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை எனக்கு முன்னர் உரையாற்றிய பலரும்  விளக்கி யிருக்கிறார்கள். குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் விலக்கி, குறிப்பிட்ட நாடுகளை உலகின் கொடூரமான நாடுகள் என்பதாக அடையாளப்படுத்துகிற ஒரு சட்டம்; அதிலும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர்களுக்கு மட்டும் – 2014க்குப் பின் அந்த நாடுகளெல்லாம் எந்த கொடுமைகளையும் செய்வதில்லை; 2014உடன் நிறுத்திவிட்டார்கள் என்பதைப்போல  -–இந்த சட்டத்தை ஏன் கொண்டு வந்தார்கள்...

‘நிமிர்வோம்’ – புதிய வெளியீடுகள் விற்பனைக்குத் தயார்!

‘நிமிர்வோம்’ – புதிய வெளியீடுகள் விற்பனைக்குத் தயார்!

  ட    இந்திய நாட்டினருக்கும் எதிரானது தான் குடியுரிமைத் திருத்தச் சட்டம் – கொளத்தூர் மணி ட   குடியுரிமைச் சட்டங்களைஏன் எதிர்க்கிறோம்? – விடுதலை இராசேந்திரன் ஒவ்வொன்றின் விலை ரூ.15/- மட்டுமே தொடர்புக்கு: விஜயகுமார், இணையதள பொறுப்பாளர் 9841653200 பெரியார் முழக்கம் 20022020 இதழ்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் நடத்திய அண்ணா நினைவு கருத்தரங்கு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் நடத்திய அண்ணா நினைவு கருத்தரங்கு

நிமிர்வோம் 13 ஆவது வாசகர் வட்ட நிகழ்வு. பேரறிஞர் அண்ணாவின் 51 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அண்ணா நினைவு தின சிறப்பு வாசகர் வட்டமாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் 16.02.2020 அன்று மாலை 6:30 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் ஊடகவியிலாளர் பிரகாஷ் வரவேற்புரையாற்றினார். தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சு.பிரகாஷ்  தலைமை வகித்தார்.  அண்ணாவின் இரங்கலுக்காக கலைஞர் எழுதிய கவிதையின் சிறு பகுதியை, ‘இதயத்தை தந்திடண்ணா’ என்ற தலைப்பில் யாழினி வாசித்தார். நிகழ்வில் 30.12.2019 அன்று வேலூர் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  ஆற்றிய உரை, ‘இந்திய நாட்டினருக்கும் எதிரானது தான் குடியுரிமை திருத்தச் சட்டம்’ என்கிற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இதனை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  வெளியிட, பேராசிரியர் மு.நாகநாதன்  பெற்றுக் கொண்டார். கடந்த வாசகர் வட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  ஆற்றிய உரை, ‘குடியுரிமை சட்டங்களை ஏன்...

கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

16.2.2020 ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணி அளவில் தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தில் மீன் மார்க்கெட் அருகில் மக்கள் அரசு கட்சி பொதுச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற அக் கட்சியின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து பெருவாரியான மக்கள் கலந்து கொண்டனர். அதில்  அழைக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்சித் பொறுப்பாளர்களும் உரையாற்றினார்கள். மக்கள் அரசு கட்சியின் தலைவர் வழக்கறிஞர் அருள்மொழிவர்மன் சிறப்புரை ஆற்றினார். அக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டி அக்கூட்டத்தின் நோக்கத்தையும், மக்கள் இந்த நேரத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டியதின் மிக முக்கியமான தேவையையும் வலியுறுத்தி நல்லதொரு கண்டன உரையாற்றினார்கள். கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நாச்சியார்கோயில் கிளையின் சார்பாக மூன்றாவது தவணையாக கழகக் கட்டமைப்பு நிதிக்காக ரூ.20,000/- கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது....

பெரியார் சிலை உடைப்பு எதிரொலி: பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்!

பெரியார் சிலை உடைப்பு எதிரொலி: பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே கலிப்பட்டு கிராமத்தில் சமூக விரோதிகளால் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலை கண்டித்து பேராவூரணியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி பெரியார் சிலை அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, தமிழக மக்கள் புரட்சி கழகம், அறநெறி மக்கள் கட்சி, விதை நெல் இலக்கிய கூடம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். கூட்டத்தில் உண்மைக்கு மாறாக பெரியாரை அவதூறு செய்யும் நோக்கத்தோடு ‘துக்ளக்’ இதழ் விழாவில் பேசிய ரஜினிகாந்துக்கு எதிராகவும்,  கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு அமைச்சர்...

திரைமறைவில் நடக்கும் இரகசிய பேரங்கள் இராஜபக்சேவை இந்தியா அழைத்தது ஏன்?

திரைமறைவில் நடக்கும் இரகசிய பேரங்கள் இராஜபக்சேவை இந்தியா அழைத்தது ஏன்?

சென்னை ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் விளக்கம் இராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து ‘ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு’ சார்பாக, சென்னை, வள்ளுவர் கோட்டம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை அதில் பங்கேற்றுள்ள அமைப்புகள் நடத்தியுள்ளன.  ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு பங்கேற்ற திராவிடர் விடுதலைக் கழகத்தின்  பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இன்றைய தினம் ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காவு கொடுத்து, பா.ஜ.க.வின் நரேந்திர மோடி அரசும்-சிங்கள இன வெறி அரசின் பிரதமரான இராஜ பக்சேவும் இணைந்து  நடத்திடும் ஈழத் தமிழரின் தேசிய இன  அடையாளமழித்து, அங்கு ஒற்றை ஆட்சி முறையை, ஆழ வேரூன்றச் செய்வதற்காக மேற் கொள்ளும் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி உரை யாற்றினார்.  அவரது உரையில் குறிப்பிட்டதாவது : இலங்கைப் பிரதமர் மஹிந்த இராஜபக்சே  5 நாள் அரசு முறைப் பயணமாக 07.02.2020 அன்று புது டெல்லிக்கு வருகை தந்திருக்கிறார். இவரை விமான நிலையம் சென்று வரவேற்றிருக்கிறார், இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை...

எதிர்த்த ஊர் மக்களே மேளதாளத்துடன் வரவேற்பு

எதிர்த்த ஊர் மக்களே மேளதாளத்துடன் வரவேற்பு

தலித் மக்கள் உரிமைக்காக வாதாடி வென்ற வழக்கறிஞர்  ப.பா. மோகனுக்கு பாராட்டு ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள  வடுகபாளையத்தில் கடந்த ஆறு ஆண்டு களுக்கு முன்பு, ஊர்ப் பொதுமக்கள் சுடுகாடு கேட்டு போராடி, இறந்த உள்ளூர்க்காரரின் உடலை நடுரோட்டில் வைத்து சாலை மறியல் செய்த காரணத்தால், 43 பேர் கைது செய்யப்பட்டு சிறைப் படுத்தப்பட்டனர். இதில் திராவிடர் விடுதலைக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, விடுதலை வேங்கைகள், தற்சார்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட இயக்கங்கள் களப்பணி ஆற்றி, மூத்த வழக்கறிஞர்  ப.பா. மோகன் மூலமாக, கடந்த 6 ஆண்டு களாக பெருந்துறை நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட் டிருந்த 43 பேரும் கடந்த 27.12.2019 அன்று பெருந் துறை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், எவ்வித கட்டணமும் வாங்காமல் வாதாடி விடுதலை பெற்றுத்தந்த மூத்த வழக்கறிஞர்  ப.பா மோகன் மற்றும் இந்தப்...

‘சோ’ ஊழல் எதிர்ப்பாளரா?

‘சோ’ ஊழல் எதிர்ப்பாளரா?

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஜெயில்சிங், இந்தியாவின் குடியரசுத் தலைவரானபோது காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தால் போதும் தகுதி வேண்டாம் என்று இரண்டு கழுதைகள் பேசுவதுபோல ‘துக்ளக்’கில் அட்டைப்பட கார்ட்டூன் போட்டார் சோ. பிறகு, காங்கிரஸ் கட்சியிலிருந்து மத்திய அமைச்சர் பதவி வகித்து, அவசர நிலை காலத்துக்குப் பிறகு காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில் காங்கிரசிலிருந்து விலகி, இராஜாஜியின் சுதந்திரா கட்சி ஆதரவாளராக அவர் நடத்திய ‘சுயராஜ்யா’ பத்திரிகையிலும் ஆசிரியராகி, பச்சை சந்தர்ப்பவாதியாக செயல்பட்ட ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவரானபோது, ‘துக்ளக்’ கழுதைப் படம் போடவில்லை. ஆர்.வி.க்கு பார்ப்பனர் என்பதைவிட வேறு என்ன தகுதி என்று ‘துக்ளக்’  விழாவில் கேட்டபோது, யாரை கழுதையாகப் போட வேண்டும் என்பது எனது உரிமை என்று பதில் கூறினார் சோ. காமராசர் நேர்மையானவர் என்று பேசி வந்த இதே சோ, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தன்னுடைய நாடகத்துக்கு பார்வையாளராக காமராசரை அழைத்து, அதே நாடகத்தில் காங்கிரசையும்...

கொளத்தூர் மணி அடுக்கடுக்கான கேள்விகள் ‘துக்ளக்’ சோ நேர்மையானவரா?

கொளத்தூர் மணி அடுக்கடுக்கான கேள்விகள் ‘துக்ளக்’ சோ நேர்மையானவரா?

ரஜினிகாந்த் சான்றிதழ் வழங்குவதுபோல் சோ நேர்மையானவர்தானா என்ற கேள்வியை எழுப்பி, அவரது முகத்திரையைக் கிழித்துக் காட்டினார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. ‘சேலத்தில் நடந்தது என்ன?’ எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் தலைமையேற்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை: அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் 1971ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டைப் பற்றி நாம் பேச வேண்டிய தேவை தற்போது எழுந்திருக்கிறது. பெரியார் இயக்கத்திற்கு எதிரிகள் தான் எப்போதும் விளம்பரம் கொடுத்து வந்துள்ளார்கள். அதே போல் தற்போதும்கூட சேலம் மாநாட்டில் என்ன நடந்தது என்று பலருக்கும் தெரியாது. 1971ற்குப் பிறகு பிறந்தவர்கள் தான் இங்கு ஏராளமானவர்கள் வந்திருக்கிறார்கள். 1971இல் அந்த மாநாட்டில் தான் நான் முதன் முதலில் கலந்து கொள்கிறேன். பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டது உண்டு. ஆனால் மாநாடு என்று பார்த்தால் அந்த மாநாடு தான் முதல் மாநாடு. அப்போது இயக்கம்...

மேடையிலேயே திருமணம் நடத்தி பண்பாட்டுப் புரட்சியை நிகழ்த்திய திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள்

மேடையிலேயே திருமணம் நடத்தி பண்பாட்டுப் புரட்சியை நிகழ்த்திய திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள்

கோவை நீலச்சட்டைப் பேரணியையொட்டி நடந்த ஜாதி ஒழிப்பு மாநாட்டில் இரண்டு திருமணங்களை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நடத்தி வைத்தார். இரண்டு இணையர்களுமே திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன்-பா. குமாரி ஆகியோரின் மகள் இலக்கியா வுக்கும், மேட்டூர் காவலாண்டியூர் கழகத் தோழரும் தலைமைக் குழு உறுப்பினரு மான கா. ஈசுவரன்-ஈசுவரி ஆகியோரின் மகன் கணிகா செல்வனுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் மேடையில் நடந்தது. திருச்செங்கோடு ரங்கநாதன்-புஷ்பலதா ஆகியோரின் மகனும், கழகத் தோழரும் ஊடகவியலாளருமான ர. பிரகாஷ்- காவலாண்டியூர் கழகத் தோழர் சரசுவதி-சந்திரன் ஆகியோரின் மகள் இரம்யா வுக்கும் மேடையில் திருமணம் நடந்தது. மாலை மாற்றிக்கொண்டு 5 நிமிடங்களில் இரண்டு திருமணங்களும் நடந்து முடிந்தன. மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு பிரகாஷ்-ரம்யா இணையர் ரூ.5000-மும், இணையர் இலக்கியா-கணிகா செல்வன் சார்பில் ரூ.5000-மும் கழக ஏட்டுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. பெரியார்...

சேலம் மாநாட்டில் நடந்தது என்ன? : சிறப்புக் கூட்டத்தில் விரிவாக விளக்கினார், மூத்த வழக்கறிஞர் துரைசாமி

சேலம் மாநாட்டில் நடந்தது என்ன? : சிறப்புக் கூட்டத்தில் விரிவாக விளக்கினார், மூத்த வழக்கறிஞர் துரைசாமி

‘1971இல் சேலம் மாநாட்டில் நடந்தது என்ன?’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான செ. துரைசாமி, சென்னையில் தலைமைக் கழக அரங்கில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் விரிவாகப் பேசினார். நிகழ்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாநாட்டையொட்டி இந்துக் கடவுள்களை புண்படுத்தி விட்டதாக மாநாட்டு வரவேற்புக் குழு உறுப் பினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் தந்தை பெரியார் ஆணையை யேற்று தோழர்கள் சார்பில் வாதாடியவர் வழக்கறிஞர் துரைசாமி. வழக்கு முதலில் சேலம் நீதிமன்றத்தி லும் பிறகு சென்னை பெருநகர நீதி மன்றத்திலும் நடந்தது. பிறகு சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றத்திலும் நடந்தது. சேலம் – சென்னை பெருநகர நீதிமன்றங்களின் வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக ‘துக்ளக்’ சோ சாட்சிய மளித்தபோது அவரை குறுக்கு விசாரணை செய்தார், வழக்கறிஞர் துரைசாமி. பெரியாரை நோக்கி சேலம் ஊர்வலத்தில் செருப்பு...

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (5) பார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே  இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (5) பார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் – குடியுரிமை பதிவேடு – தேசிய மக்கள் தொகைப் பதிவேடு களில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை யாற்றினார். அவரது உரையிலிருந்து: (சென்ற இதழ் தொடர்ச்சி) இந்திரா காந்தி பிரதமராகிறார். பிரதமர் ஆனவுடன் ‘ஆர்கனைசர்’ பத்திரிக்கை என்ன எழுதுகிறதென்றால், ‘பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்ததே தேவையில்லாத ஏமாற்றுத்தனமான முயற்சி. ஓட்டுரிமை அளிக்கக் கூடாது. It is becoming clear that the Female franchise is unnecessary duplicate of effort. பெண்களுக்கு ஓட்டுரிமை அளிப்பது போலித்தனமான முயற்சி’ என்று எழுதினார்கள். ஏனென்றால் அப்போது இந்திரா காந்தி பிரதமரானார். கணவர் இறந்த பின்பு கணவர் இல்லாத பெண்மணியாக அவர் இருக்கிறார். 1966 ஜனவரி 30 அன்று ஆர்கனைசர் ஒரு தலையங்கத்தைத் தீட்டியது. அதில் ஆர்.எஸ்.எஸ்....

கோவை நீலச்சட்டைப் பேரணி மாநாட்டுத் தீர்மானங்கள்

கோவை நீலச்சட்டைப் பேரணி மாநாட்டுத் தீர்மானங்கள்

அயோத்திதாசர் பிறந்த நாளான மே 20இல் மனு சாஸ்திர எரிப்புப் போராட்டம்   ஜாதி மறுப்பு திருமணப் பாதுகாப்பு ஆணையம் அமைத்திடுக! பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் திருவள்ளுவராண்டு 2051 (9.2.2020) – அன்று வ.உ.சி. திடலில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்: வீரவணக்கத் தீர்மானங்கள் : 1.  சாதிக் கொடுமைகளை எதிர்த்தும், சாதி  ஆதிக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தோடும் களமாடிய வலியுறுத்திக் கருத்துப்போர் நிகழ்த்திய திருவள்ளுவர், ஒளவையார் தொடங்கி எண்ணற்ற தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், கருத்தாளர்கள் மற்றும் 1957ஆம் ஆண்டு சாதி ஒழிப்புக்காக சாதியைப் பாதுகாக்கின்ற சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்திச் சிறை சென்றதோடு மட்டுமின்றி, அப்போராட்டக் காலச் சூழலில்  ஈகியர்களான எண்ணற்ற தோழர்கள் உள்ளிட்ட 20ஆம் நூற்றாண்டின் சாதி ஒழிப்புப் போராளியர்களாக முனைந்து எழுந்த அறிஞர்கள், இயக்கச் செயற் பாட்டாளர்கள், களப் போராளியர்கள், முன்னின்ற பொதுமக்கள் என அனைவருக்கும் மற்றும் அண்மையில் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்த...

அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி

அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பாக கோவையில் கடந்த 9.2.2020 அன்று நீலச் சட்டை பேரணி ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. காவல்துறை அனுமதி மறுப்பின் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த நிகழ்வு பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்புத் தோழர்களின் இடையறாத முயற்சியால் நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெறப்பட்டு பேரணியும் மாநாடும் திட்டமிட்டபடி நடந்துள்ளது. இந்தப் பேரணியும் மாநாடும் பொதுமக்களின் பார்வையை ஈர்த்து விடக்கூடாது என்று அரசும் காவல் துறையும் பேரணி துவங்கும் போதும் மாநாடு நடைபெறும் பொழுதும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திய வண்ணமே இருந்தார்கள். பேரணி நடைபெறும் 9.2.2020 முந்தைய நாள் மதியம் திடீரென காவல்துறை ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்த பேரணி செல்லும் பாதைக்கு அனுமதி மறுத்து குறுகலான சாலையில் பொதுமக்களின் பார்வை படாத இடத்தில் ஊர்வலப் பாதையை மாற்றி அமைத்தது. கோவையில் அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் பொதுக் கூட்டங்கள் நடத்தும் வ.உ.சி. பூங்கா மைதானத்தில ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்துவதற்கு...

மடத்துக்குளம் பகுதியில் குடியுரிமைச் சட்ட ஆபத்துகளை விளக்கி பரப்புரை

மடத்துக்குளம் பகுதியில் குடியுரிமைச் சட்ட ஆபத்துகளை விளக்கி பரப்புரை

காந்தியார் படுகொலை நாளை முன்னிட்டு, 30.1.2020 அன்று உடுமலை. மடத்துக்குளம் பகுதியில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையில் உடுமலை மடத்துக்குளம் முற்போக்காளர் கூட்டமைப்பு சார்பாக காந்தி படுகொலை  நாள் ஊஹஹ., சூசுஊ., சூஞசு. எதிர்ப்புப் பரப்புரை பயணமாக நடத்தப்பட்டது.  வேன்கள், இரு சக்கர வாகனம் மூலம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் இரா. மோகன்  தலைமையில் துவங்கியது.குமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர், காரத் தொழுவு, துங்காவி, பூளவாடி, குடிமங்கலம், பெதப்பம்பட்டி, கொங்கல் நகர், முக்கோணம் பகுதி, குட்டை திடல், இறுதியாக உடுமலை சித்தரக் கூடம் ஆகிய பகுதிகளில் மக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. பரப்புரை பயணத்தில், இந்திய ஜக்கிய கம்யூனிஸ்ட் , ஆதி தமிழர் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் பண்பாட்டு இயக்கம், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் தமிழர் கட்சி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியில்...

நாச்சியார் கோயில் கழகக் கூட்டத்தில் கழகத்தினர் வழங்கிய ரூ.30,000 நிதி

நாச்சியார் கோயில் கழகக் கூட்டத்தில் கழகத்தினர் வழங்கிய ரூ.30,000 நிதி

பெரியாரின் 41 ஆவது நினைவு நாள் கூட்டம் 1.2. 2020 அன்று சனிக்கிழமை மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்டம்  நாச்சியார் கோவில் வடக்கு வீதியில்   மிகச் சிறப்பாக நடை பெற்றது.   மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் தலை மையிலும் தலைமைக் குழு உறுப்பினர்  இளைய ராஜா மற்றும் சோலை மாரியப்பன் முன்னிலையிலும் தொடங்கியது. கூட்டத்திற்கு, குடந்தை ஒன்றிய அமைப்பாளர் வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட செயலாளர் கு. பாரி, நாகை மாவட்ட செயலாளர்  தே.மகேஷ், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்முகமது , சிவபுரம் மாணவர் கபிலன் ஆகியோர் உரையாற்றினர் . அதனைத் தொடர்ந்து நாச்சியார் கோவில் தி.வி.க . கிளைக் கழகம் சார்பில் இரண்டாவது தவணையாக ரூ.30,000  (முப்பதாயிரம் மட்டும்) கழகத் தலைவர் தா.செ. மணியிடம் வழங்கப்பட்டது. கழகத்  தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை நிகழ்த்தினார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகவே பேச்சு...

‘கற்க கல்வி’ அறக்கட்டளை சார்பில் மணியம்மையார் நூற்றாண்டு விழா – பொதுக் கூட்டம்

‘கற்க கல்வி’ அறக்கட்டளை சார்பில் மணியம்மையார் நூற்றாண்டு விழா – பொதுக் கூட்டம்

‘கற்க கல்வி’ அறக்கட்டளை சார்பாக 02.02.2020 அன்று மாலை 6 மணியளவில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ் வழியில் பயிலும் 2000 மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் விழாவும், சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. கற்க கல்வி அறக்கட்டளை செயலாளரும், திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினருமான கரு அண்ணாமலை நிகழ்விற்கு தலைமை வகித்தார்.  திவிக தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர் நிகழ்வை ஒருங்கிணைத்தார். ப.அமர்நாத் வரவேற்புரை யாற்றினார். ‘விரட்டு’ வீதி நாடகக் குழுவினர், ‘ஹசவiஉடந 21’ அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம் என்ற தலைப்பில், தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்தை விளக்கும் வகையில் வீதி நாடகத்தை நிகழ்த்திக் காட்டினர். அதைத் தொடர்ந்து, மருத்துவர் எழிலன், மா.சுப்பிரமணி (தென் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர்), வழக்கறிஞர் எஸ். துரைசாமி (துணைத் தலைவர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்), கொளத்தூர் மணி...

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (4) ‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே  குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (4) ‘அகண்ட இந்துராஷ்ர’ கனவை செயல்படுத்தவே குடியுரிமை அடையாளங்களைக் கையில் எடுக்கிறார்கள்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் – குடியுரிமை பதிவேடு – தேசிய மக்கள் தொகைப் பதிவேடு களில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை யாற்றினார். அவரது உரையிலிருந்து: (சென்ற இதழ் தொடர்ச்சி) தற்போது சுப்ரயமணிசாமி அயோத்தி வரலா றும் இந்து மறுமலர்ச்சியும் என்ற நூல் எழுதியிருக் கிறார். இந்த நூலில், ‘இந்திய நாட்டினுடைய வரலாற்றை புராணங்களின் அடிப்படையில் எழுத வேண்டும். நமக்கு முன் நமது வரலாற்றை எழுதியவர்கள் நமது அந்நியர்கள். நாம் எழுதுகிற வரலாறு புராணங்களின் வரலாறாக இருக்க வேண்டும்’ என்று சுப்ரமணியசாமி எழுதியுள்ளார். சுப்ரமணியசாமி எதனடிப்படையில் இப்படி எழுதுகிறார்? எதனால் புராணங்களின் படி இந்தியாவை வரையறுக்க வேண்டும்? என்று கூறு கிறார். இந்த சிந்தனை யாரிடமிருந்து சுப்ரமணிய சாமிக்கு வருகிறது? ஆர்.எஸ்.எஸ்-இன் குரு கோல்...

கழகத் தோழர்களே!

கழகத் தோழர்களே!

புரட்சிப் பெரியார்முழக்கம், நிமிர்வோம் இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்தை விரைவுப் படுத்துவீர்! 2020ஆம் ஆண்டில் இதழ்கள் தொடர்ந்து வெளிவர வேண்டிய பொறுப்பை தோழர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறோம். இயக்க இதழ்கள் தான் தோழர்களை இணைக்கும் இணைப்புச் சங்கிலி. தோழர்களின் செயல்பாடுகளை சுமந்து வரும் கழகத்தின் ‘தூது மடல்’. ஒரு இயக்கம் உயிரோட்டமாக தன்னை இறுத்திக் கொள்வதற்கு இயக்க இதழ்களே சுவாசக் காற்று என்பது, நீங்கள் அறியாதது அல்ல! தோழர்களே! விரைந்து செயல்படுங்கள்! பிப்ரவரி இறுதிக்குள் சந்தா சேர்ப்பு இயக்கத்தை நிறைவு செய்தாக வேண்டிய கடமை உணர்ந்து, களத்தில் இறங்குங்கள்! பெரியார் முழக்கம் 06022020 இதழ்

ஆசிரியருக்குக் கடிதம் வேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்?

ஆசிரியருக்குக் கடிதம் வேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்?

பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஒருவர் ‘இந்து’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார். இந்து ‘சனாதன தர்மம்’ இந்துக் கடவுள்களின் பிறப்பு, இந்து மத நூல்கள் குறித்து பெரும்பாலான இந்து மக்களுக்கு எதுவும் தெரியாது. அதன் காரணமாகத்தான் பார்ப்பனர்கள் சூழ்ச்சியாக, தங்கள் பார்ப்பனிய வேத மதத்தை இந்து மதம் என்று கூறி பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அர்ச்சகர் ஆகும் உரிமை தங்களுக்கே உண்டு என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடுகிறார்ககள். ஆனால் வழிபாடுமுறைகள் குறித்து புரோகிதர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. கல்வித் தரத்தை உயர்த்த ‘நீட்’ தேர்வு 5ஆம் வகுப்புக்கு தேர்வு; 8ஆம் வகுப்புக்கு தேர்வு என்றெல்லாம் பேசுகிறவர்கள் அர்ச்சகர் புரோகிதர் ஆவதற்கும் ‘தகுதி’ வேண்டும். அதற்கான தேர்வு வேண்டும் என்றும் ஏன் வலியுறுத்துவது இல்லை? அதேபோல் சமஸ்கிருதத்தில் புரோகிதப் பார்ப்பனர்கள் ஓதும் மந்திரங்களின் தமிழ்மொழி பெயர்ப்பை ஏன் மக்களிடம் எடுத்துச் சொல்லக் கூடாது? இந்தி திரைப்படம் ஓடினால் புரிந்து கொள்வதற்கு அதற்கு...

பசு மாட்டுத் தோலில்  தயாரிக்கும் ‘மிருதங்கத்தை’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா?

பசு மாட்டுத் தோலில் தயாரிக்கும் ‘மிருதங்கத்தை’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா?

டி.எம். கிருஷ்ணா, பார்ப்பனராகப் பிறந்தாலும் பார்ப்பனர்களை எதிர்க்கும்  அதிசயமான கருநாடக இசைப் போராளி. கருநாடக இசையை குடிசைப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர். கானா பாடல்களையும், இஸ்லாமிய கிறிஸ்துவ மதப் பாடல்களையும் கருநாடக இசையில் அவர் இணைத்துப் பாடுகிறார். பார்ப்பனர்கள் பதறு கிறார்கள். ‘கருநாடக இசையில் ஜாதி’ என்ற நூலை அவர் ஏற்கனவே எழுதினார். பார்ப்பனர்கள் கொந்தளித்தார்கள். இப்போது கருநாடக இசையில் பயன்படுத்தப்படும் மிருதங்கம் குறித்து ஒரு ஆங்கில நூலை எழுதியிருக்கிறார். ‘செபாஸ்டியன் அண்ட் சன்ஸ், மிருதங்கம் தயாரிப்போரின் சுருக்கமான வரலாறு’ என்பது நூலின் பெயர். இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு கலாnக்ஷத்திராவில் உள்ள அரங்கம் தேர்வு செய்யப்பட்டது. நிர்வாகமும் அனுமதி வழங்கியது. மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் கலாnக்ஷத்திரா, சென்னை அடையாறு பகுதியில் பல நூறு ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருக் கிறது. நாட்டியக் கலை-இசைக் கலையை வளர்ப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கம். பார்ப்பனர் ஆதிக்கப் பிடியில் செயல்படும் இந்த...

‘பட்ஜெட்’டில் சமூக நலத் திட்டங்கள் புறக்கணிப்பு

‘பட்ஜெட்’டில் சமூக நலத் திட்டங்கள் புறக்கணிப்பு

நாட்டின் பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்புகள் குறித்து எந்தத் திட்டமும்  நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. குறிப்பாக மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. கிராமப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. இதற்கான திட்டங்களை முன் வைக்காமல் கார்ப்பரேட் நலன்களையே குறி வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சமூக நலத் துறைக்கான நிதிகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. கிராமப்புற ஏழை மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் ரேஷன் கடைகள் வழியாக உணவு விநியோகம் என்ற இரண்டு திட்டங்களும் கடும் நெருக்கடி நிலையிலும் கிராமப்புற ஏழை மக்களைப் பாதுகாத்து வந்தன. இத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இப்போது குறைக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு 61,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் (2019-20) இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.71,000 கோடி தேவை என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் 10,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 60,000...

இல்லாத சரஸ்வதி நதி – நிதிநிலை அறிக்கைக்குள் எப்படி வந்தது?

இல்லாத சரஸ்வதி நதி – நிதிநிலை அறிக்கைக்குள் எப்படி வந்தது?

2020-21ஆம்  ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிந்து சமவெளி நாகரிகத்தை ‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ என்று பல முறை குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. மத்திய அமைச்சரின் பேச்சை விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நிதியமைச்சர் முதலில் தவறாகப் படிக்கிறார் என்று எண்ணினேன். ஆனால், அவர் மீண்டும் மீண்டும் ‘சரஸ்வதி சிந்து நாகரிகம்’ என்றே குறிப் பிட்டார். இது புதிதல்ல. ஆர்.எஸ்.எஸ் தொடர்ச்சி யாக இதையே சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்துத்துவவாதிகள் இந்திய வரலாற்றை புதியதாக கட்டமைக்க இதைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.  வேதப் பண்பாடுதான் இந்தியப் பண்பாடு. வேத நாகரிகம் தான் இந்திய நாகரிகம் என்று மீண்டும் மீண்டும் நிறுவ நினைக்கிறார்கள். அதற்கான குறியீடாகத்தான் சரஸ்வதி நதியை பயன்படுத்து கிறார்கள். சரஸ்வதி நதி என்று...

கழகத் தோழர்களே!

கழகத் தோழர்களே!

புரட்சிப் பெரியார்முழக்கம், நிமிர்வோம் இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்தை விரைந்து தொடங்கிடுவீர்! 2020ஆம் ஆண்டில் இதழ்கள் தொடர்ந்து வெளிவர வேண்டிய பொறுப்பை தோழர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறோம். இயக்க இதழ்கள் தான் தோழர்களை இணைக்கும் இணைப்புச் சங்கிலி. தோழர்களின் செயல்பாடுகளை சுமந்து வரும் கழகத்தின் ‘தூது மடல்’. ஒரு இயக்கம் உயிரோட்டமாக தன்னை இறுத்திக் கொள்வதற்கு இயக்க இதழ்களே சுவாசக் காற்று என்பது, நீங்கள் அறியாதது அல்ல! தோழர்களே! விரைந்து செயல்படுங்கள்! பிப்ரவரி இறுதிக்குள் சந்தா சேர்ப்பு இயக்கத்தை நிறைவு செய்தாக வேண்டிய கடமை உணர்ந்து, களத்தில் இறங்குங்கள்! பெரியார் முழக்கம் 30012020 இதழ்

திருப்பூர்-கொளத்தூர்-மேட்டூரில் தமிழர் திருநாள்

திருப்பூர்-கொளத்தூர்-மேட்டூரில் தமிழர் திருநாள்

திருப்பூர் மாவட்ட திவிக சார்பில் பதினோராம் ஆண்டு தை 1 தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா நாள் 26.1.2020 ஞாயிறு காலை 8 மணிக்கு மாஸ்கோ நகர் பெரியார் திடலில் நிகர் கலைக்குழுவினர் பறை முழக்கத் துடன் ஆரம்பித்தது. தமிழர் விழா, பகுதி மக்களின் ஒத்துழைப்போடு நடைபெறும் இவ்விழாவில் முதல் நிகழ்வாக காலை 9 மணி அளவில் தோழர் புல்லட் இரவி (அமமுக) பொங்கல் வழங்கினார். அதனை தொடர்ந்து சிறுவர் சிறுமி களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை சேகர் (அதிமுக) தொடங்கி வைத்தார். கழகப் பொருளாளர் துரைசாமி தொடக்க உரையாற்றிய பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, செயலாளர் நீதிராசன், அமைப்பாளர் அகிலன், சங்கீதா, மாநகர் தலைவர் தனபால், செயலாளர் மாதவன் மற்றும் மாநகர் அமைப்பாளர் முத்து ஆகியோர் பல்வேறு விளையாட்டு போட்டிகளை திறம்பட நடத்தினர். உடன் தமிழ்நாடு மாணவர் கழக நிர்வாகிகள் தோழர் சந்தோஷ் மற்றும் பிரசாந்த் ஒருங்கிணைத்தனர் சிறுவர்...

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (3) இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை தரக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை

விடுதலை இராசேந்திரன் விளக்க உரை (3) இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை தரக் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். கொள்கை

குடியுரிமைத் திருத்தச் சட்டம் – குடியுரிமை பதிவேடு – தேசிய மக்கள் தொகைப் பதிவேடு களில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை யாற்றினார். அவரது உரையிலிருந்து: (சென்ற இதழ் தொடர்ச்சி) உத்திர பிரதேசத்தின் முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடு கிறவர்கள் எங்களின் ஒடுக்கு முறையைக் கண்டு அஞ்சி ஓட வேண்டும்’ என்று பதிவிடும் அளவிற்கு அங்கு நிலைமை மோசமாக சென்று கொண்டிருக்கிறது. மோடி சொல்கிறார், குடியுரிமைப் பதிவேடு பற்றி நாங்கள் விவாதிக்கவே இல்லை என்று. எதிர்ப்பு வந்த பின்பு இந்தக் கருத்தை கூறுகிறார். ஒரு நாட்டினுடைய பிரதமராக இருக்கக்கூடிய ஒருவர் இதைவிட ஒரு தரம் தாழ்ந்தவராக இருக்க முடியாது. ஏனென்றால், அசாமில் இருந்து கொண்டு அமித்ஷா கூறுகிறார் இந்தியா...

உள்ளாட்சியில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை: கழகத் தோழர்கள் நேரில் வாழ்த்து

உள்ளாட்சியில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை: கழகத் தோழர்கள் நேரில் வாழ்த்து

தமிழகத்தில் முதன் முதலாக தேர்தலில் நின்று, தமிழகத்தின் முதல் திருநங்கை ஒன்றியக் (கருவேப்பம்பட்டி) கவுன்சிலராக திமுக சார்பில் வெற்றி பெற்ற ரியா அவர்களை அவரது இல்லத்தில், திராவிடர் விடுதலைக் கழகம் திருச் செங்கோடு நகரம் சார்பாக, நகரச் செயலாளர் பூபதி, சோம சுந்தரம், விஜய்குமார், பிரகாஷ், மனோஜ் ஆகியோர் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்ததுடன்,  கழகத்தின் வெளியீடுகளான இவர்தான் பெரியார், கருஞ்சட்டைக் கலைஞர் புத்தகங்கள் மற்றும் நிமிர்வோம் மாத இதழ்களை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 30012020 இதழ்

சிலை உடைப்பைக் கண்டித்து பெரியார் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

சிலை உடைப்பைக் கண்டித்து பெரியார் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் களியப்பேட்டை கிராமத்தில் உள்ள  பெரியார் சிலை 23.01.2020 அன்று இரவு மர்ம நபர்களால் மர்மமான முறையில்  உடைக்கப்பட்டது. பெரியாரின் சிலை உடைப்பைக்  கண்டித்து செங்கல்பட்டு பேருந்து நிலையம் எதிரில், செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில், மர்ம நபர்களை கைது செய்யக்கோரி மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், செங்கல்பட்டு மாவட்ட கழகத் தோழர்கள் மற்றும் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 30012020 இதழ்

அமேசான் காடுகளுக்கு தீ வைத்த பிரேசில் அதிபர் இந்தியாவின் குடியரசு தின சிறப்பு விருந்தினராம்

அமேசான் காடுகளுக்கு தீ வைத்த பிரேசில் அதிபர் இந்தியாவின் குடியரசு தின சிறப்பு விருந்தினராம்

இந்தியாவின் 71ஆவது குடியரசுத்தின விழாவிற்கு, சிறப்பு அழைப்பாளராக, ஒரு தீவிர வலதுசாரியும், கடைந்தெடுத்த பிற்போக்காளருமான பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோவை அழைத்து வந்தது மோடி அரசு . பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் 11ஆவது உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. 2 நாள் நடைபெற்ற மாநாட்டுக்கு இடையே பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப்பேசினார். அப்போது விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுத்தான், 71ஆவது ஆண்டுக்கான இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக ஜெய்ர் போல்சானரோ தில்லிக்கு வந்துள்ளார். பிரதமர் மோடி போகிற போக்கில், இந்த அழைப்பை விடுத்ததாக பார்க்க முடியாது. ஆர்எஸ்எஸ். பாஜகவின் சனாதன சித்தாந்தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் போல்சானரோ. ஆர்எஸ்எஸ். – பாஜகவைப் போல, பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடி மக்கள், விளிம்புநிலையினர், அகதிகள் என – இவர்கள் யாரையுமே பிரேசில் ஜனாதிபதி போல்சானரோவுக்கு ஆகாது. “உன்னை பாலியல் வன்கொடுமை செய்யமாட்டேன்....

தலையங்கம் பார்ப்பனர் எச்சில் இலையில் உருளுவது மதச் சுதந்திரமா?

தலையங்கம் பார்ப்பனர் எச்சில் இலையில் உருளுவது மதச் சுதந்திரமா?

சித்தராமய்யா கருநாடக முதல்வராக இருந்தபோது மூட நம்பிக்கைகளைத் தடை செய்யும் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். ‘பேய் ஓட்டுதல்’ ‘பில்லி சூன்யம்’ என்ற பெயரில் ஏமாற்றுதல், தண்டனைக்குரிய குற்றம் என்று  அந்தச் சட்டம் கூறியது. ஆனால் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். இந்து மதத்துக்கு எதிரானது என்று கூச்சல் போட்டார்கள். இப்போது இரு நாட்களுக்கு முன் கருநாடகாவில் எடியூரப்பா தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி அரசிதழிலும் வெளியிட்டிருக்கிறது. எதிர்கட்சியாக இருந்தபோது மூடநம்பிக்கை ஒழிப்பு இந்து விரோதமாக இருந்தது. இப்போது ஆளும் கட்சியான பிறகு இந்து ஆதரவாகி விட்டதுபோலும். எப்படி இருந்தாலும் பா.ஜ.க.வின் ஒப்புதலை நாம் வரவேற்கிறோம். இதே கருநாடக மாநிலத்தில் உள்ள குக்கி சுப்ரமணியசாமி கோயிலில் ‘மடேஸ் நானா’ என்ற ஒரு சடங்கு 500 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. பார்ப்பனர்கள் சாப்பிட்டுவிட்டு வீசி எறிந்த எச்சில் இலைகளில் மிச்சம் மீதியிருப்பதை, தலித்...

ரஜினிகாந்த் வீடு முற்றுகை: கழகத் தோழர்கள் கைது

ரஜினிகாந்த் வீடு முற்றுகை: கழகத் தோழர்கள் கைது

பெரியாரை இழிவாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் 22.01.2020 அன்று காலை 11 மணியளவில் ரஜினிகாந்த் வீடு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ரஜினிகாந்தின் உருவ பொம்மையும் கொளுத்தப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். செய்தியாளர் சந்திப்பின்போது உமாபதி, ‘இனியும் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கா விட்டால் தொடர்ந்து ரஜினிகாந்த் படங்கள் திரையிடப்படும் திரையரங்கங்கள் முற்றுகையிடப்படும்’ என  தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின் தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலை 6 மணியளவில் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சேலம், புதுச்சேரி மற்றும் சென்னை கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.   பெரியார் முழக்கம் 30012020 இதழ்

பார்ப்பனர் வாதங்களுக்கு மறுப்பு தமிழ் குடமுழுக்குக்கு ஆகமங்கள் தடையா?

பார்ப்பனர் வாதங்களுக்கு மறுப்பு தமிழ் குடமுழுக்குக்கு ஆகமங்கள் தடையா?

தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கையை பார்ப்பன புரோகிதர்கள் எதிர்க்கிறார்கள். சமஸ்கிருத மந்திரங்கள் மட்டுமே சக்தி வாய்ந்தவை. தமிழுக்கு அந்த சக்தி இல்லை என்று தொலைக்காட்சி விவாதங் களில் வாதிடுகிறார்கள். காலங்காலமாக சமஸ்கிருதத்தில் தான் ‘கும்பாபிஷேகம்’ நடக்கிறது என்றும் வாதாடுகிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை போர்த்தி பெரியாரைத் தமிழ் விரோதி என்றும், தாங்களே தமிழ்ப் பற்றாளர்கள் என்றும் நீட்டி முழங்கி வந்த பா.ஜ.க.வினர், தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து மவுனம் சாதிக்கிறார்கள். தங்களது சமஸ்கிருதப் பார்ப்பனப் பற்றை வெளிக் காட்டாமல் மூடி மறைத்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் வழிபாடுகள் தான் நீண்டகால மரபாக இருந்திருக்கிறது என்றும், சிவன், சக்தி, திருமால் வழிபாடுகள் வேதத்திலேயே இல்லாத போது எப்படி சமஸ்கிருத வழிபாடு இருந் திருக்கும் என்றும் தமிழ் ஆய்வாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பார்ப்பனர்களிடமிருந்து பதில் இல்லை. தமிழ் வழிபாடு குறித்து பல ஆய்வு நூல்களை...