மடத்துக்குளம் பகுதியில் குடியுரிமைச் சட்ட ஆபத்துகளை விளக்கி பரப்புரை

காந்தியார் படுகொலை நாளை முன்னிட்டு, 30.1.2020 அன்று உடுமலை. மடத்துக்குளம் பகுதியில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையில் உடுமலை மடத்துக்குளம் முற்போக்காளர் கூட்டமைப்பு சார்பாக காந்தி படுகொலை  நாள் ஊஹஹ., சூசுஊ., சூஞசு. எதிர்ப்புப் பரப்புரை பயணமாக நடத்தப்பட்டது.  வேன்கள், இரு சக்கர வாகனம் மூலம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் இரா. மோகன்  தலைமையில் துவங்கியது.குமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர், காரத் தொழுவு, துங்காவி, பூளவாடி, குடிமங்கலம், பெதப்பம்பட்டி, கொங்கல் நகர், முக்கோணம் பகுதி, குட்டை திடல், இறுதியாக உடுமலை சித்தரக் கூடம் ஆகிய பகுதிகளில் மக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது.

பரப்புரை பயணத்தில், இந்திய ஜக்கிய கம்யூனிஸ்ட் , ஆதி தமிழர் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் பண்பாட்டு இயக்கம், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் தமிழர் கட்சி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கழகப் பொருளாளர் துரைசாமி பரப்புரை பயணத்தை நிறைவு செய்து, கலந்து கொண்ட அனைவருக்கும் நிமிர்வோம், கழக வெளியீடு நூல்களையும் வழங்கினார்.

பெரியார் முழக்கம் 06022020 இதழ்

 

You may also like...