Tagged: பெரியார்

அறிவுத் திறனை முடக்கும் மனப்பாடக் கல்வி

அறிவுத் திறனை முடக்கும் மனப்பாடக் கல்வி

அறிவுசார்ந்த கல்வியை மறுத்து, தொழில் சார்ந்த பயிற்சி யாளராக மட்டும் இளைஞர்களை மாற்றுவதே மோடி அரசின் கல்விக் கொள்கை! இத்தகைய கல்வி முறையைக் கண்டித்து, 1954ஆம் ஆண்டிலேயே பெரியார் எழுதிய கட்டுரை இது. நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை; அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய முறையில் எங்காவது உத்யோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள். இவர்களும் இதற்குத்தான் முயற்சிக் கிறார்கள் என்றால், மாணவர்களும் அந்த நோக்கத்தைத் தான் எதிர்பார்த்துத் தம்முடைய பள்ளிப் படிப்பைக் கற்றுப் பட்டம் பெற வேண்டும் என்ற ஒரே...

திராவிடரை இழிவுப் படுத்தும் ‘இராம லீலா’ ‘இராமன்’ – நன்மையின் உருவமா? பெரியார்

திராவிடரை இழிவுப் படுத்தும் ‘இராம லீலா’ ‘இராமன்’ – நன்மையின் உருவமா? பெரியார்

நன்மையின் உருவம் ‘இராமன்’; தீமையின் உருவம் ‘இராவணன்’ என்று கூறி, டெல்லி இராம் லீலா மைதானத்தில், இராவணன் உருவத்தை எரிக்கிறார்கள். இராமன் குறித்து பெரியார் எழுப்பும் இந்த கேள்விகள் இராமன் யோக்கியதையை உணர்த்தும். கைகேயியை மணம் செய்து கொள்ளும்போதே தசரதன் நாட்டைக் கைகேயிக்குச் ‘சுல்கமாக’க் கொடுத்து விட்டதும், அதனால் நாடு பரதனுக்குச் சொந்தமாக வேண்டியது என்பதும் இராமனுக்கு நன்றாய்த் தெரியும். நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும், கைகேயிக்கும், குடிகளுக்கும் நல்ல பிள்ளையாக நடந்து வந்திருக்கிறான். பரதன் ஊரில் இல்லாத சமயத்தில் பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக் கொள்ள முனைகிறான். இலட்சுமணன் பொறாமைப்பட்டு ஏதாவது செய்து கெடுத்து விடுவானோ என்று கருதி, இலட்சுமணனை ஏய்க்க, ‘இலட்சுமணா, உனக்காகத்தான் நான் முடிசூட்டிக் கொள்கிறேன்; நீதான் நாட்டை ஆளப் போகிறாய்’ என்று ‘தாஜா’ செய்கிறான். பட்டாபிஷேகம் நடக்குமோ, நடக்காதோ என்று ஒவ்வொரு நேரமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். ‘நாடு உனக்கு இல்லை;...

பிற மொழி மயக்கம் – தோழர் பூங்குழலி தஞ்சை 17072016

தஞ்சையில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் 9-ஆம் மாநாட்டில் 17-07-2016 அன்று நிகழ்ந்த “பிற மொழி மயக்கம்” எனும் தலைப்பிலான அமர்வில் பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் மொழி என்பது தனித்து இயங்க வல்லது அல்ல. ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்க அதை பேசும் ஒரு மக்கள் கூட்டம் வேண்டும். அவ்வாறு ஒரு மொழியை பேசும் மக்கள் கூட்டத்திற்கு அம்மொழி இனத்தவர் என்று பெயர். அப்படியான இனம் இல்லாத மொழி இறந்த மொழியாக கருதப்படுகிறது. கிரேக்கம், சமற்கிருதம் போன்ற உலகின் பல பண்டைய மொழிகள் இவ்வாறு இறந்த மொழியாகவே உள்ளன. ஆக ஒரு மொழி வாழ ஓர் இனம் தேவை. அதே போன்று மொழியை அழித்து விட்டு இனம் என்ற அடையாளத்தை தக்க வைக்க முடியாது. தங்கள் மொழியை இழந்தவர்கள் ஓர் இனமாக அறியப்படுவதில்லை. எனவே மொழியும் இனமும் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை...

இந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா? – பெரியார்

இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது. “இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்’ என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில் தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவது தான் இந்தியின் தத்துவம். எனவே தான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு பேர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால், இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். என்ன விலை கொடுத்தேனும், நாம் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். இது கடைசிப் போராட்டம் வெற்றி அல்லது தோல்வி, இரண்டிலொன்று பார்த்துவிடத்தான் வேண்டும். இந்தியில் மெச்சத்...

சமஸ்கிருதம் தேவையா? – பெரியார்

இந்த நாட்டில் பல காலமாக ‘சமஸ்கிருதம்’ என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந்நாட்டில் புகுத்தி, அதற்குத் ‘தேவ பாஷை’ எனப் பெயரிட்டுக் கடவுள்கள் – தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தால் புரியும் – பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100-க்கு 97 பேர் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் – நமது மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத – நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள – இந்நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய்மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்து வரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருந்திருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், வாலிபர்கள்...

இரு சக்கர வாகனப் பேரணிகள்; கழகக் கொடியேற்றங்கள்!: பெரியார் பிறந்த நாள் விழா எழுச்சி!

இரு சக்கர வாகனப் பேரணிகள்; கழகக் கொடியேற்றங்கள்!: பெரியார் பிறந்த நாள் விழா எழுச்சி!

பெரியாரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோட்டில் 17 இடங்களில் கொடியேற்று விழா மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. 22.9.2013 அன்று காலை 9.30 மணிக்கு ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் செல்லப்பன், மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியன் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் சுகுணா, ஈரோடு நகரத் தலைவர் திருமுருகன், செயலாளர் சிவானந்தம், மாவட்ட அமைப்பாளர்கள் செல்வராசு, குமார், அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார், அறிவியல் மன்ற  மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், லோகநாதபுரம் மோகன், கிருஷ்ணன், வெங்கட், கலைமதி, பள்ளிபாளையம் ரமேஷ், புகைப்படக் கலைஞர் எழில் ஆகியோர் உள்பட 74 தோழர்கள் இந்நிகழ்வில் பங்குக் கொண்டனர். ஈரோடு மண்டலச் செயலாளர் இராம. இளங்கோவன், சென்னை வழக்கறிஞர் திருமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். பெரியார் சிலையிலிருந்து தோழர்கள் ஊர்வலமாக இரு சக்கர...

ஜாதி அடையாளமற்ற அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம்: சென்னை கூட்டத்தில் நீலவேந்தன் நிகழ்த்திய எழுச்சியுரை

ஜாதி அடையாளமற்ற அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம்: சென்னை கூட்டத்தில் நீலவேந்தன் நிகழ்த்திய எழுச்சியுரை

பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் மக்கள் விழா எடுக்கிறார்கள். ஆனால் காந்திக்கும் ராஜாஜிக்கும் அரசுகள் தான் விழா எடுக்க வேண்டியிருக்கிறது என்று கூறிய தோழர் நீலவேந்தன், திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதி அடையாளமற்ற அமைப்பாக செயல்படுவதைப் பாராட்டினார். செப்.17 அன்று மந்தைவெளி சந்தைப் பகுதியில் கழகம் நடத்திய பெரியார் பிறந்த நாள் விழாவில், வீரமரணமடைந்த தோழர் நீலவேந்தன் ஆற்றிய உரை: மனித குலத்தை பிரித்த மதத்தை அழிக்கப் பிறந்த வீரர், மனுதர்ம தத்துவத்தில் நெருப்பு வைத்த சூரர், வர்ண ஜாதி நெறி திரை கிழித்த மேதை, வரலாறு நமக்கு அளித்த புரட்சிக்கானப் பாதை புரட்சியாளர் அம்பேத்கரையும், தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றும் சுயநல பூமியில், தன்னைக் கூட சுத்தம் செய்யாமல் பூமியை சுத்தம் செய்ய புறப்பட்ட ஈரோட்டுக் கிழவன் தந்தை பெரியாரையும், உள்ளே கனன்றுகொண்டிருக்கிற சூடான பூமியின் குளிர்ச்சியான மேலோட்டில் கடைசி இரண்டு மனிதர்கள் வாழுகிற வரை அவர்களுக்கிடையிலான சமூக, அரசியல், பொருளாதார...

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் பெரியார் 135 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 17.9.2013 காலை 9.30 மணி அளவில் பெரியார் சிலைக்கு பால்துரை மாலை அணிவித்தார். பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, செயலாளர் மதன், பொருளாளர் இரவி சங்கர், துணைத் தலைவர் வே.பால்ராசு, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகர கழகச் செயலாளர் பால். அறிவழகன், செல்லத்துரை மற்றும் ஏராளமான கழகத்தினரும், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்களும் கலந்து கொண்டு, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு முழக்கமிட்டனர். வடக்கு கோட்டையன் தோப்பில் கழகக் கொடியை பிரபாகரன் ஏற்றினார். ஏராளமான தோழர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். முக்காணியில் திருவைகுண்டம் ஒன்றிய அமைப்பாளர் தே.சந்தனராசு கழகக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பெரியார் முழக்கம் 10102013 இதழ்  

மடத்துக் குளத்தில் பெரியார் பிறந்த நாள்

மடத்துக் குளத்தில் பெரியார் பிறந்த நாள்

22.9.2013 அன்று உடுமலை மடத்துக்குளம் வட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா, கொடியேற்று விழா மற்றும் தெருமுனைப் பிரச்சாரமாக நடைபெற்றது. விழாவிற்கு கழகச் செயலவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையேற்றும், தமிழ்நாடு அறிவியல் மன்ற திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளர் இரா. மோகன் முன்னிலையேற்றும் நடத்தி வைத்தனர். முதலில் பெதப்பம்பட்டியில் காலை 10 மணிக்கு கு.கவிதா கொடியேற்றினார். தொடர்ந்து நால்ரோட்டில் உடுமலை வட்ட அமைப்பாளர் ப. குணசேகரன், உடுமலை குட்டைத் திடலில் பெரியார் பிஞ்சு சு.ம. தேனிலா, சுடரொளி, உடுமலை பேருந்து நிலையத்தில் உடுமலை நகர அமைப்பாளர் மலரினியன், மடத்துக்குளம் நால் ரோட்டில் சூலூர் பன்னீர் செல்வம், மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் முகில்ராசு, கடத்தூர் புதூரில் தமிழ்நாடு அறிவியல் மன்ற கோவை மாவட்ட பொறுப்பாளர் விஜயராகவன், கடத்தூரில் சு. துரைசாமி, காரத்தொழுவில் மாவட்டச் செயலர் அகிலன், கணியூரில் தம்பி பிரபா ஆகியோர் கொடி யேற்றினர். மாலை 3 மணிக்கு...

ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பெரியார் பிறந்த நாள்

ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பெரியார் பிறந்த நாள்

திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சின்ன தம்பி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் நீல கிருஷ்ணபாபு வரவேற்புரை யாற்றினார். பேராசிரியர்கள் திருநீலகண்டன், முனைவர் சுந்தரம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் இரா.சந்தானம்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ‘பெரியார் ஒரு சகாப்தம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் சிவகுருநாதன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் நீலகிருஷ்ணபாபு, முருகன், ஜெயபால், ரந்தீர்குமார், முத்துலெட்சுமி, மனோன்மணி, சிவகுருநாதன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்திருந்தனர். பெரியார் முழக்கம் 17102013 இதழ்

சுயமரியாதைப் பேரவை எடுத்த பெரியார் பிறந்த நாள் விழா

சுயமரியாதைப் பேரவை எடுத்த பெரியார் பிறந்த நாள் விழா

பெரியாரின் 135 ஆவது பிறந்த நாள் விழா, சென்னை திருவான்மியூரில் குத்தூசி சா. குருசாமி, குருவிக்கரம்பி சு. வேலு, சுயமரியாதைப் பேரவை சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வால்மீகி தெருவில் 29.9.13 ஞாயிறு காலை நடைபெற்ற இவ்விழாவிற்கு, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமை வகித்தார். புதுகை க. இராசேந்திரன் வரவேற்புரை யாற்றினார். மறைந்த சுயமரியாதை வீரர் கழஞ்சூர் சொ. செல்வராஜியின் படத்தை வாலாசா வல்லவன் திறந்து வைப்பதாக இருந்தது. அவர் வர இயலாது போகவே, அவரது உரை வாசிக்கப்பட்டது. செயல்வீரர் திருச்சி வீ.அ.பழனி, திருவுருவப் படத்தை ஓய்வு பெற்ற காவல்துறைக் கண்காணிப்பாளர் ம.பொன்னிறைவன் திறந்து வைத்தார். மதுரை தோல் மருத்துவர் அ.சவுந்தரபாண்டியன், ‘சாப்பாட்டிலும் சாதி’ என்ற தலைப்பில் உரையாற்ற, இனமானக் கவிஞர் செ.வை.ர. சிகாமணி, பெரியாரின் பிறந்த நாள் கவிதையை அரங்கேற்றினார். அனைவருக்கும் மறைந்த வீ.அ.பழனியின் இளையமகன் வணங்காமுடி பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார். இக்கூட்டத்தில் மறைந்த...

ஜாதி அமைப்புகளை ஒன்று திரட்டிக் கொண்டு தலித் மக்களுக்கு எதிராக மருத்துவர் ராமதாசு களமிறங்கியிருக்கிறார்.

ஜாதி அமைப்புகளை ஒன்று திரட்டிக் கொண்டு தலித் மக்களுக்கு எதிராக மருத்துவர் ராமதாசு களமிறங்கியிருக்கிறார்.

ஜாதி அமைப்புகளை ஒன்று திரட்டிக் கொண்டு தலித் மக்களுக்கு எதிராக மருத்துவர் ராமதாசு களமிறங்கியிருக்கிறார். பார்ப்பனிய வாதிகள் மதத்தின் தீண்டாமையையும் வழி பாட்டின் தீண்டாமையையும் சமூகத்தில் ‘மேல்-கீழ்’ தன்மையையும், சாஸ் திரம், ஆகமம், சடங்கு, வாழ்க்கை முறைகளில் தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த நாட்டிலிருந்து அய்ரோப்பிய நாடுகளுக்குப் போன பார்ப்பனர்கள், ஜாதியவாதிகள் தங்களுடன் ஜாதியையும் கொண்டுச் சென்றனர். அய்ரோப்பிய நவீன வாழ்க்கை ஒரு பக்கம்; பார்ப்பனிய ஜாதி வேற்றுமைகளைக் கட்டிக் காப்பது மற்றொருபுறம் என்ற இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பார்ப்பன இந்தியாவைப் போல், ஜாதியைப் பாதுகாக்க அய்ரோப்பிய நாடுகள் தயாராக இல்லை. 28 நாடுகளைக் கொண்ட அய்ரோப்பிய ஒன்றியம், ஜாதிக்கு எதிராக இப்போது போர்க்கொடி உயர்த்தி விட்டது. ஜாதி அடிப்படையில் காட்டப்படும் பாகு பாடுகள் மனித உரிமை மீறல்கள்; சர்வதேசக் கேடு (ழுடடியெட நுஎடை) என்று அய்ரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றிக் கண்டித்துள்ளது. கடந்த அக்டோபர் 10 ஆம்...

தலையங்கம்: களமிறங்கிய தோழர்களைப் பாராட்டுகிறோம்!

தலையங்கம்: களமிறங்கிய தோழர்களைப் பாராட்டுகிறோம்!

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போன்ற மதச் சடங்குகளை கொண்டாடக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் இறங்கி செயல்பட்டது. ஆர்ப்பாட்டங்கள், துண்டறிக்கைகள் வழங்குதல், பரப்புரைகள் என்று பல்வேறு களங்களில் கருத்துகளைக் கொண்டு சென்றதோடு, அலுவலகங்களுக்கும் அரசு ஆணைகள், நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, தோழர்கள் வேண்டுகோள் கடிதங்களையும் கையளித்தனர். இந்த களச் செயல்பாடுகளுக்காக மயிலாடுதுறை, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு போன்ற ஊர்களில் தோழர்கள் கைது செய்யப்பட்டு 13 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் பிணையில் வெளி வந்துள்ளனர். மதவெறி சக்திகள் அரசியலில் தலைதூக்கக் கூடாது; அது ஆபத்தானது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் பேசி வந்தாலும்கூட, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு நிகழ்வுகளில் மதச் சடங்குகள் ஊடுருவி நிற்பதைக் கண்டிக்கத் தயாராக இல்லை என்பதே கசப்பான உண்மை. இத்தகைய நிகழ்வுகளின் வழியாகவே அரசு நிர்வாகக் கட்டமைப்பு, மத உணர்வுகளோடு இணைக்கப் படுகிறது. மத உணர்வுகள் ஜாதியத்தோடு நெருங்கி நிற்கிறது. அது தலித்,...

சலிப்பற்ற சுயமரியாதைத் தொண்டு

சலிப்பற்ற சுயமரியாதைத் தொண்டு

என்ன காரணத்தாலோ நாம் சவுக்கியமாக உயிர் வாழ்கின்றோம். எப்படியோ உயிர் வாழ்வுக்கு மற்ற எவருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் இருந்து வருகின்றோம். மனிதனுக்கு இந்த இரண்டு காரியந்தான் மேலான சம்பத்து ஆகும். அதாவது உழைக்க உறுதியும் ஆசையும் – அதாவது சோம்பறித்தனமும் கழிப்பிணித்தனமும் இல்லாத, திடம் உள்ள சரீரமும் தனது வாழ்வில் எந்தத் துறைக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கவோ, தனக்குச் சரியென்று தோன்றிய அபிப்பிராயங்களை – முடிவுகளை தனது வாழ்க்கைக்காக – வாழ்க்கை நலத்துக்காக – மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக் கொள்ளவோ வேண்டிய அவசியமில்லாத – சாகும் வரை சுதந்திர உணர்ச்சியுடன் இருக்கத் தகுந்ததிலே எதுவோ அதுவே மேல்கண்ட உயர்ந்த சம்பத்தாகும். அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால் (இருக்கிறதாக நான் நினைத்துக் கொண்டிருப்பதால்) அந்த நிலையைப் பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலையென்று எதைக் கருதுகின்றேனோ அதைச் செய்கிறேன் என்பதல்லாமல் வேறு எவ்விதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது. நாளை நான் சாகும்போது...

நான் பலி கடா ஆகிறேன்-தமிழனுக்காக

நான் பலி கடா ஆகிறேன்-தமிழனுக்காக

“இருந்தால் என் வைப்பாட்டி மகனாக இரு; இழிமகனாக இரு; இல்லாவிட்டால் நாட்டைவிட்டு, இந்து மதத்தை விட்டு வெளியேறு அல்லது ஜெயிலில் இரு” என்றால், “இது உங்கப்பன் உங்க அம்மா சம்பாதித்த நாடா? அவர்கள் பிறந்த நாடா? என் நாட்டில் உனக்கு என்ன வேலை? வெளியேறு, வெளியேறு, மான வெட்கங் கெட்டவனே, வெளியேறு” என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. சமுத்திரம் எனக்கு முழங்கால் அளவு தண்ணீர்தான். அட முட்டாள்களா! உங்களுக்கும் சேர்த்துத்தானே பாடுபடுகிறேன். விஷமப் பிரச்சாரம் செய்யும் உங்களில் ஒருவன் வாயில்கூட ‘நான் ஏன் சூத்திரன்’ என்பது வருவதில்லையே. டில்லியோடு எழவு எடுப்பதற்கு முன் உங்களோடு எழவு எடுக்க வேண்டியிருக்கிறதே! தமிழன் யோக்கியதை எனக்குத் தெரியும். 75 வருடமாய் தெரியும். தமிழனுக்கு ஆக நான் பலிகடா ஆகிறேன். மானமுள்ளவர்கள் வாருங்கள். முடியாத யோக்கியர்கள், யோக்கியர்களுக்குப் பிறந்தவர்கள் வாலை அடக்கிக் கொண்டு யோக்கியமாய் வாழுங்கள். – தந்தை பெரியார் பெரியார் முழக்கம் 21112013 இதழ்

தொண்டினால் கிடைக்கும் புகழ்

தொண்டினால் கிடைக்கும் புகழ்

“சிலர் புகழ் வேண்டாம், எனக்கு அதில் ஆசையே கிடையாது” என்று கூறுவார்கள். இது பகட்டுப் பேச்சேயன்றி நடைமுறையில் சாத்தியமானதல்ல; அது மட்டுமல்ல, புகழை விரும்பாதவன் மனித உணர்ச்சியோடு இருப்பவன் என்று கூறிவிட முடியாது. புகழ் நிலைத்திருக்க முடியும் என்றால் ஒரு நல்ல பாடகன் என்பவனின் புகழ் அவனோடு மறைந்துவிடும். அல்லது அவனைவிடப் பாடுபவன் தோன்றினால் அவன் உயிர் நாளிலேயே அவன் புகழ் அழிபட்டுவிடும். அதே போன்றுதான் ஒவ்வொரு தனிப்பட்ட புகழும். ஆனால், பொதுக் காரியத்துக்காக அதனால் மக்களுக்கு என்றும் நன்மையைப் பயக்கக் கூடியதாகச் செய்யப்படும் காரியங்களையும் அக்காரியவாதிகளின் புகழையும் என்றும் மறைக்க முடியாது. அவ்விதமான பெரியோர்கள் முதலில் ஏச்சுக்கும், தொல்லைக்கும் ஆளவார்கள். பின்னர்தான் நிலையாக விளங்கும். – காயல் பட்டினத்தில் ‘சீதக்காதி’ நினைவுநாள் விழாவில் பெரியார் பேருரை – 24.4.47 பெரியார் முழக்கம் 21112013 இதழ்

உங்கள் வரவேற்பு, பாராட்டு எனக்கு வேண்டாம்

உங்கள் வரவேற்பு, பாராட்டு எனக்கு வேண்டாம்

‘இந்த ஊருக்கு சுமார் 20, 25 வருடங்களுக்கு முன்பு (அதாவது 1922, 23) இரண்டு மூன்று தடவை வந்திருக்கிறேன். அப்போது காங்கிர°காரனாய் வந்தேன். அதன் பிறகு இப்போதுதான் வர வாய்ப்புக் கிடைத்தது. இதுவும் நீங்கள் ஒரு வருஷ காலமாய் எங்களை அடிக்கடி வந்து அழைத்ததன் பயனாக இன்று வர முடிந்தது. நாட்டின் அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல், கிராமங்களுக்குத் தெரிவதில்லை. ஒவ்வொரு கிராமத்தையும் அங்குள்ள செல்வாக்குள்ள யாரோ ஒருவர் இருவர் அடக்கி ஆண்டு தங்கள் நலனுக்கு ஏற்ற வண்ணம் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எங்கள் வரவு மிகவும் கஷ்டமாகவும் அதிருப்தியாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. இந்த வெறுப்பு நான் ஊர்வலம் வந்தபோது நன்றாய்த் தெரிந்தது. எப்படியெனில் பல சுவர்களில் என்னைப் பற்றி நீங்கள் புகழ்ந்து எழுதி வரவேற்புக் கூறியிருக்கிறீர்கள். ஆனால் சில சுவர்களில் ‘சாமி இல்லை என்னும் பாவி இராமசாமி ஒழிக’ என்று எழுதப்பட்டிருந்ததையும் நான் பார்த்தேன். இதன் காரணம் என்ன?...

வாழ்நாள் முழுவதும் நான் தொண்டனே!

வாழ்நாள் முழுவதும் நான் தொண்டனே!

நான் மறைந்து நின்று சிலரைத் தூண்டிவிட்டு எந்தக் காரியத்தையும் செய்யச் சம்மதிக்க மாட்டேன். ஒரு சமயம் எனக்கு அப்படிச் செய்ய ஆசையிருந்தாலும் எனக்கு அந்தச் சக்தி கிடையாது. மறைவாய் இருந்து காரியம் செய்ய, சக்தியும் சில சவுகரியமும் வேண்டும். அந்த சக்தியும் சவுகரியமும் எனக்கில்லாததாலேயேதான், நான் என் வாழ்நாள் முழுவதும் தொண்டனாகவே இருந்து தீரவேண்டியதாய் இருக்கிறது என்பதோடு, எதையும் எனக்குத் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தித் தாட்சண்யம் இல்லாமல் கண்டிக்க வேண்டியவனாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.                                               (பெரியார், ‘குடிஅரசு’ – 24.11.1940 பெரியார் முழக்கம் இதழ் 26122013

குரல் உள்ளவரை பேசுவேன்!

குரல் உள்ளவரை பேசுவேன்!

நான் (எனக்கு ஞாபகமிருக்கிற வரையில்) என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன். சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கை யில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில்கூட மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத்தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்புக் கொடுத்த வனும் அல்ல. பணம், காசு, பண்டம் முதலியவை களில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தை யாவது காட்டியிருப்பேனே யொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசியிருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனமறிந்து மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்க மாட்டேன். இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும் சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டுவர வேண்டும் என்கின்ற ஆசையுடையவன். இதற்கு முட்டுக்கட்டையாகப் பார்ப்பனச் சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ...

தலையங்கம்: ‘மக்கள் சந்திப்புத் திட்டத்தை’ தீவிரப்படுத்துவோம்!

தலையங்கம்: ‘மக்கள் சந்திப்புத் திட்டத்தை’ தீவிரப்படுத்துவோம்!

‘மக்கள் சந்திப்புத் திட்டம்’ – கழக சார்பில் தோழர்களின் வேலைத் திட்டமாக முன் வைக்கப்பட்டுள்ளது. கழகத்தின் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோர், தோழர்களை மாவட்டந்தோறும் நேரில் சந்தித்து இதற்கான நன்கொடைப் படிவங்கள், துண்டறிக்கைகளை வழங்கியுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியாரியல் செயல்பாடுகளையும் அதன் முன்னுரிமைத் திட்டங்களையும் மக்களிடம் விளக்குவதற்கும் அவர்களின் ஆதரவை நன்கொடை வழியாக உறுதி செய்யவுமே இத்திட்டம். பெரியார் கொள்கைகள் உருவாக்கிய தாக்கம், தமிழ்நாட்டை வேறு மாநிலங்களிலிருந்து தனித்துவம் மிக்கதாக மாற்றியது. ஒப்பிட்டளவில் சமூக மாற்றத்துக்கு தமிழகத்தை பக்குவப்படுத்திய பெருமையும் சிறப்பும் பெரியாரியலுக்கு உண்டு. ஆனால், தமிழ்நாட்டை இன்று வேறு திசை நோக்கி இழுத்துச் செல்லக்கூடிய ஆபத்தான முயற்சிகள் முனைப்பாக அரங்கேறி வருகின்றன. திராவிட அரசியல் கட்சிகள், பதவி அரசியல் என்ற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கான கொள்கை அடையாளங்களை கைவிட்டுவிட்டார்கள். தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாமல்...

பெரியார் கருத்து வெற்றி பெறுகிறது! திருமணமின்றி சேர்ந்து வாழலாம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பெரியார் கருத்து வெற்றி பெறுகிறது! திருமணமின்றி சேர்ந்து வாழலாம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்கள் மற்றும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கச் சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை 28.11.2013 அன்று வழங்கியது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணையும், அவருக்குப் பிறந்த குழந்தையையும் தனியாகத் தவிக்கவிட்டு, திடீரென ஆண் ஒருவர் பிரிந்து சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தன்னை தவிக்கவிட்டுச் சென்ற அந்த ஆணிடம் இருந்து பராமரிப்பு செலவு பெற்றுத் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணை, நீதிபதி கே.எ°.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “திருமண மாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்கள், அவர் களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் உரிய சட்டத்தை இயற்ற வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தர விட்டது. மேலும், “திருமணமாகாமல் ஆண்-பெண் சேர்ந்து வாழ்வது குற்றமும் அல்ல, பாவம் அல்ல....

திருமணம் வேண்டாதது! பெரியார்

திருமணம் வேண்டாதது! பெரியார்

உலகில் அர்ச்சகன், மாந்திரிகன், சோதிடன் இவர்களைவிடப் பித்தலாட்டத்தில் கைதேர்ந்தவர்கள் கிடையாது. மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்திவிட்டன. குறிப்பாகப் பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்ச்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப்போலத்தான் மக்களில் சரி பகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிபோடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் – நல்ல துணிமணி வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள். பிராமணன்-சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன்-பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம். இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால், ‘கலியாணம்’ என்பதையே சட்ட விரோதமாக ஆக்கவேண்டும். இந்தக் ‘கலியாணம்’ என்ற...

‘ஜனநாயகம்’ பெரியார்

‘ஜனநாயகம்’ பெரியார்

கேள்வி : உலகத்தில், மகா பித்தலாட்ட மான சொல் எது? பதில் : அதுவா, அதுதான் ஜனநாயகம் என்கின்ற சொல். கேள்வி : அது என்ன, கடவுள் என்பதை விட மகா பித்தலாட்டமான சொல்லா? பதில் : அய்யய்யோ, கடவுள் என்பது ஒரு பொதுப் பித்தலாட்டமான சொல்; இந்தப் பித்தலாட்டத்தில் எல்லோருக்கும் பங்கு வரும். ஜனநாயகம் என்கின்ற பித்த லாட்டச் சொல் அப்படி அல்ல; தந்திரக் காரனுக்கு – அயோக்கியனுக்கு – இவர்களே சேர்ந்த கோஷ்டிக்குத்தான் பங்கும், பயனும் உண்டு. போக்கற்ற ஆளுக்கெல்லாம், பித்தலாட்ட வாழ்வு கோஷ்டிக்கெல்லாம் பிழைக்கும் வழி – ஜனநாயகம்தான். கேள்வி: இதுவே இப்படியானால் – ஜன நாயக முன்னணி, ஜனநாயக அய்க்கிய முன்னணி, ஜனநாயக முற்போக்கு முன்னணி, ஜனநாயக தீவிர முன்னணி, ஜன நாயக அதிதீவிர முன்னணி, ஜனநாயக சுயேச்சை முன்னணி, சுயேச்சை ஜனநாயக முன்னணி, ஜனநாயகக் கூட்டணி – என்பது போன்ற சொற்களின் தன்மை என்ன...

பெரியார் : தொடரப்பட வேண்டிய பயணம்

பெரியார் : தொடரப்பட வேண்டிய பயணம்

‘தி இந்து’ தமிழ் நாளேடு, பெரியார் நினைவு நாளன்று திருத்தங்களுடன் வெளியிட்ட பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரையின் முழு வடிவம் இங்கே வெளியிடப்படுகிறது. பெரியாரின் பொது வாழ்க்கை எதிர் நீச்சலிலே தொடங்கியது. காந்தியின் தீண்டாமை, மதுவிலக்கு, கதர் பரப்புதல் போன்ற சமூக சீர்திருத்தக் கொள்கைகளே அவரை காங்கிரசுக்குள் இழுத்தது. அவர் காங்கிரசில் இருந்தது 5 ஆண்டுகாலம் தான். இரண்டு முறை மாநில தலைவர், இரண்டு முறை மாநில செயலாளர். அந்த 5 ஆண்டுகாலமும் வைக்கத்தில் தீண்டாமை எதிர்ப்பு; காங்கிரஸ் கட்சியே நடத்திய சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனக் குழந்தைகளுக்கு தனி இடத்தில் சாப்பாடு போட்டதற்கு எதிர்ப்பு; ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பைப் பகிர்ந்து அளிக்கும் ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை’ காங்கிரஸ் கொள்கையாக ஏற்க வேண்டும் என்ற போராட்டம் – என்று போராட்டம் தான்! மாகாண தலைவர், செயலாளர் பதவி கட்சியில் கிடைத்ததற்காக அவர் திருப்தி...

சென்னை கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு : மண்டேலா-பெரியார் சந்தித்த போராட்டக் களங்கள்

சென்னை கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு : மண்டேலா-பெரியார் சந்தித்த போராட்டக் களங்கள்

கறுப்பினப் போராளி நெல்சன் மண்டேலா, பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம், மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மந்தைவெளியில் 27.12.2013 அன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜான், மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகர், வழக்கறிஞர் துரை, அருண், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். கறுப்பர் இனத்தின் மீதான நிற ஒதுக்கல் என்ற அடிமைத்தனத்துக்கு எதிராக போராடி, 27 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு, உலக நாடுகள் தந்த அழுத்தத்தின் காரணமாக, விடுதலைப் பெற்று, வெள்ளை நிறவெறி அரசின் இனஒதுக்கல் கொள்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த மண்டேலா வின் போராட்ட வாழ்க்கையை விடுதலை இராசேந்திரன் சுட்டிக் காட்டினார் ரிவோலியா. நீதிமன்றத்தில் மண்டேலாவின் பிரகடனம், எந்த இனமும் மற்றொரு இனத்துக்கு அடிமையாவதை எதிர்த்தது. கறுப்பர், வெள்ளையர் என்ற இரு பிரிவினரும் சம உரிமைகளோடு வாழக்கூடிய ஒரு ஜனநாயக தாராள சுதந்திரக் கொள்கையையே அவர் வலியுறுத்தினார். வெள்ளை நிறவெறி ஆட்சி திணித்த இன ஒதுக்கல்...

தூற்றலுக்கும் ஆத்திரத்துக்கும் ஆளானேன்: பெரியார்

தூற்றலுக்கும் ஆத்திரத்துக்கும் ஆளானேன்: பெரியார்

பெரியார் தனது எதிர்நீச்சல் பயணம் குறித்து செய்துள்ள சுயமதிப்பீடு இது. வாழப்போவது இன்னும் சிலகாலம்தான் என்று எழுதும் பெரியார், அதற்குப் பிறகு 45 ஆண்டுகாலம் சமுதாயத் துக்காகவே உழைத்திருக்கிறார். “பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், ‘குடி அரசி’னாலும் நான் செய்து வந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவைகளைக் கண்டித் தேன். அரசியல் தலைவர் என்பவர்களைக் கண்டித் தேன். மதம் என்பதைக் கண்டித்தேன். மதத் தலவர்கள் என்பவரைக் கண்டித்தேன். மதச் சடங்கு என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன். குருக்கள் என்பவர்களைக் கண்டித்திருக்கிறேன். கோவில் என்பதைக்  கண்டித்திருக்கிறேன். சாமி என்பதைக்  கண்டித்திருக்கிறேன். சாத்திரம் என்பதைக்  கண்டித் திருக்கிறேன். வேதம் என்று சொல்வதைக்  கண்டித் திருக்கிறேன்.  பார்ப்பனீயம் என்பதைக்  கண்டித் திருக்கிறேன். சாதி என்பதைக்  கண்டித்திருக்கிறேன். அரசாங்கம் என்பதைக்  கண்டித்திருக்கிறேன். உத்தியோகம் என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன். நீதி ஸ்தலம் என்பதைக்  கண்டித்திருக்கிறேன். நியாயாதிபதி என்பவைகளைக் கண்டித்திருக்கிறேன். நிர்வாக ஸ்தலங்கள் என்பவைகளைக் கண்டித்திருக் கிறேன். ஜனப் பிரதிநிதித்துவம் என்பதைக்  கண்டித் திருக்கிறேன். தேர்தல்...

17 வயதில் தொடங்கிய பொது வாழ்க்கை: திருவாரூர் தங்கராசு

17 வயதில் தொடங்கிய பொது வாழ்க்கை: திருவாரூர் தங்கராசு

பிறந்த நாள்: 6.4.1927; பிறந்த இடம் : நாகப்பட்டினம்; தி.க.வில் சேர்ந்தபோது வயது 17. அப்போதிலிருந்து திருவாரூர் வாசம். ரத்தக் கண்ணீர் நாடகம் எழுதிய போது வயது 19. இளமையில் செய்யும் தவறுகள், முதுமையில் எப்படி வாட்டும் என்பதே கதைக் கரு. இராமாயண ஆராய்ச்சி செய்து, வால்மீகி இராமாயணம் தொடங்கி, வடமொழியிலுள்ள பல்வேறு இராமாயண கதைகளையும் ஆய்வு செய்து, மலையாள இராமாயணம், கம்பராமாயணம் உள்பட ஆய்ந்து தெளிந்து எழுதிய நூல் இராமாயணம். அரசாங்கம் இந்நூலை தடைசெய்தபோது எம்.ஆர்.இராதா ‘இராமாயணம்’ என்ற பெயரில் பட்டி தொட்டி எங்கும் இந்நாடகத்தை அரங்கேற்ற, பெரும் புரட்சி செய்த நாடகம் அது. இரத்தக் கண்ணீர், பெற்ற மனம், தங்கதுரை என்ற மூன்று படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதியவர். இவரது பெரிய புராண ஆராய்ச்சி நூல் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து இவருடன் உரையாடி...

என் ஒரே தலைவர் பெரியார் தான் : நடிகவேள் எம்.ஆர்.ராதா

என் ஒரே தலைவர் பெரியார் தான் : நடிகவேள் எம்.ஆர்.ராதா

தமிழ்த் திரைப்பட உலகில் ஏராளமான திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி புகழ் பெற்ற ஆரூர் தாஸ், ‘தினத்தந்தி’ நாளேட்டில் தனது கலை உலக அனுபவங்களை தொடராக எழுதி வருகிறார். அதில் நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கும் தனக்கும் நிகழ்ந்த உரையாடலை (4.1.2014) பதிவு செய்துள்ளார். பெரியார் மீது நடிகவேள் எவ்வளவு உறுதியான பற்றுக் கொண்டிருந்தார் என்பதை  நடிகவேளே விளக்கும் பகுதி இது. ஒரு காலத்துல நடிகர்கள் எல்லாரும் ஒரே குடும்பமா ஒண்ணா, தான் இருந்தோம். இடையில இந்த அரசியல் – கட்சி – அது இதுன்னு வந்து நடிகன்களைப் பிரிச்சி ஒற்றுமை இல்லாமல் ஆக்கித் தனித்தனியா பண்ணிடுச்சி. எம்.கே. தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும் சினிமாவுல ஓகோன்னு இருந்த அந்தக் காலத்துல அரசியலும் சினிமாவும் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லாம தனித்தனியா இருந்துச்சு. அவுங்கவுங்க அவுங்கவுங்க வேலையை பாத்தாங்க. நாட்டை அரசியல்வாதிங்க கவனிச்சிட்டாங்க. கலையை நடிகருங்க, மத்தக் கலைஞருங்க பார்த்துக்கிட்டாங்க. அதனால்தான் அப்போ எந்தப் பிரச்சினையும்...

நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் என்ன? : கோயில் பார்ப்பனர்களின் உடைமையா?

நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் என்ன? : கோயில் பார்ப்பனர்களின் உடைமையா?

கோயில்களின் நிர்வாகத்தில் தலையிடும் உரிமை அரசுக்கு உண்டு என்பதை வலியுறுத்தி, கடந்த காலங்களில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வந்துள்ளன. தீட்சதர்கள் – இந்து மதத்துக்குள்ளேயே தனிப் பிரிவினர். இவர்களின் உரிமைகளை அரசி யலமைப்புச் சட்டத்தின் 26 பிரிவு உறுதி செய்கிறது. எனவே, தீட்சதர்கள், தில்லை நடராசன் கோயிலை நிர்வகிக்கும் உரிமையில் அரசு தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் சட்டத்தின் 26 ஆவது பிரிவு, பார்ப்பனர்களுக்கான பாதுகாப்பு ஆயுதமாக இருந்து வருகிறது. பெரியார் நடத்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் எரிக்கப்பட்ட பிரிவுகளில் இதுவும் ஒன்று. சமணர்கள் தனிப் பிரிவாக இருந்தாலும்கூட, சமணக் கோயில்கள், இந்து சட்டத்தின் கீழ்தான் நிர்வகிக்கப் பட்டு வருகின்றன. இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. தீட்சதப் பார்ப்பனர்கள் ‘முன் குடுமி’ ஒன்றைத் தவிர, ஏனைய ஸ்மார்த்தப் பார்ப்பனர்களைப் போன்ற கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர். தீட்சதப் பார்ப்பனர்கள் பூணூல் அணிந்து, தங்களை “பிராமணர்கள்” என்றுதான் அறிவித்துக் கொள்கிறார்கள். கோயிலுக்குள் ‘ஓதுவார்’...

திராவிடர் கழகம் வரலாற்றை திரிக்க வேண்டாம்!

திராவிடர் கழகம் வரலாற்றை திரிக்க வேண்டாம்!

பெரியார் – தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என்று கூறியது குறித்து வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தி.க. தலைவர் கி.வீரமணி ‘உண்மை’ இதழில் (ஜன.1-15) கீழ்க்கண்ட பதிலை அளித்துள்ளார். “சமூக இழிவு ஒழிப்பு மாநாடுதான் அவர் கடைசியாக நடத்தியது; பேசியது. அதற்காக விடுத்த அறிக்கையில் ‘நானே பிரிவினை கேட்கவில்லையே!’ என்று அறிக்கையை விடுத்தார். அது விடுதலை நாளிதழில் வெளி வந்துள்ளது. ‘விடுதலை’க்கான தேவை அவசியம் வேறு – கழகம் விடுதலை கேட்டது என்ற நிலை வேறு’ என்று பதிலளித்துள்ளார். பெரியார் தமிழ்நாடு தனிநாடாக பிரிய வேண்டும் என்று வலியுறுத்தியது உண்மை. தி.க. தலைவர், அதை ஏற்கிறாரா? இல்லையா என்பது, அவரது கொள்கை. அதற்காக பெரியார் கருத்தை மறைக்க முயல்வது வரலாற்றுத் துரோகம். தி.க. தலைவர் கூறுவதுபோல் பெரியார் கடைசியாக பேசியது சமூக இழிவு ஒழிப்பு மாநாடு அல்ல. பெரியார் சமூக இழிவு ஒழிப்பு மாநாடு நடத்தியது 1973 டிசம்பர் 8,...

உன் இயக்கம் ஒரு வரலாறு : தமிழேந்தி

உன் இயக்கம் ஒரு வரலாறு : தமிழேந்தி

வறட்டுத்தன மாய்இங்கே நாத்தி கத்தை வளர்த்திட்டாய் என்றுசிலர் குற்றம் சொல்வார் முரட்டுத்தன மாய்க்கடவுள் மறுத்தாய் என்றும் முணுமுணுப்பார் உள்ளுக்குள்; ஆனால் நீயோ திருட்டுத்தனம் மிக்க பார்ப்ப னீயத் தீமைகளை, சாதியத்தை எதிர்த்தாய் என்றே அருட்தந்தை போல்உன்னைத் தமிழகத்தின் அடித்தட்டு மக்களெலாம் வணக்கம் செய்தார். ‘புதிதாக நீஎதையும் சொல்ல வில்லை புரட்சிகர செயல்எதுவும் செய்ய வில்லை இதற்கு முன்பே இருந்தவைதாம்; உன்பங் கென்றே எதுவுமில்லை’ என்பர்சிலர்! எல்லாம் இங்கே விதிவசந்தான் எனக்கிடந்த மக்கள் நெஞ்சில் விசையூட்டித் தன்மான வீரம் ஊட்டி நதிப்பெருக்காய், கடல்ஆர்ப்பாய் ஓர் இயக்கம் நடத்தியவன் வரலாற்றில் நீயே அன்றோ? ‘தமிழ்மொழியைச் சனியனென்றாய், தமிழைக் காட்டு மிராண்டிமொழி எனச்சொன்னாய்’ என்றே உன்னைத் தமிழ்மொழிக்குப் பகைவனெனக் குற்றம் சாட்டிச் சலிக்காமல் பழிஉரைப்பார்; இந்தி யாலே தமிழ்மொழிக்(கு) உற்றகேட்டைத் தடுத்த துண்டு தமிழ்உணர்ச்சி உன்இயக்கம் வளர்த்த துண்டு தமிழ்மொழிக்குள் ‘நன்றி’என்ற சொல்லும் உண்டு தமிழர்அதன் ‘பொருள்’அறியும் பண்பும் உண்டு ‘ஆடுமாடா மேய்த்திருப்பான் தமிழன்? இல்லை...

பன்னீர்செல்வமே! காலம் சென்று விட்டாயா? : பெரியார் (பன்னீர்செல்வம் முடிவுக்கு எழுதிய இரங்கல்)

பன்னீர்செல்வமே! காலம் சென்று விட்டாயா? : பெரியார் (பன்னீர்செல்வம் முடிவுக்கு எழுதிய இரங்கல்)

நமது உண்மைத் தோழரும், உற்ற துணைவரும், உள்ளும் புறமும் ஒன்றாய் உள்ளவரும், தமிழர் இயக்கத்தில் உறுதியான பற்றுக் கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்தவரும், நம்மிடத்தில் களங்கமற்ற அன்பும் பற்றுதலும் விசுவாசமும் கொண்டிருந்தவரும், நினைத்தால் திடுக்கிடும்படி எதிரிகள் நெஞ்சில் எப்பொழுதும் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தவருமான அருமை பன்னீர் செல்வம் அவர்களை, இன்று, காலம் சென்ற பன்னீர் செல்வம் என்று எழுத நேரிட்டதற்கு மனம் பதைக்கிறது! நெஞ்சு திக்கு திக்கென்று அடித்துக் கொள்கிறது! மெய் நடுங்குகிறது! எழுதக் கையோடவில்லை; கண் கலங்கி மறைக்கிறது; கண்ணீர் எழுத்துக்களை அழிக்கிறது! பன்னீர்செல்வத்திற்குப் பாழும் உத்தி யோகம் வந்ததும் போதும்; அது அவரது உயிருக்கே உலையாய் இருந்ததும் போதும்! தமிழர்களைப் பரிதவிக்கவிட்டுவிட்டு மறைந்து விட்டார். இந்த உத்தியோகம் ஏன் வந்ததென்றே ஒவ்வொரு வினாடியும் தோன்றுகிறது. அவருக்கடுத்தாற்போல் – யார், யார் என்று மனம் ஏங்குகிறது; தேடுகிறது; தேடித் தேடி ஏமாற்றமடைகிறது! என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும்...

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “எங்க வூட்டு மோர், எங்க வூட்டு தண்ணீரை சுத்தப்படுத்திடுமா?”

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “எங்க வூட்டு மோர், எங்க வூட்டு தண்ணீரை சுத்தப்படுத்திடுமா?”

மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது. அப்பேட்டியை மீண்டும் 15.1.2014இல் அந்த ஏடு மறு வெளியீடு செய்துள்ளது. பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த சந்திப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. திருச்சி பெரியார் மாளிகைக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே, எங்கள் பார்வையில் பட்ட கறுப்புச் சட்டை இளைஞர், “ஐயா, உள்ளேதான் இருக்கார். நீங்க வரப்போறீங்கன்னு சொல்லியிருக்கேன். உள்ளே போங்க” என்று புன்சிரிப்போடு வழி காட்டுகிறார். உள்ளே… கட்டிலின் மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்த பெரியாரைப் பார்த்ததும், ‘வணக்கம் ஐயா!’ என்று கும்பிடுகிறோம். “வாங்க… வாங்க… ரொம்ப சந்தோசம்…” எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றபடியே, “இப்படி உட்காருங்க” என்கிறார். சாதாரண வெள்ளைப் பனியன். நாலு முழம் வேட்டி. வயிற்றின் நடுப் பாதியில் வேட்டியின் இரு முனைகளையும் பனியனுக்கு மேல் கட்டியிருக்கிறார். அந்த முனைகள்...

பிப்.14 காதலர் நாள் – சிந்தனைகள் : காதல் பற்றி பெரியார்

பிப்.14 காதலர் நாள் – சிந்தனைகள் : காதல் பற்றி பெரியார்

உணர்ச்சிகளால் உந்தப் படும் காதலை மறுக்கும் பெரியார், அறிவார்ந்த புரித லோடுக் கூடிய காதலை வரவேற்கிறார். காதல் பற்றி பெரியார் கருத்து. “உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண் களும் சம நிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங் களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமை யாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காத லாகும்!”      – குடிஅரசு 21.7.45 “திடீரென்று காதல் கொள் வது, பிறகு கஷ்டப்படுவது, கேட்டால் காதலுக்காக என்று சொல்வது; என்ன நியாயம்? இது பலமற்ற சபலத்தனம். காதலுக் காகத் துன்பத்தை அடைவது முட்டாள்தனம். காதலும் கடவுளும் ஒன்று என்று சொல் வது இதனால்தான். காதலும் கடவுளும் ஒன்று என்றால் – காதலும் பொய் கடவுளும் பொய் என்றுதான் அர்த்தம்.”  – விடுதலை 24.5.47 “ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொரு வர் அறிந்து...

நடிகர் சத்தியராஜ் பேச்சு: பெரியாரைத் தவிர்த்துவிட்டு எந்த சமூக மாற்றத்தையும் செய்ய முடியாது

நடிகர் சத்தியராஜ் பேச்சு: பெரியாரைத் தவிர்த்துவிட்டு எந்த சமூக மாற்றத்தையும் செய்ய முடியாது

‘அந்தி மழை’ மாத இதழில் எழுத்தாளர் பாமரன் ‘சொதப்பல் பக்கம்’ என்ற பெயரில் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு ‘சொதப்பல்’ என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு நிகழ்ச்சி 16.2.2014 ஞாயிறு மாலை 6 மணியளவில் கோவை ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யாபவன் அரங்கில் நடைபெற்றது. நடிகர் சத்தியராஜ், விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் அழகிய பெரியவன், ‘அந்தி மழை’ நிறுவனர் இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர். நிர்வாக ஆசிரியர் என். அசோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர் இரா. சுப்பிர மணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பாமரன் ஏற்புரை நிகழ்த்தினார். நடிகர் சத்தியராஜ் தமது உரையில் : அடுத்த ஆண்டு தனக்கு 60 ஆம் ஆண்டு திருமணம் நடத்த வேண்டும் என்று குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்தக் கருத்தை, தான் மறுத்துவிட்டதாகவும்,  தனது மனைவிக்கு 60 வயது நிறைவு பெறும்போது அதை சுயமரியாதைத் திருமணமாக நடத்துவேன் என்றும் அறிவித்தார். ஆணுக்கு 60  வயது நிறைவு பெற்றால்தான்...

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “காந்தி எங்க வீட்டுக்கு வந்திருக்கார்! ”

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “காந்தி எங்க வீட்டுக்கு வந்திருக்கார்! ”

  மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது. அப்பேட்டியை மீண்டும் 15.1.2014இல் அந்த ஏடு மறு வெளியீடு செய்துள்ளது. பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த சந்திப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி) “வைக்கம் வீரர்னு உங்களுக்கு எப்படிப் பேர் வந்தது?” – மணியன் கேட்கிறார் “அதுவா? அது ஒரு கதை… சொல்றேன். நீங்க என்னமோ கேட்டீங்களே என்னது?” என்று என் பக்கமாகத் தலையைச் சாய்த்து காதைக் கைவிரல்களால் அணைத்துக் கேட்கிறார். “காந்தியை நீங்க சந்திச்சிருக்கீங்களா?னு கேட்டேன்…” என்கிறேன் நான். “எங்க வூட்டுக்கே வந்து தங்கியிருக்காரே. சட்டசபைப் பிரவேசத்துக்கு காங்கிரஸை அவர் அனுமதிச்சபோது நான் ‘கூடாது’னு தடை பண்ணினேன்; எதிர்த்தேன்; வாதாடினேன். அவர் சொன்னார்: “நீ என்ன இப்படிச் சொல்றே? மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் இவங்களையெல்லாம் நினைச்சுப்...

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “ஆட்சி அமைக்க என்னை அழைத்தார்கள்! ”

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “ஆட்சி அமைக்க என்னை அழைத்தார்கள்! ”

மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது. அப்பேட்டியை மீண்டும் 29.1.2014இல் அந்த ஏடு மறு வெளியீடு செய்துள்ளது. பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த சந்திப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி) “ராஜாஜி உங்களை ஜெயில்ல போட்டாரே, அது எப்போ?” “முப்பத்தேழுலே நடந்த எலக்ஷன்ல ஜஸ்டிஸ் கட்சி தோத்தது. அப்ப அந்தக் கட்சிக்கு பொப்பிலி ராஜாதான் தலைவர். பொப்பிலி, பெத்தாபுரம் எல்லாரும் தோத்துப் போனாங்க. காங்கிரஸ் ஜெயிச்சுட்டுது. ராஜாஜி, மந்தரிசபை அமைச்சாரு. அப்பத்தான் கட்டாய இந்தியைக் கொண்டு வந்தாங்க. நான் எதிர்த்தேன். புரோகிபிஷனைக் காரணம் காட்டி விற்பனை வரிபோட்டாங்க. என்னை ஜெயில்ல போட்டாங்க. ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களைப் பழிவாங்க ஆரம்பிச்சாங்க. நான் ஜெயிலுக்குள்ளே இருக்கிறபோதே பொப்பிலி எல்லாம் சேர்ந்து, என்னை ஐஸ்டிஸ் கட்சித் தலைவனாக்கிட்டாங்க.” “அப்புறம் எப்ப...

உறவுக்குள் திருமணம்: ஊனமாகும் குழந்தைகள்: பெண்களை நெகிழ வைத்த பரப்புரை

உறவுக்குள் திருமணம்: ஊனமாகும் குழந்தைகள்: பெண்களை நெகிழ வைத்த பரப்புரை

அகமண முறைக்கு எதிராக கழகம் நடத்திய பரப்புரை இயக்கத்தின் பதிவுகள். கடந்த இதழின் தொடர்ச்சி. பிப்.18 காலை 10 மணிக்கு கருந்திணை இல்லத்தில் பயணக் குழுவில் உள்ள தோழர்களுக்கு பணியிடைப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அகமண முறையின் ஆபத்துகளையும், ஜாதி மறுப்புத் திருமணங்களின் அவசியத்தையும் விரிவாக விளக்கி தோழர் பூங்குழலி வகுப்பு நடத்தினார். இரண்டு நாள்களாக பயணக் குழுவிடம் பொது மக்கள் கேட்ட கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான பதில்களை அறிந்துகொள்ளும் வகையில் வகுப்பு நடந்தது. கேள்வி-பதில் முறையில் பயிற்சிக் கையேடும் வழங்கப்பட்டது. அந்தக் கையேட்டின் செய்திகளை அடிப்படையாக வைத்து பரப்புரைக் குழுவினர் வீதி நாடகங்களையும், சொற்பொழிவுகளையும் திட்ட மிட்டனர். அத்தகைய வீதி நாடகங்களைப் பார்த்து, அதன் உண்மைகளைப் புரிந்த கிராமத்துப் பெண்கள் நமது தோழர்களிடம், ‘எங்கள் ஊரில், எங்கள் வாழ்க்கை யில் நடப்பதை நாடகமாக நடத்துள்ளீர்கள். இனி ஒரு ஜாதிக்குள் திருமணம் செய்யவே மாட்டோம்’ என கண்ணீருடன் உறுதியளித்த நெகிழ்வான நிகழ்வு களோடு...

பெண்கள் தந்த ‘பெரியார்’ பட்டம்: ‘குடிஅரசு’ கூறும் வரலாறு

பெண்கள் தந்த ‘பெரியார்’ பட்டம்: ‘குடிஅரசு’ கூறும் வரலாறு

பெரியார் பற்றிய அவதூறுகள் – தீவிர ‘தமிழ்த் தேசியம்’ பேசும் சில குழுக்களால் இணைய தளங்களிலும் எழுத்துகளிலும் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழனுக்கு அடையாளம் ஜாதியே என்று பார்ப்பனியத்துக்கு சேவை செய்யவும் ஒரு சிலர் புறப்பட்டிருக்கிறார்கள். ம.பொ.சி.யின் பேத்தியான பரமேசுவரி, ‘பெரியார்’ என்ற பட்டத்தை பெண்கள் கொடுத்தார்கள் என்பதற்கே சான்று எதுவும் இல்லை என்று எழுதியிருக்கிறார். இந்த அவதூறுகளுக்கு மறுப்பாக பெண்கள் மாநாட்டில் 13.11.1938இல் பெரியாருக்கு பட்டம் தந்த செய்தியை ‘குடிஅரசு’ (நவம்.20, 1938) இதழிலிருந்து எடுத்து இங்கு வெளியிடுகிறோம். தமிழ்மொழிக்கும் பெண்கள் உரிமைக்கும் 1938ஆம் ஆண்டிலேயே பெரியார் இயக்கம் குரல் கொடுத்திருக்கிறது என்பதை ‘காமாலைக் கண்’ கொண்டு பார்ப்போருக்கு உணர்த்திட, பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் இங்கு வெளியிடுகிறோம். தீர்மானங்களில் சில: இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய இயலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு...

பெரியார் மீது அவதூறு கக்கும் ம.பொ.சி. பரம்பரைக்கு மறுப்பு

பெரியார் மீது அவதூறு கக்கும் ம.பொ.சி. பரம்பரைக்கு மறுப்பு

மதிவண்ணன் நூல் வெளியீட்டு நிகழ்வில் பேசிய பத்திரிகையாளர் விஷ்ணுபுரம் சரவணன், பெரியார் மீது ம.பொ.சி.யின் பேத்தி பரமேசுவரி என்பவர், இணையதளத்தில் அவதூறுகள் எழுதி வருவதை சுட்டிக்காட்டி பேசினார். அவரது உரையையும், அவதூறுக்கு மறுப்பாக ‘குடிஅரசு’ பதிவுகளையும் (4 ஆம் பக்கம்) வெளியிடுகிறோம். ராவ் சாகிப் எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள் மற்றும் மதிவண்ணன் எழுதிய, ‘உள் ஒதுக்கீடு’; ‘தொடரும் விவாதம்’; ‘மெல்ல முகிழ்க்கும் உரையாடல்’, ‘ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா’ ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 15.3.2014 அன்று சென்னை அய்கப் அரங்கில் நடைபெற்றது. ‘கருப்புப் பிரதிகள்’ இந்த நூல்களை வெளியிட் டுள்ளது. நூல்களை ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் வெளியிட, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். வ.கீதா, புனித பாண்டியன் மற்றும் தோழர்கள் உரையாற்றினர். நீலகண்டன் தொகுத்து வழங்கினார். ‘மெல்ல முகிழ்க்கும் உரையாடல்’ நூலை அறிமுகம் செய்து பத்திரிகையாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்த...

மதம் திணிக்கும் ‘பிறவி தொழிலாளர்’ – ‘பிறவி முதலாளிகள்’ பேதம் தகர்க்கப்பட வேண்டும்! – பெரியார்

மதம் திணிக்கும் ‘பிறவி தொழிலாளர்’ – ‘பிறவி முதலாளிகள்’ பேதம் தகர்க்கப்பட வேண்டும்! – பெரியார்

01.05.1935 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்ற மே நாள் விழாக் கொண்டாட்டத்தில் தலைமையேற்று ஆற்றியவுரை. மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள். மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுவதானா லும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப் படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெய்னில் கொண்டாடப்படுவது போல் பிரஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது. அதுபோலவே தான் மேல் நாடுகளில் ஐரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை. ஏனெனில் ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகின்றது. எல்லா தேசமும் ஒரேவிதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை. ஆரம்ப தசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று...

மயிலாடுதுறை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் விளக்கம்: சமூக மாற்றம்-வளர்ச்சிகளை தடைப்படுத்தும் ஜாதியம்

மயிலாடுதுறை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் விளக்கம்: சமூக மாற்றம்-வளர்ச்சிகளை தடைப்படுத்தும் ஜாதியம்

சமூகத்தில் நிகழும் அரசியல்-பொருளாதார செயல்பாடுகளை மக்கள் மேம்பாட்டுக்கு பயன்படவிடாது, ஜாதியம் விழுங்கி செரிமானம் செய்கிறது என்று பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் 30.3.2014 அன்று சிறப்புக் கருத்தரங்கம், வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டிடத்தில் சிறப்புடன் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மாநிலக் குழுத் தலைவர் எல்.பி. சாமி தலைமையில் நடந்த முதல் அமர்வில் ‘ஜாதியப் பாகுபாடுகளும் வன்கொடுமைகளும்’ என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். “ஜாதியப் பாகுபாடுகளுக்கு அடிப்படையானது ஜாதியமைப்பு; ஜாதியமைப்பு உலகிலே எங்கும் இல்லாது இந்தியாவில் மட்டுமே இயங்கிக் கொண் டிருக்கிற பார்ப்பனர்களால் கட்டி எழுப்பப்பட்ட அமைப்பு. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு வரும் வரை இந்தியா என்ற ஒன்று உருவாகவில்லை. ஆனால், வேத காலத்தில் தொடங்கிய பார்ப்பனர் களின் புரோகித ஆட்சிகளையே அரசர்களும் குறுநில மன்னர்களும் நடத்தி வந்தனர். இதனால் உலகில் பல்வேறு சமூக அமைப்புகளில்...

பெரியாருக்குக் காட்டும் நன்றி !

பெரியாருக்குக் காட்டும் நன்றி !

‘அறிவின் வழி’ என்ற மாத இதழ் கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் பகுத்தறிவு பேசும் இயக்கம் குறித்து எழுதியுள்ள தலையங்கம் எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின் உண்மையான தன்மையை பகுத்து அறிந்து கொள்பவன் பகுத்தறிவாளன் ஆகிறான். தமிழ்நாட்டில் பகுத்தறிவு என்ற சொல் கடவுள் மறுப்பு என்பதையே முன்னிலைப்படுத்துகின்றது. பகுத்தறிவாளன் என்றால் நாத்திகன் என்று சொல்லிவிட்டு ஒதுக்கி விடுகிறார்கள் அல்லது ஒதுங்கி விடுகிறார்கள். ‘பகுத்தறிவு’ என்று பேசத் தொடங்கியதுமே அதைத் தட்டிக் கழித்து விட்டு, புறக்கணித்துவிட்டு ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு ஓர் ஒவ்வாமைப் பண்பை வளர்த்திருக்கிறார்கள். இன்றைய நிலையில் பகுத்தறிவுவாதம் பேசுகிறவர்கள் மூன்று பிரிவாகப் பிரித்துக் கொள்ளலாம். இதில் முதல் பிரிவினர், பகுத்தறிவு என்ற சொல்லைப் பட்டா போட்டு எடுத்துக் கொண்டிருப்பவர்கள். வேறு எவரும் பகுத்தறிவு என்ற சொல்லை பயன்படுத்துவதை அல்லது அந்தப் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்து வதை விரும்பாதவர்கள். அவ்வாறு ஓர் இயக்கம், அமைப்பு தொடங்கப்படுமானால், அதற்கு யாரும்...

நாகம்மையார் மறைவும், கிறிஸ்துவ திருமணமும் – பெரியார் வரலாற்று நூலில் பிழையான தகவல்கள் (தா.செ. மணி)

நாகம்மையார் மறைவும், கிறிஸ்துவ திருமணமும் – பெரியார் வரலாற்று நூலில் பிழையான தகவல்கள் (தா.செ. மணி)

திராவிடர் கழகம் வெளியிட்டு வரும் ‘தமிழர் தலைவர்’ பெரியார் வரலாற்று நூலில் திரிக்கப்பட்ட பிழைகளை நேர் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இக்கட்டுரை வெளியிடப் படுகிறது. பெரியாரின் வாழ்வில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாக, நாகம்மையார் மறைவுக்கு (11-5-1933) அடுத்த நாள் திருச்சியில் 144 தடையை மீறி, இரு கிறிஸ்துவர்களுக்கு சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்தார் என்பது ஒன்றாகும். திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ எனும் 1939 ஆம் ஆண்டு வரையிலான வாழ்க்கை வரலாற்று நூலிலும் “11-5-1933 இல் நாகம்மையார் காலஞ்சென்றார். 12-5-1933 இல் ஈ.வெ.ரா திருச்சி சென்று அங்கு ஒரு கிறிஸ்துவ விவாகத்தை 144 வது செக்ஷனை மீறி நடத்தி வைத்து அரஸ்டு செய்யப்பட்டார். பிறகு, சர்க்காரால் இந்த வழக்கு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றியே தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ள “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்” இரு பதிப்புகளிலும்...

தீபாவளி என்றால் என்ன? – பெரியார்

தீபாவளி என்றால் என்ன? – பெரியார்

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். 2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார். 3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றி யுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது. 4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது. 5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது. 6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத் தினான். 7. தேவர்களுக்காக விஷ்ணு, நரகா சூரனுடன் போர் துவங்கினார். 8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான். 9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். 10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும். இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!...

இந்து மதப் பண்டிகைகள்

சொர்க்கவாசல் மகிமை மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச்செலவு செய்து கொண்டு போவதும்,  தை மாதம் வந்தால் பூசம் என்று காவடிகளைத் றீக்கிக் கொண்டு  பழனி முதலிய மலைகளுக்குப் போவதும், பொய்யையும் புளுகையும் காவடிக் கதையாய்ச்  சொல்வதும், அறுத்துச் சமைத்த பாம்பும், கோழியும், மீனும் உயிர் பெற்று விட்டது என்பதும், மண் சர்க்கரை ஆகிவிட்டது என்ப தும், வெட்டித் துண்டாக்கப்பட்ட  குழந்தை உயிர்பெற்று விட்டது என்பதும் இதுபோல் இன்னும் பல பொய்களை வெட்க மில்லாமல், சொல்லுவதும், அழுக்குக் குட்டைகளில் குளித்தும், குடித்தும்  `பஞ்சாமிர்தம்’ எனும் அசிங்கத்தை உண்டும், அதனால் காலரா போன்ற கொடிய நோய்க்கு இரையாவதும் நாம் கண்டது தானே! அசிங்கம், ஆபாசம், அறியாமை இவைதானே நமது பண்டிகைகளாக இருந்து வருகின்றன? சீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு என்று கதை அளக்கிறார்களே,  அதன் தாத்பரியத்தைக் கேளுங்கள் : நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோயிலின்...

பெரியாரே  சமூகத்தின் ஞாயிறு

பெரியாரே சமூகத்தின் ஞாயிறு

இதுவரை முகநூலில் மூழ்கி முடிப்பேன் ஞாயிறை … இம்முறை முகங்களில் மூழ்கி முடித்தேன் ஞாயிறை … இயந்திர வாழ்வில் இயக்க ஓய்வாய் இரக்கம் பேச ஞாயிறு … இயல்பு மீறிய இயக்க வாழ்வில் இதயம் பேசிட ஞாயிறு … வீதிதனில் இறங்கி பரப்புரையில் கலந்தே மக்களதில் கலந்த ஜாதி புழுதியதை சுட்டெரிக்கும் முயற்சியதில் ( தி.வி.க )பெரியாரின் ஞாயிறுகள் … காஞ்சி மாவட்டமெங்கும் காலடி பதித்தே கருத்ததனை விதைத்தே பெரியாரின் கனவெனவே நின்ற ஞாயிறு … தோழர்களின் பணியதுவோ கடினமன்றோ மக்களின் அறியாமையோ கொடுமையன்றோ சுட்டெரிக்கும் வேளையிலும் சுடாமல் கையேந்திய ஞாயிறு …. களமாடும் கருப்புகளின் கம்பீரம் கண்கொண்டு கண்டேனே கருத்தாடும் கரும்புலிகள் சொல்கீரி சிலிர்த்ததோர் ஞாயிறு … பெரியாரே சமூகத்தின் ஞாயிறு என்றுணர்ந்த எனக்கும் மறக்காதே இந்த ஞாயிறு …. இரா. செந்தில் குமார் ………………. செய்தி : திராவிடர் விடுதலை கழகம் சார்பில் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்...

சரசுவதிக்கு பூஜை போட்டவன் தற்குறி; மலம் துடைத்தவன் அறிவாளி – பெரியார்

சரசுவதிக்கு பூஜை போட்டவன் தற்குறி; மலம் துடைத்தவன் அறிவாளி – பெரியார்

சரசுவதி பூசை என்பது ஓர் அர்த்தமற்ற பூசை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி – அதற்குச் சரசுவதி என்று பெயர் கொடுத்து, அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்றும் சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி இல்லாமல் சாமியை நம்பிக் கொண்டு இருக்கும்படிச் செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளி யாகிக் கொண்டு நம்மைப் படிப்பு வர முடியா ‘மக்குகள்’ என்று சொல்லிக் கொண்டு இருக் கிறார்கள். முதலாவது, சரசுவதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்கள் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரசுவதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனைத் தகப்பன் என்று கருதி அதற்கு...

பெரியார் ஏன் எதிர்க்கப்படுகிறார்? மயிலாடுதுறையில் கழகம் நடத்திய விளக்கக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தின் சார்பாக மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் 26.09.2015 சனிக் கிழமை அன்று பெரியார்: யாரால், எதற்க்காக, எதிர்க்கப் படுகிறார்? என்ற தலைப்பில் பெரியார் பிறந்தநாள் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு நகர அமைப் பாளர் கு.செந்தில்குமார் தலைமை வகித்தார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் வே.மதிமாறன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மத அடிப்படை வாதிகளும், ஜாதிய ஆதிக்கவாதிகளும்தான் பெரியாரை எதிர்க்கின்றனர் என்றும், கல்வி, வேலை வாய்ப்புகளில் போராடிப் பெற்ற இடஓதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடங்களில் இன்றும் அவர்கள் முழுமையாக அதில் பலன் பெற முடியாமல் பல்வேறு இடையூறுகளை ஏற்ப்படுத்தி இட ஒதுக் கீட்டை ஒழிக்கும் சதி திட்டமிட்டு நடைபெறுவதாக விடுதலை இராசேந்திரன் கூறினார். எழுத்தாளர் மதிமாறன் பேசும்போது திருக்குறளை இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆண்ட மன்னர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் புராணங்களை கதாகாலேட்சபம் செய்து கொண்டிருந்த வேளையில் பெரியார் தான் திருக்குறள் மாநாடு...