துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஜாதி ஆணவப் படுகொலை: உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆணைகள்
ஜாதி ஆணவப் படுகொலைகளில் சமூகத்தில் நிலவும் ஜாதிவெறிக்கு அரசு நிர்வாகமும் காவல்துறையும் துணை போவதை திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உடுமலையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்ததற்காக சங்கர் என்ற தலித் பொறியாளரை ஜாதி வெறியர்கள் படுகொலை செய்தனர். முன்கூட்டியே காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டும்கூட காவல்துறை அலட்சியம் காட்டியது. எனவே ‘ஆதித்தன்’ வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படை யில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒரு வழக்கைத் தொடர்ந்தார். இது குறித்து மேலும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களைத் திரட்டி விரிவான மனுவை தேர்தல் முடிந்த பிறகு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கேட்டதற்கு இணங்க மனு திரும்பப் பெறப்பட்டது. இப்போது கழக சார்பில் முன் வைத்த கோரிக்கைகளை வேறு ஒரு ஜாதி ஆணவப் படுகொலை வழக்கில்...