திராவிட இயக்கம் பேசுவது இனவெறி அல்ல; இனத்தின் விடுதலை! – மனோ தங்கராஜ்
21.09.2024 அன்று சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற “அன்றே எச்சரித்தார் பெரியார் – பறிபோகும் மாநில உரிமைகள்” பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆற்றிய உரையின் தொகுப்பு. பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். காரணம் தந்தை பெரியார் ஏற்படுத்திய சுயமரியாதை உணர்வு. சுயமரியாதையோடு மற்றவர்களையும் மதிக்கும் பண்பு. அதே போன்று நம்மை மானம் இழக்கச் செய்து, நமது உரிமைகளைப் பறித்து நம்மை நிராயுதபாணிகளாக மாற்றி, பல்வேறு மூடநம்பிக்கைகளைக் கற்பித்து அதை நம்ப வைத்து நமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து விடுதலைப் பெறுவதற்காகவே, தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் தந்தை பெரியார். எனக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருக்கும் நீண்டகாலத் தொடர்பு இருக்கிறது. நான் கடந்துவந்த பாதையை அடிக்கடி நினைத்துப் பார்ப்பது உண்டு. நான் கொளத்தூர் மணி அவர்களைக் கூடங்குளம் அணு உலைக்கு எதிரானப் போராட்டக் களத்தில்தான் முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போது அவரைச் சார்ந்த தோழர்கள் தமிழ்நாடு முழுவதிலும்...
