தலையங்கம் ‘நீட்’ மசோதாவைக் கிடப்பில் போடும் ஆளுநரின் அரசியல் பின்னணி
தமிழ்நாடு முதலமைச்சர், ஆளுநர் ஆர்.என் இரவியை சந்தித்திருக்கிறார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பக் கோரியதை ஆளுநர் ஏற்றுக் கொண்டு விட்டதாக தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது. நீட் விலக்கு மசோதாக்களைப் போல வேறு பல மசோதாக்களையும் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். முதலமைச்சர் “The Dravidian Model” என்ற ஆங்கில நூலை ஆளுநருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார். தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு இரண்டு செய்திகளைக் கூறுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பை ஆளுநர் காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஆளுநர் மதிக்க வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் ஏற்று ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு நீட் விலக்கு மசோதாவை உறுதி கூறியபடி அனுப்பி வைப்பாரா ? மாட்டாரா ? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். (இது நாள் வரை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை) இந்தப் பிண்ணனியில் தமிழ்நாட்டு ஆளுநரைப் பற்றிய ஒரு வரலாற்று...
