வினாக்கள்… விடைகள்…!
மது விலக்கு எங்கள் கொள்கை; மற்ற கட்சிகள் பறித்துக் கொண்டு விட்டன. – பா.ம.க. அன்புமணி அரசியல் கட்சிகள விடுங்க; அரசாங்கமே உங்க கிட்டேயிருந்து இதை பறிச்சு அமுலாக்கிடாமல் பாத்துக்குங்க; அப்புறம் கட்சியே நடத்தமுடியாமல் போயிடும்! அரசு தடையையும் மீறி, கோயில்களில் சினிமா படப்பிடிப்புகள் நடக்கின்றன. – ‘இந்து’ ஏடு அதெல்லாம் கோயில் பிரச்சினைகளில், அரசு தலையிட முடியாது; தலையிடவும் கூடாது. இது இராமகோபாலன் உத்தரவு; தெரிஞ்சுக்குங்க. இந்தியாவிலேயே தூய்மையான நகரங்களில் முதலிடம் மைசூரு; இரண்டாவது திருச்சி. – செய்தி புண்ணியஸ்தலங்களான காசி, இராமேசுவரத்தை இப்படியெல்லாம் அவமானப் படுத்தக் கூடாது. இரயில்களில் பாட்டுப்பாடி, பிச்சை எடுப்பவர்களை அரசு திட்டங்களின் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்த மத்திய அரசு திட்டம். – செய்தி இந்தத் திட்டத்தில், இஸ்லாமிய கிறிஸ்துவ பிச்சைக்காரர்களையும் சேர்த்துப் பீங்களா? பங்கு சந்தையில் ஏழுமலையான் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. – செய்தி சுவிஸ் வங்கியில் ஏற்கெனவே கணக்கு தொடங்கிட்டீங்களா? ‘கோ’ சாலைகளில் உள்ள...
