பார்ப்பன பல்லக்கு சவாரி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் கோயிலில் இப்போதும் பார்ப்பன பல்லக்குச் சவாரி நடக்கிறது. வேதம் ஓதும் பார்ப்பனர்களான அரையான் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசகர், பராசுர பட்டர் ஆகியோரைக் கோயிலில் இருந்து அவரவர்களின் வீட்டுக்கு ‘சூத்திரர்’கள் பல்லக்கில் சுமந்து செல்ல வேண்டுமாம். ‘சொர்க்க வாசல்’ திறப்புக்குப் பிறகு ஆண்டுதோறும் ‘பிரம்ம ரத மரியாதை’ என்ற பெயரில் இது நடக்கிறது. சீமான் தாங்கி என்றும் இதற்குப் பெயர் உண்டாம். சூத்திர பக்தர்களுக்கு ‘சொர்க்க வாசலை’ திறக்கும் இந்த பார்ப்பனர்கள், தாங்கள் மட்டும் சொகுசாக பல்லக்கில் சொந்த ‘வீடு’ போய்ச் சேர்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் அறநிலையத் துறை இதை தடை செய்தது. அதை எதிர்த்து ஸ்ரீரங்கம் அர்ச்சகப் பார்ப் பனர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கு தொடர்ந்த பார்ப்பனர்களைக் கண்டித்து வழக்கையும் தள்ளுபடி செய்தது. மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்த பார்ப்பன ‘பல்லக்கு சவாரி’, இந்த ஆண்டு நீதிமன்றத் தடையையும்...
