Category: கருவூல கட்டுரைகள்

காஷ்மீர் – ஒரு முன்கதை சுருக்கம் – பாமரன்

அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தொடர்ந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் துயரத்தை ஓரிரு பக்கங்களில் அடக்கிவிட முடியுமா என்ன? இது வரையிலும் இதுபற்றி வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள்….. ஆயிரக்கணக்கான கட்டுரைகள்…… மரியாதைக்குரிய நீதிபதிகளது உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள்…. என எண்ணற்ற ஆதாரங்களை கரைத்துக் குடிக்காவிட்டாலும் பரவாயில்லை…. குறைந்தபட்சம் அதில் கால்பங்காவது கவனத்தில் கொள்ள வேண்டுமே.? ஏனெனில் இதனை எழுத முற்படுவது எனது கட்டுரைகளில் மேலும் ஒரு எண்ணிக்கையைக் கூட்டிக்காட்டும் என்பதைக் காட்டிலும்….. ரத்தம் சிந்த போராடிக் கொண்டிருக்கும் எவரையும் தப்பித்தவறிக் கூட தவறுதலாகக் காட்டிவிடக் கூடாது என்பதுதான் எனது தயக்கம். அந்த அச்சம்தான் என்னை இவ்வளவு நாளும் பிடித்தாட்டிக் கொண்டிருந்தது. “ராணுவத்தின் மீதே கலவரக்காரர்கள் கல்லெரிகிறார்கள்.” “அமைதியை நிலை நாட்ட வேறு வழியின்றி ராணுவம் துப்பாக்கிச் சூடு” “பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தாக்குதல்” என அன்றாட தலைப்புச் செய்திகளை மட்டும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு நாமும் ஓய்வெடுக்கலாம்தான். ஆனால் இதுவெல்லாம் அப்படியே நூற்றுக்கு...

இந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா? – பெரியார்

இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது. “இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்’ என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில் தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவது தான் இந்தியின் தத்துவம். எனவே தான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு பேர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால், இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். என்ன விலை கொடுத்தேனும், நாம் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். இது கடைசிப் போராட்டம் வெற்றி அல்லது தோல்வி, இரண்டிலொன்று பார்த்துவிடத்தான் வேண்டும். இந்தியில் மெச்சத்...

சமஸ்கிருதம் தேவையா? – பெரியார்

இந்த நாட்டில் பல காலமாக ‘சமஸ்கிருதம்’ என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந்நாட்டில் புகுத்தி, அதற்குத் ‘தேவ பாஷை’ எனப் பெயரிட்டுக் கடவுள்கள் – தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தால் புரியும் – பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100-க்கு 97 பேர் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் – நமது மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத – நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள – இந்நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய்மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்து வரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருந்திருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், வாலிபர்கள்...

இதுதான் சமஸ்கிருதம் ! – தந்தை பெரியார்

( “ புரட்டு இமாலயப் புரட்டு! “  நூலிலிருந்து…. ) சமஸ்கிருதம் ஒரு மூல மொழியல்ல; அது அந்நிய பல நாட்டுக் கதம்ப மொழி. அடிநாளில் (நீண்டநாளுக்கு முன்) மேற்கு மத்திய ஆசியாவில் வாழ்ந்த நார்டிக் ஆரிய மக்கள் பேசிவந்த மொழியே, பலமொழிகள் கலந்து சமஸ்கிருதம் என்பதாக ஆயிற்று. அதாவது, தங்கள் தாயகத்தின் சுற்று வட்டார எல்லை நாடுகளின் மொழிகளான டர்கிஸ் (Turkish) மொழி, ஈரானிய மொழி – பாக்ட்ரினியாவில் குடியேறிய பின் பர்மீரியன் மொழி ஆகியவற்றிலிருந்து தொகுத்த கதம்பமே சமஸ்கிருத மொழி.   மேற்கு மத்திய ஆசியாவில் வசித்த இந்த ஆரியர்கள் பாக்ட்ரினியாவிலிருந்து இரு பிரிவாகப் பிரிந்து, கி.மு. 1350ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கிந்தியாவில் குடியேறிய போது இந்த சமஸ்கிருத மொழியையும் வடமேற்கிந்தியாவில் புகுத்தினர்.   இவர்கள் வடமேற்கிந்தியாவில் இரு முறை நுழைந்தனர். முதலாவது கி.மு. 1400 வேதகாலம்; இரண்டாவது கி.மு. 58இல் பாக்ட்ரினியா, சாக்டியானா நாடுகளில் கிரேக்க –...

சமஸ்கிருத சனியன் – தேசீயத் துரோகி

தேசீயத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்கு பயன்படாத பழய காரியங்களில் ஆசை யுடையவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி, அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப் படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசீயத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம்.   சென்னை மாகாணத்தில் கல்வியிலாக்காவில் சிக்கனம் செய்வதைப் பற்றி ஆலோசனைக் கூறிய சிக்கனக் கமிட்டியார் கூறியிருக்கும் யோசனை களில் “சென்னைப் பிரசிடென்சிக் கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும்” என்பதும் ஒரு யோசனை யாகும்.   உண்மையிலேயே “தேச மக்கள் கல்வியினால் அறிவு பெற வேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெற வேண்டும்” என்று விரும்பு கின்ற வர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்து விடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ வருத்தமோ அடையமாட்டார்கள். ஏனென்றால் இன்று இந்து மதம் என்று சொல்லும் ஒரு...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (14) ஆதித்தனார் – ம.பொ.சி.யின் தடுமாற்றங்கள்! வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (14) ஆதித்தனார் – ம.பொ.சி.யின் தடுமாற்றங்கள்! வாலாசா வல்லவன்

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோற்று விட்டவுடன் 1927 இல் கோவையில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்யப்பட்டது. அதற்கு இரண்டு நாள் கழித்து தான் இந்த நெல்லூர் பார்ப்பனரல் லாதார் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தலைவர் சித்தூர் முனிசாமி நாயுடுவும், ஏ.பி.பாத்ரோவும் நீதிக் கட்சியில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தை மாற்றுவதற்காவே, கட்சியில் பார்ப் பனர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டாம்; தேர்தல் களிலும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டாம்; தாங்களாகவே வெற்றி பெரும் பார்ப்பனர் களில் நாம் கொள்கைக்கு ஒத்து வருபவர்களை அமைச்சராக வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் என்ற நீதிக்கட்சியினரின் தீர்மானத்தை பெரியார் வழி மொழிந்தார். தெலுங்கரான மனத்தட்டை சேது...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (13) ம.பொ.சி. ஆதரித்து விட்டால்-தமிழ் பார்ப்பனர் ஆகிவிடுவார்களா? வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (13) ம.பொ.சி. ஆதரித்து விட்டால்-தமிழ் பார்ப்பனர் ஆகிவிடுவார்களா? வாலாசா வல்லவன்

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி அடுத்தக் குற்றச்சாட்டு “சேதுரத்தினம் அய்யரை அமைச்சராகச் சேர்த்துக் கொண்டது”. 1926இல் சுயேச்சை அமைச்சரவை அமைத்த சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த சுயராச்சிய கட்சியை சேர்ந்த அரங்கசாமி முதலியார் ஆரோக்கியசாமி முதலியார் இருவரும் சைமன் கமிஷனை டாக்டர் சுப்பராயன் வரவேற்றதை கண்டித்து பதவி விலகினர். டாக்டர் சுப்பராயன் ஆட்சிக் கவிழும் நிலை ஏற்பட்டது. அன்றைய ஆளுநர் நீதிக்கட்சியினரை அழைத்து டாக்டர் சுப்பராயனுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண் டார். நீதிக்கட்சியைச் சார்ந்த முத்தையா முதலியாரையும் சுயராச்சிய கட்சியில் இருந்து விலகி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு வந்த சேதுரத்தினம் அய்யரையும் அமைச்சரவையில் சுப்பராயன் சேர்த்துக் கொண்டார். 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வி அடைந்தது. சுய ராஜ்ஜிய கட்சி தான் வெற்றி பெற்றிருந்தது. நீதிக்கட்சியில் 21 சட்டமன்ற உறுப்பினர்களும், சுயராச்சிய கட்சியில் 41 சட்டமன்ற உறுப்பினர்களும்...

‘ஜனநாயகம்’ பெரியார்

‘ஜனநாயகம்’ பெரியார்

கேள்வி : உலகத்தில், மகா பித்தலாட்ட மான சொல் எது? பதில் : அதுவா, அதுதான் ஜனநாயகம் என்கின்ற சொல். கேள்வி : அது என்ன, கடவுள் என்பதை விட மகா பித்தலாட்டமான சொல்லா? பதில் : அய்யய்யோ, கடவுள் என்பது ஒரு பொதுப் பித்தலாட்டமான சொல்; இந்தப் பித்தலாட்டத்தில் எல்லோருக்கும் பங்கு வரும். ஜனநாயகம் என்கின்ற பித்த லாட்டச் சொல் அப்படி அல்ல; தந்திரக் காரனுக்கு – அயோக்கியனுக்கு – இவர்களே சேர்ந்த கோஷ்டிக்குத்தான் பங்கும், பயனும் உண்டு. போக்கற்ற ஆளுக்கெல்லாம், பித்தலாட்ட வாழ்வு கோஷ்டிக்கெல்லாம் பிழைக்கும் வழி – ஜனநாயகம்தான். கேள்வி: இதுவே இப்படியானால் – ஜன நாயக முன்னணி, ஜனநாயக அய்க்கிய முன்னணி, ஜனநாயக முற்போக்கு முன்னணி, ஜனநாயக தீவிர முன்னணி, ஜன நாயக அதிதீவிர முன்னணி, ஜனநாயக சுயேச்சை முன்னணி, சுயேச்சை ஜனநாயக முன்னணி, ஜனநாயகக் கூட்டணி – என்பது போன்ற சொற்களின் தன்மை என்ன...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (12) நீதிக்கட்சியின் பார்ப்பன எதிர்ப்பு போலியானதா? வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (12) நீதிக்கட்சியின் பார்ப்பன எதிர்ப்பு போலியானதா? வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படு வதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கை யாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி அன்றைக்கு இருந்த அரசியல் அமைப்புக்கு ஏற்றத் தன்மையில் நீதிக்கட்சியினர் இயங்கி வந்தனர். பெரியாரை மட்டும் குறை சொல்வது என்ன நியாயம்? 1956 நவம்பர் 1 ஆம் நாள் தமிழகம் மொழி வழி மாநிலமாக பிரிந்தவுடன் பெரியார் 4-11-56 அன்று தி.க. செயற் குழுவை திருச்சியில் கூட்டினார். இனி ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற உரிமை முழக்கத்தை எழுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ‘விடுதலை’ ஏட்டின் தலைப்பு பகுதியில் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று வெளியிட்டு வந்ததை மாற்றி ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று வெளியிட்டு வந்தது. பெரியார் மறையும்வரை ஏன் 1975 ‘எமர்ஜென்சி’ காலம்வரை இந்த முழக்கம் ‘விடுதலை’யில் இடம் பெற்று வந்தது. “தமிழ்நாடு...

‘தீர்த்த’த் தண்ணீரை முகர்ந்து பார்க்காதே!

‘தீர்த்த’த் தண்ணீரை முகர்ந்து பார்க்காதே!

1933ஆம் ஆண்டில் ‘குடிஅரசில்’ மாமாங்கம் குறித்து ‘சித்திரபுத்திரன்’ என்ற பெயரில் பெரியார் எழுதிய உரையாடல்: புராண மரியாதைக்காரன் கேள்வி: ஐயா, சுயமரியாதைக்காரரே! கும்பகோண மாமாங்கக் குளத்தில் ஒரு அற்புதம் நடக் கின்றதே அதற்குச் சமாதானம் சொல்லும் பார்ப்போம். சுயமரியாதைக்காரன் பதில்: என்ன அற்புதமய்யா? பு.ம.: மாமாங்கக்குளம் எவ்வளவு சேறாய் இருந்த போதிலும், அதில் எவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே, அந்தக் குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை. இதற்குப் பதில் சொல் பார்ப்போம். சு.ம.: இது ஒரு நல்ல புத்திசாலித் தனமான கேள்விதான். இதன் காரணம் சொல்லுகிறேன். சற்று தயவு செய்து கேட்க வேண்டும். அதாவது, மாமாங்கக் குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசி பாலிட்டியார் இறைத்து விடுவார்கள். பிறகு ஓர் இரண்டு அடி உயரத் தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும். அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள். ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேறு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்பு மாதிரி...

‘மகாமக’த்தில் முழுக்குப் போடுவது மதிகேடு!

‘மகாமக’த்தில் முழுக்குப் போடுவது மதிகேடு!

71 ஆண்டுகளுக்கு முன் பெரியார் எழுதிய கட்டுரை ‘மகாமக’த்தில் முழுக்குப் போடுவது மதிகேடு! 1945ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ இதழில் கும்பகோணம் ‘மகாமகம்’ குறித்து பெரியார் எழுதிய கட்டுரை இது. 71 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கருத்துகள் இன்றைக்கும் பொருந்தி வருவதை இக்கட்டுரையைப் படிக்கும்போது புரிந்துணர முடியும். கும்பகோணத்தில் மகாமக உற்சவம் நடக்கப் போகிறது. அதற்குத் திராவிட மக்களை வரும்படியாக, கும்பகோணம் பார்ப்பனர்களால் அழைப்புக்குமேல் அழைப்பு விடுத்த வண்ணமாக விளம்பரங்கள் காணப்படுகின்றன. பார்ப்பனப் பத்திரிகைகள் மாமாங்கத்தைப் பற்றிப் பிரமாதப்படுத்தி மக்களை அங்குச் சேர்ப்பிக்க – தள்ளிவிட முயற்சிக்கின்றன. இந்த 20 ஆவது நூற்றாண்டுக்குப் பக்கத்தில் வாழும் திராவிட மக்கள் இப்படி ஓர் அறிவும், மானமும் சூன்யமான ஓர் உற்சவத்தை மதித்து, கும்பகோணம் சென்று கூமட்டைகள் ஆவதென்றால், இதை உலகின் 8ஆவது அதிசயமென்றுதான் சொல்ல வேண்டும். கும்பகோணத்தில் இவ்வளவு கூட்டம் சேர்க்கப்படுவதற்கு மாமாங்கத்தன்று அங்கு என்ன புதிய சங்கதி காணப்படப் போகிறது என்பதை யோசிப்போம்....

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (11) தொன்று தொட்டு இந்தியா ஒரே நாடு, என்கிறார் ம.பொ.சி. வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (11) தொன்று தொட்டு இந்தியா ஒரே நாடு, என்கிறார் ம.பொ.சி. வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி தமிழகம் தனி நாடாகக் கூடாது என்பதற்கு காரணங்களை அடுக்குகிறார், ம.பொ.சி. அயல்நாட்டு உதவி?: “அமெரிக்கா போன்ற அயல் நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம்” என்று கூறலாம். இப்போதே, பாரதத்துக்குற்ற நாணய மாற்று சக்தியையும் மீறி உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது, செய்தும், விலைவாசிகளை குறைக்க முடிய வில்லையே! கேட்டவனுக்கெல்லாம், கேட்ட போதெல்லாம் அவனவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க அமெரிக்க நாட்டார் வள்ளல் பெருமக்கள் அல்லர். தாங்கள் உதவும் நாட்டிலிருந்தும், தங்கள் நாட்டிற்கு என்ன ஆதாயம் கிடைக்கும்? என்று அலசி ஆராய்ந்து பார்த்தப் பின்னர் தான் அவர்கள் உதவி புரிவார்கள்…… என்ன இருக்கிறது?: தமிழ் நாட்டில் உலக நாடுகளுக்குத் தேவைப்படுகின்ற...

பிப்.14 உலக காதலர் நாள் உயர்ந்த காதல் எது?

உணர்ச்சிகளால் உந்தப்படும் காதலை மறுக்கும் பெரியார், அறிவார்ந்த புரிதலோடுக் கூடிய காதலை வரவேற்கிறார். காதல் பற்றி பெரியார் கருத்து. “உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சம நிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்!” – குடிஅரசு 21.7.45 நண்பர்களாகப் பழகி புரியுங்கள்! “ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடிகாரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால்தானே தெரியும். திடீரென்று ஒருவரை யொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகள் உணர்ந்து ஒருவருக் கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான்...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (10) நடுவண் அரசின் எதிர்ப்புக்கு அஞ்சிய ம.பொ.சி. வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (10) நடுவண் அரசின் எதிர்ப்புக்கு அஞ்சிய ம.பொ.சி. வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி “பொது வாழ்வில் எவ்வளவோ இன்னல்களுக் கிடையே நான் கடை பிடித்து வரும் ஒழுக்கத்தை! மக்கள் ஐயுறும் வகையிலும் என் மீது பழி சுமத்திப் பிரச்சாரம் செய்தனர். அந்தப் பொய் குற்றச்சாட்டுகள் “தினத்தந்தியில்” முழுப்பக்க அளவில் பெரிய தலைப்பு களில் அவ்வப்போது பிரசுரிக்கப்பட்டு வந்தன. என்ன காரணத்தினாலோ திரு. காமராசருக்கு ஆதரவாக இருந்தது அந்நாளில் சி.பா.ஆத்தினாரின் நேர்பார்வை யில் நடத்தப்பட்டு வந்த ‘தினத்தந்தி’ அப்போதும் நானும் திரு. சி.பா. ஆதித்தனாரும் நண்பர்களாகத் தான் இருந்தோம். ஆயினும் அவருக்கு என்னிடமிருந்த நட்பைவிட திரு. காமராசரிடமிருந்த “பக்தி (?)” யே விஞ்சியிருந்தது. “வடக்கெல்லை – தெற்கெல்லைப் பிரச்சனைகள் பற்றி நான் பொதுக் கூட்டத்திலோ, நிருபர்களுக்கும், பேட்டிகளிலோ மத்திய அரசைக்...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (9) ஒரே ஆண்டில் மரணித்த ம.பொ.சி.யின் ‘தமிழ்த் தேச விடுதலை’ – வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (9) ஒரே ஆண்டில் மரணித்த ம.பொ.சி.யின் ‘தமிழ்த் தேச விடுதலை’ – வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி ம.பொ.சி.தான் உண்மையான சுதந்திர தமிழ்நாடு கோரினார் என்பதை ம.பொ.சியின் ‘பிரிவினை வரலாறு’ நூலிலிருந்தும் ‘தமிழன் குரல்’ நூல்களி லிருந்தும் மேற்கோள்களை எடுத்துக் காட்டியுள்ளார் வழக்குரைஞர் பா.குப்பன். ஆம், உண்மை தான், ம.பொ.சி. அப்படி எழுதிய காலத்தில் பெரியார் ம.பொ.சி.யை முழு மனதுடன் ஆதரித்தார் என்பதை வழக்குரைஞர் பா.குப்பன் மறைத்து விட்டார். இதோ பெரியார் ஆதரித்ததை ம.பொ.சி.யே எழுதியுள்ளார். “பெரியாரைச் சந்தித்தேன்! 1947 ஜனவரி 26 இல் விருதுநகரில் நகர மன்றத்தின் சார்பில் நடைபெற விருந்த விழாவிற்கு அம்மன்றத் தலைவர் வி.வி.இராமசாமி அவர்களால் அழைக்கப்பட்டேன். அதற்காகச் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் நான் சென்று கொண்டிருந்தபோது, அதே வண்டியில் பெரியார் ஈ.வெ. ராவும் கோயில்பட்டியில் ஒரு பொதுக் கூட்டத்தில்...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (8) வடக்கு எல்லை மீட்பு போராட்டம்: ம.பொ.சி.யின் நிலை என்ன?

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (8) வடக்கு எல்லை மீட்பு போராட்டம்: ம.பொ.சி.யின் நிலை என்ன?

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (7.1.2016 இதழ் தொடர்ச்சி) வடக்கு எல்லைப் பிரச்சினையை இழுத்தடிக்க இராஜாஜி சூழ்ச்சி செய்தார். இதைக் கஜபதி நாயகர் கண்டித்தார். 25.2.1954 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய ஆ.கசபதி நாயகர் “தமிழ்நாட்டுடன் சேர்ந்திருக்க வேண்டிய பகுதிகளாகிய சித்தூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி போன்ற பிராந்தியங்களை ஆந்திர இராஜ்யத்தோடு இந்திய சர்க்கார் சேர்ப்பதற்கு அனுமதித்தது தவறு ஆகும். அதனால் நாட்டில் எழுந்த கேடுகளை, கிளர்ச்சிகளை குழப்பங்களை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். அந்த பிராந்தியங்களில் வசிக்கின்ற பெரும் பான்மையான தமிழ் மக்களின் கலாச்சாரத்தைப் பாதிக்கின்ற ஒரு பெரிய விஷயத்தைப் பற்றி அந்தச் சபையில் (ஹளளநஅடெல) என் நண்பர் விநாயகம் அவர்கள் பேசும்போது, சித்தூர் விஷயம் ஆந்திர சர்க்காரின் பொறுப்பும் அல்ல,...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (7) குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி. தமிழருக்கு தலைவரா? வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (7) குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி. தமிழருக்கு தலைவரா? வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி) இராஜாஜி தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தையும் வர விடவில்லை. ஆ.கசபதி நாயகர் தமிழ் ஆட்சி மொழி மசோதாவைச் சென்னை சட்ட மேலவை யில் 5-1-1954இல் தாக்கல் செய்தார். அதை விவாதத்துக்கே வர விடாமல் முதல் அமைச்சர் இராஜாஜி தடுத்து விட்டார். இராஜாஜியின் பச்சை அடிமை ம.பொ.சியும் அன்று மேல் அவையில் தான் இருந்தார். அவர் வாய் மூடி மவுனியாவே இருந்தார். கசபதி நாயகரின் ஆட்சி மொழி மசோதாவை வரவேற்று ‘நம்நாடு’ நாளேடு 16.1.54 இல் தலையங்கம் எழுதியது. 20.12.54 அன்று சென்னையில் அனைத்து கட்சிகளை யும் அழைத்துக் கசபதியார் தமிழ் ஆட்சி மொழி மாநாட்டை நடத்தினார். அங்கு பேசியவர் களின் உரைகள் ‘நம்நாடு’ நாளிதழில் தொடராக...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (6) மொழி வழி மாநிலப் பிரிவினையை எதிர்த்தவர் ஆச்சாரியார்! வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (6) மொழி வழி மாநிலப் பிரிவினையை எதிர்த்தவர் ஆச்சாரியார்! வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி) 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சென்னை மாகாணத்தில் 375 சட்டமன்ற உறுப்பினர்கள் இரு ந்தார்கள். அதில் காங்கிரஸ்கட்சியினர் 152 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். பெரியார் அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சியையும் காங்கிரஸ் அல்லாத வேட்பாளர்களையும் ஆதரித்தார். தி.மு.க திராவிட நாட்டுக்கு ஆதரவாக உறுதி கொடுத்த கட்சியை யும், வேட்பாளர்களையும் ஆதரித்தது. ஆந்திர காங்கிரஸ்தலைவர் டி.பிரகாசம் 1950 இல் காங்கிரசை விட்டு வெளியேறி 1951 இல் ஐதராபாத் பிராஜா பார்டி, என்பதைத் தொடங்கினார். என்.ஜி.ரங்கா அதன் செயலாளராக இருந்தார். 1952 இல் கிருபாளனி தலைமையிலான கிஸான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி (K.M.P.P) விவசாயிகள் தொழி லாளர்கள் மக்கள் கட்சியுடன் இணைத்துக் கொண்டார். 1952 தேர்தலுக்கு...

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (3) பார்ப்பன சூழ்ச்சியில் வீழ்ந்த சிவாஜி

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (3) பார்ப்பன சூழ்ச்சியில் வீழ்ந்த சிவாஜி

பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: (சென்ற இதழ் தொடர்ச்சி) கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509 – 1530) 1) தென்னகம் முழுவதையும், தனது ஆட்சிக்கு உட் படுத்திய மன்னர். பார்ப்பன தாசர். வர்ணா°ரமப் பற்றாளர். பார்ப்பனர்களுக்கே முக்கிய பதவிகளைத் தந்தார். பெரும்பாலான பார்ப்பனர்கள் சுகவாசி களாக, உண்டு உறங்கிக் கிடந்தனர். “வேத மார்க்க பிரதிஷ்டாபன சாரியா” என்று பட்டம் சூட்டிக் கொண்டனர். 2) நீண்ட காலத்துக்குப் பிறகு, அவருக்கு குழந்தைப் பிறந்தது. திருமலைராயன் என்று பெயரிட்டு, 6 ஆம் வயதிலேயே முடிசூட்டி வைத்தார். முடிசூட்டிய ஒரு மாதத்திலேயே திம்மாதண்ட நாயகன் எனும் பார்ப்பான், குழந்தைக்கு நஞ்சு ஊட்டிக் கொன்றான். இவன் சாளுவ திம்மன் எனும் பார்ப்பன முதலமைச்சரின் மகன். 3) 3 பார்ப்பனர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். திம்மா தண்டநாயகன் சிறையிலிருந்து தப்பி, தனது பார்ப்பன உறவினரான அதிகாரிகளிடம் தஞ்ச மடைந்து, சதி செய்து நாட்டில் கலகத்தை உருவாக்கினான். 4) படையினால்...

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (2)

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் (2)

பவுத்தத் துறவிகளின் மாநாட்டுப் பந்தலுக்கு தீயிட்ட பார்ப்பனர்கள் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: (10.12.2015 இதழ் தொடர்ச்சி) 8) அபிமன்யூ என்ற காஷ்மீரை ஆண்ட பார்ப்பன மன்னன் பவுத்தர்களை இனப் படுகொலை செய்துவிட்டு கடும் பனிப் பொழிவினால் இறந்தார்கள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தான். (ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் படுகொலை செய்ததுபோல) இந்தப் படுகொலைகளை குளிர்காலங்களில் நடத்தினான். அந்த 6 மாதங்களிலும் தனது நாட்டை விட்டு வெளியேறி, ஒரு பள்ளத்தாக்குப் பகுதிக்குப் போய்விடுவான். திட்டமிட்டபடி பவுத்தர்கள் படுகொலைகள் நடக்கும். கேட்டால் பனியில் உறைந்து இறந்தார்கள் என்று பொய் சொல்வான். பனிப் பொழிவில் பார்ப்பனர்கள் ஏன் இறப்பதில்லை என்று கேட்டதற்கு, “அவர்களிடம் உள்ள ஆன்மீக சக்தியால் மரணத்தைத் தடுக்கிறார்கள்; அந்த ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி, கடவுளுக்கு யாகங்களையும், படையல்களையும் செய் கிறார்கள்” என்று பதில் கூறினான். (ஆதாரம்: கல்கணன்) 9) பவுத்த மதத்தினர் ஒரு பெண்ணைக் கடத்தியதாகக் கூறி ஆயிரக்கணக்கான...

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. (5) இராஜாஜி குறித்து ம.பொ.சி. கூறிய பொய்! வாலாசா வல்லவன்

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. (5) இராஜாஜி குறித்து ம.பொ.சி. கூறிய பொய்! வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி) ம.பொ.சி. அப்போது சட்ட மேலவையில் உறுப் பினராக இருந்தார். அப்போது அவர் பேசியதாவது – “மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, நம்முடைய முதல் அமைச்சர் அவர்கள் இந்தக் கவுன்சிலின் முன்பு வைத்துள்ள ஆந்திர ராஜ்ய அமைப்பு மசோதாவை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்… இந்த எல்லைப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் ஒரு நியாயம் நடந்திருக்கவேண்டும். சித்தூர் ஜில்லா தகராறுள்ள பிரதேசமாக இருப்பதால் அதை எஞ்சிய சென்னை ராஜ்யத்தோடு சேர்ந்திருக்க வேண்டும். சித்தூர் ஜில்லா தகராறுள்ள ஜில்லா என்று முத்திரைப்போட்டு எஞ்சிய சென்னை ராஜ்ஜியத்தில் தான் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியில்லாமல் மொழியின் அடிப்படையிலே அமைக்கப்படுகிற ஆந்திர ராஜ்ஜியத்தில் தகராறுள்ள இந்தச் சித்தூர் ஜில்லாவை சேர்த்திருக்கக்கூடாது. எஞ்சிய சென்னை ராஜ்ஜியத் தில் சேர்க்காமல்,...

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (4) வாலாசா வல்லவன்

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (4) வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி.) ஆந்திர மாநில மசோதா விவாதத்தின் போது 15-7-1953 இல் சட்டசபையில் பேசிய விநாயகம் சித்தூர் பகுதியின் வரலாற்றை எடுத்துக் கூறிவிட்டு, “I cannot understand why the Government or the Members interested in the Andhara Bill should take objection. It  narrates  the history of the chittor district. After all it is a history of how the Tamillians were slowly  made to appear as Telugus in my parts.” “என்னுடைய பகுதியின் பிரச்சனையை அரசாங்கமோ, உறுப்பினர்களோ புரிந்து கொள்ள மறுப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. என்னுடைய பகுதியில் தமிழர்கள்...

ஆகமம்

ஆகமம்

‘ஆகமம்’ என்பதன் பொருள் ‘ஒரு ஏற்பாடு’ என்பதுதானே ஒழிய அதற்கு வேறு பொருளொன்றும் இல்லை. ஏற்பாடு என்பவையெல்லாம் காலத்திற்கு, நிலைமைக்கு ஏற்றவைகளே ஒழிய முக்காலத்திற்கும் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவையல்ல. மற்றும் எந்த ஏற்பாடும் மனிதனால் செய்யப்படுபவை. ஆகமம் என்னும் சொல்லைப் போலவே ‘அய்தீகம்’ என்னும் தன்மையும் உண்டு. அய்தீகம் என்பதற்குப் பொருள் ஆதார மில்லாமல் தொன்று தொட்டு நடந்துவரும், சொல்லி வரும் விஷயங்களுக்குச் சொல்லும் சொல்லாகும். – பெரியார் (‘விடுதலை’ 29.11.1969; தந்தை பெரியார் 92ஆவது பிறந்த நாள் மலர், 1970)

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு:

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு:

நந்தன் : தில்லை நடராசன் கனவில் வந்ததாகக் கூறி, சிவபக்தனாகி, ஆண்டவனை தரிசிக்க வந்தவன் நந்தன். தீண்டப்படாத சமூகத்தைச் சார்ந்தவன். கொள்ளிடம் என்ற சிற்றூரிலிருந்து புறப்பட்டு தில்லைக்கு நடராசனை தரிக்க வந்தபோது தீட்சதப் பார்ப்பனர்கள் தீயில் குளித்து தீட்டைப் போக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். நந்தன் தீயில் குதித்தான். அப்போது தில்லை நடராசன் நேரில் தோன்றி, எதிரே இருந்த நந்தியை விலகச் சொல்லி, நந்தனுக்கு கர்ப்பக்கிரகத்துக்கு வெளியில் வைத்தே ‘தரிசனம்’ தந்ததாக ‘பெரிய புராணத்தில்’ சேக்கிழார் எழுதியுள்ளார். உண்மை என்னவென்றால், நந்தன் தீயில் எரிக்கப்பட்டான் என்பதே. சம்பூகன் : பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளை நேரடியாக தவம் செய்ய உரிமை பெற்றவர்கள். ராமன் ஆட்சியில் சம்பூகன் என்ற ‘சூத்திரன்’ கடவுளை நோக்கி நேரடியாக தவம் செய்தான். பார்ப்பனர்கள் – இதை அதர்மம் என்று கூறி, சூத்திரன் தவம் செய்ததால், அக்கிரகாரத்தில் பிறக்க வேண்டிய ஒரு குழந்தை, தாயின் கர்ப்பத்திலே இறந்துவிட்டதாக புகார்...

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (3) வாலாசா வல்லவன்

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (3) வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. 2ம் பாகம் படிக்க வழக்குரைஞர் பா.குப்பன் பெரியார் மீது சுமத்தும் மற்றொரு குற்றச்சாட்டு “தமிழ்ப் பார்ப்பனர்களிடம் சினப் பாய்ச்சல்; தெலுங்குப் பிராமணர்களிடம் இனப்பாசம்!” (பக் 53) என்று எழுதியுள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பா.குப்பன் தமிழ்ப் பார்ப்பனர் தெலுங்குப் பார்ப்பனர் என்று வரையறை செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம். பழந்தமிழகத்தில் பார்ப்பனர் என்ற சாதியே கிடையாது. தொல்காப்பியர் காலக் கட்டத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியப் பார்ப் பனர்கள் தமிழகத்தில் வந்துள்ளனர். தொல்காப்பி யத்திலேயே வடமொழிச் சொற்களைச் சேர்ப் பதற்கான விதிகளை அவர் உருவாக்கியதிலிருந்தே இதனை நாம் உணர முடிகிறது. பெரியாரியல் வாதிகளும், மார்க்சிய வாதிகளும், உண்மையான தேசிய இன விடுதலையில் அக்கறை உள்ளவர்களும் தலைவர்களின் அரசியல்...

தீபாவளி

தீபாவளி

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டு களாக எழுதியும் பேசியும்  வருகின்றேன்.  இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும்,  இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள்  இழிநிலையை  மானவமானத்தை உணராமல் கொண்டாடி வரு கிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ்  மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை.  அவனது தலைமைக்கு அடிமை,  மீட்சிபெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்”  என்ற  அறிவுரைப்படி மான மில்லா மக்களே  இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு  ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி...

சரசுவதிக்கு பூஜை போட்டவன் தற்குறி; மலம் துடைத்தவன் அறிவாளி – பெரியார்

சரசுவதிக்கு பூஜை போட்டவன் தற்குறி; மலம் துடைத்தவன் அறிவாளி – பெரியார்

சரசுவதி பூசை என்பது ஓர் அர்த்தமற்ற பூசை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி – அதற்குச் சரசுவதி என்று பெயர் கொடுத்து, அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்றும் சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி இல்லாமல் சாமியை நம்பிக் கொண்டு இருக்கும்படிச் செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளி யாகிக் கொண்டு நம்மைப் படிப்பு வர முடியா ‘மக்குகள்’ என்று சொல்லிக் கொண்டு இருக் கிறார்கள். முதலாவது, சரசுவதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்கள் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரசுவதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனைத் தகப்பன் என்று கருதி அதற்கு...

பெரியாரின் மனித நேயம்: மறைமலை அடிகள் மகன் படம் பிடிக்கிறார்

பெரியாரின் மனித நேயம்: மறைமலை அடிகள் மகன் படம் பிடிக்கிறார்

1939இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட பெரியாருடன் ஒரே சிறையில் இருந்தவர் மறைமலை அடிகளாரின் மகன் மறை. திருநாவுக்கரசு. பெரியாரின் மனித நேய உணர்வுகளை வியந்து பாராட்டி, இவர் எழுதிய கட்டுரை 1991ஆம் ஆண்டு ‘இளந்தமிழன்’ ஏட்டில் வெளி வந்திருக்கிறது. பெரியாரிடம் கருத்து மாறுபாடுகளை யும் கடந்த பெருந்தன்மையும், மனித நேயமும் தமிழினப் பார்வையில் உயர்ந்து நின்றதை பல்வேறு நிகழ்வுகளுடன் படம் பிடித்துக் காட்டுகிறது, இக்கட்டுரை. நான் 1939 இல் பெரியார் அவர்களுடன் சென்னை சிறைச்சாலையிலே இருந்தேன். நான் இருந்த அறைக்கு வலப்பக்கத்து அறையிலே அவர்கள் இருந்தார்கள். இடப் பக்கத்து அறையிலே திரு. அண்ணாதுரை இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையிலே அவரோடு எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. சிறையை விட்டு நாங்கள் வெளிவந்த பிறகு பெரியார் என்னை ஈரோட்டுக்கு அழைத்திருந்தார். அவர் வீட்டிற்குச் சென்றிந்தேன். நான்கு திங்கள்அவர் வீட்டிலேயே இருந்தேன். பெரியார் சிறைச்சாலையில் இருந்தபொழுது பல முறை அவர் ஊன் உண்பதை நான்...

சரஸ்வதி பூசை (ஆயுத பூசை) – இந்து மதப் பண்டிகைகள் நூலிலிருந்து

சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை.  கல்வியை யும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி , அதற்குச் சரஸ்வதி என்று பெயர்  கொடுத்து அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி , கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து  கொள்ளாமல், சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக்கொண்டே , அவர்கள்  படித்துப்பெரிய படிப்பாளியாகிக்கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத “மக்குகள்”  என்று சொல்லிக்கொண்டு இருக்கின் றார்கள்.   முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கிய தையைக் கவனித்தால் , அது பார்ப்பனர்களின் புராணக் கதை களின்படியே மிக்க  ஆபாசமானதாகும்.  அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக் கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு , அந்தப் பிரம்மனாலேயே  மோகிக்கப் பட்டு அவளைப் புணர அழைக்கையில் , அவள்...

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (2) – வாலாசா வல்லவன்

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (2) – வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட் டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. முதல் பாகம் தொடர்ச்சி “மேயர் தமது சொந்தப் பொறுப்பில் 16.3.53 அன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் கூட்டம் நடத்த முயன்றார். பெரியார் ஈ.வெ. ராவையும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்குமாறு ராஜாஜி கூறினார். நான் அவர்தான் சென்னை ஆந்திராவுக்குப் போனாலும் தமிழ் நாட்டிலிருந்தாலும் திராவிடத்தில் தானே இருக்கப் போகிறது என்று சொல்லிவிட்டாரே! தமிழ்நாட்டில் தான் இருக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு அவர் வருவாரா?” என்றேன். இந்தக் கூட்டத்தில் நாயக்கர் பேசுவதை நான் விரும்புகிறேன் என்று அவரிடம் சொல்லுங்கள் அவர் வருவார் என்று சொன்னார். (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 623) இது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பொய். திராவிடர் கழக மத்தியச் செயற்குழு 11.1.1953இல் சென்னை தமிழகத்திற்கே சொந்தம்...

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (1) – வாலாசா வல்லவன்

பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (1) – வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. வழக்கறிஞர் பா. குப்பன் என்பவர் ‘தமிழரின் இனப்பகை ஈ. வெ. ரா’ என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அந்நூலில் பல வரலாற்றுப் பொய்களையும் பல வரலாற்றுத் திரிபுகளையும் செய்துள்ளார். அவர் சமீபகாலமாக ம.பொ.சியின் பக்தராக மாறியுள்ளதால் ம.பொ.சியின் வரலாற்றுப் புரட்டல்களை அவரது சீடகோடிகள் இன்றும் செய்து வருவதில் வியப்பொன்றுமில்லை. தமிழ் மக்களுக்கு உண்மை வரலாறுகள் தெரியவேண்டும். தமிழினத்திற்கு உண்மையான எதிரிகள் யார், உண்மையான தோழர்கள் யார் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால் தான் நாம் மேற்கொண்டிருக்கும் இலட்சியப் பயணத்தின் இறுதியில் வெற்றி கொள்ளமுடியும். பா.குப்பன் தன்னுடைய நூலின் தொடக்கத்திலேயே என்னுரையில் பக் 31இல் (அவர் தமிழ் எண்ணில் பக்க எண் கொடுத்துள்ளார்) “இமய மலைக்கும் விந்திய மலைக்கும், கங்கை ஆற்றுக்கும்...

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்!  இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்!” 0

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்!”

ஏன் இந்த முழக்கம்? எதற்காக இந்த பரப்புரை? இதோ நமது இளைய தலைமுறையின் கவனத்துக்கு சில சிந்தனைகளை முன் வைக்கிறோம். தமிழர்களாகிய நாம், தாழ்த்தப்பட்ட ஜாதிகளாக பிற்படுத்தப்பட்ட ஜாதிகளாக எப்போது ஆனோம்? நமது பாட்டன், முப்பாட்டன் காலங்களில் நாம் எப்படி வாழ்ந்தோம்? பார்ப்பனருக்கும், பண்ணையார்களுக்கும் அடிமைகளாகக் கிடந்தார்கள் நமது முன்னோர்கள். அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. உழைப்பு, அடிமை வேலை, குலத்தொழில் – இவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பது அன்று சமுதாயம் விதித்த கறாரானக் கட்டளை. ஜாதியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த இழிவுகளை எப்படித் தகர்த்தோம்? ஜாதியத்தை எதிர்த்த பெரியாரும் அம்பேத்கரும் போராடிப் பெற்றுத் தந்த கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான உரிமைகளைப் பெற்றதால் தகர்த்தோம். இந்த இடஒதுக்கீடுகளை அமுல்படுத்துவதில் – காமராசர் ஆட்சியில் தொடங்கி, தமிழகத்தில் தொடர்ந்து, அதிகாரத்துக்கு வந்த ‘திராவிட’ கட்சிகள் ஆர்வம் காட்டின; அடைக்கப்பட்ட கல்விக் கதவுகள் திறந்தன; படித்தோம்; சுயமரியாதைப் பெற்றோம். ‘ஜாதி’யைக் காட்டி, ‘...

0

எனக்கு ‘வீர சொர்க்கத்தில்’ நம்பிக்கையில்லை – பெரியார்

பெரியார் சமதர்மக் கொள்கைகளை கைவிட்டார் என்று சுயமரியாதை இயக்கத்திலிருந்த பொது வுடைமையாளர்கள், ஜீவா என்றழைக்கப்பட்ட ஜீவானந்தம், சிங்காரவேலர் போன்றோர் பெரியார் மீது கடும் விமர்சனங்களை வைத்தனர். 1936ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட 5ஆவது சுயமரியாதை மாநாடு திருத்துறைப்பூண்டியில் நடந்தது. மாநாட்டில் ஜீவா, பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டு பெரியாரை விமர்சித்ததற்கு பதிலளித்து பெரியார் நிகழ்த்திய உரை இது. தோழர்களே! சுயமரியாதை இயக்கம் மிக நெருக்கடி யில் இருப்பதாகவும், சீக்கிரத்தில் செத்துப் போகும் என்றும் இங்கு சொல்லப்பட்டது. இயக்கம் ஒன்றும் நெருக்கடியில் இல்லை என்பது என் அபிப்பிராயம். சிலருக்கு, அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பை உத்தேசித்து அப்படித் தோன்றலாம். அதற்கு, நான் காது கொடுக்க முடியாது. இந்த இயக்கம் ஆரம்பித்த காலம் முதற்கொண்டு அனேகர் தங்கள் சுயநலத்துக்கு, சௌகரியமில்லாது கண்டு இது போலவேதான் இயக்கம் நெருக்கடியில் இருக்கிறது, செத்துப்போய் விட்டது என்று சொல்லிக்கொண்டே போய்விட்டவர்களும், வெளியில் போய்விட்ட பின்பும் அவர்களால் கூடுமானவரை தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருந்தவர்களும் இருக்கிறவர்களும் திரும்பி வந்தவர்களும் பலர் உண்டு....

கருப்பர்கள் தூக்குத் தண்டனை எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றார் பெரியார் இலண்டன் பயணத்தில் ஓர் வரலாற்று நிகழ்வு 0

கருப்பர்கள் தூக்குத் தண்டனை எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றார் பெரியார் இலண்டன் பயணத்தில் ஓர் வரலாற்று நிகழ்வு

1932ஆம் ஆண்டு பெரியார் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, நடந்த ஒரு நிகழ்வுக்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. அந்தப் பயணத்தில் பெரியாருக்கு பெரும் உதவிகளை செய்தவர் எஸ். சக்லத்வாலா. இவர் இந்தியாவிலிருந்து இலண்டனில் குடியேறிய கம்யூனிஸ்ட் நாத்திகர். 1922ஆம் ஆண்டிலேயே கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பிரிட்டிஷ் மக்களவையில் உறுப்பினராக இருந்தவர். பெரியார் தனது மேல்நாட்டுப் பயணங்களை நாட்குறிப்பில் பதிவு செய்தார். அந்த நாட்குறிப்பை தோழர் வே. ஆனைமுத்து பெரியாரின், ‘அயல்நாட்டுப் பயணக் குறிப்புகள் என்ற தலைப்பில் 1997ஆம் ஆண்டில் நூலாக வெளியிட்டார். அதில் 28.6.1932 அன்றைய குறிப்பாக பெரியார் கீழ்க்கண்ட தகவலைப் பதிவு செய்திருக்கிறார். “(சக்லத்வாலாவோடு) ஒரு ‘நீக்ரோ’ (கருப்பர்கள்) மீட்டிங்குக்குப் போனோம். அதாவது அமெரிக்காவில் ஸ்கார்பரோவில் 9 நீக்ரோ பய்யன்களை ரேப் குற்றத்திற்காக அமெரிக்க கவர்மெண்டார் கொலை தண்டனை விதித்ததை கேன்சில் (நீக்கம்) செய்யும்படி உலகக் கிளர்ச்சி செய்ய, அமெரிக்காவில் இருந்து இங்கு வந்திருக்கும் ஒரு 2 பையன்களின் தாயாரான...

கருவூலக் கட்டுரை – இது ‘சுதந்திர’ நாடா? 0

கருவூலக் கட்டுரை – இது ‘சுதந்திர’ நாடா?

இது ‘சுதந்திர’ நாடா? 1950 ஜனவரி 26ஆம் தேதிய பலன், 1947 ஆகஸ்டு 15 ஆம் தேதியைப் போல் ஒரு விலாசம் மாற்றும் தினமேயாகும். அதே முதலாளிதான்; அதே பணப்பெட்டிதான்; அதே தராசுதான்; அதே படிக் கல் தான்; அதே சரக்குதான்; அதே பித்தலாட்டம் தான். ஆனால், விலாசம் அதாவது ‘டிரான்ஸ்வர்’ செய்யப்பட்டது மட்டும் மாற்றம் அடைகிறது. குடிஅரசு ஆட்சி என்கிற புதுப் பெயரால் பழைய கொடுங்கோல் ஆட்சியே மேலும் அதிக பலத்துடனும், அதிகப் பாதுகாப்புடனும் 26-ந் தேதி முதற்கொண்டு நடைபெறப்போகிறது. – பெரியார். (‘விடுதலை’, 20.1.1950)      நிற்க, மேல்நாடுகளில் ‘சுதந்திர நாள்’, ‘சுதந்திர ஆண்டு விழா’க் கொண்டாடுவது போல், நம் நாட்டில் சுதந்திர நாள், ஆண்டு விழாக் கொண்டாடுவது – புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டதைப் போலாகும். மேல்நாட்டார்கள் சுதந்திரம் பெற்றபின் பெற்ற நாளைக்குறி வைத்துக் கொண்டாடு  கிறார்கள். நாம் அதுபோல் கொண்டாட நமக்குச்...

பெருமாள் மாறி பெத்தப் பெருமாளானார் 0

பெருமாள் மாறி பெத்தப் பெருமாளானார்

உயர்திரு. காந்தியவர்கள் சென்றமாதம் 12-ந்தேதி பரோடா சமஸ் தானம் மரோலி என்ற கிராமத்தில் மதுபானத்தைப் பற்றிப் பேசிய விபரங் களைப் பற்றிச் சென்ற வாரத்திற்கு முந்திய ‘குடி அரசு’ பத்திரிகையில் “காந்தியின் உண்மைத் தோற்றம்” என்னும் தலைப்பில் திரு. காந்தி சொன்ன வார்த்தைகளை அப்படியே எடுத்து எழுதி அதின்மீது நமது அபிப்பிரா யத்தையும் எழுதியிருந்தோம். இதைப் பார்த்த சில பார்ப்பனர்கள் அதாவது தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் உடனே திரு. காந்திக்குத் தந்தி கொடுத்தார்கள். எப்படி என்றால், ‘தாங்கள் மதுபானத்தைப் பற்றி இம்மாதம் 12ந் தேதி மரோலியில் பேசிய பேச்சானது இங்கு சிலருக்கு பலவித அருத்தம் கொள்ளுவதற்கு இடமளிப்பதாய் இருப்பதால் அதை சரியானபடி விளக்க வேண்டும்’ என்பதாகக் கேட்டார்களாம். மற்றும் பலர் திரு. காந்தியைப் பாராட்டி அதாவது இப்போதாவது மதுபானத்தின் தத்துவத்தை அறிந்து அது விஷயமான கொள்கையை மாற்றிக்கொண்டதற்காக அவரைப் பாராட்டியும் எழுதினார்களாம். ஆகவே இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லும் முறையில் திரு. காந்தியவர்கள்...