ஆகமம்
‘ஆகமம்’ என்பதன் பொருள் ‘ஒரு ஏற்பாடு’ என்பதுதானே ஒழிய அதற்கு வேறு பொருளொன்றும் இல்லை. ஏற்பாடு என்பவையெல்லாம் காலத்திற்கு, நிலைமைக்கு ஏற்றவைகளே ஒழிய முக்காலத்திற்கும் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவையல்ல. மற்றும் எந்த ஏற்பாடும் மனிதனால் செய்யப்படுபவை. ஆகமம் என்னும் சொல்லைப் போலவே ‘அய்தீகம்’ என்னும் தன்மையும் உண்டு. அய்தீகம் என்பதற்குப் பொருள் ஆதார மில்லாமல் தொன்று தொட்டு நடந்துவரும், சொல்லி வரும் விஷயங்களுக்குச் சொல்லும் சொல்லாகும்.
– பெரியார் (‘விடுதலை’ 29.11.1969; தந்தை பெரியார் 92ஆவது பிறந்த நாள் மலர், 1970)