Category: பெரியார் முழக்கம் 2018

‘சுயமரியாதை சுடரொளி’ பொறிஞர்  அம்புரோசு நினைவேந்தல் கூட்டம்

‘சுயமரியாதை சுடரொளி’ பொறிஞர் அம்புரோசு நினைவேந்தல் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, 2017 அக்டோபர் 26ஆம் நாள் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில் கடந்த 2017 டிசம்பர் 17ஆம் நாள் தூத்துக்குடி மூவிபுரம் முத்து மகாலில் நினை வேந்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கோ.அ.குமார் தலைமை வகித்தார். ஆழ்வை ஒன்றியத் தலைவர் நாத்திகம் பா.முருகேசன், தூத்துக்குடி வே.பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறைந்த சுயமரியாதை சுடரொளி பொறிஞர் சி. அம்புரோசு நினைவலைகளை, கழகத் தோழர்கள் செ. செல்லத்துரை, ச.கா. பாலசுப்பிரமணியன், குமரி மாவட்ட அமைப்பாளர் சேவியர் (எ) தமிழரசன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சு. அன்பரசு, கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர் குறும்பை மாசிலாமணி, தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் கண்ணதாசன், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் ச. தமிழன், சட்டக் கல்லூரி மாணவர் அர்ஜூன், எஸ்.டி.பி.அய். கட்சி மாவட்டப் பொருளாளர்...

சேலத்தில் கழக செயலவைக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 29.12.2017 அன்று சேலம் விஜயராகவாச்சாரியார் அரங்கில் பகல் 11.30 மணியளவில் தொடங்கியது. வரவேற்புரை –  கோவிந்தராஜ், கடவுள் மறுப்பு – ஈரோடு மணிமேகலை. உரை நிகழ்த்தியோர்: ரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்) , வீ. சிவகாமி (த.நா. அறிவியல் மன்றம்), பாரி சிவகுமார் (தமிழ்நாடு மாணவர் கழகம்), விஜயகுமார் (இணையதள பொறுப்பாளர்), பரிமளராசன் (முகநூல் பொறுப்பாளர்), இராம. இளங்கோவன் (வெளியீட்டு செயலாளர்), தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் சக்திவேல் (மேட்டூர்), பன்னீர் செல்வம் (சூலூர்), அய்யனார் (சென்னை), உமாபதி (சென்னை), மணிமேகலை, சண்முகப்பிரியன், சூரியக்குமார், நாத்திகஜோதி, சாமிநாதன், முத்துப்பாண்டி, முகில் ராசு, நீதியரசன், பாரதிதாசன், செந்தில் (விருதுநகர்), காமாட்சிபாண்டியன் (மதுரை), மருதமுத்து, அன்பு (நாகை), தாமோதரன் (பெரம்பலூர்), இளையரசன் (விழுப்புரம்),  கிருஷ்ணன் (கிருஷ்ணகிரி), இரத்தினசாமி, வேழவேந்தன், செந்தில், டேவிட் (சேலம் கிழக்கு), வேணுகோபால் (பவானி), துரைசாமி (பொருளாளர்), மோகன் (மடத்துக்குளம்),...

கழகத்திற்கு புதிய மின்னஞ்சல்

  கழகத்தின் சார்பில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, கிளைக் கழகங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், அறிவிப்புகள் மற்றும் பிற செய்திகள் ஆகியவற்றை செய்திகளாக கழகத் தலைமைக்கு எளிமையாக அனுப்ப தோழர்களின் வசதிக்காக ஒரு புதிய  மின்னஞ்சல் முகவரி  உருவாக்கப்பட்டுள்ளது. செய்திகள் அனுப்பும் பொழுது நிகழ்வுகளின் புகைப்படங்கள், நாள், நேரம், கலந்து கொண்ட அமைப்புகள், கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் ஆகிய விபரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். கழகத்தின் செயல்பாடுகளை கழக இதழான பெரியார் முழக்கம்,கழக இணையம், கழக சமூக வலைத் தளங்கள் வாயிலாக மக்கள் மன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல தாங்கள் அனுப்பும் செய்தி பெரிதும் உதவும். ஆதலால்  கழக சார்பில் நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தவறாமல் பதிவு செய்வதும் நிகழ்வின் ஓர் அங்கமே எனவே கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தவறாமல் செய்திகளை அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். newsdvk@gmail.com – திராவிடர் விடுதலைக்...

கோவையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு வரவேற்பு

கோவையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு வரவேற்பு

27.12.2017 காலை கோவை வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற் பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட பெரியார் இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர். கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி மற்றும் கழகத்தோழர்கள் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 04012018 இதழ்

கோவையில், நூல் வெளியீட்டு விழா

கோவையில், நூல் வெளியீட்டு விழா

“இருட்டினில் வாழும் வெளிச்சங்கள்” நூல் வெளியீட்டு நிகழ்வு 27.12.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் கோவை  அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது.  த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் நூலை வெளியிட, கழகத் தலைவர் கொளத்தூர் மணிநூலை பெற்றுக்கொண்டார்.  தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 04012018 இதழ்

மக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை!

மக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை!

இயற்கை வளங்களை சுரண்டும் கும்பலுக்கு எதிராகவும் மக்களை பேரழிவுக்கு உள்ளாக்கும் அணுமின்சாரம், மீத்தேன் போன்ற திட்டங்களையும் எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் போராளி முகிலன் தொடர்ந்து காவல்துறையால் குறி வைத்து சித்திரவதைக்கும் முறைகேடான கைதுக்கும் உள்ளாகி வருகிறார். ஆனாலும், அவரது கொள்கை உறுதியை இந்த அடக்குமுறைகள் சித்திரவதைகள் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மக்கள் உரிமைக்காகப் போராடும் போராளிகளை காவல்துறையும் அரசும் எவ்வளவு மூர்க்கமாக ஒடுக்குகிறது என்பதை வெளிப்படுத்த புரட்சிப் பெரியார் முழக்கம் முகிலனின் இந்த கடிதத்தை வெளியிடுகிறது. போராளி முகிலன் ஒரு பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முகிலன். சிறையிலிருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் நடுவருக்கு (மாஜிஸ்திரேட்) சிறை அதிகாரி வழியாக அனுப்பிய கடிதம் இது: “நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் இயற்கை வளங்கள் வரைமுறையற்று சூறையாடப்படுவதை எதிர்த்தும், தமிழகத்தின் தற்சார்பை பாதுகாக்கவும், மக்களின் கருத்துகளுக்கு எதிராக வளர்ச்சி...

சேகர் குப்தாவின் துணிச்சலான கட்டுரை ஊழலிலும் பார்ப்பனருக்கு ஒரு நீதி; ‘தலித் சூத்திரருக்கு’ வேறு நீதி

சேகர் குப்தாவின் துணிச்சலான கட்டுரை ஊழலிலும் பார்ப்பனருக்கு ஒரு நீதி; ‘தலித் சூத்திரருக்கு’ வேறு நீதி

‘பார்ப்பனர்’ ஊழலுக்கும் – ‘சூத்திரம் பஞ்சமர்’ ஊழலுக்கும் வேறுபாடு உண்டு. மனு சாஸ்திரம் கட்டளையிடுவதுபோல ‘பிராமண ஊழலு’க்கு பரிசும், சூத்திர ஊழலுக்கு தண்டனையும் காத்திருக்கிறது. இங்கே வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின் ஆசிரியர் சேகர் குப்தா பல்வேறு ஆங்கில ஊடகங்களில் கட்டுரை எழுதி வரும் பிரபலமான மூத்த பத்திரிகையாளர். ஊழலுக்கும் ஜாதிக்கும் உள்ள தொடர்பை மிக்க துணிச்சலோடு அம்பலப் படுத்தியிருக்கார் சேகர் குப்தா. அரசியலில் ஊழல்களுக்கும் சாதிகளுக்கும் என்ன தொடர்பு? ஊழலுக்கும் குற்றச் செயல்களுக்கும் சாதியோ, சமூகமோ நேரடித் தொடர்பில் உள்ளனவா? சாதிப் படிநிலையில் கீழே செல்லச் செல்ல ஊழல் வழக்குகளில் பிடிபடுவதும், தண்டிக்கப் படுவதும் அதிகமாகிறதா? சில உண்மைகளை ஆராய்வோம். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ. ராசா 15 மாதங்களுக்கு சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தார். 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளார். அவர் தலித். இதே வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்...

கீழ்வெண்மணி படுகொலை : பெரியார் மீது குறை கூறுவோருக்கு பதில் – தியாகு –

கீழ்வெண்மணி படுகொலை : பெரியார் மீது குறை கூறுவோருக்கு பதில் – தியாகு –

கீழ்வெண்மணி படுகொலையின்போதுபெரியார் அமைதி காத்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்து தியாகு தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு: கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா? இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரச் சூழல் குறைய முத்துராம லிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தார் பெரியார். கீழ்வெண்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற்சங்கம்’ சங்கம் என்ற அமைப்பு திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. சாணிப்பால்,சவுக்கால் அடித்தது போன்ற வன்கொடுமைகளை திராவிடர் கழகம் எதிர்த்தது. கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத் தரம், அவர்களுக்கு கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கானக் கொள்கைகளை விளக்கி ‘விடுதலை’ சார்பாக சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியால...

சேலம் தீர்மானம் எதிரொலி: களப்பணியைத் தொடங்கினர் நாமக்கல், ஈரோடு கழக மாணவர்கள்

சேலம் தீர்மானம் எதிரொலி: களப்பணியைத் தொடங்கினர் நாமக்கல், ஈரோடு கழக மாணவர்கள்

ஈரோட்டில் டிசம்பர் 16 ஆம் தேதி கூடிய தலைமைக் குழு தீர்மானங்களை செயல்படுத்த உடனடியாக களமிறங்கினர். நாமக்கல் ஈரோடு மாவட்டக் கழகத் தோழர்கள், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் சார்பில்  மாணவர்கள் சந்திப்பு, திருச்செங்கோடு பெரியார் மன்றத்தில் 31.12.2017 அன்று காலை 11:30 மணிக்கு தொடங் கியது. நிகழ்வில், ராசிபுரம், மல்லசமுத்திரம், பவானி, திருச்செங்கோடு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். மனோஜ் தலைமை வகிக்க, தோழர்கள் வே.ஜீவிதா மற்றும் நித்யா முன்னிலை வகிக்க மாணவர்கள் கலந்துரையாடல் தொடங்கியது. மாணவர்களிடையே, நீட், தமிழ்நாடு தேர்வாணையத்தின் தமிழர் விரோத போக்கு, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை குறைப்பு போன்றவைகளைப் பற்றி விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்து கொண்ட புதிய மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். கலந்துரையாடலுக்குப் பின்,  சமூக வலைதளங்களில் மாணவர்கள் பிரச்சனைகளை பரப்புதல், கல்லூரி நுழைவாயிலில் காலை நேரங்களில் (வாய்ப்பைப் பொறுத்து) துண்டறிக்கைகளை கொடுத்தல், துறை சார்ந்த மாணவர்களின் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு துண்டறிக்கைகளை...

வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன்  கழகக் கட்டமைப்புக்கு 1 இலட்சம் நன்கொடை

வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் கழகக் கட்டமைப்புக்கு 1 இலட்சம் நன்கொடை

  சேலத்தில் நடந்த கழக செயலவைக் கூட்டத்தில் கழகக் கட்டமைப்பு நிதிக்காக வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் ரூபாய் ஓர் இலட்சம் நன்கொடையை கழகத் தலைவரிடம் பலத்த கரவொலிக் கிடையே வழங்கினார்.

தொடர் வண்டி நிலையத்தில் அம்பேத்கர் படமா?

தொடர் வண்டி நிலையத்தில் அம்பேத்கர் படமா?

இந்தியாவை மதசார்பற்ற நாடு என இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையிலேயே கூறப்பட் டுள்ளது. ஆனால் அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் மத உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக அரசு அலுவலகங்களை ஆக்கி வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது 1992ஆம் ஆண்டில் மத்திய அரசில் வீற்றிருந்த காங்கிரஸ் ஆட்சியில், நாடாளுமன்ற குழு சமூக கலவரங்களைப் பற்றி ஆய்ந்து, அரசு அலுவலகங்களிலும், இடங்களிலும் குறிப்பிட்ட மத சின்னங்களை வரைவதும், கருத்துக்களை பொறிப்பதும், மத வழிபாடுகள் நடத்துவதுமே முதன்மைக் காரணமாக அமைகிறது என சுட்டிக்காட்டியதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் உள்துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும் அவ்வாறான செயல்பாடுகளைத் தடுக்குமாறு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் கண்டிப்பான சுற்றறிக்கையை அனுப்பியது ஆனால் காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்தில் அரசு அனுமதித்துள்ள டாக்டர் அம்பேத்கர் படத்தை அகற்றிவிட்டு, சங்கராச்சாரி படத்தை வரைந்த சட்ட விரோத நடவடிக்கையை மாற்றி, மீண்டும் அம்பேத்கர் படத்தை பழையபடி வைத்த காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள்...

சேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவுகள்

மாணவர்களிடையே விழிப்புணர்வு இயக்கம் சமூக நீதி மறுக்கப்பட்டு, கல்வி வேலை வாய்ப்புகளை இழந்து, இருண்ட எதிர்காலம் நோக்கிச் செல்லும் தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களிடையே விழிப்புணர்வை ஊட்டி, அவர்களின் உரிமைப் போராட்டத்துக்கு தயார் செய்யும் பரப்புரை இயக்கங்களைத் தொடங்க சேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவு செய்தது. கல்லூரிகள் மாணவர் விடுதிகளில் இந்த ஆபத்துகளை ஆதாரங்களோடு விளக்கும் வெளியீடு, துண்டறிக்கைகளை தயார் செய்து, மாணவர்களிடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு மாணவர் கழகத்தின் இந்த செயல் திட்டத்துக்கு கழகப் பொறுப் பாளர்கள் முழுமையாக அனைத்து உதவிகளை யும் வழங்குவது எனவும் தலைமைக்குழு முடிவு செய்தது. 29122017 வெள்ளியன்று, சேலம் விஜய ராகவாச்சாரி அரங்கில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழகச் செயலவையில் இயற்றப் பட்டத் தீர்மானங்கள். சமூக நீதிக் கொள்கைகளால், கல்வி, வேலை வாய்ப்புகளில் இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டிய தமிழ்நாடு இன்று மோசமான நிலையில் பின்னடைந்து, தமிழக இளைஞர்களின் எதிர் காலத்தையே...