தொடர் வண்டி நிலையத்தில் அம்பேத்கர் படமா?

இந்தியாவை மதசார்பற்ற நாடு என இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையிலேயே கூறப்பட் டுள்ளது. ஆனால் அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் மத உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக அரசு அலுவலகங்களை ஆக்கி வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது

1992ஆம் ஆண்டில் மத்திய அரசில் வீற்றிருந்த காங்கிரஸ் ஆட்சியில், நாடாளுமன்ற குழு சமூக கலவரங்களைப் பற்றி ஆய்ந்து, அரசு அலுவலகங்களிலும், இடங்களிலும் குறிப்பிட்ட மத சின்னங்களை வரைவதும், கருத்துக்களை பொறிப்பதும், மத வழிபாடுகள் நடத்துவதுமே முதன்மைக் காரணமாக அமைகிறது என சுட்டிக்காட்டியதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் உள்துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும் அவ்வாறான செயல்பாடுகளைத் தடுக்குமாறு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் கண்டிப்பான சுற்றறிக்கையை அனுப்பியது

ஆனால் காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்தில் அரசு அனுமதித்துள்ள டாக்டர் அம்பேத்கர் படத்தை அகற்றிவிட்டு, சங்கராச்சாரி படத்தை வரைந்த சட்ட விரோத நடவடிக்கையை மாற்றி, மீண்டும் அம்பேத்கர் படத்தை பழையபடி வைத்த காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நால்வரை சிறைப்படுத்தியுள்ளது. இந்நடவடிக்கையை திராவிடர் விடுதலைக் கழக செயலவை வன்மையாக கண்டிப்பதோடு, தமிழக அரசு உடனடியாக வழக்கைத் திரும்பப் பெறுவதோடு, சட்டவிரோத செயலில் ஈடுபட்ட தொடர்வண்டித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறது.

 

பெரியார் முழக்கம் 04012018 இதழ்

You may also like...