கழகத்திற்கு புதிய மின்னஞ்சல்

 

கழகத்தின் சார்பில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, கிளைக் கழகங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், அறிவிப்புகள் மற்றும் பிற செய்திகள் ஆகியவற்றை செய்திகளாக கழகத் தலைமைக்கு எளிமையாக அனுப்ப தோழர்களின் வசதிக்காக ஒரு புதிய  மின்னஞ்சல் முகவரி  உருவாக்கப்பட்டுள்ளது. செய்திகள் அனுப்பும் பொழுது நிகழ்வுகளின் புகைப்படங்கள், நாள், நேரம், கலந்து கொண்ட அமைப்புகள், கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் ஆகிய விபரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

கழகத்தின் செயல்பாடுகளை கழக இதழான பெரியார் முழக்கம்,கழக இணையம், கழக சமூக வலைத் தளங்கள் வாயிலாக மக்கள் மன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல தாங்கள் அனுப்பும் செய்தி பெரிதும் உதவும். ஆதலால்  கழக சார்பில் நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தவறாமல் பதிவு செய்வதும் நிகழ்வின் ஓர் அங்கமே எனவே கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தவறாமல் செய்திகளை அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

newsdvk@gmail.com

– திராவிடர் விடுதலைக் கழகம்

26167931_2058164664467423_4491609349605585321_n

பெரியார் முழக்கம் 04012018 இதழ்

 

You may also like...