Category: குடி அரசு 1932

அருஞ்சொல் பொருள்

அருஞ்சொல் பொருள்

ஆக்கர் – திரிந்துகொண்டே துணி முதலிய விற்போன் காலகாஸ்பதம் – கலகத்துக்கான இடம் சதித்து – அழித்து, வஞ்சித்து சர்வ வியாபகம் – எங்கும் பரவி நிற்பது பக்ஷhதாபம் – இரக்கம் மடிசஞ்சி – புல் அல்லது கம்பளியாலான பை விருத்தாந்தம் – வரலாறு ஸ்மரணை – ஞாபகம்

வேலைத் திட்டக் கூட்டம்

வேலைத் திட்டக் கூட்டம்

  இந்த மாதம் 28, 29 தேதி புதன், வியாழக் கிழமைகளில், ஈரோட்டில், சுயமரியாதை இயக்கத்தின் 1933 வருஷத்திய வேலைத் திட்டத்தைப் பற்றி யோசிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக  சுய மரியாதை இயக்கத்து பிரமுகர்களும், தீவிர பிரசாரர்களும் அபிமானிகளும் ஆதரவளிப்பவர்களுமான தோழர் பலருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக் கிறது. சில முக்கிய பிரபலஸ்தர்களுக்கு அழைப்பு வந்து சேராமலோ, அல்லது அனுப்பத் தவறிப்போயோ இருந்தாலும் இருக்கலாம். அவற்றை யெல்லாம் லட்சியம் செய்யாமல் இயக்க அபிமானிகள் உள்பட யாவரும் விஜயம் செய்து ஒரு வேலைத் திட்டம் நிர்ணயிக்க உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றோம். இதுவரை சுயமரியாதை  இயக்கம் பெரிதும் பிரசார நிலை யிலேயே இருந்து வந்திருக்கிறது என்றாலும் அது தோன்றியது முதல் நாளுக்கு நாள் முற்போக்கான, கொள்கைகளையே படிப்படியாய் கைக் கொண்டு பிரசாரம் செய்து வந்திருப்பதின் மூலம் பெரிதும் தமிழ் நாட்டு மக்களின் உள்ளத்தில் ஒரு பெரிய புரட்சி உணர்ச்சியை உண்டாக்கி...

இங்கிலாந்தில் ஈ.வே.ராமசாமி பிரசங்கம்                தொழில் கட்சியின் போலித் தன்மை

இங்கிலாந்தில் ஈ.வே.ராமசாமி பிரசங்கம்                தொழில் கட்சியின் போலித் தன்மை

  தோழர்களே! இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத் தகுந்த சமூகமாகக் கருதலாம். ஆனால் நாங்கள் பிரிட்டீஷ்  தொழில்க் கஷியை மிக மிகப் பரிக சிக்கத்தக்க விஷயமாய் கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளு கிறேன். ஏனெனில் தொழில் கஷித் தலைவராகியத் தோழர் லான்ஸ்பரி அவர்கள் சிப்பாய்கள் சுடுவதையும், கொல்லுவதையும் தாம் சிறிதும் விரும்புவதில்லை என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார். ஆனால் எங்கள் கார்வாத் (ழுhயசறயவா) சேனைகள் நிராயுதபாணிகளான மக்களைச் சுடுவதற்கு மறுத்ததற்காகத் தோழர். லான்ஸ்பரியின் தொழிற்கக்ஷி கவர்ன்மெண்டானது அந்தச் சிப்பாய்களுக்கு 15-வருஷ கடின காவல் தண்டனை விதித்திருக்கிறது என்பதை ஞாபகபடுத்துகிறேன். தொழிலாளர் சங்கமாகிய டிரேட் யூனியனை ஆதரிப்ப தாகவும், அதில் சேர்ந்து உழைப்பதாகவும் பறை சாற்றுகிறீர்கள். ஆனால் எங்கள் ஏழை இந்திய சுரங்க வேலைக்காரர்களும், மற்ற தொழிலாளிகளும், சேர்ந்து ஒரு ட்ரேட் யூனியன் சங்கம் ஸ்தாபித் ததற்காக அதன் அதிகாரிகளையும், அதற்கு உதவி செய்த பிரிட்டிஷ் தோழர்களையும் வெளியில் இருக்க விடாமல்...

புரட்சி என்றால் என்ன?  ஏன் பயப்பட வேண்டும்?

புரட்சி என்றால் என்ன?  ஏன் பயப்பட வேண்டும்?

  சுயமரியாதை உணர்ச்சிக் கொண்ட வாலிபத் தோழர்களே, இன்று நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசாரப்பத்திரத்திற்கு நான் உண்மை யாகவே மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இந்த உபசாரப் பத்திரம் உங்க ளுக்குள் தோன்றித் ததும்பும் சுயமரியாதை உணர்ச்சியை முன்னிட்டே (நீங்கள் இதை) வாசித்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்று உங்கள் உபசாரப் பத்திர வாக்கியங்களில் இருந்தே உணருகிறேன். தோழர்களே! உங்கள் உபசாரப் பத்திரத்தின் தலைப்பிலே புரட்சி வாழ்க! பொதுவுடமை ஓங்குக! என்று குறிப்பிட்டிருக்கும் வார்த்தையைக் கண்ட அநேகர் எருதுக்கு முன்னால் சிகப்புத் துணியை விசிறினால் மிரண்டு மிரண்டு துள்ளுவது போல் பயப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் இவ்வளவு பயப்படத் தகுந்த காரண காரியங்கள் ஏதும் அவ்வார்த்தையில் அடங்கி யிருப்பதாய் நான் கருதவில்லை. ஆனால், அவ்வார்த்தையானது பயப்படத்தக்க முறையில் கற்பிக்கப் பட்டு விட்டது. எது போலென்றால் “பூச்சாண்டி” என்றால் அதற்கு அர்த்தம் இன்னதுதான் என்று தெரியாமலேயே குழந்தைகளைப் பயப்படுத்தி வைத் திருப்பதுப் போல் உங்களில் அநேகரைப் புரட்சி என்றால்...

தேசியத்தின் விளைவு

தேசியத்தின் விளைவு

  – தேசீயத்துரோகி 1914ம் வருஷம் முதல் 1918ம் வருஷம் வரை நடந்த உலக மகா யுத்தமானது அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தேச மக்களையும் தேசீயம் – தேசாபிமானம் என்பவற்றின் பேரால் செய்யப்பட்ட பிரசாரத்தின் பயனாகவே அந்த யுத்தத்தில் சம்மந்தப்படும்படி செய்து. இந்த உலக மகாயுத்தத்தின்  பயனாய் கொல்லப் பட்டவர்கள் 9743914 கிட்டத் தட்ட ஒரு கோடிபேர் காயம் பட்டவர்கள் 2,09,27,459 இரண்டு கோடிப் பெயர்களுக்கு மேலானவர்கள் காணாமல் போனவர்கள் 30,00,000. இந்த மகாயுத்தத்திற்கு செலவான துகை 70,00,00,00,000 பவுன் (ஏழு ஆயிரம் கோடி பவுன்) அதாவது 10,00,00,00,00,000 ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும். இது நிற்க இன்றைய தினம் உலக யுத்தத்தை எதிர் பார்த்து “தேசாபி மானத்தின் காரணமாக” என்று தேசத்தைக் காப்பாற்றுவதற்காக உலக அரசாங் கங்கள் மொத்தமும் செலவு செய்யும் தொகை சென்ற 1931ம் வருஷத்திற்கு மாத்திரம் 80,00,00,000 எண்பது கோடி பவுன் அதாவது 1080,00,00,000 ஆயிரத்து...

தொழிலாளர்கள்

தொழிலாளர்கள்

  முதலாளிகளுக்கு தங்களது வாழ்நாளைப் பற்றிய கவலை என்பதே கிடையாது. மற்றபடி அவர்களது கவலை எல்லாம் தங்களுக்கு வேண்டியது போக மீதி இருப்பதை எப்படி பத்திரப் படுத்துவது, எப்படி பெருக்குவது, எப்படி சுகபோகங்களைப் பெருக்கி அனுபவிப்பது என்பவை போன்றவை களைப் பொருத்ததேயாகும்.   இவர்கள் வேலை செய்து அன்றாடம் கூலி  பெற்று ஜீவிக்கும் ஜனங்களைப்போல் நாளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது, வீட்டு வாட கைக்கு என்ன செய்வது, துணிக்கு என்ன செய்வது, குழந்தை பிறந்து விட்டதே அதற்கு வகை என்ன? அதற்கு பால் எங்கே? படிப்புக்குப் பணம் எங்கே? அதை எப்படி வளர்ப்பது? வியாதி வந்து விட்டதே! எப்படி தப்புவது? வைத்தியனுக்கு பணம் எங்கே? என்பது  போன்ற கவலைகளை அவர்கள் அறிந்திருக்கவே மாட்டார்கள். இந்த கவலைகள்  எல்லாம் தொழிலில் ஜீவிப்ப வர்களைத்தான் பற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒருதேசம் என்பது இருப்பதற்கே காரணமும் ஆதாரமும் தொழில் செய்யும் மக்களால் தானே தவிர வேறில்லை....

ஈ.வெ.ராமசாமிக்கு முனிசிபல் உபசாரம்

ஈ.வெ.ராமசாமிக்கு முனிசிபல் உபசாரம்

  ஈரோடு முசினிபல் சேர்மென் அவர்களே, ஸ்கூல் போர்ட் காரியதரிசி அவர்களே!! மஹா  ஜன ஸ்கூல் ஹெட்மாஸ்டர்  அவர்களே, தாங்கள் வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத்திற்காக நான் பெருமை கொள்ள வேண்டியவனும் நன்றி செலுத்தவேண்டியவனு மாவேன். ஆனால் இவைகளை எனக்கு நானே செய்து கொண்டது போல் கருதினேயானால் இதனால் ஒரு மகிழ்ச்சியும் நன்றி செலுத்த வேண்டிய அவசியமும் எப்படி ஏற்படும். ஏனெனில் இந்த ஊரிலுள்ள மிகப் பழமையான ஸ்தாபனங்களான இம்மூன்றும் அவைவேறு நான்வேறு என்று பிரிப்பதற்கு முடியாத மாதிரியில் ஒன்றிலிருந்து  வருகின்ற ஸ்தாபனங்களல்லவா? என்பதை யோசித்துப் பாருங்கள். அவற்றின் நிர்வாகிகளாகிய தாங்களும், மற்றும் தங்கள் சகாக் களும் சகோதரர்கள் போன்ற நெருங்கிய அன்பர்களாய் இருக்கிறவர்கள் அல்லவா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகவே இப்படிப்பட்ட நிலையில் அளிக்கப்படும் மரியாதைகளை நான் எப்படி போற்றக் கூடும்? எப்படி அரியதென்று எண்ணக் கூடும்? என்றாலும் தாங்கள் எல்லோரும் என்னை உற்சாகப்படுத்தவும் என்னிடம் வேலை வாங்கவும் உங்களுக்கு...

ஏன் பயப்பட வேண்டும்?

ஏன் பயப்பட வேண்டும்?

  இன்று இந்தியாவில் சிறப்பாக தென்னிந்தியாவில் எங்கு பார்த்தாலும் எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும், எந்த ஸ்தாபனங்களைப் பார்த்தாலும் அவற்றின் உள் மர்மம் “நாஸ்திகத்தை”க் கண்டு நடுங்கி “ஆஸ்திக”ப் பிரசா ரம் செய்வதையே முக்கிய லட்சியமாகக் கொண்டு இருப்பதாகத் தெரிய வருகின்றது. இதற்கு உண்மையான காரணம் என்னவெனில் இன்றையத்தினம் உலகில் காணப்படும் வலுத்தவன் இளைத்தவன் நிலைமைக்கு அடிக் காரணமாய் இருந்து சோம்பேரிகளுக்கும், பேராசைக்காரர்களுக்கும், மறடர் களுக்கும் ஆதரவாயிருந்து அவர்களது நிலைமையை மேலும் மேலும் பலப்படுத்தி நிலை பெறச் செய்து வந்திருப்பது இந்த ஆஸ்திகமே யாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆஸ்திகம் என்பதாக ஒன்று இல்லா திருந்திருக்குமானால் உலகில் மேல் ஜாதிக்காரனுக்கு இடமேது? குருமார்கள், முல்லாக்கள், பாதிரிமார்கள், அர்ச்சகர்கள், புரோகிதர்கள், பண்டார சன்னதி கள், பட்டக்காரர்கள், மடாதிபதிகள் ஆகியவர்களுக்கு இடமேது? பிரபுக்கள், முதலாளிகள், லேவாதேவிக்காரர்கள், மிராசுதாரர்கள், பண்ணையார்கள், ஜமீன்தாரர்கள், ராஜாக்கள், மகாராஜாக்கள், இளவரசுகள், லட்சுமி புத்திரர்கள் ஆகியவர்களுக்கு இடமேது? அன்றியும் இந்த ஆஸ்திகம் என்பது...

ஆதிதிராவிட வாலிபர்கள் வரவேற்பு

ஆதிதிராவிட வாலிபர்கள் வரவேற்பு

  தோழர்களே! நீங்கள் இங்கு எனக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்கப் பட்டதைப் பற்றியும், தலைவர் புகழ்ந்து பேசியதைப் பற்றியும், நான் சிறிதும் பெருமையாகக் கொள்ளவில்லை. ஏனெனில் நான் பிறந்து வளர்ந்ததும் இந்த ஊர். நீங்கள் பிறந்து வளர்ந்ததும் இந்த ஊர். அன்றியும் சுமார் 10 வருஷத்திற்கு முந்திய வரையில் உங்களுக்கும் எனக்கும் வெகு நெருங்கிய சம்மந்தம் இருந்து வந்திருக்கிறது. ஆதலால் உள்ளுர்க்காரர்கள் நெருங்கிய சம்மந்தம் இருந்து வந்தவர்கள் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொள்வது என்பது பரிகசிக்கத்தக்கது என்றே கருதுகிறேன். உங்கள் பத்திரத் தில் உள்ளுரிலிருக்கிற உங்களை நான் முன்போல் கவனிக்கவில்லை என்று கண்டு இருக்கிறீர்கள். முன்போல் உங்களுக்குப் பலவித நன்மைகள் செய்ய வில்லை என்று சொல்லுகிறீர்கள். இவைகள் வாஸ்தவமாயிருக்கலாம். ஏனெ னில் நான் இந்த ஊர் முனிசிபல் சேர்மனாய் இருந்த காலத்தில் உங்கள் தெரு விற்கு என்று அதிக சலுகை காட்டினது போல் இப்போது நான் ஈடுபட்டி ருக்கும் காரியத்தில்...

அய்ய நாடார் மறைந்தார்

அய்ய நாடார் மறைந்தார்

  தோழர் ஊ. பு. அ. சௌந்திர பாண்டியன் எம். எல். சி. அவர்களது அருமைத் தந்தையார் பட்டிவீரன்பட்டி, பழமையான பிரபல குடும்பஸ்தரும் பெரும் புகழ் பெற்றவரும் சமூகத்திற்கே நாயகமாய் இருந்து சமூக சமதர்மத் துக்கு வெகுகாலமாகவே போராடிக் கொண்டிருந்த வருமான தோழர் ஊ. பு. அய்ய நாடார் அவர்கள் காயலாவாய் இருந்து 18  தேதி இரவு 10 மணிக்கு காலம் சென்றார் என்ற சேதியைக் கேட்டு வருந்துகின்றோம். தோழர் அய்ய நாடார் அவர்கள் தென்னாட்டில் சமூக சீர்திருத்த முயற்சிகள் ஏற்படுவதற்கு முன்பும் சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கும் முன்பு இருந்தே சகல சமூகமும் ஒன்றுபட வேண்டும் என்றும், உயர்வு தாழ்வு கூடாதென்றும் போராடி வந்ததுடன் மூடப் பழக்கவழக்கங்களையும், திதி திவசம் போன்ற பார்ப்பன சூழ்ச்சிகளையும் அறவே வெறுத்து பிரசாரம் செய்து வந்தவர் களுமாவர். அது மாத்திரமல்லாமல் சுயமரியாதை இயக்கத்திற்கும் அது தோன்றிய காலமுதல் குடும்பத்துடன் சுற்றத்தாருடன் ஒத்துழைத்து அதற்கு அளவு கடந்த...

தோழர் எஸ். ராமநாதன்

தோழர் எஸ். ராமநாதன்

  தோழர் ராமநாதன் அவர்கள் ஐரோப்பாவிலேயே தங்கிக் கொண்ட விஷயத்தைப் பற்றி பல பத்திரிகைகள் பல விதமாக எழுதி பொது ஜனங் களுக்குள் ஒரு வித தப்பு அபிப்பிராயத்தை உண்டு பண்ண முயற்சிப்பதாய் தெரிய வருகின்றது. அது என்னவெனில் தோழர் ராமநாதன் கையில் ஒரு காசு கூட கொடுக்காமல் அவரை காயலாவுடன் பிரான்ஸ் ஆஸ்பத்திரியில் விட்டு விட்டு ஓடி வந்து விட்டதாக ஒரு கூற்று. தோழர் ராமநாதனை மார்சேல்ஸ் நடுத் தெருவில் கையில் ஒரு காசு கூட இல்லாத நிலையில் விட்டு விட்டு வந்ததாக மற்றொரு கூற்று. தோழர் ராமநாதனை மார்சேல்ஸ் தெருக்களில் ஒரு காசு கூட நான் கொடுக்காமல் விட்டு விட்டு வந்து விட்டதாகவும், ஆனால் தன்கையில் தன் தங்கை எவ்வளவோ கஷ்டப்பட்டு சேர்த்து வைத் திருந்ததை அனுப்பி இருப்பதாகவும், அது சிறு தொகை – செலவுக்கு போராதது போலவும், குறிப்பிட்டு இங்கு ஒரு கனவானை தனக்கு கடனாக 300...

ஹரிஜனங்கள்

ஹரிஜனங்கள்

  இந்திய தேசீயம் என்னும் சுயராஜ்ய முயற்சி தோல்வியடைந்தவுடன் இந்து மதப்பிரசாரம் தொடங்கப்பட்டு அதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருவது யாரும் அறியாததல்ல. உண்மையைச் சொல்லுமிடத்து இந்திய தேசீயமென்பதே இந்து மத ஆதிக்கமே தவிர வேறல்ல. இக்கருத்தை இதற்கு முன் பல தடவைகளில் விளக்கியிருக்கின்றோம். இந்திய தேசீயம் இந்து மத ஆதிக்கத்திற்கு  பாடுபடுகின்றது என்று நன்றாய் விளங்கியதால் தான் இந்து மதத்தின் காரணமாய் உயர் நிலையில் இருப்பவர்களான 100க்கு 90 வீதமுள்ள  பார்ப்பனர்கள் காப்பிக் கடை, வக்கீல், குமாஸ்தா உள்பட யாவரும் தேசீயப் பிரசாரத்தை நடத்துகிறார்கள். அதோடு மாத்திரமல்லாமல் மத உணர்ச்சியால் தான், மதத்தின் கற்பனையின் பயனாகத் தான் தாங்கள் செல்வவான்களாக இருக்க முடிகின்றது என்று கருதிய செல்வவான்கள்  எல்லோரும் இந்த தேசீய முயற்சிக்கு கோடிக் கணக்கான ரூபாய்களை உதவி வருகின்றார்கள். அதற்கு பிரதி உபகாரமாகவே தான் இந்திய தேசீயத்தில் முக்கிய கொள்கையாக, “மதத்தையும், மத ஆதாரங்களையும் காப்பாற்றப்படும்” என்றும், எல்லா மதங்களினுடைய ...

கோயில் நுழைவும் ஒற்றுமை மகாநாடும்

கோயில் நுழைவும் ஒற்றுமை மகாநாடும்

  இன்று “இந்திய தேசீய துறையில் கோயில் நுழைவு பிரசாரத்திற்கும் ஒற்றுமை பிரசாரத்திற்கும்” தான் அதிக விளம்பரங்கள் காணப்படுகின்றன ஏனெனில் தோழர் ராம்சே மாக்டானால்டு அவர்களின் வகுப்புப் பிரச்சினை தீர்ப்புக்காக வென்று தோழர் காந்தியவர்களால் செய்யப்பட்ட பட்டினியின் பிரசாரம் பொது ஜனங்களின் மனதை கவரும் படி செய்து விட்டது. மற்றொரு புறம் வைசிராய் அவர்களின் அடக்குமுறை பெருவாரியான தேசபக்தர்கள் என்பவர்களுக்கு தேசீய வேலை செய்ய இடமில்லாமல் செய்து விட்டதால் எப்படியாவது ஒரு புதியத் துறையைக் கண்டு பிடிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டு விட்டது. ஆகவே இவ்விரண்டின் பயன்களால் கோவில் நுழைவும் ஒற்றுமை மகநாடும் உச்சஸ்தானம் பெற்று விட்டன. இக்காரியங்கள் இரண்டும் இன்று தேசீயத்திற்காகவே செய்யப் படுவதாய் கூறப்பட்டும், அந்தப்படி மக்களை நம்பும் படியும் செய்திருந்தா லும் நாம் அதை ஒப்புக் கொள்ள முடியாது. ஏனெனில் தேசீயம் என்பதின் தத்துவம் எப்படி இருந்த போதிலும் இன்றையதினம் தேசீயத்திற்காக வென்று இவ்வளவு பாடுபடுகின்றவர்கள் தோழர்...

இலங்கை உபன்யாசம்

இலங்கை உபன்யாசம்

  அன்புள்ள தலைவரே! வீரமும், எழுச்சியும், சுயமரியாதை உணர்ச்சி யும் உள்ள வாலிபர்களே!! தலைவரின் முன்னுரையிலும், உபசாரப் பத்திரங்களிலும், மற்றும் பேசியவர்களும் அளவுக்கு மீறி என்னைப் பற்றியும், எனது சிறு தொண்டைப் பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட புகழ்ச்சிகளுக்கு நான் சிறிதும் தகுதியுடையேன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கி றேன். அதோடு கூடவே இதன்மூலம் நீங்கள் எனது கொள்கைகளையும், தொண்டையும் ஆதரிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து  மகிழ்ச்சியடைகிறேன். மனித சமூகம் தோழர்களே! எனது அபிப்பிராயத்திற்கும், முயற்சிக்கும், குறிப்பிடத் தகுந்த அளவு எதிர்ப்பு இருக்கின்றது என்பதை நான் அறியாமலோ, அல்லது அறிந்தும் அவைகளை மறைக்க முயலவோ இல்லை. யார் எவ்வளவு எதிர்த்த போதிலும், யார் எவ்வளவுக்கு தூஷித்து விஷமப் பிரசாரம் செய்த போதிலும், யார் எவ்வளவு எனது அபிப்பிராயம் வெளியில் பரவாமல் இருக்கும் படியும் சூழ்ச்சிகள் செய்து மக்களின் கவனத்தை வேறுபக்கம் திருப்பிய போதிலும், உலகத்தில் எல்லா பக்கத்திலும் வேத புராண...

வைதீகப் பார்ப்பானுக்கும் கோயில் பிரவேச பார்ப்பானுக்கும் சம்பாஷணை

வைதீகப் பார்ப்பானுக்கும் கோயில் பிரவேச பார்ப்பானுக்கும் சம்பாஷணை

  – தேசியத் துரோகி வைதீகப் பார்ப்பனர்: என்ன சாஸ்திரிகளே! நீங்கள் கூட பறைப் பசங்களை கோயிலுக்குள் விடுவது சரியென்று சொல்லுகிறீரே! நீரே இப்படிச் சொல்ல ஆரம்பித்துவிட்டால் பிறகு நம்ம சாஸ்திரங்கள் என்ன ஆவது? கோயில் பிரேவேச பார்ப்பனர்: ஆமாம்! என்ன பண்றது! இனி சாஸ்திரத்தையும் மதத்தையும் சொல்லி அந்தப் பசங்களின் சுதந்திரத்தைத் தடுக்க முடியாது. அந்தப் பசங்களும் நம்ம சாஸ்திரத்தில் என்ன சொல் லுகிறது என்று தெரிந்து கொண்டார்கள். அவர்கள் ஏதாவது கேட்கும் போது நாம் சாஸ்திரமென்றோ மதமென்றோ சொன்னால், உடனே அவர்கள் நீங்கள் அவைகளின் படி நடக்கிறீர்களா? என்று கேட்டு விடுகிறார்கள்? அதற்கு நம் மால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. ஆகையால் அவாள் சொல்றதை ஆமோதித்தால் தான் நம்மையும் நாலு மனுஷாள் நல்லவன் என்று  சொல்லுவான்கள் போலிருக்கிறது? வை – பா: இதற்காகவா நாம் பயந்து விடுகிறது? பிறகு நம்ம ஜாதிக்கே ஆபத்து வந்து விடுமே. சாஸ்திரம்,...

ஆதி திராவிடர் சங்க வரவேற்பு

ஆதி திராவிடர் சங்க வரவேற்பு

  தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேற ஒரே ஒரு வழிதான் உண்டென்றும், அது உலகில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டிய முயற்சி எடுக்க வேண்டு மென்றும், அம்முயற்சிக்கு எதிரியாய் இருக்கும் சாதனங் களான தேசாபிமானம், மதாபிமானம் என்பவைகளை அடியோடு அழித்து உலக ஏழைகள் அபிமானம் – உலக தாழ்த்தப்பட்டவர்கள் அபிமானம் என்பதன் உணர்ச்சியுடன் வேலை செய்யத் துணிய வேண்டும் என்றும், உலக மனித சமூகத்தை 2 வகுப்பாகத்தான் பிரிக்க வேண்டு மென்றும், அது ஒன்று, தொழில் செய்து கஷ்டப்பட்டு வாழும் ஏழை, மற்றொன்று தொழில் செய்யா மல் மற்றவர்கள் தொழிலின் பயனை அனுபவிக்கும் சோம்பேரி செல்வ வான்கள் என்றும் இரண்டே பிரிவாகப் பிரிந்து  போராடி விடுதலை அடையத் தயாராயிருக்க வேண்டு மென்றும் பேசினார். (கடைசியாக ஒரு உபதேசியார் எழுந்து ராமசாமியின் உழைப்பையும் உபதேசத்தையும் தான் பல வருஷங்களாகப் பார்த்து வருவதாகவும், அவர் மூலம் தான் மக்கள் கஷ்டம் ஒழியக் கூடுமென்றும், ஆனால்...

கொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பு

கொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பு

  இந்த சினிமாக் காட்சி பார்ப்பதற்கு மிக அதிசயமாயும்  ரம்மியமாயும் காணப்பட்டாலும், இதைப் பார்ப்பதனால் ஏற்படும் பயன் மூடநம்பிக்கையும் அடிமைத் தனமும் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், இந்த மூட நம்பிக்கையும், அடிமைத் தன்மையையும் சோம்பேரிகள் பயன்படுத்திக் கொண்டு ஏழைகளை  வருத்தி செல்வம் பெருகிக்கொள்ள பயன்படுகின்ற தென்றும், இனி இப்படிப்பட்ட காட்சிகள் தடுக்கப்பட வேண்டுமென்றும், பகுத்தறிவும், சுதந்தரமும் ஏற்படக் கூடிய விஷயங்களையே நாடகமாகவோ, படக் காட்சியாகவோ காட்ட இந்த தியேட்டர் சொந்தக்காரர் முயற்சிக்க வேண்டுமென்றும், உண்மையான சுதந்திர, சமத்துவத் தேசங்களில் உள்ள காட்சிகள் அப்படித்தான் இருக்கின்ற தென்றும் சொன்னார். குறிப்பு : 21-10-1932 மாலை கொழும்பு கெயிட்டி திரையரங்கில் சில சிங்கள வாலிபர் களால் நடத்தப்பட்ட திரைப்படக் காட்சியைப் பார்த்தும் வரவேற்புப் பத்திரத்திற்கு பதில் அளித்தும் பேசியது. குடி அரசு – சொற்பொழிவு – 13.11.1932

ஈ. வெ. இராமசாமியின் கொழும்பு விஜயம்

ஈ. வெ. இராமசாமியின் கொழும்பு விஜயம்

  கொழும்பு பர்ஷியன் ஹோட்டல் விருந்து இன்று உலகில் பெரும் பாகத்தில் நடக்கும் தேசப்பக்திக் கிளர்ச்சிக்கும் ஜாதியக் கிளர்ச்சிக்கும் அரசியல் கிளர்ச்சிக்கும் தனது அபிப்பிராயம் மாறு பட்டிருப்பதாகவும் இவ்வித கிளர்ச்சிகள் கஷ்டப்படும் மக்களுக்கு எவ்வித மாறுதலையோ பயனையோ கொடுக்காதென்றும் ஏழை மக்களின் கஷ்டங் களைச் சொல்லிக் கொண்டு அதின் பேரால் சோம்பேரி வாழ்க்கைப் பிரியர் களாலும், பேராசைக் காரர்களாலும் நடத்தப்படும் போட்டி “வியாபாரங்களே” இன்று தேசீயமாயும், ஜாதீயமாயும் மதாபிமானமாயும் இருக்கின்றதே தவிர அவற்றுள் நாணயமோ உண்மையோ சிறிதும் தன்னால் காணக்கூடவில்லை யென்றும், உலகில், ஒரு பெரிய மாறுதல், அதாவது வெடி மருந்து சாலையில் தீப் பிடித்து வெடிக் கிளம்புவது போல் சமீபத்தில் ஏற்படப் போகின்றதென்றும் வாழ இஷ்டமிருக்கின்றவர்கள் அதற்குத் தகுந்தபடி தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டு மென்றும், இப்போதையப் பெரும்பாக கிளர்ச்சிகள் உலக உண்மைக் கஷ்டத்தைக் கஷ்டப்படும் மக்கள் அறிய முடியாமல் இருப்ப தற்குச் செய்யும் தந்திரமென்றும் பேசினார். குறிப்பு :...

ஈ.வெ.ரா.  குறிப்பு

ஈ.வெ.ரா.  குறிப்பு

  தோழர்களே, எனது மேல் நாட்டுச் சுற்றுப் பிரயாணம் ஒருவாறு வெற்றியுடன் முடிந்து 11-11-32 தேதி காலை ஈரோடு வந்து சேர்ந்திருக்கிறேன். நீண்ட பிரயாணத்தினால் நான் சிறிது களைப் புற்றிருந்தாலும் சமீபத்தில் களைப்பு நீங்கி இயக்க வேலையை மும்முரமாய் தொடங்க உறுதி கொண்டி ருக்கிறேன். என்னுடன் கூட வந்த தோழர் ராமநாதன் அவர்கள் என்னை மார் செயில்ஸில் இந்தியாவுக்கு கப்பலேற்றி விட்டு ஜினிவாவுக்கு சென்று இருக்கிறார். அங்கு சில விஷயம் அறிந்து 2  அல்லது 3  மாதத்தில் இந்தியா திரும்புவதாக சொல்லிப் போயிருக்கிறார். அதற்குள் கூடிய சீக்கிரம் நமது இயக்கத் தோழர்கள் பலரை கூட்டிக் கலந்து பேசி ஒரு வேலைத் திட்டத்துடன் தீவிர பிரசாரம் நடத்த உத்தேசித் திருக்கிறேன். சீக்கிரத்தில் எனது சுற்றுப் பிரயாணத்தின் விருத்தாந்தங்களையும், காட்சிகளையும், அதனால் நான் கொண்ட கருத்துக்களையும் அதை எந்த அளவுக்கு நாம் பின்பற்ற வேண்டும் என்பதையும் விளக்கி சீக்கிரம் பத்திரிகையில் வெளியிடவும் உத்தேசித்து இருக்கிறேன்....

ஆதி திராவிட அபிவிர்த்தி சங்கத்தார் வரவேற்பு

ஆதி திராவிட அபிவிர்த்தி சங்கத்தார் வரவேற்பு

  அன்பார்ந்த சகோதரர்களே! சகோதரிகளே!! அக்கிராசனரவர்கள் எம்மைப்பற்றி அதிக புகழ்ச்சியாகக் கூறிவிட்டார்கள். நான் அவைகளுக்கு அருகதையுடையவனல்ல என்றாலும், நமது மக்கள் தங்களது பகுத்தறிவைக் கொண்டு நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை ஒப்புக் கொள்கிறது ஒன்றே எமக்கு திருப்திகரமாகவிருக்கிறது. “தாழ்த்தப்பட்ட மக்கள் ஈடேறும் வழி” என்பதாக என்னை பேசும்படி கேட்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி வியாக்கியானம் அதிகம் செய்ய வேண்டியதில்லை என்றே கருதுகிறேன். ஏனெனில் பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் என்பவைகளின் உட்கருத்தை ஊன்றிக் கவனித்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஈடேரும் வழி தானாகவே தோன்றும். எப்படி எனில் குறிப்பிட்ட எந்த விதமான அபிமானத்தை எடுத்துக் கொண்ட போதிலும், அநேகமாக அந்த அபிமானத்தின் பேரால் ஏமாற்றுகளே நடைபெறுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராகவுள்ளவர்கள் இவைகளை ஊன்றிக் கவனித்து – அலசிப்பார்த்து – உரைகல்லில் வைத்து  உரசிப்பார்க்க வேண்டும். அவ்வாறு அவர்கள் பார்ப்பார்களேயானால் வாஸ்தவதத்திலே தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேறும் வழியை எளிதில் கண்டு கொள்வதற்கு ஏதுகரமாக விருக்கும். மக்களது முன்னேற்றத்திற்கு...

கத்தோலிக்கப் பெரியார்கள்

கத்தோலிக்கப் பெரியார்கள்

  சுயமரியாதை இயக்கமும், குடி அரசும், “கடவுள்” என்று சொல்லப் படும் ஒன்றை ஒழிப்பதற்கு என்றோ, அல்லது அது இல்லை யென்று நிலை நாட்டுவதற்கென்றோ அல்லது அது உண்டு யென்று நிலை நாட்டுவதற் கென்றோ தோன்றியவைகள் அல்ல; குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தின் மீதும் துவேஷம் கொண்டு அதை ஒழிப்பதற்குப் புறப்பட்டவையுமல்ல. ஆனால், ஜாதியின் பேராலோ, அல்லது மதத்தின் பேராலோ அல்லது சாஸ்திரங்களின் பேராலோ மற்ற எதன் பேராலோ ஜன சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் எவ்வித மான உயர்வு தாழ்வுகளையும் ஒழித்து மக்களுக்குள் சமத்துவத்தை உண்டாக் கவே இவ்வியக்கம் ஏற்பட்டதாகும். மனிதர்களை மனிதர்கள் பலவகையான அர்த்தமற்ற காரணங்களைச் சொல்லிப் பரம்பரையாகக் கொடுமைப் படுத்தி வரும் அக்கிரமத்தை – அது எந்த வகையான பரிசுத்தமான பெயரால் நடை பெற்று வந்தாலும் அதை ஒழிக்கவே இவ்வியக்கம் தோன்றியதாகும். இவ் வியக்கத்தின் உண்மைக் கருத்தை உணர்வோர் இதை ஒரு “ஜீவரக்ஷக அறிவியக்கம்” என்று ஒப்புக் கொள்ளாமல் போகமாட்டார்கள்....

கடவுளைப் பற்றி நினைக்க முடியா

கடவுளைப் பற்றி நினைக்க முடியா

  தொழில் முயற்சி மேல் நாட்டினர் முற்போக்கு “நான் ஓர் நாஸ்திகனல்ல, தாராள எண்ண முடையோன். நான் ஒரு தேசீயவாதியுமல்ல, தேசாபிமானியுமல்ல. ஆனால் தீவிர ஜீவரக்ஷh எண்ண முடையவன். எனக்கு ஜாதி என்பதோ, ஜாதியென்பதின் பேரால் கற்பிக்கப் படும் உயர்வு தாழ்வுகளோ கிடையாது. அத்தகைய எண்ணத்தையே நான் எதிர்ப்பவன். ஆதரிப்பவனல்ல. தாங்கள் மேல் ஜாதியார், உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு, மனிதரது ஜீவாதாரமான உரிமைகளாகிய தெரு வில் நடத்தல், கோவிலுக்குள் செல்லல் முதலியவற்றை மறுத்துக் கொண்டு, ஏனையோர்க்கும் சமத்துவம் வேண்டுமென்று செய்கிற முயற்சியைக் கண்டிக்கிறேன்.” “காலமெல்லாம் பண்டய பழக்கவழக்கங்களும், மூடக் கொள்கை களும் நிலைத்தே நிற்க வேண்டுமென்றால் ஒரு பறையன் என்று சொல்லப் படுகின்றவனோ, அல்லது சக்கிலி என்று சொல்லப் படுகின்றவனோ, மிருகத்தைவிடக் கேவலமாக நடந்தப்பட்டே வர எப்படி இந்தியா அவன் தாய் நாடு தான் என்று எண்ணமுடியும்? ஒரு பொது சேவைக்கு அவர்களை நம்மோடு ஒத்துழைக்க எதிர்பார்க்க முடியுமா?” வேலையில்லாத்...

 பரோடாவில் ஆலயப் பிரவேசம்

 பரோடாவில் ஆலயப் பிரவேசம்

  சுதேச சமஸ்தானங்களில் முற்போக்கான காரியங்களை முதன்மை யாகச் செய்து வரும் சமஸ்தானம் பரோடா சமஸ்தானம் ஒன்றே யென்பதை நாம் கூற வேண்டியதில்லை. அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்தில், பரோடா அரசாங்கம் மிகவும் அனுதாபங் கொண்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்து கொண்டு வருகின்றது. தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளை எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் ஆnக்ஷபனையின்றிச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனச் சென்ற வருஷத்தில் பரோடா அரசாங் கத்தார் உத்தரவு பிறப்பித்தனர். இவ்வுத்தரவை அகங்காரம் பிடித்த உயர் ஜாதி இந்துக்கள் எவ்வளவோ எதிர்த்தனர்;. பள்ளிக் கூடங்களில் சேரவந்த தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளுக்கு எவ்வளவோ கஷ்டங்களை உண்டாக்கினார்கள்; தங்கள் பிள்ளைகளை ஜாதி இந்துக்களின் பிள்ளைகள் வாசிக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிய தாழ்த்தப்பட்ட வகுப்புக் குடும்பத்தினரின் குடிசைகளை நெருப்புக் கிரையாக்கினர்;   அவர்கள் தண்ணீர் எடுக்கும் கிணறுகளில் மண்bண்ணெயை ஊற்றிக் குடி தண்ணீ ருக்குத் திண்டாட விட்டனர். இவ்வாறு உயர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப் பட்டவர்களுக்குச் சகிக்க முடியாத கொடுமைகளைச்...

கொழும்பில் ஈ. வெ. இராமசாமி

கொழும்பில் ஈ. வெ. இராமசாமி

  “நான் சாதாரண மனிதனில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். யாவரும் என் அபிப்பிராயப்படி நடக்க வேண்டுமென்று திரு. சாரநாதன் கூறினார். அது என் கொள்கைக்கு முற்றிலும் மாறானது. நீங்கள் கேட்டு நீங்களே சிந்தித்து நன்மையானதைச் செய்ய வேண்டுமேயல்லாமல் ஒருவர் கூறுகிறபடி செய்யக்கூடாது. மனிதர்கள் சுய அறிவில் நம்பிக்கை வைக்கவேண்டும். விஷயங்களை நன்றாய் அலசிப் பார்க்க வேண்டும்.    100-க்கு 99பேர் ஒப்புக் கொண்டாலும் நீங்கள் அலசிப் பார்த்தே அறிய வேண்டும். உலகத் திலுள்ள சகல தேசங்களிலும் தலைவர்களின் கட்டளைப்படி நடந்தவர்கள் கஷ்டத் திலாழ்ந்து வருகிறார்கள். நடுநிலைமையிலிருந்து விஷயங்களை கிரகிக்க வேண்டும். என்னில் கடவுளிருக்கிறாரென்று நான் கூறவில்லை. நான் கூறும் விஷயங்களை ஆலோசித்துப் பாருங்கள். சகாயத்தைப் பெறுவதற்காகவோ, வேறு சுயநலம் காரணமாகவோ நான் இங்கு வந்திருக்கவில்லை. நாட்டிலே மக்களிடை பல நிலைமைகளைக் காண்கிறோம். ஒரு கூட்டத்தார் கஷ்டப்படுகிறார்கள், ஒரு கூட்டத்தார் இன்புற்று சுக போகங் களை அனுபவித்து வருகிறார்கள். உலகப் பரப்பில் இந்த வித்தியாச...

கொழும்பில் ஈ.வெ. இராமசாமி

கொழும்பில் ஈ.வெ. இராமசாமி

  தமிழ் நாட்டில் நான் செய்துள்ள சிறிய தொண்டை முன்னிட்டும் எமது மேல் நாட்டு பிராயணத்தை முன்னிட்டும் எம்மை உபசரிக்கும் நோக்கமாகச் செய்த வந்தனோபசாரங்களுக்கு நான் எனது உண்மையான நன்றியறிதலை செலுத்துகிறேன். நீங்கள் என்னை அதிகம் புகழ்ந்து விட்டீர்கள். இருந்தும் எனது கொள்கையை நீங்கள் பூரணமாக ஒப்புக் கொள்ளுகிறீர்கள் என்று இதனால் எனக்குத் தோன்றுகிறது. இன்று உலகத்தில் விடுதலையின் பேரால், சுதந்திரத்தின்பேரால் எவ்வளவு அக்கிரமங்கள் நடக்கின்றன. மதாபிமானம், தேசாபிமானம், கடவுளபிமானம் என்ற பேரால் எத்தனை பேர் வயிறு பிழைக்கின்றனர். லக்ஷக் கணக்கான நமது சகோதரர், உடன் பிறந்தார், ஊணுடையின்றிக் கஷ்டப்பட்டுச் சாகின்ற இந்நாட்களில் அவர்களுடைய இன்னல்களை நீக்க வழி தேடுவதை விட்டுக் கடவுளைப் பற்றி பேசி என்ன பயன்? நாம் ஆலோசனைக்காரார். அதுவே நமது கொள்கை; அதுவே சுயமரியாதைக் கட்சியின் அடிப்படையான கொள்கை. நமக்குத் தோன்றுகிற எண்ணங்களை ஆலோசித்து அலசிப் பார்க்க வேண்டும். அதற்குப் பயப்படக் கூடாது. எனக்குக் கடவுளைப் பற்றியே...

கோயில் பிரவேச மசோதா

கோயில் பிரவேச மசோதா

  அடுத்து வரப்போகும் சென்னைச் சட்ட சபைக் கூட்டத்தில், மாஜி மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்களால் சட்டமாக்கும் பொருட்டு ஆலயப் பிரவேச மசோதா ஒன்று கொண்டு வரப்போவதாக அறிகின்றோம். டாக்டர் சுப்பராயன் அவர்கள், சமூக சீர்திருத்த விஷயத்தில் உண்மையான பற்றும் ஆர்வமும், செய்கையளவில் நடத்திக் காட்டும் குணமும் உடையவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே இப்பொழுது அவர் கொண்டு வரப்போகும் ஆலயப் பிரவேச மசோதாவைக் கொண்டு, அவர் வெறும் புகழுக்காகவோ, ஏமாற்றலுக்காகவோ இக்காரியத்தைச் செய்ய முன் வந்திருக் கிறார் என்று யாரும் கூற முடியாது. அவர் எல்லாச் சமூகத்தின்பாலும் கொண்டிருக்கும், உண்மையான சமத்துவ எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டே, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கோயில்களில் சமவுரிமை வழங்க வேண்டும் என்னும் அந்தரங்க எண்ணத்துடனேயே இம்மசோதாவைக் கொண்டு வரப்போகிறார் என்று ஐயமறக் கூறுவோம். ஆனால் இம்மசோதா சென்னைச் சட்டசபையில் சட்டமாக நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பதைப் பற்றி இப்பொழுது நாம் ஒன்றும் துணிந்து கூறுவதற்கில்லை. ஆனால் அரசாங்கத்தார்,...

தீபாவளிக் கொள்ளை நோய்

தீபாவளிக் கொள்ளை நோய்

  ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வரும் பெரிய கொள்ளை நோய் சமீபத்தில் வரப் போகிறது. மக்களுடைய  உயிரைக் கவர்ந்து செல்லும் கொள்ளை நோயினால் கூட அதிகக் கஷ்டமில்லை. ஆனால் மக்களை உயிரோடு வைத்து அவர்களுடைய இரத்தத்தையும், செல்வத்தையும், அறிவையும் உறிஞ்சி விடும் கொள்ளை நோய்களுக்கே அதிகமாக அஞ்ச வேண்டும். அத்தகைய கொள்ளை நோய்கள் இந்து மதத்தில் ஏராளமாக இருக்கின்றன. இவைகளில் எல்லாம் மிகவும் பெரியதாகிய கொள்ளை நோய் தான் இவ்வாரத்தில் வருகிறது. அக் கொள்ளை நோய் தீபாவளிப் பண்டிகை யேயாகும். ஆகையால் எல்லா மக்களையும் ஜாக்கிரதையாயிருக்கும்படி எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவே  நாம் அக்கொள்ளை நோயின் கொடுமைகளை எடுத்துக் காட்ட முன்வந்தோம். இந்தியர்கள் அவர்களுக்குள்ளும், இந்துக்கள் என்பவர்கள் மற்ற சமூகத்தாரைக் காட்டிலும் செல்வத்திலும், அறிவிலும், வீரத்திலும் தாழ்ந்து அடிமை மனப்பான்மை மிகுந்தவர்களாயிருப்பதற்குக் காரணம், இந்து மதமும்,  அதன் மூலம் ஏற்பட்டுள்ள பண்டிகைகளுமே என்பதை நமது இயக்கம் நன்றாய் விளக்கிக் காட்டியிருக்கின்றது. இந்து மதமும்...

ஜஸ்டிஸ் கட்சி கொலை செய்யப்படுமா?

ஜஸ்டிஸ் கட்சி கொலை செய்யப்படுமா?

  சென்ற வாரத்தில் தஞ்சையில் கூடிய பன்னிரண்டாவது பார்ப்பன ரல்லாதார் மகாநாட்டில் நடந்த மானக்கேடானக் காரியங்களைக் கேட்ட எந்த பார்ப்பனரல்லாதாரும், பார்த்த எந்தப் பார்ப்பனரல்லாதாரும்,  வெட்கமடைந்து தலையைத் தொங்க விட்டுக் கொள்ளாமலிருக்க முடியாது. தேசத்தின் நன்மைக்காக உழைக்கின்றோம் என்றும், சமூகத்தின் நன்மைக்காக உழைக் கின்றோம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கும் படித்த கூட்டத்தாரும், பணக்காரக் கூட்டத்தாரும் ஆகிய பார்ப்பனரல்லாதார்களே சாதாரண முறட்டு, அறிவற்ற காலிகளைப்போல் ஒருவரோடு ஒருவர் மோசமாக நடந்து கொண்ட நடத்தையை நினைக்கும் போது உண்மை பார்ப்பனரல்லாதார் இரத்தம் கொதிக்காமலிராது. பார்ப்பனரல்லாதார் கட்சியை எப்படியேனும் குழி தோண்டி புதைத்துவிட வேண்டுமென்று வெகுநாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்த  பார்ப்பனர்களும், பார்ப்பனக்  கூலிகளும் சந்தோசப் பட்டுத் தலைகால் தெரியாமல் கூத்தாடவும், பார்ப்பனரல்லாதாரின் சமூக நலத்தைப் போதிய அளவு கவனிக்கா விட்டாலும் ஏதோ பார்ப்பனரல்லா தாரின் நன்மைக்காக உழைப்பதாகச் சொல்லிக் கொண்டாவது ஒரு கட்சி இருக்கிறதே என்று  நினைத்துக் கொண்டிருக்கின்றவர்களின் நெஞ்சந் துடிக்கவும் ஆன காரியங்கள்...

மண்ணுருண்டை மாளவியாக்கள்

மண்ணுருண்டை மாளவியாக்கள்

  திரு. காந்தியார் அவர்கள் தீண்டாதார்க்கு ஏற்பட்டிருந்த தனித் தொகுதியை ஒழிக்கும் பொருட்டுச் சில தினங்களுக்கு முன் உண்ணா விரதமிருக்கத் தொடங்கியதும், அதன் பின் தலைவர்கள் என்பவர்கள் பம்பாயில் சமரச மகாநாடு கூட்டியதும், அதில் தீண்டாதாரின் தனித் தொகுதி முறை பலிகொடுக்கப்பட்டதும் பழய சங்கதிகளாகி விட்டனவென்று கூற முடியாது. இவ்வாறு தலைவர்களின் மகாநாட்டைக் கூட்டி ஒரு சமரச முடிவை யுண்டாக்கப் பாடுபட்டவர்களில் திரு. பண்டித மாளவியாவே முதன்மை யானவர் என்று எங்கும் புகழப்பட்டு வருகிறது. தனித்தொகுதியை ஒழிக்க விரதமிருந்த திரு. காந்தியாரோ தனித் தொகுதியை ஒழிப்பது மட்டும் போதாது, தாழ்த்தப் பட்டார்க்கு “ஜாதி இந்துக்களுக்கு இருந்து வரும் சகல உரிமைகளும் கொடுக்கப்படவேண்டும்” என்று கூறினார். ஆகையால் தீண்டாதார் தலைவர்கள் தனித் தொகுதியை விட்டுக் கொடுத்துப் பொதுத் தொகுதித் தேர்தல் முறையை ஒப்புக் கொள்ளும்படி செய்வதற்காக நாடெங்கு முள்ள காங்கிரஸ் வாதிகளும், சீர்திருத்தவாதிகளும் தீண்டாமையை விலக்கு வதற்கு முயற்சி செய்வதாகப் பாவனைகள் செய்தனர்....

உண்ணாவிரதப் பலன்

உண்ணாவிரதப் பலன்

  திரு. காந்தியவர்கள் உண்ணாவிரதமிருந்ததன் பலனாகத் தாழ்த்தப் பட்டோர்க்கு ஏற்பட்டிருந்த தனித்தொகுதித் தேர்தல் முறை ரத்து செய்யப் பட்டுவிட்டது. புனாவில் இந்துத் தலைவர்கள் என்பவர்களும், தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலைவர்கள் என்பவர்களும் கூடிச் செய்து கொண்ட சமரச முடிவை பிரிட்டிஷ் பிரதம மந்திரியவர்கள் ஆட்சேபணையின்றி ஒப்புக் கொண்டு விட்டார். திரு. காந்தியும் தனது உண்ணா விரதத்தை முடித்து விட்டார். திரு. காந்தியவர்கள் உண்ணாவிரதமிருந்ததனாலும், தலைவர்கள் என்பவர்கள் சமரச மகாநாடு கூடி ஒப்பந்தஞ் செய்து கொண்டதனாலும், அவ் வொப்பந்தத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் அங்கீகரித்துக் கொண்டு, தாழ்த்தப் பட்டவர்களின் தனித் தொகுதித் தேர்தல் முறையை ரத்து செய்ததனாலும் உண்டான பலன் என்ன என்பதை மாத்திரம் பார்ப்போம். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பின்படி, தாழ்த்தப்பட்டோர்க்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மகாணச் சட்டசபை களுக்கும் ஏற்பட்டிருந்த மொத்த ஸ்தானங்கள் எழுபத்தொன்று. இந்த எழுபத் தொன்று ஸ்தானங்களுக்கும் தெரிந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அனை வரும், அந்த வகுப்பினரின் ஓட்டுக்களாலேயே தெரிந்தெடுக்கப்...

தீண்டாதார்க்கு விமோசனம் உண்டா?

தீண்டாதார்க்கு விமோசனம் உண்டா?

    திரு. காந்தியவர்கள் தற்பொழுது உண்ணாவிரதம் ஆரம்பித் திருப் பதைப் பற்றியே எங்கும் பேச்சாக இருக்கிறது. நமது நாட்டு அரசியல்வாதி களும், சீர்திருத்த வாதிகளும், வருணாச்சிரம தரும வாதிகளும் கூட திரு. காந்தியவர்களின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைப் பற்றிப் பத்திரிகைகளிலும் அறிக்கைகள் வெளியிடுகின்றனர். பொதுக் கூட்டங் களிலும் பேசி வருகின்றனர். நாமும் அவருடைய உயிர் காப்பாற்றப்பட வேண்டுமென்பதை மனப்பூர்வமாக ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால், திரு. காந்தியவர்கள் எதற்காக உண்ணா விரதமிருக்கிறார்? அவர் உண்ணா விரதமிருப்பதன் மூலம், அவர் கருதுகின்ற காரியமோ, அல்லது ஏழை மக்களுக்கு விடுதலையோ பூரணமாக ஏற்பட்டுவிடுமா? என்பதைப் பற்றி நம்மைப் பொறுத்தவரை ஒன்றும் ஏற்பட முடியாது என்றுதான் கூறுவோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தார்க்குத் தேர்தலில் தனித் தொகுதி அளித்திருப்பதால், இந்து மதம் பிளவுபட்டு விட்டதென்றும், தாழ்த்தப்பட்ட சமூகத்தாரும் இந்து மதத்திலிருந்து பிரிந்து விட நேர்ந்து விடுமென்றும், ஆகையால், இந்து மதம் காப்பாற்றப்படவும், தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து சமூகத்திலிருந்து...

காந்தியின் வைதீக வெறி

காந்தியின் வைதீக வெறி

  இந்துக்கள் என்பவர்களும், திரு. காந்தியும், காங்கிரசும் தீண்டாதார்க்கு அரசியல் தனித் தொகுதியை ஏற்படுத்துவதை ஆதி முதல் மறுத்து வருவ தற்குக் கார™ம், அவர்களை இதுவரையிலும் இருந்தது போலவே எப் பொழுதும் இந்துக்களுக்கு அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்னும்  எண்ணமேயாகும் என்று நாம் கூறி வருகிறோம். இவ்வாறு நாம் சொல்லி வந்ததின் உண்மை, இப்பொழுது திரு. காந்திக்கும், இந்தியா மந்திரிக்கும், முதல் மந்திரிக்கும் நடந்த கடிதப் போக்கு வரத்துகளின் மூலம் நன்றாக விளங்கிவிட்டது. தீண்டாதாருக்குத் தனித் தொகுதி கொடுத்துவிட்டால் அவர்களுக் காகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், வேறு எந்த உயர்ந்த வகுப்பி னருடைய தயவையும் எதிர்பாராமல் சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப் படலாம். சட்டசபையிலும் அவர்கள் தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு, உண்மையாகவும் தைரியமாகவும் போராடலாம். அன்றியும், இந்துக்களினின்றும் தீண்டாதாரைத் தனியாகப் பிரிப்பதனால், அவர்களுக்கு மற்றொரு பெருஞ் சாதகமும் உண்டு. அதாவது, தற்போது பிரிட்டிஷ் அரசாங்கம் செய்திருக்கும் வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பின்படி பார்த்தால், ஒவ்வொரு சட்டசபைகளிலும் உள்ள,...

அரசியல்வாதிகளுக்குப் புத்தி வருமா?

அரசியல்வாதிகளுக்குப் புத்தி வருமா?

  சென்ற 5-9-32 ந்தேதி இந்தியா சட்டசபையில் மேன்மைதங்கிய வைசிராய் அவர்கள் செய்த பிரசங்கம் தற்கால நிலைமையில் மிகவும் கவனிக் கத் தக்க தொன்றாகும். ‘காங்கிரசானது பயமுறுத்தலினால் சுயராஜ்யம் வாங்கி விடலாம் என்னும் நோக்கத்துடன் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் செய்யும் போராட்டமானது பலாத்காரமில்லாதது, சாத்வீகமானது என்ற பெயருள்ளதாயிருப்பினும், உண்மையில் தேசத்தில், கலகத்தையும், அமைதியின்மையையும், பலாத்கார உணர்ச்சியையும் உண்டாக்குவதற்கு காங்கிரசின் கிளர்ச்சியே காரணமாக இருக்கின்றது. ஆகையால், எந்த வகை யிலும், காங்கிரசின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு வேண்டிய முயற்சியை அரசாங்கம் செய்யாமலிருக்க முடியாது’ என்னும் அபிப்பிராயம் வைசி ராயின் பிரசங்கத்தில் காணக்கிடக்கின்றது. இந்த அபிப்பிராயம் தவறான தென்று நடுநிலையும், உண்மையும், பகுத்தறிவும் உள்ள எவரும் கூறமுடியாது என்றே நாம் கூறுவோம். இதற்கு உதாரணமாகச் சென்ற பம்பாய் கலகத் தையும், வங்காளத்தில் நடைபெற்று வரும் புரட்சி இயக்கத்தையும் கூறலாம்.  இதையும் வைசிராய் அவர்கள் தமது பிரசங்கத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார். பொதுவாகவே, காங்கிரசின்...

கார்ப்பொரேஷனும் பிராமணீய பக்தியும்

கார்ப்பொரேஷனும் பிராமணீய பக்தியும்

  சென்னைக் கார்ப்பொரேஷனில் சென்ற 7-9-32 தேதியில் நடந்த கூட்டத்தில் சென்னைக்கு விஜயஞ் செய்யும் கும்பகோணம் சங்கராச்சாரி யாருக்கு ஒரு உபசாரப் பத்திரம் வாசித்தளிப்பதாகத் தீர்மானித்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம். கார்ப்பொரேஷன் சபையானது நகரத்தின் சுகாதார நிலையைக் காப்பாற்றுவதற்கும், நகர ஜனங்களின் nக்ஷமத்தைக் கவனிப்பதற்கும் ஏற்பட்டதென்பதை எவரும் அறிவார்கள். இவைகளின் பொருட்டு நகர மக்களிடம் வரி வசூலித்து அப்பணத்தை நகர மக்களின் nக்ஷமத்திற்காகச் செலவு செய்து வருகிறது. ஒரு நகரத்திற்கு, தேச நன்மைக்காக அதாவது அரசியல் அபிவிருத்திக்காகவும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் பாடுபடக் கூடிய தலைவர்கள் விஜயஞ் செய்வார்களாயின், அவர்களுக்கு அந்த நகர சபை உபசாரஞ் செய்வது எங்கும் வழக்கமாக இருந்து வருகிறது. இப்படிச் செய்வது அந்தத் தலைவர்களை ஊக்கப் படுத்துவதற்கும் அவர்களுடைய உழைப்பைப் பாராட்டுவதற்கும் அறிகுறியாகும். ஜனங்களின் நன்மைக்காக உழைக்கும் உண்மையான அரசியல் வாதிகளுக்கும் சமுதாய சீர்திருத்த வாதிகளுக்கும் நகர மக்கள் சிறிது உபசாரத்திற்காகச் செலவு செய்வது எந்த வகையிலும் தவறாகாது. ஆனால்,...

குற்றஞ்சொல்ல வாய் உண்டா?

குற்றஞ்சொல்ல வாய் உண்டா?

  (வகுப்புப் பிரச்சினை முடிவு) இனிவரப்போகும் மாகாணசுயாட்சி அமைப்பில், ஒவ்வொரு மாகாண சட்டசபைகளிலும், ஒவ்வொரு வகுப்பினருக்கும் தனித்தனியே எத்தனை ஸ்தானங்கள் இருக்கவேண்டும் என்னும் வகுப்புப் பிரச்சினை சம்பந்தமான முடிவு சென்ற 16-8-32ல் அரசாங்கத்தாரால் வெளியிடப்பட்டு விட்டது. இந்த வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாக பல சமூகங்களும் ஒப்புக் கொள்ளும் படியான ஒரு முடிவு காண திரு. காந்தியுள்பட வட்டமேஜை மாநாட்டுப் பிரதிநிதிகள் இந்தியாவிலும் இங்கிலாந்துக்குச் செல்லும் வழியில் கப்பலிலும் இங்கிலாந்திலும் எவ்வளவோ முயன்றும் முடியாமற்போய் விட்டது. இவர் களால் முடியாமல் போன காரணத்தாலேயே இப்பொழுது பிரிட்டிஷ் பிரதம மந்திரியால் தீர்மானிக்கப்பட்ட முடிவை இந்திய அரசாங்கத்தார் வெளியிட் டிருக்கின்றார்கள். இப்பொழுது அரசாங்கத்தார் வெளியிட்டிருக்கும் தீர்ப்பின்படி முஸ்லீம்கள், சீக்கியர்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஜரோப்பியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் முதலியவர்களுக்குத் தனித் தொகுதி கள் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையளிக்கப் பட்டிருக்கிறது. மற்றும் பெண்கள், தொழிலாளர்கள், நிலச்சுவான்தாரர்கள், வியாபாரிகள், சர்வ கலாசாலைகள் முதலிய பலருக்கும் ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன....

நம்பிக்கையில்லைத் தீர்மானம்

நம்பிக்கையில்லைத் தீர்மானம்

  செல்வாக்கோ, வன்மையோ பெற்ற எந்த கட்சியே யாயினும் எந்த இயக்கமே யாயினும் அதிலுள்ள அங்கத்தினருள் அபிப்பிராய பேதங்கள் எழுவதும், இருப்பதும் சர்வ சாதாரணம். உண்மையுணர்ந்து அத்தகைய அபிப்பிராய பேதங்கள் பரிகரிக்கப்பட்டால் பின்னர் ஆக்க வேலைகள் தீவிரமாய் நடைபெறுவதும் சரித்திர சம்மதமான யாரும் மறுக்க முடியாத உண்மைகளாகும். உலகெங்கும் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை கேட்டும், கண்டும் வருகிறோம். இத்தகைய சம்பவங்கள் கட்சியின் முன்னேற்றத்தையும் பலத்தையும் குறிக்கிறதேயன்றி வேறில்லை. பார்ப்பன ரல்லாதார் கட்சி ஆதிக்கத்திலிருப்பதும் பார்ப்பனரல்லாத மந்திரிசபை அதிகாரத்திலிருப்பதும் இக்கட்சியை ஒழிக்க அதிகாரத்தைக் குலைக்க எதிரிகள் செய்யும் சூழ்ச்சி களும் விஷமங்களும் எண்ணிறந்தன. இதன் உண்மையறியாது நம் மக்கள் இன்னும் ஏமாந்தே வருகின்றனர். சில தினங்களுக்குமன் சென்னை அரசாங்க மந்திரி கனம் முனுசாமி நாயுடு அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதாக இருந்த விஷயமே தக்க சான்றாகும். அதற் காகக் கூடிய தென்னிந்திய நலவுரிமைச்சங்க நிர்வாகக் கமிட்டியின் கூட்ட நடவடிக்கைகளை...

இதற்கு என்ன சொல்லுகிறார்கள்?

இதற்கு என்ன சொல்லுகிறார்கள்?

மக்களுக்குள் எந்த வகையினாலும் வித்தியாசங்கள் என்பன சிறிதும் இல்லை. ஆனால் தற்போது காணப்படும் வித்தியாசங்களை ஏற்படுத்தி ஒரு கூட்டத்தாரை உயர்வாகவும், மற்றொருக் கூட்டத்தாரைத் தாழ்வாகவும், மற்றுஞ்சில கூட்டத்தாரை நடுத்தரமானவர்களாகவும், மற்றும் பலரைத் தாழ்த்தப்பட்டவர்களாகவும், மற்றும் பலரைத் தீண்டாதார்களாகவும் பிரித்து பிரித்து வேறு வேறாக வைத்திருப்பது சுயநலங் கொண்ட மக்களால் செய்யப்பட்ட ஏமாற்றேயன்றி வேறல்ல. உண்மையில் நோக்கும் போது எல்லா மனிதர்களும் சமமான நிலையையும், இன்பத்தையும், வாழ்வையும் பெறுவதற்குத் தகுதியுடையவர்களே யாவார்கள். ஆகையால் மக்களுக்குள் உள்ள உயர்வு தாழ்வு வேற்றுமைகளை ஒழித்த எல்லோரையும் ஒன்று படுத்திச் சுதந்திரமும், சுகமும் உடையவர்களாய் வாழச் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் தற்கால அறிஞர்கள் மனத்தில் தோன்றி அதற்கான முயற்சிகள் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுகின்றன. மக்களுக்குள் அளவிலடங்காத வேற்றுமைகளும் இவ்வேற்றுமை காரணமாக ஒருவர் மேல் ஒருவர் வீண் வெறுப்புக் கொள்ளுதலும், இவ் வெறுப்புக் காரணமாக கொடுமைகளைச் செய்வதுமாகிய காரியங்கள் மற்றய நாடுகளைக் காட்டிலும், நமது நாட்டில் நமது...

பர்னாட்ஷா – மேத்தா  

பர்னாட்ஷா – மேத்தா  

  நமது இயக்கப் பிரசாரத்தைக் கண்டு நமது நாட்டு வைதீகர்களும், பண்டிதர்களும் நடு நடுங்குகிறார்கள், நமதியக்கக் கொள்கைகள் எல்லா மக்கள் மனத்திலும் பதிந்துவிட்டால் தங்கள் சுயநலத்திற்குக் காரணமாக இருக்கும் வைதீகம் அழிந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். உண்மையில் இவ்வாறு பயப்படுவதற்குக் காரணம் பகுத்தறிவில்லாமையும், பழைய சாஸ்திரங்களிலும், பழக்க வழக்கங்களிலும் வீண் அபிமானம் கொண்டிருப் பதுமேயாகும். அபிமானத்தைப்போல அறிவைத் தடைபடுத்தும் கருவி உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை. எவ்வளவுதான் படித்தவர்கள் மூட நம்பிக் கைகளை ஒழிக்க அஞ்சி அவைகளைக் காப்பாற்ற முயன்றாலும் காலம் சும்மா விடுவதில்லை. உலகம் புகழும் பரந்த அறிவினர்கள் உள்ளத்தில்  உண்மை உணர்ச்சித் தோன்றி வெளிப்பட்டு விடுகின்றது. உலகத்தில் உள்ள கவிஞர்களில் மிகச் சிறந்த – பரந்த – அறிவினராகிய “ஜியார்ஜ் பர்னாட்ஷா” என்பவரைப்பற்றி அறியாதார் எவரும் இலர். அவர் கூறுவது முழுவதும் நமது இயக்கக் கொள்கைக்கு ஆதரவளிக்கக் கூடிய மொழிகளேயாகும். அவர் எழுதிய நூல்களைக் கற்றோர் அனைவரும் அவருடைய அபிப்பிராயங்களை...

கல்வி மந்திரி பிரசங்கம்

கல்வி மந்திரி பிரசங்கம்

  சென்ற 4-8-32ல் நடந்த சென்னைச் சர்வகலா சாலைப் பட்டமளிப்பு விழாவின் போது நமது மாகாண கல்வி மந்திரி திவான் பகதூர் எஸ். குமாரசாமி ரெட்டியார் அவர்கள் பட்டதாரிகளுக்குச் செய்தப் பிரசங்கம் மிகவும் சிறந்த தொன்றாகும். அவர் தற்காலக் கல்வியில் உள்ள குற்றங்களையும், கல்வியின் லட்சியம் இன்னதென்பதையும், கல்வி எம்முறையில் போதிக்கப்பட வேண்டு மென்பதையும், எத்தகைய கல்வி அவசியமென்பதையும், கற்றவர்கள் செய்ய வேண்டிய வேலையையும் தெள்ளத்தெளிய விளக்கிக் காட்டியிருக்கிறார். கல்வியானது உலக வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். வெறும் வித்தையை மாத்திரம் கற்றுக் கொடுப்பதனால் தேச மக்களின் துன்பத்தைப் போக்க முடியாது. ஆகையால் தொழில் கல்வியை வளர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்னும் அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார். அன்றியும் தற்காலத்தில் உயர்தரக் கல்விக்கு அதிகமாக செலவு செய்வதைக் காட்டிலும், ஆரம்பக் கல்வியின் பொருட்டு அதிக கவனம் செலுத்த வேண்டும்; ஆரம்பக்கல்வியின் மூலம் தேசமக்கள் எல்லோரையும் அறிவுடையராக்க முயல வேண்டும் என்னும் சிறந்த...

தமிழர் மகாநாடு

தமிழர் மகாநாடு

  திருச்சி ஜில்லா துறையூரில் சென்ற 6, 7-ம் தேதி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ்ப் புலவர் மகாநாடு, தமிழ் மாணவர் மகாநாடு, தமிழர் மகாநாடு ஆகிய மகாநாடுகள் கூடி முடிந்தன. இம்மகாநாடு சம்பந்தமான அறிக்கைகள் பத்திரிகைகளிலும், துண்டுப் பிரசுரங்களாகவும் வெளிவந்த காலத்தில் நாம் ஒரு வகையில் மகிழ்ச்சியடைந்ததுண்டு.  இதற்குக் காரணம் இம் மகாநாடு, தமிழர் சீர்திருத்தத்தையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் ஒருங்கே கருதி செல்வர்கள், புலவர்கள், மாணவர்கள், சீர்திருத்தக்காரர்கள், அரசியல்வாதிகள் முதலிய எல்லாத் தமிழர்களும் ஒன்று சேரும் மகாநாடு என்று கருதியதே யாகும். நாம் இவ்வாறு அபிப்பிராயப்பட்டது தவறல்ல என்பதற்கு இம் மகாநாட்டு  நிர்வாகிகளால் வெளியிடப்பட்டிருக்கும் 9-வது அறிக்கை ஒன்றே போதுமான சாட்சியாகும். அவ்வறிக்கையில் “மக்களுள் வேறுபாடு பிறப்பினால் இல்லை என்பதை உணர்ந்து ஏழை மக்களை நம்மைப் போல் மேன்மையடைவிக்கவும், சுதந்தர தாகங் கொண்டுள்ள நம்முடைய நாட்டிற்குக் கல்வியை அடிப் படையாகக் கொண்டாலன்றி அஸ்திவாரமில்லாத, வீடு போலாகுமாத லின், தாய்...

ஏழைகள் கண்ணீர்

ஏழைகள் கண்ணீர்

  தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகிப் பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களே யாவார்கள். அதிலும், தொழிலாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்று. ஒவ்வொரு யந்திரசாலைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களைக் குறைத்துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை யற்றவர்களாக வெளியேறுகின்றனர். நமது நாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும், அனேகமாக, எல்லோருமே தினச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், வாரச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், மாதச் சம்பளம் பெறுகின்றவர் களாயிருந்தாலும், அவர்கள் அந்தக் கூலியைக் கொண்டு ஜீவனஞ் செய்கின்றவர்கள் தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இதைத் தவிர அவர்களுக்கு வேறு பூஸ்திதியோ, ரொக்கப் பணமோ இல்லை. அனேகர் குடியிருக்கவும் சொந்தக் குடிசை இல்லாமல், குடிக்கூலிக்கு வாழ்ந்து வருபவர்கள். இத்தகைய நிலையில் உள்ளவர்களைத் திடீரென்று வேலையும் இல்லையென்று வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டால், அவர் களின் கதி என்னாவது என்று கேட்கின்றோம். எங்கும் பணப்பஞ்சம் மக்களை வாட்டுகிற காலத்தில் அவர்கள் தங்கள்...

ஸ்தல ஸ்தாபனச் சட்டம்

ஸ்தல ஸ்தாபனச் சட்டம்

  இப்பொழுதுள்ள “ஸ்தல ஸ்தாபனச் சட்டப்படி நகரசபைத் தலைவர்களோ, லோக்கல் போர்டுகளின் தலைவர்களோ ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் அவர்கள் மீது உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றவும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் பெரும்பான்மையோரால் நிறைவேற்றப்பட்டவுடன் தலைவர்கள் தங்கள் பதவியை இழந்து விடவும் இடமிருக்கிறது. “ஸ்தல ஸ்தாபனச்சட்ட”த்தில் இத்தகைய பிரிவு ஏற்படுத்தியிருப்பதை  யாரும் ஆட்சேபிக்க முடியாது. இது  ஸ்தல ஸ்தாபனங்களின் நிர்வாகம் ஊழலாகப் போய் விடாமல் திறமையாக நடைபெற வேண்டும் என்னும் நன்னோக்கத்துடன் அமைக்கப்பட்டதேயாகும்.  இப்பிரிவு இல்லாவிட்டால் தலைவர்கள் சிறிதும் பயமில்லாமல் தங்கள் அதிகாரங்களைச் சுய நலத்தின் பொருட்டு துஷ்பிரயோகம் செய்ய இடமேற்படும் என்பதில் ஐயமில்லை. இப்பிரிவு இருந்தால் “ஸ்தல ஸ்தாபன”த் தலைவர்கள் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டாவது நேர்மையான வழியில் நடந்து கொள்ள வேண்டும் என்று ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் இச்சட்டம் அமலுக்கு வந்த சுமார் இரண்டு வருஷங்களாக, பல நகர சபைகளிலும், லோக்கல் போர்டுகளிலும் உள்ள...

தேர்தல் ஜாக்கிரதை!

தேர்தல் ஜாக்கிரதை!

  நமது நாட்டில் பல ஆயிரக் கணக்கான வருஷங்களாக ஒரு சிறு கூட்டம், தேசத்தில் உள்ள பெரும்பாலான ஏழை மக்களை ஏமாற்றி வயிறு பிழைத்துக் கொண்டேயிருக்கிறது. அச்சிறு கூட்டமே நாட்டின் அரசியல் துறையில் செல்வாக்கு வைத்துக் கொண்டும், சமூகத் துறையில் தலைமை வகித்துக் கொண்டும் தங்கள் சுகபோக வாழ்வுக்கு எந்த வகையிலும் குறைவு வராமல் காப்பாற்றிக் கொண்டும் வருகிறது. தாழ்ந்த நிலையிலிருந்து துயரப் படும் மக்களில் எவரேனும் உயர்நிலையடைந்து வாழ்ந்திருக்கும் அச்சிறு கூட்டத்தாரின் சூழ்ச்சிகளை அறிந்து வெளிப்படுத்த ஆரம்பித்தார்களாயின் அப்போதே அவர்களை, அரசியல் துறையிலும் சமூகத்துறையிலும், தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை உபயோகித்துத் தலைதூக்க வொட்டாமல் செய்து கொண்டு வந்தார்கள். இது பண்டைக் கால முதல் நடைபெற்று வரும் மறைக்க முடியாத உண்மையாகும். பண்டைக் காலத்தில் இக் கூட்டத்தார் பாமர மக்களைப் பயமுறுத்தி அடிமைப் படுத்துவதற்கு உபயோகித்த ஆயுதங்கள், “கடவுள்” “வேதம்” “மதம்” “சடங்குகள்” “புராணங்கள்” “வருணாச்சிரமதருமங்கள்” “மோட்சம்” “நரகம்” “சுவர்க்கம்” “பாவம்”...

பெண்கள் அடிமை நீங்குமா?

பெண்கள் அடிமை நீங்குமா?

  இந்தியப் பெண்களுக்கு எத்தகைய கல்வியளிக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பலர் பலவாறான அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவைகளில் பிற்போக்குடையவர்களின் அபிப்பிராயங் களை இப்பொழுது எந்தப் பெண்களும் ஒப்புக் கொள்ளத் தயாரில்லை. முற்போக் குடையவர்களின் அபிப்பிராயங்களையே பெண்கள் வரவேற்கத் தயாரா யிருக்கிறார்கள். “இந்தியப் பெண்கள் இதுவரையிலும் இருந்தது போலவே தங்களுக் கென்று ஒரு வித அபிப்பிராயமும், சுதந்திரமும் இல்லாமல், “கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன்” என்று சொல்லுவது போல கணவனு டைய நன்மையை மாத்திரம் கருதி அடிமையாகவே இருந்து, பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டும், அவைகளை வளர்த்துக் கொண்டும் வாழ்வதே சிறந்தது;  இதுவே இந்தியப் பெண்களுக்கு வேண்டிய நாகரீகம்; இந்நாகரீகத்தை மீறினால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையின் உயர்வு கெட்டுப் போகும்; அவர்களுடைய பதிவிருதா தர்மம் அழிந்து போகும்; இதனால் இந்திய நாகரீகமே மூழ்கிவிடும்; ஆகையால் பெண்களுக்குக் குடும்பக் கல்வியும், மதக் கல்வியும் மாத்திரம் அளித்தால் போதும்” என்று பிற்போக் கான அபிப்பிராயமுடையவர்கள்...

வைதீகக் கோட்டையில்   சுயமரியாதைக் குண்டு

வைதீகக் கோட்டையில்   சுயமரியாதைக் குண்டு

  செட்டிநாட்டின் தலைநகரான காரைக்குடியில்  சென்ற 17 – 7 – 32ல் இராமநாதபுரம் ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாடு மிக்க விமரிசை யாக நடைபெற்றது. அம்மகாநாட்டின் தலைவர் பிரசங்கம், சென்ற வாரத்திய நமது பத்திரிகையில் வெளி வந்திருக்கின்றது. வரவேற்புத் தலைவர் பிரசங்க மும், மற்ற நிகழ்ச்சிகளும் இவ்விதழில் வேறோர் இடத்தில் வெளிவந்திருப் பதைக் காணலாம். செட்டி நாட்டில் நடைபெற்ற இம்மகாநாடு நமது இயக்கத்தின் வெற்றிக்கு ஒரு சிறந்த சின்னமாகும் என்று கூறியும், நினைத்தும் சந்தோஷப் படுவது சிறிதும் தவறாகாது. ஏனெனில், இன்று நமது நாட்டில் பார்ப்பனீ யத்திற்கு ஆதரவு அளித்து வருகின்ற மக்கள் நிறைந்த இடம் செட்டிநாடு என்பது உலகமறிந்த விஷயம். “வேதங்கள்” என்று  சொல்லப்படுகின்றவைகளிலும் இயற்கை நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தாததும், வருணாச்சிரம தருமத்திற்கு ஆதரவ ளிக்கக் கூடியவைகளுமான புராணங்களிலும் நம்பிக்கை வைத்துக் கொண் டும், அவைகளைப் பற்றி பிதற்றுகின்றவர்களின் வலையிற் சிக்கி ஏமாந்து கொண்டும் இருக்கின்ற மக்கள் செட்டி நாட்டில்தான்...

தாழ்த்தப்பட்டார் விடுதலை

தாழ்த்தப்பட்டார் விடுதலை

  இந்துக்கள் மாயவலை பொதுவாக உலகில் வாழும் ஜீவப் பிராணிகளெல்லாம் இன்பத்தையே அடைய விரும்புகின்றன. இது உலக சுபாவமாகும். இது போலவே அறிவில் சிறந்தவர்கள் என்று கருதப்படும் மனிதர்களும் இன்பத்தோடு வாழ விரும்புவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் மற்ற ஜீவப் பிராணி களுக்கும், மனிதர்களுக்கும் தாங்கள் சௌக்கிய மடையும் விஷயத்தில் ஒரு வித்தியாசம் மாத்திரம் உண்டு. மற்றய பிராணிகள் வேறுள்ள ஜீவன் களையெல்லாம் தங்களுக்கு அடிமையாக வைத்துக்கொண்டு, அவைகளின் உழைப்பால் தாங்கள் கஷ்டப்படாமல் சௌக்கியமாக ஜீவிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. ஒவ்வொரு ஜீவப் பிராணி வகையும் தாமே உழைத்து வருந்திச் சௌக்கியமடைகின்றன. ஆனால் மனிதன் மாத்திரம் பிற மனிதன் தமக்குக்கீழ் அடங்கி நடக்கும்படி செய்து, அவர்கள் உழைப்பைக் கொண்டு, தான் சிறிதும் கஷ்டப்படாமல் சுகம் அனுபவிக்க ஆசைப் படுகின்றான். இக் குணம் முற்காலத்தில் ஒரு மனிதனிடம் உற்பத்தியாகி, பின்பு அது பல மனிதர்களிடம் பரவி, கடைசியில் ஒரு கூட்டத்தினரிடம் நிலைத்து விட்டது...

ஏழைகளுக்கு நன்மையில்லை

ஏழைகளுக்கு நன்மையில்லை

  இக்காலத்தில் எங்கு பார்த்தாலும் பணமில்லாத காரணத்தால் மக்கள் படும் துன்பம் சொல்ல முடியாததாக இருக்கின்றது. இன்னார் கஷ்டப் படுகின்றார்கள்; இன்னார் கஷ்டப்படாமல் இருக்கிறார்கள் என்று சொல்லு வதற்கில்லை. ஏழை முதல் பணக்காரன் வரை ஆண்டி முதல் அரசன் வரை எல்லோரும் பொருளாதார நெருக்கடியால் இன்னது செய்வதென்று தோன்றாமல் திக்குமுக்காடுகின்றார்கள். நமது நாட்டு மக்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் பரம ஏழைகள் என்பது தெரிந்த விஷயம். இத்தகைய ஏழை மக்கள் உணவுக்கும், உடைக்கும், உறைவிடத்திற்கும், படுந் துன்பம் இவ்வளவு அவ்வளவு என்று யாராலும் குறித்துரைக்க முடியாது. இந்த நாட்டில் பிழைப்பில்லாமல் பெண்டு பிள்ளைகள், உற்றார் உறவினர், எல்லோ ரையும் விட்டு விட்டு கடல் கடந்து அன்னிய நாடு சென்று கூலி வேலை செய்யும் மக்களில் இந்தியரே அதிகமானவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படிப்பட்ட கூலிகளுக்குக் கூட அன்னிய நாடுகளிலும் பிழைப்பு இல்லாமல் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர்....

வெற்றிக்குறி

வெற்றிக்குறி

  திருச்சியில் உயர்திருவாளர் எம். டி. சோமசுந்திரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சீர்திருத்த திருமண நிகழ்ச்சியைப் பற்றிய செய்தி பிறிதோரிடம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நமதன்பர் சோமசுந்திரம் அவர்கள் சென்னை அரசாங்க அமைச்சர் கனம் பி. டி. ராஜன் அவர்களது சிறிய தந்தை யென்பதும், தொண்டை மண்டல முதலியார் என்று சொல்லப்படும் வகுப்பைச் சேர்ந்தவரென்பதும் நேயர்கள் அறிந்ததே. அன்னார் தலைமையில் புரோகிதம் ஒழிந்து சீர்திருத்தத் திருமணம் நடந்ததானது மேற்படி சமூகத்தில் ஒரு பெரும் புரட்சியை யுண்டாக்கி விட்டதென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த சமூகத்தார் தாங்கள் ஜாதியில் உயர்ந்தவர்கள் என்ற இறுமாப்புக் கொண்டிருப்பதோடு புரோகிதத்தையோ, வைதீக மதாச்சார சடங்குகளையோ எக்காரணம் கொண்டும் கைவிட ஒறுப்படாதவர்கள். அத்தகைய ஓர் “பெரிய” வகுப்பில் புரோகிதம் ஒழிந்த சீர்திருத்தத் திருமணம் நடந்ததென்றால், அது நமதியக்கத்திற்கு மகத்தான வெற்றி என்றே கூற வேண்டும். நமதியக்கக் கொள்கைகள் நாட்டில் எவ்வளவு மலிந்து வருகின்ற தென்பதோடு நமது கொள்கைகள் திட்டங்கள் யாவும் மக்களுக்கு...

மாகாண சுயாட்சி தான் சட்டமறுப்பால் பயனில்லை நமது நாட்டில் உள்ள ஆவேசங் கொண்ட தேசாபிமானிகள் கூட்டத்தில் பல மாதங்களாய், பூரண சுயேச்சைப் பேச்சும், குடியேற்ற நாட்டு ஆட்சிப் பேச்சும், ஐக்கிய ஆட்சிப் பேச்சும் நடைபெற்று வந்தன. இந்தியாவுக்கு எத்தகைய சீர்திருத்தம் வழங்கலாம் என்பதை விசாரித்து முடிவு செய்வதற்காக ஆங்கிலப் பாராளுமன்றத்தாரால் நியமிக்கப்பட்ட ‘சைமன் கமிஷ’னை காங்கிஸ்காரர்கள் பகிஷ்காரம் பண்ணினார்கள், “பூரண சுயேச்சையே இந்தியாவுக்கு வேண்டும்” என்று சொல்லி திரு. காந்தி அவர்களின் தலைமையில் ‘உப்பு சத்தியாக்கிரகம்’ ‘சட்ட மறுப்பு’ முதலிய வற்றை நடத்தி தேசத்தில் பெருங்குழப்பத்தையும், கிளர்ச்சியையும் உண்டாக் கினார்கள். இவ்வாறு சட்டமறுப்பு இயக்கம் பலமாக நடைபெற்ற காரணத்தால் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரும், இந்தியர்களிடம் தாராள மனது காட்டுவது போல், வட்ட மேஜை மகாநாடு ஒன்றை ஏற்படுத்தி இந்தியப் பிரதிநிதிகளை இங்கிலாந்திற்கு வரவழைத்து அரசியல் சீர்திருத்தம் சம்பந்தமாக விவாதிக்கச் செய்தார்கள். முதலில் நடந்த வட்ட மேஜை மகாநாட்டிற்கு காங்கிரஸ் பிரதிநிதி கள்  செல்லவில்லை....

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

  கியாதி              –              புகழ் சிட்சை             –              தண்டனை, பயிற்சி சிசு போஷண சாலை          –              குழந்தைகள் காப்பகம் சிலா சாசனம்            –              கல்வெட்டு பிர பாவம்      –              மேன்மை, கீர்த்தி விக்கினம்     –              இடையூறு, தீது