கொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பு
இந்த சினிமாக் காட்சி பார்ப்பதற்கு மிக அதிசயமாயும் ரம்மியமாயும் காணப்பட்டாலும், இதைப் பார்ப்பதனால் ஏற்படும் பயன் மூடநம்பிக்கையும் அடிமைத் தனமும் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், இந்த மூட நம்பிக்கையும், அடிமைத் தன்மையையும் சோம்பேரிகள் பயன்படுத்திக் கொண்டு ஏழைகளை வருத்தி செல்வம் பெருகிக்கொள்ள பயன்படுகின்ற தென்றும், இனி இப்படிப்பட்ட காட்சிகள் தடுக்கப்பட வேண்டுமென்றும், பகுத்தறிவும், சுதந்தரமும் ஏற்படக் கூடிய விஷயங்களையே நாடகமாகவோ, படக் காட்சியாகவோ காட்ட இந்த தியேட்டர் சொந்தக்காரர் முயற்சிக்க வேண்டுமென்றும், உண்மையான சுதந்திர, சமத்துவத் தேசங்களில் உள்ள காட்சிகள் அப்படித்தான் இருக்கின்ற தென்றும் சொன்னார்.
குறிப்பு : 21-10-1932 மாலை கொழும்பு கெயிட்டி திரையரங்கில் சில சிங்கள வாலிபர் களால் நடத்தப்பட்ட திரைப்படக் காட்சியைப் பார்த்தும் வரவேற்புப் பத்திரத்திற்கு பதில் அளித்தும் பேசியது.
குடி அரசு – சொற்பொழிவு – 13.11.1932