Category: குடிஅரசு 1925

ஒரே திட்டம் 0

ஒரே திட்டம்

காந்தியடிகள் சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தை அங்கீகரித்துவிட்டார் என்று கூறுவது உண்மைக்கு மாறுபட்டதாகும் என்று சென்ற வாரம் எழுதி னோம். சித்தகாங்கில் மகாத்மா கூறிய அருள்மொழிகள் நமது கூற்றை உறுதிப் படுத்துகின்றன. அவை பின்வருமாறு :- “போருக்கு என்றும் சளைக்காத ஒரு சாதியாரோடு நாம் சண்டை யிடுகிறோம். அந்த ஜாதியார் பணிந்துபோவதென்றால் இன்னதென்று அறியார்கள். இராஜதந்திர முறைகளைக் கையாண்டு நாம் எவ்வளவுதான் முயன்றாலும் அவர்களை நாம் இந்தியாவைவிட்டு ஓட்டிவிடமுடியாது. நமது வெற்றிக்குச் சாதனமாக நான் தேசத்தார் முன் வைத்திருப்பது ஒரே திட்டந்தான். அஃது இராட்டையேயாகும்.’’ அரசியல் கிளர்ச்சி முறைகளில் காந்தியடிகளுக்கு எள்ளளவும் நம்பிக்கையில்லையென்பது இதிலிருந்துதெள்ளிதின்விளங்குகின்றதன்றோ? குடி அரசு – துணைத் தலையங்கம் – 17.05.1925

அஞ்சுதல் ஒழிக 0

அஞ்சுதல் ஒழிக

அரசாங்க உத்தியோகஸ்தர்கள் கதர் அணிய அஞ்சுவதைப் பற்றி ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் “நெஞ்சு பொறுக்குதிலையே” என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ள அரிய கட்டுரையை மற்றொரு பத்தியில் பிரசுரித்திருக்கிறோம். மற்றவர்களைவிட உத்தியோகஸ்தர்களே இராட் டையை ஆதரிக்கப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ஏழை எளிய வர்கள் உள்படப் பொது ஜனங்கள் கொடுக்கும் வரிப்பணத்திலிருந்து தான் இவர்கள் ஊதியம் பெறுகின்றனர். ஆகவே, ஏழை எளியவர்களுக்கு உணவளித்துக் காக்க வல்லதான இராட்டையை ஆதரித்தல் இவர்கள் கடனன்றோ? ஸ்ரீமான் ஆச்சாரியார் எடுத்துக்காட்டுகின்ற வண்ணம் இவர்கள் கதரணிய பயப்படுபவதற்குச் சிறிதும் ஆதாரமில்லை. ஆதாரம் ஓரளவு இருப்பதாகவே வைத்துக்கொண்டாலும், ஆடை அணியும் விஷயத்தில்கூட நமது சுதந்திரத்தைப் பறிகொடுத்தல் பேதமையேயாகும். உத்தியோகஸ்தர்கள் அஞ்சி அஞ்சிச் சாவதொழிந்து தமது கடனாற்ற முன்வருவார்களாக. குடி அரசு – துணைத் தலையங்கம் – 17.05.1925

பூச்சாண்டி 0

பூச்சாண்டி

“பூச்சாண்டி வந்து பிடித்துக்கொள்வான்” என்றுகூறி அறியாத தாய்மார் குழந்தைகளைப் பயமுறுத்துவதுண்டு. அரசியல்திருத்தமென்னும் பூச்சாண்டி வரப்போவதாக நம்மையும் தற்போது அச்சுறுத்தி வருகிறார்கள். தாஸ் – பர்க்கென்ஹெட் சமிக்ஞைகளின் கருத்து இஃதேயென்று சிலர் ஊகிக்கின்றனர். அரைகுறைச் சீர்திருத்தத்தை அங்கீகரிக்க வேண்டாமென்று அன்னிபெசன்ட் அம்மையார் எச்சரிக்கை செய்கிறார். அரசியல் திருத்தம் அதிகமாக அளிக்கப் பட்டேயாகவேண்டுமென்றும், ஆனால் ஆங்கிலோ இந்தியரின் உரிமைகளைப் புறக்கணித்து விடக்கூடாதென்றும் கர்னல் கிட்னி கழறுகிறார். மன்னர் பெருமானே இவ்வாண்டினிறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்து விசேஷ உரிமைகள் வழங்கப்போகிறாரென்பது மற்றும் சிலரின் நம்பிக்கை. எம்மைப் பொறுத்தவரையில், இவர்களின் ஊகம் மெய்யாகி அரசியல் திருத்தம் வழங்கப்பட்டால் நாம் ஒரு சிறிதும் வியப்புறோம். வேற்றுமையும், தளர்ச்சியும் நாட்டில் நிலவி நிற்கும் இவ்வேளையில் சொற்ப சீர்திருத்தங்கள் வழங்கி நம்மைச் சரிப்படுத்தி விடலாம் என்று பிரிட்டிஷார் கருதுவது இயல்பே. ஆனால், அவைகளை ஏற்றுக்கொண்டு பாரத மக்கள் மீண்டுமொரு முறை ஏமாந்துபோவார்களா? குடி அரசு – துணைத் தலையங்கம் – 17.05.1925

கருங்கல்பாளையம் வாசகசாலை 0

கருங்கல்பாளையம் வாசகசாலை

ஈரோட்டின் ஒருபகுதியாகிய கருங்கல்பாளையத்தில் சென்ற சில காலமாக நடைபெற்றுவரும் வாசகசாலையின் ஒன்பதாவது ஆண்டு நிறைவிழா நேற்றயதினம் இனிது நடந்தேறியது. நமது அருந்தலைவர் ஸ்ரீமான் சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் இவ்வைபவத்தின் அவைத் தலைமையை ஏற்று நடத்தியது இவ்வாசக சாலையின் பாக்கியமென்றே கூறுவோம். ஸ்ரீமான் ஆச்சாரியாரின் தலைமையில் அறிஞர் இருவர் அரிய சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். கருங்கல்பாளையம் வாசிகள் நேற்றைய தினம் காட்டிய ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஆண்டு முழுதும் தொடர்ந்து காட்டினார்களாயின் இவ்வாசக சாலை அண்மையில் பெரிதும் முன்னேற்ற மடைந்து விடுமென்று திட்டமாகக் கூறலாம். இத்தகைய வாசக சாலைகளின் அவசியத்தைப்பற்றி நாம் விரிவாகக் கூறவேண்டுவதில்லை. உலகில் மேம்பாடுற்று விளங்கும் நாடுகளில் வாசக சாலைகள் மிகுதியும் வளர்ச்சிபெற்றிருக்கின்றன. லட்சக்கணக்கான புத்தகங்க ளையும், ஆயிரக்கணக்கான அங்கத்தினரையுங் கொண்ட வாசகசாலைகளை மேனாடுகளில் ஒவ்வொரு சிறு நகரத்திலும் காணலாம். இலவச புத்தகாலயங் களும், பத்திரிகைக் கூடங்களும் எண்ணிறந்தன. அரசாங்கத்தாரும், பொது ஜனங்களும் தாராளமாக நன்கொடைகள் வழங்கி இவ்வாசகசாலைகளைப் போற்றி வளர்த்து வருகின்றனர். ஆனால்...

“ நூல் வலை” 0

“ நூல் வலை”

மகாராஷ்டிரர்கள் “நூல்வலை”யில் வீழாமல் தப்ப உறுதி கொண்ட தன் பொருட்டு அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவதாக மகாராஷ்டிர மாகாண மகாநாட்டில் தலைமை வகித்த ஸ்ரீமான் தேசமுகர் கூறினாராம். சட்டசபை யென்னும் மாயவலையில் சிக்குண்டவர்களுக்கு மகாத்மா அருளிய “பக்தி வலை” யின் பெருமை எவ்வாறு புலனாகும்? ஆகவே இவ்வாறு இவர்களிக் கூத்தாடுவதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் சுயராஜ்யக் கட்சியினர் பெல்காம் ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைக்கும் நேர்மையைப் பற்றி மட்டும் இங்கு சிறிது ஆராய்வோம். சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தைப் பற்றி ஒத்துழையாதோர் சற்றே வாயைத் திறந்து “இம்” என்றால் போதும்; உடனே “குடி முழுகிற்று” “ஒற்றுமை குலைந்தது” என்று கூக்குரல் கிளம்புகிறது. ஆனால் மகாராஷ்டிர சுயராஜ்யக் கட்சியினரோ தங்கள் மாகாண மகாநாட் டில் நூல் சந்தா ஒழிய வேண்டுமென்று பகிரங்கமாகத் தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறார்கள். காந்தியடிகளைக் காங்கிரஸை விட்டு விரட்டி விடுவதே இவர்கள் நோக்கமென்பதை அக்கிராஸனர் தமது உரையில் தெளிவாகக் கூறிவிட்டார். லோகமான்யர் பிறந்த மகாராஷ்டிரம் இந்நிலைக்கோ...

இயந்திரமும் கை இராட்டினமும் 0

இயந்திரமும் கை இராட்டினமும்

நூல் நூற்கும் விஷயத்தில் விசை இயந்திரத்திற்கும் கை இராட்டினத் துக்குமுள்ள தார தம்மியத்தை நமது நாட்டாரில் சிலர் நன்கு அறிந்து கொள்ளவில்லையென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. இராட்டை சுற்றுவதினால் நமக்கு வேண்டிய அளவு நூல் உற்பத்தி செய்வது கஷ்ட மென்றும், போதுமான கூலியும் இதில் கிடைக்காதென்றும், இயந்திரத்தினால் அதிக நூல் உற்பத்தி செய்யக்கூடுமென்றும், கூலிக்காரர்களுக்கு அதிகக் கூலி கிடைப்பதுடன், முதலாளிகளுக்கும் நல்ல லாபம் வருகிறதென்றும் இவர்கள் சொல்லுகிறார்கள். நமது நாட்டின் கொடிய வறுமைக்கு முக்கிய காரணம் மேற்சொன்ன இயந்திரங்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இயந்திரப் பெருக்கினால் ஒருசில கூலிகளும் தனிப்பட்ட முதலாளிகள் சிலரும், பிறநாட்டு இயந்திர வியாபாரிகளுந்தான் பிழைக்க முடியுமே தவிர ஜனங்கள் பிழைக்க முடியாது. நமது ஏழை நாட்டில் வேலையில்லாமல் கஷ்டப்படுவோர் எத்தனையோ பேர் குறைந்த அளவு கூலியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இவர்களெல்லோருக்கும் இயந்திர ஆலைகளில் வேலை கொடுக்க முடியாது. ஒவ்வொரு தொழிலிலும் இம்மாதிரியே அநேகம் பேருடைய கூலியை இயந்திரங்கள் விழுங்கி விடுகின்றன....

ஸ்ரீமான் பி. தியாகராய செட்டியாரின் மரணம் 0

ஸ்ரீமான் பி. தியாகராய செட்டியாரின் மரணம்

பார்ப்பனர் அல்லாதார் கூட்டத்தின் தலைவராக விளங்கிவந்த ஸ்ரீமான் பி. தியாகராய செட்டியார் அவர்கள் 28.4 .25 ² இரவு 9.45 மணிக்கு இம்மண்ணுலகை நீத்து விண்ணுலகெய்திய செய்தியைக் கேள்வி யுற்று நாம் பெரிதும் வருந்துகின்றோம். இச்செய்தி தமிழ்மக்கள் அனைவரை யும் பெருந்துக்கத்தில் ஆழ்த்தும் என்பதில் ஐயமின்று. அவரது இடது கன்னத்தில் முளைத்த ஒரு சிறு கொப்புளமே அவரது ஆவியைக் கொள்ளை கொண்ட கூற்றுவன்! என்னே மனிதர்தம் வாழ்நாளின் நிலை! அரசியல் உலகில் எமக்கும் அப்பெரியாருக்கும் உள்ள வேற்றுமை வடதுருவம், தென் துருவம் எனின் குன்றக் கூறுதலேயாகும். எனினும், அப்பெரியாரின் அருங் குணங்களையும், அளவில்லா தேசபக்தியையும், ஆற்றலையும் நாம் போற்று கிறோம். ஒரு நாள் சென்னைக் கடற்கரையில் இவரது அரசியல் கொள்கை களை வெகு தீவிரமாகக் கண்டித்துப் பேசின ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களை மறுநாள் காலையில் சென்னைத் தெருவில் சந்தித்த போது; ஸ்ரீமான் முதலியாரை விளித்து “நண்பனே! நேற்று கடற்கரையில் நீ...

நமது பத்திரிகாலயத் திறப்பு விழா ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளின் சொற்பொழிவு 0

நமது பத்திரிகாலயத் திறப்பு விழா ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளின் சொற்பொழிவு

மெய்யன்பர்களே ! உலகில் நடைபெறும் நிகழ்ச்சி முறைகளைப் பலருக்குத் தெரிவிப்ப தற்கும், நல் உணர்ச்சியை மக்களிடையெழுப்புதற்கும் பத்திரிகைகள் இன்றியமையாதன; கிராமாந்திரங்களில் விஷயம் யாதொன்றும் தெரிந்து கொள்ள இயலாதவர்கள் பத்திரிகைகளினால் வியாபாரம், அரசாங்க முறை, தற்கால நிலை முதலியவைகளைத் தெரிந்து கொள்வார்கள்; பல பெரியார் களின் கருத்தை அறிந்து கொள்வார்கள். வியாபாரம், விவசாயம் முதலிய ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பத்திரிகையிருத்தல் அவசியமாகும். பல ஜனங்களுக்குப் பிரயோஜனமாகும். விஷயங்கள் பலவற்றிற்குப் பல பத்திரிகைகள் அவசியம். ஸ்ரீமான் நாயக்கரால் ஆரம்பிக்கப்படுகின்ற இக் ‘குடி அரசு’ பத்திரிகையின் தன்மையைக் கவனித்தால் மிகுந்த ஆராய்ச்சி யுடன் ஆரம்பிக்கப்போகும் ஒரு பத்திரிகையாகக் காணப்படுகின்றது. ஸ்ரீமான் நாயக்கரவர்கள் பேசியதிலிருந்து பல நாள் யோசித்து ஆரம்பிக்கப் படும் பத்திரிகை என்று தோன்றுகிறபடியால் முன்யோஜனையுடன் இறங்குப வர்கள் என்றும் பின் வாங்காது தைரியமாய் நிலைபெற்று நிற்பார்கள் என்பது உறுதி. மிகுந்த செல்வாக்கையுடைய ஸ்ரீமான் நாயக்கர் அவர்கள் நடத்தும் இப்பத்திரிகை உங்களுக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மிகுந்த...

நமது பத்திரிகாலயத் திறப்புவிழா 0

நமது பத்திரிகாலயத் திறப்புவிழா

சகோதரர்களே! நானும் ஸ்ரீமான் தங்கபெருமாள் பிள்ளை* அவர்களும் இப் பத்திரிகை நடத்துவதைப்பற்றி பலநாள் ஆழ்ந்து யோசித்து இப்பொழுதுதான் நடத்தத் துணிந்தோம். இப்பத்திரிகையை ஆரம்பிக்கும் நோக்கம்: தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் இன்னும் மற்ற விஷயங்களையும் ஜனங்களிடையுணர்த்துவதற்கேயாம். ஏனைய பத்திரிகைகள் பலவிருந்தும், அவைகள் தங்களது மனசாட்சிக்குத் தோன்றிய உண்மையான அபிப்பிராயங்களை வெளியிட அஞ்சுகின்றன. அவை களைப் போலல்லாமல் பொது ஜனங்களுக்கு விஷயங்களை உள்ளவற்றை உள்ளபடி தைரியமாகத் தெரிவிக்க வேண்டுமென்பதே எமது நோக்கம். இப் பத்திரிகாலயத்தைத் திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலைபெற்று மற்றப் பத்திரிகைகளிடமுள்ள குறை யாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன். குடி அரசு – சொற்பொழிவு – 02.05.1925

“குடி அரசு” 0

“குடி அரசு”

தாய்த்திரு நாட்டிற்கு யாம் இதுகாறும் இயற்றிவரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும் எம்மால் இயன்றளவு ஆற்றிவரல் வேண்டுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறும் பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம். ஒரு சிறு பத்திரிகையையேனும் செவ்வனே நடாத்தும் ஆற்றல் ஒரு சிறிதும் எமக்கில்லை என்பதை நன்குணர்வோம். பேரறிவும், பேராற்றலும், விரிந்த கல்வியும், பரந்த அனுபவமும் உடையவர்களே இத்தொண்டினை நடத்தற்குரியார். இவ்வருங் குணங்கள் எம்பால் இல்லாமல் இருந்தும் ‘என்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற பெரியார் வாக்கை கடை பிடித்தே ……………………. வலிமையால் இப்பத்திரிகை நீண்டகாலம் இத்தமிழுலகில் நிலவித் தேசத்தொண்டு ஆற்றி வரும் என்னும் நம்பிக்கையும், உறுதியும் பெரிதுமுடையோம். இஃதோர் பத்திரிகை யுகமாகும். நமது தமிழ் நாட்டில் நாளடைவில் பத்திரிகைகளின் தொகை பெருகிக்கொண்டே வருகிறது. இதுகாறும் எத் துணையோ பத்திரிகைகள் தோன்றின ; அவைகளுள் சிறிதுகாலம் நின்று மறைந்தொழிந்தன சில; நின்று நிலவுகின்றன பல. பத்திரிகைகள் பல...

குடி அரசு தோற்றம் கொண்ட காலம் 0

குடி அரசு தோற்றம் கொண்ட காலம்

1925 மே மாதம் டிசம்பர் வரை எட்டு மாதங்கள் அந்த இதழ் பதிவு செய்துள்ள பெரியாரின் எழுத்தும் பேச்சும் அடங்கிய தொகுப்புதான் உங்கள் கரங்களில் தவழ்கிறது. இதே போன்று ஒரு தொகுதியை 2003 ஆம் ஆண்டிலேயே பெரியார் திராவிடர் கழகம் சேலத்தில் நடத்திய தமிழர் வழி பாட்டுரிமை மாநாட்டில் வெளியிட்டதைக் குறிப்பிட விரும்புகிறோம். பெரியாரின் எழுத்து பேச்சுக்களை காலவரிசைப்படி தொகுத்து வெளிச் சத்துக்குக் கொண்டுவந்து விட வேண்டும் என்ற எமது பெரும் வேட்கையில் எழுந்த முதல் முயற்சி என்றே கூறலாம். தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் 1926 ஆம் ஆண்டு குடி அரசு பதிவுசெய்த பெரியாரின் எழுத்து, பேச்சுகளை இரண்டு தொகுதிகளாக வெளிக்கொண்டு வந்தோம். அதன் பிறகே மற்றொரு புதிய சிந்தனைக்கு வந்தோம். ஒவ்வொரு ஆண்டாக அவ்வப்போது தொகுதி களை வெளியிடுவதை விட ஒரு காலகட்டத்தை நிர்ணயித்து பெரியாரின் எழுத்துப் பேச்சுகளைத் தொகுத்து காலவரிசைப்படி ஒரே நேரத்தில் வெளி யிடலாம் என்பது...

முதற் பதிப்பின் வெளியீட்டாளர்  உரை 0

முதற் பதிப்பின் வெளியீட்டாளர் உரை

1925 மே திங்களில் பெரியார் ‘குடி அரசு’ இதழை தனது நண்பர் ஈரோடு வா.மு.தங்கப்பெருமாள்பிள்ளையையும் ஆசிரியராக உடன் இணைத்துக்கொண்டு தொடங்குகிறார். உடல் நலம் சீர்கெட்ட வா.மு.த 19.7.1925 இதழுடன் விலகிட பெரியார் மட்டுமே தொடர்ந்து நடத்துகிறார். 2.5.1925 இல் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளைக்கொண்டு ‘குடி அரசு’ இதழை வெளியிட்ட பெரியார், சோவியத் புரட்சி நாளான நவம்பர் 7 ஆம் நாளைத் தேர்ந்தெடுத்து 1928 இல், ‘ரிவோல்ட்’ ( சுநஎடிடவ ) என்ற ஆங்கில வார ஏட்டைத் தொடங்கி 55 இதழ்கள் வரையும் வெளி யிட்டுள்ளார். 20.11.1933 இல் ‘புரட்சி’ என்ற வார ஏட்டைத் தொடங்கி சிறிது காலம் நடத்தியுள்ளார். அதன்பின் 15.3.1934 இல்‘பகுத்தறிவு’ என்ற நாளேட் டைத் தொடங்கி இரண்டு மாத காலத்தில் நிறுத்தி, அதையே தொடர்ந்து வார ஏடாகவும் 1.5.1935 முதல் மாத ஏடாகவும் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் நடத்தியுள்ளார். 1.6.1935 இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும்...

வெளிவந்துள்ள இதழ்கள் 0

வெளிவந்துள்ள இதழ்கள்

(அ) குடி அரசு (வார இதழ்) மாலை – 1 02.05.1925 (மாலை 1 – மலர் 1 ) முதல் 25.04.1926 மாலை 1 – மலர் 48) முடிய 48 வாரம் மட்டுமே இதழ் வெளிவந்துள்ளது. 1. 04.10.1925 இல் வெளிவரவேண்டிய இதழ் அச்சுக்கூடம் மாற்றியக் காரணத்தால் வெளிவரவில்லை. 2. 21.02.1926 இல் வெளிவரவேண்டிய இதழ் அச்சு இயந்திரம் ஒடிந்து போனதால் வெளிவரவில்லை. 3. 04.04.1926 மற்றும் 11.04.1926 ஆகிய நாள்களில் வெளிவரவேண்டிய இதழ்கள் புதிய அச்சுக்கூடம் ஏற்பாடு செய்வதில் ஏற்பட்ட கால நீட்டத் தால் வெளிவரவில்லை. மாலை – 2 02.05.1926 (மாலை 2 – மலர் 1 ) முதல் 24.04.1927 (மாலை 2 -மலர் 52) முடிய 52 வாரமும் இதழ் வெளிவந்துள்ளது. மாலை – 3 01.05.1927 (மாலை 3 – மலர் 1 ) முதல் 22.04.1928 (மாலை 3- மலர்...

தலையங்கப் பக்கம் மாற்றங்கள் 0

தலையங்கப் பக்கம் மாற்றங்கள்

தொடக்கத்தில் தலையங்கங்கள் இதழ்களின் நடுப்பக்கத்தில் வெளிவந் துள்ளன. 10.02.1935 (மாலை 9 – மலர் 27) முதல் 09.06.1935 (மாலை 9 – மலர் 44) முடிய உள்ள குடி அரசு இதழ்களில் மூன்றாம் பக்கத்தில் தலையங்கங்கள் வெளி வந்துள்ளன. 02.05.1925 (மாலை 1 – மலர் 1) முதல் இதழ் தலையங்கப் பக்கத்தில் கை இராட்டினமும் பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க மிழிந்த பிறப்பாய் விடும். வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின் (குறள்) என்ற மூன்று குறட்பாக்களும் இடம் பெற்றுள்ளன. 23.08.1925 இதழி லிருந்து குறள்கள் எடுக்கப்பட்டு கை இராட்டினத்துடன் அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி அரும்பசி யெவற்கும் ஆற்றி மனத்துளே பேதா பேதம் வஞ்சம் பொய் களவு சூது சினத்தையும் தவிர்ப்பா யாகில் செய்தவம் வேறொன் றுண்டோ உனக்கிது உறுதியான உபதேசம் ஆகும் தானே. என்ற...

குடி அரசு : ஆசிரியர், பதிப்பாளர் மாற்றங்கள் 0

குடி அரசு : ஆசிரியர், பதிப்பாளர் மாற்றங்கள்

‘குடி அரசு’ முதல் இதழின் ஆசிரியர்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வா.மு.தங்கப்பெருமாள் பிள்ளை ஆகியோர்ஆவர். 07.06.1925 இதழில் வா.மு.தங்கப்பெருமாள் பிள்ளையின் ‘சாதி’ப் பட்டம் நீங்குகிறது. 26.07.1925 இதழிலிருந்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மட்டுமே ஆசிரியராகிறார். 25.12.1927 இதழிலிருந்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பெயரிலுள்ள ‘சாதி’ப்பட்டம் நீங்குகிறது. 1931 இல் பெரியார் உலகப்பயணம் மேற்கொண்டதால் 01.11.1931 முதல் சாமி. சிதம்பரனார் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்கிறார். பயணம் முடிந்து ஈரோடு திரும்பும் வரையில் அப்பொறுப்பில் இருக்கிறார். 29.11.1931 குடி அரசு முதல் 19.11.1933 குடி அரசு வரை அட்டையில் ஆசிரியர் பெயர் இல்லாமல் இதழ் வெளிவருகிறது. 19.11.1933 இதழோடு இதழ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் 13.01.1935 முதல் வெளிவரத் தொடங்குகிறது. அப்போது ஆசிரியர் ஈ.வெ.கிருஷ்ணசாமி. 25.12.1938 வரை அவரே ஆசிரியராக நீடிக்கிறார். முதல் இதழின் பதிப்பாளரான க. அப்பையா 20.09.1925 இதழ்வரை பதிப்பாளராக இருக்கிறார். 27.09.1925 முதல் ஈ.வெ.ராமசாமி நாயக்கரும் 18.04.1926 முதல் சா. ராமசாமி நாயக்கரும் பிறகு...

குடி அரசு : தோற்றத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் 0

குடி அரசு : தோற்றத்தில் நிகழ்ந்த மாற்றங்கள்

பெரும்புரட்சிக்கு வித்திட்ட பெரியாரின் ‘குடி அரசு’ தொடக்க காலங் களில் பச்சை நிற அட்டையுடனே வெளிவந்தது. எனவே பச்சை அட்டைக் ‘குடி அரசு’ என்ற செல்லப் பெயரையும் வாசகர்கள் சூட்டினர். ‘குடி அரசு’ ‘கொங்கு நாடு’ எனும் பெயர்களில் பெரியார் 19.01.1923 லேயே பத்திரிக் கைக்கான பதிவை செய்துள்ளார் என்றாலும் சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து 02.05.1925 அன்றுதான் முதல் இதழ் வெளிவந்தது. ( 2-5-25 சனிக்கிழமை. இனி ஞாயிறுதோறும் வெளிவரும் -அட்டை ) தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதழ் வெளிவருகிறது. ஆண்டின் முதல் இதழ், ஆசிரியர் பெயர் மாற்றம் பெற்றவை, மாற்றம் பெற்ற முகப்பு அட்டைகள் அந்தந்தத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ‘மாலை’ என்றும், இதழுக்கு ‘மலர்’ என்றும் பெயர் சூட்டப் பட்டிருக்கிறது. முதல் பக்க அட்டையில் பாரதியார் பாடல் வரியுடன் தான் இதழ் தொடங்கியது. “எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம்” “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற...

குடி அரசு : எதிர்நீச்சல் பயணம் 0

குடி அரசு : எதிர்நீச்சல் பயணம்

1922 ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, கோவை சிறையில் பெரியார் அடைக்கப்பட்டபோது, அவரும் அவருடன் சிறையில் உடனிருந்த ஈரோடு கருங்கல்பாளையம் வழக்கறிஞர் தங்கபெருமாள் பிள்ளையும் இணைந்து சிந்தித்த திட்டத்தின் விளைச்சல்தான் ‘ குடி அரசு.’ சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், 1923 ஆம் ஆண்டிலேயே ‘ குடி அரசை’ பதிவுசெய்த பெரியார், 02.05.1925 ஈரோட்டில் ஞானியார் அடிகளைக் கொண்டு வெளியிட்டார். ஞாயிறுதோறும் ஓரணா விலையில் வெளிவரத் தொடங்கியது குடி அரசு. முதலில் அட்டையில் பாரதத் தாய், இராட்டை சுற்றும் காந்தியார், நெசவு செய்யும் பெண், உழவு செய்யும் விவசாயி, சுத்தி யால் அடிக்கும் தொழிலாளி, மூட்டை சுமக்கும் பாட்டாளி படங்களோடும், ‘எல்லோரும் ஓர்குலம், எல்லோரும் ஓர் இனம்,’ ‘ சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாரதி பாடல்களோடும் குடி அரசு வெளிவரத் தொடங்கியது. தொடக்கக் காலங்களில் வார இதழின் 12 பக்கங்களையும் தாமே எழுதி வந்ததாய் பெரியார் குறிப்பிடுகிறார். ( குடி...

குடி அரசு : ஒரு பார்வை 0

குடி அரசு : ஒரு பார்வை

முதலில். . . . . . 1925 – 1938 காலகட்டம் வரை பெரியாரின் எழுத்துகளையும் பேச்சு களையும் குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு இதழ்களிலிருந்து தொகுத்திடும் பணியில் பின்பற்றிய நெறிமுறைகளை விளக்கிட விரும்புகிறோம். பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுகளையும் எந்த மாற்றமும் இன்றி வெளியிடுவதில் அல்லது அப்படியே வெளியிடுவதில் முழுமையான கவனமும் கவலையும் செலுத்தினோம். பெரியாரின் எழுத்துகள் குறித்து திருநெல்வேலியில் 28.11.1927 இல் நடைபெற்ற மாவட்ட சுயமரியாதை சங்க மாநாட்டில், மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றிய தமிழறிஞர் இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் பேசியதையும் அதற்கு பெரியார் தந்த பதிலையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம். “ குடி அரசுக்கு இன்றிருக்கும் யோக்கியதை உங்கட்க்குத் தெரியும். அதில் மக்கள் மனதை கவரத்தக்க அளவுகடந்த சக்தி இருப்பதற்குக் காரணம் அழகான ஆராய்ச்சியா? தமிழா? இல்லை. பின்? அவர் உள்ளக்கிடக்கிலுள்ளதை அப்படியே எடுத்துச் சொல்லுவது, அதுவும் மிகச்சாதாரண தமிழிலேயே தான் இருக்கிறது....

காலவரிசைத் தொகுப்பு : காலத்தின் தேவை 0

காலவரிசைத் தொகுப்பு : காலத்தின் தேவை

வரலாறு என்பது ஆட்சியாளர்களின் காலவரிசைப் பட்டியல் அல்ல; அதைவிட ஆழமானது. வரலாறு என்பது மனித வாழ்வு பற்றியது; மனித சமூகத்தின் வாழ்வியக்கம் பற்றியது; வேறு மொழியில் சொல்ல வேண்டு மானால், சமூக மாற்றங்களின் தொகுப்பே வரலாறு. வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கில் சமுதாயமானது புராதனப் பொதுவுடைமை, அடிமை உடைமை, நில பிரபுத்துவம், முதலாளித்துவம், சோஷலிசம் என்ற படிநிலைகளில் மாற்றம் பெறுவதாக சொல்லப்படுவது உண்டு. ஆனால், இந்தியச் சமுதாயமானது இப்படிப்பட்ட படி நிலைகளை கடந்து வந்தது என்பதை வரலாற்றுச் சான்றுகள் அடிப்படையில் நிர்ணயிக்க இயலாது என்று மார்க்ஸிய வரலாற்று ஆசிரியர் டி.டி.கோசாம்பி கூறுகிறார். இதைத்தான் காரல் மார்க்சும், “ இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் அம் சத்தில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் மிகத் தொல் பழங்காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டின் துவக்க காலம் வரை அதன் சமுதாய நிலை மாற்றமின்றி தேக்க நிலையில் இருந்து வந்துள்ளது” என்று கூறினார். ( கூhந க்ஷசவைiளா...

கூட்டுழைப்பின் விளைச்சல் 0

கூட்டுழைப்பின் விளைச்சல்

1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1949 நவம்பர் முடிய வெளிவந்த ‘குடி அரசு’ வார ஏடு தமிழக வரலாற்றுப் போக் கையும் அதனோடு தொடர்புள்ள இந்திய வரலாற்றுப் போக்கை யும் சமூகப்புரட்சிப் பார்வையில் புரிந்து கொள்ளவும்; பெரி யாரின் பொதுவாழ்வில் நிகழ்ந்த இயங்கியல் மாற்றங்களையும், கொள்கை, வேலைத்திட்ட வளர்ச்சிப் போக்குகளையும் வெளிப் படுத்தவுமான மிகச்சிறந்த ஆவணமாகும். பெரியார் காங்கிரசில் பணியாற்றிய கால கட்டம் நெடு கிலும் தொய்வின்றி வலியுறுத்தி வந்த வகுப்புரிமை கோரிக்கை கள் சூழ்ச்சியாக ஏமாற்றப்பட்டே வந்ததன் உச்சமாய் 1925 நவம்பர் 21, 22 நாள்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கட்சி விதிகளுக்கு இணங்க உரிய எண்ணிக்கை உறுப்பினர்களுக் கும் மேலதிகமாய் ஒப்புதல் பெற்று முன் வைத்த வகுப்புரிமைத் தீர்மானம் விவாதத்துக்குக்கூட எடுத்துக்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டதால் தன் நண்பர்களுடன் வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். சுயமரியாதை இயக்கம் சுடர்விட்டுப் பரவி காட்டாற்று வெள்ளம்போல் சமுதாயக் கசடுகளை அடித்துச் சிதைத்தவாறு முழு...