வெளிவந்துள்ள இதழ்கள்

(அ) குடி அரசு (வார இதழ்)

மாலை – 1

02.05.1925 (மாலை 1 – மலர் 1 ) முதல் 25.04.1926 மாலை 1 – மலர் 48) முடிய 48 வாரம் மட்டுமே இதழ் வெளிவந்துள்ளது.

1. 04.10.1925 இல் வெளிவரவேண்டிய இதழ் அச்சுக்கூடம் மாற்றியக் காரணத்தால் வெளிவரவில்லை.

2. 21.02.1926 இல் வெளிவரவேண்டிய இதழ் அச்சு இயந்திரம் ஒடிந்து போனதால் வெளிவரவில்லை.

3. 04.04.1926 மற்றும் 11.04.1926 ஆகிய நாள்களில் வெளிவரவேண்டிய இதழ்கள் புதிய அச்சுக்கூடம் ஏற்பாடு செய்வதில் ஏற்பட்ட கால நீட்டத் தால் வெளிவரவில்லை.

மாலை – 2

02.05.1926 (மாலை 2 – மலர் 1 ) முதல் 24.04.1927 (மாலை 2 -மலர் 52) முடிய 52 வாரமும் இதழ் வெளிவந்துள்ளது.

மாலை – 3

01.05.1927 (மாலை 3 – மலர் 1 ) முதல் 22.04.1928 (மாலை 3- மலர் 52) முடிய 52 வாரமும் இதழ் வெளிவந்துள்ளது.

மாலை – 4

29.04.1928 (மாலை 4 -மலர் 1 ) முதல் 28.04.1929 (மாலை 4-மலர் 53) முடிய 53 வாரமும் இதழ் வெளிவந்துள்ளது.

மாலை – 5

05.05.1929 (மாலை 5 – மலர் 1 ) முதல் 27.04.1930 ( மாலை 5 – மலர் 48 ) முடிய 48 வாரம் மட்டுமே இதழ் வெளிவந்துள்ளது.

1. 05.01.1930 மற்றும் 12.01.1930 ஆகிய நாள்களில் வெளிவரவேண்டிய இதழ்கள் ‘குடி அரசு அலுவலகம் சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு மாற்றப் பட்டதால்’ வெளிவரவில்லை.

2. 26.01.1930 இல் வெளிவரவேண்டிய இதழ் ‘குடி அரசு அலுவலகம் சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு மாற்றப்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு (டிக்ளரேஷன்) ஆணை பெறுவதில் ஏற்பட்ட கால நீட்டத்தால்’ வெளி வரவில்லை.

மாலை – 6

04.05.1930 (மாலை 6 – மலர் 1 ) முதல் 26.04.1931 (மாலை 6 -மலர் 52) முடிய 52 வாரமும் இதழ் வெளிவந்துள்ளது.

மாலை – 7

03.05.1931 (மாலை 7 – மலர் 1) முதல் 24.04.1932 (மாலை 7- மலர் 52) முடிய 52 வாரமும் இதழ் வெளிவந்துள்ளது.

மாலை – 8

01.05.1932 (மாலை 8 – மலர் 1 ) முதல் 23.04.1933 (மாலை 8 -மலர் 52 ) முடிய 52 வாரமும் இதழ் வெளிவந்துள்ளது.

மாலை – 9

30.04.1933 (மாலை 9 -மலர் 1) முதல் 11.08.1935 (மாலை 9 – மலர் 53) முடிய 53 வாரமும் இதழ் வெளிவந்துள்ளது.

1. 21.05.1933 முதல் 09.07.1933 முடிய எட்டு வாரம் திரு. ஈ.வெ.ரா. நாகம் மாள் மறைவுக்குப்பின் பதிவு (டிக்ளரேசன்) மாற்ற வேண்டியதில் ஏற்பட்ட கால நீட்டத்தால் இதழ்கள் வெளிவரவில்லை.

2. 19.11.1933 இதழோடு குடி அரசு நிறுத்தப்பட்டு 13.01.1935 இல் தான் குடி அரசு மீண்டும் வெளிவருகிறது.

மாலை – 10

‘குடி அரசு’ ஒன்பதாவதாண்டு மாலை (மாலை 9) க்குப்பின் பதினோ ராவதாண்டு பதினோராவது மாலையாக (மாலை 11) வெளிவருகிறது. பத்தாவது ஆண்டில் ‘குடி அரசு’ வெளிவராத நிலையில் அக்காலத்தில் புரட்சி, பகுத்தறிவு இதழ்கள் வெளிவந்ததை பத்தாவதாண்டு பத்தாவது மாலையாக வைத்துக் கொண்டு பதினொராவது மாலை வெளிவருகிறது.

மாலை – 11

18.08.1935 (மாலை 11 – மலர் 1) முதல் 09.08.1936 (மாலை 11 – மலர் 52) முடிய 52 வாரமும் இதழ் வெளிவருகிறது.

மாலை – 12

16.08.1936 (மாலை 12 – மலர் 1) முதல் 08.08.1937 (மாலை 12 – மலர் 52) முடிய 52 வாரமும் இதழ் வெளிவருகிறது.

மாலை – 13

15.08.1937 (மாலை 13 – மலர் 1) முதல் 14.08.1938 (மாலை 13 – மலர் 52) முடிய 52 வாரமும் இதழ் வெளிவருகிறது.

28.11.1937 இல் வெளிவரவேண்டிய இதழ் – விடுதலை நாளேட்டுக்கு புதிய அச்சு இயந்திரம் பூட்டப்படுவதால் வெளிவரவில்லை.

மாலை – 14

21.08.1938 (மாலை 14 – மலர் 1) முதல் 25.12.1938 (மாலை 14 – மலர் 19) முடிய 19 வாரமும் இதழ் வெளிவருகிறது.

(ஆ) புரட்சி (வார இதழ்)

மாலை – 1

26.11.1933 (மாலை 1 – மலர் 1) முதல் 17.06.1934 (மாலை 1 – மலர் 30) முடிய 30 வாரம் மட்டுமே இதழ் வெளிவருகிறது. 17.06.1934 இதழோடு ‘புரட்சி’ நின்றுவிடுகிறது.

(இ) பகுத்தறிவு (வார இதழ்)

மாலை – 1

26.08.1934 (மாலை 1 – மலர் 1) முதல் 06.01.1935 (மாலை 1 – மலர் 20) முடிய 20 வாரம் இதழ் வெளிவருகிறது. 06.01.1935 இதழோடு ‘பகுத்தறிவு’ நின்றுவிடுகிறது.

(ஈ) பகுத்தறிவு (மாத இதழ்)

1935 மே மாதம் முதல் தேதியிலிருந்து ‘பகுத்தறிவு’ மாத இதழாக வெளிவருகிறது.

1935 மே .1 (மலர் 1 – இதழ் 1) முதல் 1938 திசம்பர் 1 (மலர்4 – இதழ் 8) முடிய எல்லா மாதமும் 44 இதழ் வெளிவந்துள்ளது.

1925 – 1938 வெளிவந்துள்ள இதழ்கள்
மொத்தம்

குடி அரசு – 637
புரட்சி – 30
பகுத்தறிவு (வா) – 20
பகுத்தறிவு (மா) – 44
மொத்தம் – 731

கிடைக்கப்பெறாத இதழ்கள்

1. 10.02.1925 ( மாலை 1 – மலர் 2 ) இரண்டாவது இதழின் முக்கிய ஆறு பக்கங்கள் கிடைக்கவில்லை.

2. 28.03. 1926 ( மாலை 1 – மலர் 46 ) இதழின் இரண்டு பக்கம் மட்டுமே கிடைத்துள்ளது.

3. 27.04.1930 (மாலை – 5 மலர் 48 ) இதழின் முக்கிய இரண்டு பக்கங்கள் கிடைக்கவில்லை.

முடிவாய் . . . .

‘குடி அரசு’ தொடங்கி 83 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. பத்தா யிரத்துக்கும் அதிகமான ‘குடி அரசு’ இதழ்கள் வாரந்தோறும் வெளிவந்து தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கின. சமூக வரலாற்றில் விடி வெள்ளியாய் வந்து உதித்த அந்த வரலாற்றுப் பெட்டகத்தை காலவரிசைப்படி தொகுப்பதற்கு நான்கு தலைமுறை இடைவெளி தேவைப்பட்டுள்ளது. இந்தக் கனவு நிறைவேறுமா என்ற கவலையுடன் தமிழின உணர்வாளர்கள், பெரியாரியலாளர்கள் எழுப்பி வந்த கேள்விக்கு இப்போதுதான் விடை கிடைத்துள்ளது. எத்தனையோ தடைகள், முட்டுக்கட்டைகள், மிரட்டல்களைக் கடந்து பெரியார் திராவிடர் கழகம் களத்தில் இறங்கியது. குடி அரசு இதழ் களை தமிழகம் முழுதும் தேடத் தொடங்கியது. இடைவிடா முயற்சிக்குப் பின்னும் எல்லா இதழ்களும் கிடைக்கப்பெறவில்லையே என்ற வேதனை நமக்கு உண்டு. எவ்வளவோ முயற்சித்தும் கிடைக்க பெறாத மூன்று இதழ் களின் சில பக்கங்களைத் தவிர அனைத்து குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு இதழ்களிலிருந்தும் பெரியாரின் கருத்துக் கருவூலங்களை முழுமையாகத் திரட்டி தொகுத்து நூலாக்கி எதிர்கால இளம் தலைமுறையிடம் பெரியார் திராவிடர் கழகம் ஒப்படைத்து இவ் வரலாற்றுக் கடமையை ஆற்றியதில் பெரும் மனநிறைவு கொள்கிறது.

– தொகுப்புக்குழு

You may also like...

Leave a Reply