Author: admin

திவிக சென்னை மயிலை பகுதி தோழர்களின் களப்பணிகள் 21072017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மயிலாப்பூர் பகுதி தோழர்கள் இன்று காலை (21.07.2017) விசாலாட்சி தோட்டம், பல்லக்கு நகர் போன்ற பகுதிகளில் குடிதண்ணீர் வராத காரணத்தால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.அந்த பகுதி மக்களின் பிரச்சனையை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் கையொப்பம் வாங்கி மயிலாப்பூர் பகுதி தலைவர் தோழர்.இராவணன் அவர்களின் தலைமையில் அந்த பகுதியின் “சென்னை குடிநீர் வாரியம்” ஆய்வாளரை சந்தித்து தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வழிவகை செய்ய வேண்டி தோழர்கள் எடுத்துரைத்து மனுவை அளித்தனர். அதை தொடர்ந்து, மயிலாப்பூர் பகுதியில் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை பெற வரும் பொதுமக்களிடம் இடைதரகர்கள் பணம் பெறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், பொது மக்களுக்கு இடையூறான வேலையில் ஈடுபடும் நபர்களை தடுக்க கோரியும் பொது மக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அரசு அலுவலர்களே முறையாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியாளர்...

சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் 23072017

சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் ஆகஸ்ட் 06, 2017 முதல் ஆகஸ்ட் 12, 2017 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருக்கும் “சமூக நீதி பரப்புரை பயணத்திற்கான” கலந்துரையாடல் கூட்டம் 23.07.2017 மாலை 5 மணிக்கு…. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவகத்தில் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்)அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கிறது…. சென்னை மாவட்டத்தின் பகுதி பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்… திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

நீட் தேர்வை எதிர்ப்பது ஏன்? எதற்காக? எப்படி – கருத்தரங்கம் சென்னை 22072017

காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கலைஞரின் 94வது பிறந்தநாள் கருத்தரங்கம் இன்று 22.07.17 டி.ஜி.பி. திருமண மண்டபத்தில் (தாம்பரம்) மாலை 6.00 மணியளவில் தொடங்கியது. இதில் “மாட்டிறைச்சி உணவும், மனுதர்ம அரசியலும்” எனும் தலைப்பில் கம்பம் செல்வேந்திரன், தலைமை தேர்தல் பணிக்குழுச் செயலாளர் அவர்களும் “நீட் தேர்வை எதிர்ப்பது ஏன்? எதற்காக? எப்படி?” எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம் விடுதலை இராசேந்திரன் அவர்களும் பேசினார்கள். வாழ்த்துரை எஸ்.ஆர்.ராஜா சட்ட மன்ற உறுப்பினர் வழங்கினார்.

சமூக நீதி – சமத்துவ பரப்புரைப் பயண திட்ட கலந்துரையாடல்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் 2012 ஆகஸ்டு 12ஆம் நாள் தொடங்கப்பட்டது. அதையொட்டி கடந்த ஆண்டு ‘நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை’ என்ற தலைப்பில் தமிழகம் முழுதும் பரப்புரை இயக்கங்களை நடத்தி, ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆத்தூரில் பயண நிறைவு விழா மாநாடு போல் நடத்தப்பட்டது. அதேபோல இவ்வாண்டு ஜூலை 8ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை பரப்புரைப் பயணம் நடத்த முடிவெடுக்கப்பட்டு அதற்கான பயணத் திட்டங்களும் வடிவமைக்கப்பட்டன. “இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து, “சமூக நீதி – சமத்துவ பரப்புரைப் பயணம்” என்ற தலைப்பில் பயணம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. மேட்டூர், கோவை, மதுரை, சென்னை, மயிலாடுதுறை ஆகிய ஐந்து ஊர்களிலிருந்து பரப்புரைக் குழு ஆகஸ்டு 8ஆம் தேதி புறப்படும், ஆகஸ்டு 12இல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பயணம் நிறைவடைகிறது. திருச்செங்கோட்டில் நிறைவு விழா நிகழ்வு நடைபெறுகிறது. (பயணத் திட்டங்கள்,...

சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் கோவை அணி கலந்துரையாடல் திருப்பூர் 16072017

“இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து, “சமூக நீதி – சமத்துவ பரப்புரைப் பயணம்” என்ற தலைப்பில் தொடங்கும் நிகழ்வை ஒட்டி கோவை திருப்பூர் மாவட்ட கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 16072017 அன்று பிற்பகல் 3 மணிக்கு தோழர் துரைசாமி, மாநில பொருளாளர் அவர்களின் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் 35 தோழர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் சூலூர் பன்னிர்செல்வம், நிர்மல் மதி அவர்கள்  பயண ஏற்பாடுகளுக்கு தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர். 5 நாட்களிலும் 18 தோழர்கள் கலந்துகொள்வதாக உறுதியளித்தனர்.  

காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அந்தியூர் 20072017

ஈரோடு வடக்கு மாவட்டம் அந்தியூர் தவுட்டுபாளையத்தில் 20072017 அன்று காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்’ நிறைவுவிழா பொதுக்கூட்டம் திருச்செங்கோடு 12082017

ஆகஸ்ட் 12 திருச்செங்கோட்டில்… திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும், ‘சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்’ நிறைவுவிழா பொதுக்கூட்டம். சமூகநீதி காக்க தோழர்களின் பேராதவை எதிர்நோக்கி… -வைரவேல் மாரியப்பன் 97882-28962

கல்வி வள்ளல் காமராஜர் பிறந்தநாள் விழாக் கூட்டம் மணக்காட்டூர் 16072017

கல்வி வள்ளல் காமராஜர் பிறந்தநாள் விழாக் கூட்டம் திவிக ஈரோடு தெற்கு மாவட்டத்தின் சார்பாக மணக்காட்டூரில் 16072017 மாலை 6 : 30 மணியளவில் தொடங்கப்பட்டது. பெ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார் மாவட்டச் செயலாளர் கு.சண்முகப்பிரியன் முன்னிலை ஏற்க..சித்தோடு கமலக்கண்ணன் வரவேற்புரையாற்றினார். சண்முகப்பிரியன், வீரா கார்த்திக் ஆகியோரின் உரைக்குப் பின் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்ற பிரபாகரனின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. தோழர்கள் சித்தோடு யாழ் எழிலன், பிரபு, காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை விழாவில் பழ. கருப்பையா பேச்சு திராவிடர் இயக்கத்தின் பிள்ளை, காமராசர்

சென்னை விழாவில் பழ. கருப்பையா பேச்சு திராவிடர் இயக்கத்தின் பிள்ளை, காமராசர்

சென்னையில் ஜூலை 15ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய பழ. கருப்பையா, ‘காமராசர் – திராவிடர் இயக்கத்தின் பிள்ளை’ என்று கூறினார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவாக்கிய எழுச்சியே காமராசரை காங்கிரஸ் தலைவராகவும் தமிழக முதலமைச்சராகவும் உயர்த்தியது என்றும் அவர் கூறினார். அவரது உரை : காமராசர் பிறந்த நாள் விழாவை பெரியார் இயக்கங்கள் நடத்துவதுதான் மிகப் பொருத்தமானது. பெரியார் பெரிதும் மதித்த தலைவர் காமராசர். பெரியாரின் சமூகப் புரட்சி மகத்தானது. பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதே முக்கியம் என்று கருதிய பெரியார், அதற்காக இந்தியாவின் ‘விடுதலை’கூட தள்ளிப் போகலாம் என்று முடிவெடுத்தார். அவர் அந்த சூழ்நிலையில் எடுத்த முடிவு சரியானது. 1976ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலையை இந்திரா காந்தி அறிவித்து, அடிப்படை உரிமைகளையே பறித்தார். அப்போது காமராசர், “நாட்டைக் காப்போம்; ஜனநாயகத்தைக் காப்போம்” என்ற...

வரலாற்றுச் செய்திகளைப் பகிர்ந்த காமராசர் விழா

வரலாற்றுச் செய்திகளைப் பகிர்ந்த காமராசர் விழா

சென்னை இராயப்பேட்டை வி.எம்.சாலையில் காமராசர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாள் மாலை 5.30 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காமராசர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. விழாவையொட்டி காமராசர், பெரியார் படங்களும் அவர்களின் கருத்துகளோடு பதாகைகளாக வைக்கப்பட்டிருந்தன. “பள்ளிகளில் கடவுள் வாழ்த்துப் பாடுவதற்கு பதிலாக காமராசர் வாழ்த்துப் பாட வேண்டும்” என்ற பெரியாரின் கருத்து அனைவரையும் ஈர்த்தது. ‘விரட்டு பண்பாட்டுக் கலைக் குழு’வினரின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. காமராசர், அம்பேத்கர், பெரியார் மற்றும் ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாடல்கள், பறை இசை, இடஒதுக்கீட்டை வலியுறுத்தும் நாடகங்கள் என்று இரண்டரை மணி  நேரம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட செயலாளர் உமாபதி வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘காமராசரின் இன்றைய தேவை’ எனும் தலைப்பிலும், பழ.கருப்பையா ‘காமராசரின் சமூக நீதிப் புரட்சி’ எனும் தலைப்பிலும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘காமராசரும் பெரியாரும்’ எனும் தலைப்பிலும்...

தமிழில் திருமுறை பாட இலஞ்சம் கேட்கும் தில்லை தீட்சதர்கள்

தமிழில் திருமுறை பாட இலஞ்சம் கேட்கும் தில்லை தீட்சதர்கள்

சர்ச்சைகள் அடிக்கடி உருவாகும் இடம் சிதம்பரம் நடராஜர் கோயில். தேவாரம் திருவாசகம் ஏடுகளைப் பூட்டிவைத்துக் கொண்டு தர மறுத்தார்கள், நந்தனாருக்கு கோயிலுக்குள் நுழையத் தடை போட்டார்கள், ஆறுமுகசாமியை தேவாரம் பாட விடாமல் தடுத்தார்கள். இப்படி தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த தில்லையம்பதி இப்போது, ‘திருமுறைகளைப் பாடத் தடை’ என்ற புதுச் சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலின் மேலக்கோபுர வாசல். இந்த வழியாக கோயிலுக்குள் நுழையும் இடம் அருகே தான் திருமுறைகள் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப் படுகிறது. இவ்விடத்தில், தீட்சிதர்கள் அனுமதியுடன் தினமும் திருமுறை ஓதும் நிகழ்ச்சி கடந்த 2014 ஜனவரி 12இல் தொடங்கியது. தில்லை திருமுறை மன்றத்தால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வானது தினமும் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்று வந்தது. இந்த நிகழ்வில், திருமுறை ஒரு பதிகம் கூறி அதற்கான விளக்கமும் சொல்லப்படும். அப்படி இதுவரை கடந்த மூன்று ஆண்டுகளில் 9 திருமுறைகள் ஓதி...

தொட்டிப் பாலத்துக்கு காமராசர் பெயர் சூட்ட கழகம் கோரிக்கை

தொட்டிப் பாலத்துக்கு காமராசர் பெயர் சூட்ட கழகம் கோரிக்கை

திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம் சார்பாக கல்வி வள்ளல் காமராசர், சாதி ஒழிப்பு போராளி இரட்டை மலை சீனிவாசன் ஆகியோரின் பிறந்த நாள் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் பள்ளியாடி சந்திப்பில் 15-07-2017 சனிக்கிழமை மாலை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வே.சதா தலைமையில், பள்ளியாடி சி.இளங்கோ முன்னிலையில் கழகப் பெரியார் பிஞ்சு ஆர்மலின் கடவுள் மறுப்பு வாசகத்துடன் துவங்கியது. கழகத் தோழர் தக்கலை விஸ்ணு வரவேற்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் தமிழ் மதி, பெரியார் தொழிலாளர் கழக மாவட்டத் தலைவர் நீதி அரசர், தமிழ் நாடு அறிவியல் மன்ற மாவட்டத் தலைவர் மணிமேகலை,இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர், ஜெயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்புப் பேச்சாளராக மதிமுக மாநிலப் பேச்சாளர் அனல் கண்ணன் “காமராசரும் பெரியாரும்” என்றத் தலைப்பில் உரையாற்றினார். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் மஞ்சுகுமார், பெரியார் தொழிலாளர் கழக மாவட்டச் செயலாளார் ஜாண் மதி, முன்னாள் மாவட்டத் தலைவர் சூசையப்பா,...

திருச்செங்கோட்டில் கழக சார்பில் ‘கக்கூஸ்’ ஆவணப் படம் திரையீடு

திருச்செங்கோட்டில் கழக சார்பில் ‘கக்கூஸ்’ ஆவணப் படம் திரையீடு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக திருச்செங்கோடு பெரியார் மன்றத்தில் கடந்த வாரம் ஜீலை 2ஆம் தேதி, தோழர் திவ்யபாரதி இயக்கிய கக்கூஸ் ஆவணத் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல், நாமக்கல் மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி மற்றும் திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கழக பொறுப்பாளர்கள் மற்றம் தோழர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு முடிந்தவுடன் “நிமிர்வோம்” குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆவணப்படத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் 09.07.2017 அன்று திருச்செங்கோடு, கருவேப்பம்பட்டி, குதிரைப்பள்ளம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் திரையிடப்பட்டது. கருவேப்பம்பட்டி பகுதி  மணி இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார். பெரியார் முழக்கம் 20072017 இதழ்

விருத்தாசலம் ஒன்றியத்தில்  20 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

விருத்தாசலம் ஒன்றியத்தில் 20 தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

விருத்தாசலம் ஒன்றியம் கருவேப்பிலங்குறிச்சி அருகில் உள்ள பேரளியூர் கிராமத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் மிக சிறப்புடன் நடைபெற்றது. காலை 11.00 மணிக்கு துவங்கிய கூட்டத்துக்கு கடலூர் மாவட்ட தலைவர் நட. பாரதிதாசன் தலைமை தாங்கினார். ஆசிரியர் அறிவழகன் மற்றும் கோபால் இராமகிருட்டிணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முருகன்குடி ஆசிரியர் பழனிவேல் சிறப்புரை ஆற்றினார். இருபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கழகத்தில் புதிதாக இணைந்தனர். தோழர்கள் அறிமுகத்துக்குப் பின் ஆசிரியர் பழனிவேல் பெரியார் அம்பேத்கர் கொள்கைகளைப்பற்றியும் திராவிட இயக்கங்களின் போராட்டங்களைப்பற்றியும் இரண்டு மணி நேரம் சிறப்பாக உரையாற்றினார். முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . 1. ஆசிரியர் அறிவழகன் வழிகாட்டுதலின் பேரில் செயல்படுவது; பயிற்சி முகாம் நடத்திய பின் தலைமையின் பொறுப்பாளர்கள் அறிவிக்கப் படுவார்கள்;  2. விரைவில் பயிற்சி முகாம், அதைத் தொடர்ந்து பொதுக் கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது 3. கிராமப்புறங்களில் சாதி ஒழிப்பு மற்றும் பிரச்சார கூட்டங்கள்...

காமராசர் விழா நிகழ்வில் அமைதியாக கடந்து சென்ற “சாமி ஊர்வலம்”

காமராசர் விழா நிகழ்வில் அமைதியாக கடந்து சென்ற “சாமி ஊர்வலம்”

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் இரா. உமாபதி, வரவேற்புரையில் காமராசர் விழாவுக்கு பகுதி வாழ் வணிகர்கள் காட்டிய  பேராதரவையும் விழாவுக்கு கடந்த 10 நாள்களாக ஒவ்வொரு பகுதியாக கடைகளில் துண்டறிக்கை வழங்கி, சிறு சிறு தொகையாக நன்கொடை திரட்டிய கழகத் தோழர்களின் களப் பணியையும் சுட்டிக் காட்டி உரையாற்றினார். “இந்த விழா இவ்வளவு சிறப்புடன் நடைபெறுவதற்கு இப்பகுதியில் உள்ள வணிகர்கள் நன்கொடைகளை வழங்கினர். எங்களுடைய பெரியார் படிப்பகம் அருகில் அடுத்தடுத்து, நாகாத்தம்மன், விநாயகன் கோயில்களும், இராமலிங்கசாமி கோயிலும் இருக்கின்றன. கோயில் நிர்வாகிகளும் கோயிலுக்கு வரும் பக்தர் களும் எங்களிடம் நட்பு பாராட்டுகின்றனர். இந்தக் கோயில்களுக்கிடையே படிப்பகக் கரும் பலகையில் ஒவ்வொரு நாளும் நாங்கள் எழுதும் பெரியார் சிந்தனைகளைப் படிக்கிறார்கள். ஒரு  நாள் கோயிலுக்கு வந்த அம்மையார் ஒருவர், “இங்கே நீங்கள் எழுதும் கருத்துகளை ஒவ்வொரு நாளும் படிக்கிறேன். எனக்கு நியாயமாகவே தெரிகிறது. எனக்கு பெரியார் நூல்கள் வேண்டும்” என்று...

திருப்பூரில் எழுச்சியுடன் நடந்த காமராசர் விழா

திருப்பூரில் காவல்துறை ஒலி பெருக்கியை சரியாக இரவு 10 மணிக்கு துண்டித்தது. அதன் பிறகு ஒலிபெருக்கி இல்லாமலேயே கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசிய காட்சி திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய “பெருந் தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா – பொதுக் கூட்டம்” 16.07.2017 அன்று மாலை 5 மணியளவில் திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் தெற்கு பகுதி செயலாளர் மா இராமசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக பள்ளத்தூர் நாவலரசு கலைக் குழுவினர் சமூக நீதி பாடல்களை பாடி மக்களை எழுச்சியூட்டினர். அதன் தொடர்ச்சியாக,  திருப்பூர் மாவட்ட செயலாளர் நீதிராசன் மற்றும் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் “கல்விவள்ளல் காமராசரின் வரலாறு மற்றும் தற்கால நீட் தேர்வு சீரழிவு” பற்றி சிறப்பாக பேசினார். முகில்ராசு (திருப்பூர் மாவட்ட தலைவர்) பொதுக் கூட்டத்திற்கான தொடர் களப்பணியில் ஈடுபட்ட தோழர்களை பாராட்டி, பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரை யாற்ற வந்திருந்த பேச்சாளர்களை வரவேற்றும், பொதுக் கூட்டத்திற்காக உதவிய பகுதி மக்களுக்கு நன்றி கூறியும்...

‘பசுக் காவலர்கள்’ பதில் சொல்வார்களா?

‘பசுக் காவலர்கள்’ பதில் சொல்வார்களா?

பசுவதையைக் கண்காணிப்ப தாகக் கூறிக் கொண்டு, மதவெறி சக்திகள் வன்முறை வெறியாட்டம் போடுவது எல்லை மீறிப் போனதால், பிரதமர் மோடியே இதைக் கண்டிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி பிரதமர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ‘பசுவதைக் கண்காணிப் பாளர்கள்’ வன்முறையில் ஈடுபட் டால், மாநில அ ரசுகள் கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மோடி அறிவுறுத்தியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் இது குறித்த விவாதங்கள் புயலை உருவாக்கிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் மோடி இவ்வாறு கூறினாரா அல்லது நாட்டில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் கூறினாரா என்பது ஒரு பக்கம் இருந்தாலும் மதவெறி சக்திகள் எல்லை மீறி செயல்படுகிறார்கள் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. அதே நேரத்தில் பசுவின் சாணி, மூத்திரம் ஆகியவற்றின் மருத்துவ குணம் குறித்து விஞ்ஞானபூர்வமாக ஆராய 19 பேர் கொண்ட குழு ஒன்றை யும் மோடி ஆட்சி அமைத்திருக்கிறது. இதில்...

இப்படி ஒரு மூடத்தனம்; ‘சரசுவதி’ பேனாவாம்!

இப்படி ஒரு மூடத்தனம்; ‘சரசுவதி’ பேனாவாம்!

குஜராத் மாநிலம் பஞ்ச மகால் மாவட்டத்தில் கஸ்தாபஞ்சன் என்ற கோயிலின் அனுமன் பக்தராக பாபுஜி என்பவர் ஒரு விளம்பரத்தை வெளி யிட்டுள்ளார். “எங்கள் கோயிலில் சரஸ்வதி அனுமான் பூஜையில் வைத்து பூஜை செய்யப்பட்ட மேஜிக் பேனாவைப் பயன்படுத்தி தேர்வு எழுதினால் 8ஆம் வகுப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை தோல்வியே இருக்காது” என்கிறது அந்த விளம்பரம்.  ஒரு பேனாவின் விலை என்ன தெரியுமா? ரூ.1900/- இதையும் நம்பி பேனாவை வாங்க பெற்றோர்கள் கூட்டம் படை எடுத்துக் கொண்டிருக்கிறதாம். ‘சரஸ்வதியை வழிபட்டால் கல்விச் செல்வம் வந்து சேரும்’ என்று புராண காலத்தில் பார்ப்பனர்கள் மூடநம்பிக்கையை பரப்பினார்கள். சரஸ்வதிக்கு பூஜை போட்ட காலத்தில் ‘தற்குறிகள்’ நாடாகவே இருந்தது. இப்போது ‘அனுமன் பூஜை செய்த பேனா’ வந்திருக்கிறது. பெரியார் முழக்கம் 13072017 இதழ்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகைக்கு எதிர்ப்பு

ஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகைக்கு எதிர்ப்பு

மக்களைச் சமதர்மம் அடையச் செய்யும் இடஒதுக்கீட்டு முறையை ஒழிக்கத்துடிக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் குமரி மாவட்ட வருகையைக்  கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்புக்கொடி (08-07-2017 சனிக்கிழமை) காட்டச் சென்ற கழகத் தோழர் நீதி அரசர் அவர்களை காவல் துறை கைது செய்து பிணை வழங்காமல் 15 நாள் காவலில் வைத்தது. தற்போது நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களை மதத்தால் உசுப்பி சண்டைப் போட வைத்துவிட்டு அதில் குளிர் காயும் பார்ப்பன மத வெறியருக்கு பாதுகாப்பும், மக்களுக்காக போராடும் போராளிகளுக்குச் சிறையும் வழங்கும் காவல் துறைக்கு குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக கண்டனங்களைத் தெரிவிக்கிறோம். இடஒதுக்கீட்டு முறையால் பயன்பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே இடஒதுக்கீட்டை ஒழிக்கும் பார்ப்பனனுக்கு ஆதரவாகச் செயல்படு வது வருந்தத்தக்கது என்று குமரி மாவட்டக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெரியார் முழக்கம் 13072017 இதழ்

‘மஞ்சள்’ – யாருக்கு புனிதம்? யாருக்கு இழிவு?

‘மஞ்சள்’ – யாருக்கு புனிதம்? யாருக்கு இழிவு?

பொது வெளியில் மிக முக்கியமான, சொல்லப்போனால் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முதன்மையான ஒரு அரசியலைப் பேசுகிற படைப்பாக வந்திருக்கிறது ‘கட்டியக்காரி’ குழுவின் ‘மஞ்சள்’ நாடகம். மஞ்சள் மகிமை பற்றிய மயக்கங்கள் உள்ள சமுதாயத்தில், அது குறித்த உறுத்தல் உணர்வைக் கிளறிவிடுவதாக, வேறொரு மஞ்சள் வண்ணம் பற்றிய எண்ணத்தைப் பதிக்கிறது. அது, நம் ஒவ்வொருவர் உடலில் உற்பத்தியாகி, வெளியேற்றிய பின் அருவருக்கச் செய்கிற மலத்தின் வண்ணம். மலம் என்று எழுதி வாசிப்பதற்கே முகங்கள் சுழியக்கூடும், ஊராரின் மலத்தைத் தங்கள் கைகளால் அள்ளி அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிற, அரசாங்கம் அதெல்லாம் இல்லை என மறுத்துக்கொண்டிருக்கிற, ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையை பொதுச் சமூகம் யோசித்திருக்குமா? ஊரைத் தூய்மையாக வைத்துக் கொண்டிருக்கிற அவர்கள் ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிற நெடுங்காலத் துரோகத்தைச் சாடுகிறது நாடகம்.‘‘உங்களுக்கெல்லாம் மஞ்சள் புனிதமானது. எங்களுக்கு அது அருவருப்பானது,’’ என்பது முதல், நாடகத்தின் பல உரையாடல்களைக் கேட்கிறபோது, நடிகர்களின் உடல்மொழியைப் பார்க்கிறபோது கண்ணீர் முட்டுவதைத் தடுக்கவே முடியாது....

மாட்டிறைச்சித் தடையைக் கண்டித்து குமரி குலசேகரத்தில் ஆர்ப்பாட்டம்

மாட்டிறைச்சித் தடையைக் கண்டித்து குமரி குலசேகரத்தில் ஆர்ப்பாட்டம்

நடுவண் பி.ஜே.பி.அரசின் மாட்டிறைச்சித் தடையைக் கண்டித்து குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக குலசேகரம் சந்தை, காமராசர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் 21-06-2017புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது. மோ.விஸ்ணு வரவேற்புரை யாற்றினார். மணிமேகலை (தமிழ்நாடு அறிவியல் மன்றம், மாவட்டத் தலைவர்) முன்னிலை வகித்தார். தமிழ் மதி (திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர்), இளங்கோ, போஸ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசினர். நீதி அரசர் (பெரியார் தொழிலாளர் கழக மாவட்டத் தலைவர்) தலைமை தாங்கினார். தோழர்கள் இடையிடையே மத்திய, மாநில அரசுகளுக்கெதிரான கண்டன முழக்கங்களை முழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சூசையப்பா, சுனில் குமார், ஜாண் மதி, இரமேஸ் பாபு, இராஜேஸ் குமார், மஞ்சு குமார், ஆற்றூர் அருள் ராஜ், சமூக ஆர்வலர்கள், அசோக், சோனி மோன், சிக்கு, ஜோதி குமார், விஸ்ணு, மதியழகன், சாந்தா, மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்த ஜெயன், மார்க்சிஸ்ட் யுனிவர்சலை சார்ந்த இராதாகிருட்டிணன் ஆகியோர்...

பெரியாரியம் – பெண்ணுரிமை விவாதங்களுடன் ‘பெண் மானுடம்’ நூல் வெளியீட்டு விழா

பெரியாரியம் – பெண்ணுரிமை விவாதங்களுடன் ‘பெண் மானுடம்’ நூல் வெளியீட்டு விழா

பெரியார் சிந்தனைகள் – பெண்ணுரிமை குறித்த விவாதங் களின் நிகழ்வாக பேராசிரியர் சரசுவதி எழுதிய ‘பெண் மானுடம்’ நூல் வெளியீட்டு நிகழ்வு ஜூலை 9ஆம் தேதி மாலை சென்னை ‘கவிக்கோ’ அரங்கில் சிறப்புடன் நிகழ்ந்தது. பல்வேறு இதழ்களில் பேராசிரியர் சரசுவதி எழுதிய 32 கட்டுரைகளின் தொகுப்பாக வெளி வந்திருக்கும் இந்த நூலை, பரிசல் புத்தக நிலையம் வெளியிட்டிருக் கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் இலக்கியங்களாக்கிய எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் தலைமையில் நடந்த நிகழ்வில் மணிமேகலை சவுரிராசன் வரவேற்புரையாற்ற, கவிஞர் காளமேகம், ஓ. சுந்தரம், கீதா இராமகிருட்டிணன், கவிஞர் ஜெய பாஸ்கரன், ஆழி. செந்தில்நாதன், முனைவர் சுந்தரவள்ளி ஆகியோர் நூல் குறித்தும் பெண்ணுரிமை குறித்தும் ஆழமான கருத்துகளை முன் வைத்தனர். நிறுவனங்களின் வழியாகவும் குடும்ப அமைப்பின் வழி யாகவும் மறுக்கப்படும் பெண்ணுரிமை குறித்தும் சமூகத்திலும் குடும்பத்தி லும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன. நூலை தந்தை பெரியாருக்கு அர்ப்...

இஸ்லாமியப் பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள், கிருத்தவ பிரிட்டிஷாரை ஏன் எதிர்த்தார்கள்?

இஸ்லாமியப் பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள், கிருத்தவ பிரிட்டிஷாரை ஏன் எதிர்த்தார்கள்?

1200 ஆண்டுகள் ஆண்ட முகலாயப் பேரரசுகள், பெரும்பான்மை மக்களை அடிமைப்படுத்திய இந்து மனுதர்மக் கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை. ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்மச் சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள். அவை என்னவென்று பார்ப்போம்… பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனு தர்ம சட்டத்தை பிரிட்டிஷார்கள் ஏற்றுக்கொள்ளாமல், சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1773ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு சட்டத்தை எழுதத் தொடங்கியது. • சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை இருந்ததை, 1795ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது. • 1804இல் பெண் சிசு கொலை தடுப்புக்கான...

இந்தி பேசும் மாநிலங்களைவிட அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்கிறது தமிழ்நாடு

இந்தி பேசும் மாநிலங்களைவிட அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்கிறது தமிழ்நாடு

வெங்கைய நாயுடு இந்தி படிக்காத தமிழ்நாட்டை  இந்தி படிக்கும் மாநிலங் களோடு ஒப்பிட்டு பார்க்கச் சொன்னார் ஒப்பிட்டுப் பார்ப்போம். ஹிந்தியும் அவசியமில்லை, வெங்கைய நாயுடுவும் இந்தியாவிற்கு  அவசியமில்லை என்றே தோன்றியது. அரசாங்க புள்ளிவிவரங்களை சிறிது விரிவாக பார்ப்போம். உயர் கல்வி பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு – 38.2ரூ. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் – 17.6ரூ; மபி – 17.4ரூ; உபி – 16.8ரூ; ராஜஸ்தான் – 18.0ரூ; இந்திய சராசரி : 20.4ரூ. கல்வி நிலையங்களின் தரம் 2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி, முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது...

தலையங்கம் தமிழகத்தின் தனித்துவத்தைக் காப்போம்

தலையங்கம் தமிழகத்தின் தனித்துவத்தைக் காப்போம்

மதுரையில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பார்ப்பனிய கூத்து அரங்கேறியிருக்கிறது. கேசவ சேவா கேந்திரம் மற்றும் சிறீகிருஷ்ணா அறக்கட்டளை சார்பாக ‘பாத பூஜை’ – ‘பாரத மாதா பூஜை’ நடத்த பள்ளி நிர்வாகம் அனுமதித்துள்ளது. மாணவர் – ஆசிரியர்கள் கால்களைக் கழுவும் ‘பாத பூஜை’யும் ஆர்.எஸ்.எஸ். கொடியை கரங்களில் ஏந்தியபடி நிற்கும் ‘பாரத மாதா’ சிலை வணக்கமும் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ‘விசுவ இந்து பரிஷத்’ முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். பழனி அருகே மாடுகளை விற்பனைக்குக் கொண்டு சென்ற ஒரு வாகனத்தைத் தடுத்து நிறுத்திய மன்னார்குடியைச் சார்ந்த ஒரு பார்ப்பன ‘ஜீயர்’ காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார். மதவெறி சக்திகள் திரண்டு வன்முறையில் இறங்கவே பொது மக்கள் திரண்டு வன்முறைக் கும்பலை திருப்பித் தாக்கி விரட்டியடித்ததாக செய்திகள் வந்துள்ளன. பார்ப்பன ஜீயர் பாதுகாப்போடு ஊர் திரும்பி விட்டார். ஈஸ்டர் பண்டிகையின்போது...

பரப்புரைக் குழுக்கள் – பயணத் திட்டம்

பரப்புரைக் குழுக்கள் – பயணத் திட்டம்

கோவை : 8.8.2017 – கோவை, சூலூர், பல்லடம், திருப்பூர் (தங்கல்) 9.8.2017 – குன்னத்தூர், கெட்டிசெவியூர், கொளப்பலூர், கோபி (தங்கல்) 10.8.2017 – அத்தாணி, அந்தியூர், ஆப்பக்கூடல், பவானி (தங்கல்) 11.8.2017 – கவுந்தபாடி, காஞ்சிக்கோயில், திங்களூர், பெருந்துறை (தங்கல்) 12.8.2017 – வெள்ளோடு, மொடக்குறிச்சி, கொக்கராயன்பேட்டை, திருச்செங்கோடு (நிறைவு) ஒருங்கிணைப்பாளர்கள் : பன்னீர்செல்வம் (சூலூர்),  நிர்மல்குமார் (கோவை) மேட்டூர் : 8.8.2017 – மேட்டூர் தொடக்கம் : மேச்சேரி, தர்மபுரி, காவேரிப்பட்டிணம் (தங்கல்) 9.8.2017 – கிருட்டிணகிரி : பர்கூர், ஊத்தங்கரை(தங்கல்) 10.8.2017 – அரூர், வாழப்பாடி, சேலம் (தங்கல்) 11.8.2017 – ஓமலூர், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, இளம்பிள்ளை (தங்கல்) 12.8.2017 – ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், திருச்செங்கோடு (நிறைவு) ஒருங்கிணைப்பாளர்கள் : சி.கோவிந்தராசு (மேட்டூர்), கிருட்டிணன் (நங்கவள்ளி) மயிலாடுதுறை : 8.8.2017 – மயிலாடுதுறை, குத்தாலம், ஆடுதுறை, திருவிடைமருதூர், கும்பகோணம்  (தங்கல்) 9.8.2017 – நாச்சியார்கோயில், வலங்கைமான், நீடாமங்கலம்,...

இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் !  சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்  கழக தலைமைக் குழுவின் முடிவுகள்

இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் ! சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம் கழக தலைமைக் குழுவின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 2017 ஜூலை 10ஆம் தேதி காலை சென்னை கழகத் தலைமை நிலையத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம், மாலை 7 மணி வரை நீடித்தது. தமிழ்நாட்டில் குறுக்கு வழியில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காலூன்ற துடிக்கும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். மதவாத சக்திகளின் ஆபத்துகளை முறியடிப்பது குறித்தும் தமிழ்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் பரப்புரை இயக்கங்களை முன்னெடுப் பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாடு மதக்கலவரங்கள் இல்லாத சமூகநீதி கோட்பாடுகளைப் பின்பற்றி ஏனைய மாநிலங் களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருவதை சீர்குலைக்கும் சதிகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருவதை கவலையுடன் தலைமைக்குழு பரிசீலித்தது. குறிப்பாக கல்வித் துறையில் மோடியின் குறுக்கீடு, தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்கல்விக்கு உருவாக்கி வரும் தடைகள், நீட் தேர்வால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள...

சமஸ்கிருதப் பண்பாட்டின் எதிர்ப்பே தமிழர்களுக்கான திராவிடம் – த பரமசிவம் மலேசியா

தமிழ்மலர் நாளேட்டில் (02.07.2017) இனியும் வேண்டுமா திராவிடம்? என்ற தலைப்பில் எழுத்து வித்தகர் வே.விவேகானந்தன் எழுதியுள்ள கட்டுரை மாநாட்டின் நோக்கத்தை திசைதிருப்புவதாகவும் முரண்பட்ட வாதங்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்கிறது திராவிடத்தைத் தூக்கி நிறுத்துவதற்காகவே கூட்டப்பட்ட இந்த மாநாட்டுக்கு தமிழ் உணர்வாளர்கள் வரச்செய்வதற்காக தமிழ் உணர்வாளர்கள் மாநாடு என்று தலைப்பிட்டு ஏமாற்றுவேலை செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டுகிறது அக்கட்டுரை. மாநாட்டின் தலைப்பு இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன் என்பதாகும். மாநாட்டு சுவரொட்டி அழைப்பிதழ் அறிவிப்புகளும் விளம்பரங்களும் இதை வெளிப்படையாகவே பறைசாற்றுகின்றன. இதில் ஏமாற்றுவதற்கு என்ன இருக்கிறது? திராவிட மொழிக்குடும்பத்தை ஆராய்ந்த கால்டுவெல் – தேவநேயப் பாவாணர் போன்ற ஆய்வாளர்கள் திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ் என்பதையும், இந்தோ அய்ரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் முற்றிலும் வேறுபட்டது என்பதையும் தங்கள் ஆய்வுகள் வழியாக நிலைநாட்டினர். தமிழுக்கு மூலம் சமஸ்கிருதம் என அதுவரை ஆரியப் பார்ப்பனர்கள் கூறிவந்த கருத்தை ஆழமாக மறுத்தன இந்த...

மலேசியா கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களின் கலகம்: நடந்தது என்ன?

மலேசியாவில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் மார்க்ஸ் பங்கேற்ற கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களும் திராவிட எதிர்ப்பாளர்களும் கலகத்தை உருவாக்கி கூட்டங்களை தடுத்து நிறுத்த முயன்றனர். நடந்தது என்ன என்பதை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர் களோடு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற திராவிடர் விடுதலைக் கழக இணையதள பொறுப்பாளர் க. விஜய குமார் விளக்கு கிறார். உலகத் தமிழ் உணர்வாளர் மாநாட்டை யொட்டி மலேசியா முழுதும் 30க்கும் மேற்பட்ட பரப்புரைக் கூட்டங்களில் தமிழகத் திலிருந்து வந்த பெரியாரிய கருத்துரை யாளர்கள் பங்கேற்றுப் பேசினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் அ. மார்க்ஸ் இருவரும் கோலாலம்பூரை மய்யமாகக் கொண்ட சுற்றுப்புறங் களில் ஒவ்வொரு நாள் மாலையிலும் பேசினர். ஜூன் 26ஆம் தேதி பக்தாங் பெர்சுந்தைபட்டினம், 27- உலுசி யாங்கூர், 28-காப்பர், 29-கிளாங், 30-பெட்டாலிங் ஜெயா, ஜூலை-1 – டிங்களூர் தமிழ்ப் பள்ளி, 2-கோலாலம்பூர், து.சம்பந்தம் மண்டபம் ஆகிய இடங்களில் இந்த...

பார்ப்பனர்கள் பூர்வீகக் குடிகள் என்ற பொய்மை வாதம் உடைந்து சுக்கு நூறானது

பார்ப்பனர்கள் பூர்வீகக் குடிகள் என்ற பொய்மை வாதம் உடைந்து சுக்கு நூறானது

மரபணு சோதனை ஆய்வு வெளிப்படுத்தும் மகத்தான முடிவுகள் சிந்துவெளி நாகரிகத்தின் இறுதி காலத்தில் சமஸ்கிருதத்துடன் ஆரியம் நுழைந்தது ஆரியர்கள் இந்தியாவில் குடியேறினார்கள் என்பதை பார்ப்பனிய அறிஞர்கள், சங் பரிவாரங்கள் முதலானோர் எப்போதும் மறுத்தே வந்திருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக வரலாற்று அறிஞர்கள் என்ற போர்வையில் சில வரலாற்று அணுகுமுறை அற்றோர் இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் எழுதிய நூல்கள், வைத்த வாதங்கள் அனைத்தும் வரலாற்று அணுகுமுறையின் தொழில்நுட்ப சொற்களை தவறாக பயன்படுத்தி, குதர்க்கவாதங்களோடு ஆரிய குடியேற்றத்தை மறுத்தன. மாறாக ஆரியர்களே இங்குள்ள பூர்வகுடி மக்கள் என்பதை வலிந்தும் பொய்யாகவும் பேசினர். மோடியின் தலைமையில் நடக்கும் பா.ஜ.க ஆட்சியில் இதை அடிப்படையாக வைத்தே வரலாற்றை மாற்றுகிறார்கள். இன்னும் மோசமாக புராணப் புரட்டுக்களையே அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றெல்லாம் பேசுகின்றனர். நாட்டின் பிரதமரே உலக அறிஞர்கள் – அறிவியலாளர்கள் கூட்டத்தில் அதை வெட்கம் கெட்டு பேசுகிறார். இதை ஆரம்பத்திலிருந்தே வரலாற்று அறிஞர்கள் மறுத்து வந்திருக்கின்றனர். அதற்கு சமீபத்திய வரவாக இந்த...

தலையங்கம் ஆரியத் திமிரை அடித்து நொறுக்கும் மரபணு ஆய்வு

தலையங்கம் ஆரியத் திமிரை அடித்து நொறுக்கும் மரபணு ஆய்வு

இந்தியாவின் பூர்வீகக் குடிகள் ஆரியர்கள்தான் என்றும், அவர்கள் சிந்துவெளி நாகரிக மக்கள் மீது தங்கள் பண்பாட்டைத் திணித்தார்கள் என்பது கட்டுக்கதைகள் என்றும் பார்ப்பனர்களும் இந்துத்துவவாதிகளும் இதுவரை எழுதியும் பேசியும் வந்தனர். இதையே உறுதிப்படுத்தி மரபணு சோதனை முறையில் நடத்தப்பட்ட சில ஆய்வுகள் வந்த பிறகு, பார்ப்பன சக்திகள் மிகத் தீவிரமாக ‘மண்ணின் மைந்தர்கள் நாங்களே’ என்று மார்தட்ட ஆரம்பித்தனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கொள்கைகளை உருவாக்கிய கோல்வாக்கர், “ஆரியர்களே பூர்வக் குடிகள்; உலகம் தோன்றிய காலத்திலிருந்தே ஆரியர்களும் இருந்து வருகிறார்கள். ஆரியர்களைத் தவிர, ஏனையோர் மிலேச்சர்கள்; இரு கால் பிராணிகள்” என்ற கருத்தை முன் வைத்தார். இப்போது அந்த கருத்துகளின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கும் நவீன மரபணு ஆய்வு வெளி வந்துவிட்டது. ஹார்வார்டு மருத்துவக் கல்லூரியின் மரபணு ஆய்வாளர் பேராசிரியர் மார்டின் பி. ரிச்சர்ட் தலைமையிலான 16 விஞ்ஞானிகள், 16,224 மரபணுக்களை சேகரித்து ஆய்வு நடத்தி “BMC Evolutionary Biology” என்ற ஆய்வு...

இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன் மலேசியாவில் பெரியாரியலைப் பரப்பிய இரு நாள் எழுச்சி மாநாடு

இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன் என்ற முழக்கத்தை முன் வைத்து, உலகத் தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைப்பு மாநாடு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் 2017 ஜுன் 24, 25 நாட்களில், மகா மாரியம்மன் மண்டபத்தில் ஆழமான கருத்துரைகள் – விரிவான விவாதங்களுடன் சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்திலிருந்து சுமார் 10 கருத்துரையாளர்கள் பங்கேற்றனர். மலேசிய தமிழர் தன்மான இயக்கத் தலைவர் ‘எழுத்தாண்மை ஏந்தல்’ பெரியாரியலாளர் பெரு அ. தமிழ்மணி, இம்மாநாட்டுக்கான முழுமையான ஏற்பாடுகளை செய்திருந்தார். 2012ம் ஆண்டு பகுத்தறிவாளர் மாநாட்டையும் இதே போல் அவர் நடத்தினார். அதற்குப்பிறகு திருக்குறள் மாநாட்டையும் நடத்தினார். உலக பகுத்தறிவாளர் மாநாட்டின்போது பினாங்கு துறைமுக நகரில் பெரியாரின் சிலை நிறுவப் பட்டது குறிப்பிடத்தக்கது. ஜுன் 24ம் தேதி காலை 10 மணியளவில் மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடங்கின. பெரு.அ.தமிழ் மணி தலைமையேற்று மாநாட்டின் நோக்கங்களை விளக்கினார். தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் ஜாதிவெறி அமைப்புகள் மலேசியாவிலும் நுழைந்து ஜாதி மாநாடுகள்...

இராசிபுரத்தில் சேகுவேரா பிறந்த நாள் கூட்டம்

இராசிபுரம் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் ஜுன் 14 அன்று புதன்கிழமை இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே சேகுவேராவின் 89ஆவது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது விழாவின் தொடக்க நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர்.பகுத்தறிவு இசைக்குழுவின் பறைமுழக்கம் – இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை: இரா.பிடல் சேகுவேரா (நகரஅமைப்பாளர் தி.வி.க), முன்னிலை:  இரத்தினசாமி, பா. மலர் (தி.வி.க இராசிபுரம் மாநில அமைப்பு செயலாளர்), முத்துபாண்டி (மாவட்டபொருளாளர்), வரவேற்புரை இரா.சுமதி (தி.வி.க இராசிபுரம்), சிறப்புரை: கழகத் தலைவர் கொளத்தூர்மணி, பால். பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர்), நன்றியுரை: மு.சரவணன் (மாவட்டசெயலாளர்). கூட்டத்தின் முடிவில் வரவு-செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு இரவு உணவாக மாட்டுக்கறிபிரியாணி பரிமாறப்பட்டது. பெரியார் முழக்கம் 06072017 இதழ்

காமராசர் : சமூக நீதியின் சரித்திரம்: தமிழர்கள் எடுக்கும் நன்றிப் பெருவிழா

பச்சைத் தமிழர் என்று பெரியாரால் பாராட்டப் பட்டவர் காமராசர்; அவர் ஆட்சி காலத்தில் தான் இராஜகோபாலாச்சாரி (இராஜாஜி) கொண்டு வந்த அப்பன் தொழிலை மகனுக்குக் கல்வியாகக் கற்றுத்தர வேண்டும் என்ற குலக்கல்வி திட்டம் ஒழிந்தது; கிராமங்கள் தோறும் – ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பள்ளிக் கூடங் களும் இலவசக் கல்வியும் – மதிய உணவுத் திட்டமும் தீவிரமாக அமுல்படுத்தப் பட்டது; தொழில் வளர்ச்சி பெருகியது. காமராசர் அகில இந்திய கட்சியான காங்கிரசில் இருந்தாலும் ‘தமிழர்’ என்ற அடையாளத்துடனேயே பெரியார் கொள்கைகளை ஏற்று சமூக நீதிக்கான பாதையில் நடை போட்டார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உயர்ந்தும் பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவது மதச்சார்பற்ற ஆட்சிக்கு – கட்சிக்கு எதிரானாது என்று எதிர்த்தார்; அதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ் மதவெறி அமைப்புகள், நிர்வாண சாமியார்கள் புதுடில்லியில் அவரை வீட்டுக்குள்ளே வைத்து உயிருடன் எரிக்க திரண்டனர். உதவியாளர் உதவியுடன் உயிர் தப்பினார். காமராசர் பிறந்த நாளில்...

அயோத்திதாசர் நடத்திய ‘தமிழன்’ சில வரலாற்றுக் குறிப்புகள்

அயோத்திதாசர் நடத்திய ‘தமிழன்’ சில வரலாற்றுக் குறிப்புகள்

இந்திய இதழியல் வரலாற்றிலும், தமிழக அரசியல் வரலாற்றிலும் பண்டிதர் அயோத்தி தாசரின் ‘தமிழன்’ இதழுக்குத் தனித்த இடமுண்டு. இம்மண்ணுக்குப் பூர்வீக பவுத்தத்தையும், இம்மக்களுக்கு ‘தமிழன்’ எனும் அடையாளத்தையும், சாதிபேதமற்ற திராவிட அரசியல் கோட்பாட்டைக் கொடுத்ததில் ‘தமிழன்’ இதழுக்கு முக்கியப் பங்குண்டு. சென்னை இராயப்பேட்டையில் 19.6.1907 அன்று ‘ஒரு பைசாத் தமிழன்’ எனும் வார இதழைத் தொடங்கினார் அயோத்தி தாசர். 4 பக்கங்களில் அச்சான இவ்விதழ், அன்றைக்குக் காலணாவுக்கு விற்கப்பட்டது. ‘ஒடுக்கப்பட் டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார்’ எனத் தன் இதழுக்குப் பெயர்க் காரணம் கொடுத்தார் அயோத்தி தாசர். ஓராண்டுக்குப் பின் வாசகர்களின் வேண்டு கோளுக்கிணங்க, இதழின் பெயரில் இருந்த ‘ஒரு பைசா’ நீக்கப்பட்டு, ‘தமிழன்’ ஆனது. இதழ் அச்சடிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், கோலார் தங்கவயல் வாசகர்கள் அயோத்தி தாசருக்குப் புதியதாக அச்சு இயந்திரம்...

தலையங்கம் பேரறிவாளனுக்கு ஏன் பரோல் மறுக்க வேண்டும்?

தலையங்கம் பேரறிவாளனுக்கு ஏன் பரோல் மறுக்க வேண்டும்?

பேரறிவாளன் உடல்நலமில்லாத தனது தந்தையுடன் இருப்பதற்காக பரோலில் விடுதலை செய்யுமாறு கேட்ட கோரிக்கையை தமிழகத்தில் பா.ஜ.க. பினாமி ஆட்சியான எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மறுத்துள்ளது, வன்மையான கண்டனத்துக்கு உரியது. 30 நாள்கள் கழித்து வேலூர் சிறை அதிகாரி பரோல் அனுமதியை மறுத்துள்ளார். மத்திய அரசு கீழ் உள்ள சட்டத்தின்படி, பேரறிவாளன் தண்டிக்கப் பட்டுள்ளதால், மாநில அரசுக்குரிய பரோலில் விடுதலை செய்யும் உரிமை (தமிழ்நாடு தண்டனை நிறுத்தி வைப்புக்கான விதிகள் 1982) தமிழக அரசுக்கு இல்லை என்று சிறை அதிகாரி காரணம் கூறியிருக்கிறார். தண்டனைக் குறைப்பு அதிகாரமே மாநில அரசுக்கு இல்லை என்று இதுவரை கூறி வந்தது தமிழக அரசு. இப்போது பரோலில் விடுதலை செய்யும் உரிமையும் இல்லை என்று கூறியிருப்பது தமிழக ஆட்சியாளர்கள்  இறையாண்மையை நடுவண் அரசுக்கு விலைபேசி விற்று விட்டார்களா அல்லது அடகு வைத்து விட்டார்களா என்று கேட்கத் தோன்றுகிறது. பரோல் மறுப்புக்கு தமிழ்நாடு அரசு கூறும் இந்த வாதம்,...

தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய ஜாதி ஒழிப்பு நடைப்பயணத்துக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தோழர்களுடன் வரவேற்பு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல்ராஜ் தலைமையில், ”சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டத்தை நிறைவேற்று!” என்ற கோரிக்கையை முன்வைத்து 25 தோழர்களுடன் நடைபயணத்தை 9-6-2017 அன்று சேலத்தில் தொடங்கினர்.. பயணக்குழு வழியில் உள்ள கிராமங்களில் உரை, பாடல்கள், நாடகங்கள் வழியாக கோரிக்கையை விளக்கியவாறு 15 நாட்கள் பயணித்து சென்னையை அடைகின்றனர். 15-6-2017 அன்று மாலை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள அரசூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாவட்டக் கழகத் தலைவர் மதியழகன், கழகத் தோழர் மகாலிங்கம், கண்ணன் ஆகியோரோடு பயணக் குழுவினரை வரவேற்று அவர்களுடன் விழுப்புரம் வரை நடந்துசென்றனர். விழுப்புரத்தில் நடந்த பயணக் குழு வரவேற்புப் பொதுக் கூட்டத்தில், மாநில ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் தோழர் வாலண்டினா, பயணக்குழுத் தலைவர் தோழர் சாமுவேல்ராஜ், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் பயண நோக்கங்களை விளக்கி சிறப்புரையாற்றினர். பெரியார் முழக்கம் 29062017 இதழ்

குடியரசுத் தலைவர் பதவிக்கு தலித் வேட்பாளரை நிறுத்தும்  மோடி ஆட்சியில் தலித்  மக்களின் நிலை என்ன?

குடியரசுத் தலைவர் பதவிக்கு தலித் வேட்பாளரை நிறுத்தும் மோடி ஆட்சியில் தலித் மக்களின் நிலை என்ன?

குடியரசுத் தலைவர் பதவிக்கு ராம்நாத் கோவிந்த் என்ற தலித் வேட்பாளரை நிறுத்தி, தலித் ஆதரவு நாடகம் நடத்தும் மோடி ஆட்சியில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? அவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படு கிறதா? மோடி அரசாங்கம் மத்தியில் மூன்றாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் மிகவும் விளிம்பு நிலையில் உள்ள சமூகத்தினரான, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மதச்சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அவர்களுக்கான முன்னுரிமை என்பது ‘பசு’விற்குக் கொடுப்பதைவிட குறைவேயாகும். ஆனால் தலித்துகள்,  பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து நாட்டிலுள்ள ஊடகங்கள் வாயே திறப்பதில்லை. 2014 பொதுத்தேர்தலின்போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும் கடந்த மூன்றாண்டுகளில் அது அமல்படுத்தியுள்ளவற்றை யும் ஒப்பிட்டுப் பார்த்தாலே பாஜகவின் மோசமான ஆட்சியை நன்கு புரிந்துகொள்ள முடியும், ‘பாஜக மனிதர் மலத்தை மனிதர் சுமக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திட உறுதி பூண்டிருக்கிறது’ என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், இந்த உறுதிமொழிக்கும் எதார்த்த நிலைக்கும் தொடர்பே கிடையாது....

நார்வேயில் ‘முகத்திரை’க்கு தடை

நார்வேயில் ‘முகத்திரை’க்கு தடை

பெண்கள் முகத்தை முழுமையாக மூடும் இஸ்லாமிய பழக்கத்துக்கு கல்வி நிறுவனங்களில் நார்வே நாடு தடை விதித்துள்ளது. பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இது பொருந்தும். பெரும்பாலான கட்சிகள் இதை ஆதரித்துள்ளன. “மாணவர்களுக்குள் சுதந்திரமான உரையாடல்கள் நடக்க வேண்டும்; அதுவே சிறந்த கல்விக்கு வழி வகுக்கும்; அந்த சுதந்திர உரையாடல்களுக்கு தடையாக இருப்பது, இந்த முகத்திரை” என்று நார்வே கல்வி மற்றும் ஆய்வுத் துறை அமைச்சர் டர்பிஜோன்ரோ இஸ்சேஸன் தெரிவித்துள்ளார். பெரியார் முழக்கம் 29062017 இதழ்

மதவெறி ஆட்சியின் ஆபத்து: 65 அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் திறந்த கடிதம்

மதவெறி ஆட்சியின் ஆபத்து: 65 அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் திறந்த கடிதம்

1953-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் ஆன 91 வயது ஹர்மந்தர்சிங் உள்ளிட்ட ஓய்வு பெற்ற 65 மூத்த அதிகாரிகள் எழுதிய திறந்த மடல் இது. நாங்கள் அனைவரும் ஓய்வு பெற்ற அதிகாரிகள். அகில இந்திய மத்திய பணிகளில் பல்வேறு காலங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். ஒரு குழு என்ற முறையில் எங்களுக்கு எவ்வித அரசியல் சார்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விடுகிறோம். ஆனால் சார்பின்மை, நடுநிலை, அரசியலமைப்பின் மீது மாறாப்பற்று ஆகியவற்றை எங்கள் கொள்கையாகக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் கவலையளிக்கும் செயல்களே எங்களை எழுதத் தூண்டியது. இந்திய அரசியல் தளத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் ஏற்றுக் கொள்ள முடியாத தவறான நிகழ்வுகளைப் பற்றியதே இந்த திறந்த மடல். ஏன் இப்படி தவறாய் நடக்கிறது; குறிப்பாக இஸ்லாமியர்களை இலக்காகக் கொண்டு மதவெறுப்பு வளர்க்கப்படுவது அதிகரித்திருப்பதாய் தோன்றுகிறது. உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது மதவெறியைத் தூண்டும் வகையில் வெளிப்படையாக இடுகாட்டிற்கும், சுடுகாட்டிற்கும் எண்ணிக்கை ஒப்பிடப்பட்டு...

இராசிபுரத்தில் கழகம் சார்பில் சேகுவேரா பிறந்த நாள் பொதுக் கூட்டம்

14-6-2017 அன்று மாலை 6-00 மணியளவில், இராசிபுரம் புதிய பேருந்து நிலையத் திடலில், இராசிபுரம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  “சேகுவாராவின் 90ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நகரக் கழகத் தலைவர் பிடல் சேகுவேரா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.ஆர் பகுத்தறிவு இசைக்குழுவினரின் பகுத்தறிவு, ஜாதியொழிப்புப் பாடல்கள் பாடப்பட்டன. பொதுக்கூட்டத்தில் இர. சுமதி வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து இராசிபுரம் கழகத் தோழர் மலர், பள்ளிபாளையம் முத்துபாண்டி, கழக அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ஆகியோரைத் தொடர்ந்து கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். இறுதியாக உரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர்மணி, அர்ஜெண்டினாவில் பிறந்து, கியூப நாட்டு விடுதலைக்குப் போராடி, அந்நாடு விடுதலை அடைந்த பின்னர், அந்நாட்டுக் குடியுரிமை வழங்கப்பட்டு தலைமை அமைச்சராய், திட்ட அமைச்சராய், தேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னராய் நியமிக்கப்பட்ட பின்னரும், அண்டை நாடான பொலிவியாவில் நடைபெற்ற விடுதலைப் போரில் கலந்துகொள்ளச் சென்று அங்கு உயிர் நீத்ததின்...

வெளி வந்துவிட்டது!  ‘நிமிர்வோம்’ ஜூன் இதழ்

வெளி வந்துவிட்டது! ‘நிமிர்வோம்’ ஜூன் இதழ்

கலைஞரின் ‘பராசக்தி’ உருவாக்கிய புயல்! – எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (தமிழில் வீ.எம்.எஸ். சுப. குணராஜன்) நாகாலாந்து காட்டும் வழியில் தமிழ்நாட்டுக்கு தனிச் சட்டம் வரவேண்டும். மோடி ஆட்சியில் பறி போகும் உரிமைகள்! தமிழ்நாடு கண்ட இந்தி எதிர்ப்புக் களங்கள் – புலவர் செந்தாழை ந. கவுதமன் 10,000 கோடியில் – பா.ஜ.க.வுடன் ‘பதஞ்சலி’ நடத்தும் வணிகம். இராமன் சுவைத்த மாட்டிறைச்சி – செ.திவான் எழுதிய பசுவதை – ‘ஒரு வரலாற்றுப் பார்வை’ நூலிலிருந்து பசுவை தெய்வமாக்குவதை எதிர்த்தவர் – ஆர்.எஸ்.எஸ். குரு சாவர்க்கார் ஆதாரங்களுடன் அம்பலமாகிறது அதானி குழுமத்தின் கொள்ளைக்குத் துணைபோகும் மோடி ஆட்சி! நான் படித்த சில பக்கங்கள் மட்டும்… – சாக்கோட்டை இளங்கோவன் மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்…    தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி,  ‘நிமிர்வோம்’ மாத இதழ், 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி...

பசுக் காவலர்கள் எங்கே?

பசுக் காவலர்கள் எங்கே?

புதுடில்லியிலிருந்து பாரத் டோகரா என்ற வாசகர், ‘எக்னாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ வார ஏட்டுக்கு (ஜூன் 3, 2017) ‘பசு பாதுகாவலர்கள் எங்கே போனார்கள்?’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கடிதம்: “மே 22, 23 தேதிகளில் மத்திய பிரதேச மாநிலத்தில் புண்டல்காண்ட் பகுதியி லுள்ள திக்காமார்க் மாவட்டத்தில் 3 கிராமங்களுக்கும், உ.பி.யில் லித்பூர் மாவட்டத்திலுள்ள 3 கிராமங்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்ளச் சென்றிருந்தேன். கடந்த 3 மாதங்களாக வயல்களிலும் மாட்டுப் பண்ணைகளிலும் பசு மாடுகள் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக செத்துக் கொண்டே இருப்பதாக கிராம மக்கள் என்னிடம் தெரிவித்தனர். இப்படி 3 மாதங்களில் இறந்த மாடுகள், குறிப்பாக பசுக்கள், 500க்கும் அதிகம் என்று கிராம மக்கள் கூறினர். இதற்காக எந்த சிறப்பு நடவடிக்கைகளையும் பசு பாதுகாவலர்கள் எடுக்க முன்வர வில்லை. ஏரி, குளங்களும் வறண்டு போய் கிடப்பதாக மக்கள் கூறினார்கள். பசு பாதுகாப்பு என்ற பெயரில்...

ஜெயேந்திரன் மீது நடவடிக்கைக் கோரி புதுவையில் போராட்டம்

ஜெயேந்திரன் மீது நடவடிக்கைக் கோரி புதுவையில் போராட்டம்

6-6-2017 புதுச்சேரி – சங்கராச்சாரி வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி, புதுவை மாநில திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 6-6-2017 அன்று காலை 11 மணியளவில் மாநிலக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கண்டன ஆர்ப்பாட் டத்தில் பல்வேறு இயக்கங் களின் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். நிறைவுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி விசாரணையில் சாட்சியம் அளித்துவிட்டு பிறழ்சாட்சிகளாக மாறியவர்கள் மீது புதுவை அரசு ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும், சங்கராச்சாரியின் ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ பதிவாக உள்ளநிலையிலும், அவரது வாக்குமூலத்தின் வழியாக தெரியவந்து கைது செய்யப்பட்ட காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியமும் ஒப்புதல் வாக்குமூலம் அளித் திருந்தும் ஏன் மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை என்றும், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இக்கேள்விகளை எழுப்பியுள்ள நிலையிலேனும் மேல்முறை யீட்டுக்கோ, மீள்விசாரணைக்கோ உடனே நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாழ 200 பேர் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம்...

அரசுகள் ஆதரவுடன் பசுப் பாதுகாப்புப் படை நடத்தும் கொலை வெறித் தாக்குதல்கள்

அரசுகள் ஆதரவுடன் பசுப் பாதுகாப்புப் படை நடத்தும் கொலை வெறித் தாக்குதல்கள்

பசு பாதுகாப்புக் குழு என்ற பெயரில் சமூக விரோதிகள் அப்பாவி மக்கள் மீது நடத்திய வன்முறைகளின் தொகுப்பு. கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பரில், உத்தர பிரதேச மாநிலம் தாத்ரி என்ற ஊரில், வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் பசு மாமிசம் வைத்திருந்தார் என்று கூறி முகமது அக்லக் என்பவரை வீட்டிலிருந்து இழுத்து வந்து தெருவில் அடித்தே கொன்றது இந்து மதவெறி குண்டர் படை. பின்னர் நடந்த விசாரணையில் அக்லக் வீட்டிலிருந்தது மாட்டுக் கறி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டது. 2015 அக்டோபர் 9-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் செத்த மாடுகளை எடுத்துச் சென்ற லாரிகளை வழிமறித்த இந்துமத வெறிக் கூட்டம் ஒன்று, லாரி ஓட்டுநர் ஜாகித் அகமது மற்றும் அவருடன் வந்த இன்னொரு இஸ்லாமிய இளைஞரையும் கொடூரமாக தாக்கியது. இதில் ஜாகித் அகமது பத்து நாட்களுக்குப் பின்னர் இறந்து போனார். இத்தாக்குதல் சம்பவம் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, போராட்டங்கள் வெடித்தன....

என்.டி.டி டி.வியை முடக்கத் துடிக்கிறது, மோடி ஆட்சி

என்.டி.டி டி.வியை முடக்கத் துடிக்கிறது, மோடி ஆட்சி

தலைசிறந்த பத்திரிகையாளராக மதிக்கப்படும் பிரணாய்ராய் நடத்திவரும் என்.டி.டி டி.வி. என்ற தனியார் தொலைக் காட்சியை முடக்கிடும் முயற்சிகளில் மோடி ஆட்சி இறங்கியிருக்கிறது. அய்.சி.அய்.சி.அய். எனும் தனியார் வங்கியிடம் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான என்.டி.டி. டி.வி. வாங்கிய கடனை முழுமையாக திருப்பி செலுத்தவில்லை என்று சி.பி.அய்., என்.டி.டி. டி.வி. மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது. என்.டி.டி. டி.வி. கடனாக பெற்றது 375 கோடி. திருப்பி செலுத்த வேண்டிய தொகை 48 கோடி. அந்தத் தனியார் வங்கி புகார் ஏதும் தராத நிலையில் சி.பி.அய். இதில் தலையிட்டு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறது. மோடி ஆட்சியை தொடர்ந்து இந்த தொலைக்காட்சி அம்பலப்படுத்தி வருவதே இதற்குக் காரணம். அண்மையில் இறைச்சி விற்பனைக்கு மோடி ஆட்சி தடை விதித்தது குறித்த ஒரு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித்பத்ரா என்பவர் எதிர்த்துப் பேசுவோரை பேசவிடாமல் நிகழ்ச்சியை சீர்குலைத்ததோடு அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக...

கோட்டாரில் கழகம் எடுத்த பாரதிதாசன் விழா

கோட்டாரில் கழகம் எடுத்த பாரதிதாசன் விழா

குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு கோட்டார் மணிமேகலை இல்லத்தில் சூசையப்பா தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் மணிமேகலை வரவேற்புரையாற்றினார் நீதிஅரசர், தமிழ் மதி, இளங்கோ, சுனில்குமார், வின்சென்ட், மணிமேகலை ஆகியோர் பாவேந்தர் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தனர். சிறப்பு அழைப்பாளராக ஒளிவெள்ளம் ஆசிரியர் பிதலிஸ் வாழ்த்திப் பேசினர். மாணவிகள் ரித்திகா, மோனிகா, ஆசிகா ஆகியோர் பாரதிதாசன் கவிதைகளை ஒப்புவித்தனர். அவர்களுக்கு கழகம் சார்பாக பெரியாரின் உயர் எண்ணங்கள் என்ற புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. சத்தியராணி நன்றிகூற கூட்டம் முடிவுற்றது. பின்பு கோட்டார் சந்திப்பில் பாவேந்தர் பாரதிதாசன் படத்தின் முன்பு கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரியார் முழக்கம் 29062017 இதழ்