Author: admin

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள்

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள்

தீர்மானம் எண் : 1 தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 75 விழுக்காடு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் ! தமிழ்நாட்டில் பல இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நிலையில், மத்திய அரசு பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட நாட்டுக்காரர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளமே அழிந்துபோகும் ஆபத்தை நாம் சந்திக்க வேண்டி வந்துவிடும். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை அழிப்பது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையே வடநாட்டு பண்பாட்டில் மூழ்கச் செய்து விடும். இந்த பேராபத்தைத் தடுக்க, மகாராஷ்டிரா ஆந்திரா இராஜஸ்தான் மாநில அரசுகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் குறைந்தது 75 விழுக்காட்டு வேலைவாய்ப்புகளை – தனியார் தொழில் நிறுவனங்களிலும், உற்பத்தி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதுவே தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வாக...

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு !

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு !

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு ! 20.09.2019 வெள்ளிக்கிழமை ஈரோடு,பள்ளிபாளையம்,நேரு திடலில் மாநாடு நடைபெற்றது எங்கள் தலைமுறையை வாழவிடு ! தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே ! எனும் முழக்கத்துடன் தமிழ்நாட்டின் 5 முனைகளில் இருந்து 2 கட்டங்களாக மக்களை சந்தித்த பரப்புரை பயண குழு தோழர்கள் பறிக்கப்ப்படும் தமிழர்களின் உரிமைகள் குறித்து பரப்புரை செய்து அதன் நிறைவு விழா மாநாடாக இம்மாநாடு நடைபெற்றது. உரிமை முழக்க பாடல்களுடன் துவங்கியது மாநாடு. சிறப்பான வீதி நாடகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றன.அடுத்ததாக பரப்புரை பயண குழு தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கழக நிர்வாகிகள் உரைகளை அடுத்து கழகத்தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநாட்டில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

லீலாவதி-பெரியார் யுவராஜ் ஜாதி – தாலி – சடங்கு மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா !

லீலாவதி-பெரியார் யுவராஜ் ஜாதி – தாலி – சடங்கு மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா !

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாடுதுறை, சோழம்பேட்டை, கே.ஜி.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விணையேற்பு விழாவில் இருவீட்டார், கழகத்தின் முன்னணி நிர்வாக்கிகள், தோழர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழங்கப்பட்டது.

ஒரே சத்தம்….? ஆரூர் புதியவன் – தீக்கதிர் வண்ணக்கதிர்

ஒரே… ஒரே.. என்றாக்குவதே ஒரே லட்சியம் என்றிருப்பவரைச் சுற்றி ஒரே மாதிரி சிந்திப்போரே ஒரே கூட்டமாய் இருந்தனர் அங்கு ஒரே கூச்சல்… ஒரு நாடு ஒரே மதம் என்றார் ஒரு நாடு ஒரே மொழி என்றார் ஒரு நாடு ஒரே பண்பாடு என்றார் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு என்றார் ஒரு நாடு ஒரே தேர்தல் என்றார் ஒரு நாடு ஒரே ஆட்சி என்றார் ஒரு நாடு ஒரே பதவி என்றார் ஒரு நாடு ஒரே தட்பவெப்ப நிலை என்றார்… கூட்டம் ஆம்… ஆம்… ராம்… ராம்… என்று கூச்சல் போட்டது… வேறெதையெல்லாம் ‘ஒரே’ ஆக்கலாம் என்ற விளம்பினார் விளம்பர நாயகர்…! கிளம்பின ‘ஒரே’ குறித்த வெவ்வேறு யோசனைகள்…! பிரபோ…? “வெவ்வேறு நாள்களில் குழந்தைகள் பிறப்பது வேற்றுமையை வளர்க்கும்… எனவே ஒரு நாடு ஒரே பிறந்தநாள்” என அறிவிக்கலாம்… என்றார் வினயமாய் ஒருவர். ஆவேசமாய் எழுந்த அடுத்த அறிவாளி “ஒரு...

கீதையின் வஞ்சகப் பின்னணி (2) ஒழுக்க நெறியை கீதை ஏன் வளர்க்கவில்லை?

பிரேம் நாத்பசாஸ் ஆங்கிலத்தில் எழுதிய நூலை – தமிழில் ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ எனும் தலைப்பில் விடியல் பதிப்பகமும், சூலுர் வெளியீட்டகமும் இணைந்து வெளியிட்டுள்ளன. 1975ம் ஆண்டு, இந்நூலை எழுதிய பிரேம்நாத் பசாஸ் – ஒரு காஷ்மீரி. தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு – கடவுள் மறுப்புக் கொள்கைக் கண்ணோட்டத்தோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும். பெரியார் இயக்கத்துக்கான வர லாற்று ஆவணம் என்று கூறுமள வுக்கு, ஏராளமான வரலாற்றுச் செய்திகளை உரிய ஆதாரங்களுடன் தொகுத்தளித்துள்ளது. அதிலிருந்து சில முக்கிய பகுதிகள்: சென்ற இதழ் தொடர்ச்சி ட    “கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பியவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என்று பெரியார் கூறிய கருத்துகள் – தங்களைப் புண்படுத்துவதாகப் பார்ப்பனர்கள் கூக்குரலிடுவது வாடிக்கை யாக இருக்கிறது. ஆனால், கீதையில் “வேதாந்தங்களை”த் தவிர (பார்ப்பனிய கருத்துகள்) மற்றக் கருத்துகளைப் பின்பற்று கிறவர்களுக்கு, தந்துள்ள...

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?

உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற ஆயுதத்தை வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED- organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு PISA-Programme for international students assessment என்று பெயர். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்து கொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க… பின்லாந்து எப்போதும் முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்? பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை...

சனி திசையில்  சனி புத்தி குத்தூசி குருசாமி

சனி திசையில் சனி புத்தி குத்தூசி குருசாமி

“இந்த ஜோஸ்யர்களைப் போலப் பித்தலாட்டக்காரர்களை நான் பார்த்ததே யில்லையப்பா! எந்த ஜோஸ்யராவது நடக்கப் போவதைச் சரியாகச் சொல்லிக் கேட்டிருக் கிறாயா?” என்றேன், எதிரில் வந்து நின்ற என் நண்பர் சொக்கனிடம். “நடந்து போனதை மட்டும் என்ன, சரியாய்ச் சொல்லிக் கிழிக்கிறார்களோ? எல்லாம் பார்த்தாச்சப்பா! ஒரு தடவை என் அப்பா என் தங்கைக்கு திருமணம் செய்வதற்காக ஜாகதத்தை எடுத்துக் கொண்டு போனார். சுமார் 6 மணி நேரம் பார்த்துவிட்டு ரொம்ப சந்தோஷத்தோடு 10 ரூபாய் பணமும் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். ‘என்ன சொன்னார் ஜோசியர்’ என்று கேட்டேன். ‘அடுத்த மூன்று மாதத்திற்குள் கலியாணம் நிச்சயம் ஆகியே தீருமென்றும், புருஷன் ரொம்ப நெருங்கிய  சொந்தமா யிருப்பானென்றும், ஒரு இலட்ச ரூபாய்க்குக் குறையாத சொத்துள்ளவனென்றும், நல்ல படிப்பாளியென்றும் சொன்னார்!’ என்றார் என் தகப்பனார். இதைக் கேட்டுக் கொண்டே வந்த என் தாயார், ‘அது சரி! அவள் ஜாதகத்தைத்தான் தஞ்சாவூருக்கு அனுப்பியிருக்கிறோமே நகல் இல்லையென்று கூட சொல்லிகிட்டு...

பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதிய ‘அடுக்கு அதிகாரம்’ யுவால் நோவா ஹராரி

உலகம் முழுதும் அண்மையில் விற்பனையில் முதலிடம் பெற்றுள்ள நூல், யுவால் நோவோ ஹராரி எழுதிய ‘சேப்பியன்ஸ்’ என்ற மனித குல வரலாறு, 30 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பார்ப்பனர்கள் திணித்த ‘ஜாதி – அடுக்கு முறை’ அதிகாரம் குறித்தும் அது கடவுளால் உருவாக்கப்பட்டது என்ற புரோகிதர்கள் புரட்டுகளையும் விளக்கும் பகுதி இது. சாதி அமைப்பு முறையைக் கடைப் பிடிக்கின்ற இந்துக்கள், பிரபஞ்ச சக்திகள்தான் ஒரு சாதியை இன்னொரு சாதியைவிட உயர்ந்ததாக ஆக்கியிருப்பதாக நம்புகின்றனர். படைப்புக் குறித்து இந்துக்கள் கொண்டுள்ள கட்டுக்கதைகளில் மிகப் பிரபலமான ஒன்று இப்படி அமைந்துள்ளது. ‘புருஷம் (சமஸ்கிருதத்தில் புருஷ்) என்ற ஒரு பண்டைய ஜீவனின் உடலிலிருந்து கடவுளர் இவ்வுலகத்தைப் படைத்தனர். புருஷத்தின் கண்ணிலிருந்து சூரியனும், அதன் மூளையிலிருந்து சந்திரனும், அதன் வாயிலிருந்து பிராமணர்களும்,  அதன் கைகளிலிருந்து சத்திரியர்களும், அதன் தொடைகளிலிருந்து வைசியர்களும்,  அதன் கால்களிலிருந்து சூத்திரர்களும் படைக்கப் பட்டனர்’. நீங்கள் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டால், பிராமணர்களுக்கும்...

பணமதிப்பு நீக்கத்திலிருந்தே தொடங்கிவிட்டது பொருhளதார பின்னடைவு

இந்தியப் பொருளாதார சூழல் தற்போது எப்படி இருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பல முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றன. நுகர்வு குறைந்துள்ளது. உற்பத்தி அதள பாதாளத்தில். தனியார் முதலீடு முற்றிலும் பூஜ்யமாக இருக்கிறது. அரசும் பொருளாதாரத்தை மீட்க பல சலுகைகளை, அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், அடிப்படையில் ஒரு விஷயத்தை அரசு நினைவில்கொள்ள மறுக்கிறதோ என்று தோன்றுகிறது. ஜார்கண்டில் 40 வயதான விவசாயி ஒருவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை நம்பி தன்னுடைய விவசாய நிலத்தில் கிணறு வெட்டினார். இப்போது கிணறு இருக்கிறது. ஆனால், அவர் உயிரோடு இல்லை. வெட்டிய கிணற்றிலேயே குதித்து தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டார். அவருடைய தற்கொலைக்குக் காரணம், அரசு தர வேண்டிய மானியத்தை தராததுதான். இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் நிலையும் கிட்டதட்ட இதுதான். ஒரு தனிநபருக்கு அரசு சரியான நேரத்தில் கொடுக்க வேண்டிய...

வாசகர்களிடமிருந்து…

பிரேம் நாத் பசாஸ் எழுதிய இந்திய வரலாற்றில் பகவத் கீதை நூலிலிருந்து ‘நிமிர்வோம்’ வெளியிட்ட செய்திகள் மிகவும் சிறப்பானவை. தோழர்கள் இந்த வரலாற்றுக் குறிப்புகளைப் படித்து மேடைகளில் பேச வேண்டும். தொடர்ச்சியான வரலாற்றோடு இத்தகைய பார்ப்பனக் கொடுமைகளை விளக்கும்போதுதான் அது மக்களை சென்றடையும். – இளம் பரிதி, திருச்செங்கோடு ‘நிமிர்வோம்’ தலையங்கம் சிறப்பாக இருந்தது. “இந்தியாவை ஒற்றை ஆட்சி அதிகாரக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது அவர்களின் முன்னுரிமைத் திட்டம். அந்த நோக்கத்தோடு மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகாரமற்றவைகளாக்கப்படுகின்றன. அதற்கான சட்டங்கள் வேகவேகமாக அதிரடியாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்துகளை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? மாநிலங்களின் முழுமையான உரிமைக்கான  சுயஆட்சி உரிமைகளை வலியுறுத்தி, அதை மக்கள் இயக்கமாக்க வேண்டும். தமிழ் நாட்டை வடவர் மயமாக்கி சமஸ்கிருதம், இந்தி, பார்ப்பனிய வேத கலாச்சார மரபுகளை திணிக்கிறார்கள். இவற்றிற்கு எதிரான இயக்கத்தை மாநில சுயாட்சி முழக்கங்களோடு இணைக்க வேண்டும். தமிழ்நாடு மட்டுமே...

அம்பேத்கர் பற்றிய கட்டுக் கதைகளுக்கு மறுப்பு எட்வின் பிரபாகரன்

அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, அவரை இந்துவயப்படுத்த பல முயற்சிகள் நடந்தன; நடக்கின்றன. தலித் மக்களை கவர, அம்பேத்கரை தங்கள் அடையாளமாகக் காட்ட, சங் பரிவார் அமைப்பினர் தவறுவதில்லை. அம்பேத்கரை இந்துவயப்படுத்த பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆர் எஸ் எஸ்காரர் அருண் ஷோரி எழுதிய “Worshipping False Gods” போன்ற நூல்கள் கடந்த காலங்களில் வெளிவந்தன. அதன் தொடர்ச்சியாக தற்போது ம. வெங்கடேசன் என்பவரை வைத்து “இந்துத்துவ அம்பேத்கர்” என்ற நூலை உருவாக்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ். “பெரியாரின் மறுபக்கம்” என்ற நூலை எழுதியவரும் இவரே!! ஆர் எஸ் எஸ் ஒருபுறம் அம்பேத்கரை தங்கள்வயப்படுத்த முயன்று வரும் நிலையில், மறுபுறம் காந்தியவாதிகளோ, அம்பேத்கரை தூற்றியும், காந்தியை போற்றியும் நூல்களை வெளியிட்டுள்ளனர். “காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்கு செய்தது என்ன?” என்பது 400 பக்கங்களுக்கு மேல் அம்பேத்கர் எழுதிய விமர்சன நூலாகும். இந்நூலுக்கு எதிராக, காந்தியின் வேண்டுகோளின்படி, இருவர் மறுப்பு எழுதியுள்ளனர். பா....

பெரியார் பிறந்த நாள் சிந்தனை “காமராசருக்கு எதிர்ப்பில்லாத நிலையை நாம்தான் உருவாக்கினோம்”

நான் இப்புவியில் 85 ஆண்டுகள் வாழ்ந்து 86-வது ஆண்டில் புகுகிறேன். இந்த நாட்டில் மக்கள் வாழும் சராசரி வயது 10 ஆண்டுகளுக்கு முன் 32 வயதாக இருந்து, இன்று 48 வயதாக மாறியுள்ள இக்காலத்தில் ஒரு மனிதன் 85 ஆண்டு வாழ்ந்து, அதுவும் ஓய்வு என்பதை அறியாத தொண்டும், சுகம் என்பதை அறியாத வாழ்வும், கிடைத்ததைத் தின்று கொண்டு, வாய்த்த இடத்தில் தூங்கிக் கொண்டு திரிந்த நான் 85 ஆண்டு வாழ்ந்து விட்டேன் என்றால் என் ஆயுளைப்பற்றி நான் பாராட்டிக் கொள்ள வேண்டாமா ? என்ன செய்து சாதித்துவிட்டாய்?  என்று நீங்கள் கேட்கலாம். அதற்குப் பதில் நீங்களே (வாசகர்கள்) தான் தேடிப்பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஓய்வு ஒழிச்சல் இன்றி, சோம்பல் கழிப்பிணித் தனமின்றி உழைத்தேன். திருட்டு, புரட்டு, மோசடி இன்றி வெள்ளையாய் நடந்து கொண்டேன். என் நடத்தையில் பல தவறுகள், தகாத காரியங்கள் ஏற்பட்டு இருக்கலாம். என்னையே நீதிபதியாகக் கொண்டு...

பெரியார் பிறந்த நாள் சிந்தனை தன்னைப் பற்றி பெரியார்

காலில் விலங்கோடு திரிந்த சிறுவன் தன் பிற்காலத்தில் சமூகத்தின் விலங்கொடிக்கத் தயாரானார். பெரியார்  தன்னைப் பற்றி சுய விமர்சனத்தோடு எழுதிய கட்டுரை. சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925இல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கின்ற விஷயம் முதலில் எடுத்துக்கூற வேண்டியது அவசியமல்லவா? அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால் தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா? என்பது விளங்கும். எனக்கு சிறு வயது முதற்கொண்டு ஜாதியோ மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க...

வங்கிகள் இணைப்பு : நிர்மலா சீதாராமன் வாதங்கள் சரியா? ர. பிரகாஷ்

பொருளாதார வீழ்ச்சி சரி செய்யப்படும் என்று கூறியுள்ள நிர்மலா சீதாராமன், அதற்குப் பின்னால் அறிவித்து வரும் அறிவிப்புகள், மேற்கொள்ளும் செயல்கள் யாவும் நாட்டு மக்களுக்கு அச்சத்தை மேலும் அதிகரிக்கவே செய்திருக்கிறது.   தொடர்ந்து 2ஆவது முறையாக பாஜக ஆட்சியமைத்து 100 நாட்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் சிறு குறு நிறுவனங்கள் முதல்  ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்கள் வரை கடுமையான தொழில் மந்தத்தை எதிர் கொண்டுள்ளதாக அன்றாடம் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அசோக் லேலாண்ட், டிவிஎஸ், மாருதி போன்ற முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் ஊழியர்களுக்குக் கட்டாய விடுமுறை அளித்து  நெருக்கடியை  சமாளிக்க முயன்று வருகின்றன. பார்லே ஜி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் 10ஆயிரம் பேரை நீக்கத் திட்டமிட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையைச் சமாளிக்க முடியாமல் பல சிறு குறு நிறுவனங்கள் மூடுவிழா கண்டு வருகின்றன. கோவையில் வட இந்திய தொழிலாளர்கள் மட்டும் சுமார் 40 ஆயிரம் பேர்  வேலையிழந்து சொந்த ஊர்...

வாசகர்களிடமிருந்து…

காஷ்மீர் பற்றிய வரலாற்றை எளிமையாக விளக்கியது நிமிர்வோம் கட்டுரை சிறப்பு உரிமை காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமல்ல; வடகிழக்கு மாநிலங்களுக்கும் இருக்கிறது என்பதை ஆதாரங் களுடன் கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது. காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதாக பா.ஜ.க. அரசு செய்து வரும் பொய்ப் பிரச்சாரத்தக்கு தேசிய பார்ப்பன ஊடகங்களும் துணை போவது கடும் கண்டனத்துக்கு உரியது. பி.பி.சி. போன்ற சர்வதேச ஊடகங்கள் காஷ்மீரில் மக்கள் நடத்தும் போராட்டத்தை  வெளிப்படுத்துவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் அம்பலமாவது தேசிய பார்ப்பன ஊடகங்கள் தான்! அறிவழகன், சென்னை-42 இசை நாடகத் துறையில் பெரியார் இயக்கத்தின் கலகங்களை முனைவர் வே. இராமசாமி, குடிஅரசு இதழ்களிலிருந்து ஏராளமான செய்திகளுடன் எடுத்துக் காட்டியிருந்தார். பெரியாரே இரணியன் வேடம் போட்டு நடிக்க விரும்பிய செய்தி பெரியார் ஏதோ கலையையே வெறுத்தவர் என்ற தவறான புரிதலுக்கு நல்ல மறுப்பு அது மட்டுமின்றி நாடகம் 2 மணி நேரத்துக்குள் முடிவடைய வேண்டும். நாடகக் காட்சி தரும்...

மாநில அடையாளங்களை அழிப்பதால் உருவாகும் ஆபத்து – பிரேர்ணா சிங் –

மாநிலங்களின் தனித்துவத்தை அழித்து ஒற்றை தேசியமாக இந்தியாவை மாற்றத் துடிக்கிறது பா.ஜ.க.வின் நடுவண் ஆட்சி. மாநிலங்களுக்கான அடையாள உணர்வுதான் வளர்ச்சிக்கும் சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் ஆதார சுருதியாக இருக்கிறது என்பதை ஆய்வு நோக்கில் முன் வைக்கிறது, கட்டுரை. நாம் வாழும் இடம்தான் நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. அருகருகே உள்ள வெவ்வேறு நாடுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் தொடங்கி கல்வி என்று பல்வேறு விஷயங்களில் மிகப் பெரிய வேறுபாடுகள் இருப்பதை உணர முடியும். அமெரிக்காவின் ஹெய்ட்டி மாநிலத்தில் பிறக்கும் குழந்தை, அங்கிருந்து 50 மைல்கள் தொலைவில் உள்ள கியூபாவில் பிறக்கும் குழந்தையை ஒப்பிட – தனது முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் வாய்ப்பை 12 மடங்கு அதிகம் பெற்றிருக்கிறது. அதேபோல், நீங்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கீனா பாஸோவில் பிறந்தவர் என்றால், அண்டை நாடான கானாவுடன் ஒப்பிடும்போது நீங்கள் கல்வியறிவு பெறாதவராக இருப்பதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். ஒரே தேசத்தின்...

புத்தம் மதமல்ல; மார்க்கம்!

விநாயகன் சிலை ஊர்வலங்கள் மதம் சார்ந்தவை அல்ல; மதத்தின் அரசியலுக்காகவே நடத்தப்படுகின்றன. எனவே இதைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து ‘பெரியார் கைத்தடி’யை குறியீடாக்கி எதிர் ஊர்வலங்களை நடத்தி வந்தது. இந்த ஆண்டு எதிர்வினையாக புத்தர் சிலை ஊர்வலத்தை சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் நடத்தினார்கள். இந்துத்துவ மதவாத அரசியலுக்கு மாற்றாக மக்கள் சமத்துவத்தை மார்க்கமாக்கி பரப்பிய புத்தர் எதிர்வினையாக முன்னிறுத்தப்பட்டார். இது குறித்து பல விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. விவாதங்கள் தொடங்கும்போதுதான் பார்வையும் தெளிவாகும்; அந்த வகையில் விவாதங்களை வரவேற்கவே வேண்டும். இந்து மதத்திலிருந்து வெளியேறி அம்பேத்கர் – புத்த மார்க்கம் தழுவியபோது, எடுத்த உறுதிமொழிகளில் ஒன்று – ‘இராமன், விநாயகன்’ உருவங்களை வணங்க மாட்டோம் என்பதாகும். பெரியார் 1953ஆம் ஆண்டு விநாயகன் சிலை உடைப்புப் போராட்டத்தை நடத்தினார். அதற்கு அவர் தேர்வு செய்த நாள் புத்தர் பிறந்த நாளாகக் கொண்டாடப் படும் மே 27ஆம் தேதி. “என்னை கீழ்...

கனிமொழி- பத்மநாதன் திருமணம்

கனிமொழி- பத்மநாதன் திருமணம்

கோவை போத்தனூரில் உள்ள சங்கம் திருமண மண்டபத்தில் 8.9.2019 அன்று மாலை 7 மணிக்கு தோழர்கள் கனிமொழி – பத்மநாதன் ஆகியோருக்கு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையேற்று நடத்தி வைத்தார். திமுகவின்  முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, அந்தியூர் செல்வராஜ், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்,  தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி உரையாற்றினர். திருமணத்தில் கோவை பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 19092019 இதழ்

அண்ணா பிறந்தநாள்: கழகம் மாலை அணிவிப்பு

அண்ணா பிறந்தநாள்: கழகம் மாலை அணிவிப்பு

மயிலாடுதுறை : 15.09.2019 அன்று காலை 10 மணிக்கு அண்ணா 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப் பட்டது. உடன் மயிலாடு துறை கழகத் தோழர்கள் சென்றிருந்தனர். முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோவை : 15.09.2019 அன்று காலை 9 மணிக்கு, கழகத்தின் சார்பில் காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பப்பட்டது. வெங்கட், கிருஷ்ணன், அறிவரசு, மாதவன் சங்கர், நிர்மல், கிருஷ்ணமூர்த்தி, செந்தில் வடிவேல், மன்சூர் அலி, ராஜ்.  மேலும் திராவிட விழுதுகள் அமைப்பைச் சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 19092019 இதழ்

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை

சென்னை பல்கலைக் கழகத்தில் 2018ஆம் ஆண்டு இதழியல் துறையில் பட்டம் பெற்றவர் கிருபா மோகன் என்ற மாணவர். இந்த ஆண்டு தத்துவவியல் துறை யில் ‘பவுத்தம்’ தொடர்பான முதுகலைப் பாடப்பிரிவில் சேர்ந்துள்ளார். இவர் இதழியல் துறையில் படிக்கும் போது, அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தின் செயலாளர் ஆவார். தற்போது தத்துவவியல் துறையில் ஒரு மாதங்களாக வகுப்பு நடைபெற்ற நிலையில், அந்த துறையின் தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி, கிருபா மோகனிடம் “நீங்கள் முறை யாக எலிஜிபிலிட்டி சர்டிஃபிகேட் எனப்படும் தகுதிச் சான்றிதழை தரவில்லை. அதனால் உங்களின் சேர்க்கையை இரத்து செய்கின்றோம்” என்று கூறியுள்ளார். ஆனால் கிருபா மோகன் அதே பல்கலையில் முதலில் படித்த காரணத்தால் எலிஜிபிலிட்டி சர்டிஃபிகேட் தேவையில்லை என்று வாதிட்டுள்ளார். தன்னுடைய சேர்க்கை இரத்து செய்யப்பட்டதற்கு ஆளுநர் மாளிகையில் இருந்தும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தரப்பில் இருந்தும் தரப்பட்ட அழுத்தமே காரணம் என்றும் கிருபா மோகன் கூறியுள்ளார். கிருபா மோகன் தற்போது...

நியூட்டனும் அய்ன்ஸ்டினும் ‘பிரம்மா’வுக்குள் தான் அடக்கம்

நியூட்டனும் அய்ன்ஸ்டினும் ‘பிரம்மா’வுக்குள் தான் அடக்கம்

மோடி அமைச்சரவையில் பல அறிவுக் கொழுந்துகள் இருக்கிறார்கள். டார்வின் பரிணாம வளர்ச்சி கோட்பாடே தவறு. மனிதர்களை குரங்குகள் என்று பேசலாமா என்று ஆவேசப்பட்டார் முன்னாள் பா.ஜ.க. மத்திய அமைச்சர். அவர் பெயர் சத்யபால் சிங். மகாராஷ்டிராவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர். குரங்குகள் இழிவானவை என்று கூறும் இவர்கள்தான் அனுமானை கடவுளாக்கி ‘அனுமான் ஜெயந்தி’யும் கொண்டாடுகிறார்கள். மாற்றுக் கருத்து பேசுவோர் கூட்டங்களில் எல்லாம் கலவரம் செய்யவே சில கும்பல் தமிழ்நாட்டில் அலைந்து  கொண்டிருக்கிறது. அப்படி கலவரம் செய்யும்போது அவர்கள் போடுகிற முழக்கமே ‘ஜெய் அனுமான்; ஜெய்காளி’ என்பதுதான். இப்போது மத்திய வர்த்தகத் துறை அமைச்சராக இருக்கும் பியுஷ்கோயல் என்பவர் ஒரு அசத்தலான அறிவியல் ஆராய்ச்சியை அவிழ்த்து விட்டிருக்கிறார். “நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது என்பதற்கு கூறப்படும் புள்ளி விவரக் கணக்குகளை நம்பி விடாதீர்கள். கணிதத்திற்கும் பொருளாதாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதுபோல் கணிதத்துக்கும் அறிவியலுக்கும்கூட சம்பந்தம் இல்லை. புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்த அய்ன்ஸ்டின்...

கழகத்தில் இணைந்தனர்

கழகத்தில் இணைந்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஸ்ரீராம், மாதவன், சுரேஷ், விஜய், கரண், அசோக்ராஜ், சின்னப்பதாஸ், மாரியப்பன், மணிகண்டன், தமிழ், மணிசேகரன், தேவேந்திரன், அருண் ஆகியோர்  திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்துள்ளனர். கும்பகோணம் அம்மன்பேட்டை கிளை அமைப்பாளராக ராஜ்குமாரும், கும்பகோணம் நகர அமைப்புச் செயலாளராக அசோக்கும் கழகத்தால் தலைமை ஒப்புதலோடு நியமிக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டக் கழகத் தலைவரும் தலைமைக் கழகப் பேச்சாளருமான சாக்கோட்டை இளங்கோவன் முயற்சியில் இவர்கள் கழகத்தில் இணைந்துள்ளனர். பெரியார் முழக்கம் 19092019 இதழ்

‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது பொறியாளர் சுந்தர்ராசன்

‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது பொறியாளர் சுந்தர்ராசன்

எது “மோசமாக நடக்கக்கூடும்” என்று சொல்லப்பட்டதோ அது மோசமாக நடந்துகொண்டிருக்கிறது.   ஏதோ பகவத் கீதை வசனம் போல் இருக்கிறது என்று நினைக்கவேண்டாம். புகுஷிமா அணுவுலை இப்பூமிக்கு மோசமான ஆபத்தாக முடியும் என்று சொல்லப்பட்டு வந்தது, இப்போது உண்மையாகிவுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமாவின் மூன்று உலைகள் வெடித்து சிதறின. விபத்து ஏற்பட்டு பல ஆண்டுகள் கழித்து உலைகளை சுத்தப்படுத்தும் பணிகள் துவங்கின. வெப்பத்தையும், கதிர்வீச்சையும் குறைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நீரும், அணுக்கழிவுகளை சேமித்துவைக்கும் குளங்களில் இருந்த நீரும், அணுவுலைகளுக்குள் புகுந்த தண்ணீரும் என “அதிக கதிர்வீச்சு” கொண்ட நீர் 1000 தொட்டிகளில் சேமித்துவைக்கப்பட்டது. இதுதவிர நாளொன்றிற்கு சுமார் 500 டன் “குறைந்த கதிர்வீச்சு” கொண்ட நீர் பசிபிக் பெருங்கடலில் சென்று சேர்ந்து கொண்டிருந்தது.  தினம் தினம் கடலுக்குள் செல்லும் நீரை தடுப்பதற்காக கட்டப்பட்ட “பனிச்சுவர்” முழுமையாக வெற்றிபெறவில்லை, 500 டன் நீர் 100 டன்னாக குறைந்ததே தவிர முழுவதுமாக கட்டுப்படுத்தமுடியவில்லை....

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம் தேர்வு நடத்துவதை தனியாருக்கு வழங்கும், புதிய கல்விக் கொள்கை

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம் தேர்வு நடத்துவதை தனியாருக்கு வழங்கும், புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை – இடஒதுக்கீடு குறித்தோ ஜாதி பிரச்சினைப் பற்றியோ பேசாமல் மூடுவதற்கான பரிந்துரைகளையே வலியுறுத்துகிறது என்றார் கல்வியாளர் கஜேந்திர பாபு. (சென்ற இதழ் தொடர்ச்சி) பொதுத் தேர்வு முறையை சொல்கிறார்கள் அல்லவா, இப்போது 10 ம் வகுப்பு தேர்வுகளை யார் நடத்துகிறார்கள்? தமிழ்நாட்டில் அரசு 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கு தேர்வுகளை நடத்துகிறது. இதில் போதுமான மதிப்பெண் வரவில்லையென்றால் ஒரு மாணவர் தனது தேர்வுத் தாளை மறு கூட்டலுக்கு அனுப்ப லாம். திருத்தியதையும் புகைப்படமாக பார்க்கலாம். தமிழ்நாட்டில் ஓரளவிற்கு தேர்வு முறை ஊழல் இல்லாமல் நடக்கிறது. பறக்கும் படை போன்றவை களும் தேர்வு நேரங்களில் கண்காணிப்பில் உள்ளன. இந்தக் கொள்கை என்ன சொல்கிறதென்றால்?  மாநில தேர்வு முறை, மத்திய தேர்வு முறை மட்டுமில்லாமல் தனியார் கம்பெனிகளும் தேர்வு முறைக்கு விண்ணப்பித்து அனுமதியை வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறது. மாநிலத்திலோ அல்லது மத்திய அரசிடமோ விண்ணப்பித்து அந்த உரிமத்தைப்...

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம் திறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம் திறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை

புதிய கல்விக் கொள்கை – இடஒதுக்கீடு குறித்தோ ஜாதி பிரச்சினைப் பற்றியோ பேசாமல் மூடுவதற்கான பரிந்துரைகளையே வலியுறுத்துகிறது என்றார் கல்வியாளர் கஜேந்திர பாபு. (சென்ற இதழ் தொடர்ச்சி) 70 ஆண்டுகாலம் கழித்து வரக்கூடிய தேசிய கல்விக் கொள்கையில் ஜாதியக் கொடுமையைப் பற்றி இருக்க வேண்டும் என்று நான் எதிர் பார்ப்பேனா? மாட்டேனா? வாழ வேண்டிய வயதில், படித்த இளைஞர்களை ஜாதியின் பெயரால் கொலை செய்கிறார்களே அதைப் பற்றி எதாவது இந்த அறிக்கையில் இருக்கிறதா? அப்படி இருந்தால் வரவேற்கலாம். Multi Discipline என்று சொல் கிறார்களே! அப்படி என்றால் என்ன? Tradition, Ethicsயை கற்றுக் கொடுக்க சொல்கிறார்களே! எந்த Traditionயை கற்றுக் கொடுப்பது? அச்சம், நாணம், மடமை இவையெல்லாம் யாருக்கு இருக்கும் குணம்? நாய்க்கு இருக்கும் குணமென்று பாரதியார் சொல்கிறார். பெண்ணைப் பார்த்து அச்சம் கொள்ளாதே என்று சொன்னார். அது தான் Tradition, புத்தகத்தில் வருமா அது? மூன்று வருடம் BSC Chemistry, BSC...

கோமா நோயாளிக்கு வேதம் ஓதி சிகிச்சையாம்

கோமா நோயாளிக்கு வேதம் ஓதி சிகிச்சையாம்

தலையில் அடிபட்டு, நினைவு தப்பி ‘கோமா’ நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, மந்திரங்களை ஓதி சிகிச்சை அளிக்கும் விபரீத வேலையில், மத்திய பாஜக அரசின் தலைமையிலான நாட்டின் உயர் மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு (கூhந ஐனேயைnஊடிரnஉடை டிக ஆநனiஉயட சுநளநயசஉh -ஐஊஆசு) ஈடுபட்டுள்ளது. இந்த விபரீதத் திட்டத்திற்கு ஆராய்ச்சி என்ற பெயரில், ஓராண்டு, ஈராண்டு அல்ல, கடந்த 3 ஆண்டுகளாக, மாதம் ரூ. 28 ஆயிரம் விகிதம் நிதி ஒதுக்கீடும் வழங்கியுள்ளது. அதுவும் ஏதோ ஒரு மருத்துவமனையில் அல்ல, நாட்டின் புகழ்பெற்ற தில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில்தான் இந்த அவலம் அரங்கேற்றப்பட்டு உள்ளது. ரிக் வேதத்தில் இடம்பெற்ற ‘மகாமிரித்யுன்ஜயா’ என்ற மந்திரத்தை ஓதுவதன் மூலம், நோயாளியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்த முடியும் என்று, டாக்டர் அசோக் குமார் என்பவர் கூறியுள்ளார். இதற்காக ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை உருவாக்கி, ஐசிஎம்ஆர் அமைப்பிடம் விண்ணப்பமும் அளித்துள்ளார். முதலில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் இதற்காக விண்ணப்பித்தபோது, இது...

பாராட்டுகிறோமய்யா, பட்டு தீட்சிதரே!

பாராட்டுகிறோமய்யா, பட்டு தீட்சிதரே!

அரசின் அறநிலையத் துறை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படாமல் பல கோடி ரூபாய் சொத்துகளைக் கொண்ட தில்லை நடராசன் கோயில் பார்ப்பன தீட்சதர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அரசு நிர்வாகத்தில் சில காலம் இருந்தபோது வசூலான உண்டியல் தொகையில் நூறில் ஒரு சதவீதம்கூட இப்போது கணக்கில் வருவது இல்லை; தீட்சதர்கள் சுருட்டிக் கொண்டு விடுகிறார்கள். அரசு அதிகாரி மேற்பார்வையின் கீழ் கோயில் நிர்வாகம் கொண்டு வரப்பட்ட போது அதை எதிர்த்து தீட்சதப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள்.  அவர்களுக்காக வாதாடியவர் சுப்பிரமணியசாமி. தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தீட்சதப் பார்ப்பனர்கள் சரிகட்டி விட்டார்கள். அதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு இந்த வழக்கில் உறுதியாக எதிர் வழக்காடாமல் கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டியது. தீட்சதர்களுக்கு வாதாடிய சுப்பிரமணிய சாமியும் எதிர்த்து வாதாடிய தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களும் கைகோர்த்தே நின்றார்கள். ‘தீட்சதர்கள் மானுடப் பிறவிகள் அல்ல; அவர்களின் மூதாதையர் வானுலகில் இருந்து...

அமித்ஷாவின் வெறிப் பேச்சு

அமித்ஷாவின் வெறிப் பேச்சு

1929லேயே இந்தியை எதிர்த்தார் பெரியார் ‘இந்தியாவின் அடையாளம் இந்தி’ என்ற அமித்ஷா கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் தென்னகம் முழுவதும் எழுந்துள்ளது. இந்தித் திணிப்பை எதிர்த்தும் அதைத் திணிப்பதன் நோக்கத்தை விளக்கியும் 1929ஆம் ஆண்டிலேயே  90 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் எழுதிய கட்டுரை. சமீபத்தில் சென்னை மாகாணத்திற்கு சென்னைப் பார்ப்பனர்கள் வடநாட்டுத் தலைவர்கள் என்பவர்களை ஹிந்திப் பிரசாரம் என்னும் பேரால் பார்ப்பனப் பிரசாரம் செய்ய அழைத்துவரப் போகின்றதாகத் தெரிய வருகின்றது. இந்த வழியில் பார்ப்பனப் பிரசாரம் செய்வதோடு மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாத மூடர்களிடமிருந்து சுமார் ஒரு லக்ஷம் ரூபாயாவது கொள்ளை அடிக்கக் கருதியிருக்கின்றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது. கதரின் பேரால் அடித்த கொள்ளையாகிய ஐந்து லக்ஷம் ரூபாய் இன்னும் ஜீரணம் ஆகாமல் அப்படியே கல்லுப் போல் பார்ப்பார்கள் வயிற்றில் கிடக்க, சென்ற வருட காங்கிரசின் பேரால் கொள்ளை அடித்த சுமார் 20, 30 ஆயிரம் ரூபாயும் அப்படியே கிடக்க இப்போது இன்னும் ஒரு லக்ஷம்...

பெண்ணடிமைப் பண்பாடுகளை  பொது வெளிகளில் தகர்த்தவர் பெரியார்

பெண்ணடிமைப் பண்பாடுகளை பொது வெளிகளில் தகர்த்தவர் பெரியார்

பெரியார் பிறந்த நாளையொட்டி ‘தமிழ் இந்து’வின் ‘பெண் இன்று’ வார சிறப்பு மலரில் பிருந்தா சீனிவாசன் எழுதிய கட்டுரை. பிறந்தநாள், நினைவுநாள் போன்ற நாட்களில் ஆண்டுக்கொரு முறை சடங்குக்காக மட்டும் நினைவுகூரப்பட வேண்டியவர் அல்ல பெரியார். ஒவ்வொரு நாளும் நம் ஒவ்வொரு செயலிலும் பெரியார் நமக்குத் தேவைப்படுகிறார். காரணம், சாதிய ஒடுக்குமுறைகளும் ஆணாதிக்கமும் மேலோங்கியிருந்த காலத்திலேயே பெண்ணுரிமையைப் பேசியவர் அவர். அறிவிலும் சிந்தனையிலும் நாம் முன்னேறி விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலேயே பெண்ணுரிமை குறித்துப் பேசுவது பாவச்செயல் போல் கருதப்படுகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமைச் சிந்தனையைப் பரப்பியதாலேயே அவர் பெரியாராக உயர்ந்துநிற்கிறார். பெண்களுக்கும் எதிரி : பண்பாடு, கலாச்சாரம் போன்றவை பெண்களை எப்படி காலங்கலாமாக அடிமைப் படுத்தி வைத்திருக்கின்றன என்பதைப் பொதுவெளியில் போட்டுடைத்தவர் அவர். அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பின. ஆனால், எதைக் கண்டும் சளைக்காமல் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார். ஆண்களைச் சாராமல் தனித்து...

பேனர்களும் நடைபாதை கோயில்களும்

பேனர்களும் நடைபாதை கோயில்களும்

சென்னையில் பேனர் வைக்கத் தடை செய்யப்பட்டிருந்தாலும் ஆளும் கட்சி யினருக்கு  அது பொருந்தாது. அ.இ.அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தனது வீட்டுத் திருமணத்துக்கு வைத்திருந்த பேனர் சரிந்து வேளச்சேரி பகுதியில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பொறியாளர் உயிர்ப் பலியாகிவிட்டார். ஸ்கூட்டரில் வந்த அந்தப் பெண் மீது பேனர் விழ, பெண் கீழே விழ, எப்போதும் ‘உயிர்க் கொல்லி’யாகப் பறக்கும் தண்ணீர்  லாரி,  அந்தப் பெண் மீது ஏறி உயிரிழந்து விட்டார். நெஞ்சை உலுக்கி விட்டது கொடூரமான இந்த இளம் பெண்ணின் மரணம். ‘பேனரை’ அச்சடித்துக் கொடுத்த அச்சகத்துக்கு சீல் வைத்திருக்கிறது, தமிழகக் காவல் துறை. பேனரைத் தயாரித்துக் கொடுத்த அச்சக உரிமை யாளருக்கு அது சாலையில் சட்ட விரோதமாக வைக்கப்பட இருக்கிறது என்பது எப்படி தெரியும் என்று யாரும் கேட்டு விடக் கூடாது. துணி பேனரை அச்சடிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவரை தேடிப் பிடித்து கைது செய்யாமல் விட்டார்களே, என்று நிம்மதி அடைய வேண்டியதுதான்....

குடியாத்தம் இரா.ப.சிவா- ஜெ.பிரவினா மணவிழா

குடியாத்தம் இரா.ப.சிவா- ஜெ.பிரவினா மணவிழா

திராவிடர் விடுதலைக் கழகம் வேலூர் மாவட்ட செயலாளர் இரா.ப.சிவா-ஜெ.பிரவினா ஆகி யோரது வாழ்விணை ஏற்பு விழா 01.09.2019 அன்று காலை 10 மணி யளவில் குடியாத்தம், அம்மணாங் குப்பத்தில் உள்ள மதுரா மஹாலில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஜெ.செந்தமிழ் வரவேற்பு கூறினார். மருத்துவர் நா.எழிலன் (இளைஞர் சங்கம்), பால்.பிரபாகரன் (கழகப் பரப்புரைச் செயலாளர்), ப.திலிபன் (வேலூர் மாவட்ட செயலாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமணத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார்.   நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி வாழ்த்துரை வழங்கினார். பெரியார் முழக்கம் 12092019 இதழ்

பொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்…

பொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்…

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இந்தக் காலாண்டில் 8 சதவீதம் எதிர்பார்க்கப்பட்டது 5 சதவீதமாக குறைந்துள்ளது. நிலக்கரி, உரம், சிமெண்ட், மின்சாரம் போன்ற எட்டு முக்கிய தொழில் துறைகளில் 7.3 சதவீதம் இருந்த வளர்ச்சி இன்று 2.1 சதவீதமாக குறைந்துள்ளது. கட்டுமானத் துறை வளர்ச்சி விகிதம் ஒன்றரை ஆண்டு களில் காணாத சரிவை சந்தித் துள்ளது. ஒரே ஆண்டில் (2018லிருந்து 2019 க்குள்) வங்கி மோசடி நாற்பதாயிரம் கோடி ரூபாயிலிருந்து எழுபதாயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது (இது 2013இல் வெறும் பத்தாயிரம் கோடியாக இருந்தது). சென்ற 5 ஆண்டுகளில் 5.56 இலட்சம் கோடி வாராக் கடன் தள்ளுபடி செய்யப் பட்டது. அதன் பிறகும் பெரிய தொகையில் கடன் பெற்று திருப்பித் தர முடியாதோர் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் பொருளா தாரம் மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது. வாகன உற்பத்தித் துறை மிகவும் சரிவை கண்டுள்ளது. விற்பனை...

ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது?

ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது?

ஜம்முவில் நடக்கும் இராணுவ ஆட்சி மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து வீடுகளில் முடக்கி வைத்து விட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை, ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல், ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சரியாக ஒரு மாதமாகிவிட்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீர் மக்களிடமிருந்து அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைக்கப்பட்டிருக்கிறார்கள். செல்பேசி, தரைவழித் தொலை பேசி, இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளுதல் என எவ்விதமான தகவல் தொடர்பும் அவர்களுக்குக் கிடையாது. பிரதான சாலைகள் அனைத்திலும் பாதுகாப்புப் படையினரின் தடுப்பரண்கள் வைக்கப்பட் டிருப்பதாலும், பொதுப் போக்குவரத்து இல்லாததாலும் மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து எங்கும் செல்வதற்கான உரிமை பறிக்கப் பட்டவர்களாக இருந்து வருகிறார்கள். அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு வரமுடியாத சூழ்நிலை இருப்பதால் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. செய்தித்தாள்கள் தங்கள் பதிப்புகளை வெளியிட முடியவில்லை. தகவல் தொடர்பு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட் டிருப்பதால் ஊடகவியலாளர்களால் தங்கள் செய்தி நிறுவனங்களுக்கு முறையாக செய்திகளை...

ஆய்வாளர் ஜெயரஞ்சன் பி.பி.சி.க்கு பேட்டி தமிழ்நாட்டைப் பாதிக்கும் ஒரே நாடு; ஒரே ரேசன் கார்டு திட்டம்

ஆய்வாளர் ஜெயரஞ்சன் பி.பி.சி.க்கு பேட்டி தமிழ்நாட்டைப் பாதிக்கும் ஒரே நாடு; ஒரே ரேசன் கார்டு திட்டம்

ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு திட்டம் விரைவில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப் படுமென தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்திருக்கிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்து உணவுப் பாதுகாப்பு விவகாரங்களில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் பேசினார். பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அளித்த நேர்காணலிலிருந்து: ஒரே நாடு – ஒரே ரேசன் கார்டு திட்டம் என்பது என்ன? இதை எப்படி செயல்படுத்தப்படும்? இந்தத் திட்டத்தின் முக்கியமான அம்சம், உணவுப் பொருள் வழங்கலை எளிமையாக்குவது (ஞடிசவயbடைவைல) என்பதுதான். இப்போது உணவு தானியங்களை வழங்குவது என்பது மாநில அரசிடம் இருக்கிறது. ஒவ்வொரு மாநில அரசும் தனது கொள்கைக்கு ஏற்றபடி இந்த உணவு தானியங்களை நியாய விலைக்கடைகளில் வழங்குகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. யாருக் கெல்லாம் குடும்ப அட்டை இருக்கிறதோ, அவர்கள் வாங்கிக் கொள்ளலாம்....

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து! புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது

விநாயகன் அரசியல் ஊர்வலத்தை நிறுத்து! புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது

மதத்தை அரசியலாக்கும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் பதட்டத்தை உரு வாக்கி வருகிறது. வணிகர்கள், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியினரால் நன்கொடை கேட்டு துன்புறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர். இந்து அரசியல் அமைப்புகளே தங்களுக்குள் மோதிக் கொள்கின்றன. போலி தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவே இந்த ஆண்டு விநாயகன் சிலை ஊர்வலம் நடத்துகிறோம் என்று இந்து முன்னணி வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. இப்படி அறிவித்த பிறகும் விநாயகன் சிலை நிறுவுவோர் பெற வேண்டிய அரசுத் துறை அனுமதிகளை காவல் துறையே பெற்றுத் தருகிறது. ‘விநாயகன்’ என்பதே தமிழ் வழிபாட்டுக்குரிய கடவுளாக இருந்தது இல்லை. புலிகேசி மன்னன் காலத்தில் மராட்டியத்துக்கு படை எடுத்துச் சென்றபோது வெற்றியின் நினைவு சின்னமாக படைத் தளபதி வாதாபியிலிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டதுதான் ‘விநாயகன்’ சிலை. திலகர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக விடுதலை பெறவேண்டும் என்று நடத்திய போராட்டங் களுக்கு ‘விநாயகனை’ அரசியலுக்குப் பயன் படுத்தினார். அந்த மத...

உச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ நீதிபதி பானுமதி கேள்வி

உச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ நீதிபதி பானுமதி கேள்வி

உச்சநீதிமன்றத்திற்கான நீதிபதிகள் தேர்வில் சீனியாரிட்டி புறக் கணிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி பானுமதி குற்றம்சாட்டியுள்ளார். மூத்தோர் முன்னுரிமைப்படி இல்லாமல், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுதாகரை புறக்கணித்து, இமாச்சல் பிரதேச தலைமை நீதிபதியான வி.ராமசுப்ரமணியத்தை (இவர் ஒரு பார்ப்பனர்) கொலிஜியம் பரிந்துரைத்தது ஏன் என்றும் நீதிபதி பானுமதி கேள்வி எழுப்பியுள்ளார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ஆகஸ்ட் 28இல் நடந்த கொலிஜியம் கூட்டத்தில், ரவீந்திர பட், வி. ராமசுப்பிரமணியன், கிருஷ்ணா முராரே மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் ஆகிய 4 பேரையும் உச்சநீதி மன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந் துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரைகளில் சீனியாரிட்டி பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான பானுமதி குற்றம் சாட்டியுள்ளார். சீனியாரிட்டி அடிப்படையில் இமாச்சல பிரதேசத்தின் தலைமை நீதிபதி ராமசுப்பிரமணியன் 42ஆவது இடத்தில் உள்ளதாகவும், அதே சமயம் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சுதாகர் 3ஆவது இடத்தில் இருப்பதையும் அவர் சுட்டிக்...

‘சந்திரயான்-2’:  அறிவியலும் மூடநம்பிக்கையும்

‘சந்திரயான்-2’: அறிவியலும் மூடநம்பிக்கையும்

இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய அனுப்பிய சந்திரயான்-2, கடைசி நொடியில் பின்னடைவை சந்தித்ததாக தகவல்கள் வந்தன. ‘சந்திரயான்-2’இல் கலன், லேண்டர், ஆய்வு ஊர்தி என்ற மூன்று முக்கிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் விக்ரம் என்று பெயர் சூட்டப்பட்ட லேண்டரின் தொடர்பு கடைசி நேரத்தில் துண்டித்து போனது. இப்போது அதன் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித் துள்ளனர். “திட்டம் முழுமையாக தோல்வி அடைய வில்லை; வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம்; விரைவில் லேண்டர் தொடர்பு மீட்கப்படும்” என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அறிவியலுக்கு பின்னடைவுகள் தற்காலிகம்தான்; அது எப்போதும் முன்னேறிச் செல்லும். ‘சந்திரனை’ கடவுள்கள் பட்டியலில்  சேர்த்துள்ள நாடு இது. சந்திரனைப் பாம்பு விழுங்குவதுதான் சந்திரகிரகணம் என்று நம்பி அன்று முழுக்குப் போட்டு ‘பாவத்தை’க் கழிக்கும் மூட நம்பிக்கை இப்போதும் இருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலரும் இந்த நம்பிக்கைகளை வெளிப்படுத்தவே செய்கிறார்கள். ‘சந்திரயான்-2’ திட்டத்தை ஏழுமலையானிடமும், உடுப்பி...

ஒரே தத்துவம் ஒரே கலாச்சாரம் கொண்டதா இந்து மதம்…????  அசுரர்களை வரவேற்கும் திருஓணம்..!!

ஒரே தத்துவம் ஒரே கலாச்சாரம் கொண்டதா இந்து மதம்…???? அசுரர்களை வரவேற்கும் திருஓணம்..!!

ஒரே தத்துவம் ஒரே கலாச்சாரம் கொண்டதா இந்து மதம்…???? அசுரர்களை வரவேற்கும் திருஓணம்..!! தேவர் அசுரர் போராட்டங்களை சித்தரிப்பது தான் நமது புராணக் கதைகள். வேறு வகையாக சொல்லவேண்டுமானால், ஆரிய திராவிடப் போராட்டத்தில் ஆரியர்களை எதிர்த்து கேள்வி கேட்ட திராவிடர்களை, ஆரியர்கள் சூழ்ச்சியின் வாயிலாக அழித்து ஒழித்ததை நியாப்படுத்தும் கதைகளே புராணக் கதைகள். வரலாறுநெடுக இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், கேரளத்தின் கதையோ வேறு விதமாக இருக்கிறது. கேரளத்தில் இன்றைக்கு மலையாளிகள் திருஓணம் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். வாமணன் திருமால் வடிவம் எடுத்து அங்கே நல்லாட்சி செய்த மாவேலி யிடம் மூன்று வரங்களை கேட்டான். மாவேலி ஒரு அசுரன். தேவர்களை எதிர்த்தவன். தேவர்களை எதிர்த்த அசுரனை சூழ்ச்சியால் ஒழிப்பதற்காக, வாமணன் என்ற வேடம் எடுத்து, மாவேலி அரசனிடம் எனக்கு மூன்று அடிகளைத் தர வேண்டும் என்று அவன் கேட்டான். மன்னனும் ஒப்புக் கொண்டார். தேவனாகிய வாமணன் முதல் அடியில் உலகம் முழுவதையும்...

இரா ப சிவா – ஜெ பிரவீனா வாழ்விணையேற்பு விழா ! குடியேற்றம் 01092019

இரா ப சிவா – ஜெ பிரவீனா வாழ்விணையேற்பு விழா ! குடியேற்றம் 01092019

இரா ப சிவா – ஜெ பிரவீனா வாழ்விணையேற்பு விழா ! 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை,காலை 10.00 மணியளவில் வேலூர் மாவட்டம்.அம்மனா குப்பம், குடியேற்றம், மதுரா மஹாலில் தி.மு.க.மகளிர் அணி செயலாளர் கவிஞர் கனிமொழி MP, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, அவர்கள் வாழ்விணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்து உரையாற்றினார். கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழமை அமைப்பினர் கலந்து கொண்டனர்.

புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது !

புத்தர் சிலைகளுடன் கழகம் ஆர்ப்பாட்டம்-கைது !

மதத்தை அரசியலாக்கும் விநாயகன் சிலை ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் பதட்டத்தை உருவாக்கி வருகிறது. வணிகர்கள், இந்து முன்னணி,இந்து மக்கள் கட்சியினரால் நன்கொடை கேட்டு துன்புறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர்.இந்து அரசியல் அமைப்புகளே தங்களுக்குள் மோதிக் கொள்கின்றன. போலி தமிழ்த்தேசியத்துக்கு எதிராகவே இந்த ஆண்டு விநாயகன்சிலை ஊர்வலம் நடத்துகிறோம் என்று இந்து முன்னணி வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.இப்படி அறிவித்த பிறகும் விநாயகன் சிலை நிறுவுவோர் பெற வேண்டிய அரசுத் துறை அனுமதிகளை காவல் துறையே பெற்றுத் தருகிறது.‘விநாயகன்’ என்பதே தமிழ் வழிபாட்டுக்குரிய கடவுளாக இருந்தது இல்லை. புலிகேசி மன்னன் காலத்தில் மராட்டியத்துக்கு படை எடுத்துச் சென்றபோது வெற்றியின் நினைவு சின்னமாக படைத் தளபதி வாதாபியிலிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டதுதான் ‘விநாயகன்’ சிலை. திலகர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இந்தியாவை இந்துக்களுக்கான நாடாக விடுதலை பெறவேண்டும் என்று நடத்திய போராட்டங்களுக்கு ‘விநாயகனை’ அரசியலுக்குப் பயன்படுத்தினார். அந்த மத அரசியல் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சுதந்திரத்துக்குப் பிறகும் தொடர்ந்தது. இந்து முன்னணி...

நிமிர்; அதுவே மனித அடையாளம் – கவிஞர் இன்குலாப் – ‘ஒவ்வொரு புல்லையும்’ கவிதைத் தொகுப்பிலிருந்து

தொட்டில் தொடங்கிச் சுடுகாடு வரைக்கும் சடங்குகளாலே வாழ்க்கை கனத்தது. ஒவ்வொரு சடங்கிலும் உருவிய பூணூலுடன் பணத்தையும் மலத்தையும் பறிமுதல் செய்தான். அதிகார மாதிரி அறிவு மாதிரி ஆதிக்கம் அனைத்துக்கும் அவன் முன்மாதிரி. எந்த ஒரு புயலிலும் வேர் பெயராத் தர்ப்பையாய் ஒவ்வொரு மூளையிலும் பார்ப்பான் வளர்ந்தான். வேதம் படித்தாலும் மறுக்கப்பட்டாலும் பூணூல் போட்டாலும் போடாவிட்டாலும் ஆதிக்கக்காரன் ஒவ்வொருவனுக்குள்ளும் ஆணவம் பிடித்த பார்ப்பான் இருக்கிறான். அடங்கிக் கிடக்கும் ஒவ்வொரு அடிமைக்கும் அந்த பார்ப்பானே குறிக்கோள் ஆகிறான். நந்தனின் குறிக்கோள் பார்ப்பனியம் நமக்கும் குறிக்கோள் பார்ப்பனியம் இந்தச் சூழலில் தந்தை பெரியார்….. **** மானுடம் சுமந்த துயரம் அனைத்தையும் வரித்துக் கொண்டதுபோல் கறுத்த சட்டையுடன் தள்ளாடும் உடம்பைத் தாங்கும் கைத்தடியால் தள்ளாடும் மானுடத்தைத் தாங்க வந்ததுபோல். நிமிரவே மறந்து நெடுநாள் கிடந்தேன்… முதுகில் அந்தக் கைத்தடி தட்டத் திரும்பினேன்… அந்த ஞாயிறு சுட்டது. “நிமிர் நிமிரத் தெரியாதது விலங்கு மனித அடையாளம் நிமிர்வது” தோளில்...

நமஸ்காரம் சொன்னதற்காக நாக்கை வெட்டிய பேஷ்வா பார்ப்பனர்கள்

மராட்டியர் ஆட்சியில் பார்ப்பனர்களைத் தவிர வேறு எவர் ஒருவர் வேத மந்திரத்தை உச்சரித்தாலும் அவருடைய நாக்கு அறுக்கப்படும். உண்மையாகவே பல பொற்கொல்லர்களின் நாக்கு அவர்கள் வேதத்தை உச்சரித்தார்கள் என்பதற்காகவே அறுக்கப்பட்டது. மும்பை மாகாணத்தில் மிகவும் உயர்வான குலத்தினரான சோனார்கள் (பொற் கொல்லர்கள்) பஞ்சகச்சம் வேட்டி (ஐந்து மடிப்பு) கட்டக் கூடாது என்று தடுக்கப்பட்டார்கள். வணக்கம் தெரிவிக்கும்போது நமஸ்காரம் எனும் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் தடுக்கப்பட்டார்கள். இதன் பொருட்டு அரசு செயலாளர் பொற்கொல்லர்கள் குலத் தலைவருக்கு எழுதிய மடலின் வாசகம் வருமாறு: “மாண்புமிகு ஆட்சி மன்றக் குழுவின் தலைவர், பொற்கொல்லர்கள் வணக்கம் தெரிவிக்கும் வேளையில் நமஸ்கார் என்னும் சொல்லை பயன்படுத்துவதைத் தடுப்பது முறை என்று கருதி இந்த ஆணையையும் அரசின் தீர்மானத்தை உங்களுடைய மொத்த சமூகமும் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு முன்னதாக தெரிவிக்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இதைப் பின்பற்றுவதில் கவனம் எடுத்துக் கொள்ளவும். ஆணைப்படி அரசு செயலாளர்...

வாசகர்களிடமிருந்து…

முனைவர் இராமசாமி எழுதிய “இசை நாடகத்துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்” கட்டுரை பல வரலாற்றுத்தகவல்களை விவரிக்கிறது. பார்ப்பனரல்லாத கலைஞர்களின் சுயமரியாதைக்கு பெரியார் இயக்கம் எவ்வளவு கவலைப்பட்டிருக்கிறது என்பதை உணர வைத்தது. 1930இல் ‘குடிஅரசு’ ஏட்டில் பார்ப்பனரல்லாத ‘சங்கீத வித்வான்’களின் பெயர்ப் பட்டியலையே பெரியார் வெளியிட்டிருக்கிறார். “சங்கீத மாநாட்டை சுயமரியாதை இயக்கம் நடத்துவதற்குக் காரணம் கலையின் மேன்மையை உணர்த்துவதற்காக அல்லவென்றும் பார்ப்பனரல்லாத கலைஞர்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்பதே நோக்கம் என்றும் பெரியார் தெளிவுபடுத்துகிறார். சுயமரியாதை இயக்கம் சார்பில் நடந்த முதல் நாடகமே ‘தீண்டாமை’ ஒழிப்பை முன் வைத்து தான் என்பது மற்றொரு முக்கியமான செய்தி. செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாடு இரண்டு நாளில் முடிவடைந்து விட்டது, அது பலருக்கும் ஏமாற்றமாகி விட்ட தால் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டை ஈரோட்டில் ஒரு வார காலம் நடத்தத் திட்டமிட் டுள்ளதாக ‘குடிஅரசு’ வெளியிட்ட செய்தி வியப்பூட்டுகிறது. மாநாடுகளை மக்களிடம் சமுதாயப் புரட்சிக்...

கீதையின் வஞ்சகப் பின்னணி புரோகிதர் மேலாதிக்கம் – உருவான வரலாறு

பிரேம் நாத்பசாஸ் ஆங்கிலத்தில் எழுதிய நூலை – தமிழில் ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ எனும் தலைப்பில் விடியல் பதிப்பகமும், சூலுர் வெளியீட்டகமும் இணைந்து வெளியிட்டுள்ளன. 1975ம் ஆண்டு, இந்நூலை எழுதிய பிரேம்நாத் பசாஸ் – ஒரு காஷ்மீரி. தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு – கடவுள் மறுப்புக் கொள்கைக் கண்ணோட்டத்தோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும். பெரியார் இயக்கத்துக்கான வர லாற்று ஆவணம் என்று கூறுமள வுக்கு, ஏராளமான வரலாற்றுச் செய்திகளை உரிய ஆதாரங்களுடன் தொகுத்தளித்துள்ளது. அதிலிருந்து சில முக்கிய பகுதிகள்: ட    700 சமஸ்கிருத கவிதைகளைக் கொண்டது பகவத்கீதை. ட    கீதை – இந்துமதத்தின் புனித நூலாகவும் – வழிகாட்டியாகவும் லட்சிய நூலாகவும் போற்றப்படுகிறது. அது மிகச் சிறந்த லட்சிய நூலாக இருந்திருக்குமானால், அந்த நூல் வெளிவந்த காலத்தில் நிலவிய மனித குலத்தின் சிக்கலான பிரச்சினைகளையும், கடும் துயரங்களையும் முன்னிலைப்படுத்தி விவாதித்திருக்க வேண்டும். கீதை அதைச்...

சமண-புத்த மதங்களை அழித்தது யார்? சைவத்தின் மதமாற்ற வன்முறைக்கான வரலாற்றுச் சான்றுகள்

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மதமாற்றங்கள் செய்து வருகின்றன என்று உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநான் ஒரு தீர்ப்பில் கூற கடும் எதிர்ப்பு வந்தவுடன் அப்பகுதியை திரும்பப் பெற்றுக் கெண்டார். உண்மையில் தமிழ்நாட்டில் சமண-பவுத்த மடங்களை அழித்து சைவமாக்கியதோடு அதற்காக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டதும், சைவர்கள்தான் என்பது வரலாறு.  அதற்கான வரலாற்றுச் சான்றுகளை முன் வைக்கிறது இக்கட்டுரை. கி.பி. அய்ந்து ஆறு ஏழாம் நூற்றாண்டு களில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பவுத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில் பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பவுத்த மதங்களைத் தழுவியிருந்தனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் ‘பக்தி’ இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பவுத்த மதங்களை அழித்திட முற்பட்டனர். ‘சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப்படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல்,...

தேசிய விருதுகளில் புறக்கணிக்கப்படும் தமிழ்த் திரைப்படங்கள்

திரைப்படங்களுக்காக இந்திய அரசால் வழங்கப்படும் 66ஆவது தேசிய விருதுப் பட்டியல் ஆகஸ்ட் 9 அன்று வெளியாகியிருக்கிறது. எந்த விருது அறிவிப்புக்கு பின்னரும் பாராட்டுகள், கைகுலுக்கல்கள் ஆகியவற்றுக்கிடையே சில சர்ச்சைகளும் எட்டிப்பார்ப்பது வழக்கம். ஆனால் இந்த விருது அறிவிப்பு தமிழ்த் திரையுலகினர், பார்வையாளர்கள் மத்தியில் அதிகப்படியான சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி யுள்ளது. இந்தியாவில் மூன்றாவது பெரிய திரையுலகமாக இருப்பது தமிழ்த் திரையுலகம் தான். அதிகளவிலான கலைஞர்கள், தொழி லாளர்கள் பணியாற்றும் இதிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 200 படங்கள் வரை வெளியாகின்றன. பெரும் வணிகத்தை தன்னுள் வைத்துள்ள தமிழ்த் திரைத்துறையில் தரமான படங்களும் மற்ற மொழிகளைவிட அதிகமாகவே வெளியாகி வருகின்றன. முன்பைவிட சர்வதேச தளத்தில் தமிழ்ப் படங்கள் விருதுகளை அள்ளிவருகின்றன. ஆனால் தேசிய விருது அறிவிக்கும்போது மட்டும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமா புறக்கணிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுவது வாடிக்கையாகிறது. சிறந்த படம், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர்,...

கடும் நெருக்கடியில் இந்திய பொருளாதாரம்

ரிசர்வ் வங்கி தொடர்ந்து நான்காம் முறையாக (சநயீடி சயவந) வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. அதுவும் எதிர்பார்ப்புகளுக்கு மிகையாக 35 புள்ளிகள் குறைத்தது. சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல, ஒட்டுமொத்த பொது மக்களின் தேவை மற்றும் தனியார் முதலீட்டை அதிகப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதத்தை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்தார். இதே காரணத்தைக் குறிப்பிட்டுத்தான் கடந்த பிப்ரவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் நடந்த நான்கு நிதிக் கொள்கை கூட்டத்திலும் தொடர்ந்து வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இது வரும்காலங்களிலும் தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்து வருகின்றது. ஆனால், தனியார் முதலீட்டை ஊக்குவித்து பொருளாதார வளர்ச்சியினை உயர்த்த எடுக்கப்பட்ட இந்த வட்டி குறைப்பு முயற்சிகள் எந்த ஒரு பலனையும் இதுவரை தரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. சொல்லப் போனால் தனியார் முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் மேலும் தொடர்ந்து சரிந்து கொண்டேதான் வருகின்றன....

திருக்குறளை வெறுத்த பார்ப்பனர்: அயோத்திதாசர் தரும் தகவல்

திருக்குறள் தாழ்ந்த வருணத்தாரால் இயற்றப்பட்ட நூல் ஆதலால் பிராமணர்கள் அதை வெறுத்தனர். இந்தக் கருத்தினை அயோத்திதாசர், எல்லீஸ் துரையுடன் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் மூலம் விளக்குகிறார். 1796இல் சென்னைக்கு வந்த எல்லீஸ் துரை தமிழ் கற்க விருப்பம் கொண்டு சில தேர்ந்த ஆசிரியர்கள் மூலம் அதனை நிறைவேற்றிக் கொண்டார். அயோத்திதாசரின் பாட்டனார் எல்லீஸ் துரைக்குத் திருக்குறள் நூல் ஒன்றினைக் கொடுத்து அனுப்பினார். இதைப் படித்த எல்லீஸ் துரை இதற்கு விளக்கமளிக்குமாறு ஆசிரியர்களைக் கேட்க, அப்பிராமணர்கள் அது தீண்டத்தகாத நூல், திருவள்ளுவர் தீண்டத்தகாதவர் என்று கூற எல்லீஸ் அவர்களுக்குத் திருக்குறள் மீது அதிக ஆர்வம் உண்டானது. நூல் கொடுத்தனுப்பியவரை வரவழைத்துப் பிராமணர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்களே ஏன் என்று கேட்க அவர் கூறிய பதில் வருமாறு: “எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம். எங்கள் வீதிக்குள் பிராமணர் வந்தால் உங்கள் பாதம் இட்ட இடம் பழுதாகிவிடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும்...

‘குறளு’க்கு ‘குரல்’ கொடுத்த பெரியார் – முனைவர் மு.பா. குப்புசாமி

திருக்குறள் குறித்து பெரியார் தெரிவித்த கருத்துகள் – நடத்திய மாநாடுகள் – மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்து ஒரு பார்வை. பெரியாரது முக்கியக் கொள்கைகளில் ஒன்று கடவுள் மறுப்பாகும். கடவுள் பெயரால்தான் அனைத்துச் சீர்கேடுகளும் நடைபெறுகின்றன என்பதும் சமூகம் சீர் அடைய வேண்டுமானால் கடவுள் பற்றிய கற்பிதங்கள் உடைபட வேண்டும் என்பதும் பெரியார் கருத்து. சைதாப்பேட்டை திருவள்ளுவர் மன்றத்தில் பெரியார் கடவுளைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: தமிழனுக்கு எப்போதும் உருவக் கடவுள் இருந்ததில்லை. கடவுள் சக்தியை விஞ்ஞான அறிவு மீறி வருகிறது. அறிவுக்கு மதிப்பு மிகுந்து கடவுளுக்கு மதிப்பு மங்கி வருகிறது. சுகாதார அதிகாரிகளால் மாரியாத்தாள் மதிப்பிழந்தாள். திருக்குறளின் வெற்றி மெய்மை அறிவொளியின் வெற்றி (‘விடுதலை’ 9.11.1949) – எனக் குறிப்பிடுகின்றார். திருவள்ளுவர் கடவுள் பெயரால் பிரிந்து கிடக்கும் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் குறளினை பெரியார் மேற்கோள் காட்டுகிறார். “எந்த நாட்டில், சாதிப் பற்றியும், மதங்கள் பற்றியும் கடவுள்கள் பற்றியும் கூட்டங்கள் இருந்து...

இசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2) “நாடகங்களில் கருத்துகளே வேண்டும்; இசையைத் தவிர்க்க வேண்டும்” என்றார் பெரியார் முனைவர் வே. இராமசாமி

இசை நாடகத் துறையில் பெரியார் இயக்கம் நடத்திய கலகம் குறித்து முனைவர் வே. ராமசாமி எழுதிய நூலிலிருந்து இரண்டாம் பகுதி இது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதி, குத்தூசி குருசாமி இரணியனாக நடித்த நாடகத்தில் பெரியாரின் தலைமை உரை. நாடகம் குறித்த அவரது ஆழமான சிந்தனையை வெளிப்படுத்துகிறது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதி, குத்தூசி குருசாமி இரணியனாக நடித்த நாடகத்துக்கு தலைமையேற்று சென்னையில் பெரியார் பேசினார். பெரியார் தன் தலைமையுரையில், “….. இங்கு சங்கீத வித்வான்களே நாடக மேடையைக் கைப்பற்றிக் கொண்டதானது, நாடகக் கலையைச் சங்கீதம் அழித்துவிட்டது என்றும், மக்களது நாடகாபிமானமும் சங்கீதத்தில் திருப்பப்பட்டு விட்டது என்றும்தான் கருத வேண்டும். நாடகம் நடிக்கப்படும் கதைகள் விஷயமும், தற்கால உணர்ச்சிக்கும் தேவைக்கும் சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல் பழமையைப் பிரச்சாரம் செய்யவும், மூட நம்பிக்கை, வர்ணாச்சிரமம், ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு, பெண்ணடிமை, பணக்காரத் தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும் அவைகளைப் பாதுகாக்கவும் தான்...