வாசகர்களிடமிருந்து…

காஷ்மீர் பற்றிய வரலாற்றை எளிமையாக விளக்கியது நிமிர்வோம் கட்டுரை சிறப்பு உரிமை காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமல்ல; வடகிழக்கு மாநிலங்களுக்கும் இருக்கிறது என்பதை ஆதாரங் களுடன் கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது. காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதாக பா.ஜ.க. அரசு செய்து வரும் பொய்ப் பிரச்சாரத்தக்கு தேசிய பார்ப்பன ஊடகங்களும் துணை போவது கடும் கண்டனத்துக்கு உரியது. பி.பி.சி. போன்ற சர்வதேச ஊடகங்கள் காஷ்மீரில் மக்கள் நடத்தும் போராட்டத்தை  வெளிப்படுத்துவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் அம்பலமாவது தேசிய பார்ப்பன ஊடகங்கள் தான்!

அறிவழகன், சென்னை-42

இசை நாடகத் துறையில் பெரியார் இயக்கத்தின் கலகங்களை முனைவர் வே. இராமசாமி, குடிஅரசு இதழ்களிலிருந்து ஏராளமான செய்திகளுடன் எடுத்துக் காட்டியிருந்தார். பெரியாரே இரணியன் வேடம் போட்டு நடிக்க விரும்பிய செய்தி பெரியார் ஏதோ கலையையே வெறுத்தவர் என்ற தவறான புரிதலுக்கு நல்ல மறுப்பு அது மட்டுமின்றி நாடகம் 2 மணி நேரத்துக்குள் முடிவடைய வேண்டும். நாடகக் காட்சி தரும் உணர்ச்சிகளைப் பாதிக்கும் பாடல்கள் இடம் பெறக் கூடாது என்று பெரியார் பேசியிருப்பது நாடகத்துறை குறித்து பெரியாருக்கு இருந்த பார்வையை வெளிப்படுத்துகிறது. இளைய தலைமுறைக்கு இதுபோன்ற வரலாற்றுச் செய்திகளை நிமிர்வோம், தொடர்ந்து வெளியிட வேண்டும்.

தேன்மொழி, பல்லடம்

திருக்குறள் – தீண்டத்தகாத நூல் என்பதே பார்ப்பனர்கள் கருத்து. 1796இல் சென்னை வந்த எல்லீஸ் துரையிடம் அயோத்தி தாசரின் பாட்டனார் திருக்குறளைத் தந்தார் என்பது மிகச் சிறந்த வரலாற்றுக் குறிப்பு. திருக்குறளை சுவடி வடிவில் பாதுகாத்து வந்தவர் அயோத்தி தாசர் பண்டிதரின் பாட்டனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழினியன், கோவை

 

You may also like...