“நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை” என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் ஆகஸ்டு 7 முதல் 12 வரை நடத்திய பரப்புரைப்பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம், ஆகஸ்டு 12 வெள்ளி மாலை சேலம்மாவட்டம் ஆத்தூரில் எழுச்சியுடன் நடந்தது. நிறைவு விழாவின் தொடக்க நிகழ்வாக நடைபெற்ற விரட்டு நாடக குழுவினரின் நாடகம்.
‘நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை’ என்ற முழக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் நான்கு முனைகளிலிருந்து புறப்பட்ட பயணம் குறித்த செய்தி தொகுப்பு. சென்னையிலிருந்து புறப்பட்ட பயணக் குழு, ஆகஸ்டு 6ஆம் தேதி தொடக்க விழாவை சென்னை இராயப்பேட்டையில் பொதுக் கூட்டமாக நடத்தி, 7ஆம் தேதி காலை புறப்பட்டது. முதல் நாள் பயணத்தை காஞ்சிபுரத்தில் நிறைவு செய்து இரண்டாம் நாள் பயணத்தை நெமிலியில் நடத்தி முடித்து, காவேரிப்பாக்கம் வந்தவுடன், ‘இந்து முன்னணி’ என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே காவல் துறை வேலூர் மாவட்டம் முழுதும் அனுமதி மறுத்தது. அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கும் காவல்துறை அனுமதி மறுத்தது. காவல்துறை தடையைத் தொடர்ந்து சென்னை பரப்புரைக்குழுவினரும் வீதி நாடகக் குழு வினரும் சத்திய மங்கலம் பரப்புரைக் குழுவின ரோடு இணைந்து பரப்புரை செய்ய முடி வெடுத்து ஈரோடு பயணமாயினர். சென்னைக் குழுவைச் சேர்ந்த தோழர்களில் ஒரு பிரிவினர் ஆத்தூரில் தங்கி நிறைவு விழா நிகழ்ச்சிக்கான நன்கொடை திரட்டல்;...
“நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் ஆகஸ்டு 7 முதல் 12 வரை நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம், ஆகஸ்டு 12 வெள்ளி மாலை சேலம் மாவட்டம் ஆத்தூரில் எழுச்சியுடன் நடந்தது. 6 நாள் பயணத்தையும் முடித்துக் கொண்டு ஆத்தூரில் கழகச் செயல் வீரர்கள் திரண்டிருந்த காட்சி ஒரு மாநாடு போலவே இருந்தது. பேய், பில்லி, சூன்யம், சோதிடம், தீ மிதித்தல் உள்ளிட்ட மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளை ஊர் ஊராகச் சென்று தோழர்கள் வீதி நாடகம், மந்திரமா-தந்திரமா பாடல்கள் வழியாக விளக்கியபோது மக்கள் தந்த ஆதரவு, தோழர்களை உற்சாகக் கடலில் மூழ்கச் செய்து விட்டது. பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சிகளை சில நிமிடங்கள் நடத்தினார். சேலம் பிரபு குழுவினர் இரண்டு வீதி நாடகங்களை நடத்தினர். தொடர்ந்து ‘விரட்டு’ வீதி நாடகக் குழுவினரின் ‘ஒன்றுமில்ல’...
நாமக்கல் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அறிவியல் பரப்புரைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு. புகைப்படம் தோழர் வைரம், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் தமிழகத்தின் நான்கு முனைகளில் ஆரம்பித்து கிராமங்கள்,ஊர்கள், நகரங்கள் வழியாக பயணித்து மக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது
நம்புங்கள் அறிவியலை நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கக்தோடு திவிக முன்னெடுக்கும் நான்கு திசைகளிலிருந்தும் அறிவியல் பரப்புரை பயணத்தின் நோக்கத்தை வலியுறுத்தி 12082016 அன்று நடைபெற உள்ள நிறைவுரை பொதுக்கூட்டத்தின் சுவரெழுத்து இராணிப்பேட்டை ஆத்தூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் சிறப்புரையோடு.
திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் நிமிர்வு கலைக்குழுவினரின் பறையிசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.இந்நிகழ்ச்சி கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கலை நிகழ்சியாக மட்டுமல்லாமல்இசையிலும் நடைபெற்றுவரும் தீண்டாமை குறித்தும் விளக்கங்களுடன் நிகழ்சியை நடத்தினர்.சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்களுக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. பொருளாளர் துரைசாமி அவர்களும்,அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி அவர்களும் தோழர்களை பாராட்டி பரிசளித்தனர்.
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தின் சத்தி அணியின் மூன்றாம் நாள் முதல் நிகழ்வு பூதப்பாடியில் காலை 10 மணிக்கு மேட்டூர் கோவிந்தராஜ் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சி மற்றும் பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து நாத்திக சோதி,ரமேசு,பால் பிரபாகரன்,ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் வேணுகோபால் நன்றியுரை கூற பயணம் அப்பகுதியில் முடிவுற்றது.தோழர்களுக்கு திராவிடர் கழகத்தின் தோழர்கள் தேனீர் வாங்கி கொடுத்தனர்.பயணக்குழு சித்தார் பகுதிக்கு வந்தடைந்த்து.அங்கு தோழர் கோவிந்தராசு குழுவின் பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நாத்திக சோதி,வேணு கோபால் ,பால்பிரபாகரன், ஆகியோர் உரையாற்ற தோழர் ஆனந்தன் நன்றியுரை ஆற்றினார். தோழர்கள் அனைவருக்கும் தோழர் ஆனந்தன் மதிய உணவு ஏற்பாடு செய்தார். மதிய உணவு மற்றும் சிறிது நேரம் ஓய்வு க்கு பிறகு பயண குழு பவானி பேருந்து நிலையம் வந்து அடைந்த்து. நம் பயணக்குழு பவானி வந்த...
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தின் சத்தி அணியின் இரண்டாம் நாள் நிறைவு பொதுக்கூட்டம் குருவரெட்டியூரில் 8.8.2016 மாலை 7 மணிக்கு துவங்கியது. முதல் நிகழ்வாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை இசை முழக்கத்தோடு தொடங்கியது.தொடர்ந்து பகுத்தறிவு பாடல்கள் பாடியபின் பொது கூட்ட நிகழ்வுகள் தொடங்கியது.தோழர் நாத்திகசோதி தலைமை ஏற்க தோழர் வேல்முருகன் வரவேற்பு உரை ஆற்ற தோழர் இராம.இளங்கோவன், தோழர் இரத்தினசாமி,தோழர் பால்பிரபாகரன் ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் திலிபன் நன்றியுரை ஆற்றினார்.
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் நம்புங்கள் அறிவியலை!நம்பாதீர்கள் சாமியார்களை எனும் தலைப்பில், அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தை தமிழகத்தில் 4 பகுதிகளில் இருந்து தொடங்கி மாநிலம் முழுவதும் பலவேறு பகுதிகளில் நடக்கிறது. அதன் ஒருபகுதியாக சத்தியமங்கலத்தில் இருந்து ஆகத்து 7 ம் தேதி கழக பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் தலைமையில் பரப்புரை பயணம் துவங்கியது. பயணத்தின் முதல் நிகழ்வாக சத்தியமங்கலம் கழக தோழரும், மேட்டூர் தோழர் சம்பத் அவர்களின் தம்பியுமான தோழர் கோகுல்ராசு அவர்களின் படத்தினை தோழர் பால்பிரபாகரன் திறந்து வைத்தார். தொடர்ந்து மேட்டூர் டி கே ஆர் இசைக்குழுவின் பகுத்தறிவு இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பாடல்களுக்கு இடையே தோழர் கோவிந்தராசு மற்றும் தோழர் கிருட்டிணன் அவர்களும் நகைச்சுவையாக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தருக்கவகையில் கருத்துக்களை முன்வைத்தனர். தொடர்ந்து மாநில வெளியீட்டு செயலாளர் இராம இளங்கோவன் கோபி வேலுச்சாமி ஆகையோர் உரையாற்றினார்கள். தோழர் மூர்த்தி நன்றியுரை ஆற்ற அங்கு.நிகழ்ச்சி நிறைவுற்றது. ஆதிதமிழர் முன்னணி அமைப்பை சார்ந்த தோழர்கள் நமது தோழர்களுக்கு தேநீர் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பயணக்குழு நம்பியூர் ஒன்றிய...
திருப்பூரில் சுவர் விளம்பரங்கள் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை “பயணத்திற்கு திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள். ஓவியர் தோழர் பழனி பத்மநாபன் அவர்கள்.
பரப்புரைப் பயணத்தின் செய்திகளை அனுப்புவது தொடர்பாக……… கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை ”நம்புங்க அறிவியல …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் முழக்கத்தோடு நடைபெறும் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் தமிழகத்தின் நான்கு முனைகளில் புறப்பட்டு சிற்றூர்கள்,நகரங்கள் வழியாக பயணித்து மக்களைச் சந்தித்து விழிப்புணர்வுப் பரப்புரை செய்ய உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 3 இடங்கள் என்கிற அளவில் தெருமுனைக் கூட்டங்களும், பொதுக்கூட்டங்களுக்குமான ஏற்பாடுகளை கழகத் தோழர்கள் செய்துவருகிறார்கள் 4 அணிகள் 5 நாட்கள் என 80 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ள இந்த பரப்புரைப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்வின் செய்திகளையும் தோழர்கள் தவறாது பதிவு செய்து, அதனை கழகத் தலைமைக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்செய்திகளை அனுப்புவதற்கென ஒவ்வொரு அணிக்கும் ஒரு தோழர் பொறுப்பெடுத்துக்கொள்வது நல்லது. ஒவ்வொரு நிகழ்ச்சிகள் பற்றி குறைந்த அளவு 3 புகைப்படங்கள்,கலந்து கொண்டோர் மற்றும் செய்திகள் ஆகியவற்றைக்...
திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் .கொளத்தூர்மணி அவர்கள் தலைமையில்… திருவாரூர் மாவட்டதில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் நம்புங்கள் அறிவியலை… நம்பாதீங்க சாமியார்களை…. அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம்!… 08.08.2016 மாலை 5மணிக்கு நீடாமங்கலம் பெரியார் சிலைஅருகில்.. இரவு 7மணிக்கு மன்னார்குடி பந்தலடி கீழ்புறத்தில்… மாபெரும் பொதுக்கூட்டம்…!! அனைவரும் வாரீர்!
மக்களிடம் அறிவியல் சிந்தனைகளையும் பகுத்தறிவு கருத்துகளையும் விளக்கி, ‘நம்புங்க-அறிவியலை; நம்பாதீங்க-சாமியார்களை’, ‘அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை’ என்ற முழக்கத்தோடு, பரப்புரைப் பயணத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டுள்ளது. ஆகஸ்டு 7ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை தமிழகம் முழுதும் நான்கு முனைகளிலிருந்து பரப்புரை பயணக் குழு புறப்படுகிறது. சத்தியமங்கலம் – சென்னை – மயிலாடுதுறை – திருப்பூரிலிருந்து 4 அணிகளும் தனித் தனி யாகப் புறப்பட்டு, மக்களிடம் அறிவியல் கருத்துகளையும் மூடநம்பிக்கைகளால் சமூகத்தின் பாதிப்புகளையும் விளக்கிப் பேசுவார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் என்றால் கருவிலேயே அழிக்கும் பெண் சிசுக் கொலை, 18 வயது முழுமையடைவதற்கு முன்பே சிறுமிகளாக இருக்கும் பெண்களுக்கு ‘மரபு வழக்கம்’ என்ற பெயரால் நடத்தப்படும் இளம் வயது திருமணத்தால் பெண்களுக்கு உடலியல், உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் – பறிக்கப்படும் பெண்களின் உரிமைகள்; பெண்களிடம் அவர்களின் மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி ஏமாற்றி கெடுக்கும் சாமியார்கள் மோசடி, ‘பேய்- பில்லி-சூன்யம்’ என்ற கற்பனைகள்...