Tagged: எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்

இளம் பிள்ளை கூட்டத்தில்   ஜாதி வெறியர் காலித்தனம்

இளம் பிள்ளை கூட்டத்தில் ஜாதி வெறியர் காலித்தனம்

19-07-2016 முங்கப்பட்டியிலும் , 23-07-2016 இளம்பிள்ளை அருகேயுள்ள அழகப்பம்பாளையம் புதூரிலும் ‘திராவிடர் விடுதலைக் கழகம் இளம்பிள்ளை’ நடத்திய “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” எனும் தலைப்பில் தெருமுனை பரப்புரை கூட்டம் நகர செயலாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டங்களில் மோகன்ராஜ் வரவேற்புரையாற்ற ரமேசு, சந்திரசேகர் பகுத்தறிவு பாடல்கள் பாடினர். தோப்பூர் கண்ணன், கோபிநாத் சிற்றுரையாற்றினர். தொடர்ந்து ஆத்தூர் மகேந்திரன் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடத்தி சிறப்புரையாற்றினார். அபுதூர் கூட்டத்தின் இறுதியில் காவல் துறையின் பாதுகாப்பையும் மீறி ஜாதி வெறியர்கள் பேச்சாளரை நோக்கி குளிர்பான பாட்டிலை வீசி தாக்கினர் இதில் தோழர் மோகன்ராஜ் தலையில் பாட்டில் பலமாக தாக்கியது. தோழர் சிகிச்சை எடுத்து வருகின்றார். ஜாதி வெறியர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. செய்தி மோகன்ராஜ் வேளாண், கல்விக் கடனை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி தெருமுனைக் கூட்டம் பேராவூரணி அருகில் ரெட்ட வயல் கடைத்தெருவில் வேளாண் கடனையும், கல்விக் கடனையும் விலக்கிக் கொள்ள வலியுறுத்தி...

இந்து முன்னணி சலசலப்புகளை முறியடித்து நம்பியூரில் நடந்த பரப்புரைப் பயண நிறைவு விழா

இந்து முன்னணி சலசலப்புகளை முறியடித்து நம்பியூரில் நடந்த பரப்புரைப் பயண நிறைவு விழா

office 2010 key windows 7 key sale windows 10 home-key windows 10 education windows 10 pro key office 2016 key windows 10 key office 2013 key windows 7 key  Buy Windows 7  |  Sale Windows 7 Ultimate Keys   |  Windows 10 Home Key Sale  |  windows 8.1 key sale  |  Windows 10 Product Key Sale  |  Microsoft Office 2016 Serial Keys  |  Windows 7 Professional Download ISO  |  MS Office 2016 Key For Activation Latest Full Free Download  |  How to download and install the Microsoft Office 2016   |  Windows 10 Product Key [UPDATED]  |  Windows 7 Ultimate ISO download  |  Legit Windows 7 Product Key Online Store, PayPal...

பிரச்சார பயண நிறைவு பொதுக்கூட்டம் நம்பியூர் 13122015

ஈரோடு (வடக்கு) மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ”எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” என்னும் பயண நிறைவு விழாப் பொதுக்கூட்டம், 13-12-2015 அன்று மாலை நம்பியூர் பேருந்து நிலைய திடலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நம்பியூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ரமேசு தலைமை தாங்கினார். தோழர் செல்வகுமார் வரவேற்புரையாற்றினார்.மேட்டூர் டி.கே.ஆர். பகுத்தறிவு இசைக்குழுவினரின் சாதியொழிப்பு, பகுத்தறிவு பாடல்களுடன் தொடங்கியது. கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரோடு இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் கோபி இளங்கோ, பேச்சாளர் கோபி வேலுச்சாமி ஆகியோர் உரையாற்றினார். அந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற உறுப்பினர்களுக்கு, அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, கழகத் தலைவர் வழியாக வழங்கினார்.

பெரியாரே  சமூகத்தின் ஞாயிறு

பெரியாரே சமூகத்தின் ஞாயிறு

இதுவரை முகநூலில் மூழ்கி முடிப்பேன் ஞாயிறை … இம்முறை முகங்களில் மூழ்கி முடித்தேன் ஞாயிறை … இயந்திர வாழ்வில் இயக்க ஓய்வாய் இரக்கம் பேச ஞாயிறு … இயல்பு மீறிய இயக்க வாழ்வில் இதயம் பேசிட ஞாயிறு … வீதிதனில் இறங்கி பரப்புரையில் கலந்தே மக்களதில் கலந்த ஜாதி புழுதியதை சுட்டெரிக்கும் முயற்சியதில் ( தி.வி.க )பெரியாரின் ஞாயிறுகள் … காஞ்சி மாவட்டமெங்கும் காலடி பதித்தே கருத்ததனை விதைத்தே பெரியாரின் கனவெனவே நின்ற ஞாயிறு … தோழர்களின் பணியதுவோ கடினமன்றோ மக்களின் அறியாமையோ கொடுமையன்றோ சுட்டெரிக்கும் வேளையிலும் சுடாமல் கையேந்திய ஞாயிறு …. களமாடும் கருப்புகளின் கம்பீரம் கண்கொண்டு கண்டேனே கருத்தாடும் கரும்புலிகள் சொல்கீரி சிலிர்த்ததோர் ஞாயிறு … பெரியாரே சமூகத்தின் ஞாயிறு என்றுணர்ந்த எனக்கும் மறக்காதே இந்த ஞாயிறு …. இரா. செந்தில் குமார் ………………. செய்தி : திராவிடர் விடுதலை கழகம் சார்பில் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்...

காஞ்சி மாவட்டத்தில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

ஏன் இந்த முழக்கம்? எதற்காக இந்த பரப்புரை? நமது இளைய தலைமுறையின் கவனத்திற்க்கு சில சிந்தனைகளை முன் வைக்கிறோம். தமிழர்களாகிய நாம்,தாழ்த்தபட்ட ஜாதிகளாக, பிற்படுத்தபட்ட ஜாதிகளாக எப்போது ஆனோம்? நமது பாட்டன்,முப்பாட்டன், காலங்களில் நாம் எப்படி வாழ்ந்தோம். பார்பனருக்கும், பண்ணையார்களுக்கும் அடிமைகளாகக் கிடந்தார்கள் நமது முன்னோர்கள்.அவர்களுக்கு எழுத படிக்க தெரியாது.உழைப்பு ,அடிமை வேலை ,குல தொழில் – இவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பது அன்று சமூதாயம் விதித்த காறாரான கட்டளை. ஜாதியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த இழிவுகளை எப்படி தகர்த்தோம். ஜாதியத்தை எதிர்த்த பெரியாரும்,அம்பேத்கரும் போராடிப் பெற்று தந்த கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான உரிமைகளை பெற்றதால் தகர்தோம். இந்த இடஒதுக்கீடுகளை அமல்படுத்துவதில் காமராசர் ஆட்சியில் தொடங்கி தமிழகத்தில் தொடர்ந்தது. அதிகாரத்துக்கு வந்த ‘திராவிட’ கட்சிகள் ஆர்வம் காட்டின. ‘ஜாதி’ யை காட்டி, ‘படிக்ககூடாத ஜாதி’;  ‘உழைக்க வேண்டிய ஜாதி’ என்றார்கள். அத்தகைய ஜாதி தடைகளை, அதே ஜாதி அடிப்படையில் கன்டறிந்து...

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில்  பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பரப்புரைப் பயணங்கள்

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பரப்புரைப் பயணங்கள்

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்தநாள் ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஒவ்வொரு ஒன்றிய பகுதிகளிலும் கொடியேற்று விழா மற்றும் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! எங்கள் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும். 22.9.2015 அன்று முதல் 2.12.2015 அன்று வரை வாரம் ஒரு நாள் பரப்புரை பயணம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 22.09.15 அன்று கோபி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பலூர் பகுதியில் பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் பரப்புரைப் பயணம் துவங்கியது. சிறுவலூர் அருகில் உள்ள எலந்தக்காடு பகுதியில் அமைந்துள்ள கழகக் கொடிகம்பத்தில் கழக கொடியினை ஏற்றிய பின் துவங்கிய பயணம் சிறுவலூர் பகுதியை அடைந்தது. அங்கு காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல தந்திரம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இடையே காவை இளவரசன் சாமியார்கள் லிங்கம் எடுப்பது, திருநீறு வரவழைப்பது எல்லாம் மந்திர வேலை அல்ல! எல்லாம் மக்களை ஏமாற்றும் வகையில் செய்யும் தந்திரம் தான் என...

திருப்பூர் மாவட்டத்தின் பிரச்சார பயணம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ”எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம், எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்” எனும் முழக்கத்தோடு திருப்பூர் மாவட்ட பிரச்சார பயணம் 09.10.2015 காலை 11 மணிக்கு ஆரம்பமானது. தமிழகம் முழுவதும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தற்போது நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிற இந்த பிரச்சார பயணம் மக்களை நேரில் சந்தித்து ஜாதீய கொடுமைகள் குறித்தும்,அடுத்த தலைமுறைக்கான வேலையின்மை குறித்தும்,இட ஒதுக்கீடு குறித்தும் பல்வேறுவகையான கருத்துக்கள் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. நேற்று ஊத்துக்குளியில் துவங்கிய திருப்பூர் மாவட்ட பிரச்சார பயணத்தில் கழக மாநில அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி,கழக மாநில பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். திராவிடர் கலைக்குழுவின் தோழர் சங்கீதா அவர்கள் கொள்கை பாடல்களை பாடி நிகழ்சியை துவங்கினார்.திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் தோழர் முகில்ராசு அவர்கள் அறிமுக உரையாற்றினார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பகுத்தறிவு கருத்துக்களையும் கூறி தன்”மந்திரமா?தந்திரமா?நிகழ்சியை தோழர் காவை...

”எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்” – அசத்தும் வீதி நாடகம் – நக்கீரன் இதழ்.

திராவிடர் விடுதலைக் கழகம் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் பிரச்சார பயணம் குறித்து நக்கீரன் 07102015 இதழில். கழக பொதுச்செயலாளர்,சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி,திராவிடர் கலைக்குழுவின் தோழர் ஜோதிபிரபு ஆகியோர் பேட்டியுடன்

பெரியார் பிறந்த நாள் விழா மற்றும்  தெரு முனை பிரச்சாரம்

பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தெரு முனை பிரச்சாரம்

தந்தை பெரியாரின் 137-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஒவ்வொரு ஒன்றிய பகுதிகளிலும் கொடியேற்றுவிழா மற்றும் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! எங்கள் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும் பிரச்சார பயணம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆதன் அடிப்படையில் கடந்த 22-09-15 அன்று கோபி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பலூர் பகுதியில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தெருமுனை பிரச்சாரம் துவங்கியது. சிறுவலூர் அருகில் உள்ள எலந்தக்காடு பகுதியில் அமைந்துள்ள கழக கொடி கம்பத்தில் கழக கொடியினை ஏற்றிய பின் துவங்கிய பயணம் சிறுவலூர் பகுதியை அடைந்தது. அங்கு காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல தந்திரம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இடையே தோழர் காவை இளவரசன் அவர்கள் சாமியார்கள் லிங்கம் எடுப்பது, திருநீறு வரவழைப்பது எல்லாம் மந்திர வேலை அல்ல! எல்லாம் மக்களை ஏமாற்றும் வகையில் செய்யும் தந்திரம் தான் என பல்வேறு செயதிகளை கூறிக்...

கொட்டும் மழையில் ஜாதிக்கெதிரான பொதுக்கூட்டம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்” “இளையதலைமுறைக்கு வேலைவேண்டும்” என்கிற தலைப்பில் 27-09-2015,ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. தோழர் துரை.தாமோதரன் அவர்களின்”மந்திரமா-தந்திரமா”நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. தொடர்ந்து திராவிடர் கலைக்குழுவின் நாடகங்கள் அரங்கேறியது. நமது கலைக்குழுவின் பகுத்தறிவு நாடகங்கள் பகுதியில் நல்ல வரவேற்பைப்பெற்றன. கூட்டத்தற்கு நகரசெயலாளர் தோழர் வெங்கட் தலைமையேற்றார். மாவட்டத்தலைவர் சாமிநாநன்,மாவட்ட செயலாளர் சரவணன்,மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் நீண்டதொரு சிறப்புரையை நிகழ்த்தினார்கள். இறுதியாக தோழர் ப.செல்வம் நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது. கொட்டும் மழையிலும் மக்கள் இறுதிவரை கூட்டத்தை கேட்டது குறிப்பிடத்தக்கது