இளம் பிள்ளை கூட்டத்தில் ஜாதி வெறியர் காலித்தனம்

19-07-2016 முங்கப்பட்டியிலும் , 23-07-2016 இளம்பிள்ளை அருகேயுள்ள அழகப்பம்பாளையம் புதூரிலும் ‘திராவிடர் விடுதலைக் கழகம் இளம்பிள்ளை’ நடத்திய “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” எனும் தலைப்பில் தெருமுனை பரப்புரை கூட்டம் நகர செயலாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டங்களில் மோகன்ராஜ் வரவேற்புரையாற்ற ரமேசு, சந்திரசேகர் பகுத்தறிவு பாடல்கள் பாடினர். தோப்பூர் கண்ணன், கோபிநாத் சிற்றுரையாற்றினர்.

தொடர்ந்து ஆத்தூர் மகேந்திரன் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடத்தி சிறப்புரையாற்றினார். அபுதூர் கூட்டத்தின் இறுதியில் காவல் துறையின் பாதுகாப்பையும் மீறி ஜாதி வெறியர்கள் பேச்சாளரை நோக்கி குளிர்பான பாட்டிலை வீசி தாக்கினர் இதில் தோழர் மோகன்ராஜ் தலையில் பாட்டில் பலமாக தாக்கியது. தோழர் சிகிச்சை எடுத்து வருகின்றார். ஜாதி வெறியர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. செய்தி மோகன்ராஜ் வேளாண், கல்விக் கடனை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி தெருமுனைக் கூட்டம் பேராவூரணி அருகில் ரெட்ட வயல் கடைத்தெருவில் வேளாண் கடனையும், கல்விக் கடனையும் விலக்கிக் கொள்ள வலியுறுத்தி தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. வீரக்குடி இராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக மற்றும்  இந்திய அரசுகள் மாணவர்களின் கல்விக் கடனை உடனே விலக்கிக்கொள்ள வேண்டும்; வங்கிகள் அளித்த கடனை வசூலிக்கும் உரிமையை தனியார்   நிறுவனங்களுக்கு வழங்கும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்; வியாபார நோக்கில் செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும்; தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவயமாகக் கல்வியை வழங்க வேண்டும்; கல்விக் கடன் என்ற பெயரில் தனியார் கல்வி நிறுவனங்களை வளர்க்கும் போக்கை அரசு கைவிட வேண்டும்;

தனியார் பன்னாட்டு நிறுவனங்களின் வேளாண் வாகனங்களை விற்பனை செய்திட வேளாண் கடன்களைக் கொடுத்துவிட்டு உழவர்களைக் கடனாளியாக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும்; வேளாண் உற்பத்திக்குத் தேவையான அனைத்துச் செலவினங்களையும் அரசே மானியமாக வழங்கி வேளாண் உற்பத்தியைப் பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் புரட்சிக் கழக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில், வி.சி.முருகையன், ஆயர் த.ஜேம்ஸ், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் மற்றும் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். கூட்டத்தில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 11082016 இதழ்

You may also like...