திருப்பூர் மாவட்டத்தின் பிரச்சார பயணம்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின்
”எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்,
எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்”
எனும் முழக்கத்தோடு திருப்பூர் மாவட்ட பிரச்சார பயணம் 09.10.2015 காலை 11 மணிக்கு ஆரம்பமானது.
தமிழகம் முழுவதும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தற்போது நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிற இந்த பிரச்சார பயணம் மக்களை நேரில் சந்தித்து ஜாதீய கொடுமைகள் குறித்தும்,அடுத்த தலைமுறைக்கான வேலையின்மை குறித்தும்,இட ஒதுக்கீடு குறித்தும் பல்வேறுவகையான கருத்துக்கள் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
நேற்று ஊத்துக்குளியில் துவங்கிய திருப்பூர் மாவட்ட பிரச்சார பயணத்தில் கழக மாநில அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி,கழக மாநில பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். திராவிடர் கலைக்குழுவின் தோழர் சங்கீதா அவர்கள் கொள்கை பாடல்களை பாடி நிகழ்சியை துவங்கினார்.திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் தோழர் முகில்ராசு அவர்கள் அறிமுக உரையாற்றினார்.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பகுத்தறிவு கருத்துக்களையும் கூறி தன்”மந்திரமா?தந்திரமா?நிகழ்சியை தோழர் காவை இளவரசன் அவர்கள் சிறப்பாக செய்ததை குழந்தைகள்,கூடியிருந்த பொதுமக்க அனைவரும் மிகவும் ரசித்தனர்.தலைமைக் கழக பேச்சாளர் தோழர் கோபி வேலுச்சாமி அவர்கள் நகைச்சுவையோடு பெரியாரிய கருத்துக்களை முன்வைத்ததை கொளுத்தும் வெயிலிலும் ஊத்துக்குளி பேருந்து நிலையம் முன் கூடியிருந்த பொதுமக்கள் ஆர்வமாக கேட்டனர்.
இந்நிகழ்சியில் தோழர் சூலூர் பன்னீர் செல்வம்,தோழர் அகிலன்,தோழர் பெரியார் காலணி முத்து,தோழர் சூர்யா,தோழர் குமார் நகர் மூர்த்தி,தோழர் பரிமளராசன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்சியின் இறுதியில் நிகழ்சியை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவர் தான் திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னையும்,தன் நண்பர்களையும் இணைத்துக்கொண்டு பணியாற்ற விருப்பம் தெரிவித்து தொடர்பு எண்களை பெற்றுக்கொண்டது நிகழ்சிக்கு சிறப்பாக அமைந்தது
அடுத்ததாக ஊத்துக்குளியை அடுத்து செங்கப்பள்ளியில் பிரச்சாரம் செய்வதற்காக பிரச்சார குழு பயணித்தது.இடையில் போகும் வழியில் செங்கப்பள்ளி பாலத்தின் அடியில் மதிய உணவை பிரச்சார குழுவினர் சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடர்ந்தனர்.
உணவு மற்றும் பயண ஏற்பாட்டை தோழர் குன்னத்தூர் ஏ.கே.சி.சின்னச்சாமி மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்