இது ஜனநாயகமா? சாதிய நாயகமா?
25.3.2012 ‘இந்து’ நாளேட்டில் பேராசிரியர் சுரா தராபுரி – இந்தியாவில் சாதிய தீண்டாமைக் கொடுமைகளை விளக்கி எழுதிய கட்டுரையின் சுருக்கம்: 1949 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்ட வரைவு நகலை முன்மொழிந்த அம்பேத்கர், மனிதர்களை பிளவுபடுத்தும் ஒரு சமூகமாக இந்த நாடு இருக்கிறதே, அதன் விளைவுகள் என்னவாகும் என்று தனது அச்சத்தைத் தெரிவித்தார். நிறுவனமாக்கப் பட்ட சாதிய கட்டமைப்பில் தலித் மக்கள் சந்திக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு கொடுமைகள் பற்றிய சரியான புரிதல் அவருக்கு இருந்தது. மேல் கீழ் என்று ஏணிப்படி வரிசை போல் இந்த ஏற்றத் தாழ்வுகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். தீண்டாமைக் கொடுமைகளை அவரே தனது வாழ்க்கையில் சந்தித்தார். சாதிக் கட்டமைப் பின் விளைவான தீண்டாமைக் கொடுமைகள் இப்போதும் தொடருகின்றன. 2012 பிப்.15 அன்று அரியானா மாநிலம் தவுகாத்பூர் கிராமத்தில் ஒரு தலித் இளைஞன் பொது குடிநீர்ப் பானையில் தண்ணீர் குடித்ததற்காக உயர்சாதியினர், அவரது கையை வெட்டினர்....