27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்

பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) 27% இடஒதுக்கீடு 23 ஆண்டுகள் கடந்த பின்பும் 12% மட்டுமே நிரப்பப்பட் டுள்ளது. இதை முழுமை யாகவும் முறையாகவும் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிரப்பக்கோரி (13.2.2016) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட (OBC) ஊழியர்கள் நலச்சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மத்திய அரசை கண்டித்து தொடர் முழக்க கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பேரமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.
பேராசிரியர் டாக்டர் முரளிதரன் விரிவாக இட ஒதுக்கீட்டிலும், அய்.அய்.டி போன்ற உயர் கல்வி நிறு வனங்களிலும் நடைபெறும் மோசடிகளை தனது உரையில் தோலுரித்து காட்டினார். அடுத்து சங்கர், ஐ.ஏ.எஸ்., அகாடமியின் தலைவர் சங்கர், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் எப்படி முறைகேடுகளை இவ் வரசுகள் மேற்கொள்கின்றன இதனால் உயர்சாதியினர் எப்படி பலன் அடைகிறார்கள் என்பதை சுருக்கமாக விளக்கி னார். நிறைவாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமது கண்டன உரையில் –
இடஒதுக்கீட்டை கண் காணிக்க தனி அமைப்பு இல்லாததையும், சமூக நல அமைச்சகத்தின் அக்கறை யின்மையையும், உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் அட்டூழியங்களையும் விளக்கிப் பேசினார்.
நிகழ்வில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மக்கள் நெஞ்சம் கலச இராமலிங்கம், ரெப்கோ வங்கி அதிகாரி திருவேங்கடம் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 18022016 இதழ்

You may also like...