பெரியாரியல் பயிற்சி வகுப்பு – இரண்டு நாட்கள் பாலமலை 17052016 மற்றும் 18052016
2 நாட்கள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு சேலம் மாவட்டம் காவலாண்டியூர் அருகில் பாலமலை முன்பதிவுக்கு மே 5 தேதிக்குள் தொடர்பு கொள்ளவும் 9750052191
2 நாட்கள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு சேலம் மாவட்டம் காவலாண்டியூர் அருகில் பாலமலை முன்பதிவுக்கு மே 5 தேதிக்குள் தொடர்பு கொள்ளவும் 9750052191
திராவிடர் விடுதலைக் கழக சேலம் மேற்கு மாவட்ட சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாளான இன்று 14.4.16 காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலாளர் தோழர் சி.கோவிந்தராசு தலைமையில் கழக தோழர்கள் மேட்டூர் அச்சங்காடு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
01042016 வெள்ளிக்கிழமை மாலை 5-00 மணியளவில் சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் செட்டியூரில் மறைந்த ‘மா.வரதராசன் நினைவேந்தல் நிகழ்வு’ நடைபெற்றது. காவலாண்டியூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் க.ஈசுவரன் தலைமை ஏற்றார். காவலாண்டியூர் சித்துசாமி, கொளத்தூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் சி.சுந்தரராசன் (அ.தி.மு.க), அஞ்சல் துறை சிக்கப்பசெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள், மா.வரதராசன் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை ஆற்றினார். மேலும் கண்ணாமூச்சி ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.பழனிசாமி, எல்.ஐ.சி. முகவர் ரகுபதி, தி.முக. விவசாய அணி ஒன்றிய செயலாளர் தேவராசன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், ஈரோடு மாவட்ட தலைவர் நாத்திகஜோதி, கழக செயற்குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோரும் நினைவேந்தல் உரை ஆற்றினார்கள். இறுதியாக மறைந்த ‘மா.வரதராசன் அவர்களின் தகப்பனாரும், கழகத் தோழருமான மாரி (எ) மாரியப்பன்...
சென்னை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல ஊர்களில் கழக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டன. சென்னையில் கடந்த 16 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி பகுதி கழக சார்பில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வாண்டு இந்த விழா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் விழாவாக நடந்தது. ‘ஜாதி மதம் கடந்து மனிதர்களானோம்; உதவிக் கரங்களை உயர்த்தி உறவுகளானோம்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஓர் ஆறுதல் விழா தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா” – என்ற முழக்கத்தோடு விழா நடந்தது. 13.1.2016 மாலை 5 மணியளவில் புதுவை அதிர்வு கலைக் குழுவினரின் பறை இசை கிராமிய கலை நிகழ்வுகள் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பகுதி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாற்றுடைப் போட்டிகளைத் தொடர்ந்து காவல்துறை துணை ஆய்வாளர் பதவிக்கு முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை பிரித்திகாயாஷினி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நகைச்சுவை, பாட்டு பட்டிமன்றம்...
• வழக்கம்போல் சேலம் காவல்துறை மாநாட்டுக்கு கடைசி நேரத்தில் பிப்.17ஆம் தேதி அனுமதி மறுத்தது. உடனே உயர்நீதிமன்றத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் சார்பில் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு வழக்கு மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் திருமூர்த்தி, மனுவை தாக்கல் செய்து வாதாடினார். மாநாட்டுக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம், இரவு 8 மணிக்குள் மாநாட்டை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. சரியாக 8 மணிக்கு மாநாடு நிறைவடைந்தது. • மாநாட்டு அரங்கில் பெரியார்-அம்பேத்கர் கருத்துகளை தலைவர்களின் படங் களோடு பதாகைகளாக வைக்கப்பட் டிருந்தன. • சமூகம்-அரசியல்-பொருளாதாரத்தில் பார்ப்பன மேலாதிக்கத்தை விளக்கும் பதாகைகள் கண்காட்சியாக வைக்கப்பட் டிருந்தது. • மாநாட்டு அரங்கிற்கு வெளியே பகுதி முழுதும் ஏராளமான கழகக் கொடிகளை தோழர்கள் கட்டியிருந்தனர். • காலை கருத்தரங்கில் நேரு அரங்கம் இளைஞர்களால் நிரம்பி வழிந்தது. “நாங்கள் ஜாதியற்றவர்கள்; ஜாதியை ஒழிக்கக் கூடியவர்கள்” என்ற ‘பாட்ஜை’ சட்டைகளில் குத்தியிருந்தனர். • திறந்தவெளி...
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை” தமிழகமெங்கும் நடத்த திட்டமிடப்பட்டு முதல் மாநாடு ஈரோடு, அடுத்ததாக சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து சேலத்தில் நடத்த அறிவிக்கப்பட்டு கழக தோழர்களால் மாநாட்டு பணிகள் துவங்கப்பட்டன. மாநாடு நடத்துவதற்கான 26-11-2015 அன்று கொடுத்தஅனுமதி கடிதத்திற்கு காவல்துறை நீண்ட அமைதிக்குப்பின் 17-12-2015 அனுமதி மறுத்தது. மாநாடு அறிவிக்கப்பட்ட முந்தையநாள் காவல்துறையின் தடையை உயர்நீதிமன்றத்தின் மூலம் கழகம் உடைத்தது. ”மக்களைப்பிரிக்கும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் 19.12.2015 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் துவங்கியது. மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு,பகுத்தறிவுப் பாடல்களுடன் மாநாடு ஆரம்பமானது. தோழர் குமரப்பா தபேலா வாசிக்க, தோழர் சீனி தவிலும், தோழர் காளியப்பன் உறுமியும் வாசித்தனர். தோழர்கள் கோவிந்தராசு, முத்துகுமார், இசைமதி, அருள்மொழி ஆகியோர் சாதி ஒழிப்பு, பகுத்தறிவுப்...
தீர்மானம் : 1 உரிய பயிற்சி பெற்ற எந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவரையும் அறநிலையத் துறையின் ஆளுகைக்குள் உள்ள கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என 2006 –ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்துக்கு எதிராக பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கில் அண்மையில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்தின் நோக்கத்தையே குழி தோண்டி புதைத்து விட்டது. தீண்டாமையையும், பார்ப்பன மேலாண்மையையும் நிலைநிறுத்தும் – ஆகம சாஸ்திரங்களைப் பின்பற்றுவது “தீண்டாமை” தடுப்பு சட்டத்துக்கோ – சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப் பிரிவுகளுக்கோ எதிரானது அல்ல என்றும் தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகம விதிகள் படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகும் உரிமைக்குரிய கோயில்களில், அதற்கு மாறாக வேறு எந்தப் பிரிவினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு – இந்து மதம் பார்ப்பன மதமே என்பதை உறுதியாக்கியிருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து – தமிழக அரசு...
Self Balancing Scooter Self Balancing Scooter Sale office 2010 key Windows 7 Genuine Product Keys windows 10 key sale windows 10 education Windows 10 Activation Product Keys office 2016 key windows 10 key office 2013 key windows 7 key Product key for window 7 ultimate 64 bit windows 10 home-key windows 10 update windows 7 installation office 2016 iso windows 10 install windows 7 service windows 7 iso Microsoft Office 2013 windows 7 SP1 iso Windows 7 Ultimate Product Key 32bit and 64bit Genuine | Adobe Photoshop CS6 Crack And Keygen Full Download | How To Request a New Windows Product Key |...
நாளை 19.12.2015 சேலத்தில் நடைபெறவுள்ள ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” க்காக தோழர்களின் சுவர் விளம்பரங்கள் சில.
office 2010 key windows 7 key sale windows 10 home-key windows 10 education windows 10 pro key office 2016 key windows 10 key office 2013 key windows 7 key Buy Windows 7 | Sale Windows 7 Ultimate Keys | Windows 10 Home Key Sale | windows 8.1 key sale | Windows 10 Product Key Sale | Microsoft Office 2016 Serial Keys | Windows 7 Professional Download ISO | MS Office 2016 Key For Activation Latest Full Free Download | How to download and install the Microsoft Office 2016 | Windows 10 Product Key [UPDATED] | Windows 7 Ultimate ISO download | Legit Windows 7 Product Key Online Store, PayPal...
திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் சார்பில் கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி ! சேலம் மாவட்டம் கொளத்தூர் பொது மக்களிடம் திரட்டப்பட்ட வெள்ள நிவாரண உணவு பொருட்கள் திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் லோகு. அய்யப்பன் உதவியோடு கடலூர் ஆண்டித்தோப்பு, வழிசோதனை பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அன்பழகன், ராமச்சந்திரன், தயலப்பன், சரவணன், கீர்த்தியரசு, எல்.ஐ.சி.வேலு, விஜயபூபதி, பால்.பாலு ஆகிய தோழர்கள் முன்னின்று செயல்பட்டனர்.
சேலத்தில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” திராவிடர் விடுதலைக்கழகம்,சேலம் மாவட்டம் நடத்தும் மக்களைப்பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” ‘காலை முதல் இரவு வரை முழு நாள் மாநாடு’ நிகழ்சி நிரல். நாள் : 19.12.2015 சனிக்கிழமை, இடம் : நேரு கலையரங்கம் சேலம். தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கம். காலை 10 மணி – ‘கருத்தரங்கம்.’ நண்பகல் 2 மணி – ‘பட்டிமன்றம்.’ ———————————————————– மாலை 6 மணி, இடம் : போஸ் மைதானம் சேலம். இளவரசன் – கோகுல்ராஜ் நினைவரங்கம், ”திறந்த வெளி மாநாடு.”
இளமை சுகங்களை துறந்து, எதிர்கால சந்ததிகளக்காக, தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்து, தம் இன்னுயிரை ஈகம் செய்த… மாவீரர்களுக்கும், தமிழ் பொதுமக்களுக்கும் வீரவணக்கம்! தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடம், புலியூர் பிரிவு, கொளத்தூர் மாலை 5 மணி, நவம்பர் 27
13-4-2015 சனி மாலை 6-30 மணியளவில், மேட்டூர் ஆர்.எஸ். டி.கே.ஆர் நினைவுப் படிப்பகத்தில், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பாக, பெரியாரியல் பயிலரங்கம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல் அறிமுக உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, “ஆரியர் பண்பாட்டுக்கு எதிரான திராவிடர் பண்பாட்டுப் புரட்சி” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒன்றரை மணி நேரம் கருத்துரை வழங்கினார். மனித இனத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் வளர்நிலை, வீரத் தலைமை மறைந்து அறிவு (சூழ்ச்சி)த் தலைமைத் தோற்றம், அரசுருவாக்கம், தத்துவம் என்ற பேரால் தலைவனைப் பாராட்டுவது, புகழ்வது, தலைவ (அரச)னுக்கு எதிராக மக்கள் எழாமல் பார்த்துக் கொள்ளுதல், அதற்கு மிகவும் பொருத்தமான ஆரிய, மனுசாஸ்திர தத்துவங்கள், அவை உருவாக்கிய, நியாயப்படுத்திக் காப்பாற்றிய படிநிலை சமுதாய அமைப்பு – அதை வீழ்த்தி சமத்துவம் சமுதாயம் காண உழைத்த பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி ஆகியவற்றை விளக்கினார். இறுதியில்...
மராட்டிய மாநிலத்தில் உள்ளது போல் நாத்திக இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டிய தந்தை பெரியார் பிறந்த தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென மேட்டூரில் சுட்டுக்கொல்லப்பட்ட போராளி தபோல்கர் நினைவாக கழகம் நடத்திய நாத்திகர் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நாத்திகர் விழா மற்றும் மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி ஆகஸ்ட் 23ம் தேதியன்று மேட்டூர் சதுரங்காடியில் மாலை 5 மணியளவில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. “மராட்டியத்தைப் பின்பற்றி மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமியற்று” என்ற கோரிக்கையை வலியுறுத்தும் ‘பேனருடன்’ – மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வுகளுடன் பேரணி புறப்பட்டது. பேரணியின் துவக்கத்தில், “பறை சாவுக்கான கலை அல்ல, அது வாழ்வுக்கான கலை; பறை ஒரு ஜாதிக்கான கலை அல்ல, அது ஜாதி ஆதிக்கத்தை அறுக்கவந்த ஆதிக் கலை” என்ற முழக்கத்தோடு சுயமரியாதை கலைபண்பாட்டுக் கழக பல்லடம் தோழர்களும்,...
“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற முழக்கத்தை முன் வைத்து சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக ஐந்து நாட்கள் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. பயணத்தின் தொடக்க விழா பொதுக் கூட்டம் மார்ச் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாரமங்கலத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியக்குமார் தலைமையேற்க, காவை. இளவரசனின் ‘மந்திரமா தந்திரமா?’ நிகழ்ச்சி நடைபெற்றது. பரப்புரைப் பயணத்தை விளக்கி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை யாற்றினார். மார்ச்-22 : நங்கவள்ளி அருகே உள்ள மசக் காளியூரில் மாலை 7 மணிக்கு பரப்புரை நடை பெற்றது. இதில் தோழர்கள் நங்கவள்ளி அன்பு, சேலம் பிரபு பயணத்தை விளக்கி உரையாற்றினர். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். மார்ச்-23 : மேட்டூர் ஆர்.எ°. பகுதி வைதீ°வரா பள்ளி அருகில் மாலை 6 மணிக்கு பரப்புரை நடைபெற்றது. பயணத்தை...
சேலம் ( மேற்கு ) மாவட்டக் கலந்துரையாடல், மேட்டூர் தாய்த்தமிழ்ப் பள்ளியில் 05-08-2015 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடை பெற்றது.
பெரியாரியல் கொள்கைகளை கிராமம் கிராமமாக சென்று பரப்பும் பணியை தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்துவருபவரும், ஏராளமான பெரியாரியல் பரப்புரையாளர்களை உருவாக்கியவருமான தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் (வளவன்) அவர்களுக்கு 24-7-2015ஆம் நாள் 75ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆகும். பேச்சின்போக்கில் இதை அறிந்துகொண்ட மேட்டூர் நகரக் கழகத் தோழர்கள் அவருக்கு பிறந்தநாள் விழா எடுக்க முடிவுசெய்து கழகத் தலைமையிடம் அனுமதி கோரினர். கழகத் தலைவரும், கழகப் பொதுச்செயலாளரும் கலந்துபேசி அவரது நீண்டகால பெரியாரியல் பரப்புரைப் பணிகளைக் கருத்தில் கொண்டு அவ்விழாவை நடத்த அனுமதித்ததோடு, அவருக்கு “பெரியாரியல் பேரொளி ” என்ற விருதினை அளிக்கவும் ஆலோசனைக் கூறினர். அதையடுத்து 24-7-2015 வெள்ளியன்று மேட்டூர் மகாலட்சுமி திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அவ்விழாவை எடுத்தனர். அது விழா என்ற அளவோடு முடிந்துவிடாமல் அதை ஒரு பயிலரங்கமாகவும் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ இட ஒதுக்கீட்டின் நியாயங்கள்’ என்ற தலைப்பில் ஒரு...
மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில் மேட்டூர் அணைப் பகுதியில் ஜூலை 4 முதல் 19ஆம் தேதி வரை பெரியார் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன. ஜூலை 4 – காவேரி பாலம் (தலைமை – பிரகாசு) 5 – குள்ள வீரன்பட்டி (தலைமை – பெ. சக்திவேல்) 7 – பொன்னகர் ( தலைமை – இர. பூவழகன்) 9 – ஆஸ்பத்திரி காலனி (தலைமை – பொன்.தேவராசு) 11 – பாரதி நகர் (தலைமை – மே.கா.கிட்டு) 12 – வீரபாண்டிய கட்டபொம்மன் (தலைமை – மா.கதிரேசன்) 14 – நேரு நகர் (தலைமை – அ. அண்ணாதுரை) 16 – மசூதித் தெரு (தலைமை – மார்ட்டின்) 18 – காவேரி நகர் (தலைமை – சி. கோவிந்தராசு) 19 – மாதையன்குட்டை (தலைமை – மா. பழனிச்சாமி) கூட்டங்களில் கோபி....