திரளான மக்கள் ஆதரவுடன் பெரும் வெற்றி பெற்ற கழகத்தின் சேலம் மாநாடு !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை” தமிழகமெங்கும் நடத்த திட்டமிடப்பட்டு முதல் மாநாடு ஈரோடு, அடுத்ததாக சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து சேலத்தில் நடத்த அறிவிக்கப்பட்டு கழக தோழர்களால் மாநாட்டு பணிகள் துவங்கப்பட்டன.

மாநாடு நடத்துவதற்கான 26-11-2015 அன்று கொடுத்தஅனுமதி கடிதத்திற்கு காவல்துறை நீண்ட அமைதிக்குப்பின் 17-12-2015 அனுமதி மறுத்தது. மாநாடு அறிவிக்கப்பட்ட முந்தையநாள் காவல்துறையின் தடையை உயர்நீதிமன்றத்தின் மூலம் கழகம் உடைத்தது.

”மக்களைப்பிரிக்கும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் 19.12.2015 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் துவங்கியது.

மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு,பகுத்தறிவுப் பாடல்களுடன் மாநாடு ஆரம்பமானது. தோழர் குமரப்பா தபேலா வாசிக்க, தோழர் சீனி தவிலும், தோழர் காளியப்பன் உறுமியும் வாசித்தனர். தோழர்கள் கோவிந்தராசு, முத்துகுமார், இசைமதி, அருள்மொழி ஆகியோர் சாதி ஒழிப்பு, பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினர்.

மாநாட்டின் முதல் அமர்வாக கருத்தரங்கம் நடைபெற்றது.”தொடரும் பார்ப்பன வல்லாதிக்கம்” எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் நெறிப்படுத்தினார்.

.
”தொடரும் பார்ப்பன வல்லாதிக்கம்” ……..

‘ஊடகத்தில்’ எனும் தலைப்பில் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.இராசேந்திரன் அவர்களும்,

‘மதத்தில்’ எனும் தலைப்பில் கழக பரப்புரைச் செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்களும்,

‘கலை இலக்கியத்தில்’ எனும் தலைப்பில் பாவேந்தர் இலக்கியப்பேரவையின் தோழர் தமிழேந்தி அவர்களும்,

‘அரசியலில்’ எனும் தலைப்பில் ம.தி.மு.க.அமைப்புச் செயலாளர் தோழர் வந்தியத்தேவன் அவர்களும்,

‘அறிவியலில்’ எனும் தலைப்பில் அணுசக்திக்கெதிரான் மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சுப.உதயகுமார் அவர்களும் தங்கள் கருத்துரைகளை வழங்கினார்கள்.

நெறிப்படுத்திய தோழர் ச. தமிழ்ச்செல்வன் மதவாதத்துக்கு எதிராக நாம் கைக்கொள்ளவேண்டிய வியூகங்களைப் பற்றி விரிவாகப் பேசினார்

கருத்தரங்கின் நிறைவில் ஏற்காடு திராவிடர் விடுதலைக்கழக தோழர் கார்த்திக் நன்றியுரையாற்றினார்.

————————————-

கருத்தரங்கம் நிறைவடைந்த பின் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. கலந்து கொண்ட தோழர்களுக்கு மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பிறகு கழக தோழர் இசைமதி அவர்களின் பாடலுடன் நண்பகல் அமர்வு ஆரம்பமானது.

திருச்சி ‘விரட்டு’ வீதி நாடகக்குழுவினரின் வீதி நாடகம் நடைபெற்றது. வீதி நாடகம் முடிவுற்றபின் மாநாட்டின் இரண்டாம் அமர்வாக பட்டிமன்றம் ஆரம்பமாகியது.

”பா.ஜ.க.ஆட்சியில் பெரிதும் வளர்வது”, ‘பார்ப்பனீயமே ! பெரு முதலாளிகளே !’ எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பட்டிமன்றத்திற்கு தோழர் செந்தலை நா.கவுதமன் அவர்கள் நடுவராக இருந்தார்.

‘பார்ப்பனீயமே’ எனும் தலைப்பில்
த.பெ.தி.க.பரப்புரை துணைச்செயலாளர் தோழர் சீனி.விடுதலை அரசு அவர்களும்,
கழக தோழர் அ.கோகுலக் கண்ணன் அவர்களும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

‘பெருமுதலாளிகளே எனும் தலைப்பில்
முனைவர் பன்னீர் செல்வி அவர்களும்,
வழக்கறிஞர் தோழர் இரா.திருமூர்த்தி அவர்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

வாதங்களை கேட்ட நடுவர் செந்தலை நா.கவுதமன் அவர்கள் பட்டிமன்ற நிறைவாக ”பா.ஜ.க.ஆட்சியில் பெரிதும் வளர்வது பார்ப்பனீயமே !” என தீர்ப்பளித்தார்.

பட்டிமன்றத்தின் இடையிடையேயும், தோழர்களின் வாதங்களுக்கு நடுவிலும் தோழர் செந்தலை நா.கவுதன் அவர்கள் ஏராளமான திராவிடர் இயக்க வரலாற்றுச்செய்திகள், நிகழ்ச்சிகள், பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் குறித்த தகவல்களை வழங்கினார். கூடியிருந்த பெருந்திரளான தோழர்களும், பொதுமக்களும் அந்த செய்திகளை கூர்ந்து கவனித்து உள் வாங்கும்படியாக தோழரின் கருத்துக்கள் சிறப்பாக விளங்கின.

சேலம் இளம்பிள்ளை கழக தோழர் சி.தம்பிதுரை அவர்கள் பட்டிமன்றத்தின் இறுதியில் நன்றியுரையாற்றினார்.

பட்டிமன்ற நிகழ்வுடன் நேரு கலையரங்கத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் காலை முதல் மாலை வரையில் நடைபெற்ற உள் அரங்கு மாநாடு நிறைவடைந்தது.
—————————————————–

மாலை 5-30 மணிக்கு திறந்தவெளி பொது மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள போஸ் மைதானத்தில் மதுரை ‘வேர்கள்’ கலைக்குழுவினரின் பறை முழக்கத்துடன் ஆரம்பமானது.நிகழ்சி ஆரம்பிக்கும் நிலையிலேயே மாநாட்டு திடலில் மக்கள் கூட்டம் பெருமளவு சேரத்துவங்கியது.

மாலை 6 மணியளவில் இளவரசன் – கோகுல்ராஜ் நினைவரங்கில் பொதுமாநாடு ஆரம்பமானது.
மாநாட்டிற்கு திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்ட அமைப்பாளர் தோழர் டைகர் பாலன் அவர்கள் தலைமை வகித்தார்.கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்டப் பொருளாளர் தோழர் அ.பெருமாள் வரவேற்புரை நிகழ்த்தினார்.சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தோழர் இரா.டேவிட்,சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் தோழர் சி.கோவிந்த ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் கழக பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் மீ.த.பாண்டியன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தோழர் இரா.அதியமான், மனித நேய மக்கள் கட்சியின் அமைப்புச்செயலாளரும்,தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினருமான தோழர் ஏ.அஸ்லம்பாஷா ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

நிறைவாக கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மாநாட்டு நிறைவுரை வழங்கினார்.கழக தலைவரின் உரையுடன் முழுநாள் மாநாடு மிக சிறப்பாக நிறைவடைந்தது.

——————————————————–

பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த மாநாடு வெற்றி பெற செய்ய உழைத்த கழக தோழர்கள்………………

சுவர் எழுத்துப்பணி :
விழுப்புரம் அய்யனார், விழுப்புரம் ராமர், காவேரிப்பட்டிணம் பிரபு.

மாநாட்டுப்பணிகள் :
தோழர் சக்திவேல் கிழக்கு மாவட்ட கழக தலைவர், பெருமாள் கிழக்கு மாவட்ட பொருளாளர், டேவிட் கிழக்கு மாவட்ட செயலாளர், பரமேஸ் மாநகர தலைவர், செல்வமணி துணைச் செயலாளர், மு.பாலு மாநகர அமைப்பாளர், செந்தில் அம்மா பேட்டை, சரவணன் மூணாங்கரடு, அம்பிகாபதி, செந்தில் குமார் அழகானாப்பட்டி, வீரமணி தாதகாப்பட்டி, நந்தகுமார். காவலாண்டியூர்  தணிகைச் செல்வன், நங்கவள்ளி கிருஷ்ணன், இளம்பிள்ளை கோகுலக்கண்ணன்.

மேடை,பதாகை வடிவமைப்பு :
ஏற்காடு தோழர்கள்
கார்த்திகேயன், ராதாகிருஷ்ணன், ஆனந்தராசு, உலகநாதன், சரவணன், செல்வம், கலைஅரசன், மனோ, தமிழ்கார்க்கி, ஞானசேகரன்,

ஒளிப்பதிவு :
தோழர் விஜி, கபிலன் ஸ்டுடியோ.

 

You may also like...