தலையங்கம் – குரு-உத்சவ்
‘சமஸ்கிருத வாரத்தை’த் திணித்த பா.ஜ.க. ஆட்சி, இப்போது ஆசிரியர் நாளை ‘குரு-உத்சவ்’ என்று சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்து மனிதவள மேம்பாட்டுத் துறை ஆணையிட்டுள்ளது. இந்தியாவை “சமஸ்கிருத மயமாக்கும்” முயற்சிகள் தீவிரமாகி வருகின்றன. ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் நாள் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் நினைவாக ஆசிரியர் நாளாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் பெயரை இப்போது சமஸ்கிருதமாக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? வாஜ்பாய் ஆட்சி காலத்திலேயே நடந்த “திருப்பணிகள்”தான் இப்போது மீண்டும் தூசி தட்டி அமுல்படுத்துகிறார்கள். அப்போது ‘வித்யா பாரதி’ என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அரசு நிதி உதவியோடு நாடு முழுதும் ‘இந்துத்துவ’ கல்வித் திட்டத்தை செயல்படுத்தியது. ‘வித்யா பாரதி’யின் பொதுச் செயலாளராக இருந்த தீனானாத் பட்டா என்பவர், இந்துத்துவ கலாச்சாரத்தின் அடிப்படையிலான ஒரு மாற்றுக் கல்வி முறையை உருவாக்குவதுதான் இதன் நோக்கம் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். ‘வித்யாபாரதி’ நாடு முழுதும் நர்சரி முதல் கல்லூரி வரை, 14000...