Category: பெரியார் முழக்கம்

அந்தக் கால ஜாதி சங்கங்கள் உரிமைக்குப் போராடின கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை 0

அந்தக் கால ஜாதி சங்கங்கள் உரிமைக்குப் போராடின கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

கோயில் கட்டுகிறவர்கள் – கல்லூரி வியாபாரம் நடத்துகிறவர்கள் – தங்கள் சுயநலனுக்காக ஜாதி வெறியைத் தூண்டி விடுகிறார்கள் என்று ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ பரப்புரை இயக்கத்தை 20-03-2015 அன்று சென்னை பெரம்பூரில் தொடங்கி வைத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சில பகுதிகள். (சென்ற இதழ் தொடர்ச்சி) 1930 இல் நடைபெற்ற கொங்கு வேளாளர் மாநாட்டில், “இனி விதவைகளை வெள்ளாடை உடுத்த கட்டாயப்படுத்தக் கூடாது; விரும்பிய ஆடைகளை உடுத்த அனுமதிக்க வேண்டும்; குழந்தை இல்லாத இளம் கைம்பெண்களுக்கு மறுமணம் அனுமதிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறை வேற்றினார்கள். கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற நாடார் சங்கங்கள் இருந்தன. இப்படி மக்கள் நலனில் அக்கறையுள்ள ஜாதி சங்கங்கள்தான் அந்த காலத்தில் இருந்தன. ஆனால் இப்போது எதற்காக ஜாதி சங்கங்கள் இருக்கின்றது? ஜாதி சங்கங்களை வைத்திருப்பவர்கள் யார்? ஒரு ஊரில் புதுக் கோவில் உருவானால், முன்பெல்லாம் அது கந்துவட்டிக்காரனால்...

எச்சில் இலை சடங்குக்கு தடை 0

எச்சில் இலை சடங்குக்கு தடை

கருநாடகாவில் பார்ப்பன புரோகிதர்கள் சாப்பிட்டு வீசிய எச்சில் இலைகளில் ‘உருண்டு புரளும்’ சடங்குகளுக்கு கருநாடக அரசு தடை விதித்தது. நீண்டகாலமாக நடக்கும் இந்த அய்தீகத்தை தடை செய்யக் கூடாது என்று பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதேபோல் கரூர் மாவட்டம் நெடூர் கிராமத்தில் சதாசிவ பிரமேத்திரா கோயிலில் எச்சில் இலை யில் உருளும் சடங்கு 100 ஆண்டுகளாக நடந்து வந்தது. வி. தலித் பாண்டியன் என்பவர் இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். நீதிமன்றம் பார்ப்பனர் திணித்த இந்த இழிவான சடங்குக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிபதிகள் எஸ்.மாணிக்கம், வி.எம். வேலுமணி ஆகியோர் இந்தத் தடையை விதித்துள்ளனர். தாலி நீக்கம் : பழ. கருப்பையா கேள்வி அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா, ‘நக்கீரன்’ வார இதழில் எழுதிய கட்டுரையில், தாலி அகற்றும் நிகழ்வை எதிர்க்கும் மதவெறி சக்திகளை கடுமையாக சாடியுள்ளார். தாலியை அணிந்து கொண்டவர்கள்...

தலையங்கம் – தமிழகத்திலா இந்த அவலம்! 0

தலையங்கம் – தமிழகத்திலா இந்த அவலம்!

இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் நடக்காத ஒரு ‘சமூகப் புரட்சி’ தமிழ்நாட்டில் மட்டும் நடந்தது. அந்தப் ‘புரட்சி’தான் இந்த மண்ணில் சமூக-பொருளியல் மாற்றங்களுக்காக வித்திட்டது. அதுதான் கடந்த காலங்களில் நடந்த ‘கல்விப் புரட்சி’. இராஜகோபாலாச்சாரி முதல்வராக இருந்தபோது பள்ளிகளை மூடினார். ‘குலக்கல்வித் திட்டத்தை’க் கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராடி வந்த பெரியாரின் இயக்கம் வெகுண்டு எழுந்தது. கல்வி உரிமைகளை நசுக்கிய இராஜகோபாலாச்சாரியை பதவியிலிருந்து ஓட வைத்தது. அதற்கான போராட்டச் சங்கை ஊதியவர் பெரியார். பெரியாரின் ஆதரவோடு அடுத்து ஆட்சிக்கு வந்தார் காமராசர். மூடிய பள்ளிகளைத் திறந்தார். மேலும் கூடுதலாக பள்ளிகளைத் திறந்தார். கல்லூரிகள் தொடங்கப்பட்டன; மதிய உணவுத் திட்டம் மற்றும் இலவசக் கல்வி வந்தது. அரசுப் பள்ளிகளும், அரசுக் கல்லூரிகளும், அரசு தொழில்நுட்ப நிறுவனங்களும் முதல் தலைமுறையாக படிக்க வந்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றின. தமிழகம் ஏனைய மாநிலங்களிலிருந்து இப்போதும்கூட ஒப்பீட்டளவில்...

பூணூல் பற்றி விவேகானந்தர் 0

பூணூல் பற்றி விவேகானந்தர்

விவேகானந்தர் 1897ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆலம்பஜார் மடத்தில் தங்கி சிஷ்யர்களிடம் கலந்துரையாடிக் கொண் டிருந்தார். அப்போது சிஷ்யர்களில் ஒருவர் பூணூல் பற்றிக் கேட்டதற்கு விவேகானந்தர் விளக்கம் அளித்துக் கூறுகையில், “பழைய காலத்திலே சிஷ்யர்கள் கையில் சமத்துகளை எடுத்துக்கொண்டு, குரு வினுடைய பர்ண சாலைக்குப் போவார்கள். குருவும் அவனுடைய தகுதியை அறிந்து மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய ‘முஞ்சா’ என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்குத் தீட்சை செய்து வேதங்களை போதிப்பார். அரையிலே (இடுப்பில்) கட்டிய முப்புரியாகிய இப்புல்லிலே கௌபீனத்தை (கோவணம்) கட்டிக் கொள்வான். முஞ்சா என்னும் இப் புல்லினால் ஆக்கப்பட்ட கவசத்திற்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின் நாளில் ஏற்பட்டது” என்றார். உடனே சிஷ்யன், “அய்யா, அப்படியானால் முப்புரி நூலை அணியும் வழக்கம் வைதீக வழக்க மில்லை என்று சொல்லுவீரோ?” என்றான். அதற்கு விவேகானந்தர், “வேதங்களில்...

முனைவர் புரட்சிக்கொடிக்கு விருது 0

முனைவர் புரட்சிக்கொடிக்கு விருது

திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தின் மருந்தியல் தொழில் நுட்பத்துறையில் உதவிப் பேராசிரியர் பெரியாரியலாளர் முனைவர் புரட்சிக்கொடி 08.05.2015 அன்று சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் “TECHNOLOGY INNOVATION AWARD” என்ற பெருமைக் குரிய விருதைப் பெற்றுள்ளார். தமிழக அரசின் மிக உயரிய விருதான ”‘தமிழ்நாடு இளம் பெண் அறிவியலாளர் விருது’” (Tamilnadu Young Women Scientist Award), Fast track Young Scientist Research award  போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பெற்றோர் புலவர் ஆய்.அறிவன் – அறிவொளி இருவரும் பெரியார் தொண்டர்கள். ஜாதி, தாலி மறுப்புத் திருமணம் செய்தவர்கள். புரட்சிக் கொடியும் ஜாதி, தாலி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். இவரது வாழ்வினையர் கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தாமரைக் கண்ணன் ஆவார். அவருக்குப் ‘புரட்சிகொடி’ என்று பெயர் சூட்டியவர் பெரியார் என்பது கூடுதல் பெருமை… 72 ஆய்வுக்கட்டுரைகளை எழுதி யுள்ளார். உலகப்புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் இவரது ஆய்வுக்...

காவல்துறை எல்லை மீறுகிறது 0

காவல்துறை எல்லை மீறுகிறது

ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 2014 செப்டம்பரில் 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியபோது தமிழ்நாடு முழுதும் ஆளும் கட்சியினர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர். பேருந்துகள் தீ வைக்கப் பட்டன; கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல்துறை அனுமதியின்றியே சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. காவல்துறை வேடிக்கை பார்த்தது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், ஆந்திர காவல்துறை 20 தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்ததை எதிர்த்து ஆந்திர பேருந்துகளை தாக்கிய தமிழ் உணர்வாளர்களை காவல்துறை கைது செய்து பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்தது. கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் மோடி பங்கேற்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்க, சேலம் வருமானவரித்துறை அலுவலக வாயிலில் ஒரு கோணிப்பையை மண்ணெண்ணெயில் மூழ்கச் செய்து வீசிய குற்றத்துக்காக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களையும், தலைவர் கொளத்தூர் மணியையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து...

மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டவர்தான் ‘சின்னஜாதி’ கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை 0

மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டவர்தான் ‘சின்னஜாதி’ கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

கோயில் கட்டுகிறவர்கள் – கல்லூரி வியாபாரம் நடத்துகிறவர்கள் – தங்கள் சுயநலனுக்காக ஜாதி வெறியைத் தூண்டி விடுகிறார்கள் என்று ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ பரப்புரை இயக்கத்தை 20-03-2015 அன்று சென்னை பெரம்பூரில் தொடங்கி வைத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சில பகுதிகள். (சென்ற இதழ் தொடர்ச்சி) உயர் கல்வியில் இட ஒதுக்கீடு வந்தவுடன் வந்த போராட்டங்களை நீங்கள் மீண்டும் யோசித்துப் பாருங்கள். 2006ஆம் ஆண்டு வரை அய்.அய்.டி போன்ற உயர் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. பிற்படுத்தப்பட்ட மக்கள் அறுபது எழுபது சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடும் என்று நாம் கருதுகின்றோம். மண்டல் கணக்கெடுப்பின் படி 52 சதவீதம் என்று சொல்கிறார். மத்திய கல்வி அமைச்சர் மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். அதற்கே பார்ப்பன மாணவர்கள் போராட்டம்; உடனே அரசு இறங்கி...

தலையங்கம் – தீர்ப்பு வந்துவிட்டது! 0

தலையங்கம் – தீர்ப்பு வந்துவிட்டது!

19 ஆண்டுகாலம் இழுத்தடிக்கப்பட்ட ஒரு வழக்கை இரண்டே நிமிடங்களில் தீர்ப்பளித்து தீர்வு கண்டுவிட்டது கருநாடக உயர்நீதிமன்றம். ஜெயலலிதா மற்றும் அவரது குழுவினரான சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்பட எவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து ஏதும் சேர்க்கவில்லை என்பதே நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆம்! இப்போது இவர்கள் சட்டப்படி ஊழல் ஏதும் இழைத்திடாத குற்றமற்றவர்கள்! “நான் புடம் போட்ட தங்கமாக மீண்டு வந்துவிட்டேன்” என்று ஜெயலலிதாவும் அறிவித்திருக்கிறார். அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களும் அந்த கட்சியினரும் வெற்றியைக் கொண்டாடி மகிழும்போது எதிர்கட்சிகளோ வியப்பிலும் அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளன. எப்போதுமே இந்த ‘பாரத புண்ணிய பூமி’யில் ஊழல் இரண்டு முகம்களைக் கொண்டிருக்கிறது. ஒன்று ‘பிராமண’ ஊழல்; மற்றொன்று ‘சூத்திர’ ஊழல். குற்றம் செய்தவர்கள் பார்ப்பனர்களாக இருந்தால், அவர்களை தண்டிக்கக் கூடாது என்று மனுசா°திரம் கண்டிப்பாக கூறிவிட்டது. அந்த ‘மனு’ இப்போது வேறு வடிவங்களில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதற்கு அண்மைக்கால உதாரணங்களே உண்டு. லல்லுபிரசாத், ஓம்பிரகாஷ் சவுதாலா, கனிமொழி, அ.இராசா...

அம்பேத்கருக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ். கபட நாடகம் எச்சரிக்கிறார், அருந்ததிராய் 0

அம்பேத்கருக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ். கபட நாடகம் எச்சரிக்கிறார், அருந்ததிராய்

அம்பேத்கர் படத்தை ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை அட்டைப்படமாக போடுவதும் அம்பேத்கர் சிலைகளை திறப்பதும், நயவஞ்சக மானது என்று பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் எச்சரித்தார். சென்னையில், மே 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய விருது வழங்கும் விழாவில், ‘அம்பேத்கர் சுடர்’ விருதைப் பெற்றுக் கொண்டு அவர் ஆற்றிய உரை: அம்பேத்கர் விருது கொடுத்து என்னை கவுரவித்ததற்கு மிகுந்த நன்றி. குறிப்பாக பாசிசத்துக்கு எதிராக அரசியல் கூட்டணி களைத் திரட்ட வேண்டிய அவசியமும் அவசரமும் உள்ள இந்த காலகட்டத்தில் இந்த விருதை எனக்கு வழங்குவதற்காகப் பாராட்டு கிறேன். வெட்கமே இல்லாமல் இந்தியாவை இந்து தேசம் என்று வாதாடிக்கொண்டிருப்பவர்கள் இன்று இந்தியாவின் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். அந்த குறிக்கோளை எட்டு வதற்காக சக்கரங்கள் சுழன்று கொண்டே யிருக்கின்றன – பொதுவெளியிலும் தனிப்பட்ட முறையிலும். பல்கலைக்கழக, பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் மாற்றப்படுகின்றன; வரலாறு மாற்றி எழுதப்படுகிறது (அது எழுதப்பட வேண்டும் ஆனால் இப்படி அல்ல), கற்றல்...

கழகத்தினர் மீது குண்டர் சட்டம் : த.பெ.தி.க. கண்டனம் 0

கழகத்தினர் மீது குண்டர் சட்டம் : த.பெ.தி.க. கண்டனம்

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் விடுத்துள்ள அறிக்கை. “தொலைக்காட்சி நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசிய இந்து மதவெறியர்கள் மீது சாதாரண வழக்கு. ஆனால், தந்தை பெரியார் படத்தின் மீது காவல்துறை அதிகாரிகள் முன்பே சிறுநீர் கழிப்பது, செருப்பால் அடிப்பது, தீ வைத்து எரிப்பது போன்ற சம்பவங்கள் செய்தவர்கள் மீது தமிழக காவல்துறை சிறு வழக்குகூட பதிவு செய்யவில்லை. பெரியாரைப் பற்றி மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எச்.ராஜா மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காத காரணத்தால், உணர்ச்சி வசப்பட்ட பெரியாரின் தொண்டர்கள் சிலர் பார்ப்பன அர்ச்சகர் அணிந்திருந்த பூணூலை அறுத்ததற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் மீது மட்டும் குண்டர் சட்டம் போடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் நில அபகரிப்பு, மணல் கொள்ளை, பெண்களிடம் நகைக் கொள்ளை, கட்டப் பஞ்சாயத்துக்கள்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

கோட்டு, சூட்டு அணியாமல் வழமையான உடையில் மோடியை வரவேற்ற மாவட்ட ஆட்சித்தலைவருக்கு சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு நோட்டீஸ். -செய்தி சட்டையே போடாமல், ‘பூணூல்’ உடம்புடன் மோடியை வரவேற்கும் புரோகிதர்களுக்கும் இதேபோல் ‘நோட்டீஸ்’ அனுப்புவார்களா? எனக்கு பத்ம விருது வேண்டாம் என்று உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிவிட்டேன். – ‘யோகா குரு’ ராம்தேவ் அதெல்லாம் ‘பாரத ரத்னா’ விருது உங்களுக்குக் கிடைக்காது; அது காஞ்சி ஜெயெந்திரனுக்குத்தான். அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். – உச்சநீதிமன்றம் மக்கள் நினைவுக்கு வராமல் மறந்து போகிறவர்களைத் தானே விளம்பரப்படுத்த வேண்டும்; இதுவும் நியாயம்தான்! தமிழக கிராமங்களில் தொடங்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி நூலகங்கள் பூட்டப்பட்டு, மாட்டுத் தொழுவங்களாகி விட்டன. – ‘தமிழ் இந்து’ செய்தி ஊர்தோறும் கோயில் கும்பாபிஷேகம் ‘திவ்யமா’ நடக்கும்போது, இப்படி ‘அபசகுனமாக’ நூலகம் பற்றி எல்லாம் பேசப்படாது! மோடி பிறந்த ‘கன்ச்சி’ என்ற...

பூணூலை அறுத்தால்-குண்டர் சட்டமா? நடப்பது-‘மனுதர்ம’ ஆட்சியா? 0

பூணூலை அறுத்தால்-குண்டர் சட்டமா? நடப்பது-‘மனுதர்ம’ ஆட்சியா?

மனு சாஸ்திரப்படி ‘பிராமணர்கள்’ என்ற பிறவி ஆதிக்கத்தை அடை யாளப்படுத்தும் சின்னம் தான் ‘பூணூல்’. ‘பூணூல்’ அணிந்த பார்ப்பனர்கள் இரு பிறப்பாளர்களாம்! தங்களை ‘பிராமணர்’ என்று ‘பூணூல்’ வழியாக அடையாளப் படுத்தி, ஏனைய ‘சூத்திர’ மக்களை அடிமைகள்; விலைக்கு வாங்கப்பட்டவர்கள்; பிராமணர்களின் வைப்பாட்டி மக்கள் என்று அடையாளப்படுத்துகிறார்கள். மனு சாஸ்திரமும் இதையே ஆணி அடித்ததுபோல் கூறுகிறது. இப்படி பெரும்பாலான மக்களை இழிவான வர்களாக சித்தரிக்கும் ‘பூணூல்’ அணிவதையே தடை செய்யப்பட் டிருக்க வேண்டும். அதுதான், இது ஜனநாயக நாடு என்பதற்கான அடையாளம். ஆனால், இந்த இழிவை ஏற்க மறுப்பவர்கள் இங்கே அடக்கு முறை சட்டங்களை சந்திக்க வேண்டி யிருக்கிறது. இந்தப் ‘பூணூல்’ போடும் பார்ப்பன இறுமாப்பை மக்களிடம் தொடர்ந்து பரப்பி வருகிறது பெரியார் இயக்கம். அதற்காக எந்தப் பார்ப்பனர் பூணூலையும் அறுத்ததில்லை. இப்போது திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் இராவணன், கோபி, திவாகர், பிரதீப், நந்தகுமார், பிரபாகரன் ஆகியோர் பார்ப்பனர் பூணூலை...

பார்ப்பன பன்னாட்டுச் சுரண்டல் அம்பலப்படுத்துகிறார், அருந்ததிராய் 0

பார்ப்பன பன்னாட்டுச் சுரண்டல் அம்பலப்படுத்துகிறார், அருந்ததிராய்

சென்னையில், மே 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய விருது வழங்கும் விழாவில், ‘அம்பேத்கர் சுடர்’ விருதைப் பெற்றுக் கொண்டு அவர் ஆற்றிய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி) 1960களிலும் 70களிலும் உங்கள் கட்சியின் முன்னோடியான ’தலித் பாந்தர்கள்’ மற்றும் நக்சலைட்டுகள் போன்ற எதிர்ப்பியக்கங்கள் நீதி பற்றி புரட்சி பற்றி பேசினார்கள். அவர்கள் நில சீர்திருத்தங்களைக் கோரினார்கள். உழுபவருக்கே நிலம் என்பது அவர்களது முழக்கமாயிருந்தது. இன்று நீதி என்னும் சிந்தனை நமது மனங்களிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது அதற்கு பதில் மிக குறுகிய கருத்தாக்கமான மனித உரிமை வந்தமர்ந்திருக்கிறது. கொஞ்ச நஞ்ச நில சீர்திருத்தங்களும் இப்போது திரும்பப் பெறப்படுகின்றன. மாவோயி°டுகள் போல அதி தீவிர புரட்சிக் குழுக்கள் கூட மக்களிடம் பெரும்பாலும் ஆதிவாசிகளிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிலமும் தனியார் நிறுவனங்களுக்கு போய்விட கூடாது என்றே காடுகளில் போராட வேண்டியிருக் கிறது. இன்று தலித் மக்களில் 70 சதவிகிதம் பேர் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள்....

தலையங்கம் – மீண்டும் குலக் கல்வி திட்டம்! 0

தலையங்கம் – மீண்டும் குலக் கல்வி திட்டம்!

1954ஆம் ஆண்டு தமிழ்நாட்டு முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரி, பச்சைப் பார்ப்பன வெறியுடன் கொண்டு வந்த ‘குலக் கல்வித் திட்டம்’ இப்போது மீண்டும் உயிர் பெறுகிறது. ‘சூத்திரர்’களுக்கு கல்வி உரிமையை பார்ப்பன நீதி நூலான மனு சா°திரம் மறுத்தது. அவர்களுக்கு இழி தொழில்களை கட்டாயமாக்கியது. அந்த மனு சா°திர அடிப்படையில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து டாக்டர் எ°.ஜி. மணவாள இராமானுஜம் தலைமையில் மாநாடு கூட்டினார் பெரியார் (24.1.1954). கல்வித் திட்டத்தை திரும்பப் பெற 3 மாதக் கெடுவிதித்து, ஒற்றைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1954, மார்ச் 29இல் குலக் கல்வித் திட்ட எதிர்ப்புப் படை சுயமரியாதை வீரர் நீடாமங்கலம் ஆறுமுகம் தலைமையில் சென்னை நோக்கி புறப்பட்டது. படை சென்னை வரும் முன்பே ஆச்சாரியார் பதவி விலகினார். 13.4.1954இல் முதல்வராக பதவியேற்ற காமராசர், குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். இப்போது வரலாறு திரும்புகிறது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் தங்களது பாரம்பர்ய தொழிலில் விடுமுறை நாள்களில்...

இலங்கை அரசை சர்வதேச விசாரணைக் கூண்டில் ஏற்ற வேண்டும் – ஏன்? 0

இலங்கை அரசை சர்வதேச விசாரணைக் கூண்டில் ஏற்ற வேண்டும் – ஏன்?

மே 17, மே 18 நாள்களில் முறையே ம.தி.மு.க. மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யம் நடத்திய முள்ளி வாய்க்கால் வீர வணக்கக் கூட்டங்களில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் தொகுப்பு. • பொது மக்கள் வாழும் பகுதியில் இராணுவத்தைக் குவித்திருப்பதில் தெற்காசியாவிலேயே முதலிடம் பெறுவது இலங்கைதான். வடக்கு கிழக்கு மாகாணத்தில் 6 தமிழர்களுக்கு ஒரு இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. • முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையோடு போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அப்போதைய அதிபர், இனப்படுகொலையாளன் இராஜபக்சே அறிவித்தார். ஆனால், போர் முடிந்ததற்குப் பிறகும் ஒரு இலட்சம் பேரை கூடுதலாக இராணுவத்தில் சேர்த்து, இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது இலங்கை அரசு. • 2006-2009 ஆண்டுகளுக்கிடையே வன்னிப் பகுதியில் மட்டும் விமானத்திலிருந்து வீசப்பட்ட வெடிப் பொருள்களின் அளவு 144 மில்லியன் கிலோ கிராம். இந்த 3 ஆண்டுகளில் வன்னிப் பகுதியில் இராணுவ விமானம் பறந்தது 13,000 முறை. இந்தப் புள்ளி...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

வாரணாசியில் நித்தியானந்தா ஆன்மிக நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு; ஊரைவிட்டே ஓட்டம். -செய்தி நித்தியானந்தாஜி, கவலைப்படாதீங்க; தமிழ்நாட்டுக்கு வாங்க; காவல்துறை பாதுகாப்பு தரும். எவராவது எதிர்த்தால் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளும். தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஆட்கள் தேவை! சவுதி அரசு விளம்பரம். – செய்தி இந்த வேலைக்கு மனு போட முன் அனுபவம் ஏதாவது இருக்க வேண்டுமா? மும்பையில் உள்ள சித்திவிநாயகன் கோயிலுக்கு அய்.எ°.ஓ. தரச் சான்றிதழை மாநில முதல்வர் வழங்கினார். – செய்தி என்ன சொல்றீங்க…. ஏனைய வினாயகன் எல்லாம் தரம் கெட்டவர்களா? மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள். – மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நீங்கள் ஆட்சி நடத்தும் கோவாவிலேயே தாராளமாக கிடைக்கும்போது நாங்கள் ஏன் பாகிஸ்தானுக்குப் போக வேண்டும்? ம.பி. மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 50 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு.- செய்தி ஆர்.எஸ்.எஸ். பாடத் திட்டத்தை அமுல்படுத்தினால், ‘சரசுவதி கடாட்சம்’ அம்புட்டுத்தான். கட்டண முறை தரிசனம்...

அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாக விழிப்புணர்வு இயக்கம்: தமிழ்நாடு மாணவர் கழகம் முடிவு 0

அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாக விழிப்புணர்வு இயக்கம்: தமிழ்நாடு மாணவர் கழகம் முடிவு

24.5.2015 அன்று சென்னை திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் பாரி சிவக்குமார் தலைமை தாங்கினார். அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: • பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் படித்து, மாநில அளவில் 2014-15ஆம் ஆண்டில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு மாணவர் கழகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. • 25 சதவீதம் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை வரும் கல்வி ஆண்டில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் சேர்க்கை விதிமுறைகளை முழுமையாக பின்பற்றாத பள்ளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறது. • குழந்தை தொழிலாளர் சட்டத்தில் மத்திய அரசு சீர்திருத்தம் கொண்டு வர இருப்பது. மீண்டும் குலக்கல்வித் திட்டத்தை திணிக்க முயல்வதையே காட்டுகிறது. இதனை தமிழ்நாடு மாணவர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. • தனியார்...

பொதுக் கல்வித் திட்டம்: பின்லாந்து வழிகாட்டுகிறது 0

பொதுக் கல்வித் திட்டம்: பின்லாந்து வழிகாட்டுகிறது

அரசே மக்களுக்கு கல்வி வழங்கும் உரிமையையேற்று, 6 வயதுக்குமேல் குழந்தைக் கல்வியை வலியுறுத்தும் நாடு பின்லாந்து. கல்வித் திட்டத்தில் வழிகாட்டும் அந்நாட்டுக் கல்வி முறை எப்படி செயல்படுகிறது? பின்லாந்தின் 60 ஆண்டு காலப் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், ஆட்சியாளர்களும் மக்களும் கல்வியில் செலுத்திய அக்கறையும் ஈடுபாடும்தான். பொருளாதார மறுமலர்ச்சி வேண்டுமெனில், சரியான கல்விமுறைதான் சிறந்த கருவி என்று 1963-ல் அந்நாட்டு நாடாளுமன்றம் தீர் மானித்தது. பல்வேறு கருத்துக்கேட்புக் கூட்டங்கள், விவாதங்களுக்குப் பிறகு நாடு முழுவதும் முழுமையான பொதுக் கல்வித்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஐந்து ஆண்டு களுக்கும் மேலாக பல நூறு ஆசிரியர் களைக் கலந்தாலோசித்து உருவானது அத்திட்டம். 8 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் பகல் நேரங்களில் அந்தந்த நகராட்சிகளின் பாதுகாப்பு மையங் களில் பராமரிக்கப்படுகின்றனர். இம் மையங்களில், மற்ற குழந்தைகளுடன் பழகும் குழந்தைகள் பிறருடன் பழகும் தன்மை, மற்றவர்களின் குணநலன்கள், தேவைகளை அறிந்துகொள்ளுதல் என்று பல்வேறு...

இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்து! 0

இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்து!

இலங்கையின் அத்துமீறல்கள் குறித்து – உள் நாட்டு விசாரணை நடத்தப் போவதாக அதிபர் சிறிபாலசேனா அறிவித்திருக்கிறார். இது உலக நாடுகளை ஏமாற்றும் ‘கபட நாடகம்’. இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்து! ஈழத் தமிழர்களிடமும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடமும் அவர்களின் அரசியல் கோரிக்கையை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்து – இந்த இரண்டு முழக்கங்கள் அ ய்.நா.வை நோக்கி உலகத் தமிழர்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது. இலங்கை ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர்கள் இணைந்து வாழ முடியாது – ஏன்? • சிங்கள – புத்த மெஜாரிட்டி மக்களுக்கான சிறீலங்கா அரசு தமிழர்கள் மீதான இனப்படு கொலைகளுக்கான திட்டங்களை 1948ஆம் ஆண்டு முதலே தொடங்கி படிப்படியாக 60 ஆண்டுகளாக நிகழ்த்தி வருகிறது. அந்த இனப்படுகொலை 2009இல் முள்ளிவாய்க்காலில் முடித்து வைத்து, அதன் வெற்றி விழாவைக் கொண்டாடியிருக்கிறது. • 60 ஆண்டுகாலங்களில் அங்கே ஆட்சிகள் மாறி னாலும் காட்சிகள் மாறவில்லை. இப்போதும் இராஜபக்சே...

தலையங்கம் – பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம் நிறைவேறுமா? 0

தலையங்கம் – பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம் நிறைவேறுமா?

மத்திய அரசுக்கான பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மூன்றாக வகைப்படுத்தும் பரிந்துரையை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மத்திய அரசிடம் அளித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஜாதிகளுக்கிடையே முன்னேறிய ஜாதியினர், பின்தங்கிய நிலையில் உள்ள ஜாதியினருக்கான வாய்ப்புகளைப் பறித்து விடுவதால் அனைத்து ஜாதியினருக்கும் சமவாய்ப்பு வழங்குவதே இதன் நோக்கம் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கூறுகிறது. ஜாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட்டு, அனைத்துப் பிரிவினருக்கும் சமத்துவம் வழங்குவதே இடஒதுக்கீட்டின் நோக்கம். எனவே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நோக்கம் மிகச் சரியானது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. நோக்கம் வரவேற்கப்பட வேண்டியது தான். ஆனால், சமூகநீதிக்கு ‘நந்தி’களாக நிற்கும் உச்சநீதிமன்றங்களும், பார்ப்பன அதிகார வர்க்கமும் உண்மையில் சமத்துவத்தை நோக்கி, இத் திட்டத்தை செயல்படுத்த அனுமதிப்பார்களா என்ற நியாயமான சந்தேகம் எழவே செய்கிறது. முதலில், மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டில் 7 சதவீதம் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன என்று அரசின் புள்ளி விவரங்கள்...

திருவாரூர் நூல் வெளியீட்டு விழாவில் கொளத்தூர் மணி பேச்சு அஞ்சா நெஞ்சம் கொண்ட பெரியார் தொண்டர்கள் 0

திருவாரூர் நூல் வெளியீட்டு விழாவில் கொளத்தூர் மணி பேச்சு அஞ்சா நெஞ்சம் கொண்ட பெரியார் தொண்டர்கள்

தோழர் கவி தொகுத்துள்ள “மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” நூல் வெளியீட்டு விழா 8.5.2015 அன்று திருவாரூர் எத்திராஜ் திருமண மண்டபத்தில் முக்கூடல் அமைப்பின் சார்பில் நடைபெற்றது. நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, முதல் படியை நீதிக்கட்சித் தலைவர் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பேரன் மார்டின் செல்வம், டாடா° இரவி, பசு. கவுதமன், த.பரமசிவம், கோவி. லெனின் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ‘நக்கீரன்’ முதன்மை ஆசிரியர் கோவி. லெனின் திறனாய்வு செய்தார். நூலாசிரியர் கவி ஏற்புரை வழங்கினார். நூலை வெளியிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: முக்கூடல் அமைப்பின் சார்பாக நடந்து கொண்டிருக்கின்ற இந்த நிகழ்வில், அருமையான ஒரு நூலை அளித்திருக்கின்ற அன்புக்குரிய தோழர் கவி அவர்களே! இந்நூல் வெளியீட்டில் பங்கேற்றிருக்கிற பெருந்தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், அய்யா அ.சி. சுப்பய்யா, தமிழவேள் சாரங்கபாணி ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களே! எனக்கு முன்னால், நண்பர், த. பரமசிவம்...

தில்லை நடராசன் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் காஞ்சி ஜெயேந்திரன் நுழையத் தடை 0

தில்லை நடராசன் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் காஞ்சி ஜெயேந்திரன் நுழையத் தடை

தில்லை நடராசன் கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் (இது தில்லைக் கோயிலில் சித்சபை என்று அழைக்கப்படுகிறது) காஞ்சி ஜெயேந்திரன் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று பொது தீட்சதர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே பொது தீட்சர் சபை – ஜெயேந்திரன் நுழைவை அனுமதிக்கக் கூடாது என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டிருக் கிறது. ஆனால், இந்த உத்தரவை மீறி, ஜெயேந்திரன், தன்னுடன் நெருக்கமாக உள்ள சில தீட்சதப் பார்ப்பனர்கள் ஆதரவுடன், “சித் சபைக்குள்” நுழைந்து விட்டார். கடந்த மே 18ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. இந்தக் கோயிலில் கடந்த மே முதல் தேதி நடந்த ‘கும்பாபிஷேகத்தை’த் தொடர்ந்து, ‘மண்டலாபிஷேக’ பூஜைகள் நடந்து வருகிறதாம். இதில் பங்கேற்க வந்த காஞ்சிபுரம் ஜெயேந்திரன், குறுக்கு வழியில் ‘சித் சபைக்குள்’ நுழைந்து விட்டார். செய்தியறிந்த தீட்சதப் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர், அங்கேயே எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயேந்திரனை உள்ளே அழைத்துச் சென்ற ஒரு சில தீட்சதப் பார்ப்பனர்களுக்கும் ஏனைய...

செயலூக்கம் தந்த மாவட்ட கலந்துரையாடல்கள்! 0

செயலூக்கம் தந்த மாவட்ட கலந்துரையாடல்கள்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களின் நான்காம் கட்டப் பயணம் ஆகஸ்டு 18ஆம் தேதி சிவகங்கையிலிருந்து தொடங்கியது. சிவகங்கை பி.என்.ஆர். விடுதியில் பகல் 11 மணியளவில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில், கழகத்தின் பரப்புரைப் பயணம், கழக ஏட்டிற்கு சந்தா சேர்த்தல், பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்து கழகத் தோழர்கள் நா. முத்துக்குமார், பெரியார் முத்து, சி.முத்துக்குமார், தமிழ் மாறன் உள்ளிட்ட தோழர்கள் பேசினர். சிவகங்கை மாவட்டத்தில் பல கிராமங்களில் ‘பேய்’ மூட நம்பிக்கைகள் மக்களிடம் ஆழமாக ஊடுருவியிருப்பதையும், அதை எதிர்த்து மக்களிடையே உளவியல் நிபுணர்களைப் பயன்படுத்தி, அறிவியல் விழிப்புணர்வுப் பரப்புரை நடத்த வேண்டும் என்றும் தோழர்கள் கருத்து தெரிவித்தனர். ஏற்கனவே பேய் விரட்டுவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வந்த சில சாமியார்கள் மோசடிகளை எடுத்துக் கூறி பாதிக்கப்பட்டோரிடம் உளவியல் அடிப்படையில் கருத்துகளை எடுத்துக் கூறி கழகத் தோழர்கள் நல்வழிப்படுத்தி வரும் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டனர். கழகத்...

தபோல்கர் படுகொலை: குற்றவாளிகளுக்கு பா.ஜ.க. அடைக்கலம்! 0

தபோல்கர் படுகொலை: குற்றவாளிகளுக்கு பா.ஜ.க. அடைக்கலம்!

மகாராஷ்டிராவில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடையே பகுத்தறிவைப் பரப்பி வந்த மருத்துவர் தபோல்கர், பூனேயில் நடைப்பயிற்சி சென்றபோது 2013, ஆக. 20ஆம் தேதி மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பம்பாய் காவல்துறை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காத நிலையில், பம்பாய் உயர்நீதிமன்றம், 2014 மே மாதம் சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், மகாராஷ்டிராவில் பா.ஜ.க. ஆட்சி விசாரணைக்கு ஒத்துழைப்புத் தர முன் வரவில்லை. மாநில காவல்துறையிலிருந்து 6 அதிகாரிகளை சி.பி.அய். விசாரணைக்கு ஒதுக்கித் தருமாறு ஜூலை முதல் வாரம் ஒரு கடிதமும், மீண்டும் ஆகஸ்டு முதல் வாரத்தில் இரண்டாவது கடிதமும் மாநில உள்துறைக்கு சி.பி.அய். எழுதிய கடிதங்களை உள்துறை கண்டு கொள்ளவே இல்லை. இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று சி.பி.அய். அதிகாரிகள் கூறியதாக ‘இந்து’ ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனாலும், விசாரணைக்கு ஒத்துழைப்புத் தர அரசு தயாராக இருப்பதாக மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிங் கூறியிருக்கிறார். இந்த வழக்கில் பூனே காவல்துறை...

கருப்பர்கள் தூக்குத் தண்டனை எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றார் பெரியார் இலண்டன் பயணத்தில் ஓர் வரலாற்று நிகழ்வு 0

கருப்பர்கள் தூக்குத் தண்டனை எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றார் பெரியார் இலண்டன் பயணத்தில் ஓர் வரலாற்று நிகழ்வு

1932ஆம் ஆண்டு பெரியார் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, நடந்த ஒரு நிகழ்வுக்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. அந்தப் பயணத்தில் பெரியாருக்கு பெரும் உதவிகளை செய்தவர் எஸ். சக்லத்வாலா. இவர் இந்தியாவிலிருந்து இலண்டனில் குடியேறிய கம்யூனிஸ்ட் நாத்திகர். 1922ஆம் ஆண்டிலேயே கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பிரிட்டிஷ் மக்களவையில் உறுப்பினராக இருந்தவர். பெரியார் தனது மேல்நாட்டுப் பயணங்களை நாட்குறிப்பில் பதிவு செய்தார். அந்த நாட்குறிப்பை தோழர் வே. ஆனைமுத்து பெரியாரின், ‘அயல்நாட்டுப் பயணக் குறிப்புகள் என்ற தலைப்பில் 1997ஆம் ஆண்டில் நூலாக வெளியிட்டார். அதில் 28.6.1932 அன்றைய குறிப்பாக பெரியார் கீழ்க்கண்ட தகவலைப் பதிவு செய்திருக்கிறார். “(சக்லத்வாலாவோடு) ஒரு ‘நீக்ரோ’ (கருப்பர்கள்) மீட்டிங்குக்குப் போனோம். அதாவது அமெரிக்காவில் ஸ்கார்பரோவில் 9 நீக்ரோ பய்யன்களை ரேப் குற்றத்திற்காக அமெரிக்க கவர்மெண்டார் கொலை தண்டனை விதித்ததை கேன்சில் (நீக்கம்) செய்யும்படி உலகக் கிளர்ச்சி செய்ய, அமெரிக்காவில் இருந்து இங்கு வந்திருக்கும் ஒரு 2 பையன்களின் தாயாரான...

தேடி வந்த முதல்வர் பதவியை உதறியவர் சர். பிட்டி. தியாகராயர் 0

தேடி வந்த முதல்வர் பதவியை உதறியவர் சர். பிட்டி. தியாகராயர்

ஜுனியர் விகடன்’ இதழில் ப. திருமாவேலன், சர். பிட்டி. தியாகராயர் குறித்து எழுதிய கட்டுரை. ‘திராவிடர் இயக்கத்தின் மூலவர்’ என்று திராவிட இயக்கத்தவர்களால் போற்றப்படும் தியாகராயர் எப்படிப்பட்டவர் தெரியுமா? எப்படி நடந்து கொண்டார் தெரியுமா? இரட்டையாட்சி முறைப்படி 1920இல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றி நீதிக்கட்சி ஆட்சியைப் பிடித்தபோது அந்தக் கட்சியின் தலைவர் தியாகராயர். ஆட்சியின் தலைவராக தியாகராயரே பதவியேற்பார் என்று எல்லோரும் நினைத்தார்கள். இன்றைக்கு முதலமைச்சர் என்கிறோம் அல்லவா? அந்தப் பதவிக்கு அன்றைய பெயர் ‘பிரிமியர்’. அதாவது சென்னை ராஜதானியின் முதல் ‘பிரிமியராக’ தியாகராயர்தான் பதவியேற்றிருக்க வேண்டும். அன்றைக்கு கவர்னராக இருந்த வெல்லிங்டன், நீதிக்கட்சியின் தலைவரான தியாகராயரிடம் அமைச்சரவை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார். ‘எனது கட்சி ஆட்சி அமைக்கும். ஆனால், நான் அதன் தலைமைப் பொறுப்பில் உட்கார மாட்டேன்’ என்று கவர்னர் வெல்லிங்டனுக்கு கடிதம் அனுப்பினார் தியாகராயர். ‘இங்கிலாந்தில் கட்சித் தலைவராக இருப்பவர், ஆட்சித் தலைவராக...

மாவட்டப் பொறுப்பாளர்கள் 0

மாவட்டப் பொறுப்பாளர்கள்

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் கழகத் தலைவர் அறிவித்த கழகப் பொறுப்பாளர்கள். சிவகங்கை மாவட்டம் : தலைவர் – நா. முத்துக்குமார்; செயலாளர் – பெரியார் முத்து; அமைப்பாளர் – சி. முத்துக்குமார்; அறிவியல் மன்ற அமைப்பாளர் – தமிழ் மாறன். மதுரை மாவட்டம் : தலைவர் – திலீபன் செந்தில்; செயலாளர் – மா.பா. மணிகண்டன்; அமைப்பாளர் – ச.மா. மாப்பிள்ளை சாமி. தேனி மாவட்டம் : தலைவர் – க. சரவணன்; செயலாளர் – பா. குமரேசன். தமிழ்நாடு மாணவர் கழகம் – செ.உதயசங்கர் தூத்துக்குடி மாவட்டம் : தலைவர் – பொறிஞர் சி. அம்புரோசு; துணைத் தலைவர் – வே. பால்ராசு; செயலாளர் – ரவிசங்கர்; துணைச் செயலாளர் – பாலசுப்பிரமணியன்; பொருளாளர் – வீர பெருமாள்; அமைப்பாளர்- பால். அறிவழகன். ஆழ்வை ஒன்றியத் தலைவர் – நாத்திகம் முருகேசன்; செயலாளர் – உதயக்குமார். விளாத்திகுளம் ஒன்றிய அமைப்பாளர்...

தலையங்கம் – ஜாதி வெறி சக்திகளின்கொலை வெறி 0

தலையங்கம் – ஜாதி வெறி சக்திகளின்கொலை வெறி

தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்றுவரும் ஜாதிவெறி சக்திகளின் ஜாதிவெறி நடவடிக்கை களையும், இதனை கண்டு கொள்ளாத தமிழக அரசையும் திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. சமீப காலமாக தமிழ் நாட்டில் ஜாதிவெறியர்களின் நடவடிக்கைகள் நவீன ஊடகங்கள் வழியாகவும் மிகவும் வெளிப்படையாக நடந்தேறிக் கொண்டிருக் கிறது. ஏற்கனவே ‘வாட்ஸ் அப்’ எனும் நவீன தொடர்பு ஊடகம் மூலம்பொறியாளர் கோகுல் ராஜ் கொலையில் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவன தலைவர் யுவராஜ் எனும் ஜாதிவெறியர், ஜாதி வெறியூட்டும் வகையிலும், காவல்துறைக்கு பகிரங்கமான மிரட்டல் விடுத்தும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் பேசி அதனை அனைவரும் கேட்கும் வகையில் பரப்பினர். தற்பொழுது முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை எனும் அமைப்பின் நிறுவனர், தலைவர் செங்குட்டுவன் வாண்டையார் எனும் ஜாதி வெறியர் மிகவும் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தும், காவல்துறைக்கு சவால் விடுத்தும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயலிலும் இறங்கி அதனை வாட்ஸ் அப்...

தலைநகரில் தமிழர் நீதி ஆர்ப்பாட்டம் 0

தலைநகரில் தமிழர் நீதி ஆர்ப்பாட்டம்

ஆகஸ்டு 30 – இந்த நாள், சர்வதேச காணாமல் போனவர்கள் நாள்’ என உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களின் உலகு தழுவிய போராட்டத்தில் தமிழகத் தமிழர்களாகிய நாமும் தோழமை கொள்வோம்! ஆயிரக்கணக்கில் நம் மக்களை காணாமல் போனவர்களாக தொலைத்து நிற்கிறோம் என்ற உண்மையை இந்த நாளில் நினைவில் நிறுத்துவோம்! சர்வதேச காணாமல் போனவர்கள் நாளை முன்னிட்டு… ஆகஸ்டு 31 திங்கள் காலை 10 மணியளவில் சென்னை அடையார் காந்தி நகர், ஐ.நா.வின் யுனிசெஃப் அலுவலகம் எதிரில் தமிழர் நீதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் பங்கேற்கின்றார்கள். பெரியார் முழக்கம் 27082015 இதழ்

ஆக. 30 – சர்வதேச ‘காணாமல் போனோர் நாள்’! – ஈழத்தில் 30 ஆயிரம் தமிழர்களின் கதி என்ன? 0

ஆக. 30 – சர்வதேச ‘காணாமல் போனோர் நாள்’! – ஈழத்தில் 30 ஆயிரம் தமிழர்களின் கதி என்ன?

காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம் (International Day of the Disappeard) வருடந் தோறும் ஆகஸ்டு 30ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. குறித்த ஒரு நபரை விரும்பாத ஒரு அரசியல் தலைமை அல்லது ஒரு இராணுவ தலைமை அவரை அவரது குடும்பத்திலிருந்து அல்லது வீட்டிலிருந்து தூக்கிச் சென்று விட்டாலோ அல்லது கைது செய்து காணாமல் போக செய்வதாலோ அதன் பின்னர் அவருடன் தொடர்பு கொள்வதற்கு அவர்களது குடும்பத்துக்கு எந்தவிதமான வழியும் இல்லாமல் போய்விடுகிறது. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதுகூட தெரியாமல் போய்விடும். இதையே ‘காணாமல் போதல்’ என்கிற சொல் பதத்தில் அழைக்கிறார்கள். அதாவது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உரித்துடையவர்கள் என்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கு உள்ளது என்றும் ஐ.நா. கூறுகிறது. எனினும் அப்படி காணாமல் செய்வோரை இரகசிய சிறைகூடங்களில் அடைத்தோ அல்லது இரகசியமாக படுகொலை செய்தோ விடும் நிலை இன்னமும் தொடர்கிறது. உலகெங்கும்...

எங்கே நிம்மதி? 0

எங்கே நிம்மதி?

மனதுக்கு நிம்மதி தேடி, கடவுளைத் தேடிப் போகிறோம் என்கிறார்கள் – பக்தர்கள்! ஆனால் கதை தலைகீழாகிவிட்டது. இப்போதெல்லாம் “கடவுளே நிம்மதி இல்லாமல் இருக்கிறார்” என்ற குரல் கேட்கிறது. இதைச் சொல்வது – பெரியார் இயக்கத்தினர் அல்ல; சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், டி.எஸ். சிவஞானம் அடங்கிய அமர்வுதான், இப்படி ஒரு அதிரடி கருத்தை வெளியிட்டிருக்கிறது! அதிரடி இத்துடன்முடிந்துவிடவில்லை. இன்னும் இருக்கிறது. கோயில் திருவிழாக்களில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்குமானால், காவல்துறை திருவிழா நடத்துவதற்கே அனுமதி வழங்கக் கூடாது. இது நீதிபதிகள் வெளியிட்ட இரண்டாவது அதிரடி. கோயில் விழாக்களை தடை போடுவது, கடவுளுக்கு செய்யும் அவமதிப்பு அல்லவா என்று ‘சங்பரிவாரங்கள்’ தொடை தட்டி, மீசை முறுக்கிக் கொண்டு கிளம்பக் கூடும். அதற்கும் நீதிமன்றம் ஆப்பு வைத்திருக்கிறது. “இப்படி பக்தர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதை இந்தத் திருவிழாக்களுக்கு தடை போட்டால் மட்டுமே கடவுள் அதைப் பார்க்காமல் இருப்பார்”...

அய்.அய்.டி. முற்றுகைப் போராட்ட முழக்கங்கள் 0

அய்.அய்.டி. முற்றுகைப் போராட்ட முழக்கங்கள்

முற்றுகைப் போராட்ட முழக்கங்கள் அய்.அய்.டி. நிறுவனமா? ஆர்.எஸ்.எஸ். மடமா? இருக்குது, இருக்குது அய்.அய்.டி.யில் இருக்குது! ‘ஜெய்ஹிந்த்’ வட்டம் இருக்குது இருக்குது; இருக்குது! ‘இராமாயண’ வட்டம் இருக்குது இருக்குது; இருக்குது! ‘வந்தே மாதரம்’ வட்டம் இருக்குது இருக்குது; இருக்குது! ‘வசிஷ்டர்’ வட்டம் இருக்குது இருக்குது; இருக்குது! அய்.அய்.டி.யில் இருக்குது! மறுக்குது; மறுக்குது அம்பேத்கர் வட்டத்தை மறுக்குது! பெரியார் வட்டத்தை மறுக்குது! சாகிறாரே; சாகிறாரே! தலித் மாணவர் சாகிறாரே! அய்.அய்.டி. விடுதிகளில் தூக்குப் போட்டு சாகிறாரே! ஜாதி இழிவால் சாகிறாரே! பார்ப்பனக் கொடுமையால் சாகிறாரே! சாகிறாரே! நீதியா? நீதியா? இது சமூக நீதியா? நீதியா? கொள்ளை போகுது; கொள்ளை போகுது! மக்கள் பணம் கொள்ளை போகுது! கோடிகோடியாய் போகுது! மக்கள் பணத்தில் படிக்கிறான் படிச்சவுடன் பறக்கிறான் வெளிநாட்டுக்கு ஓடுறான்! நியாயமா? நியாயமா? இது நியாயமா? நியாயமா?   பெரியார் முழக்கம் 04062015 இதழ்

அய்.அய்.டி. முற்றுகை: 70 தோழர்கள் கைது 0

அய்.அய்.டி. முற்றுகை: 70 தோழர்கள் கைது

சென்னை அய்.அய்..டி.யில் மாணவர்கள் தொடங்கிய அம்பேத்கர்-பெரியார் சிந்தனை வட்டத்துக்கு அய்.அய்.டி. பார்ப்பன நிர்வாகம் தடை போட்டுள்ளது. இது நாடு முழுதும் எதிர்ப்பு அலைகளை உருவாக்கியிருக்கிறது. ஊர் பேர் இல்லாமல் மத்திய மனித வளத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட மொட்டைக் கடிதத்தின் அடிப்படை யில் அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. துறை சார்ந்த அதிகாரி ஒருவர், அந்த மொட்டைக் கடிதத்தை இணைத்து சென்னை அய்.அய்.டி.க்கு அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார். கடிதம் வந்த அடுத்த சில நாட்களிலேயே சிந்தனை பேரவைக்கு அய்.அய்.டி. தடை போட்டுள்ளது. அய்.அய்.டி. பார்ப்பன நிர்வாகத்தின் இந்த மனுதர்மத்தைக் கண்டித்து, பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. தவிர அனைத்துக் கட்சிகளும், இயக்கங் களும் போராடி வருகின்றன. தடையை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜூன் முதல் தேதி மாலை 4 மணியளவில் அய்.அய்.டி. முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. போராட்டக் களமாக மாறி நிற்கும் ‘மத்திய...

திருவாரூர் நூல் வெளியீட்டு விழாவில் கொளத்தூர் மணி பேச்சு சத்திய மூர்த்தி அய்யரின் ஜாதி வெறிக்கு சான்றுகள்! 0

திருவாரூர் நூல் வெளியீட்டு விழாவில் கொளத்தூர் மணி பேச்சு சத்திய மூர்த்தி அய்யரின் ஜாதி வெறிக்கு சான்றுகள்!

தோழர் கவி தொகுத்துள்ள “மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” நூல் வெளியீட்டு விழா 8.5.2015 அன்று திருவாரூர் எத்திராஜ் திருமண மண்டபத்தில் முக்கூடல் அமைப்பின் சார்பில் நடைபெற்றது. நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, முதல் படியை நீதிக்கட்சித் தலைவர் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் பேரன் மார்டின் செல்வம், டாடா° இரவி, பசு. கவுதமன், த.பரமசிவம், கோவி. லெனின் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ‘நக்கீரன்’ முதன்மை ஆசிரியர் கோவி. லெனின் திறனாய்வு செய்தார். நூலாசிரியர் கவி ஏற்புரை வழங்கினார். நூலை வெளியிட்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி. பாரதிதாசன் திராவிட நாடு கேட்டு, பின்பு பெரியாருக்கு எதிராக தமிழ்நாடு என்று மாற்றிக் கொண்டார் என்று சிலர் சொல்கிறார்கள். பெரியாரையே அவர் எதிர்த்தார் என்கிறார்கள். பாரதிதாசன் எப்போது மாற்றிக் கொண்டார் என்று வரலாற்றைப் படித்துப் பார்த்தால் தெரியும். எப்போது பெரியார் 1956இல் ‘தமிழ்நாடு...

பொதுக் கூட்ட மேடையில் மாநாடுபோல் நடந்தது இந்துமதி-நிர்மல் குமார்  ஜாதி தாலி மறுப்பு மணவிழா 0

பொதுக் கூட்ட மேடையில் மாநாடுபோல் நடந்தது இந்துமதி-நிர்மல் குமார் ஜாதி தாலி மறுப்பு மணவிழா

கழகத் தோழர்கள் நிர்மல்குமார்-இந்துமதி ஆகியோரின் ஜாதி-சடங்கு மறுப்பு திருமண விழா தாலியின்றி, கிணத்துக்கடவுவில் மே 17 அன்று பொதுக்கூட்ட மேடையில் நடந்தது. இந்த புரட்சிகர மணவிழாவுக்கு கழகத் தோழர்கள் ஏராளமாக திரண்டிருந்தனர். பொதுக் கூட்ட மேடையில் திருமணம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்று இந்தப் புரட்சிகர மணவிழா நடந்தது, இதன் மற்றொரு சிறப்பாகும். மணவிழா நிகழ்வு பற்றிய செய்தித் தொகுப்பு: தோழர்கள் இந்துமதி-நிர்மல் குமார் ஆகியோரின் ஜாதி-தாலி-சடங்கு மறுப்பு திருமண விழா, மடத்துக்குளம் வெ.ஜோதி, திராவிடர் வாழ்வியல் பண்பாட்டு உறுதி மொழியை வாசிக்க, தோழர்களோடு பொது மக்களும் இணைந்து உறுதியேற்றனர். விழாவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றிட, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தோழர் ரஞ்சிதா வரவேற்புரையாற்றிட, பொள்ளாச்சி மாவட்ட கழகத் தலைவர் விஜயராகவன், சட்ட எரிப்புப் போராளி ஆனைமலை ஏ.கே. ஆறுமுகம் அவர்களை அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து காவல்துறை ஏற்படுத்திய தடைகள் குறித்தும்...

பொறியாளர்கள்  சிறப்பு பூஜை நடத்த நீர்வளத் துறை சுற்றறிக்கை 0

பொறியாளர்கள் சிறப்பு பூஜை நடத்த நீர்வளத் துறை சுற்றறிக்கை

வெட்கம்! மகாவெட்கம்! தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள நீர்வள ஆதாரத் துறை மேட்டூர் உள்பட தமிழக நீர் தேக்கங்களில் நீர் நிரம்புவதற்கு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என்று சுற்றறிக்கை விடுத் துள்ளது. இந்தத் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளரான சோ. அசோகன், துறையில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு இந்த சுற்றறிக்கையை அனுப்பி யிருக்கிறார். (சுற்றறிக்கை நகல் நம்மிடம் உள்ளது) அதில், “மேட்டூர் அணையில் நல்ல நீர்வரத்து, நீர் இருப்பினைப் பெறுவதற்கும் மற்ற அணைகளில் நீர் நல்ல இருப்பினைப் பெறுவதற்கும், இயற்கை அன்னையின் அருள்வேண்டி அந்தந்த கோட்டங்களின் ஆளுகைக்கு உட்பட்ட முக்கிய கோயில்களில் வருகிற 1.6.2015 அன்று சிறப்பு பூஜைகள் செய்திட உரிய ஏற்பாடுகள் மேற் கொள்ள செயற்பொறியாளர்கள் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு 2.6.2015 அன்று காலை 10 மணிக்குள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்திட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத்...

பேரணியில் பங்கேற்ற கருநாடக குடியரசு கட்சித் தலைவர் எழுச்சி உரை திராவிடர் விடுதலைக் கழகம் பெரும் சக்தியாக வளரவேண்டும் 0

பேரணியில் பங்கேற்ற கருநாடக குடியரசு கட்சித் தலைவர் எழுச்சி உரை திராவிடர் விடுதலைக் கழகம் பெரும் சக்தியாக வளரவேண்டும்

மேட்டூர் நாத்திகர் பேரணியில் பங்கேற்று கருநாடக குடியரசு கட்சித் தலைவர் முனைவர் வெங்கடசாமி பேசியதாவது: “பெரியார் கொள்கைகளை தமிழ்நாட்டில் ஆழமாகப் பரப்புவதன் வழியாக மட்டுமே ஒடுக்கப் பட்ட மக்களை விடுதலை செய்ய முடியும். ஒடுக்கப் பட்ட மக்களின் சமூக விடுதலைக்கு பெரியார் கொள்கையில் மட்டுமே தீர்வு இருக்கிறது. பார்ப் பனியம் தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள ஜாதியத்தை உருவாக்கியது. அதை நிலைநாட்ட ‘மனு°மிருதியை’ பயன்படுத்தியது. பார்ப்பனர்களின் பொருளாதார அரசியல் ஆதிக்கத்துக்கும் ஜாதியமே அடித்தளமாக நிற்கிறது. காலம் காலமாக தொடர்ந்து வரும் மூட நம்பிக்கைகளை எதிர்த்து, பெரியார் போராடினார். புத்தருக்குப் பிறகு பார்ப்பனரை வாழ்நாள் முழுதும் எதிர்த்துப் போராடிய தலைவர் பெரியார். அதேபோல் நான் சார்ந்துள்ள குடியரசு கட்சியை தோற்றுவித்தவர் அம்பேத்கர். பெரியார், அம்பேத்கர் இருவருமே சமூக மாற்றத்துக்கு சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காகவே உழைத்தனர். முதலில் உங்கள் அமைப்பு பெரியார் திராவிடர் கழகமாக இருந்தது. இப்போது இன்னும் சிறப்பாக திராவிடர்களின் விடுதலையை பெயரிலேயே வலியுறுத்தும்...

காவல்துறை கெடுபிடிகள்-தடைகள் தகர்ந்தன மேட்டூரில் நாத்திகர் விழா-பேரணி 0

காவல்துறை கெடுபிடிகள்-தடைகள் தகர்ந்தன மேட்டூரில் நாத்திகர் விழா-பேரணி

சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மே 30 அன்று மேட்டூர் புதுச்சாம்பள்ளியில் நாத்திகர் விழா-பேரணி-பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடந்தது. விழாவுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் திருமூர்த்தி, துரை அருண் ஆகியோர் கழக சார்பில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி வி. தனபால் காவல்துறை விதித்த தடையை நீக்கி, விழாவுக்கு அனுமதி அளித்தார். விழா நடைபெறுவதற்கு இரு நாள் முன்புதான் அனுமதி கிடைத்தது. காவல்துறை விதித்த தடை தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறவிருந்த மாரியம்மன் கோயில் நிர்வாகிகள், நாத்திகர்விழாவை எதிர்ப்பதாக ஒரு செய்தி உருவாக்கப்பட்டது. மாரியம்மன் கோயில் நிர்வாகிகள், அந்தக் கோயில் உள்ள பகுதிகளில் நாத்திகர் விழா நடப்பதற்கு எதிர்ப்பு காட்டுவதால், விழாவை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளுமாறு காவல்துறை கெடுபிடி காட்டியது. பொதுக் கூட்டத்தையும் வேறு இடத்துக்கு மாற்றிக் கொள்ள வற்புறுத்தினார்கள். கழகத் தலைவர் கொளத்தூர் மணி கோயில் நிர்வாகிகளிடம் நேரில் பேசினார். அப்போது...

‘அவாள்’ பிடிக்குள் அமைச்சரவை 0

‘அவாள்’ பிடிக்குள் அமைச்சரவை

மோடி அமைச்சரவையை விரிவாக்கம் செய்தபோது புதிதாக நியமனமான 4 காபினட் அமைச் சர்களில் 3 பேர் பார்ப்பனர்கள். மோடியின் அமைச்சரவையில் அதிகாரங்களுடன் அமர்த்தப்பட் டுள்ள பார்ப்பன அமைச்சர்கள். அவரது துறைகள்: சுஷ்மா சுவராஜ் – வெளி விவகாரத் துறை; அருண் ஜெட்லி – நிதித் துறை; நிதின் கட்காரி – கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத் துறை; கல்ராஜ் மிஸ்ரா – சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை; அனந்த் குமார் – இரசாயனம் மற்றும் உரத் துறை; மனோகர் பாரிக்கர் – பாதுகாப்புத் துறை; சுரேஷ் பாபு – தொடர்வண்டித் துறை; ஜெ.பி. நட்டா-சுகாதாரத் துறை. இது தவிர, வணிக வரித்துறை அமைச்சராக முழு அதிகாரம் பெற்ற இணை அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன். இந்தி யாவில் மத்திய அமைச்சரவை யில் இதற்கு முன் இவ்வளவு அதிக எண்ணிக்கை யில் பார்ப்பனர் கள் இடம் பெற்றதில்லை. முக்கியத் துறைகள்...

மோடியின் ஓராண்டு – மதவெறிக் கூச்சல்கள் 0

மோடியின் ஓராண்டு – மதவெறிக் கூச்சல்கள்

• ‘இராஜிவ் காந்தி ஒரு நைஜிரிய நாட்டுப் பெண்ணை (கருப்பர் இனம்) திருமணம் செய்திருந்தால், காங்கிரஸ் கட்சி, அவரை தலைவராக ஏற்றிருக்குமா?’ என்று மத்திய அமைச்சர் கிரி ராஜ்சிங் என்பவர் பேசினார். (மோடியே, இதற்காக இவரை மன்னிப்புக் கேட்கச் சொன்னார்) • டெல்லி சட்டசபை தேர்தலில் ஒட்டு கேட்ட மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோஷி, ‘இராமனின் பிள்ளைகளை தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா? முறை தவறிப் பிறந்தவர் களை தேர்ந்தெடுக்கப் போகிறீர்களா?’ என்று வாக்காளர்களிடம் பேசினார். (வாக்காளர்கள், ‘இராமனின் பிள்ளைகள்’ வேண்டாம் என்று தீர்ப்பளித்தனர்) • காந்தியைக் கொன்ற கோட்சே, ஒரு தேசபக்தர் என்றார், உ.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜி. ‘காந்திக்கு பதிலாக நேருவை கோட்சே சுட்டுக் கொலை செய்திருக்க வேண்டும்’ என்றார், கேரளாவைச் சார்ந்த ஒரு பா.ஜ.க. தலைவர். • ‘இந்துப் பெண்கள் நான்கு குழந்தைகளைப் பெற்று, அதில் ஒரு குழந்தையை கோயிலுக் கும், ஒரு குழந்தையை ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் முழுநேர...

மோடியின் ஓராண்டு – அருண் ஜெட்லி, கதை இது! 0

மோடியின் ஓராண்டு – அருண் ஜெட்லி, கதை இது!

மோடி, அமித்ஷா, அருண் ஜெட்லி – இந்த மூவர் குழுதான், இப்போது ஆட்சியில் அதி காரத்தைக் கையில் வைத்திருப் பவர்கள். அருண் ஜெட்லி, நிதியமைச்சராகவும், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும் உள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே போய° தோட்டத்துக்கு வந்து அவரை நேரில் சந்தித்துப் பேசியவர் அருண் ஜெட்லி! பார்ப்பன அம்மையாரை பார்ப்பன அமைச்சர் சந்தித்ததால் இந்த அப்பட்டமான அதிகார முறைகேட்டை ஊடகங்கள் ஊதிப் பெருக்கவில்லை. பல கார்ப்பரேட் நிறுவனங்களின் வழக்கறிஞராகவும், சட்ட ஆலோசகராகவும் செயல்பட்டவர் ஜெட்லி. இவருடைய இரட்டை வேடம் அதிகார முறைகேடுகளுக்கு இரண்டு உதாரணங்கள்: 2012இல் மாநிலங்களவையில் பா.ஜ.க. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் அருண் ஜெட்லி. நிலக்கரி ஒதுக்கீட்டில் மன்மோகன் சிங் ஆட்சி மீது புகார்கள் வந்த நேரம். அப்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜுடன் இணைந்து போர் முரசு கொட்டினார். இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்றத்தை...

மோடியின் ஓராண்டு – துள்ளிக் குதிக்கும் சு.சாமி 0

மோடியின் ஓராண்டு – துள்ளிக் குதிக்கும் சு.சாமி

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் அக்கட்சிக்கான செயல் உத்திக் குழுவின் தலைவர் என்ற பதவி கிடைத்தது, சுப்ரமணியசாமிக்கு. அதிகார போதை தலைக்கேறி, அவர் அவ்வப்போது உதிர்த்த ‘முத்துக்கள்’ சில: • இராஜபக்சே அதிபராக இருந்தபோது, அந்த இனப்படுகொலையாளரை நேரில் சந்தித்துப் பேசினார் சுப்ரமணியசாமி. “அய்.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராக வரும் தீர்மானங்களைக் கண்டு பயப்பட வேண்டாம். அந்த அமைப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை. கல்லெறிந்தால், ஓடும் காக்கையைப் போன்றது அந்த அமைப்பு என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ‘டெய்லி மிர்ரர்’ நாளேட்டுக்கு பேட்டி அளித்தார் (ஜூலை 23, 2014). • கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச இராணுவ ஆய்வு மய்யத்தில் ‘மோடியின் இந்தியா’ எனும் தலைப்பில் சுப்ரமணியசாமி பேசினார். அவரது பேச்சால் துணிவும் நம்பிக்கையும் பெற்ற இலங்கை இராணுவத் துறை, ஆணவத்தின் உச்சிக்குப் போனது. “மீனவர்கள் சிறை பிடிப்புக் குறித்து, தமிழக முதல்வர், மோடிக்கு எழுதும் கடிதங்கள், காதல் கடிதங்களைப் போன்றது” என்று...

திருவாரூர் நூல் வெளியீட்டு விழாவில் கொளத்தூர் மணி பேச்சு ‘தமிழவேள்’ சாரங்கபாணியிடம் பெரியாரின் பெருமதிப்பு 0

திருவாரூர் நூல் வெளியீட்டு விழாவில் கொளத்தூர் மணி பேச்சு ‘தமிழவேள்’ சாரங்கபாணியிடம் பெரியாரின் பெருமதிப்பு

தோழர் கவி தொகுத்துள்ள “மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” நூல் வெளியீட்டு விழா 8.5.2015 அன்று திருவாரூர் எத்திராஜ் திருமண மண்டபத்தில் முக்கூடல் அமைப்பின் சார்பில் நடைபெற்றது. நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டு ஆற்றிய உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி. சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேசு நூலுக்கு முன்னுரை எழுதும் போது, அதன் ஆசிரியர் அ.சி.சுப்பய்யா ஒன்றை சொல்லுகிறார். நம்மவர் என்பதற்காக எல்லோரையும் ஏற்றுக் கொள்வ தில்லை. 1948இல் முன்னுரை எழுதுகிறார் என்றால், அதற்கு முன்பு பல ஆண்டுகள் நூலை எழுதியிருக்க வேண்டும். இந்த விரிவான நூலை நீண்ட காலம் எழுதியிருக்க வேண்டும். 1938இல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது சுயமரியாதை இயக்கத்தோடு பலர் உடன் இணைந்து போராடியவர்கள் இருந்தார்கள். மறைமலையடிகள் இருந்தார். சோமசுந்தர பாரதியார் இருந்தார். உமாமகேசுவரம் பிள்ளை இருந்தார். திரு.வி.க. இருந்தார். எல்லோரும் கூட இருந்தவர்கள்தாம். பெரியாரோடு...

ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து அதிகார மய்யம் நோக்கி… 0

ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து அதிகார மய்யம் நோக்கி…

• ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ – மேல் மட்டத்து ஊழல்களை வெளிக் கொண்டு வருவதற்கும், ‘அரசு இரகசியங்கள்’ என்ற போர்வையில் முடக்கப் பட்ட மக்கள் விரோத செயல்பாடுகளை வெளியே கொண்டு வருவதற்கும் மக்களுக்குக் கிடைத்த ஆயுதம். ஆனால், இந்தச் சட்டத்தை சுரண்டும் ஆளும் வர்க்கங்களால் செரிமானம் செய்ய முடியவில்லை; சட்டம் வழங்கியுள்ள உரிமைகள், காங்கிர° ஆட்சி காலத்திலிருந்து படிப்படியாக பறிக்கப்பட்டு வரு கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், 2014 ஆக°டிலிருந்து தலைமைத் தகவல் ஆணையர் பதவி நிரப்பப்படாமல் காலியாகவே வைக்கப்பட் டிருப்பதுதான். 2008ஆம் ஆண்டு இப்பதவிக்கு சைலேஷ் காந்தி என்பவர் நியமிக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு ஆக°டில் அவர் ஓய்வு பெற்று விட்டார். 9 மாதங்களாக இப்பதவி காலியாகவே இருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்கும் நோக்கத்துடனேயே மோடி ஆட்சி, ஆணையர் பதவியை நிரப்பாமல் காலம் கடத்தி வருவதாக ஊடகங்களுக்கு சைலேஷ் காந்தி பகிரங்க கடிதம் எழுதினார். இதன் காரணமாக...

மோடியின் ஓராண்டு – அம்பேத்கருக்கு சொந்தம் கொண்டாடும் பா.ஜ.க.வினரின் ‘தலித்’ விரோதக் கொள்கைகள்! 0

மோடியின் ஓராண்டு – அம்பேத்கருக்கு சொந்தம் கொண்டாடும் பா.ஜ.க.வினரின் ‘தலித்’ விரோதக் கொள்கைகள்!

• கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை, 82.771 கோடியாக இருந்தது. இப்போது 69.74 கோடியாக வெட்டப் பட்டு விட்டது. ஆனால், ‘கங்கை’யை தூய்மை யாக்குவதற்கு ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. 50 ஆண்டுகாலமானாலும் இத் திட்டம் நிறைவேறப் போவது இல்லை என்கிறார், முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி. இதைவிடக் கொடுமை, பள்ளிக் குழந்தைகளை மீண்டும் ‘குலக்கல்வி’யான ஜாதித் தொழிலுக்கு குழந்தைகளை தள்ளி விடுவதற்கு இந்த ஆட்சி ஒப்புதல் தந்திருப்பதாகும். கல்வி உரிமைப் பாதுகாப்பு சட்டத்தின் நோக்கத்தையே குலைத்துவிட்டது மோடி ஆட்சி. ‘பள்ளிக் குழந்தைகள், குடும்பத்தில் பெற்றோர்கள் செய்யும் வேலைகளில் ஈடுபடலாம்’ என்று குழந்தைகள் வேலை பாதுகாப்புச் சட்டத்தை திருத்த ஒப்புதல் தந்துள்ளது. “குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்” எனும் சட்டம் 1986ல் கொண்டு வரப்பட்டு, குழந்தைகளை தொழி லாளர்களாக்குவதை தடுத்தது. கல்விக்கான நிதியை குறைத்துவிட்டு, குழந்தை களையும் குலத்தொழிலில் பங்கேற்க பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள்; மீண்டும் ‘வர்ணா...

அதிகார மமதையில் ஆணவக் குரல்கள்! 0

அதிகார மமதையில் ஆணவக் குரல்கள்!

வானத்தை வில்லாக்குவேன்; மணலைக் கயிறாக்குவேன் என்ற தொனியில் மக்களிடம் தேர்தலுக்கு முன்பு மோடி பேசினார். ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. அதிகாரத்துக்கு வந்தவுடனே நாட்டை பார்ப்பன மயமாக்க வேகவேகமான அறிவிப்புகள் வரத் தொடங்கின. இவற்றிற்கு எதிர்பாராத இடங்களிலிருந்துகூட எதிர்ப்புகள் வரத் தொடங்கின. சில அறிவிப்புகளை பின் வாங்கிக் கொண்டார்கள். சிலவற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள். அவ்வப்போது அதிகார மமதையில் பார்ப்பன ஆணவக் குரல்கள் காதைத் துளைத்துக் கொண்டே இருக்கின்றன. அது குறித்த ஓர் தொகுப்பு இது: • மோடி பிரதமரானவுடன் இந்தி மொழியில் மட்டுமே பேசுவார் என்று அரசு அறிவிப்பு வந்தது. • சமூக வலை தளங்களில் மத்திய அரசு அதிகாரிகள் இந்தியிலேயே கருத்துகளைப் பதிவிட வேண்டும் என்று அரசு அறிவித்தது. எதிர்ப்பு வந்த வுடன் இந்தி பேசாத மாநிலங் களுக்கு இது கட்டாயமில்லை என்று குரலை மாற்றிக் கொண் டார்கள். • தமிழ் நாளேடுகளில் தொடர் வண்டித் துறை இந்தியில் மட்டுமே விளம்பரத்தை வெளி...

மோடியின் ஓராண்டு – கார்ப்பரேட் நலன் காக்கும் ஆட்சி 0

மோடியின் ஓராண்டு – கார்ப்பரேட் நலன் காக்கும் ஆட்சி

• கார்ப்பரேட் நலன்களுக்காகவே நிலங்களைக் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது. ஏற்கெனவே சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகக் கைப்பற்றப்பட்ட நிலங்களில் பாதியளவுகூட பயன்படுத்தாமல் கிடக்கின்றன. இப்போது மேலும், நிலங்களைப் பறிக்க ஏன் துடிக்கிறார்கள்? மன்னர்கள் ஆட்சி காலங்களில் ‘பிராமணர்’களுக்கு நிலங்களை ‘தானமாக’ வழங்கி பெருமைப்பட்டார்கள். இப்போது கார்ப்பரேட்டு களுக்கு மக்களிடமிருந்து நிலங்களைப் பிடுங்கி, ‘தானமாக’க் கொடுக்க அரசு துடிக்கிறது. பார்ப்பன ஆதிக்கத்தை வளர்க்கும் பனியாக்களுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும்தான் இப்போதும் நிலங்கள் கைமாறப் போகின்றன. ஆக, அன்று ‘சதுர்வேதி மங்களங்கள்’; இன்று நிலப் பறிப்புச் சட்டங்கள்! • பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதில் காங்கிரசுக்கு சற்றும் குறைந்தது அல்ல பா.ஜ.க. இரண்டு கட்சிகளின் ஆட்சிகளும் ஒரே பாதையில்தான் பயணிக்கின்றன. அரசு பொதுத் துறை நிறுவனமான நிலக்கரி நிறுவன பங்குகளை காங்கிர°, தனியாருக்கு விற்க முயன்றபோது, தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்த்தன. இப்போது, மோடி ஆட்சியில்...

யோகா நாளா? இந்துத்துவ நாளா? 0

யோகா நாளா? இந்துத்துவ நாளா?

சர்வதேச ‘யோகா நாளை’ இந்துத்துவத்தின் செயல் திட்டமாக்க மோடி ஆட்சி முயற்சிக்கிறது. மதம்-கடவுள் நம்பிக்கைகளோடு தொடர்பில்லாத உடல் – மூச்சுப் பயிற்சியாக யோகாவை பரிந்துரைக்கலாமே தவிர, அதை பள்ளிகளில் கட்டாயப்படுத்தி, கடவுள்-மத நம்பிக்கைகளைத் திணிக்க முயல்வது கண்டிக்கத் தக்கது. பசி, வறுமை, சமூக நெருக்கடிகள் சூழ்ந்து நிற்கும் மக்கள் பிரச்சினைக்கு ‘யோகா’ தீர்வாகிட முடியாது. பிரச்சினைகளிலிருந்து மக்களை விடுவிக்கச் செய்ய வேண்டுமே தவிர, தப்பிக்கச் சொல்லும் வழிமுறைகள் வெற்றி பெற முடியாது. அய்.நா. அறிவித்துள்ள உலக யோகா தினத்தை பல இ°லாமிய நாடுகளும் ஆதரித்துள்ளன. சிறுபான்மை மக்கள் மீது வெறுப்புகளையும் பகைமை உணர்வையும் திணித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன மதவாதம், யோகாவின் வழியாக பிரச்சினைகளுக்கு வடிகால் தேடிக் கொள்ள அறிவுறுத்துவது, காதில் பூ சுற்றும் வேலையாகும். பெரியார் முழக்கம் 18062015 இதழ்

கார்ப்பரேட் கலாச்சார கயமைகளை தோலுரிக்கும் ‘காக்கா முட்டை’ 0

கார்ப்பரேட் கலாச்சார கயமைகளை தோலுரிக்கும் ‘காக்கா முட்டை’

கோழி முட்டைகளை வாங்கும் வசதியில்லை; காக்காய் இடும் முட்டைகளை திருடி, அப்படியே முட்டைபோல் விழுங்கலாம்; இது விலை இல்லாத முட்டை. இதேபோல் கோழி, ஆட்டுக்கறியை விலை கொடுத்து வாங்க முடியாத மக்களுக்கு, அதைவிட குறைந்த விலையில் கிடைக்கும் புரதச் சத்து மாட்டுக்கறி. ஆனால், ‘மதவெறி’ ஆட்சியாளர்கள் மாட்டுக் கறிக்குத் தடைப் போட்டு, எளிய மக்களின் உணவு உரிமையைப் பறிக்கிறார்கள். நல்லவேளை, கருப்பு காக்காய் வணங்கப்படும் ‘புனித’ப் பறவையாக இல்லை. இல்லையேல், ‘காக்கா முட்டைக்கும்’, காவிக்காரர்கள் தடைகேட்டுப் போராடக் கிளம்பியிருப்பார்கள். ‘உலகமயமாக்கல்’ என்ற கொள்கை வந்து விட்டாலே, சர்வதேச நாடுகளிடையே ஏற்றுமதி இறக்குமதிகள் அதிகரித்து, அதனால் இந்தியா வுக்குள் நவீன விஞ்ஞானம், தொழில்நுட்பங்கள் வந்து சேரும். ஜாதிய தீண்டாமைகள், பழமை வாதங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும் என்று கணித்தவர்கள் உண்டு. ஆனால், என்ன நடந்தது? ஜாதிய-சமூக இடைவெளியை மேலும் அகலப் படுத்தி, விளிம்பு நிலை மக்களை வேகமாக மய்ய நீரோட்டத்திலிருந்து விரட்டி அடித்து விட்டது....

மதமாற்றம்: அம்பேத்கர் எடுத்த உறுதிமொழி 0

மதமாற்றம்: அம்பேத்கர் எடுத்த உறுதிமொழி

சாதி வேறுபாடு, குறிப்பாகத் தீண்டாமையை ஏற்றுக் கொள்ளாத புத்தமதத்திற்கு மாறுவதென்று அம்பேத்கர் முடிவு செய்தார். 1956 அக்டோபர் 14, 15 ஆகிய நாள்களில் நாகபுரியில் புத்தமதத்தை அம்பேத்கர் தழுவினார். அவருடன் ஆயிரக்கணக்கான மகர்களும் வேறு சமூகங்களைச் சேர்ந்த தோழரும் இணைந்தனர். மக்கள், புத்தமத முறைப்படி தீட்சை ஏற்றனர். 83 வயது நிரம்பியவரும், பர்மா (மியான்மர்) நாட்டினருமான புத்த பிக்கு, அவருக்கு தீட்சை வழங்கினார். இவர்கள் தழுவிய புத்தமதம் தேரவாத பௌத்தமாகும். திரி சரணம் (புத்தம் சரணம், தர்மம் சரணம், சங்கம் சரணம்) கோட்பாடுகளுடன், 22 உறுதி மொழிகளையும் கூறி மதம் மாறினார்கள். மராத்தி மொழியில் எடுக்கப்பட்ட அவ்வுறுதிமொழிகளில் சில வருமாறு: 1. பிரம்மா, விஷ்ணு, மகேஷ் ஆகியோரை நான் கடவுளாகக் கருதவும் மாட்டேன், வணங்கவும் மாட்டேன். 2. இராமனையும் கிருஷ்ணனையும் கடவுளாகக் கருதி வணங்க மாட்டேன். 3. கௌரி, கணபதி போன்ற இந்துக் கடவுளர்களை வணங்க மாட்டேன். 4. கடவுள் பிறப்பதாகவோ,...