வினாக்கள்… விடைகள்…

காமன்வெல்த் மாநட்டில் பிரதமர் பங்கேற்பதா இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.                              – ப. சிதம்பரம்

ஆமாம்! விமானத்துக்கு ‘டிக்கட்’ உறுதியானால் தான் போவார்!

தீபாவளியில் ராக்கெட் பட்டாசு விட்டவர்களால் மட்டும் 157 தீ விபத்துகள் நடந்துள்ளன.   – தினமலர் செய்தி

அதற்காக பட்டாசு வெடித்தவர்கள் மீது வெடி பொருள் தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் எதையும் காவல்துறை பயன்படுத்திட வேண்டாம்!

பூமாதேவியின் பிரார்த்தனையை ஏற்று கண்ணபிரானால் தொடங்கி வைக்கப்பட்ட புனித  நாள், தீபாவளி.    – ‘தினமணி’யில் காஞ்சி ஜெயேந்திரன்

அதுமட்டுமா? வரதராஜப் பெருமாளை ‘மோட்சத்துக்கு’ அனுப்பி ஸ்ரீ ஜெயேந்திரர் சிறைவாச°தலத்தில் அவதரித்த புனித நாளும் இதே தீபாவளித் திருநாள் தான்!

டில்லியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளைப் பிடிக்க ஆட்கள் தேவை.     – மாநகராட்சி பத்திரிகை விளம்பரம்

ஸ்ரீராமன் சேனையை இப்படியெல்லாம் அவமதிக்கலாமா? இராமபிரான் வரமாட்டான் என்ற துணிச்சல்; தானே?

உலகத்திலேயே குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கும் நாடான இந்தியா, அய்.நா.வில் கொண்டு வரப்பட்ட குழந்தைத் திருமண ஒழிப்புப் பிரகடனத்தில் கையெழுத்திட மறுத்து விட்டது. – செய்தி

இது, வேத காலத்திலிருந்து நாங்க கட்டிக் காக்கும் பெருமைங்க. நேற்று வந்த அய்.நா.க்காரனுக்காக தூக்கி வீசிட முடியுமா?

நாமக்கல் அருகே பவுத்திரம் கிராமத்தில் கோயில் திருவிழாவில் பக்தர்களை பூசாரியால் சாட்டையில் அடித்து ‘பேயை’ விரட்டுகிறார்கள். காவல்துறை இதை சட்டப்படி தடுக்க முடியும்.  – ‘இந்து’வில் மனநல மருத்துவர்

அதெல்லாம் தடுக்க மாட்டாங்க சார்… சாட்டை யடியில உடம்பு ‘புண்’ ஆனால் குற்றமில்லை. ஆனால், இந்துக்கள் மனம் புண்பட்டுவிடக் கூடாது பாருங்க!

சாமியார் கூறியபடி உன்னாவ் கோட்டையில் தங்கம் இருப்பதற்கான தடயங்கள் இல்லை; தோண்டுவது நிறுத்தப்பட்டது. – தொல்பொருள் துறை அறிவிப்பு

அதெப்படி இல்லாமல் போகும்? எவனோ திருடி யிருக்குறான்; அடுத்து சி.பி.அய். கிட்ட சொல்லி அந்த திருடுனவனைத் தேடும் வேலையைத் தொடங்குங்க…

முதல் பிரதமராக வல்லபாய் பட்டேல்தான் ஆகியிருக்க வேண்டும். – மோடி

அதோடு நிறுத்துங்க… ‘பட்டேல் என் கனவில் வந்து சொன்னார்னு’ நீங்களும் ஒரு கதையை ஆரம்பிச்சுடாதீங்க…

கல்வீச்சில் காயமடைந்த கேரள காங்கிர° முதல்வர் உம்மன்சண்டியை முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.                – செய்தி

கேரளாவில் முன்னாள் முதல்வர்களாக இருப்பது தான் பாதுகாப்பு போலும்!

ம.பி. மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் வருவதால், குளங்களில் மலர்ந்துள்ள தாமரைகளை (அது பா.ஜ.க. சின்னம் என்பதால்) திரையிட்டு மறைக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் காங்கிர° கோரிக்கை விடுத்துள்ளது.   – செய்தி

ஓட்டுப் போட வரும் வாக்காளர்கள் இரண்டு கைகளையும் (அது காங்கிர° சின்னம் என்பதால்) கட்டுப் போட்டு மறைத்துக் கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. திருப்பி கோரிக்கை வைக்கலாமே!

பெரியார் முழக்கம் 07112013 இதழ்

You may also like...