பல்லாயிரம் தமிழர்கள் திரண்டனர்; ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ திறக்கப்பட்டது

ஈழத்தின் இறுதிப் போரில் உயிர்துறந்த பல்லா யிரம் மக்களின் நினைவாக தஞ்சையில் முள்ளி வாய்க்கால் முற்றம் இரண்டரை லட்சம் ஏக்கர் பரப்பளவில்  எழுப்பப்பட்டுள்ளது. நெஞ்சை உலுக்கும் படுகொலை காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட் டுள்ளன. ஈழத் தமிழர்களுக்காக உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 20 தமிழினப் போராளிகளின் சிலைகளும், தமிழ் வளர்த்த அறிஞர், பேராசிரியர் படங்களும் இடம் பெற்றுள்ளன. காவல்துறை கெடு பிடிகளால் நீதிமன்ற அனுமதியோடு திட்டமிட்டதற்கு இரண்டு நாள் முன்னதாக முற்றம் திறக்கப்பட்டது.

7, 8, 9 தேதிகளில் தமிழக முன்னணித் தலைவர்கள், கலைத் துறையைச் சார்ந்தவர்கள், உணர்வாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடந்தன. உலகத் தமிழர் பேரவை ஒழுங்கு செய்த இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பழ. நெடுமாறன், இந்த முற்றத்தை தமிழர்களுக்கு சமர்ப்பித்தார். பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் விழாவில் திரண்டிருந்தனர். கலைநயத் துடன் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களும், ஓவியங் களும் உணர்ச்சியூட்டுவதாய் அமைந்துள்ளது என பலரும் தெரிவித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறைப்படுத்தப்பட்டதால் நிகழ்வில் பங்கேற்று உரையாற்ற இயலவில்லை

பெரியார் முழக்கம் 14112013 இதழ்

You may also like...